சினிமா மற்றும் டெலிவிஷன் படங்களை தயாரிப்பேன் - சிம்ரன்

http://www.kollywoodimages.com/wp-content/uploads/2010/11/simran-13.jpg
Also Read
Simran is back in Chennai
Simran Latest Stills, Simran Latest Pictures, photos, images new stills

சென்னை:  சென்னையில் நிரந்தரமாக குடியேறி, சினிமா மற்றும் டெலிவிஷன் படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறேன் என்று நடிகை சிம்ரன் கூறினார். அமரன், இதய தாமரை, கோவில்பட்டி வீரலட்சுமி ஆகிய படங்களை டைரக்ட் செய்தவர்  கே.ராஜேஷ்வர். இவர், திடீர்நகரில் ஒரு காதல் கானா என்ற புதிய படத்தை டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில், அவருடைய மகன் ரஞ்சன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.படத்தின் தொடக்க விழாவிற்கு நடிகை சிம்ரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில் கே.ராஜேஷ்வர் தமிழ் சினிமாவின் சிறந்த டைரக்டர் மட்டுமல்ல. சிறந்த திரைக்கதை ஆசிரியர். சிறந்த வசனகர்த்தா. அவருடைய டைரக்ஷனில் உருவான கோவில்பட்டி வீரலட்சுமி படத்தில் நான் நன்றாக நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார் என்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், நான், தமிழில் சொந்தமாக சினிமா மற்றும் டெலிவிஷன் படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறேன். மும்பையில் இருந்துகொண்டு இந்த வேலைகளை செய்ய முடியாது என்பதால், சென்னைக்கு வந்துவிட்டேன். இங்கே நான் நிரந்தரமாக குடியேறப்போகிறேன். இதற்காக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சொந்தமாக வீடு மற்றும் அலுவலகம் கட்டி வருகிறேன். கட்டுமானப்பணிகள் இப்போது நடைபெறுகின்றன. இன்னும் 2 மாதங்களில் அந்த வேலைகள் முடிவடைந்துவிடும். அடுத்த வருட ஆரம்பத்தில், சினிமா மற்றும் டெலிவிஷன் பட தயாரிப்பு பணிகளை தொடங்கி விடுவேன்.மீண்டும் நடிப்பேன். நல்ல கதையும், கதாபாத்திரங்களும் அமைந்தால் நடிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். கே.ராஜேஷ்வர் டைரக்ட் செய்யும் புதிய படம் ஒன்றில் நடிக்க சம்மதித்து இருக்கிறேன். என்றார்.
 

ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் கமல் நடிப்பது உண்மையா?

Kamal
ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் நடிப்பதாக வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றார் நடிகர் கமல்ஹாஸன்.
ஷங்கர் தற்போது இந்தியில் ஹிட்டான 3 இடியட்ஸ் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் வேலையில் மும்முரமாக உள்ளார். விஜய் உள்ளிட்ட 3 பேர் நாயகன்களாக நடிக்கின்றனர்.
இந்த படம் முடிந்ததும் ரூ.500 கோடி பட்ஜெட்டில் ரஜினி, கமல் நடிக்கும் படத்தை ஷங்கர் துவங்குவார் என்றும் செய்திகள் பரவின. இது கல்கியின் பொன்னியின் செல்வனை மையப்படுத்தி எடுக்கப்படுவதாகவும், ரஜினி வந்தியத் தேவன் பாத்திரத்தில் நடிப்பார் என்றும் செய்தி பரவியது.
சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த செய்தியை சன் நெட்வொர்க் பத்திரிகைகள் மற்றும் இணையதளத்திலும் வெளியிடவே, இதனை உண்மையாக இருக்கும் என்றே நம்பிவிட்டனர் பல ரசிகர்களும்.
ஆனால் சம்பந்தப்பட்ட யாரும் இதுபற்றி வாயே திறக்கவில்லை.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் கமல்ஹாஸனிடம் நிருபர்கள் இதுபற்றிக் கேட்டதற்கு அவர் அளித்த பதில்:
“ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினியும், நானும் நடிக்கிறோம் என்றும், அதன் பட்ஜெட் ரூ 500 கோடி என்றும் நீங்கள் சொல்லித்தான் எனக்கும் தெரியும். அது பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை. ஷங்கரிடம் இருந்து அதுபோன்று ஒரு படத்தில் நடிக்க அழைப்பும் வரவில்லை,” என்றார்.
 

