உதயன் இசையில் அருள் இயக்கும் 'வடு'!

debutatnt director aruls vadu
Close
 
சிட்டி மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் 'வடு' எனும் புதிய படம் பாடல் பதிவுடன் இன்று தொடங்கியது.

கதை திரைக்கதை வசனம் எழுதி அருள் இயக்கும் இந்தப் படத்துக்கு, மன்னாரு புகழ் உதயன் இசையமைக்கிறார்.

செய்த தவறை சரிசெய்வது அல்லது பிராயச்சித்தம் தேடுவதுதான் வாழ்க்கையின் உன்னதமான பகுதி என்பதைச் சொல்லும் வகையில் இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

படம் குறித்து இயக்குநர் அருள் கூறுகையில், "வடு என்றால் ஒரு காயம் உண்டாகி அதனால் ஏற்படும் தழும்பு என்று அர்த்தம். காயம் மறைந்துவிடும். ஆனால் வடு மறையாது.

சின்ன வயதில் ஒரு பையன் செய்த தவறு ஒரு பெண்ணை, அவள் படிப்பு ரீதியாக எந்த அளவு பாதிக்கிறது என்பதும், அந்த தவறுக்கு பரிகாரம் தேட அந்த பையன் பின்னர் தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பதும்தான் இந்தப் படம்," என்றார்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை, ரீலீஸாகும் வரை ஹீரோ ஹீரோயின் யார் என்பதை வெளியில் சொல்லப் போவதே இல்லை என்கிறார் இயக்குநர்.

உதயன் இசையில் நான்கு பாடல்கள் இடம்பெறுகின்றன படத்தில். பின்னணி இசைக்கு செமத்தியான வேலை காத்திருக்கிறதாம் படத்தில். 'நமக்கு அதானே வேணும்... பின்னணி இசையில் குறிப்பிட்டுச் சொல்லும் படமாக வடு அமையும்," என்கிறார் உதயன்.

ஸ்ரீனிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்ய, ராஜாமுகமது படத்தொகுப்பை கவனிக்கிறார்.

 

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் பில்லா நடிகை

Hazel Keech The Bigg Boss 6 House   

அஜீத்தின் பில்லா 1 படத்தில் நடித்த பிரபல மாடல் ஹசல் கீச் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் குடும்பத்தோடு இணைகிறார்.

பில்லா படத்தில் ‘செய் ஏதாவது செய்...' என்ற கருத்தாழம் மிக்க பாடலுக்கு நடனமாடியவர் ஹசல்கீச். பில்லா 1 படத்தில் நயன்தாரா, நமீதா என்ற இரண்டு கவர்ச்சி நாயகிகள் இருந்தாலும் இந்த பாடலுக்கு பிரபல மாடல் ஹசல் கீச் நடனமாடியது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

பிரபலமான விளம்பரங்களில் நடித்துள்ள ஹசல் கீச் இவர் பாடிகார்ட் இந்திப் படத்தில் சல்மான் கானுடன் நடித்திருக்கிறார். மேக்சிமம் என்ற இந்திப்படத்திலும் நடித்திருக்கும் இந்த கவர்ச்சிப் புயல் இப்போது பிக் பாஸ் சீசன் 6 ல் நுழைகிறார்.

யனா குப்தா முதலில் நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தது. ஆனால் ஏனோ அவர் வரவில்லை. இப்போது ஹசல் கீச் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இது குறித்து கருத்து கூறியுள்ள ஹசல், ரியாலிட்டி ஷோவில் பங்கேற்பது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார். கிம் கார்தஷியன் ஏற்கனவே இதுபோன்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பிரபலமடைந்துள்ளார். தவிர சல்மான்கான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார் என்பதால் இதில் பங்கேற்க நான் ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டேன் என்ற கூறியுள்ளார் ஹசல்.

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் பிரபல கவர்ச்சிப் புயல்கள் மையம் கொண்டுள்ளன. இனி இந்த சூறவளி புகுந்து என்ன செய்யப்போகிறதோ தெரியலையே?

