எங்களை முதலில் லவ் பண்ண விடுங்க: குமுறும் நடிகை

சென்னை: விரல் வித்தை நடிகரை காதலிக்கும் நடிகை தங்களை முதலில் காதலிக்க விடுமாறு பத்திரிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

புஸு புஸு நடிகை விரல் வித்தை நடிகரை காதலிப்பதாக அறிவித்தார். மேலும் தான் நடிப்பில் கவனம் செலுத்த விரும்புவதால் தற்போதைக்கு திருமணம் இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் அவர்களின் காதல் முறிந்துவிட்டது என்று செய்திகள் வந்தன. ஆனால் தாங்கள் காதலர்களாக இருப்பதாக நடிகை தெரிவித்தார். காதலித்தாலும் அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதும் இல்லை, சந்தித்துக் கொள்வதும் இல்லை. இதனால் அவர்களின் காதல் இருக்கு ஆனால் இல்லை என்றது போன்று உள்ளது.

இந்நிலையில் நடிகை கூறுகையில்,

முதலில் எங்களை காதலிக்க விடுங்கள். மீடியாக்கள் அமைதியாக இருக்கட்டும் என்று தான் நாங்களும் அமைதியாக இருக்கிறோம். எங்கள் காதல் எதில் முடிய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? நேரம் வருகையில் இது குறித்து நிச்சயம் மீடியாவுக்கு தெரிவிப்போம் என்றார்.

 

மாலினி 22 பாளையங்கோட்டை- விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
1.5/5

நடிப்பு: நித்யா மேனன், க்ருஷ் சதார், நரேஷ், வித்யுலேகா
இசை: அரவிந்த் சங்கர்
ஒளிப்பதிவு: மனோஜ் பிள்ளை
தயாரிப்பு: ராஜ்குமார் சேதுபதி
இயக்கம்: ஸ்ரீப்ரியா

22 பீமேல் கோட்டயம் என சிறந்த மலையாளப் படத்தை தன்னால் முடிந்த வரை கெடுத்து.. ஸாரி எடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீப்ரியா ரீமேக் என்ற பெயரில்!

ஒரிஜினல் படத்தில் கதை, அதன் திரைக்கதை, குறிப்பாக பிரதாப் போத்தன் நடிப்பு... சான்ஸே இல்லை. ஆனால் இந்த ரீமேக்கில் அதெல்லாம் சுத்தமாக இல்லை!

பாளையங்கோட்டையைச் சேர்ந்த நர்ஸ் நித்யா மேனன் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். வேலைக்காக கனடாவுக்குப் போக முயற்சிக்கிறார். அப்போதுதான் க்ரிஷ்ஷைச் சந்திக்கிறார். விசா ஏற்பாடு செய்து தருவதாக அவர் தரும் வாக்குறுதியை நம்புகிறார். க்ரிஷ் ஒரு பிம்ப் என்பது தெரியாமல் காதலில் விழுகிறார் நித்யா. அதன் விளை மகா கொடுமை...

எங்கு பார்த்தாலும் பெண்கள் வன்புணர்வுக்கு ஆட்படுத்தப்படும் ஒரு மோசமான தருணத்தில், இது போன்ற கதையம்சம் கொண்ட படங்கள் தேவை என்பது உண்மை என்றாலும், இந்தப் படத்தில் ஒரு காட்சி கூட உயிர்ப்புடன் அல்லது குறைந்தபட்ச ஈர்ப்புடன் இல்லை என்பதுதான் சோகம்.

காட்சிகளில் ஏக சொதப்பல்கள்... இதற்கு நிச்சயம் இயக்குநர் ஸ்ரீப்ரியாதான் பொறுப்பு. காதலனாக வருபவன் ஒரு பிம்ப்... பக்கா மாமா பையன் என்பதுதான் பார்வையாளர்களுக்குப் புரிந்துவிடுகிறதே... அந்த இடத்தில் எதற்காக இரண்டு சோகப் பாடல்கள்... காதலி என்ற பலியாட்டுக்காக அவன் உருகுவது போன்ற சித்தரிப்புகளெல்லாம் எதற்கு?

மாலினி 22 பாளையங்கோட்டை- விமர்சனம்

நித்யா மேனன் எப்படிப்பட்ட பாத்திரம் என்பதுகூட சரியாக காட்சிப்படுத்தப்படவில்லை. குழந்தைத்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு, கைகளை நீட்டி காதலனை அணைக்கக் கூப்பிடுகிறார் அடிக்கடி. இப்படிப்பட்ட பெண், தனக்கு நேர்ந்த அநீதிக்கு பழிவாங்க உறுதிமிக்க பெண்ணாக மாறும் விதத்தை எத்தனை சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியிருக்கலாம்...

ம்ஹூம். ஜெயிலில் திடீரென்று நான் கொல்லப் போறேன் என்று சொல்கிறார்.

