நடிகை மித்ரா குரியன் காதல் திருமணம்

நடிகை மித்ரா குரியன் காதல் திருமணம் செய்து கொள்கிறார். இசைக் கலைஞரான வில்லியம்ஸ் என்பவரை அவர் மணக்கிறார்.

வருகிற 26-ந் தேதி இவர்கள் திருமணம் கேரளாவில் நடக்கிறது.

விஜய் நடித்த ‘காவலன்' படத்தில் அசினுடன் இணைந்து நடித்தார் மித்ரா குரியன். கதைப்படி விஜய்க்கு முதல் ஜோடி இவர்தான். கரண் நடித்த ‘கந்தா' படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

நடிகை மித்ரா குரியன் காதல் திருமணம்

15க்கும் மேற்பட்ட மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த ‘நந்தனம்,' ‘ஆதார்' ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றன.

மித்ரா குரியன் சொந்த ஊர், கேரள மாநிலம் கொச்சி. இவருக்கும், கொச்சியை சேர்ந்த இசைக்கலைஞர் வில்லியம்ஸ் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தார்கள்.

இப்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர்.

மித்ரா குரியன்-வில்லியம்ஸ் நிச்சயதார்த்தம் வருகிற 17-ந் தேதி, கொச்சியில் உள்ள மித்ரா குரியன் வீட்டில் நடக்கிறது.

வருகிற 26-ந் தேதி காலை 10-30 மணிக்கு திருச்சூரில் உள்ள புனித ஆண்டனி தேவாலயத்தில், திருமணம் நடக்கிறது. அன்று மாலை 6-30 மணிக்கு கொச்சி விமான நிலையத்தில் உள்ள கலையரங்கில் வரவேற்பு நடக்கிறது.

 

என்னை பார்த்து அப்படி கேட்பியா: இயக்குனரை விளாசிய மயிலு

சென்னை: மயிலு தன்னிடம் கதை சொன்ன முன்னணி தெலுங்கு இயக்குனருக்கு செம டோஸ் கொடுத்து அனுப்பிவிட்டாராம்.

பாலிவுட் இயக்குனரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலான மயிலு நடிகை பல ஆண்டுகள் கழித்து தற்போது தான் கோலிவுட்டுக்கு வந்துள்ளார். மிருகத்தின் பெயர் கொண்ட படத்தில் அவர் நடித்து வருகிறார். படத்தில் நடிக்க அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. இரண்டு ஹீரோயின்களை விட அம்மாவாக நடிக்கும் மயிலுக்கு தான் அதிக சம்பளமாம்.

என்னை பார்த்து அப்படி கேட்பியா: இயக்குனரை விளாசிய மயிலு

இந்நிலையில் முன்னணி தெலுங்கு இயக்குனர் ஒருவர் தனது படத்தில் நடிக்க வைக்க மயிலு நடிகையை பார்க்க வந்துள்ளார். நடிகையிடம் அவர் தனது படத்தின் கதையை கூறியுள்ளார். கதையை கூறிவிட்டு மயிலு நடிகையின் கதாபாத்திரத்தை அவரிடம் தெரிவித்துள்ளார்.

தனது கதாபாத்திரத்தை கேட்டவுடன் மயிலுக்கு மூக்கிற்கு மேல் கோபம் வந்து இயக்குனரை பார்த்து என்னை பார்த்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சொல்வீர்களா என்று கண்டபடி திட்டித் தீர்த்துவிட்டாராம். விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்குமாறு கூறியதால் தான் இயக்குனருக்கு டோஸ் விட்டுள்ளார் மயிலு.

நடிகையிடம் திட்டு வாங்கிய இயக்குனர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. எப்படியும் விரைவில் தெரிந்துவிடும்.

 

இந்திக்குப் போகும் திகில் படம் 'ர'!