 

சைபர் குற்றங்களுக்கு கட்டப் பஞ்சாயத்து? ராஜ் டிவியின் கோப்பியம் நிகழ்ச்சியில் அதிர்ச்சி!

Raj Tv Program Koppiyam

இணையதளங்கள், செல்போன், சமூகவலைத்தளங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தால் பெரும்பாலான இடங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்யப்படுவதாக வழக்கறிஞர் à®'ருவர் ராஜ்டிவியின் கோப்பியம் நிகழ்ச்சியில் கருத்து கூறியுள்ளார்.

சமூகவலைத்தளங்களில் கருத்து கூறினால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிப்பதும், அதற்காக கைது செய்யப்படுவதும் கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் வாடிக்கையாகிவிட்டது.

இதனை அடிப்படையாகக் கொண்டு பிரபலபின்னணி பாடகி சின்மயி குறித்த சம்பவம் ராஜ் டிவியின் கோப்பியம் நிகழ்ச்சியில் à®'ளிபரப்பானது.

குற்றமும், அது பற்றிய உண்மை நிகழ்வுகளும் கோப்பியம் நிகழ்ச்சியில் அலசப்படுகிறது.

தன்னைப் பற்றி அவதூறாக கருத்து பரப்பியதற்காக சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார் பாடகி சின்மயி டுவிட்டரில் 2 ஆண்டுகளாக கொச்சையாக பேசினார், தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக இருப்பதாக 10 பேர் சொல்கின்றனர் அதற்காகவே தான் போலீசை நாடியதாகவும் கூறினார் சின்மயி. தன்னை ரொம்ப கேவலமான வார்த்தைகளால் இழிவு படுத்தினர். தன்னை மட்டுமல்ல பல பெண்களை இழிவு படுத்தினர் என்றும் அவர் புகார் கூறவே இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிகழ்வு பற்றி கருத்து கூறிய வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான சல்மா, பிரபலமான பெண்களை பாலியல் ரீதியாக வர்ணிப்பதும், கருத்துக்களை பகிர்வதும் இன்றைக்கு அதிகரித்து வருவதாக கூறினார். ஆண்களின் ஈகோதான் இதுபோன்று பாலியல் ரீதியாக கருத்துக்களை கூற காரணமாகிறது என்றும் கூறினார்.

பெண் குறித்த தாழ்வான எண்ணம்தான் இதற்குக் காரணம். எனவே பாலியல் ரீதியாக பெண்களை விமர்சனம் செய்வது கண்டனத்திற்கு உரிய விசயம் என்றும் வழக்கறிஞர் சல்மா கூறினார். ஆண்கள் மனதளவில் மாறவேண்டும் அப்பொழுதுதான் இதுபோன்ற இழிநிலைக்கு மாற்று கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

மற்றொரு வழக்கறிஞரான பிரசன்னா, சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாலியல் சார்ந்த தாக்குதலை கைவிடவேண்டும். ஆபாசமான கருத்துக்களால் பெண்களை தாக்க கூடாது என்றார். மேலும் சைபர் குற்றத்திற்காக கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது என்று அதிர்ச்சி தகவலை கூறிய அவர்

சைபர் கிரைம்க்கு ஸ்பெசல் கோர்ட் வேண்டும் தண்டனை உடனடியாக கிடைக்கவேண்டும் அப்பொழுதுதான் இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார். இதில் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதால் சைபர் குற்றத்திற்கான நீதிமன்றத்தில் பெண் அரசு வழக்கறிஞர் பெண் நீதிபதியும் நியமிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா?