உடனே சக கைதியின் ஏற்பாட்டில் ஒரு வண்டி வந்து அழைத்துப் போகிறது. அடுத்த காட்சியில் முக்கிய வில்லனைக் கொல்கிறார். இந்தக் காட்சிகளில் படம் சுத்தமாகப் படுத்திவிடுகிறது.

நித்யா மேனனுக்கு கொஞ்சமும் பொருத்தமற்ற வேடம். அவராலும் இந்த கனமான பாத்திரத்தைச் சுமக்க முடியவில்லை என்பது தெரிகிறது.

நித்யாவின் காதலனாக நடித்துள்ள க்ரிஷ்ஷைப் பார்த்தால், தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள இன்னொரு பிரசன்னா என்றுதான் தோன்றுகிறது. முகமும் உடல்மொழியும் அப்படித்தான் உள்ளன.

மலையாளத்தில் பிரதாப் போத்தன் கலக்கிய அந்த வில்லன் வேடத்தில் தெலுங்கு நடிகர் நரேஷ். ஒரு ரீமேக் படம் எனும்போது, பல நிலைகளிலும் ஒப்பீடு இருக்கவே செய்யும். அந்த வகையில் நரேஷ் பாத்திரம் ஒரு மைனஸ் என்றுதான் சொல்ல வேண்டும்.

மாலினி 22 பாளையங்கோட்டை- விமர்சனம்  

மனோஜ் பிள்ளையின் ஒளிப்பதிவு ஓகே. அரவிந்த் சங்கரின் இசை, ஏதோ தொலைக்காட்சித் தொடருக்கான எபெக்டைத் தருகிறது.

கிடைக்கிற மேடைகளிலெல்லாம் தமிழ் சினிமாவில் ஆபாசமும், டாஸ்மாக் காட்சிகளும் பெருகி விட்டதே என்று கவலைப்படுபவர் இயக்குநர் ஸ்ரீப்ரியா. ஆனால் அவர் எடுத்துள்ள இந்தப் படத்தைப் பாருங்கள்...

நிறைய இடங்களில் நேரடி ஆபாச வசனங்கள், மதுகுடிக்கும் காட்சிகள், பார் நடனங்கள், பெண்களும் சரக்கடிக்கும் காட்சி... ஒரு கட்டத்தில் வில்லன் நேரடியாக கேட்கிறார் 'கேன் ஐ ஹாவ் செக்ஸ் வித் யு?' என்று ஹீரோயினிடம்.. ஒரு மாற்றுத் திறனாளிப் பெண்ணைப் புணர வேண்டும் என்பதை அத்தனை பச்சையாக வர்ணிக்கிறார்...

ஆனால் சென்சாருக்கு காதும் கேட்கவில்லை, கண்ணும் தெரியவில்லை... க்ளீன் யு சான்று கொடுத்திருக்கிறார்கள்!

 

எல்ரெட் குமார் தயாரிக்கும் 'யாமிருக்க பயமே'

விண்ணை தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம் போன்ற படங்களைத் தந்த ஆர்எஸ் இன்போடைன்மென்ட் அடுத்து தயாரிக்கும் புதிய படத்துக்கு யாமிருக்க பயமே, என தலைப்பிடப்பட்டுள்ளது.

தற்போது ஜீவா நடிப்பில், பிரபல ஒளிபதிவாளர் ரவி கே சந்திரன் இயக்கத்தில் ஏராளமான பொருட்செலவில் 'யான்' படத்தை தயாரித்து வருகிறது இந்த நிறுவனம்.

அடுத்து 'பயம் ' என்ற ஒரு வார்த்தை உள்ளடக்கிய ஏராளமான அர்த்தங்களை மையமாக கொண்டு இந்த 'யாமிருக்க பயமே' படத்தை எடுக்கிறது.

இயக்குனர் கே வி ஆனந்திடம் இணை இயக்குனராக பணியாற்றிய டீ கே இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

கிருஷ்ணா, ரூபாமஞ்சரி, ஆதவ் கண்ணதாசன், கருணா மற்றும் ஓவியா நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் நைனிடாலில் நடந்துள்ளது.

"இந்த ஆண்டிவ் வெளியாகும் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக யாமிருக்க பயமே" என்கிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.

 

லோ கட் ஜாக்கெட்: இசை வெளியீட்டு விழாவில் நடிகையின் மேல் அழகு எக்ஸ்போஸ்

சென்னை: பாலிவுட் நடிகை ஒருவர் தமிழில் அறிமுகமாகும் திருமண படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சேலையில் வந்து மேல் அழகை அளவுக்கு மீறி காண்பித்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பாலிவுட்டில் பெரிய தயாரிப்பு நிறுவனத்தால் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை தமிழில் பூச்சி பெயர் கொண்ட படத்தில் நடித்து பிரபலம் ஆன இரண்டு எழுத்து நடிகருடன் நடித்துள்ளார். திருமண பெயர் கொண்ட இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடந்தது.

