'திருமணம் செய்துகொள்ளும் நிலையில் நான் இல்லை' என்றார், காஜல் அகர்வால். மேலும் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு நான் நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடியது. சில படங்கள் தோல்வி அடைந்தது. நான் நடிக்கும் எல்லா படமும் வெற்றிபெறும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. அப்படி எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். தெலுங்கு படத்தில் மகேஷ்பாபுவுடன் முத்தக்காட்சியில் நடித்தது பற்றி கேட்கிறார்கள். இக்காட்சியை ஆபாசம் இல்லாமல் பூரி ஜெகன்நாத் இயக்கினார். ரசிகர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். முத்தக்காட்சியை தவிர எத்தனையோ காட்சிகள் படத்தில் இருக்கிறது. அதுபற்றிக் கேட்காமல், முத்தம் பற்றியே கேட்பது ஏன்? கதைக்கு அவசியம் என்பதால்தான் அப்படி நடித்தேன். நான் 'நிர்வாண போஸ்' கொடுத்ததாக வந்த செய்திக்கு, தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்கிறார்கள். இதை நான் பலமாக மறுத்திருக்கிறேன். பொய்யான அச்செய்திக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து, விஷயத்தைப் பெரிதாக்க விரும்பவில்லை. அதனால் அமைதியாகி விட்டேன். இந்தியில் 'சிங்கம்Õ ரிலீசுக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வருவதால் ஏற்க முடியவில்லை. தெலுங்கு ஹீரோ பிரபாசுடன் எனக்கு காதல் என்று எழுதுகிறார்கள். திருமணம் ஆகாதவர்கள் இரண்டு பேர் பழகினால், உடனே அவர்கள் காதலிக்கிறார்கள் என்று அர்த்தமா? அவர் எனக்கு நல்ல நண்பர், அவ்வளவுதான். தற்போது திருமணம் செய்துகொள்ளும் நிலையில் நான் இல்லை. அதற்கான நேரம் வரும். அப்போது திருமணம் செய்வேன்.
பிப்ரவரி 3ல் ஜெனிலியா திருமணம்
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஜெனிலியா. இவரும், ரிதேஷ் தேஷ்முக்கும் இந்தியில் நடித்தபோது காதலித்தனர். இதை இருவருமே மறுத்து வந்தனர். இந்நிலையில், இருவீட்டு சம்மதம் கிடைத்தது. இப்போது தன் காதலை வெளிப்படையாக அறிவித்துள்ள ஜெனிலியா, ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்கிறார். இவர்களின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி வரும் 31ம் தேதியும், பிப்ரவரி 3ம் தேதி திருமணமும், மறுநாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் மும்பையில் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு ஜெனிலியா நடிப்புக்கு முழுக்குப் போடுவார் என்று தெரிகிறது.
ஆங்கில ஆல்பத்தில் ஆடுகிறார் அக்ஷயா
'கலாபக் காதலன்', 'உளியின் ஓசை' படங்களில் நடித்துள்ள அக்ஷயா, தற்போது ஆங்கில ஆல்பம் ஒன்றில் ஆடுகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழில் 2 படங்களிலும், தெலுங்கில் 'நாக்கண்டு ஒக்கரு' படத்திலும் நடிக்கிறேன். என் நண்பர்கள் தயாரிக்கும் 'ஜி-அருளஸ்' என்ற ஆங்கில ஆல்பத்தில் ஆடியிருக்கிறேன். இது வெற்றிபெற்றால், தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்து தமிழிலும் ஆல்பம் தயாரிப்பேன். எனக்கு பாய் பிரண்டுகள் அதிகம். இதனால், நான் யாரையோ காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொண்டதாகவும் அடிக்கடி செய்திகள் வருகிறது. யாரையும் நான் காதலிக்கவில்லை என்பதே உண்மை. காதலையும், கல்யாணத்தையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.
பிப்ரவரி 3ல் ஜெனிலியா திருமணம்
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஜெனிலியா. இவரும், ரிதேஷ் தேஷ்முக்கும் இந்தியில் நடித்தபோது காதலித்தனர். இதை இருவருமே மறுத்து வந்தனர். இந்நிலையில், இருவீட்டு சம்மதம் கிடைத்தது. இப்போது தன் காதலை வெளிப்படையாக அறிவித்துள்ள ஜெனிலியா, ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்கிறார். இவர்களின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி வரும் 31ம் தேதியும், பிப்ரவரி 3ம் தேதி திருமணமும், மறுநாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் மும்பையில் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு ஜெனிலியா நடிப்புக்கு முழுக்குப் போடுவார் என்று தெரிகிறது.
சிறந்த சைவ பிரியர் தனுஷ், மல்லிகா
உணவுக்காக விலங்குகளை கொல்வதை தடுக்கவும், மாறாக அசைவத்தில் இருந்து சைவத்துக்கு மாற்றும் நோக்கில் விலங்குகள் பாதுகாப்பு நல அமைப்பான பீட்டா விழிப்புணர்வு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பிரபலங்களிடம் கருத்து கேட்டு, ஆண்டுதோறும் சினிமா பிரபலங்களில் சிறந்த சைவை பிரியர்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் '3' படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலவெறிடி' பாடல் மூலம் உலக அளவில் பிரபலமான தனுஷ் மற்றும் 'மர்டர்' படம் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத், 2011ன் சிறந்த சைவ பிரியர்களாக தேர்வாகினர். 'சைவ உணவை சாப்பிடுவதால் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதை உணர்வதுடன், சீரான உடற்கட்டுடன் உள்ளேன்' என்று தனுசும், 'சைவ உணவே மிகவும் சிறந்தது' என்று மல்லிகாவும் தெரிவித்தனர்.