 

முஸ்லிம் ரசிகர்களை விலகச் சொல்வோம்... விஜய் நிகழ்ச்சிகளை முற்றுகையிடுவோம்! - தவ்ஹீத் ஜமாஅத்

Tauheed Jamaat Announces Protest Against Vijay

சென்னை: நடிகர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் புறக்கணிப்போம் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் கோவை.ஆர்.ரஹ்மதுல்லாஹ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "முஸ்லிம்களை இழிவுபடுத்தும் காட்சிகளை துப்பாக்கி படத்திலிருந்து நீக்குவதாக உறுதியளித்தனர் தயாரிப்பாளர் தாணுவும், இயக்குநர் முருகதாஸும்.

நடிகர் விஜய் சார்பில் அவரது தந்தை இந்த உறுதியை அளித்தார். ஆனால் இப்போது படத்தில் எந்தக் காட்சியையும் நீக்கவில்லை. மாறாக சில காட்சிகளில் ஒலியை டம்மியாக்கியுள்ளனர்.

இது இஸ்லாமிய மக்களை மேலும் புண்படுத்தும் செயலாகும். இந்த அளவுக்கு முட்டாளாக எங்கள் சமூகம் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தும் வகையில், இனி விஜய்யின் மன்றங்களிலிருந்து அனைத்து முஸ்லிம் இளைஞர்களும் விலக வேண்டும் என்று வற்புறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம்.

மேலும் இனி நடிகர் விஜய் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், அங்கே தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்," என்று தெரிவித்தார்.

 

சோனா மீது ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு

Pmk Lawyer Files Defamation Case On Sona   

வேலூர்: ராணிப்பேட்டை உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகை சோனா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை முத்துக்கடையை சேர்ந்த பாமக வக்கீல் ஜானகிராமன் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

ஆண்களை இழிவாக பேசியதாக திரைப்பட நடிகை சோனா மீது அவர் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "ஆண்கள் எனக்கு டிஷ்யூ பேப்பர்தான் எனும் தலைப்பில் வந்துள்ள நடிகை சோனா பேட்டியானது ஆண் இனத்தை இழிவுபடுத்தும் விதமாகவும், கேவலப்படுத்தும் விதமாகவும், ஆபாசமாக, அருவருக்கதக்கதாகவும் அமைந்துள்ளது.

ஆண்களுடன் சேர்ந்து வாழ்வதும், திருமணம் செய்து கொள்வதும் முட்டாள்தனம் என புனிதமான திருமண பந்தத்தை கொச்சைப்படுத்தி பேட்டியளித்துள்ளார்.

தமிழ் பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும், நாகரீகத்திற்கும் முன் உதாரணமாக திகழும் தமிழ்நாட்டில் இதுபோன்ற கருத்துகளால் பண்பாடு, கலாசாரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆண்கள் மீது பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் குறைய வாய்ப்புள்ளது. ஒட்டு மொத்த ஆண் இனத்தையும் உள்நோக்கம் கொண்டு அவதூறாக பேசியுள்ளார்.

நடிகை சோனா சினிமா துறையில் பிரபலமானவர் என்பதால் இந்த கருத்துகள் பெண்கள் மத்தியில் எளிதில் செல்ல வாய்ப்புள்ளது. பின் விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளளது.

எனவே நடிகை சோனா மீது குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 200-ன்கீழ் கோப்பில் எடுத்துக்கொண்டு நடிகை சோனாவிற்கு சம்மன் அனுப்பி இந்திய தண்டனை சட்டப்பிரிவு 292 (1) (2), 293, 294, 499, 500, -ன்கீழ் வழக்கை விசாரித்து தகுந்த நீதி வழங்க கேட்டுக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

கிசு கிசு - வயித்தெரிச்சல் வில்லன்

 

பிருத்விராஜுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்

The producer association sent notice to Pirutviraj இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ள மலையாள படம் ரிலீஸ் செய்ய முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவருக்கும் நடிகர் பிருத்விராஜுக்கும்  தயாரிப்பாளர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. தமிழில் 'வாஞ்சிநாதன், 'ஜனா ஆகிய படங்களை இயக்கியதுடன் பல்வேறு மலையாள படங்களை  இயக்கியுள்ளார் ஷாஜி கைலாஷ். தற்போது 'மதராஸிÕ என்ற மலையாள படத்தை இயக்கி உள்ளார். ஜெயராம், மேக்னா ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  இப்படத்தை கடந்த அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் சம்பள பாக்கி பிரச்னை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. எனவே  ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய முடிவு செய்த தயாரிப்பாளர், சம்பள பாக்கி தொடர்பாக கோர்ட்டுக்கு வெளியே பேசி  தீர்த்துக்கொள்ள முடிவு செய்தனர்.

