ராம்சரண் தேஜா திருமணம் - ரஜினி நேரில் வாழ்த்து!

Rajini Attends Ramcharan Upasana Marriage   

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மகனும் நடிகருமான ராம்சரண் தேஜா - உபாசனா திருமணத்தில், நண்பர்கள் புடைசூழ கலந்து கொண்ட ரஜினி, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ராம் சரணுக்கும், அப்பல்லோ குழும மருத்துவமனைகள் தலைவர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபாசனாவுக்கும் இன்று ஹைதராபாத்தில் திருமணம் நடந்தது. மிக ஆடம்பரமாக நடந்த இந்த திருமணத்தில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் திரளாக வந்து பங்கேற்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன் நண்பர்கள் மோகன் பாபு, அம்ரீஷ் உள்ளிட்டோருடன் திருமணத்துக்கு வந்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

பின்னர் மணமக்களை வாழ்த்திய ரஜினியை, பல்வேறு மொழி சினிமாவைச் சேர்ந்த நடிகர் நடிகைகளையும் சந்தித்துப் பேசினர்.

முன்னதாக ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன், தமிழக கவர்னர் ரோசைய்யா, முதல்வர் கிரண் குமார் ரெட்டி, அமைச்சர்கள், நடிகர்கள் அமிதாப் பச்சன், வெங்கடேஷ், ஸ்ரீதேவி, ப்ரியங்கா சோப்ரா உள்பட பலரும் மணமக்களை வாழ்த்தினர்.

 

தமிழில் நடிக்க மறுத்து ஓடிய பிராச்சியை, இந்தியில் ஹீரோயினாக்கிய கேஎஸ் ரவிக்குமார்!

Ravikumar Booked Prachi Desai   

பிராச்சி தேசாயை நினைவிருக்கிறதா... சமீபத்தில் வெளியாகி நல்ல பெயரைப் பெற்றுள்ள தடையறத் தாக்க படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமான நடிகை இவர்தான்.

ஆனால், ஹீரோ அருண் விஜய் என்றதும் நடிக்க மறுத்து ஓடிவிட்டார் பிராச்சி. அந்தப் படத்துக்காக இவர் வாங்கி சம்பள முன்பணத்தைக் கூட இன்னும் திருப்பித் தரவில்லை. நடிகர் சங்கத்தின் இந்த விவகாரம் இன்னும் நிலுவையில் உள்ளது.

இப்போது, கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் இந்தியில் உருவாகும் சாமி ரீமேக்கில் நடிக்க பிராச்சியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

தங்கள் படவிவகாரம் அப்படியே உள்ள நிலையில் பிராச்சியை ஒப்பந்தம் செய்வதா என தடையறத் தாக்க தயாரிப்பாளர் இப்போது அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

ஹரியின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான சாமி படம், கடந்த 2003-ல் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. இப்படம்தான் இந்தியில் சஞ்சய் தத் நாயகனாக நடிக்க ரீமேக் செய்யப்பட உள்ளது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கவிருக்கிறார்.

 

தாண்டவம் படத்துக்காக லண்டனில் பிரஸ் மீட் - விக்ரம், லட்சுமிராய் பங்கேற்பு

Thaandavam Press Meet London   

விக்ரம் நடிக்கும் தாண்டவம் படத்தின் பிரஸ் மீட் லண்டன் ஹோட்டலில் நடந்தது.

விஜய் இயக்கும் இந்தப் படத்தை யுடிவி நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த பல நாட்களாக லண்டனில் நடந்தது.

இங்கு தமிழர்களும், ஆசியர்களும் அதிகம் என்பதால் அவர்கள் மத்தியில் படத்தைப் பிரபலப்படுத்த இந்த செய்தியாளர் சந்திப்பை தாண்டவம் குழு நடத்தியது.

