1/17/2011 10:15:39 AM
ட்ரீம் தியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் சேரன் தயாரிக்கும் படம் 'முரண்'. இதில் பிரசன்னா, சேரன் இணைந்து நடிக்கிறார்கள். ராஜன் மாதவ் இயக்குகிறார். படம் பற்றி பிரசன்னா கூறியதாவது: இதில் பணக்கார வீட்டு இளைஞனாக நடிக்கிறேன். வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஈசியாக பார்க்கிற கேரக்டர். சேரன், எல்லாவற்றையும் சீரியசாகப் பார்ப்பவர். எங்கள் இருவருக்குமான முரண்பாடுகள்தான் படம். சேரன் ஜோடியாக ஹரிப்பிரியா நடிக்கிறார். எனது ஜோடியாக யார் நடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. படம் பெரும்பாலும் முடிந்துவிட்டது. எனது காதல் காட்சிகள் மட்டுமே பாக்கி. இந்தப் படத்துக்காக, உடலை ஸ்லிம் ஆக்கியிருக்கிறேன். இதற்கு பிறகு ராஜன் மாதவ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறேன். எப்போது திருமணம் என்கிறார்கள். இப்போதைக்கு அதை பற்றி யோசிக்கவில்லை. இவ்வாறு பிரசன்னா கூறினார்.