அபிராமி மெகா மாலில் 7டி சினிமா... மழை, காற்றை நேரடியாக அனுபவிக்கலாம்

7d Cinema Abirami Mega Mall

சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி மெகா மாலில், இந்தியாவிலேயே முதல்முறையாக 7டி (7 பரிமாண) தியேட்டர் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் தேவா இந்த தியேட்டரை திறந்து வைத்தார்.

இந்த 7டி தியேட்டருக்கான உபகரணங்கள் மற்றும் 7டி படங்கள் இஸ்ரேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட திரையரங்கில், அதிர்வுகளுடன் கூடிய இருக்கைகள், சவுண்ட் சிஸ்டம், நீர் அலைகள், மழை, பனிப்பொழிவு மற்றும் முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை உணர்ந்து பரவசப்படும் விதத்தில் தொழில்நுட்பங்கள் கையாளப்பட்டுள்ளன.

முதல் பரிமாணம் என்பது, சிறந்த முப்பரிமாணத்தில் படம் பார்ப்பது. 2வது, அற்புதமான அதிரும் ஒலி கொண்டது. 3வது, உணர்வது. 4வது, நறுமணம். 5வது, காற்று மற்றும் மின்னல். 6வது, மழை. 7வது, பனிப்பொழிவு.

மழை, காற்றை உணரலாம்

படம் பார்க்கும்போது, ரசிகர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகள் அசையும். மழைச்சாரலையும், பனிப்பொழிவையும், குளிர்ந்த நீரின் அற்புதத்தையும் நன்கு உணர முடியும்.

இடி மின்னல் பக்கத்தில்...

புயல், சூறாவளி, இடி, மின்னல் ஏற்படும். திரையில் எந்த காட்சியைப் பார்த்து ரசிக்கிறார்களோ, அதற்கு மத்தியில் ரசிகர்களும் இருக்கும் மாயத்தை உணர்வார்கள். அபிராமி மெகா மால் நிறுவனத்துடன் ரீல் பேக்டரி மீடியா ரவிசங்கர், சரண்யா இணைந்து 7டி தியேட்டரை வடிவமைத்துள்ளனர் என்றார் மெகா மால் உரிமையாளர் அபிராமி ராமநாதன்.

 

மே 30-ல் சசிகுமார் நடித்த குட்டிப் புலி ரிலீஸ்!

சசிகுமார் - லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள குட்டிப் புலி படம் வரும் மே 30-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த கோடை விடுமுறையில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், சசிகுமாரின் குட்டிப் புலி அந்த பெரிய பட அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

sasikumar s kuttipuli from may 30

சன் பிக்சர்ஸ் - ரெட் ஜெயன்ட் இணைந்து வெளியிடும் குட்டிப் புலி பெரிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரஜினி, விஜய், அஜீத் படங்களுக்கு மட்டுமே கிடைக்கும் மினிமம் கியாரண்டி விலை முறையில் பல இடங்களில் இந்தப் படம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 400 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. என்எஸ்ஸி ஏரியாவில் மட்டுமே 90 அரங்குகளில் இந்தப் படத்தை வெளியிடுகிறது ஏஜிஎஸ் மூவீஸ்.

 

நடிகர் விஷால் மீது நடவடிக்கை இல்லை- நடிகர் சங்கம் முடிவு

No Action On Actor Vishal Artist Association

சென்னை: நடிகர் சங்கத்தை விமர்சித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நடிகர் விஷால் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டாது என நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

‘விஸ்வரூபம்' பட பிரச்சினை ஏற்பட்டபோது, "கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் ஏன் உதவவில்லை, நடிகர் சங்கம் எங்கே போனது?'' என்று நடிகர் விஷால் கேள்வி எழுப்பினார்.

இது சங்க விதிமுறைகளை மீறிய செயல் என்று கூறி, 'உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?' என்று விஷாலுக்கு நடிகர் சங்கம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.

மேலும் அவரை தற்காலிகமாக நீக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தான் அளித்த பதிலில், "விதிமுறைகள் எதையும் மீறவில்லை" என்று விஷால் பதில் தெரிவித்திருந்தார். அந்த கடிதத்தை நடிகர் சங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. நேரில் வந்து விளக்கம் அனுப்பும்படி கேட்டுக் கொண்டது.