விக்ரம், அனுஷ்கா, லட்சுமி ராய், எமி ஜாக்ஸன், சந்தானம், நாசர் நடிக்கும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

லண்டன் படப்பிடிப்பு மற்றும் செய்தியாளர் சந்திப்பு குறித்து படத்தின் தயாரிப்பு நிர்வாகி தனஞ்செயன் கூறுகையில், "பி்ரிட்டனின் குளிர், மழை இந்த ரொம்பவே சோதித்துவிட்டது. ஆனாலும் அதையெல்லாம் பார்க்காமல் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். மிக அருமையாக வந்துள்ளது. இதுவரை பார்த்திராத அழகான லொகேஷன்கள். ஆகஸ்டில் இசை வெளியீடு நடத்த திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு பல தமிழ், ஆங்கில பத்திரிகை நிருபர்கள் வந்திருந்தனர்.

விக்ரம், லட்சுமிராய், எமி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

 

நமீதாவுக்கு வந்த வினோத ஆசை!

Namitha Wants Smoke Cigar   

படம் ரிலீசாகிறதோ இல்லையோ... நாளொரு செய்தியில் நமீதாவைப் பார்த்துவிட அல்லது படித்துவிட முடிகிறது. காரணம், இன்னும் கிராமப்புறங்களில் நமீதாவின் கவர்ச்சிக்கு உள்ள செல்வாக்கு!

நமீதாவுக்கு வரும் ஆசை ரொம்பவே விசித்திரமாக இருக்கும்.

அப்படித்தான் ஒரு நாள், ஏதோ ஒரு கடைத் திறப்பு விழாவுக்குப் போனவர், திடீரென வழியில் நடந்த கிராமத்து ஜோடியின் திருமணத்தில் ஆஜராகி அத்தனை பேருக்கும் இன்ப அதிர்ச்சி தந்தார்.

ஏன் இப்படி? என்று கேட்டதற்கு,

"நடிகை என்றால் என்ன நானும் சராசரிப் பெண்தானே... என்னை மாதிரி ஒரு பிரபலம் அழையா விருந்தாளியாகப் போய் நின்றால், இந்த கிராமத்து எளிய மனிதர்கள் எப்படி சந்தோஷப்படுவார்கள்... அந்த சந்தோஷத்தைப் பார்க்க விரும்பினேன். அவ்வளவுதான்," என்றார்.

கூடவே தனது வினோத ஆசை ஒன்றையும் சொன்னார்.

ஒரு நாள் மதுரைப் பக்கம் காரில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி குப் குப்பென்று புகை விட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தாராம். ஆனால் அது பீடியோ சிகரெட்டோ இல்லை. வண்டியை நிறுத்திவிட்டு, அந்த பாட்டியிடம் போய், நீங்கள் குடிப்பது என்ன? என்று கேட்க, அவரோ, "இது சுருட்டு தாயீ.. ஒரு இழுப்பு இழுக்கிறியா?" என்று கேட்டாராம்.

"சுருட்டுன்னா என்னா' உதவியாளரைக் கேட்டேன். அவர் 'சிகார்' என்று கூறியதும், அப்போதைக்கு வேண்டாம் என்று கூறிவிட்டேன். ஆனால் அங்கிருந்து வந்த பிறகு, அந்த சுருட்டை ஒரு முறை பிடித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. ஒரே ஒரு முறைதான்!", என்றார்.

நல்ல ஆசை போங்க...

 

எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்.. 'டிடி' யின் அழகு ரகசியம்!

Always Smiling Cute Divyadarshini

துறுதுறு பேச்சு, சிரிக்கும் கண்கள் என 14 வயதில் தொடங்கிய நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணியை இன்றைக்கும் அதே உற்சாகத்தோடு செய்து வருகிறார் டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி.