மல்டி ஸ்டார் படம் தவறு இல்லை!
'ஒரே படத்தில், பல ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பது தவறு இல்லை' என்றார் ஸ்ரீகாந்த். மேலும் அவர் கூறியதாவது: 'ரோஜாக்கூட்டம்', 'ஏப்ரல் மாதத்தில்', 'பார்த்திபன் கனவு' படங்களில் பார்த்த மென்மையான ஸ்ரீகாந்தை மீண்டும் பார்க்க வைத்த படம், 'நண்பன்'. தெலுங்கிலும் 'டப்' ஆகிறது. தமிழில் இனி நான் நடிக்கும் படத்தை ரொம்ப கவனமாகத் தேர்வு செய்யும்படி ஷங்கர் அறிவுரை சொன்னார். அதை கடைபிடிக்கிறேன். வெற்றிகரமான படத்தில் இருக்கும்போது மட்டுமே அப்படத்தில் நடித்தவர்கள் கவனிக்கப்படுகிறார்கள். அந்தவகையில், 'நண்பன்' எனக்கு திருப்புமுனைப் படமாக அமைந்துள்ளது. ஒரே படத்தில் பல ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கும்போது, நடிப்பில் ஆரோக்கியமான போட்டி ஏற்படுகிறது. தவிர, மற்ற ஹீரோக்களின் ரசிகர்களும் படத்தைப் பார்த்து நடிப்பை பாராட்டுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, படத்தில் எனது கேரக்டருக்கு சம முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், எத்தனை ஹீரோக்களுடனும் இணைந்து நடிக்கத் தயாராக இருக்கிறேன். இப்படி நடிப்பது ரசிகர்களுக்கும் பரவச அனுபவமாக இருக்கும். மல்டி ஸ்டார் படம் ஒன்றும் தவறு இல்லை. தமிழில் 'பாகன்' படத்தில் ஜனனி அய்யருடன் நடிக்கிறேன். மலையாளத்தில் பிருத்விராஜின் வேண்டுகோளுக்காக, அவர் ஹீரோவாக நடிக்கும் 'ஹீரோ' படத்தில், நடிகர் ஸ்ரீகாந்தாகவே கவுரவ வேடத்தில் வருகிறேன். தெலுங்கில் 'நிப்பு' படத்தில் ரவிதேஜாவுடன் சேர்ந்து நடிக்கிறேன். எனக்கு ஜோடி, பாவனா.
அப்பா ஆனார் செல்வராகவன்
தனுஷ் நடித்த 'காதல் கொண்டேன்', '7 ஜி ரெயின்போ காலனி', 'மயக்கம் என்ன', கார்த்தி நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படங்களை இயக்கியவர் செல்வராகவன். தற்போது ஆர்யா நடிக்கும் 'இரண்டாம் உலகம்' படத்தை இயக்கி வருகிறார். செல்வராகவன் மனைவி கீதாஞ்சலிக்கு நேற்று மாலை 5.25 மணியளவில், சென்னை யில் உள்ள மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து செல்வராகவன் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
இந்திக்கு செல்கிறார் லிங்குசாமி
தமிழில் ரிலீசான 'வேட்டை', இந்தியில் ரீமேக் ஆகிறது. இதுகுறித்து இயக்குனர் லிங்குசாமி கூறியதாவது: என்னுடன் இணைந்து 'வேட்டை'யை தயாரித்த யுடிவி நிறுவனம், அதை இந்தியிலும் தயாரிக்கிறது. இந்தி நட்சத்திரங்களுக்கு படம் திரையிடப்பட்டது. நடிகர்கள் முடிவாகவில்லை. 'வேட்டை'யை தொடர்ந்து, எனது இயக்கத்தில் தமிழில் ரிலீசான 'சண்டக்கோழி', 'ரன்' படங் களை யுடிவியுடன் இணைந்து இந்தியில் தயாரிக்கிறேன். மேலும், இந்தியில் விரைவில் படம் இயக்க உள்ளேன்.
தங்கம் தொடரில் நடிக்க பெண்கள் தேர்வு
ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் 'தங்கம்' தொடர், சன் டி.வியில் ஒளிபரப்பாகிறது. இதில் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை, போட்டிகள் மூலம் அவர் தேர்வு செய்து வருகிறார். 'சின்த்தால் சரும பாதுகாப்பு சீசன் 2' என்ற பெயரில் 2வது முறையாக இப்போட்டிகள் நடந்தது. கோவை, மதுரை, திருச்சி, சென்னையில் நடந்த முதற்கட்டப் போட்டியில், 15 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான இறுதிப்போட்டி சென்னையில் நடந்தது. தனி நடிப்பு, இணைந்து நடிப்பு, பொது அறிவு என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சென்னையைச் சேர்ந்த பிரவீணா, பிரசாந்தி வெற்றிபெற்றனர். இவர்களுக்கு 'தங்கம்' தொடரில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இப்போட்டிக்கு ரம்யா கிருஷ்ணன், காவேரி, இயக்குனர் டி.பி.கஜேந்திரன், நிதின் சத்யா நடுவர்களாக இருந்தனர். கோத்ரெஜ் பிராண்ட் மேனேஜர் சின்மயி கேன்கர், பி.ஆர்.சுபாஷ், ஸ்ரீனிவாச அய்யர், டாக்டர் முருகுசுந்தரம் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விஷன் புரோ மேனேஜ்மென்ட் செய்திருந்தது.