இதைத் தொடர்ந்து விஷால், நடிகர் சங்கத்துக்கு நேரில் வந்து விளக்கம் அளித்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எதுவும் இல்லை என்று நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

 

கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் அம்மாவாக சுகாசினி

Suhasini Plays Ramanujan Mother

உலகப் புகழ்பெற்ற கணிதமேதை ஸ்ரீனிவாச ராமனுஜன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.

மோகமுள், முகம், பாரதி, பெரியார் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஞான ராஜசேகரன்தான் கணிதமேதை ஸ்ரீனிவாச ராமனுஜத்தின் வாழ்க்கை வரலாற்றினை திரைப்படமாக எடுத்து வருகிறார். மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் பேரன் அபிநய் இந்த படத்தில் ராமானுஜராக நடிக்கிறார். ரமேஷ் விநாயகம் இசையமைக்கிறார்.

ராமானுஜர் வேடத்தில் நடிக்க முதலில் மாதவனைதான் அணுகி இருந்தார்களாம். ஆனால் அவர் நடிக்காததால் சித்தார்த் நடிக்கலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் ராமானுஜர் வேடத்தில் புதுமுகமான அபிநய் நடிக்கிறார். படத்தில் ராமானுஜரின் மனைவியாக பாமா நடிக்கிறார்.

அம்மாவாக சுகாசினி

இந்தப் படத்தில் ராமானுஜரின் அம்மாவாக நடிகை சுகாசினி நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து நிழல்கள் ரவி, அப்பாஸ், சரத்பாபு மற்றும் லண்டன் நடிகர்கள் கெவின் மெக்கோவன், கிரஹாம் மற்றும் பலர் நடிக்கின்றனர். ராமானுஜர் வாழ்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.

 

25 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்!

Kamal S Pesum Padam Goes Shanghai

சென்னை: கமல் ஹாஸன் நடிப்பில் வெளியான புகழ்பெற்ற பேசும் படம் திரைப்படம் சீனாவின் ஷாங்காய் திரைப்பட விழாவுக்குப் போகிறது.

இந்தப் படம் கடந்த 1988-ம் ஆண்டு வெளியானது. படத்தில் வசனங்கள் கிடையாது. எந்தப் பாத்திரமும் பேசாமல் நடித்த படம் இது.

கமல் ஹாஸனுடன் அமலா நடித்திருந்தார். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியிருந்தார்.

இந்தப் படம் இந்தியில் புஷ்பக் என்ற பெயரிலும், தெலுங்கில் புஷ்பக விமானம் என்றும் வெளியானது.

அன்றைக்கு அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் குவித்தது பேசும் படம். வெளியாகி 25 ஆண்டுகள் கழித்து இப்போது ஷாங்காய் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்படுகிறது.

கால் நூற்றாண்டு கழித்தும் பேசும் அளவுக்கு தரத்தில் சிறந்த படமாக பேசும் படம் திகழ்வதைத்தான் இது காட்டுகிறது என திரையுலகினர் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

 

கருப்பாக இருப்பதால், ஒடுக்கப்பட்ட சாதி என்பதால் கலாபவன்மணி மீது வழக்கு! - அம்பலமாக்கிய அதிகாரி

Alleged Assault On Forest Officials

கொச்சி: வனத்துறை அதிகாரிகளைத் தாக்கிய நடிகர் கலாபவன் மணி மீது வழக்கு தொடரப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது. அவர் கருப்பாக, ஒடுக்கப்பட்ட சாதியாக இருப்பதால் இந்த வேற்றுமை பாராட்டியுள்ளது போலீஸ் என்று, காவல்துறை உயர் அதிகாரி அம்பலமாக்கியுள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி வனப்பகுதிக்குள் நண்பர்களுடன், காரில் சென்று சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பிய நடிகர் கலாபவன்மணியின் காருக்குள் வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய முயன்றனர்.