விஜய் டிவியில் ஹோம் ஸ்வீட் ஹோம் நிகழ்ச்சியை திவ்யதர்ஷினி - தீபக் ஜோடிக்காகவே பார்க்கின்றவர்கள் பலர் இருக்கின்றனர். நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கியதைப் பற்றியும் தன் அழகின் ரகசியத்தை பராமரிப்பது குறித்தும் நம்மிடையே பகிர்ந்து கொண்டுள்ளார் படியுங்களேன்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணி எனக்கு பிடித்தமானது என்பதால் அதை சந்தோஷமாக உற்சாகமாக செய்ய முடிகிறது. அக்கா பிரியதர்ஷினி டிவி நிகழ்ச்சித்தொகுப்பாளர் என்பதால் அதே வழியில் நானும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தொடங்கிய பணியை தொடர்கின்றேன்.

எப்படி உங்களால மட்டும் இப்படி பேசிக்கிட்டே இருக்க முடியுது என்று நிறைய பேர் என்னிடம் இப்படித்தான் கேட்கிறார்கள். அதற்குக் காரணம் எல்லாம் எனக்கு சொல்ல தெரியல. ஆனா எப்பவுமே சிரிச்சுக்கிட்டே இருக்கணும்னு நினைப்பேன்.

அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம். இன்னொரு விஷயம் என்னன்னா நம்மை ஸ்கிரீன்ல பார்க்கும் போது, எனக்கு அந்தப் பெண்ணைப் பிடிக்கும். அது பாட்டுக்கு கடகடன்னு எதையோ காமெடியா பேசிக்கிட்டு இருக்கும்னு சொல்லணும். அதைவிடுத்து அந்தப் பொண்ணை பாரு எவ்வளவு செக்ஸியா இருக்கு. பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்குன்னு சொல்ல கூடாதுன்னு நினைக்கிறேன்.

எனக்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதற்கு நேரம் சரியாக இருக்கிறது. அதனால் தொடர்களில் கவனம் செலுத்த முடியவில்லை. தொடரில் நடிப்பதென்றால் அதற்கு டெடிக்கேட்டடாக இருக்க வேண்டும். எதையாவது ஒன்றை உருப்படியாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

என்னுடைய உடலை அப்படியே பாதுகாப்பதற்கு சாப்பாட்டு ரகசியம் எல்லாம் எதுவும் இல்ல. நான் பிஸா, டிப் ப்ரை என்று எல்லாமே விரும்பி சாப்பிடுவேன். ஜிம், எக்சர்சைஸ் என்று எதுவும் கிடையாது. நானும் ஜிம்முக்குப் போறேன்னு ஒரு வாரம் போனேங்க. அதுக்கப்புறம் என்னால முடியலடா சாமின்னு விட்டுட்டேன். ஒரு விஷயம் என்னன்னா எங்க பேமிலியே ஒல்லியாகத்தான் இருப்பார்கள். ஒல்லி எங்க குடும்ப ராசி. இல்ல கொஞ்ச நாட்களா கதக் டான்ஸ் கற்று வருகிறேன். அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்குப் பிறகு ஸ்வீட் ஹோம் நிகழ்ச்சியை நானும், தீபக்கும் இணைந்து தொகுத்து வழங்குகிறோம். இந்த விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது ரொம்ப ஜாலியா இருக்கு. டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதற்கும், இந்த விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எனக்கும் சரி, தீபக்குக்கும் சரி இது போன்ற ஒரு விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது இதுதான் முதல் முறை.

அந்த நிகழ்ச்சிக்கான விளையாட்டுகளை நானும், தீபக்கும்தான் தேர்வு செய்கிறோம். ஒவ்வொரு ஸ்டேஜுக்கான விளையாட்டுகளை நாங்கள் விளையாடி பார்த்த பின்பே அதை அரங்கத்துக்குக் கொண்டு வருகிறோம். ஒவ்வொரு விளையாட்டும் ஒவ்வொரு ஸ்டேஜுக்கு ஏற்றாற்போல் அமைந்திருக்கும். இந்த நிகழ்ச்சி சமீபத்தில்தான் ஆரம்பமானது. இருந்தாலும் ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. டி.ஆர்.பி. ரேட் நன்றாக ஏறியிருக்கிறது என்று சொன்னார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

தீபக்கோடு நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதே ரொம்ப காமெடிதாங்க. ஒரு வருடம் கழித்து நாங்க ரெண்டு பேரும் மறுபடியும் காம்பெயர் பண்றது பார்க்கிறவங்களுக்கு போர் அடிக்கும் என்ற நினைத்தோம். ஆனால் வெளியிடங்களுக்குப் போகும்போது நிறைய பேர் "நீங்க ரெண்டு தொகுத்து வழங்குவது பார்க்க ரொம்ப நல்லா இருக்கு' என்கிறார்கள். சந்தோஷமா இருக்கு என்று நம்மிடம் கூறி விடைபெற்றார் டிடி.

