"தல" இப்போ டாக்ஸி டிரைவர்!

சென்னை: நிஜ மெக்கானிக் ஆன நம்ம தல இப்போ நடிக்கிற புதிய படத்துல டாக்ஸி டிரைவரா நடிக்கிறாராம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப் பிடிப்பு மே மாதம் 7ம் தேதி தொடங்கி இடைவிடாமல் நடந்து வருகிறது.

Ajith to play as a taxi driver he’s next movie

இந்த படத்திலும் சால்ட் அண்ட் பேப்பர் லுக்கா என்று ரசிகர்கள் ஏமாற்றமடைந்தாலும் இந்த படத்தில் அஜித் டாக்ஸி டிரைவராக வருவது ரசிகர்களுக்கு புதிய செய்தியே.

கதைப்படி கொல்கத்தாவில் டாக்ஸி ஓட்டுபவராக அஜித்தும், அவரது தங்கையாக லட்சுமி மேனனும் வருகிறார்கள். படக் காட்சிகளை வைத்துப் பார்க்கும் போது இது அஜித் - லட்சுமி மேனனின் " பாசமலர் " போன்று தோன்றுகிறது.

பாட்ஷா படத்தைப் போன்று கதை உள்ளது என்று பேச்சுக்கள் எழுந்த போதிலும் அதைப் பற்றி கவலைப்படாமல் படத்தை மும்முரமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் சிறுத்தை சிவா.

தொடர்ந்து தலய வச்சி பாசமலர் படமாவே எடுக்கறிங்களே சிவா...!

 

உள்ளே பார் ரஜினி.. 10 நிமிஷம் லேட்டானாலும் லேட்டஸ்டாக போய்ச் சேர்ந்த ஹைதராபாத் விமானம்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி இருந்ததால் சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்ற விமானம் 10 நிமிடம் தாமதமாக கிளம்பிய போதிலும் சரியான நேரத்தில் சென்றடைந்ததாக நடிகை விதியுலேகா ராமன் தெரிவித்துள்ளார்.

Flight with Rajinikanth goes faster!

தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் மஞ்சு மனோஜின் திருமணம் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் மோகன் பாபுவின் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இசைஞானி இளையராஜா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

திருமணத்தில் கலந்து கொள்ள ரஜினியும், இளையராஜாவும் நேற்று சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானம் மூலம் சென்றனர். அந்த விமானத்தில் நடிகை விதியுலேகா ராமனும் பயணம் செய்தார். விமானம் சென்னையில் இருந்து 10 நிமிடங்கள் தாமதமாக கிளம்பிச் சென்றது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் ஹைதராபாத்தை அடைந்தது.

இது குறித்து விதியுலேகா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

10 நிமிடம் தாமதாக கிளம்பியும் நான் சென்ற விமானம் கூடுதல் வேகமாக சென்றதற்கு காரணம் விமானத்தில் சூப்பர் ஸ்டார் இருந்தது தான். அவருக்கு அருகில் இளையாராஜா சார் என்று தெரிவித்துள்ளார்.

 

பாகுபாலி 4 மணி நேரப் படமாமே....!

ஹைதராபாத்: பாகுபாலி படத்தை எல்லாருமே ஆர்வமா எதிர்பார்த்துட்டு இருக்கற இந்த நேரத்தில படம் மொத்தம் 4 மணி நேரம் 40 நிமிஷம்னு வந்த நியூஸ்ஸப் பாத்து எல்லாரும் அப்படியே ஷாக் ஆகிட்டாங்க.

படம் 4 மணி நேரம் 40 நிமிஷம் அப்படிங்கிறது உண்மைதான் ஆனா படம் 2 பார்ட்டா வெளி வரப் போகுதாம். அதாவது முதல் பார்ட் 2 மணி நேரமும் ரெண்டாவது பார்ட் 2மணி நேரம் 40 நிமிஷமாம்.

Baahubali movie runs more than 4 hours

இயக்குனர் ராஜ மவுலி முதல் பார்ட்டை ரிலீஸ் செய்துவிட்டு இரண்டாம் பாகத்தை அடுத்து ரிலீஸ் செய்ய இருக்கிறாராம். இரண்டாம் பாகத்தில் இன்னும் சில காட்சிகள் எடுக்கப் படவேண்டி இருக்கிறதாம், அதனை முடித்து விட்டுத் தான் அடுத்த பாகத்தை ரிலீஸ் செய்வாராம்.