தமிழில் சமீபத்தில் வெளியான, முற்றிலும் புதுமுகங்கள் நடித்த திகில் படமான ர விரைவில் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

கடந்த டிசம்பரில் வெளியான இந்தப் படம் இன்னும் சில அரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது.

பிரபு யுவராஜ் என்ற புதியவர் இந்தப் படத்தை தமிழில் இயக்கியிருந்தார். அஷ்ரப், அதிதி செங்கப்பா நடித்திருந்தனர்.

இந்திக்குப் போகும் திகில் படம் 'ர'!

இப்போது இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சி நடக்கிறது. இந்தியில் இந்தப் படத்தை பிரபு யுவராஜும் அஷ்ரப்பும் இணைந்து இயக்குகின்றனர். வைல்ட் எலிபென்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை இந்தியில் தயாரிக்கிறது.

தமாசே என்ற இந்திப் படத்தை தயாரித்த நிறுவனம் இது.

இந்தியில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என இயக்குநர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

துபாயில் ஸ்கை டைவ் அடித்த ராய் லட்சுமி!

நடிகைகளுக்கு வெளிநாடு சென்றால்தான் அதிக தனிமையும், விரும்பியபடி வாழும் சுதந்திரமும் கிடைக்கிறது. அப்படி வரும் வாய்ப்புகளை தவறவிடுவதே இல்லை.

சமீபத்தில் நடிகை ராய் லட்சுமிக்கு துபாய் செல்லும் வாய்ப்பும் சில தினங்கள் ஓய்வும் கிடைத்தது.

துபாயில் ஸ்கை டைவ் அடித்த ராய் லட்சுமி!

துபாயில் தான் விரும்பிய பொழுதுபோக்குகளில் லயித்து ஈடுபட்டார் ராய் லட்சுமி.

வேகமான படகு சவாரி, வானத்தில் பறந்த படி ஸ்கை டைவ் அடிப்பது போன்ற சாகஸ விளையாட்டுகளில் மகிழ்ச்சியாக விளையாடினார்.

துபாயின் முக்கிய சுற்றுலாப் பகுதிகளையெல்லாம் சுற்றிப் பார்த்து, தோழிகளுடன் படமெடுத்துக் கொண்டார்.

துபாயில் ஸ்கை டைவ் அடித்த ராய் லட்சுமி!

அந்தப் புகைப்படங்களை ரசிகர்களுக்காக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, "முயன்றால் முடியாதது எதுவும் இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

1000 படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு மும்பையில் பாராட்டு விழா

இந்திய சினிமாவில் தனி ஒரு இசையமைப்பாளராக ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைத்துள்ள இளையராஜாவை கவுரவிக்க மும்பையில் விழா எடுக்கிறார்கள்.

இதில் அமிதாப் பச்சன், லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

1000 படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு மும்பையில் பாராட்டு விழா

மேஸ்ட்ரோ, இசைஞானி என அன்புடன் அழைக்கப்படும் இளையராஜா, 1976-ம் ஆண்டு அன்னக்கிளி படத்தில் தன் இசைப் பயணத்தைத் தொடங்கினார்.

இந்த 39 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். பாலா இயக்கி வரும் தாரை தப்பட்டை அவரது 1000வது படம். இப்போதும் இருபது படங்களுக்கு மேல் இசையமைத்து வருகிறார்.

அவரது இந்த சாதனையை கவுரவிக்கும் வகையில், பாராட்டு விழா நடத்த பாலிவுட் தயாரிப்பாளர் பால்கி முடிவு செய்துள்ளார். பாலிவுட்டின் பிரபல இயக்குனரான பால்கி இயக்கத்தில் வெளிவந்த சீனி கம், பா ஆகிய இந்தி படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்தார். இப்போது இருவரும் ஷமிதாப் படத்தில் இணைந்துள்ளனர்.