 

விஸ்வரூபத்தில் பூஜா குமாரை முத்தமிட்டாரா கமல்??

I Didn T Kiss Kamal Viswaroopam Says Pooja Kumar   

கமல் படம் என்றால் நடிப்பு, மேக்கப் மற்றும் முத்தம் ஆகியவைதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த வகையில் விஸ்வரூபம் படத்திலும் கமல்ஹாசனுக்கும், அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் பூஜா குமாருக்கும் இடையே முத்தக் காட்சி உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பூஜா குமார் விளக்கம் அளித்துள்ளார்.

விஸ்வரூபம் படம் நாளுக்கு நாள் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தின் மூலம் ஹாலிவுட்டுக்கு வேறு கமல் போகப் போவதால் படத்தில் நடித்தவர்கள் அத்தனை பேரும் குஜாலாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் படத்தின் நாயகி பூஜா குமார் தனது தமிழ் மறு வருகை குறித்தும், கமல் குறித்தும் புளகாங்கிதப்பட்டுப் பேசியுள்ளார். இவர் ஏற்கனவே 2000மாவது ஆண்டு வந்த காதல் ரோஜாவே என்ற படத்தில் நடித்தவர். அத்தோடு நடிப்பிலிருந்து விலகிப் போனவர். இப்போது கமல்ஹாசன் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

இதுகுறித்துக் கூறிய பூஜா, இந்தப் படம் நானாக திட்டமிட்டதில்லை. கமல் சார்தான் என்னை திடீரென கூப்பிட்டுப் பேசினார். அதை என்னால் மறுக்க முடியவில்லை. எனக்கு அறிமுகம் கொடுத்த சென்னைக்கும், தமிழ் சினிமாவுக்கும் நான் செய்துள்ள பிரதிபலனாகவே இப்படத்தை கருதுகிறேன் என்றார்.

சரி, கமல் படம் என்றாலே முத்தம் இல்லாமல் இருக்காது. இப்படத்தில் எப்படி என்று கேட்டால், அப்படியா, எனக்குத் தெரிந்து இப்படத்தில் முத்தக்காட்சி ஏதும் இருப்பதாக தெரியவில்லையே என்று சிரித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், ஆனால் நான் வேறு ஒரு படத்தில் நெருக்கமான முத்தக் காட்சியில் நடித்துள்ளேன் என்று கூறி நமுட்டுச் சிரிப்புடன் நகர்ந்தார்.

அடடா, வடை போச்சே கமல்ஜி...!

 

பிரபு தேவாவுக்கு மயக்கம் தெளிய வேண்டும் - கே பாக்யராஜ்

Yen Indha Mayakkam Audio Launch

இப்போதெல்லாம், எந்த படத் துவக்க விழா அல்லது ஆடியோ வெளியீட்டு விழாவாக இருந்தாலும் சிறப்பு விருந்தினர் கே பாக்யராஜ்தான். அவரது பேச்சில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமே இருக்காது.

ரெயின்போ கிரியேஷன்ஸ் சார்பில் ஆண்டனி எட்வர்டு தயாரிக்கும் 'ஏன் இந்த மயக்கம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் தன் பாணியில் பேசி வந்திருந்தவர்களை வசீகரித்தார் பாக்யராஜ்.

விழாவில் பிரவுதேவாவும் கலந்து கொண்டார்.

