வீட்டு மனைகளை கூவி கூவி விற்கும் சின்னத்திரை நட்சத்திரங்கள்!

Land Selling Advertisement Models Tv Artist
இப்போதெல்லாம் காலை நேரத்தில் எந்த டிவி சேனலை போட்டாலும் யாராவது ஒரு நடிகை வீட்டு மனை விற்பனை விளம்பரத்தில் வருகிறார்.

நிலத்தை விற்பனை செய்யும் புரமோட்டர்கள் இப்பொழுதெல்லாம் வீட்டுமனையை விற்பனை செய்ய கவலையே படுவதில்லை. யாராவது சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினியை சைட்டிற்கு அழைத்துச் சென்று பேச வைத்து நில விற்பனையை எளிதாக்கி விடுகிறார்கள்.

சின்னத்திரை நடிகைகள் மட்டுமல்ல நடிகர்களும் இந்த நில விற்பனை விளம்பரத்தில் மாடலிங் செய்ய தொடங்கிவிட்டனர். நிழல்கள் ரவி, டெல்லிகணேஷ் தொடங்கி ( அவர்களும் சின்னத்திரையில் நடிப்பதால் மக்களுக்கு அதிக அறிமுகம் ஆகியுள்ளவர்கள் தானே) சஞ்சீவ் வரை பலரும் வீட்டுமனை விற்பனை செய்ய தொடங்கிவிட்டனர்.

தேசிய நெடுஞ்சாலை பக்கத்தில் இருக்கும் வீட்டுமனைகளை விற்பனை செய்யும் புரோக்கர்களாக மாறிவரும் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு சம்பளமாக அந்த நிலத்தில் இருந்து ஒரு வீட்டுமனை தரப்படுகிறதாம் ( ப்படியா! ரொம்ப நல்ல விஷயமா இருக்கே!)

சன், கலைஞர், புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களைத்தவிர வசந்த், இமயம், விஜய், உள்ளிட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் வீட்டுமனை விற்பனை செய்யும் விளம்பரங்களை ஒளிபரப்பத் தொடங்கிவிட்டனர்.

எங்கேயோ கடைக்கோடியில் இருக்கும் நிலத்தை மாயாஜால வார்த்தை பேச்சுக்களின் மூலம் கூவி கூவி விற்பனை செய்கின்றனர்

இது எந்த அளவிற்கு உண்மை என்பதை இங்கு நிலம் வாங்கி குடியேறியவர்கள்தான் கூறவேண்டும்.
Close
 
 

டர்ட்டி பிக்சரில் கவர்ச்சியாக நடிக்க ரூ 2.5 கோடி சம்பளமா?-மறுக்கிறார் நயன்தாரா

Nayan Clarifies Her Commitment Dirty Picture Remake   
போன வருஷம் முழுவதும் நயன்தாராவுக்கு பெரிதாக படங்கள் இல்லை. அவர் நடித்த ஒரே படம் தெலுங்கு ஸ்ரீராமராஜ்யம்தான்.

ஆனால் இந்த ஆண்டு நயன்தாராதான் டாப் இடத்தில் இருக்கிறார். இந்திப் பட நடிகைகளுக்கு இணையாக கோடிகளில் சம்பளம்.

இந்தியில் பெரும் வெற்றி பெற்ற தங்கள் டர்ட்டி பிக்சர் படத்தை தமிழில் ஏக்தா கபூர் ரீமேக் செய்கிறார். இந்தப் படத்தில் நயன்தாராதான் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்தப் படத்தில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என்பதால், அதற்காக ரூ 2.5 கோடியை சம்பளமாக நயன்தாராவுக்குத் தர ஏக்தா கபூர் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து நயன்தாரா தரப்பில் இதுவரை எதுவும் கூறப்படவில்லை. இப்போது மறுப்பு தெரிவித்துள்ளார்.

"டர்ட்டி பிக்சர் படத்தை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு ரொம்பப் பிடித்த படம். அதில் நடிக்க எனக்கும் ஆர்வமாக உள்ளது. ஆனால் இதுபற்றி யாரும் என்னிடம் பேசவில்லை என்பதுதான் உண்மை. அதற்குள் எனக்கு எவ்வளவு சம்பளம் என்றெல்லாம் செய்தி வெளியானது எப்படி என்றுதான் தெரியவில்லை," என்றார் நயன்தாரா.

பெரிய படங்களில் நடிகைகள் இப்படித்தான் கமிட் ஆகிறார்கள் போலிருக்கிறது!
Close
 
 

உதயதாரா- ஜூபின் திருமணம் நடந்தது!