இவ்வளவு நாளா வெறும் போஸ்டர மட்டும் பார்த்துகிட்டு இருந்த ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல செய்திதான்!

 

கல்யாண சமையல் சாதம் இந்தி ரீமேக்.. ஸ்ருதி ஹாஸன் - இம்ரான் கான் ஜோடி சேர்கிறார்கள்

தமிழில் வெளியான கல்யாண சமையல் சாதம் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.

பிராமண வீட்டு திருமணத்தின் பின்னணியில் உருவான காதல் கதை கல்யாண சமையல் சாதம். இதில் பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடித்திருந்தனர்.

ஆர் எஸ் பிரசன்னா இயக்கியிருந்தார். இந்தப் படம் இரு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் ரீமேக் ஆகிறது. படத்தைத் தயாரிப்பவர் ஆனந்த் எல் ராய். தனுஷ் நடித்த முதல் இந்திப் படமான ராஞ்ஜனாவை இயக்கியவர்.

Shruthi - Imran Khan in the remake of Kalyana Samayal Sadham

இவர் தயாரிக்கும் முதல் படம் இது.

இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாஸன் நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இம்ரான் கான் நடிக்கவுள்ளார்.

இந்த ரீமேக்கில் ஆனந்த் எல் ராயின் பணி, படத் தயாரிப்பு மட்டுமே. தமிழில் இயக்கிய அதே ஆர்எஸ் பிரசன்னாதான் இந்தி ரீமேக்கையும் இயக்குகிறார்.

 

தயாரிப்பாளர் அய்யப்பன் மரணம்

சென்னை: தமிழ் சினிமா தயாரிப்பாளர் அய்யப்பன் (47) மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.

பல வருடங்களாகவே சர்க்கரை நோயால் அவதிப் பட்டு வந்த அய்யப்பன் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Film producer  Ayappan  dies

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் திடிரென்று ஏற்பட்ட மாரடைப்பு அவரது உயிரைப் பறித்து விட்டது. சாருலதா, பொம்மாயி, பேத்தி சொல்லைத் தட்டாதே உள்பட பல படங்களின் தயாரிப்பாளரான இவர் 50க்கும் அதிகமான படங்களின் விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்த அய்யப்பனின் உடல் அவரது சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று அவரது இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.

 

இந்தி "ஜிகர்தண்டா" தயாரிப்பாளர்- இயக்குனர் இடையே திடீர் மோதல்!

சென்னை: 2014ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற ஜிகர்தண்டா படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவிருந்த நிலையில் தற்போது சிலபல பஞ்சாயத்துக்கள் படத்தின் இயக்குனருக்கும் தயாரிப்பளருக்கும் இடையே எழுந்துள்ளது.

ஜிகர்தண்டா படம் தயாரித்த போதே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கும் தயாரிப்பாளர் கதிரேசனுக்கும்இடையே முட்டலும் மோதலுமாக இருந்தது படத்திற்கு யூ சர்டிபிகேட் வேண்டுமென்றால் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று சென்சாரில் சொன்னபோது அறவே முடியாது என்று மறுத்து விட்டார் கார்த்திக்.

jigarthanda

யூ சர்டிபிகேட் கிடைக்காததால் வரிவிலக்கில் கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் லாபம் போய்விட்ட வருத்தத்தில் இருந்த தயாரிப்பாளர் கதிரேசன் தற்போது அதற்கு பழிவாங்கி விட்டார்.

ஹிந்தி பட ரீமேக் உரிமையை கார்த்திக் சுப்புராஜிற்கு தெரியாமல் சில கோடி ரூபாய்க்கு விற்று விட்டார். இதைத் தெரிந்து கொண்ட கார்த்திக் அதில் 40% ராயல்டி கேட்க, தர முடியாது என்று தகராறு செய்கிறாராம் தயாரிப்பாளர்.

படத்தின் கதை கார்த்தியுடையது எனவே அவருக்கு தெரியாமல் படத்தை விற்க முடியாது, விற்றாலும் அவருக்கு உள்ள ராயல்டியானது கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும் என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்பாக இயக்குனர்கள் சங்கத்தில் புகார் செய்திருக்கிறாராம் கார்த்திக் விரைவில் இது தொடர்பாக பஞ்சாயத்து நடக்கலாம் என்று கோலிவுட்டில் சொல்கின்றனர்.