இந்த விழா குறித்து இயக்குநர் பால்கி கூறுகையில், "வரும் ஜனவரி 20 ம் தேதி இந்த விழா மும்பையில் நடக்கிறது. அமிதாப் பச்சன், லதா மங்கேஷ்கர், பி சுசீலா, எஸ் ஜானகி உள்பட பலரும் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள்.

இளையராஜா இசையமைத்த படங்களில் நடித்த பிரபல ஹீரோக்களும் பங்கேற்க உள்ளனர்," என்றார்.

 

இடுப்பு நடிகையின் கடுப்பு

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தன்னைப் பற்றியும், தன் அழகைப் பற்றியும் பேசிய அந்த ‘மி' நாயகி மீது செம கடுப்பில் இருக்கிறாராம் இடுப்பு நடிகை.

இடுப்பே இல்லாத அந்த நடிகை அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து பட வாய்ப்பை பெற்று வருகிறார். டோலிவுட், பாலிவுட் பட உலகில் வாய்ப்பை பெற படாத பாடு பட்டு வரும் நிலையில் இப்படி ஒரு ஸ்டேட்மென்ட் வந்தால் எப்படி இருக்கும்.

அவ மட்டும் என்கையில் கிடைக்கட்டும் அவளை நான் ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறாராம்.

அப்படி என்னதான் சொன்னார் அந்த நடிகை என்று கேட்கிறீர்களா? மேக் அப் இல்லாமல் இவரை பார்க்கவே முடியாது என்று நீங்கள் கூறும் நடிகை யார் என்று அந்த ‘மி' நடிகையிடம் கேட்டதற்கு சட்டென்று யோசிக்காமல் இடுப்பில்லாத அந்த நடிகைதான் கையில் மேக் அப் கிட்டோடு அலைந்து கொண்டிருக்கிறார் என்று கூறிவிட்டார்.

அழகுக்கும் அவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்றும் கூறிவிட்டார். தனது வாய்ப்புகளை தட்டி பறித்த இடுப்பு நடிகையை இப்படி போட்டு பதம் பார்த்து விட்டார் ‘மி' நடிகை. இதனால் இப்போது இடுப்பு நடிகையின் கடுப்புக்கு ஆளாகியுள்ளார்.

இத்தனை நாளாய் இடுப்புதான் இல்லை என்று நினைத்தோம் அழகும் இல்லையாமே... ஓவர் மேக் அப் உடம்புக்கு ஆகாது பெண்ணே என்கின்றனர் ரசிகர்கள்.

 

கப்பல் பட இயக்குநருடன் கைகோர்க்கிறார் உதயநிதி ஸ்டாலின்

கப்பல் என்ற காமெடிப் படம் தந்த கார்த்திக் ஜி கிரீஷுடன் அடுத்து இணையவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கப்பல்'. இயக்குநர் ஷங்கரின் உதவியாளராக இருந்த கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கினார். ஷங்கரே இந்தப் படத்தை வெளியிட்டார்.

கப்பல் பட இயக்குநருடன் கைகோர்க்கிறார் உதயநிதி ஸ்டாலின்

இதில் வைபவ் நாயகனாகவும், சோனம் பஜ்வா நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியிருந்தது.

கார்த்திக் கிரீஷின் அடுத்த படத்தில் உதயநிதி நடிக்கப் போவதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்ததில், உதயநிதியை சந்தித்து தனது அடுத்த கதையை கூறினாராம் கார்த்திக் கிரிஷ். கதை பிடித்துப் போகவே உடனே நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். இந்தப் படமும் காமெடி - காதல் கதைதானாம்.

