புடவைதான் பெஸ்ட்! இது சதாவின் ஸ்டேட்மென்ட் !!

Saree Is Best Women Sadha   

இந்தியாவின் பாரம்பரிய உடை புடவைதான் பெண்கள் புடவை உடுத்துவதே அழகு என்று ஸ்டேட்மென்ட் விடுத்துள்ளார் நடிகை சதா.

ஜெயம் படம் மூலம் தமிழில் அறிமுகமான சதா பாவடை தாவணி, புடவையில்தான் நடித்து வந்தார். பின்னர் பிரியசகி படத்தில் கொஞ்சம் கவர்ச்சி உடையில் தோன்றிய அவர் அந்நியனில் எந்த உடையும் உடுத்தி தான் நடிக்கத் தயார் என்ற அளவில் நடித்திருந்தார். இருந்தாலும் பெரிய அளவில் அவருக்கு படங்கள் கமிட் ஆகவில்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் `மைதிலி' படத்தில் சதா நடித்து வருகிறார். இந்த படத்தின் பாடல் காட்சியில் மூன்று விதமான சேலைகளில் தோன்றி நடித்திருகிறாராம்.

முந்தைய படங்களில் மாடர்ன் டிரெஸ்சில் நடித்த சதா திடீரென்று புடவைக்கு மாறியது குறித்து சதாவிடம் பலரும் கேட்டு வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள அவர், இது நமது கலாசார உடை ஆகும். வெளிநாடுகளில் இருந்தாலும் முக்கிய நிகழ்ச்சிகளில் சேலை உடுத்த நாம் மறப்பதில்லை. பெண்களுக்கு புடவையே அழகை தரும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. பெண்களின் உடல் அமைப்புக்கு சேலைதான் பொருத்தமானது என்று கூறியுள்ளார். `மைதிலி' படத்தின் பாடல் காட்சியில் சேலை உடுத்தி நடித்து இருக்கிறேன். மூன்று விதமான சேலை உடுத்தி நடனம் ஆடி இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

‘மைதிலி' படத்தை தவிர 'மன பிரேமா' என்ற தெலுங்கு படத்திலும் தமிழில் தயாராகும் 'மதகஜராஜா' படத்தில் கவுரவ வேடத்திலும் நடிக்கிறார் சதா.

 

மலேசியாவில் டிசம்பரில் யுவனின் இசை நிகழ்ச்சி

வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்துவது நம் ஊர் இசை அமைப்பாளர்களுக்கு பிடித்தமான ஒன்று. ஏ.ஆர். ரஹ்மான் பல நாடுகளில் கான்செர்ட்டுகளை நடத்தியிருக்கிறார் அதேபோல தற்போது இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மலேசியாவில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். டிசம்பர் 15ம் தேதி கோலாலம்பூரில் இசைக்கச்சேரி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு நம் ஊர் இசை அமைப்பாளர்கள் நடத்தும் கச்சேரிகளை கேட்பது என்றால் விருப்பம் அதிகம். இதனை கருத்தில் கொண்டு மலேசிய மண்ணில் இசைக்கச்சேரி நடத்துவதற்கு முடிவு செய்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. இந்த கச்சேரியில் இயக்குநரும் யுவனின் சகோதரருமான வெங்கட் பிரபு, பிரேம்ஜி, ஆகியோர் பங்கேற்கின்றனர்.

யுவன் இசையமைத்த ‘ஆதிபகவன்' படத்தின் கேசட் வெளியீட்டு விழா கனடாவில் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு அடுத்த படியாக மலேசியாவில் Nasional Bukit Jalil Stadium தில் டிசம்பர் 15 ம் தேதி இரவு 7 மணிக்கு யுவனின் கச்சேரி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா ஏற்கனவே 2010 ம் ஆண்டு ஜனவரியில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்திய இசைக் கச்சேரியை 25ஆயிரம் ரசிகர்கள் வரை கேட்டு ரசித்தனர். அதேபோல் இந்த இசை நிகழ்ச்சிக்கும் பெரிதும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

காதல் மீது இன்னமும் நம்பிக்கை இருக்கிறது: நயன்தாரா

Nayanthara Has Still Hopes On Love   

சிம்பு, பிரபுதேவா ஆகியோருடனான காதல் தோல்வியில் முடிந்த பின்னரும் காதல் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாக நயன்தாரா தெரிவித்துள்ளார். எனக்கென்று ஒருவர் பிறந்திருக்கிறார் கடவுள் அவரை எனக்கு கொடுப்பார் என்றும் கூறியுள்ளார் நயன்தாரா.