விழாவுக்கு வந்த படக்குழுவினர் திருமணத்திற்கு செல்வது போன்று வேட்டி சட்டை, பட்டுப்புடைவையில் வந்திருந்தனர். படத்தின் நாயகி அம்சமாக பட்டுப்புடவையில் வந்திருந்தார். ஆனால் அம்மணி மாராப்பை முழுவதுமாக போடவில்லை.

இதனால் மேடையில் அமர்ந்திருக்கும்போது அவர் குனியவே அவரது மேல் அழகு கொஞ்சம் ஓவராகவே வெளியே தெரிந்தது. புடவை அணிந்தால் மாராப்பை ஸ்டைலாக பாதி மறைத்தும் மறைக்காமலும் போடுவது ஸ்டைலாகிவிட்ட கொடுமையை என்ன சொல்ல.

 

28 லட்சம் ரூபாய் மோசடி: பிரபல படத்தயாரிப்பாளர் தலைமறைவு- பைனான்சியர் புகார்

சென்னை: 28 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பி தராமல் மோசடி செய்து விட்டதாக பிரபல தயாரிப்பாளர் எஸ். நந்தகோபால் மீது பைனான்சியர் ஒருவர் பரபரப்பு புகார் கூறியிருக்கிறார்.

மெட்ராஸ் எண்டர்டெயிமெண்ட் பட நிறுவனம் சார்பில் 'நியூட்டனின் மூன்றாம் விதி', 'மச்சக்காரன்', 'சில்லுன்னு ஒரு சந்திப்பு' ஆகிய படங்களைத் தயாரித்தவர் எஸ்.நந்தகோபால்.

இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தயாள் என்ற பிரபல சினிமா பைனான்சியரிடம் 28 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியிருக்கிறார். ஆனால் இன்றுவரை அந்த பணத்தை திருப்பி தரவில்லை. அதனால் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் தயாள்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் தலைமறைவாகியுள்ள அவரை போலீசார் வலைவீசித் தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து பைனான்சியர் தயாள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் படம் தயாரிப்பதாகச் சொல்லி என்னிடம் சுமார் 3 வருடங்களுக்கு முன்பு 27 லட்சம் பைனான்ஸ் வாங்கினார். அப்படி வாங்கிய அவர் குறிப்பிட்ட நாட்களுக்குள் என்னுடைய பணத்தை தரவில்லை. பலமுறை கேட்டும் அவர் எனக்கு பணத்தை தராமல் இழுத்தடித்தார்.

அதனால் நான் சென்னை எழும்பூரிலுள்ள விரைவில் நீதிமன்றத்தில் அவர்மீது வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர் நேரில் ஆஜராகாததால் அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இதைக் கேள்விப்பட்ட அவர் தலைமறைவாகி விட்டார். இந்த வழக்கில் அவர்மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்கும்," என்றார்.

 

ச்சீய்... பப்ளிசிட்டிக்காக 'உச்சா' போவதையெல்லாம் கூடவா ஷேர் பண்ணுவீங்க ஆமீர் கான்?

இந்தப் படத்தைப் பார்த்ததுமே... இது உண்மையா... போலியா என்ற கேள்வி உங்களுக்குள் எழக்கூடும்.

சந்தேகம் வேண்டாம். உண்மையான படம்தான். அதுவும் ஆமீர்கானே சந்தோஷமாக தனது ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் படம் இது.

தானும் சல்மான்கானும் ஒரு ஓட்டலில் ஒன்றாக உச்சா போகும் 'அரிய' படத்தைத்தான் அவர் போட்டிருக்கிறார்.

சரி, எதற்காக இந்தப் படம் இப்போது என்கிறீர்களா?

ச்சீய்... பப்ளிசிட்டிக்காக 'உச்சா' போவதையெல்லாம் கூடவா ஷேர் பண்ணுவீங்க ஆமீர் கான்?

சல்மான்கான் நடிப்பில் ஜெய் ஹோ என்ற படம் இன்று வெளியாகிறது. இந்தப் படத்துக்கு விளம்பரம் தேடும் வகையில்தான் இந்தப் உச்சா போட்டோவை வெளியிட்டுள்ளாராம் ஆமீர்கான். மேலும் இந்தப் புகைப் படத்தை தனது விருப்பப் படமாக வேறு குறிப்பிட்டுள்ளார் அதில்!

என்னதான் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்றாலும், பப்ளிசிட்டிக்காக இந்த மாதிரி படத்தையெல்லாமா வெளியிடுவார்கள் என கடும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ஸ்டாலின் படம்தான் இந்த ஜெய் ஹோ என்பது குறிப்பிடத்தக்கது!

 

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ரஜினிகாந்த்

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ரஜினிகாந்த்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார்.

நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் திருமலைக்கு வந்தனர். திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினர். அவர்கள் 2 பேரும் இரவு சுமார் 7.45 மணியளவில் ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர். அவர்களை தேவஸ்தான அதிகாரிகள், கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் வரவேற்றனர்.

இரவு சுமார் 8.35 மணியளவில் நடிகர் ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்குள் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் அவர்களுக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமிபடம் ஆகியவை வழங்கப்பட்டது.