இதை மறத்த ஷாஜி கைலாஷ், 'இப்படியொரு பிரச்னையே இல்லை. கேரளாவில் நடந்த தியேட்டர்கள் ஸ்டிரைக்கால் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.  இம்மாத இறுதியில் படம் ரிலீஸ் ஆகும் என்று குறிப்பிட்டார். இதற்கிடையில் மலை யாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஷாஜி கைலாஷ் மற்றும் நடிகர்  பிருத்விராஜீக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், கடந்த 2010ம் ஆண்டு சங்கத்துக்காக 'ரகுபதி ராகவ ராஜாராம் என்ற படத்தை இயக்குவதாக ஷாஜி  கைலாஷ் கூறினார். அது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தை அவர் முடித்துக்கொடுக்க வேண்டும் அல்லது புதிய படம் இயக்கி தர வேண்டும் என்று  நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சங்க தலைவர் மிலன் ஜலில் தெரிவித்துள்ளார்.
 

ரிலீசுக்கு முன்பே 25 நிமிட காட்சிகள் கட்

25 minutes before the building release ஹீரோவிடம் சஸ்பென்சை சொன்னதால் தவித்தேன் என்றார் இயக்குனர். 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குனர் பாலாஜி தரணிதரன்.  அவர் கூறியதாவது: 'இப்படத்தை கடந்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்துவிட்டோம். ஆனால் குறைந்த தியேட்டர்களே கிடைத்ததால்  ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தோம். முதலில் இப்பட கதையை சஸ்பென்சாக வைத்திருந்தேன். யாருக்குமே சொல்லவில்லை. இதற்காக ஹீரோவை தேர்வு  செய்ய பலரை பார்த்தேன். பொருத்தமாக அமையவில்லை.

'பீட்சா பட ஹீரோ விஜய் சேதுபதி ஹீரோ தேர்வுக்காக வந்தார். அவர் வேடத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்பதால் சஸ்பென்சாக வைத்திருந்த கதையின்  காட்சிகளை சொல்லி நடிக்கச் சொன்னேன். நன்றாக செய்தார். இவரிடம் சஸ்பென்சை சொல்லிவிட்டதால் தவிக்க தொடங்கினேன்.  இக்கதை எனது நண்பரின்  வாழ்வில் நடந்த நிஜ சம்பவம். அவர்தான் இப்படத்தின் கேமராமேனாக பணியாற்றி இருக்கிறார். காயத்ரி ஹீரோயின். இப்படத்தில் 25 நிமிட காட்சிகள்  குறைக்கப்பட்டு மேலும் விறுவிறுப்பு கூட்டப் பட்டிருக்கிறது. இவ்வாறு தரணிதரன் கூறினார்.
 

பி‌ரியாணியில் புதிதாக ராம்கி

Actor Ramki acting in the Priyani movie படப்பிடிப்பு நடக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்வதென்ற முடிவில் வெங்கட்பிரபு இருப்பதாக‌த் தெ‌ரிகிறது. கார்த்தி, பிரேம்‌ஜி என்று இப்போதே அடைச்சலாக இருக்கிறார்கள் ஆட்கள். இதில் புதிதாக ராம்கியும் இணைந்திருக்கிறார்.