பாக்யராஜ் பேசுகையில், "இந்தக் காலத்தில் யார் நடித்தால் படம் வியாபாரமாகும் என்று படத்துக்கு உத்திரவாதம் பார்ப்பார்கள். புதுமுகங்களை வைத்து உருவாகும் இப்படிப்பட்ட படத்துக்கு தயாரிப்பாளர் கிடைப்பது சிரமம். ஆனால் தயாரிப்பாளர் எட்வர்டு ஆன்டனி துணிந்து முன்வந்துள்ளார். அந்த வாய்ப்பை இயக்குநரும் மற்றவர்களும் காப்பாற்ற வேண்டும்.

இந்தப் படத்தை இயக்கியுள்ள ஷக்தி வசந்த பிரபு இயக்குநர் பிரபு தேவாவிடம் பணியாற்றியவர் என்பதை அறிந்து சந்தோஷம். இவ்வளவு பிஸியான நேரத்தில் பிரவு தேவா தன் உதவியாளருக்காக இங்கு வந்திருப்பதிலிருந்து எந்த அளவுக்கு ஷக்தி வசந்த பிரபு தான் இயக்குநரிடம் பெயர் வாங்கியிருக்கிறார் என்பது புரியும்.

படத்தின் தலைப்பைப் பார்த்தும் பிரபுதேவாவிடம் கேட்க வேண்டும் போலிருந்தது. பிரபுதேவா இன்னும் பத்து வருஷம் தமிழ்நாட்டு பக்கம் வரமாட்டார் என்று சொல்கிறார்கள். அவரது மயக்கம் தெளிய வேண்டும். அவரது இயக்கத்தில் தமிழில் வருஷம் இரண்டு படங்கள் வரவேண்டும்," என்றார்.

முன்னதாக பிரபுதேவா பேசும போது 'இந்த ஷக்தி வசந்த பிரபுவின் பெயர் என்னைப் பொறுத்த வரை கலை என்பதுதான். கலை... கலை என்றுதான் நான் கூப்பிடுவேன். இவர் பயங்கர உழைப்பாளி. இரவு பகல் என்று பார்க்காமல் கடுமையாக உழைப்பவர். அதை நேரில் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர் படமெடுத்திருக்கிறார். நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். அவருக்கு என் வாழ்த்துக்கள். மீண்டும் இப்படத்தின் வெற்றி விழாவில் சந்திப்பேன்," என்றார்.

முன்னதாக 'ஏன் இந்த மயக்கம்' ஆடியோவை பிரபுதேவா வெளியிட இயக்குநர்கள் பாக்யராஜ்,தருண் கோபி பெற்று கொண்டனர்.

 

கெளதம் மேனன் படத்தி்ல 'புக்' ஆனார் ரிச்சா!

Jai Richa Gangopadhyay Sign Gowtham Menon Movie   

தமிழில் சுத்தமாக வாய்ப்பிழந்து வறண்டு போய்க் கிடந்த ரிச்சாவைக் கூப்பிட்டு தனது படத்தில் புக் செய்துள்ளாராம் கெளதம் மேனன்.

ரிச்சா தமிழில் நடித்த முதல் இரு படங்களும் ஊற்றிக் கொண்ட படங்கள் பட்டியலில் வேகமா போய்ச் சேர்ந்ததால் ராசியில்லாத ராணியாக மாறினார் ரிச்சா. ரிச்சாவிடம் எல்லாம் 'ரிச்சாக' இருந்தாலும் அவரது ராசி சென்டிமென்ட் நெகட்டிவாக இருந்ததால் படங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

சிம்புவுடன் அவர் நடித்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒஸ்தி பெரும் தோல்விப் படமானது. அதேபோல தனுஷுடன் நடித்த படமும் போண்டியாகிப் போனது.

இந்த நிலையில் கெளதம் மேனன் பார்வையில் பட்டு அவரது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தில் ரிச்சாதான் நாயகியாம். நாயகனாக நடிக்கப் போவது ஜெய்.

இந்தப் படத்தை கெளதம் மேனன் தயாரிக்க மட்டுமே செய்கிறார். இயக்கம் பிரேம் சாய். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.