Udayathara Marries Pilot Jupin
தமிழ் - மலையாள நடிகை உதயதாரா - ஜூபின் திருமணம் இன்று காலை கொச்சி அருகே உள்ள கிராமத்தில் நடந்தது.

தமிழில் தீ.நகர், மலையன், கண்ணும் கண்ணும், விலை, பயமறியான் போன்ற படங்களில் நடித்தவர் உதயதாரா. சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

உதயதாராவுக்கும் துபாயில் விமான பைலட்டாக பணியாற்றும் ஜுபின் ஜோசப்புக்கும் சமீபத்தில் கோட்டயத்தில் திருமணம் நிச்சயமானது.

இன்று காலை உதயதாரா-ஜுபின் ஜோசப் திருமணம் உள்ள கொச்சி அருகே உள்ள கிராம சர்ச்சில் நடந்தது.

திருமணத்தில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்தினார்கள்.

தற்போது கைவசம் இருந்த இரண்டு மலையாள படங்களை முடித்து விட்டார். அடுத்த வாரம் இருவரும் தேனிலவுக்காக வெளிநாடு செல்கின்றனர்.

தேனிலவு முடிந்து திரும்பிய பிறகு, மீண்டும் சினிமாவில் நடிக்கப் போவதாக உதயதாரா அறிவித்துள்ளார்.
Close
 
 

தியாகம் தொடரில் உருகும் காவேரி

Cine Artist Kavery Introduced New Serial
பெரிய திரையில் நடித்த நடிகர்களும், நடிகையர்களும் சின்னத்திரையில் நெடுந்தொடர்களில் நடிக்க வருவது வாடிக்கையான ஒன்றுதான் அந்த வரிசையில் சமுத்திரம், காசி, உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் காவேரி, சன் தொலைக்காட்சியின் தியாகம் தொடர் மூலம் சின்னத் திரையில் கால் பதித்துள்ளார்.

இந்த தொடரில் கதாநாயகியின் அப்பாவாக நடித்துள்ளவர் கன்னடத்தில் நானூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த ஸ்ரீநாத். அம்மாக்கள் செய்த அழுகை அத்தனையும் இதில் அப்பாவிற்கு கொடுத்துவிட்டார் இயக்குநர். அவருக்கு மனைவியாக சபிதா ஆனந்த் நடித்துள்ளார்.

இரண்டு ஆண் குழந்தைக்கும் ஒரு பெண் குழந்தைக்கும் தந்தையான ஸ்ரீ நாத் தனது மகளின் ( காவேரி) திருமணத்திற்காக எத்தனை சிரமங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதே கதை.

ஒல்லியாக இருந்த காவேரி இந்த தொடரில் சற்றே பூசின மாதிரி இருக்கிறார். தியாகம் தொடரில் சீக்கிரம் திருமண விருந்து போடுவார்களா என்பது போகப்போகத்தான் தெரியும். இதில் கவுதமி, உதய், துர்கா, சூசன், பிர்லாபோஸ், விஜய் ஆனந்த், கீர்த்தி ஆகியோர் தொடரின் ஏனைய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கவிஞர் வைரமுத்து இந்த தொடருக்காக ``தியாகம் என்பது யாகம்..'' என்ற பாடலை எழுதி உள்ளார். தினா இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை வசனத்தை குரு எழுதியுள்ளார். ஏ. அப்துல்லா இயக்கியுள்ளார். `தங்கம், வசந்தம், மாமா மாப்ளே..' போன்ற பல வெற்றித் தொடர்களை தயாரித்து வரும் விஷன் டைம் நிறுவனம் இப்போது `தியாகம்' என்ற புதிய தொடரை தயாரித்துள்ளது. தொடருக்கான படப்பிடிப்பு காரைக்குடி, கும்பகோணம், திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

விஷன் டைம் நிறுவனத்தின் சார்பில் வைதேகி ராமமூர்த்தி இந்த தொடரை தயாரிக்கிறார்.
Close
 
 

காதம்பரியில் இரட்டை வேடத்தில் கலக்கும் மிதுனா

Jaya Tv S Serial Kadambari Heroine Mithna
கருத்தம்மா படத்தில் நடித்த ராஜஸ்ரீயின் தங்கை மிதுனா சின்னத்திரையில் காதம்பரி என்ற நெடுந்தொடரில் அறிமுகமாகியுள்ளார். இதில் அவருக்கு இரட்டை வேடம் முன் ஜென்மம், மறு ஜென்மம் என இரண்டு கதாபாத்திரத்திலும் கலக்கியிருக்கிறாராம் மிதுனா.

