உங்க மகனுக்கு மவுசு இல்லை, ரூ.2 சி வேண்டும்: தயாரிப்பாளரை அதிர வைத்த நடிகை

சென்னை: உங்களின் மகனுடன் நான் நடிக்க வேண்டும் என்றால் ரூ.2 கோடி சம்பளம் வேண்டும் என்று கூறி நம்பர் நடிகை பிரபல தயாரிப்பாளரை அதிர வைத்துள்ளாராம்.

பிரபல தயாரிப்பாளரின் இரண்டாவது மகன் அண்மையில் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. இதனால் மகனை வைத்து ஒரு படத்தை தயாரிக்க தந்தை முடிவு செய்துள்ளார். அந்த படத்தில் தற்போது கோலிவுட்டின் முன்னணி நாயகியாக உள்ள நம்பர் நடிகையை நடிக்க வைக்க தயாரிப்பாளர் திட்டமிட்டார்.

இதையடுத்து அவர் நடிகையை அணுகி தனது மகனுக்கு ஜோடியாக நடிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு நடிகையோ, உங்கள் மகனுக்கு மவுசு இல்லை, படத்தை என்னை வைத்து தான் ஓட்ட வேண்டும். அதனால் ரூ.2 கோடி சம்பளம் கொடுத்தால் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை கேட்ட தயாரிப்பாளர் ஆடிப்போய்விட்டாராம். நடிகைக்கு கை நிறைய படங்கள் உள்ளன. மேலும் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகளும் வருகின்றன. அதை எல்லாம் மனதில் வைத்து தான் அவ்வாறு பேசியுள்ளார்.

அவர் எவ்வளவு பெரிய தயாரிப்பாளர். அவரையே நடிகை அதிர வைத்துவிட்டாரே என்று கேட்டால் இது தான் பாஸ் திரை உலகம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

 

3 'குட்டி' ரசிகர்களின் கடைசி ஆசையை நிறைவேற்றிய விஜய்

சென்னை: ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 3 ஆதரவற்ற சிறுவர்களின் கடைசி ஆசையை இளையதளபதி விஜய் நிறைவேற்றி வைத்துள்ளார்.

சென்னையில் உள்ள அனாதை இல்லம் ஒன்றில் தங்கியுள்ள 3 சிறுவர்கள் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். அதனால் ஆண்டவனின் கருணையை எதிர்பார்த்து அந்த 3 சிறுவர்களும் உள்ளனர்.

3 'குட்டி' ரசிகர்களின் கடைசி ஆசையை நிறைவேற்றிய விஜய்

தங்களின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் அந்த சிறுவர்களிடம் உங்களின் கடைசி ஆசை என்ன என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள், இளையதளபதி விஜய்யை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

3 'குட்டி' ரசிகர்களின் கடைசி ஆசையை நிறைவேற்றிய விஜய்

அவர்களின் கடைசி ஆசை பற்றி விஜய்யிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்தார் விஜய். இதையடுத்து அந்த 3 சிறுவர்களை சந்தித்து அவர்களுடன் பேசி அவர்களை சிரிக்க வைத்தார். பின்னர் அவர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இது குறித்து விஜய் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சிறுவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

 

லிங்கா விவகாரம்... செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய விநியோகஸ்தர்கள்

லிங்கா படத்தால் நஷ்டம் என்றும், அதற்கு நஷ்ட ஈடு வேண்டும், ரஜினி தலையிட வேண்டும் என்றும் கோரி நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போது, கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் திணறினர் விநியோகஸ்தர்கள்.

லிங்கா நஷ்ட ஈடு கோரியும், லிங்கா தொடர்பான உண்மைகளைச் சொல்லவும் இந்த பிரஸ் மீட் என்று நேற்று அறிவித்திருந்தனர். இதில் லிங்காவின் அனைத்து விநியோகஸ்தர்கள், வெளியிட்ட தியேட்டர்காரர்கள் பங்கேற்பார்கள் என்று கூறியிருந்தனர்.

லிங்கா விவகாரம்... செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய விநியோகஸ்தர்கள்

ஆனால் வழக்கம் போல, லிங்கா விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்து அந்தப் படத்துக்கும் ரஜினிக்கும் எதிராகப் பேசியவர்கள் மட்டுமே பங்கேற்றனர். தியேட்டர்காரர்கள் ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு, அவர்கள் வரமாட்டார்கள்.. நாங்கள்தான் பேசுவோம் என்றனர்.