உதயநிதி நடிப்பில் தற்போது ‘நண்பேன்டா' படம் வெளிவர காத்திருக்கிறது. மேலும் திருகுமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வரும் பெயரிடாத படத்திலும், ‘இதயம் முரளி' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

 

பொங்கலுக்கு முன் லிங்கா வசூல் விவரங்களை வெளியிட தயாரிப்பாளர் முடிவு

பொங்கல் பண்டிகைக்கு முன் ரஜினியின் லிங்கா படத்தின் வசூல் விவரத்தை வெளியிட அதன் தயாரிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர் முடிவு செய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 12-ம் தேதி வெளியான லிங்கா திரைப்படம் பெரும் வசூலைக் குவித்தது. ஆனால் அதனை அந்தந்த ஏரியாக்களில் வாங்கி வெளியிட்டவர்கள் பொய்யான கணக்குகளைக் காட்டி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி வருகின்றனர்.

பெங்களூர் நகரில் இந்த மோசடி அம்பலமானது. ஆனால் தமிழகத்தில் இதுபற்றி யாரும் கவலைப்படவில்லை.

பொங்கலுக்கு முன் லிங்கா வசூல் விவரங்களை வெளியிட தயாரிப்பாளர் முடிவு

லிங்கா படம் வெளியான முதல் நாளில் சென்னையின் சில அரங்குகளில் ரூ 1000 வரை விலை நிர்ணயித்து டிக்கெட் விற்றனர். முதல் நாள் எட்டு காட்சிகளும், அடுத்த இரு தினங்கள் ஆறு காட்சிகளும் திரையிட்டு பெரும் வசூலை அள்ளினர். முழு வரிவிலக்கு வேறு.ஆனால் இவர்கள் காட்டிய கணக்கில் டிக்கெட் விலை ரூ 10, 40, 85, 120 என்று குறிப்பிட்டிருந்தனர்.

தமிழகத்தின் பிற பகுதிகளில் முதல் நாள் ஆறு ஷோக்களும், அடுத்த இரு தினங்களில் 5 ஷோக்களும் திரையிட்டனர். மூன்று நாட்களும் அரங்குகள் நிரம்பி வழிந்தன. இவற்றை இந்த முறை வீடியோ எடுத்து வைத்துள்ளதாகக் கூறுகின்றனர் அந்தந்த பகுதி ரஜினி மன்ற நிர்வாகிகள்.

இங்கெல்லாம் டிக்கெட் விலை சராசரியாக ரூ 250 முதல் ரூ 300 வரை வைத்து விற்றனர். ஆனால் காட்டிய கணக்கு ரூ 10 மற்றும் 40 மட்டுமே. பிற பகுதியில் உள்ள மால்களில் ரூ 10, 120 டிக்கெட்டுகள் மட்டும் கணக்கில் காட்டப்பட்டுள்ளன.

சென்னையில் சத்யம் குழும அரங்குகள், ஐநாக்ஸ், லக்ஸ் தவிர்த்த பிறவற்றில் டிக்கெட் விலை ரூ 250 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஸ்நாக்ஸுக்கும் சேர்த்து இந்த கட்டணம் என்று கூறி விற்றனர்.

இப்போது நஷ்டம் என்று கூறும் எந்த விநியோகஸ்தர் - தியேட்டர் உரிமையாளரும் உண்மையாக வசூலித்த தொகைக்கான கணக்கை காட்டவே இல்லை என்கிறது தயாரிப்பாளர் தரப்பு.

வெளியில் இவர்கள் லிங்காவுக்கு எதிராக செய்து வரும் பிரச்சாரம் மீடியாவில் பெரிதுபடுத்தப்படுவது ரஜினி ரசிகர்களை பெரிதும் பாதித்துள்ளது. எனவே லிங்கா வசூல் குறித்த உண்மை நிலவரத்தை அறிவித்து, எதிர்ப்பாளர்களை வாயடைக்க வேண்டும் என்று லிங்கா தயாரிப்பாளர் மற்றும் ஈராஸ் நிறுவனத்தைக் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து ஈராஸ் தரப்பில் நாம் விசாரித்தபோது, 'சினிமாவில் எந்தப் படத்தின் வசூலையாவது முழுவதுமாக வெளியில் சொல்லியிருக்கிறார்களா... கிடையாது. ஆனால் லிங்காவுக்கு மட்டும் இந்த நெருக்கடியைத் தருகிறார்கள். இந்தப் படத்துக்கு எதிராகப் பேசுவோர் நிச்சயம் உண்மையான வசூல் விவரங்களைத் தரமாட்டார்கள். எனவே நாங்கள் சேகரித்த தகவல்களின் அடிப்படையில், பொங்கலுக்கு முன் வசூல் விவரங்களை அறிவிக்கப் போகிறோம்," என்றனர்.