நடிகை மிதுனா `மாமதுரை' படத்தில் அறிமுகமானவர். தமிழிலும், தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்தவர் இப்போது சின்னத்திரையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். சாப்ரன் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் `காதம்பரி' மெகா தொடரில் இவர்தான் கதையின் நாயகி. பிரபு சங்கர் கதை எழுதி இயக்கும் இந்த தொடரின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த மணிமங்கலம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் குறித்து மிதுனாவிடம் பேச்சுக்கொடுத்ததில் அவருடைய கதாபாத்திரம் பற்றி கிலாகித்து கூறினார்.

காதம்பரி தொடர் முன்ஜென்மத்தையும், மறு ஜென்மத்தையும் இணைக்கும் தொடர். 200 ஆண்டுகளுக்கு பிறகு மறுஜென்மம் எடுத்து சந்திக்கும் காதம்பரியின் வாழ்க்கை சம்பவம் கொஞ்சம் மிரட்டலாகத்தான் இருக்கிறது.

முன் ஜென்ம வேடத்திற்காக ஜாக்கெட் அணியாமல் சேலை கட்டி, கொண்டை போட்டு, அந்த கால நகைகளை மாட்டிக்கொண்டு நடிப்பது புது அனுபவமாக இருக்கிறதாம் மிதுனாவிற்கு. இந்த தொடருக்கு பிறகு என்னை காதம்பரி என்றே அழைப்பார்கள் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார். இதில் காதம்பரிக்கு எதிராக மிரட்டலான பாத்திரத்தில் சுதா சந்திரன் நடித்திருக்கிறார் என்றார் மிதுனா. இவருடன் லஷ்மிராஜ், காயத்ரி, பாலாஜி, செம்புலி ஜெகன், சுந்தரி, சூரி, தேசிங்கு உட்பட பலர் நடித்துள்ளனர்.
Close
 
 

மகாரஷ்டிரா விவசாயிகள் கடனைத் தீர்க்க ரூ.30 லட்சம் கொடுத்த அமிதாப் பச்சன்

Amitabh Bachchan Offers Financial Help To Debt Ridden
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 114 விவசாயிகளின் கடனை அடைக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ரூ.30 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஏராளமான விவசாயிகள் கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து வருகின்றனர். இந்நிலையில் விதர்பா பகுதியில் உள்ள வர்தா மாவட்டத்தில் உள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த 114 விவசாயிகளின் கடன்களை அடைக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ரூ.30 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். வர்தாவில் நடந்த விழாவில் அந்த காசோலைகளை உள்ளூர் எம்.பி. தத்தா மேகே விவசாயிகளிடம் வழங்கினார்.

அந்த விவசாயிகளுக்கு யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் வர்தா மாவட்ட கூட்டுறவு வங்கிகள் ஆகியவை கடன் வழங்கியுள்ளன. இந்த காசோலை வழங்கும் விழாவில் 90 விவசாயிகள் கலந்து கொண்டனர். விழாவுக்கு வராத 24 விவசாயிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று காசோலைகள் வழங்கப்பட உள்ளன.

விதர்பா பகுதி விவசாயிகளின் கடன் தொகையை செலுத்த காசோலைகள் வழங்கியது போன்று தங்களுக்கும் வழங்குமாறு உத்தர பிரதேச மாநில பண்டல்கண்ட் விவசாயிகள் அமிதாப் பச்சனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

விதர்பா பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நேரத்தில் அமிதாப் பச்சன் விவசாயிகளுக்கு பணம் கொடுத்து உதவியது அவர்களுக்கு பெருமகிழ்ச்சியாக உள்ளது. அமிதாபின் இந்த செயலை விதர்பா ஜன் அன்டோலன் சமிதி என்னும் என்.ஜி.ஓ. வரவேற்றுள்ளது.
Close
 
 

'புரட்சித் தளபதி' பட்டம்.. விஷாலுக்கு வேண்டாமாம்!

Vishal Omits Puratchi Thalapathy Title
தமிழ் சினிமா நடிகர்களுக்கு பட்டப் பெயர் வைப்பது தமிழ்க் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகிவிட்டது.

சூப்பர் ஸ்டார், உலக நாயகன், சுப்ரீம் ஸ்டார் (இப்போ சூப்பர் சுப்ரீம் ஸ்டாராம்!), அல்டிமேட் ஸ்டார், இளையதளபதி என்றெல்லாம் ஏகப்பட்ட அடை மொழிகள் (ஆங்... பவர் ஸ்டாரை சேத்துக்கங்க!)