இலங்கையின் 83 ‘பலான’ நடிக -நடிகையருக்கு கிடுக்கிப் பிடி!!

http://brandimposter.com/wp-content/uploads/2010/11/sri-langka.jpg
கொழும்பு: இலங்கையில் செக்ஸ் படங்களில் நடிக்கும் 83 நடிகர் நடிகைகளை கைது செய்யும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளனர் போலீசார்.
செக்ஸ் படங்களில் நடிப்பவர்கள் என அறியப்பட்ட நடிகர் நடிகைகளின் படங்களை பத்திரிகைகளில் விளம்பரங்களாக வெளியிட்டும், பொது இடங்களில் நோட்டீஸ் ஒட்டியும் அடையாளம் காட்டி கைது செய்யுமாறு கொழும்பு கோர்ட் கடந்த நவம்பர் 4-ம் தேதி உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இலங்கை போலீசார், செக்ஸ் நடிகர் – நடிகைகள் 83 பேரின் புகைப்படங்களை முக்கிய நாளிதழ்களில் விளம்பரங்களாக வெளியிட்டு, தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.
இவர்களின் படங்கள் முக்கிய இடங்களிலும் போஸ்டர்களாக ஒட்டப்பட்டுள்ளன.
இந்தப் புகைப்படங்களை பல்வேறு ஆபாச இணையதளங்களிலிருந்து இலங்கை போலீசார் எடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட நடிக – நடிகையர் கைது செய்யப்பட்டால், அவர்களுக்கு ஆபாச தடுப்புச் சட்டப்படி 6 மாதங்கள் தண்டனை கிடைக்கும்.
இதே போல, 100க்கும் மேற்பட்ட இலங்கை ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
 

நான் ரெடி!அஜீத் வரட்டும்! : விஷ்ணு-

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


அஜீத் மங்காத்தா படத்தை முடிப்பதற்குள் விஷ்ணுவர்தன் பில்லா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகி விடுவாராம். அதற்காக தன் உதவி இயக்குநர்களுடன் அமர்ந்து ஒரு மாதிரியாய் கதையை ரெடி பண்ணிவிட்டாராம் விஷ்ணுவர்தன். இதுமட்டும் இல்லாமல் யுவன் சங்கரிடம் முதல் படத்தைவிட, ஸ்டைலான, இளமைத் துள்ளலான இசை வேண்டும் என்று சொல்லி வைத்துவிட்டாராம் விஷ்ணுவர்தன்.


Source: Dinakaran
 

விமல் நடிக்கும் எத்தன்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


'களவாணி' படத்தை உருவாக்கிய ஷேரலி பிலிம்ஸ் நசீர், அடுத்து தயாரிக்கும் படம் 'எத்தன்'. இதில் விமல், சனுஷா ஜோடி. மற்றும் சிங்கப் புலி, மயில்சாமி, ஜெயப்பிரகாஷ், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், பிரகதி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ரமேஷ். இசை, தாஜ்நூர். பாடல்கள்: நா.முத்துக்குமார், கபிலன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி சுரேஷ் இயக்குகிறார்.


Source: Dinakaran
 

வெளிநாட்டில் மட்டும் ஷூட்டிங் நடக்கும் அஜீத் படம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


சமீபத்தில் வெளிவந்த அஜீத்தின் பில்லா மற்றும் அசல் படங்களின் பாதி ஷூட்டிங் மலேசியா, பாரீஸ், துபாய் என வெளிநாடுகளில் தான் நடந்தது. அது என்னக் காரணமோ தெரியல அவரது இயக்குநர்களும், வெளிநாடுகளில் தான் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். வெங்கட் பிரபு இயக்கும் மங்காத்தா படமும் பாங்கா‌க்கில் தான் நடைபெறுகிறது. பாங்கா‌க் படப்பிடிப்புக்காக வெங்கட்பிரபு உள்ளிட்ட படப்பிடிப்புக் குழு தற்போது பாங்காங் சென்றுள்ளது. அங்கு சில வாரங்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.


