துபாய்: துபாயில் வேலை செய்யும் தமிழக தொழிலாளர்களை நடிகர் மிர்ச்சி சிவா வெகுவாக கவர்ந்துள்ளார்.
சைமா விருது விழாவில் கலந்து கொள்ள துபாய் வந்த நடிகர் மிர்ச்சி சிவா அங்குள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். டாக்சியில் ஊரை சுற்றிப் பார்த்த சிவா துபாயில் பணியாற்றும் தமிழக தொழிலாளர்களை சந்தித்து அவர்களோடு பேசியதோடு தானே முன்வந்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இது குறித்து துபாயில் பணியாற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த பசீர், சுந்தர், ரஹ்மான் உள்ளிட்டவர்கள் கூறுகையில்,
நடிகர் மிர்ச்சி சிவாவை துபாயில் நேரில் சந்தித்தோம். அப்போது எங்களை அழைத்து பேசி வாழ்வியல் சுழல் குறித்து கேட்டறிந்தார். அவரே புகைப்படமும் எடுக்க அனுமதித்தார். வேறு ஒரு நிகழ்ச்சிக்கு வெளிநாட்டுக்கு வந்த அவர் சொந்த நாட்டை விட்டு பிழைப்புக்காக தொலைதூரம் வந்துள்ள எங்களை போன்ற தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் நலன் குறித்து அக்கறை செலுத்தும் நடிகரை கண்டது மிகவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.
நடிகர் என்ற பந்தா இல்லாமல் இது போன்று பலரையும் சந்தித்து உள்ளார் என அறிந்தேன் என்றனர்.