 

சென்சாராகியும் வெளிவர முடியாமலிருக்கும் படங்களை சிடியாக வெளியிடும் சேரன்!

சென்சார் சான்றிதழ் பெற்ற பிறகும் ரிலீசாக முடியாமல் தவிக்கும் 400-க்கும் மேற்றட்ட படங்களை வாங்கி சிடியாக வீடுகளுக்கே சப்ளை செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் சேரன்.

சினிமா டு ஹோம் என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் சேரன். தனது 'ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தை இதன் மூலம் ரிலீஸ் செய்கிறார். இத்திட்டம் மூலம் வீடுகளுக்கு நேரடியாக இந்த படத்தின் சி.டி.க்கள் நல்ல ஒலித்தரத்துடன் சப்ளை செய்யப்பட உள்ளன. ஒரு சி.டி. விலை ரூ. 50.

சென்சாராகியும் வெளிவர முடியாமலிருக்கும் படங்களை சிடியாக வெளியிடும் சேரன்!

பொங்கலையொட்டி வருகிற 14-ந் தேதி படம் வெளியாகிறது. அன்றைய தினம் முதல் நாள், முதல் காட்சியாக வீடுகளில் இந்த படத்தை பார்க்கலாம் என்று சேரன் அறிவித்து உள்ளார். உலகம் முழுவதும் 50 லட்சம் சி.டி.க்கள் வீடுகளில் விநியோகிக்கப்படும் என்றும், அவர் கூறியுள்ளார்.

தன் படம் மட்டுமல்லாது, சென்சாராகி வெளியில் வராமல் உள்ள 460 படங்களில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து வாராவாரம் சிடியாக வெளியிடப் போகிறாராம் சேரன்.

இந்தப் படங்களில் முடங்கிக் கிடக்கும் சுமார் ரூ 700 கோடி ரூபாயை சேரனின் சி2எச் மூலம் திரும்பப் பெற முடியுமா... பார்க்கலாம்!

 

விஜய்யின் புலி பட உரிமையை வாங்கியது ராம நாராயணன் நிறுவனம்

விஜய்யின் 58வது படமான புலியின் சென்னை மற்றும் என்எஸ்ஸி விநியோக உரிமையை வாங்கியுள்ளது மறைந்த ராம நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்.

சிம்பு தேவன் இயக்கும் இந்தப் படத்தை ஷிபு தமீம்ஸ், பி.டி.செல்வகுமார் ஆகியோர் தயாரிக்கிறார்கள். கதாநாயகிகளாக சுருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். நடராஜ் சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

விஜய்யின் புலி பட உரிமையை வாங்கியது ராம நாராயணன் நிறுவனம்

முதல் கட்ட படப்பிடிப்பு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மிகப்பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு 30 நாட்களாக நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு மைசூர் அரண்மனையில் நடைபெற உள்ளது.

புலி படத்தின் சென்னை மற்றும் என்.எஸ்.சி ஏரியாக்களின் உரிமைகளை மறைந்த இயக்குனர் ராம.நாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியுள்ளது. அரண்மனை, பிசாசு போன்ற படங்களின் விநியோக உரிமையும் இந்த நிறுவனத்துக்கத்தான் தரப்பட்டது நினைவிருக்கலாம்.

மற்ற பகுதிகளின் விநியோக உரிமையை பெரும் விலைக்குப் பேசி வருகின்றனர்.