Source: Dinakaran
 

தயாரிப்பாளராகும் விஷால்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


தற்போது இயக்குனர்கள் ஹீரோவாகவும், ஹீரோ தயாரிப்பாளர்களாகவும் மாறி வருகின்றனர். ஆர்யாவை தொடர்ந்து விஷாலும் படம் தயாரிக்கும் திட்டத்தை தொடங்கயிருக்கிறார். வழக்கமாய் அவரது அண்ணன் விக்ரம் கிருஷ்ணா படங்கள் தயாரிக்க, நடிக்க மட்டுமே செய்து வந்த விஷால், திடீரென ஒரு லவ் த்ரில்லர் படமொன்றைத் தயாரிக்கும் முடிவுக்கு வந்துள்ளார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் நாயகன் விஷால் இல்லை. நகுலன் மற்றும் மனோஜ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை, விஷாலை வைத்து தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தை இயக்கிய திரு இயக்குகிறார்.


Source: Dinakaran
 

வடிவேலுவிடம் சுந்தர்.சி சரண்டர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


சுந்தர்.சி, ஜோதிர்மயி நடித்த படம் ‘தலைநகரம்’. இதன் இரண்டாம் பாகமாக ‘நகரம் மறுபக்கம்’ படத்தை நடித்து, இயக்கி வருகிறார் சுந்தர்.சி. முன்பெல்லாம் சுந்தர்.சி இயக்கும் படங்களில் காமெடி அசத்தலாக இருக்கும். கவுண்டமணி, வடிவேலு என்ற அவருடைய காம்பினேஷன் வெற்றி கூட்டணியாக மாறியது. சுந்தர்.சி இயக்கிய கி‌ரி, வின்னர் படங்களாகட்டும், நடித்த தலைநகரமாகட்டும்… இவை வெற்றி பெற்றதற்கு கதையைவிட, ஆ‌க்சனைவிட, காதலைவிட வடிவேலுவின் காமெடிதான் காரணம். சின்ன மனஸ்தாபத்தில் இருவரும் பி‌ரிந்த பிறகு வடிவேலுவின் இடத்தை விவேக் பிடித்துக் கொண்டார்.
சமீபத்தில் அவரது படங்களில விவேக் காமெடி எடுபடவில்லை, இதனால் யோசித்த சுந்தர்.சி மீண்டும் வடி«லுவிடம் சரண் அடைந்துள்ளார். தலைநகரத்தில் நாய் சேகராக வந்த வடிவேலு இந்த படத்தில் ஸ்டைல் பாண்டி-யாக வருகிறார். வடிவேலு‌வின் ‌ரிட்டர்ன் காரணமாக சுந்தர்.சி இனி விவேக் பக்கம் திரும்புவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்…


Source: Dinakaran
 

சீயானுடன் இணையும் அமலா பால்

Amala Paul
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்துள்ள புதுமுக நடிகை அமலா பால் படு வேகமாக உயரத்திற்கு வந்துள்ளார். முன்னணி நாயகர்களுடன் இணை சேரும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.
சிந்துசமவெளி படத்தில் அனகா என்ற பெயரில் நடித்தவர் இந்த அமலா பால். ஆனால் சிந்து சமவெளி படம் கடுமையான விமர்சனத்திற்குள்ளானால் ராசி பார்த்து மறுபடியும் அமலா என்ற ஒரிஜினல் பெயருக்கே வந்து விட்டார்.
அறிமுகமான புதிதிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்திருக்கிறார் அமலா பால்.
சீயான் விக்ரமுடன் தெய்வமகன் படத்தில் அவருக்கு ஜோடியாகநடிக்கப் போகிறாராம் அமலா பால். விக்ரமுடன் இணைவது குறித்து பெரும் மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கிறார் அமலா.
இதுதவிர மேலும் நான்கு படங்களும் அவருக்கு வந்துள்ளதாம். நான்குமே முன்னணி இளம் நாயகர்கள் படமாம். கதை பிடித்துப் போய் விட்டதால் இவற்றை ஒப்புக் கொண்டுள்ளாராம். அடுத்தடுத்து இந்தப் படங்கள் வெளியாகும் என்பதால் பூரிப்புடன் இருக்கிறார்.
அமலா சத்தமே போடாமல் முன்னணிக்கு வருவதைப் பார்த்து தற்போது அந்த இடத்தில் உள்ள சில நடிகைகள் டென்ஷனாகி வருவதாக கூறப்படுகிறது.
 