அந்த வகையில் விஷாலுக்கு வைக்கப்பட்ட அடைமொழி புரட்சித் தளபதி.

சமீபத்தில் ரிலீசாகி, பெட்டிக்குள் போன அவரது படங்கள் அனைத்திலும் இந்த புரட்சித் தளபதி அடைமொழி காணப்பட்டது.

ரசிகர்கள் விருப்பப்பட்டு கொடுத்த பட்டம். அதனால் வைத்துக் கொண்டேன் என தோரணை பட பிரஸ் மீட்டில் கூட விஷால் கூறினார்.

இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு தனக்கு அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டம் தேவையில்லை. அஜீத் குமார் என்று குறிப்பிட்டால் போதும் என அறிவித்தார் அஜீத்.

இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடமும் படங்களில் அதை பயன்படுத்த வேண்டாம் என்று கூறிவிட்டார். இதையடுத்து வெறும் அஜித் என்ற பெயரே இடம் பெற்று வருகிறது. பட்டத்தைத் துறந்த பிறகு வந்த அவரது மங்காத்தா சூப்பர் ஹிட்டாகிவிட்டது.

இப்போது அஜீத் வழியில் விஷாலும் புரட்சித் தளபதி என்ற பட்டத்தை வேண்டாம் என உதறிவிட்டார்.

தனது அடுத்த படமான சமர் போஸ்டர்கள் விளம்பரங்களில் வெறும் விஷால் என்றே அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகுமா? பார்க்கலாம்!
Close
 
 

ரூ.12 லட்சத்துக்கு ஏலம் போன மடோனா நிர்வாண படம்!

Madonna S Picture Sells Rs 12 Lakhs
பிரபல கவர்ச்சி பாப் பாடகி மடோனாவின் கறுப்பு வெள்ளை நிர்வாணப் படம் ரூ 12 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பாப் பாடகி, நடிகை மடோனா. இவருக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்போது செக்ஸ் புக் என்ற ஆல்பம் தயாரித்துள்ளார். அதிலிருந்து தனது ஒரு நிர்வாண போட்டோவை நியூயார்க்கில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் ஏலம் விட்டார்.

அந்த போட்டோ ரூ.12 லட்சத்துக்கு ஏலம் போனது. அதை விலைக்கு வாங்கியவர் யார்? என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதிக விலைக்கு ஏலம் போன இந்த போட்டோ கடந்த 1990-ம் ஆண்டில் அவர் 30 களில் உச்சத்தில் இருந்தபோது எடுக்கப்பட்டது. கருப்பு, வெள்ளையில் எடுக்கப்பட்ட இந்த போட்டோவில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் மடோனா படு கவர்ச்சியாக உள்ளார்.

படுக்கையில் படுத்து சிகரெட் பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ 55 செ.மீட்டர் உயரமும் 48.செ.மீட்டர் அகலமும் கொண்டது.

இதை போட்டோ கிராபர் ஸ்டீவன் மிசெல் எடுத்துள்ளார். மடோனாவின் செக்ஸ் புக் ஆல்ப புகைப்படக்காரர் இவர்தான்.
Close
 
 

‘ஆஹா! என்ன ருசி’ புதுமையான சமையல் நிகழ்ச்சி

Sun Tv Aaha Enna Ruchicookery Show
ஆஹா என்ன ருசி சமையல் நிகழ்ச்சியில் வரும் வாரம் முதல் புதிய பகுதி அறிமுகம் செய்யப்படுகிறது. ஊட்டச்சத்துள்ள உணவுகளைப் பற்றி நேரடி செயல்முறை விளக்கமும், அந்த உணவுகளின் நன்மைகள் குறித்து மருத்துவர் ஒருவர் நேரடி விளக்கமளிக்க இருக்கிறார்.

சமையல் நிகழ்ச்சி என்றாலே அது ஸ்டுடியோவில்தான் என்ற ட்ரெண்ட்டை மாற்றியவர் செஃப் ஜேக்கப். சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆஹா என்ன ருசி சமையல் நிகழ்ச்சியின் சிறப்பம்சமே அவுட்டோரில் சமையல் செய்வதுதான்.

