நயன்தாரா, ஸ்ரீதிவ்யாவை காதல் செய்யப் போகும் கார்த்தி

சென்னை: கார்த்தி நடிக்க உள்ள காஷ்மோரா படத்தில் அவருக்கு நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என்று இரண்டு ஜோடிகளாம்.

கார்த்தி, லக்ஷ்மி மேனன் நடித்துள்ள கொம்பன் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை அடுத்து கார்த்தி நடிக்கும் படம் காஷ்மோரா. படத்தை விஜய் சேதுபதியை வைத்து இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.

படத்தில் கார்த்திக்கு இரட்டை வேடமாம். ஒரு கதாபாத்திரத்திற்கு நயன்தாராவும், மற்றொரு கதாபாத்திரத்திற்கு ஸ்ரீதிவ்யாவும் ஜோடியாக நடிக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது.

நயன்தாரா, ஸ்ரீதிவ்யாவை காதல் செய்யப் போகும் கார்த்தி   | ஸ்ரீதிவ்யா  

இது குறித்து கோகுல் கூறுகையில்,

படம் இந்த வகையைத் தான் சேர்ந்து என்று கூற முடியாது. படத்தில் கொஞ்சம் ஃபேன்டஸி உள்ளது. ஸ்ரீதிவ்யாவின் கதாபாத்திரம் பற்றி தற்போதைக்கு எதுவும் தெரிவிக்க முடியாது என்றார்.

காஷ்மோரா படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் துவங்குகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

 

என்னை அறிந்தால் 2 பேருக்காக ஹிட்டாக வேண்டும் என விரும்பும் அஜீத்

சென்னை: அஜீத் தான் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் இரண்டு பேருக்காக ஹிட்டாக வேண்டும் என்று நினைக்கிறார்.

கோலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக இருந்த ஏ.எம்.ரத்னத்திற்கு இரண்டு படங்கள் படுத்ததால் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அவரை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். அந்த நேரம் தான் அவர் அஜீத்தை அணுகி ஆரம்பம் படத்தில் நடிக்குமாறு கேட்க அவரும் ஒப்புக் கொண்டார். ஆனால் ஆரம்பம் படம் நல்ல வசூல் செய்த போதிலும் ரத்னத்தின் கடன் முழுவதும் தீரவில்லை.

என்னை அறிந்தால் 2 பேருக்காக ஹிட்டாக வேண்டும் என விரும்பும் அஜீத்

இதையடுத்து தான் அஜீத் மீண்டும் ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ளார். கௌதம் மேனனுக்கும் அண்மையில் எந்த படமும் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் தான் என்னை அறிந்தால் படம் ரத்னம் மற்றும் கௌதமுக்காக ஹிட்டாக வேண்டும் என்று நினைக்கிறார் அஜீத். பொங்கலுக்கு கூட்டத்தோடு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம், வசூல் பாதிக்கும் என்று ரத்னம் அஜீத்திடம் தெரிவித்ததும் அவர் உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

இதையறிந்த கௌதமும் தனது வேலையின் வேகத்தை சற்று குறைத்துக் கொண்டாராம். இரண்டு பேருக்கு நல்லது நடக்க வேண்டும் என்று விரும்புகிறார் அஜீத்.