'முழுகாமல்' இருக்கிறார் ஷில்பா ஷெட்டி!

Tags:


நடிகை ஷில்பா ஷெட்டி கர்ப்பமாக இருக்கிறாராம். இதனால் அவரும், கணவர் ராஜ் குந்த்ராவும் படு சந்தோஷமாகியுள்ளனர்.

நடிகையாக ஷில்பாவின் கிராக்கி மங்கிப் போய் வெகு காலமாகி விட்டது. இப்போது அவர் தனது காதல் கணவருடன் லண்டனில் குடித்தனம் செய்து வருகிறார். கூடவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் புதிய சந்தோஷமாக கர்ப்பமாகியிருக்கிறார் ஷில்பா. 2 ஆண்டுகளுக்கு முன்புதான் இவர்களுக்குத் திருமணமானது. தற்போது இவர்களின் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு குட்டிப் பாப்பா வரவுள்ளது.

ஷில்பாவுக்கு இது முதல் குழந்தையாகும். அதேசமயம், ராஜ் குந்த்ராவுக்கு இது 2வது குழந்தையாகும். ராஜ் குந்த்ராவின் முதல் மனைவி கவிதா. இவர்களுக்கு டலீனா என்ற பெண் குழந்தை உள்ளது. இக்குழந்தைக்கு இப்போது 6 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே குழந்தைச் செல்வம் குறித்து ஷில்பா அளித்திருந்த ஒரு பேட்டியில், எனக்குக் குழந்தைகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். குழந்தைப் பேறுக்காக காத்திருக்கிறேன். குறைந்தது 2 குழந்தைகளாவது பெற்றுக் கொள்வேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் முதல் முறையாக தாயாகியிருக்கிறார் ஷில்பா.

ஷில்பாவுக்கும், ராஜ் குந்த்ராவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்திற்காக தனது மனைவி கவிதாவை உதறித் தள்ளினார் குந்த்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
 

மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!!

Tags:


மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தியதுடன், ராணா படத்துக்காக அளவுக்கதிகமாக எடையைக் குறைக்கும் முயற்சியில் ரஜினி இறங்கியதுதான் அவருக்கு ஆபத்தாக முடிந்தது என்று இப்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருந்து, மாத்திரை, மருத்துவமனை ஆகியவற்றோடு ரஜினியை தொடர்புபடுத்தி பார்க்கக் கூட விரும்பாதவர்கள் ரஜினி ரசிகர்கள். அதற்கேற்ப, ரஜினியும் கடந்த 30 ஆண்டுகளில் மருத்துவமனைக்கு சென்று யாரும் பார்த்ததில்லை.

மேலும் அவருக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு போன்ற எந்த பாதிப்பும் இல்லை என்று சமீபத்தில்தான் பேட்டியளித்திருந்தார். யோகா, இயற்கை மருத்துவம் போன்றவற்றில்தான் ரஜினி அதிக கவனம் செலுத்தி வந்தார். அரிசி உணவுகளை முற்றாகத் தவிர்த்துவிட்டார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராணா படத்துக்காக அவர் உடலை மேலும் ஸ்லிம்மாக்கும் முயற்சியில் 15 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளார். 20 நாட்களில் இந்த அளவு எடையைக் குறைத்துள்ளார் ரஜினி. இதற்காக மருந்து மாத்திரை எதுவும் எடுக்கவில்லையாம். வெறும் நீர்ம உணவு மற்றும் கடுமையான யோகாசனத்தை மேற்கொண்டுள்ளார் ரஜினி.

இதுகுறித்து ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் கெயிக்வாட் கூறுகையில், "ராணா படத்தில் ஒரு கேரக்டருக்காக தம்பி 20 கிலோ வரை எடையைக் குறைத்துவிட்டார். இதற்காக அவர் மிகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார். அதுதான் அவருக்கு லேசான பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் அதை அசட்டை செய்துவிட்டு தொடர்ந்து அவர் படப்பிடிப்புக்குப் போனதால் காய்ச்சல் மற்றும் வயிற்றுக்கோளாறு அதிகரித்துவிட்டது. ஆனால் பயப்படும்படி ஒன்றுமில்லை...", என்றார்.

மதுவுக்கு 'பை' சொன்ன ரஜினி!!

ரஜினி எந்த அளவுக்கு மது அருந்துவார் என்பது வெளிப்படையாகத் தெரிந்த ஒன்று. சில நேரங்களில் 10 பெக் வரை கூட போவது அவர் வழக்கமாம். ஆனால் அவரது 61வது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட தினத்திலிருந்து குடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டாராம் ரஜினி. இன்றுவரை ஒரு சொட்டு மதுவைக் கூட அவர் தொடவில்லையாம்.