நயன்தாராவுக்கும் காதல் கிசுகிசுவிற்கும் பஞ்சமே இருக்காது. சிம்பு உடன் கிசுகிசுக்கப்பட்ட நயன்தாரா திடீரென்று அவருடனான காதலை முறித்துக்கொண்டார். பின்னர் பிரபுதேவா உடன் காதல் உறுதியாகி திருமணம் வரை சென்றது. பிரபு தேவாவின் பெயரை தன் கையில் பச்சைக் குத்திக் கொண்டார். அவருக்காக மதம் மாறினார். ஆனால் அந்த காதலும் தோல்வியில் முடிந்தது.

சீதாவாக நடித்த படம் ராமராஜ்ஜியம் படம்தான் கடைசி படம் என்று அறிவித்திருந்த நிலையில் பிரபுதேவாவுடன் காதல் முறிந்ததையடுத்து மீண்டும் சினிமாவில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அஜீத்துடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த நயன்தாரா, காதல் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது என்று கூறியிருக்கிறார். எனக்கு கடவுள் எவ்வளவோ கொடுத்து உள்ளார். அன்பு, காதல், மீது எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. எனக்காக ஒருவர் பிறந்தே இருக்கிறார். அவரையும் கடவுள் எனக்கு கொடுப்பார் என்றார்.

நான் நடித்த ஒரு படம் தோல்வி அடைந்தால் அதற்காக வருத்தம் அடைவேன். அடுத்த படத்தில் அதனை திருத்திக் கொள்வேன். அதன் மூலம் வெற்றி பெறுவேன். அதுபோலத்தான் வாழ்க்கையிலும் எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டால் அதுபற்றி வருத்தப்படாமல் அதனை மறந்துவிட வேண்டும். கசப்பான அனுபவம்தான் நமக்கு கூடுதல் முன்னேற்றத்தை அளிக்கும்.

இன்றைய கசப்பான அனுபவம் நாளைய இனிப்பான நிகழ்வாக இருக்கும் என்று தத்துவமழை பொழிந்திருக்கிறார் நயன்தாரா.

 

அது வீட்டுக்கு, இது கல்வி சேவைக்கு! சூர்யாவின் கணக்கு

Surya Prefers Commercials

காபி பொடியோ, பல்பொடியோ, எண்ணெயோ, சிமெண்டோ சூர்யாதான் டாப் மாடல். தலைக்கு தேய்க்கும் எண்ணெய் தொடங்கி புதிதாக நகைக்கடை விளம்பரம் வரைக்கும் மாடலாக வந்து வாங்கச்சொல்லுகிறார் சூர்யா. சினிமாவில் மட்டுமல்லாது விளம்பரங்களில் சூர்யா அதிக அளவில் கவனம் செலுத்த காரணம் அகரம் பவுண்டேசன்தான் என்று தெரியவந்துள்ளது.

முன்னணி நடிகர் விளம்பரங்களிலோ, நிகழ்ச்சிகளிலோ நடிக்க தயக்கம் காட்டும் நிலையில் சூர்யா அதிக அளவில் விளம்பரப்படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் இப்படி ஒரு விளம்பரம் கூட விடாமல் சூர்யா சம்பாதிக்கிறார் என்று விமர்சனம் எழுந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதில் கொடுத்துள்ளார் சூர்யா.

ஏழை மாணவர்களின் கல்விக்காக'அகரம்' என்ற தொண்டு நிறுவனத்தை எனது மனைவி மற்றும் விஜய் உட்பட சில நடிகர்களின் உதவியுடன் தொடங்கி, உதவி செய்து வருகிறேன். நான் படங்களில் சம்பாதிப்பது எனது குடும்பத்திற்கு என்றால், விளம்பரங்களில் சம்பாதிப்பது முழுவதையும் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் ஆசிரமங்களுக்கும் தான் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார் சூர்யா.

விமர்சனத்தை விட்டுத்தள்ளுங்க சூர்யா!

 

இசைப் புயல் 20- ஏ.ஆர். ரஹ்மானுக்கு அக்டோபரில் பாராட்டு விழா!

A R Rahman Completes 20 Years

சென்னை :‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மான் திரைப்பட உலகில் இசையமைக்க ஆரம்பித்து 20 ஆண்டுகாலம் ஆவதை ஒட்டி சென்னையில் பிரமாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சென்னை காமராஜர் அரங்கில் அக்டோபர் மாதம் இந்த விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஜா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இசை வாழ்க்கையை தொடங்கியவர் ஏ.ஆர். ரஹ்மான். தேசிய விருதுகளும், இரட்டை ஆஸ்கர் விருதுகளும் பெற்று தமிழ் திரை உலகிற்கு பெருமைத் தேடித்தந்தவர்.