அப்போது, கலாபவனும் அவரது நண்பர்களும் வனஅதிகாரிகளை தடுத்து தாக்கியதாக அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்வதை தவிர்க்கும்பொருட்டு, கேரள உயர்நீதிமன்றத்தில், கலாபவன்மணி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், காரில் இருந்த நண்பர்களின் மனைவிகளை வன அலுவலர்கள் தவறாக பேசியதாகவும் அதை தட்டிக்கேட்ட தன்னை அவதூறாக பேசியதாகவும் தனது சாதி குறித்து அதிகாரிகள் விசாரித்ததாகவும் கலாபவன்மணி கூறியுள்ளார். இந்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி சதீஷ் சந்திரன் ஒத்திவைத்துள்ளார்.

கலாபவனுக்கு போலீஸ் அதிகாரி ஆதரவு

இதற்கிடையில், கலாபவன் மணி தரப்பில் நியாயமிருப்பதாக போலீஸ் அதிகாரி டிபி செங்குமார் கூறியுள்ளார். இன்டெலிஜென்ஸ் பிரிவு கூடுதல் டிஜிபி இவர்.

கேரள போலீஸ் சங்க விழாவில் பேசிய அவர், "கலாபவன் மணி விஷயத்தில் போலீசார் அத்துமீறியுள்ளனர். இதுகுறித்து அந்தப் பகுதி எஸ்பியிடம் நான் பேசினேன். இதுவே மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், திலீப் போன்ற சூப்பர் ஸ்டார்களாக இருந்தால், இதுபோல அத்துமீறி கேவலமாக போலீசார் நடந்திருப்பீர்களா என்று கேட்டபோது அவரால் பதில் பேச முடியவில்லை... ஏன் ஆளுக்கும் அந்தஸ்துக்கும் ஏற்றமாதிரி போலீஸ் நடந்து கொள்கிறது?," என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கலாபவன் மணி கருப்பாக இருப்பதால், ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவரை இப்படி அவமானப்படுத்தி வழக்குப் போட்டிருப்பதாக சொல்லப்படுவதை தான் ஒப்புக் கொள்வதாகவும், வெள்ளையாக இருக்கும் உயர்சாதிக்காரர்களுக்கு சல்யூட் அடிக்கும் போலீசார், கலாபவன் மணி போன்றவர்களை அவமானப்படுத்துவதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

வாத்தியார் வேடத்தில் ராஜசேகர்… தெலுங்கில் ரீமேக் ஆகும் சாட்டை

Saattai Telugu

சமுத்திரகனி ஹீரோவாக நடித்த சாட்டை திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் ஆசிரியர் வேடத்தில் சாட்டை சுழற்றப் போகிறவர் ‘இதாண்டா போலீஸ்' ராஜசேகர்.

பள்ளி மாணவர்கள் எப்படி இருக்கவேண்டும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று உணர்த்திய படம் சாட்டை.

இந்தப் படத்தில் சமுத்திரகனியுடன் நடித்த தம்பி ராமையா உள்ளிட்ட பல நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தனர். தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு காட்சி போட்டு காட்டப்பட்ட படமும் கூட. இதன் தெலுங்கு உரிமையை ஜீவிதா ராஜசேகர் வாங்கியுள்ளார்.

அன்பழகன் இயக்கிய 'சாட்டை' திரைப்படத்தில் ஆசிரியர் கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கினார் இயக்குனர் சமுத்திர கனி. தமிழ் 'சாட்டை'யின் வெற்றியை அடுத்து, தெலுங்கு சாட்டையை சுழற்ற தயாராகி விட்டார் அன்பழகன். தெலுங்கில், சமுத்திர கனியின் ரோலை டாக்டர் ராஜசேகர் செய்கிறாராம். 'தமிழ் சாட்டையை போல தெலுங்கு சாட்டையும் வெற்றி பெரும் என்று நம்பிக்கையோடு பேசுகிறார் அன்பழகன்!

வழக்கமாக தெலுங்கு படங்களை தான் தமிழில் ரிமேக் செய்வார்கள். ஆனால், தமிழில் சரித்திரம் பதித்த படங்கள் இப்போது தெலுங்கில் ரீமேக் ஆவது நமக்குப் பெருமைதானே.