வெண்டைக்காய், கத்தரிக்காய், மக்காச்சோளம் என எந்த பொருளை சமைத்தாலும் காய்கறித் தோட்டங்களில் இருந்து புதிதாக பறித்து சமைப்பது ஜேக்கப்பின் ஸ்பெசல். சனிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் சிறுவர்களுக்கும் சமைக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் சிறுவர்களுக்கும் சமைக்க கற்றும் தருகிறார் சமையல் கலை நிபுணர் ஜேக்கப்.

இவரது நிகழ்ச்சிக்கான முன்னோட்டமே அதை பார்க்க தூண்டும் வகையில் அமைந்திருக்கும். வரும் வாரம் கொட்டும் மழையில் அசைவ உணவு செய்து காண்பிக்க இருக்கிறார். சமையல் ஆர்வலர்கள் பார்த்து ரசிக்கலாம்.
Close
 
 

வனிதாவின் அடுத்த ஃபைட் 2வது கணவருடன் - மகளுக்காக ரகளை!

Vanitha Fights With Her 2nd Husband For Daughter
நடிகை வனிதா விஜயகுமார் இப்போது தனது அடுத்த சண்டையை ஆரம்பித்துள்ளார். இந்த முறை இரண்டாவது கணவர் ஆனந்த ராஜனுடன்!

வனிதாவுக்கும் நடிகர் ஆகாஷூக்கும் முதலில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகனும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

பின்னர் ஆகாஷூகும் வனிதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து, விவாகரத்து பெற்றனர். ஆனந்தராஜ் என்பவரை வனிதா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜெய் நிதா என்ற பெண் குழந்தை பிறந்தது.

வனிதாவுக்கும் முதல் கணவர் ஆகாஷூக்கும் பிறந்த குழந்தை ஸ்ரீஹரியை யார் வைத்துக் கொள்வது என்பதில் தகராறு ஏற்பட்டது. இருவரும் நீதிமன்றம் சென்றனர். தாயாருடன்தான் அந்த சிறுவன் இருக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், தந்தையுடன்தான் இருப்பேன் என்று அந்தப் பையன் அடம் பிடித்ததால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.

மகனுக்காக ஆனந்தராஜை பிரிந்தார். மீண்டும் முதல் கணவர் ஆகாஷூடனேயே சேர்ந்து விட்டார் வனிதா. இருவரும் சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் ஒன்றாக வசிக்கின்றனர். ஆனந்தராஜுக்குப் பிறந்த ஜெய் நிதாவையும் தன்னுடனே வைத்திருந்தார் வனிதா.

இதற்கிடையில் ஆனந்தராஜ் நேற்று நள்ளிரவு வனிதா வீட்டில் புகுந்து தனது மகள் ஜெய் நிதாவை அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மகளை காணாமல் வனிதா திடுக்கிட்டார். பிறகு ஆனந்தராஜ் வீட்டில் இருப்பது அவருக்கு தெரிய வந்தது.

உடனேயே அவர் வீட்டுக்கு சென்று மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆனால் ஆனந்தராஜ் கொடுக்க மறுத்தார். மகளை கவனிக்காமல் ஒதுக்குவதாக வனிதா மேல் அவர் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.

ஆனாலும் வனிதா அங்கிருந்து போகாமல் ஆனந்தராஜ் வீட்டுக் கதவை தட்டி நீண்ட நேரம் ரகளை செய்ததாக கூறப்படுறது. அக்கம் பக்கத்தினர் திரண்டு தகராறை வேடிக்கை பார்த்தார்கள்.

அடுத்து ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுக்கத் தயாராகி வருகிறார்கள். நீதிமன்றம் செல்லவும் முடிவு செய்துள்ளனர்.
 

'இந்தியில் பாஷா? நோ நோ...' - பிரபு தேவா!

Prabhu Deva Denies Rumours On Remaking Baasha
வதந்திகளுக்கு ரொம்ப இஷ்டமானவர்களில் பிரபு தேவாவும் à®'ருவர். தினசரி அவரைச் சுற்றி ஏதாவது à®'ரு வதந்தி வந்து கொண்டே இருக்கும்.

அந்த வகையில் கடந்த இரு தினங்களாக அவர் பாஷா படத்த இந்தியில் இயக்கப் போவதாகவும் அதில் அஜய் தேவ்கன் நடிக்கப் போவதாகவும் தெய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து பிரபு தேவாவிடமே கேட்டபோது, "எங்கிருந்துதான் இந்த மாதிரி செய்திகள் வருகின்றனவோ தெரியவில்லையே... ரஜினி சார் நடித்த பாட்ஷா à®'ரு க்ளாசிக் படம். இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

அந்தப் படத்தை ரீமேக் செய்வதெல்லாம் முடியாத விஷயம். அந்த அழகு, நம்பகத்தன்மை எதுவுமே ரீமேக்கில் இருக்காது. நான் அஜய் தேவ்கனை வைத்து படம் பண்ணுவது உண்மைதான். ஆனால் அதன் கதை வேறு," என்றார்.