ரஹ்மான் இசையமைக்க ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகி விட்டன. இதைக் கொண்டாடும் விதமாகவும், ரஹ்மானைக் கௌரவிக்கும் விதமாகவும் பிரம்மாண்டமான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘RAINDROPSS’ என்ற இசைக்குழு சார்பில் அக்டோபர் 21 ஆம் தேதி சென்னையில் உள்ள காமராஜர் நினைவு அரங்கத்தில் வைத்து ரஹ்மானுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. ரஹ்மானை கௌரவிக்கும் விதமாக பிரபல இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் என திரைத் துறையை சேர்ந்த பலரும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். என்று இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ள ‘RAINDROPSS’ குழுவின் தலைவரும், ரஹ்மானின் தங்கையுமான ஏ.ஆர். ரஹைனா தெரிவித்துள்ளார்.

 

எப்போ கூப்பிட்டாலும் வரணும்: ஹன்சிகாவுக்கு சிம்புவின் கட்டளை


Simbu Causing Trouble Hansika   
வாலு படத்தில் சிம்புவுக்கு ஜோடி சேர்ந்த காரணத்தினால் தற்போது கையை பிசைந்து கொண்டிருக்கிறாராம் ஹன்சிகா.

‘வேட்டை மன்னன்', ‘போடா போடி' என பிஸியாக இருக்கும் சிம்பு, வாலு படத்தை அவ்வப்போது கவனிக்கிறார். இதில் ஜோடியாக நடிக்கும் ஹன்சிகாவும், காமெடியன் சந்தானமும் கை நிறைய படங்களை வைத்துக் கொண்டுள்ளனர்.

சிம்பு இறுதியாக நடித்த ‘ஒஸ்தி' படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், 'வாலு' மற்றும் 'போடா போடி' போன்ற படங்களை வெற்றிப் பாடமாக்கியே தீருவேன் என்ற வேகத்துடன் உழைத்துக் கொண்டிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட போடா போடி திரைப்படம் இப்பொழுதுதான் வேகம் எடுத்துள்ளது. இதன் கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர்.

‘வாலு' படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது என்று ஏற்கனவே சிம்பு அறிவித்துள்ளார். எனவே ‘வாலு' திரைப்படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடிப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ‘வாலு' படப்பிடிப்பில் வந்து வந்து நடித்து தரவேண்டும் என்று சிம்பு ஒப்பந்தம் போட்டுள்ளதால் செய்வதறியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறாராம் ஹன்சிகா.
 

கலக்கல் கேபிஎல்: திருவள்ளூரை அமுக்கிய காஞ்சிபுரம்!

Kpl Match Reality Show Kanchipuram

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடியை ரியாலிட்டி ஷோ வாக ஒளிபரப்புகிறது ஜெயா டிவி. கேபிஎல் எனப்படும் கபடி பிரீமியர் லீக் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் திருவள்ளூர் அணியை எதிர்த்து ஆடிய காஞ்சிபுரம் அணி 79 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது.

தமிழகத்தின் 32 மாவட்டங்களை சேர்ந்த மகளிர் கபடி அணியினரின் இந்த வீர விளையாட்டு ஒவ்வொருவாரமும் சனி இரவு 9.30 மணிக்கும் ஞாயிறு மதியம் 1.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. செப்டம்பர் 8 ம் தேதி இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் காஞ்சிபுரம் அணியும், திருவள்ளூர் அணியும் விளையாடின.

ஆரம்பம் முதலே காஞ்சிபுரம் அணியின் கை ஓங்கியது. இறுதியில் திருவள்ளூர் அணி 32 புள்ளிகள் மட்டுமே பெற்றது. காஞ்சிபுரம் அணி 79 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றன.

நிகழ்ச்சியின் போது விளையாட்டு வீராங்கனைகளின் குடும்ப பின்னணி பற்றியும், அவர்களின் வாழ்க்கைப்போராட்டம் பற்றியும், விடாமுயற்சி பற்றியும் ஒளிபரப்புகின்றனர். ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் எவ்வாறு தனது குடும்ப சுமையையும் பொருட்படுத்தாமல் தனது மகளை கபடி வீராங்கனையாக உருவாக்குவதற்கு சிரமப்பட்டார் என்பதை சனிக்கிழமை ஒளிபரப்பினார்கள்.