ராம்கி...? செந்தூரப்பூவே-யில் நிரோஷா பின்னால் பாட்டுப்பாடி வந்தவர் அப்படியே நிரேஷாவை திருமணம் செய்து பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு சினிமாவிலிருந்து ஒதுங்கினார். நிரோஷா சிலம்பாட்டம் படத்தில் நடித்தது போல் ராம்கி நடுவில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

ஆனால் தற்போது மீண்டும் நடிக்கும் முடிவில் பி‌ரியாணியில் வெங்கட்பிரபுவுடன் கைகோர்த்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் இன்னொரு இன்டெர்நெட் விஐபி சாம் ஆண்டர்சன் என்பது கொசுறு செய்தி.
 

விஜய்யுடன் இணையும் மோகன்லால்!

Mohan Lal Join With Vijay

விஜய்யும் மலையாள நடிகர் மோகன்லாலும் இணைந்து புதிய தமிழ் படமொன்றில் நடிக்க உள்ளனர்.

மோகன்லால் தமிழில் பாப்கார்ன் என்ற படத்திலும், இரு ஆண்டுகளுக்கு முன் வெளியான கமலின் ‘உன்னைப் போல் ஒருவன்' படத்திலும் நடித்துள்ளார்.

அடுத்து அவர் விஜய்யுடன் கைகோர்க்கிறார். விஜய், மோகன்லால் இணைந்து நடிப்பதற்கான கதை தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரும் கதையை கேட்டு சம்மதம் தெரிவித்துவிட்டார்களாம்.

விஜய் தற்போது இயக்குநர் ஏ எல் விஜய் இயக்கும் புதுப்படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு மோகன்லால் - விஜய் படம் தொடங்கும் எனத் தெரிகிறது.

 

சன் டிவியில் இந்தவாரம் பாக்யராஜ் வாரம்

This week Director Pakyaraj Film in sun tv

சன் டிவியில் இந்தவாரம் பாக்யராஜ் வாரம் தொடங்கியுள்ளது. இரவு 11 மணிக்கு நடித்த தூறல் நின்னு போச்சு, மௌனகீதங்கள் போன்ற பிரபலமான படங்களை ஒளிபரப்புகின்றனர்.

இயக்குநர் கே. பாக்யராஜ் படங்களுக்கு என்று தனி ரசிகர் வட்டம் உண்டு. ஆண் ரசிகர்களைப் போல பெண் ரசிகர்களும் அதிகம் உண்டு. அவருடைய ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு சமாச்சாரம் இருக்கும். இன்றைக்கும் டிவியில் பாக்கியராஜ் படம் போட்டால் அது ரசித்து பார்ப்பவர்கள் அதிகம் உள்ளனர். அந்த அளவிற்கு அவருடைய படத்தின் திரைக்கதையும், கதாபாத்திரங்களும் ரசிக்கும் படியாக இருக்கும்.

சன் டிவியில் இந்தவாரம் இரவு 11 மணிக்கு பாக்யராஜ் நடித்த திரைப்படங்கள் ஒளிபரப்புகின்றனர். இன்று இரவு ருத்ரா, புதன்கிழமை இரவு தூறல் நின்னு போச்சு படம் ஒளிபரப்பாகிறது.

1982 லேயே வரதட்சணை கொடுமை பற்றி கூறிய படம் ‘தூறல் நின்னு போச்சு’. நம்பியாரை வில்லான பார்த்த தமிழ் ரசிகர்கள் இதில் வித்தியாசமான கெட்டப்பில் பார்த்திருப்பார்கள். இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனவை. நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத படம் இது. வியாழக்கிழமை இரவு இன்று போய் நாளை வா என்ற நகைச்சுவை படமும் வெள்ளிக்கிழமை இரவு அந்த காலத்தில் சூப்பர் ஹிட்டான மௌனகீதங்கள் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. மௌனகீதங்கள் படத்தில் பாக்யராஜ், சரிதா ஜோடி கெமிஸ்ட்ரி சூப்பர் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. தினசரி 11 மணிக்கு தூக்கம் வராமல் இருந்தால் பாக்யராஜ் படங்களை பார்த்து ரசியுங்களேன்.