 

மாயாண்டி குடும்பத்தார் பட ஹீரோவின் தந்தை மாயம்

Actor Tarun Gopi S Father Missing

சென்னை: பிரபல நடிகர் தருண் கோபியின் தந்தை பொன்னையா தேவர் மாயமான சம்பவம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்தவர் தருண் கோபி. அவரது தந்தை பொன்னையா தேவர். அவர் சென்னை மதுரவாயலில் உள்ள தருண்கோபி வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை காலை 11 மணிக்கு அவர் அருகில் இருந்த டீ கடைக்கு சென்றார். அதன் பின்பு வீடு திரும்பவில்லை என கூறப்படுகின்றது. இதையடுத்து உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் பொன்னையா தேவர் கிடைக்கவில்லை.

இதையடுத்து இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தருண்கோபி புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் பொன்னையா தேவரை தேடி வருகின்றனர்.

 

ஓவியா-இனியா-அனன்யா நடிக்கும் புலிவால்!

சென்னையில் ஒரு நாள் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து ராதிகா சரத்குமார் - தயாரிப்பாளர் லிஸ்டின் இணைந்து தயாரிக்கும் புதிய படம் புலிவால்.

இந்தப் படத்தில் விமல், பிரசன்னா, அனன்யா, இனியா, ஓவியா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.

மலையாளத்தில் வெளியான ட்ராபிக் படத்தை தமிழில் சென்னையில் ஒரு நாள் என எடுத்து வெற்றி கண்டது ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ். இந்தப் படத்தை ராதிராவுடன் இணைந்து தயாரித்தவர் லிஸ்டின்.

oviya iniya ananya teamed up puli vaal

இப்போது மீண்டும் அதே கூட்டணி தொடர்கிறது. இந்தப் படத்துக்கு புலிவால் என பெயர் சூட்டியுள்ளனர்.

மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற சப்பா குரிசு படத்தைத்தான் புலிவால் என ரீமேக் செய்கின்றனர்.

இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் கூறுகையில், "சப்பா குரிசு கதையை அப்படியே காட்சிக்கு காட்சி எடுக்கவில்லை. அடிப்படை கதைக் கருவை மட்டுமே எடுத்துக் கொள்கிறோம்," என்றார்.

இந்தப் படத்தை மாரிமுத்து இயக்குகிறார்.

 

லிங்குசாமி தயாரிக்கும் படத்தை இயக்கி நடிக்கும் கமல்!

Kamal Direct Lingusamy Movie

இயக்குநர் லிங்குசாமி, தனது திருப்பதி பிரதர்ஸ் பேனரில் கமலை வைத்து ஒரு படம் தயாரிக்கப் போவது குறித்து கூறியிருந்தோம் அல்லவா...

அந்தப் படத்தை லிங்குசாமியும் இயக்கவில்லை... லிங்குசாமி விரும்பிய கேஎஸ் ரவிக்குமாரும் இயக்கவில்லை. 'இந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்' எனக் கூறிவிட்டாராம் கமல்.

இந்த படத்தை முதலில் கன்னட நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கட்டும் என்று கமலே ஐடியா தந்தாராம். ஆனால் பின்னர் அதையும் மாற்றிக் கொண்டாராம்.

ஒரு இந்திப் படத்தின் தழுவல்தான் இந்தப் புதிய படம். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது.

லேட்டஸ்ட் நிலவரப்படி படத்தின் ஹீரோ மற்றும் இயக்குநர் கமல்தான். யுவன் சங்கர் ராஜா முதல் முறையாக கமலுடன் கைகோர்க்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

 

அம்மா ஆசியுடன் இயக்குநர் சங்கத் தேர்தல் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆர்வி உதயகுமார்!

Rv Udhayakumar Contesting Directors Assn President Post

சென்னை: தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் இயக்குநர் ஆர்வி உதயகுமார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது. இந்த சங்கத்தில் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் 2,400 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

தற்போது தலைவராக இயக்குநர் பாரதிராஜா இருந்து வருகிறார். அவருடைய தலைமையிலான நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, சங்கத்துக்கு அடுத்த மாதம் (ஜூன்) 9-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் போட்டியிடுகிறார். ‘உரிமை கீதம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், எஜமான், சின்னக் கவுண்டர், கிழக்கு வாசல், பொன்னுமணி, சிங்காரவேலன் உள்பட தமிழ் - தெலுங்கில் மொத்தம் 24 படங்களை இயக்கியுள்ளார்.