கடுமையான உணவுக் கட்டுப்பாடு மற்றும் மதுப்பழக்கத்தை திடீரென கைவிட்டது காரணமாகவே அவருக்கு இந்த நிலை ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனாலும், இனி மதுவைத் தொடுவதில்லை, சிகரெட்டையும் முழுமையாக விட்டுவிடுவதாக ரஜினி உறுதியெடுத்துள்ளதை அவரது குடும்பத்தினரே ஆச்சரியத்துடன் பார்க்கிறார்களாம்.

இந்த ஆச்சர்யம், குடி மற்றும் மதுவை விடமுடியாமல் தவிக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பது சூப்பர் ஸ்டாரின் விருப்பமாம். இதுமட்டும் நடந்தால், பல குடும்பங்கள் வாழ்த்து ரஜினிக்கு நிச்சயம்!!
 

தமிழுக்கு வரும் பார்த்திபனின் 'மேல்விலாசம்'!

Tags:


பார்த்திபன் - சுரேஷ் கோபி நடித்த மலையாளப் படமான 'மேல்விலாசம்' படம் தமிழில் டப் செய்யப்படுகிறது.

மாதவ் ராமதாஸ் என்ற புதுமுகம் இயக்கியுள்ள இந்தப் படம் மலையாள சினிமாவில் மிக முக்கிய படமாக பார்க்கப்படுகிறது.

ராணுவ கோர்ட்டால் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு ராணுவ வீரனைப் பற்றி படம் இது. முழுக்க முழுக்க நீதிமன்ற அறைக்குள்ளே நடக்கும் கதை இது. இந்த வித்தியாசமான முயற்சிக்கு அங்கே ஏக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் ஹீரோயினே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபனின் நடிப்பு படத்தில் பெரிதும் பேசப்படுகிறது.

இப்போது இந்தப் படத்தை தமிழிலும் வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் படத்தின் ஹீரோக்களில் ஒருவரான பார்த்திபன்.
 

ஜூன் முதல் கமல்ஹாசன் விஸ்வரூபம்

Tags:


கமல்ஹாசன் நடிக்க, செல்வராகவன் இயக்க உருவாகவிருக்கும் விஸ்வரூபம், படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்குகிறது.

கமல் படம் போலவே இல்லை என்று அத்தனை பேரும் பாரபட்சமில்லாமல் கூறிய மன்மதன் அம்பு படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்கப் போகும் படம் செல்வராகவனின் விஸ்வரூபம்.

இப்படத்திற்கான மெனக்கெடல்கள் நீண்ட நாட்களாக நடந்து வந்தது. இடையில் இப்படம் இப்போதைக்கு இருக்காது என்றும் பேச்சு எழுந்தது. ஆனால் தற்போது படப்பிடிப்புக்கு கமல் மற்றும் செல்வராகவன் கூட்டணி தயாராகி விட்டது.

ஜூன் மாதம் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளனர். இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பவர் சோனாக்ஷி சின்ஹா.

இதற்கிடையே, சோனாக்ஷிக்கும், காத்ரீனா கைபுக்கும் இடையே புகைச்சல் பெருக்கெடுத்துள்ளதாம். சல்மான்கான், சோனாக்ஷியை தனது அடுத்த படத்திற்காக அழைத்ததால் சோனா மீது காத்ரீனாவுக்கு சற்று காட்டமாகியுள்ளதாம்.

ஆனால் இதுகுறித்து சோனாவிடம் கேட்டால், அதெல்லாம் இல்லை. பெண்கள் பொதுவாகவே எதையும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். இதை வைத்து கதை கட்டி விட்டு விட்டார்கள் என்கிறார்.

முன்னாள் பாலிவுட் ஹீரோ சத்ருகன் சின்ஹாவின் மகள்தான் சோனாக்ஷி என்பது குறிப்பிடத்தக்கது.
 

