கமல்ஹாசனின் பாபநாசம் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

கொச்சி: கமல்ஹாசனின் பாபநாசம் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!   

சில மாதங்களுக்கு முன்பு சதிஷ் பால் என்பவர், "பாபநாசம்" (த்ரிஷ்யம்) படத்தின் கதை தான் எழுதிய "ஒரு மழகாலத்" என்னும் நாவலில் உள்ள கதையை ஒத்திருக்கிறது என்றும், த்ரிஷ்யம் படத்தின் தயாரிப்பாளர்கள் தனது அனுமதியில்லாமல் திரைப்படமாக்கிவிட்டதாகவும் எனவே பாபநாசம் படபிடிப்பை நிறுத்தக் கோரியும் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, பாபநாசம் படப்பிடிப்பிற்க்கு இடைக்கால தடை பெற்றிருந்தார்.

அந்த மனுவின் மீது மேல்முறையீடு செய்த தயாரிப்பாளர் தரப்பு, தற்காலிகமாக இடப்பட்ட தடையை நீக்கி படப்பிடிப்பைத் தொடர்ந்தனர்.

இந்நிலையில் எர்ணாகுளம் 2வது கூடதல் நீதிமன்ற அமர்விர்க்கு வந்த இவ்வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இவ்வழக்கினை தள்ளுபடி செய்து தயாரிப்பாளருக்கு ஆதரவான தீர்ப்பினை அளித்துள்ளார்.

இதனால் பாபநாசம் படத்திற்கான தடை முற்றிலுமாக நீங்கியுள்ளது.

பாபநாசம் படத்தின் இசை மற்றும் பட வெளீயீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படுமென தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

 

ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை - விமர்சனம்

Rating:
3.0/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: சர்வானந்த், நித்யா மேனன், சந்தானம், பிரகாஷ் ராஜ், ஜெய்பிரகாஷ்

ஒளிப்பதிவு: சித்தார்த் ராமசாமி

இசை: ஜிவி பிரகாஷ்

தயாரிப்பு: ட்ரீம் தியேட்டர்ஸ்

எழுத்து - இயக்கம்: சேரன்

தனியார் நிறுவனத்தில் வேலை... மீதி நேரத்தில் பேஸ்புக் அரட்டை, விடுமுறைகளில் நண்பர்களுடன் பைக்கில் ஊர் சுற்றல் என சராசரி இளைஞனாகத் திரியும் சர்வானந்த், ஒரு கட்டத்தில் பொறுப்புணர்வு அதிகரிக்க, சொந்தமாக தொழில தொடங்கும் முயற்சியில் இறங்குகிறான்.

தன் நண்பர்கள் சந்தானம், நித்யா மேனனுடன் கூட்டு சேர்ந்து முதலில் ஒரு தொழிலைத் தொடங்க, அது வெற்றியடைகிறது. அடுத்தடுத்து புதுப்புது தொழில்களில் கால் பதிக்கிறான். தொட்டதெல்லாம் வெற்றி என்பது மாதிரி தொடர்ந்து மூன்று புராஜெக்டுகளில் வெற்றி பெறுகிறான்.

ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை - விமர்சனம்

அடுத்து யாரும் எதிர்பாராத மாதிரி ஒரு சிக்கல் வருகிறது சர்வானந்துக்கு. கண்காணாத தேசத்துக்கு விமானம் ஏறுகிறான்.

ஏன் செல்கிறான்... திரும்பி வந்தானா? என்பதெல்லாம் டிவிடி வாங்கிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

முதல் முறையாக டிவிடியிலும், டிடிஎச்சிலும் வெளியாகும் படம் என்ற அறிவிப்போடு வெளியாகியுள்ளது ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை.

[ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படங்கள்]

சற்று சீரியல்தனம் தெரிந்தாலும், சேரன் தனது பாணியிலிருந்து விலகாமல், தரமாகவே இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். ரியல் எஸ்டேட், அதைச் சார்ந்த தொழில்கள் என்று போகும் கதையில், காட்சிகளை மிக வண்ணமயமாகக் கோர்த்திருப்பது கண்களுக்கு விருந்து. நமக்கும் இப்படி ஒரு வீடு கிடைக்காதா என பார்வையாளரை ஏங்க வைக்கும் டிசைன்கள்.

இந்தக் கதைக்கு சர்வானந்த் மிகப் பொருத்தமான தேர்வு. ரொம்பப் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பரபரவென அலையும் பருவத்திலிருந்து, மெல்ல பொறுப்புணர்ந்து பணம் சேர்க்க போராடும் கட்டத்துக்கு அவர் மாறும் காட்சிகளில் அத்தனை இயல்பு.

ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை - விமர்சனம்

நித்யா மேனன் நடிப்பில் ரொம்பவே செயற்கைத்தனம். நாயகி விஷயத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால், காதல் இருந்தும் இல்லாத இந்தக் கதை மேலும் சுவாரஸ்யமானதாக இருந்திருக்கும்.