சீமானுடன் திரையுலகினர் சந்திப்பு!

Seeman
வேலூர் சிறையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ள இயக்கநர் சீமானை தமிழ் திரையுலக இயக்குநர்கள் நேற்று சந்தித்துப் பேசினர்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட சீமான், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிறையில் உள்ள சீமானை நடிகர் சத்யராஜ், இயக்குநர் சஹ்க நிர்வாகி ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தரராஜன், விக்ரமன், செல்வபாரதி, அமீர், கௌதமன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். சுமார் ஒரு மணி நேரம் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர்.
அப்போது பேசிய நடிகர் சத்யராஜ், “நாங்கள் சீமானின் நண்பர்கள். அந்த அடிப்படையில் மட்டுமே அவரைச் சந்தித்தோம். சீமான் கலங்கவில்லை. தைரியமாகவும், ஆரோக்கியமாவும் உள்ளார். இதற்கு முன்பு கோவை மற்றும் மதுரை சிறையில் சீமான் இருந்த போது, நட்பு ரீதியிலும், இன உணர்வாளர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் பார்த்துள்ளோம். இது அரசியல் நோக்கம் கொண்டதல்ல,” என்றார்.
 

சூதாட்டத்தில் பணத்தை இழந்த த்ரிஷா!

Trisha
அம்மா பேச்சைக் கேட்காமல் சூதாட்டம் ஆடி பணத்தை இழந்தேன் என்று கூறியுள்ளார் நடிகை த்ரிஷா.
சமீபத்தில் தோழிகளில் பெட்டிங் வைத்து சூதாட்டம் ஆடினாராம் த்ரிஷா. இந்த விளையாட்டு வேண்டாம் என்று அவரது அம்மா உமா சொல்லியும் கேட்காமல் ஆடினாராம். இதில் அவர் ஒரு முறை கூட ஜெயிக்காமல் பணத்தை இழந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பணம் வைத்து சூதாடுவது தவறு என்று சிறுவயதிலேயே அம்மா அடிக்கடி சொல்வாங்க. எக்காரணம் கொண்டும் பணம் வைத்து சூதாடக் கூடாது என்று என்னிடம் உறுதிமொழியும் வாங்கியிருந்தார்.
ஆனா நான் இன்னும் குழந்தையில்லையே… விவரம் தெரிந்த வயது என்பதால் ஆர்வத்தில் ஒருமுறை ஆடித்தான் பார்ப்போமே என்று சூதாட்டத்தில் இறங்கினேன். இன்னொன்று என் தோழிகள் எல்லோருமே பெட்டிங் ஆடுவதில் கில்லாடிகள். அதனால் எனக்கும் அதுபோன்று ஆட ஆசை வந்தது.
சமீபத்தில் தோழிகளுடன் பெட்டிங் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டேன். எல்லா ஆட்டங்களிலும் தோழிகளே ஜெயித்தனர். நான் அதிக பணத்தை இழந்து நஷ்டப்பட்டேன்.
அப்போதுதான் அம்மா எதற்காக பணம் கட்டி சூதாடக்கூடாது என்று தடுத்தார் என்பது புரிந்தது. இனிமேல் ஒருபோதும் பணம் வைத்து சூதாடுவதில்லை என்று சபதமே செய்துவிட்டேன்…” என்றார்.
 

காதலுக்கு தடை? - நடிகர் விஜயகுமார் மீது மகள் வனிதா திடீர் புகார்!