சித்தார்த்துடன் வாழ்கிறாரா ஸ்ருதி

Tags: nbsp

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சித்தார்த்துடன் வாழ்கிறாரா ஸ்ருதி

5/12/2011 2:11:41 PM

'பாய்ஸ்' சித்தார்த்தும், ஸ்ருதியும் நெருங்கிப் பழகுகின்றனர் என்ற கிசுகிசு பரவி வருகிறது. இந்நிலையில் ஆங்கில பத்திரிகையொன்றில், இருவரும் லிவிங் டுகெதர் பாணியில் ஒன்றாக வாழ்வதாக தகவல் வெளியானது. இதுபற்றி ஸ்ருதியின் தந்தை கமல்ஹாசனிடம் கேட்டபோது, அவர் மறுப்பெதுவும் தெரிவிக்கவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்ருதியிடம் கேட்டபோது, 'நான் சினிமா வாழ்க்கையையும், நிஜவாழ்க்கையையும் ஒன்றாக கலப்பதில்லை. என் படங்களைப்பற்றி கேள்வி கேட்டால் பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன். எனது சொந்த வாழ்க்கையில் யாரும் தலையிடுவதை விரும்பவில்லை. இதுபற்றி வெளிப்படையாக  மீடியாவில் விவாதிக்க விருப்பமில்லை. எனது உணர்வுகளை புரிந்துகொண்டு மதிப்பளிப்பார்கள் என்று கருதுகிறேன்' என்றார். இவரது இந்த பதிலால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




 

அழகர்சாமியின் குதிரை: 'எல்லாப் புகழும் சுசீந்திரனுக்கே!' - அப்புக்குட்டி

Tags:


சுசீந்திரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவான அழகர்சாமியின் குதிரை இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று சென்னை பிரசாத் லேபில் திரையிடப்பட்டது.

படம் பார்த்த அத்தனைபேரும் கைதட்டிப் பாராட்டினார்கள், காட்சி முடிந்ததும். சற்று கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற சுசீந்திரன் கைகளைக் குலுக்கியும், தோளில் தட்டியும் பாராட்டித் தள்ளி்னார்கள்.

படத்தின் நாயகன் அப்புக்குட்டிக்கு ஏக சந்தோஷம். "இந்தப் படத்தில் எல்லாப் புகழும் சுசீந்திரனுக்குதான். அவர்தான் உண்மையான ஹீரோ. எனக்கு இந்த வாழ்க்கை கிடைக்க காரணம் அவர்தான். அழகர்சாமியின் குதிரையை நானும் பார்த்தேன். என்ன சொல்லவதென்றே தெரியவில்லை. அவரைப் பாராட்ட வார்த்தைகளில்லை.

அய்யா இளையராஜாவின் இசையில் நான் நடித்ததை கடவுளின் ஆசீர்வாதம் என்றுதான் சொல்லவேண்டும். அதுவும் எனக்காக அவர் குரல்மாற்றி பாடியதை என்னவென்று சொல்வது. படம் பார்த்துவிட்டு என்னை அழைத்துப் பாராட்டினார் ராஜா சார். பல விருதுகளுக்கு இணையானது அந்தப் பாராட்டு!", என்கிறார் அப்புக்குட்டி.

எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த சுசீந்திரனிடம் படம் குறித்து கேட்டபோது, "என் வேலையை நேர்மையாகச் செய்துள்ளேன். பத்திரிகையாளர்களும் மக்களும்தான் இனி பேசவேண்டும்...", என்றார்.

சுசீந்திரனின் நேர்மையான படைப்புக்கு விருதுககளும் பாராட்டுக்களும் மட்டுமல்ல, வசூலும் குவியட்டும்!
 

'காதலிக்கிறேன்... ஆனா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்!' - ஸ்வேதா மேனன்

Tags:


கடந்த சில தினங்களாக தொடர்ந்து செய்திகளில் இருந்து வருபவர் ஸ்வேதா மேனன். அவரது படத்தை செக்ஸ் லேகிய விளம்பரத்துக்குப் பயன்படுத்தியதற்காக வழக்கு, தாரம் என்ற படத்தில் படு செக்ஸியாக நடித்தது... இப்போது திருமண வதந்திகள்.

வரும் மே 18-ம் தேதி அவருக்கும் மும்பையைச் சேர்ந்த ஸ்ரீவல்சன் மேனனுக்கும் திருமணம் என்று செய்திகள் பரவியது. ஆனால் இதனை மறுத்துள்ளார் ஸ்வேதா.

"ஸ்ரீவல்சனுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது உண்மைதான். நாங்கள் ரொமான்டிக் ஜோடியாக இருக்கவே விரும்புகிறேன். ஆனால் கல்யாணம் என்ற ஐடியா இதுவரை எனக்கு வரவில்லை. காரணம், எனக்கு அவ்வளவு வேலைகள் உள்ளன..." என்கிறார் ஸ்வேதா.

ஸ்வேதாவைக் காதலிக்கும் இந்த ஸ்ரீவல்சன், பிரபல மலையாள கவிஞர் வல்லத்தோல் நாராயண மேனன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.