இதற்கிடையே, ஜூன் 7-ம் தேதி சிங்கப்பூரில் நடக்கும் ஐஃபா விழாவின் துவக்க நாளில் பிரபு தேவா நடனமாடப் போகிறாராம். உடன் ஆடப் போகிறவர் சோனாக்ஷி சின்ஹா!
 

சன் டிவியில் மதுரை முத்து-தேவதர்ஷினியின் புதிய காமெடி நிகழ்ச்சி

Madurai Muthu Devadharshini New Comedy Show
விஜய் டிவி யின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொடங்கி சில வருடங்கள் சன் டிவியின் அசத்தப்போவது நிகழ்ச்சியில் அசத்திய நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து. திடீர் விபத்தினால் சில மாதங்கள் à®"ய்வில் இருந்த முத்து சன் டிவியில் புதிய நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் களம் இறங்கியுள்ளார்.

மதுரை முத்து உடன் இணைந்து காமெடியில் கலக்குபவர் தேவதர்ஷினி. ஞாயிறுதோறும் காலையில் à®'ளிபரப்பாகும் இந்த காமெடி நிகழ்ச்சியில் போலீஸ் கான்ஸ்டபில் வேடத்தில் தேவதர்ஷினியும், திருடனாக மதுரை முத்துவும் சேர்ந்து காமெடி செய்ய முயற்சி செய்தனர்.

இதேபோல நிகழ்ச்சி சில பல வருடங்களுக்கு முன்பு நம்மநேரம் என்ற பெயரில் à®'ளிபரப்பானது போல நினைவுக்கு வருகிறது. எது எப்படியோ காலை நேரத்தில் நிகழ்ச்சிக்குப் பஞ்சம் வந்தால் என்ன செய்வது பழைய நிகழ்ச்சியின் கருவை எடுத்து புதிய நடிகர்களை நடிக்க வைத்து தூசு தட்டி புதுசு போல ரெடி செய்து à®'ளிபரப்பவேண்டியதுதானே.

சினிமாவிலேயே பழைய திரைப்படங்களை ரீமேக் செய்யும்போது தொலைக்காட்சியில் பழைய நிகழ்ச்சிகளை ரீமேக் செய்யக்கூடாதா என்ன? என்று யாரோ கேட்பது காதில் விழுகிறது.

ஞாயிறுக்கிழமை காலை 10.30 மணிக்கு à®'ளிபரப்பாகும் இந்த கலக்கல் காமெடி நகைச்சுவை பிரியர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சி என்கின்றனர் இதனை பார்த்து ரசித்த காமெடி பிரியர்கள்.

பார்த்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.
 

வருகிற வாய்ப்புகளை மறுப்பதில்லை! - த்ரிஷா

Trisha Postpones Her Marriage Plans   
கன்னித்தீவு கதை மாதிரி ஆகிவிட்டது, த்ரிஷா கல்யாண செய்திகளும்... à®'ரு நாள் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று வந்தால், அடுத்த நாள் புதுப்படத்தில் த்ரிஷா à®'ப்பந்தம் என செய்தி வெளியாவது வழக்கமாகிவிட்டது.

'இதான் கடைசி, அப்புறம் போயிடுவேன்.. வாய்ப்பு கிடைக்காது.. உங்க படத்துக்கு à®'ப்பந்தம் பண்ணிக்குங்க' என்று போக்குக் காட்டி வாய்ப்பு பெறும் டெக்னிக்கா இது என்றும் தெரியவில்லை!

போகட்டும்... தமிழில் இன்னும் இரு புதிய படங்களில் த்ரிஷா à®'ப்பந்தமாகியுள்ளார் என்பதுதான் செய்தி.

தெலுங்கில் மேலும் இரு படங்கள் அவர் கைவசம் வந்துள்ளனவாம். இவை போக, விஷாலுடன் சமரில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரவிதேஜாவுடன் à®'ரு படம் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது.

கோடியைத் தாண்டி சம்பளம்... இன்றைய தேதிக்கு அவர் பிஸியோ பிஸி.