இவர், நாளை (வியாழக்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இவர் தீவிர அதிமுக விசுவாசி. திரைப்படங்களுக்கு அரசு வழங்கும் மானியத்துக்கு பரிந்துரைத்தல், கேளிக்கை வரி விலக்குக்கான பரிந்துரைக் குழு போன்றவற்றில் இடம்பெற்றுள்ளார் ஆர்வி உதயகுமார். முதல்வரின் ஆசியுடன் இந்த பதவிக்கு அவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முதல்வரைச் சந்தித்து திருமண அழைப்பு கொடுத்த ஜிவி பிரகாஷ்

பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் - பின்னணி பாடகி சைந்தவி திருமணம் வரும் ஜூன் 27-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்தத் திருமணத்துக்கு வருமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரில் அழைப்பு விடுத்தனர் ஜிவி பிரகாஷ் குடும்பத்தினர்.

ஏஆர் ரஹ்மானின் உறவினரும் பிரபல இசையமைப்பாளருமான ஜீவி பிரகாஷ் குமார், பாடகி சைந்தவியை கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். இருவருமே பள்ளி நாட்களிலிருந்து நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

gv prakash saindhavi invites cm person
25 படங்களுக்கு இசையமைத்துள்ள ஜீவி பிரகாஷ் குமார், திருமணத் தேதியை அறிவிக்காமல் ஒத்திப் போட்டு வந்தார்.

இப்போது பெற்றோர் சம்மதத்துடன் வரும் ஜூன் 27-ம் தேதி சைந்தவியைக் கைப்பிடிக்கப் போவதாக ஜீவி பிரகாஷ் அறிவித்துள்ளார்.

திருமண ஏற்பாடுகள் தொடங்கியுள்ள நிலையில், இதற்கான அழைப்பிதழை முதல்வருக்கு ஜிவி பிரகாஷ் குடும்பத்தினர் நேரில் சென்று கொடுத்தனர். ஜிவி பிரகாஷ், சைந்தவி மற்றும் இருவரின் பெற்றோரும் இணைந்து அழைப்பிதழ் கொடுத்தனர். புதுமணத் தம்பதிகளாகப் போகும் ஜிவி பிரகாஷையும் சைந்தவியையும் முதல்வர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

 

சங்கரா டிவியில் 'குரு குலம்'

நம் பாரம்பரியமான வாழ்க்கை முறை மற்றும் புராணம், ஸ்தோத்திரம், வேத மந்திரங்கள் குறித்த அறிவை வளர்த்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்காக ‘குருகுலம்' என்ற நிகழ்ச்சி சங்கரா டிவியில் ஒளிபரப்பாகிறது. கிராம மக்கள் உட்பட,இந்தியா முழுவதும் இருந்து பலர் இதை போன்ற நிகழ்ச்சி தேவை என்று வலியுறுத்தியதை தொடர்ந்து குருகுலம் தொடங்கப்பட்டது.

gurukulam on sankara tv

வேத பண்டிட் கே. எல். ஸ்ரீநிவாசன் மூலம் ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் வேதங்கள் கற்றுத் தரப்படுகின்றன. நம் தேசத்தில், சிறுவர்களும், சிறுமிகளும் தேவதா ஸ்தோத்திரங்கள்,மந்திரங்கள் போன்றவற்றை கற்று வருவது குறைந்து வருவதற்கான காரணம், தகுதிவாய்ந்த ஒரு குரு மூலம் இவற்றை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு அமையாததே ஆகும். சிறுவர்களும் கற்றுக்கொள்ளும் விதத்தில் எளிமையான ஸ்லோகங்களில் தொடங்கி படிப்படியாக சற்று சிரமமான ஸ்லோகங்களை கற்று தரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதே இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாகும்.

உரையாடல் மூலம் கற்றுக்கொள்ளும் விதத்தில் அமைக்கப்பட்ட அம்ருத பிந்து என்ற ஸ்ரீமத் பகவத்கீதை, அம்பாளின் திவ்ய நாமங்களை கொண்ட லலிதா ஸஹஸ்ரநாமம் போன்றவற்றை மாணவர்கள் நிகழ்ச்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதை போன்ற நிகழ்ச்சியின் தேவை குறித்து அறிந்து கொண்ட சங்கரா டிவி "குருகுலம்" நிகழ்ச்சியை வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5 மணிக்கு ஒளிபரப்புகிறது.