கலக்கல் கபடியில் வெற்றி பெறும் அணிக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசும், வெற்றிக்கோப்பையும் வழங்கப்பட இருக்கிறது. இரண்டாவது இடம் பெறும் அணிக்கு 5 லட்சம் ரூபாயும், ஒவ்வொரு வீரங்கனைக்கும் ஸ்போர்ட்ஸ் சைக்கிள் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது. மூன்றாவது, நான்காவது இடம் பெறும் அணிக்கு தலா 2 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது.

இந்த கலக்கல் கபடி ரியாலிட்டி ஷோ ரசிகர்களிடம் பெறும் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தேவா இசை அமைத்து தீம் பாடலை பாடியிருக்கிறார். இதனை இடை இடையே ஒளிபரப்பி உற்சாகப்படுத்துகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் நிஜ கபடி வீராங்கனைகளுடன் திரைப்பட நட்சத்திரங்கள். நடிகைகள் அஞ்சலி, விஜயலட்சுமி, கஸ்தூரி மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களும் இணைந்து ஆடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

லட்சுமி ராய் வேண்டாம் ஷார்மி போதும் : நாகர்ஜூனாவின் சென்டிமென்ட்

Charmee Replaces Lakshmi Rai Nagarj

நாகர்ஜூனா நடிக்கும் படங்களில் ஒரு ஐட்டம் டான்ஸ் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். அவரது ராசி சென்டிமென்ட் ஷார்மிதான். ஏற்கனவே ‘கிங்' மற்றும் ‘ ரகடா' படத்தில் ஷார்மியுடன் குத்தாட்டம் போட்டதில் படம் சூப்பர் ஹிட்.

இப்பொழுது நடித்துக்கொண்டிருக்கும் ‘தமருகம்' படத்திலும் ஒரு ஐட்டம் பாடல் உண்டு. அதில் நாகர்ஜூனா உடன் ஆட லட்சுமி ராயை புக் செய்திருந்தனர். என்ன நினைத்தாரோ எனக்கு லட்சுமி ராய் வேண்டாம் ஷார்மியே போதும் என்று கூறிவிட்டாராம் நாகர்ஜூனா.

தேவிபிரசாத்தின் இசையில் ‘தமருகம்' படத்தின் பாடல்கள் ரகளையாய் வந்திருக்கிறதாம். அறிமுகப்பாடல் சூட்டில் ஐதராபாத்தில் சில தினங்களுக்கு முன் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதில் நாகர்ஜூனாவிற்கு ஜோடி அனுஷ்கா. ஐட்டத்திற்கு ஷார்மி படம் செம ஹாட்டாக இருக்கும் என்று பேசுகின்றனர் டோலிவுட்டில்.

 

முத்தக் காட்சியை விட படுக்கை அறை காட்சி மேல்: சொல்கிறார் பிபாஷா

Bipasha Basu Prefers Sex Than Kiss   

சமீபத்தில் வெளியான ராஸ் 3 படத்தில் இம்ரான் ஹஸ்மியுடன் 20 நிமிடம் முத்தக்காட்சியில் நடித்து சாதனைப் படத்தார் பிபாஷா திரைப்படங்களில் இதுவரை எடுக்கப்பட்ட முத்தக்காட்சிகளிலேயே இதுதான் மிக நீளமானது. இந்த காட்சியில் இம்ரானுடன் பேசிக்கொண்டே முத்தமிடவேண்டும் என்பதால் மிகவும் சிரமப்பட்டாராம் பிபாஷா.

இந்த காட்சி குறித்து ஆங்கில பத்திரிக்கை ஒன்றிர்க்கு பேட்டி அளித்த அவர், முத்தக்காட்சியில் நடிப்பதை விட படுக்கை அறை காட்சிகளில் நடிப்பது எவ்வளவோ மேல் என்று கூறி கேட்பவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். படுக்கை அறை காட்சியில் நடிக்க ஆசைப்படும் ஒரே கதாநாயகி நானாகத்தான் இருப்பேன்.

ஏனெனில் முத்தக்காட்சியை விட அது வசதியானது என்று ஸ்டேட்மென்ட் இந்த 33 வயது கவர்ச்சிப் புயல் விட்டுள்ளார். அடுத்த படத்தில் பிபாஷாவை புக் செய்யும் இயக்குநர்கள் இதை மனதில் கொள்வது நல்லது.

தன் முன்னாள் காதலர் ஜான் ஆப்ரஹாம் உடன் முத்தக் காட்சியில் நடிப்பது மட்டுமே வசதியாக இருக்கிறது என்று கடந்த சில தினங்களுக்கு முன் ஏக்கப்பெருமூச்சுடன் பிபாஷா பேட்டி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.