"சினிமாவில் வாய்ப்புகள் வரும்போதே பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். அந்த வகையில் இப்போது பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறேன். எந்த நல்ல வாய்ப்பையும் மறுப்பதில்லை. காரணம் எனக்கும் நடிப்பு இன்னும் அலுக்கவே இல்லை. எனவே கல்யாணத்துக்கு இது சரியான நேரமாக எனக்குத் தெரியவில்லை.

எனக்காகப் பிறந்தவர் நிச்சயம் கொஞ்ச நாள் காத்திருக்கத்தான் வேண்டும்," என்கிறார்.

நல்ல ப்ளான்!
 

புதிய தலைமுறை.. ஒரு வித்தியாசமான தொலைக்காட்சி!

Evergreen Programs Puthiya Talaimurai Tv
புதிதாய் à®'ரு செய்தி தொலைக்காட்சி தொடங்கிய உடனே முதல் இடத்தை பிடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அது வழங்கும் நிகழ்ச்சிகளின் தரம். மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதம் என அனைத்திலும் புதுமையை புகுத்தினால் மட்டுமே அந்த செய்தி மக்களிடம் எளிதில் சென்றடையும்.

அந்த வகையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி தான் வழங்கும் செய்திகளில் மட்டுமல்லாது நிகழ்ச்சிகளிலும் புதுமையை புகுத்தி மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

சினிமாத்தனம் எதுவும் இல்லை. மக்களைக் கவர கமர்சியல் சீரியல்கள் எதுவும் கிடையாது இருந்தாலும் புதிது புதிதாய் செய்திகளை கூறும் விதம் தொலைக்காட்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

24 மணி நேரம் செய்தி தவிர புதிய தலைமுறை தொலைக்காட்சியில் à®'ளிபரப்பாகும் ஆயுதம் செய்வோம், ரௌத்திரம் பழகு, யப்பீஸ்க்கு மட்டுமல்ல, புதுப்புது அர்த்தங்கள், சினிமா 360 டிகிரி, கேம்பஸ் காம்பஸ், கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு போன்ற நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது என்றே கூறுகின்றனர் தொலைக்காட்சி விமர்ச்சகர்கள்.

சாதாரணமாக அரைத்தமாவையே அரைத்துக்கொண்டிருக்காமல் புதிதாய் எதையாவது முயற்சி செய்தால் மட்டுமே மக்களிடம் வரவேற்பு பெற முடியும் என்பதை உணர்ந்தே களம் இறங்கியுள்ளனர் புதிய தலைமுறை தொலைக்காட்சியினர் என்றும் விமர்ச்சகர்கள் கூறுகின்றனர்.
 

நிர்மலா பெரியசாமி டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற காதல் ஜோடியை மீட்ட போலீசார்!

Police Try Rescue Lovers Z Tamil Tv Program
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்ற காதல் ஜோடியை போலீசார் மீட்க முயற்சி செய்தனர். இதனைக் கண்டித்த தொலைக்காட்சி நிறுவன ஊழியர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிர்மலா பெரியசாமி நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பொதுமக்களின் குறை தீர்ப்பு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடியும், அவர்களின் பெற்றோர்களும் பங்கேற்றனர். நிர்மலா பெரியசாமி இருவரிடமும் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற காதல் ஜோடியினர் மேல் டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த காதல் ஜோடி டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது தெரியவந்ததும் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் வந்து காதலனிடம் இருந்து காதலியை மீட்க முயற்சி செய்தனர். அப்போது காதல் ஜோடிக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போலீசார் அதிரடியாக காதல் ஜோடியை பிரிக்க முயற்சி செய்ததால் தொலைக்காட்சி நிறுவன ஊழியர்கள் இதனை தடுக்க முயற்சி செய்தனர். போலீசாரின் செயலைக்கண்டித்து அவர்கள் வடக்கு உஸ்மான் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த தென் சென்னை காவல்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட ஊழியர்களை சமாதானப்படுத்தினர்.

சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நிகழ்ச்சியின் à®'ருங்கிணைப்பாளர் நிர்மலா பெரியசாமி, காதலர்கள் லாரன்ஸ், செல்வமேரி ஆகியோர்களை நாங்கள் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தோம்.
அவர்களது பெற்றோரும் வந்திருந்தனர். செல்வமேரியின் பெற்றோர் போலீசாரையும், வெளியாட்களையும் அழைத்து வந்ததால்தான் பிரச்சனை ஏற்பட்டது. போலீசாரும் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் புகுந்து லாரன்சை தாக்கிவிட்டு செல்வமேரியை இழுத்து செல்ல முயற்சித்தனர். அதனால்தான் பிரச்சனை ஏற்பட்டது என்றார்.