ஏற்கனவே நடுநிசி நாய்கள் உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்துள்ளார் கெளதம் மேனன். தற்போது இசைஞானி இளையராஜாவின் இசையில் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் படு பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜப்பானை அதிரவைத்த ரஜினியின் ரோபோ - 1300 அரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகள்!

Super Star Rajini S Robot Rocks Jap

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி, இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையைப் பெற்ற எந்திரன் - தி ரோபோ, இப்போது ஜப்பானைக் கலக்கி வருகிறது.

இந்தப் படத்துக்கு ஜப்பானில் கிடைத்துள்ள ஆதரவு உலகையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. ரோபோ என்ற மனித எந்திரங்கள் உற்பத்தியில் உலகின் முதன்மை நாடாகப் போற்றப்படும் ஜப்பானில், ரஜினியின் ரோபோ திரைப்படம் வெளியாகியுள்ளதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி வருகின்றனர் அந்நாட்டு மக்கள்.

ஆரம்பத்தில் இந்தப் படம் அங்கு சில திரைப்பட விழாக்களில் இரண்டு மணி படமாக எடிட் செய்யப்பட்டு வெளியானது.

அங்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. பின்னர் அந்த எடிட் செய்த பிரதியையே, நாடு முழுவதும் வெளியிட்டனர். எத்தனை தியேட்டர்கள் தெரியுமா... தமிழை விட அதிகம்... 1300 திரையரங்குகள்!

வெளியிட்ட அனைத்து ஜப்பானிய நகரங்களிலும் ரோபோவின் ராஜ்ஜியம்தான். ரஜினி இன்றைக்கு ஜப்பானின் தன்னிகரில்லா சூப்பர் ஸ்டார்.

படம் வெளியாகி நான்கு வாரங்களுக்குப் பிறகும் கூட்டம் குறையவில்லை. ரோபோ ரஜினி முகமூடி அணிந்தபடி இரும்பிலே ஒரு இதயம் பாடலை முணுமுணுத்தபடி, மீண்டும் மீண்டும் படம் வருகிறார்கள் ரசிகர்கள்.

வில்லன் ரஜினி மே... என பழித்துக் காட்டுவாரே... அது அந்த ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம்.

ஆரம்பத்தில் 2 மணிநேரப் படமாக காட்டப்பட்ட ரோபோ, இப்போது 3 மணி நேரப் படமாக மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

வெட்ட வெளிச்சமாகும் டி.வி. புலனாய்வு நிகழ்ச்சிகளின் தரம்!

Is It Necessary Telecast Crime Stor

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் குற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளினால் பள்ளி மாணவர்களும், இளம் தலைமுறையினரும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குற்றம் நடந்தது என்ன? என்று ஒரு தொலைக்காட்சியில் ஆரம்பித்த நிகழ்ச்சி நிஜம், நம்பினால் நம்புங்கள், கோப்பியம், ரௌத்திரம் பழகு, புலன் விசாரணை என பல பெயர்களில் இன்றைக்கு பல தொலைக்காட்சிகளில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக ஆரம்பித்த பின்னர்தான் சின்ன சின்ன குக்கிராமங்களில் குறி சொல்லிக் கொண்டிருந்த பூசாரிகள் கூட வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்தனர். இரண்டு வீட்டுக்கு கூட தெரியாத கள்ளக் காதல் கொலைகள் உலகம் முழுவதும் பிரபலமாகத் தொடங்கின.

கண்ணீர் சிந்த வைக்கும் சீரியல்களை ஒளிபரப்பினால் மட்டுமே எல்லா தொலைக்காட்சிகளிலும் வெற்றி பெற்றுவிட முடியாது. ஆன்மீக நிகழ்ச்சிகளை லைவ் ஆக ஒளிபரப்ப வேண்டும் அல்லது குற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளையோ, பொதுமக்களின் கண்ணீர் சிந்தவைக்கும் கதைகளை லைவ் ஆக ஒளிபரப்பினால் மட்டுமே டிஆர்பி ரேட்டிங்கை எகிறவைக்க முடியும் என்று இன்றைய தொலைக்காட்சிகள் முடிவு செய்து விட்டன. விளைவு பிறரின் வீட்டிற்குள் நுழைந்து புலனாய்வு செய்கிறேன் என்று கேமராவும் கையுமாக புறப்பட்டு விட்டனர்.