Vanitha
காதலுக்கு தடையாக இருக்கும் அப்பா விஜயகுமார் மீது அவரது மகளும் நடிகையுமான வனிதா, போலீசில் திடீர் புகார் கொடுத்துள்ளார்.
மாணிக்கம், சந்திரலேகா உள்பட சில படங்களில் நடித்தவர் வனிதா. டிவி நடிகர் ஆகாஷை காதலித்து மணந்தார். பின்னர் கருத்து வேறுபாடால் விவாகரத்து பெற்றனர்.
தற்போது தனது 2 குழந்தைகளுடன் வனிதா தனியாக வசித்து வருகிறார்.
சமீபத்தில் தீபாவளிக்காக குழந்தைகளுடன் தந்தை வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு குழந்தைகளுடன் புறப்பட வனிதா தயாரானபோது, குழந்தைகளை அனுப்ப விஜயகுமார் மறுத்துவிட்டாராம்.
இதனால் வனிதாவுக்கும் விஜயகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விஜயகுமார் மீது மதுரவாயல் போலீசில் வனிதா புகார் அளித்தார்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் குழந்தைகளை அனுப்பி வைக்க விஜயகுமார் சம்மதித்தார்.
இந்த தகராறுக்கு உண்மையான காரணம், தொழிலதிபர் ஒருவரை வனிதா காதலிப்பதாகவும், அதற்கு விஜயகுமார் தடையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

விருந்து மழையில் நனையும் 'மைனா'

Vidhaarth and Anaka
பெருவாரியான பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கும் மைனா திரைப்படக் குழுவினர் இப்போது புதுமணத் தம்பதிகளைப் போல விருந்து நிகழ்ச்சிகளுக்கு உற்சாகமாகப் போய்க் கொண்டிருக்கின்றனராம்.
தீபாவளிக்கு வந்த மைனா படம் பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் வந்த நல்ல படங்களில் முதன்மையானது என்ற பெயரையும் அது வாங்கியுள்ளது. படத்தை வாங்கிய உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் பாலா என பல தரப்பினரின் பாராட்டுக்களை முதலிலேயே வாங்கி விட்டது மைனா. உச்சமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இப்படத்தை வாயார பாராட்டியுள்ளார். இப்படத்தில் நடிக்காமல் போய் விட்டேனே என்று வருத்தமும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விருந்து நிகழ்ச்சிகளில் திக்கித் திணறிக் கொண்டிருக்கிறதாம் மைனா படக் குழு.
இயக்குநர் பாலா மைனா படக் குழுவினரை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து விருந்து படைத்து உற்சாகப்படுத்தி, தானும் மகிழ்ந்திருக்கிறார். அத்தோடு நில்லாமல் அத்தனை பேரோடும் நின்று ஒரு போட்டோவும் எடுத்துக் கொண்டார்.
மிகச் சிறந்த படைப்பாக உருவாகியுள்ளது மைனா என்று இயக்குநர் பிரபு சாலமன், நடிகர்கள் விதார்த், தம்பி ராமையா, நாயகி அமலா பால் என அனைவரையும் பாராட்டித் தள்ளியுள்ளார் பாலா.
இந்த நிலையில் இன்னொரு வித்தியாசமான விருந்து நிகழ்ச்சி மைனாவைத் தேடி வந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட் மூட்டை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர், டைரக்டர் பிரபுசாலமனிடம் போனில் பேசி, விருந்துக்கு அழைத்துள்ளார்.
இந்த அழைப்பை மைனா குழுவும் ஏற்று வருகிற 18ம்தேதி விருந்துக்காக கோயம்பேடு செல்கிறதாம்.
மைனாவுக்கு இப்படி அடுத்தடுத்து கிடைத்து வரும் பாராட்டுக்களையும், கெளரவங்களையும் நினைத்து தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பெரும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளாராம். சிறிய நடிகர்கள் நடித்த படமாச்சே என்று யோசிக்காமல், நல்ல படம் என்று நினைத்து வாங்கியது மிகச் சரியான முடிவு என்று உதயநிதிக்கும் பாராட்டுக்கள் குவிகிறதாம்.