உங்கள் போராட்டம் நஷ்ட ஈடு கேட்டு நடத்தப்படும் போராட்டமாகத் தெரியவில்லையே... ரஜினியின் இமேஜை அவமதிக்கும் போராட்டமாகத்தானே தெரிகிறது.. ஏன் தயாரிப்பாளர் அல்லது விநியோகஸ்தர்கள் சங்கங்கள் உங்களுக்கு உதவ முன்வரவில்லை? என்று கேட்டபோது, பதில் சொல்லாமல் மழுப்பினர்.

படம் வெளியான முதல் வாரத்திலிருந்து இப்படி பிரச்சாரம் செய்ததன் நோக்கம் என்ன? உண்மையான விநியோகஸ்தர்கள் இப்படிச் செய்வார்களா? என்று இன்னொரு நிருபர் கேட்டார். அதற்கும் பதில் இல்லை.

திரும்பத் திரும்ப, நாங்கள் சொல்வதைக் கேட்டு எழுதுங்கள். அதற்காகத்தான் உங்களை அழைத்தோம் என்றனர். நீங்கள் சொல்வதை மட்டும் எழுத நாங்கள் வரவில்லை. கேள்விக்கு சரியான பதில் சொல்ல வேண்டும் என்றனர் பத்திரிகையாளர்கள்.

லிங்கா பிரச்சினையில் அரசியல்வாதிகள் எதற்காக வருகிறார்கள்...? நீங்கள் முறையாக வேந்தர் மூவீசைத்தானே அணுகியிருக்க வேண்டும்... எடுத்தவுடன் ரஜினியை இழுப்பதில் என்ன நியாயம்? என்றபோது, மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தனர்.

லிங்காவை மொத்தமே 40 லட்சம் பேர்தான் பார்த்திருப்பதாக ஒரு அறிக்கை தந்தனர். சென்னையில் மட்டுமே 40 லட்சம் பேர் பார்த்த படமாச்சே... தமிழகத்தின் பிற பகுதிகளில் பார்த்தவர்களையும் சேர்த்தால் கோடியைத் தாண்டுமே என்றபோது, சென்னை நகரில் பார்த்தவர்களை இதில் சேர்க்கவில்லை என்றனர்.

தமிழக வசூலில் சென்னை மட்டும் சேராதா.. சென்னையில் வசூலானது என்ன கணக்கு?

எந்த அடிப்படையில் வசூல் தொகை கணக்கிடப்பட்டுள்ளது? முதல் வாரம் முழுவதும் சராசரியாக தியேட்டர்களில் ரூ 250 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டது. முதல் மூன்று நாட்களும் சில அரங்குகளில் ரூ 300 வரை விலை வைத்து விற்றனர். ஆனால் நீங்கள் எந்த அடிப்படையில் கணக்கு காட்டியிருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அந்த விவரங்களை மெயிலில் அனுப்புகிறோம் என்றனர்.

செய்தியாளர் சந்திப்பில் ஒரு கட்டத்தில், கேள்வி கேட்பவர்கள் தங்கள் பெயரையும் ஊடகத்தின் பெயரையும் சொல்லிவிட்டுத்தான் கேள்வி கேட்க வேண்டும் என்று வற்புறுத்தியபோது, விநியோகஸ்தர்களுக்கும் செய்தியாளர்கள் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

பின்னர், தங்களின் மெகா பிச்சைப் போராட்ட அறிவிப்போடு பிரஸ் மீட்டை முடித்தனர்.

 

மீண்டும் சூர்யாவுடன் சேர்ந்து ‘ஏக், தோ, தீன்...’ பாடப் போகிறார் சமந்தா... "24" படத்துக்காக!

சென்னை : விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் '24' படத்தின் நாயகியாக மீண்டும் சூர்யாவுடன் சேர்ந்து ‘ஏக், தோ, தீன்...’ பாடப் போகிறார் சமந்தா...   

மாஸ் படத்தைத் தொடர்ந்து விக்ரம் குமார் இயக்கத்தில் '24' என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கும் இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலமாக தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் பாடல் பதிவு உள்ளிட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன.

தற்போது இப்படத்தின் நாயகி சமந்தா எனத் தெரிய வந்துள்ளது.

மற்ற படங்களைப் போல ஹீரோவுடன் டூயட் பாடினோம் என்று மட்டும் இல்லாமல், இப்படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் பேசப்படும் விதத்தில் அமைக்கப் பட்டுள்ளதாம். அதிலும் குறிப்பாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரமாம்.

எனவே, அஞ்சான் படத்தில் கவர்ச்சி விருந்தளித்த சமந்தா, இப்படத்தில் ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்தளிக்கப் போகிறாராம்.