ஒரு சேனல்களுக்கே ஒழுங்காய் நிகழ்ச்சி தயாரிக்க முடியாதவர்கள் அல்லது தெரியாதவர்கள் - சகட்டுமேனிக்கு இரண்டு, மூன்று, நான்கு என்று சேனல்கள் ஆரம்பித்து கொண்டே போகிறார்கள்- யாரும் தங்கள் தொலைக்காட்சிகளை பார்க்கிறார்களா, பார்க்கவில்லையா என்பதெல்லாம் அவர்கள் கவலையில்லை. அடிமாட்டு ரேட்டில் இருந்து அண்ணாந்து பார்க்கிற ரேட் வரைக்கும் விளம்பரங்களைப் பேசி வாங்குவதற்காகவே இதுபோன்ற சேனல்களை வரிசையாக தொடங்குகின்றனர்.

தமிழக பார்வையாளர்களை என்ன செய்தால் ஈர்க்க முடியும் என்று தொலைக்காட்சி நிறுவனங்கள் புலனாய்வு செய்ததன் விளைவே க்ரைம் நிகழ்ச்சிகள். இதில் பெரும்பாலும் பாலியல் தொடர்பான கதைகள், அதனால் விளையும் மரணங்கள் போன்றவைகளை விலாவாரியாக, காண தூண்டும் காட்சியமைப்புடன் ஒளிபரப்புகின்றன.

இந்த நிகழ்ச்சிகள் அதிக செலவில்லாத சூழ்நிலையில் மிக சுலபமாக தயாரிக்கக் கூடிய நிகழ்ச்சியாகவும், அதே நேரம் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய நிகழ்ச்சியாகவும் இருக்கின்றன. நடிகர்களுக்கு பணம் தரத் தேவையில்லை. கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் ஓடி வந்து பேட்டி கொடுக்க மக்கள் தயாராக இருப்பதே இதற்கு காரணம்.

இந்த நிகழ்ச்சிகளில் வியாபார நோக்கு என்பதை தவிர - வேறு எந்த சமூக அக்கறையும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பல நேரம் தொலைக்காட்சி சேனல்களுக்கு தணிக்கை அவசியமோ என்கிற கேள்வி எழும்புகிற அளவுக்கு சில நிகழ்ச்சிகளில் எல்லைகள் மீறப்படுகின்றன. உதாரணமாக பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பிய நித்தியானந்தாவின் படுக்கை அறை காட்சி பள்ளி செல்லும் பிள்ளைகளைக்கூட பாதித்தது என்பதுதான் உண்மை.

பள்ளிகளில் மாணவர்களிடையே படுகொலைகள், கள்ளகாதல் போன்றவை கூட மிக சர்வசாதாரணமாக பேசப்படுகின்றன. எப்படியெல்லாம் வசப்படுத்தினான், எத்தனை இடத்தில் கத்தியால் குத்தினான் போன்றவை விவரிக்கப்படுகின்றன. இது அப்பட்டமான சிறுவர்கள் மனதில் பதிவதோடு அவர்களின் மனதிலும் வக்கிர உணர்வுகளை ஏற்படுத்துகிறது.

அதை விட கொடுமை என்னவென்றால் பாதிக்கப்பட்ட உறவினர்களிடம் பேட்டி எடுப்பதுதான் பெரிய இம்சை. அவமானத்தை தேடி தந்த உறவுகளை நினைத்து நொந்து வெந்து கொண்டிருப்பவர்களை- தங்கள் சுயலாபத்துக்காக படமாக்க முனைவது ஊடக தர்மமா என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.