யார் வந்து என்ன பிரச்சனை செய்தாலும் தங்களை பிரிக்க முடியாது என்று காதல் தம்பதியர் உறுதிபட கூறினர்.

சரிதான் இனி நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் ஏறிடும் என்று அக்கம் பக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.
 

ஒரு திறமையான குழந்தை நட்சத்திரம் பலியாகிவிட்டாரே - இயக்குநர் உருக்கம்!

Nepal Accident Victim Rasna Girl Movie Vetriselvan
சென்னை: நேபாளத்தில் நடந்த விமான விபத்தில், 13 வயது குழந்தை நட்சத்திரம் தாருணி சச்தேவ் தன் தாயாருடன் பலியானார். அவர் ரஸ்னா விளம்பரத்திலும், அமிதாப்புடன் பா என்ற இந்திப் படத்திலும் நடித்துப் புகழ் பெற்றவர்.

அந்த குழந்தை நட்சத்திரம் வெற்றிச்செல்வன் என்ற தமிழ் படத்தில் நடித்து வந்தார்.

நேபாளத்தில் பக்தி சுற்றுலா சென்ற 21 பேர் பயணம் செய்த விமானம் மலையில் மோதி, விழுந்து நொறுங்கியது. அதில், 4 தமிழர்கள் உள்பட 15 பேர் பலியானார்கள். 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

பலியானவர்களில், 13 வயது குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவும் à®'ருவர்.

ரஸ்னா விளம்பரம், பா இந்திப் படம் தவிர, 'வெள்ளி நட்சத்திரம்', சத்யம் போன்ற மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் ஷாருக்கானின் குரோர்பதி வினாடி வினா டி.வி. நிகழ்ச்சியிலும் தருணி பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படம் 'வெற்றிச் செல்வன்'

அதைத் தொடர்ந்து, `வெற்றிச் செல்வன்' என்ற தமிழ் படத்தில் கதாநாயகி ராதிகா ஆப்தேயின் தங்கையாக நடிக்க, தருணி சச்தேவ் à®'ப்பந்தமானார். இந்த படத்தை ருத்ரன் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. தருணி சச்தேவ் 3 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார்.

இதுபற்றி படத்தின் இயக்குநர் ருத்ரன் கூறுகையில், "தருணி சச்தேவ், சிறிய குழந்தை நட்சத்திரமாக இருந்தபோதே எனக்கு தெரியும். என்னுடைய விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார். அதை வைத்துதான் 'வெற்றிச்செல்வன்' படத்தில், கதாநாயகிக்கு தங்கையாக அவரை à®'ப்பந்தம் செய்தேன். மிக திறமையான குழந்தை நட்சத்திரம் அவர். எதிர்காலத்தில் அவர் மிகப்பெரிய நடிகையாக வருவார் என்று எதிர்பார்த்தேன்.

கோடை விடுமுறையை கழிப்பதற்காக தருணி சச்தேவ் தனது தாயாருடன் நேபாளம் போவதாக, என்னிடம் சொல்லி விட்டுத்தான் சென்றார். அவர் சம்பந்தப்பட்ட அடுத்த கட்ட படப்பிடிப்பு வருகிற 25-ந் தேதி முதல் ஊட்டியில் நடக்கவிருக்கிறது. அதற்குள் திரும்பி வந்து விடுகிறேன் என்று சொன்னார்.

ஆனால், தருணி சச்தேவ் தன் தாயாருடன் திரும்பி வர முடியாத இடத்துக்கு போய்விட்டார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படத்தில் இருந்து நீக்கப்போவதில்லை. அப்படியே பயன்படுத்தப் போகிறேன்,'' என்றார்.

அமிதாப்பச்சன் அதிர்ச்சி

நடிகை தருணி சச்தேவின் திடீர் மரணம் அமிதாப்பச்சனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "கடவுளே இந்த துயரமான செய்தி உண்மையாக இருக்கக்கூடாது,'' என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

அவருடைய மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனும் தருணியின் மறைவுக்கு அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்து இருக்கிறார்.

காட்மாண்டில் உடல்கள்

விபத்தில் பலியான 15 பேரில், 13 இந்தியர்களின் உடல் விமானம் மூலம் நேபாள தலைநகர் காட்மாண்டு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள மணிபால் மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளன.

பிரேத பரிசோதனைக்குப்பின் இந்திய தூதரகத்தின் மேற்பார்வையில் உடல்களை உறவினர்களிடம் à®'ப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.