சந்தானத்தின் நகைச்சுவையில் வழக்கமான ஆர்ப்பாட்டம், கலாட்டா ஏதுமில்லை. ஆனாலும் சில காட்சிகளில் உதடுகள் லேசாக விரிகின்றன.

ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை - விமர்சனம்

பிரகாஷ் ராஜ், ஜெயப்ரகாஷ், மனோபாலா மற்றும் நண்பர்களாக வருபவர்கள் என அனைவருமே படத்தின் நடிகர்களாக இல்லாமல், நிஜ பாத்திரங்களாகவே மாறியிருந்தார்கள்.

ஜிவி பிரகாஷின் இசை சேரனின் படத்துக்கு எந்த வகையிலும் உதவவில்லை. ஆனால் சித்தார்த்தின் ஒளிப்பதிவு அந்தக் குறையை மறக்க வைக்கிறது.

ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை - விமர்சனம்

பார்த்துப் பார்த்து காட்சிகளை வடிவமைத்ததில் காட்டிய சிரத்தையை, சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பதிலும் காட்டியிருக்கலாம் சேரன். ஏற்கெனவே 180 என்ற பெயரில் வந்த படத்தின் கதை கூட கிட்டத்தட்ட இதே மாதிரிதான். அதிலும் இதே நித்யா மேனன்தான் நாயகி!

தியேட்டர்களுக்குப் போய் ஏக சிரமங்களுக்கிடையில் பார்க்காமல், இருந்த இடத்திலேயே ஒரு டிவிடியில் பார்த்துவிடுவதால், பலருக்கு இந்தப் படத்தின் குறைகள் கூட பெரிதாகத் தெரியாது. அதுதான் சி2எச் வெற்றி.

ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை - விமர்சனம்

அதற்காக 'ஏப்ப சாப்பை'யான படங்களை டிவிடியாகத் தராமல், தரத்தில் கவனம் செலுத்தினால் சேரனின் இந்த முயற்சி திரையுலகுக்கு புதிய பாதையாகவே மாறினாலும் ஆச்சர்யமில்லை!

 

விஷால்- சுசீந்திரன் படத் தலைப்பு காவல் கோட்டம்

விஷாலும் சுசீந்திரனும் இணையும் அடுத்த படத்துக்கு விஷால்- சுசீந்திரன் படத் தலைப்பு காவல் கோட்டம்  

மதுரையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு தலைப்பு வைக்காமலேயே படப்பிடிப்பு தொடங்கி நடந்துவந்தது.

தற்போது ‘காவல் கோட்டம்' என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஷால்.

சமுத்திரகனி விஷாலின் அண்ணனாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இந்த ஆண்டு மத்தியில் படத்தை வெளியிடும் வகையில் வேலைகளை திட்டமிட்டு செய்து வருகின்றனர்.

 

அஜீத்துக்கு இன்று மூக்கு அறுவைச் சிகிச்சை... உடல் நலமடைந்து வருகிறார்!

சென்னை: நடிகர் அஜீத் குமாருக்கு இன்று மூக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. அவர் வேகமாக குணமடைந்து வருகிறார்.

நடிகர் அஜீத் குமாருக்கு மூக்கு தண்டில் சைனஸ் பிரச்சினை இருந்தது. இதனால் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்தது. அடிக்கடி மூக்கு அடைத்துக் கொண்டு, பேசுவதிலும் சிரமம் ஏற்பட்டது.

அஜீத்துக்கு இன்று மூக்கு அறுவைச் சிகிச்சை... உடல் நலமடைந்து வருகிறார்!

இதைத் தொடர்ந்து அவருக்கு மூக்குத் தண்டு அறுவைச் சிகிச்சை (Septoplasty) செய்ய மருத்துவர்கள் பரிசீலித்தனர்.

அதன்படி இன்று காலை அவருக்கு பிரபல காது மூக்கு தொண்டை நிபுணர் டாக்டர் எம் கே ராஜசேகர் இந்த அறுவைச் சிகிச்சையைச் செய்தார்.

அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. அஜீத் குமார் வேகமாக உடல் நலம் பெற்று வருவதாக அவரது மேலாளர் தகவல் தெரிவித்தார்.

 

தமிழ்த் திரைப்பட இயக்குனர் அமீர்ஜான் மரணம்

தமிழ்த் திரைப்பட இயக்குனர் அமீர்ஜான் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 70.

பாலச்சந்தரின் உதவியாளராக இருந்த அமீர்ஜான், பூவிலங்கு, உன்னை சொல்லி குற்றமில்லை,சிவா,தர்ம பத்தினி, நட்பு, புதியவன், வணக்கம் வாத்தியாரே உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

தமிழ்த் திரைப்பட இயக்குனர் அமீர்ஜான் மரணம்

அமீர்ஜானின் கருநாதர் பாலச்சந்தர் சில மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்தார். அதுமுதல் வேதனையில் இருந்த அமீர்ஜானின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் அவர் மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நாளை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.