 

மோகன் பாபு மகன் திருமண விழாவில் ரஜினி!

ரஜினிக்கும் மோகன் பாபுவுக்கும் உள்ள நெருக்கமான நட்பு நாடறிந்தது. இருவர் வீட்டிலும் ஏதாவது ஒரு விசேஷம் என்றால் குடும்பத்துடன் நேரில் கலந்து கொண்டு பரஸ்பரம் வாழ்த்துவார்கள்.

தெலுங்கு பட உலகம் கடந்த மூன்று நாட்களாகவே திருவிழா கோலம் பூண்டிருக்கிறது. காரணம், மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் திருமணம் நடைபெறுவது தான்.

Rajini to attend Mohan Babu family marriage

மஞ்சு மனோஜ் - பிரணதி

மஞ்சு மனோஜ்- பிரணதி திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் இன்று நடக்கிறது. ஆனால், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாகவே திருமண நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கின.

சங்கீத்

திருமணத்திற்கு முன்னதாக கடந்த 17-ந் தேதி நடைபெற்ற சங்கீத் எனப்படும் நிகழ்ச்சியில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். இதில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விக்ரம் பிரபு, ஆர்யா, மற்றும் நடிகைகள் த்ரிஷா, ஹன்சிகா, ஸ்ரேயா ரெட்டி மற்றும் தெலுங்கு நடிகர்களான பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி, ராணா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ரஜினி

இந்நிலையில், இன்று மஞ்சு மனோஜ் - பிரணதி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டு சென்றுள்ளார் ரஜினி. அங்கு நடைபெறும் மஞ்சு மனோஜ் திருமணத்தில் கலந்துகொள்கிறார்.

இதற்கு முன்

இதற்கு முன்பு மோகன் பாபு வீட்டுத் திருமணத்தில் பங்கேற்ற ரஜினி, திருமண வேலைகளை கூட இருந்து செய்தார். அவருடன் ரஜினி குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

 

இறைவியில் பூஜா விலகல்... விஜயசேதுபதியுடன் ஜோடி சேரும் நடிகை அஞ்சலி!

இறைவி படத்தில் விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக ஜோடி சேரப் போகிறார் நடிகை அஞ்சலி.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் விஜய சேதுபதி, எஸ் ஜே சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Anjali to be Viajay Sethupathy's pair in Iraivi

சமீபத்தில் இந்தப் படத்தை பூஜை போட்டு ஆரம்பித்தாலும், இதுவரை நாயகி இல்லாமலேயே ஷூட்டிங்கை நடத்தி வந்தனர்.

இப்போது அஞ்சலியை படத்தின் ஒரு நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். மற்ற நாயகியை இனிமேல்தான் ஒப்பந்தம் செய்ய உள்ளனர்.

விஸ்வரூபம், உத்தம வில்லன் படங்களில் நடித்த பூஜா குமார்தான் படத்தின் நாயகி என்று கூறப்பட்டு வந்தது. இபேபோது திடீரென அவருக்கு பதில் அஞ்சலி வந்துள்ளார்.

கமல் மாதிரி பெரிய ஹீரோக்களின் படங்களில் மட்டும்தான் நடிப்பேன் என பூஜா முடிவு செய்திருப்பதாலேயே அவர் விலகியதாகக் கூறப்படுகிறது.

 

சந்தோஷ் நாராயணன் பர்த்டே பார்ட்டியில் ஜோதிகா!

சென்னை: மிக நீண்ட வருடங்கள் கழித்து நடிக்க வந்தது போல மீண்டும் பல வருடங்கள் கழித்து சினிமா தொடர்பான விழா ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகை ஜோதிகா.

கடந்த வெள்ளிகிழமை அன்று ஜோதிகா பல வருடங்கள் கழித்து மீண்டும் நாயகியாக நடித்த 36 வயதினிலே படம் வெளியானது. அதே தினம் அந்தப் படத்தின் இளம் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பிறந்த நாளாகவும் அமைந்தது.

Actress Jyothika attending  Music Director Santhosh Narayanan’s Birthday Party..

படமும், அதில் இடம் பெற்ற வாடி ராசாத்தி பாடலும் ஹிட்டாகி விட்டதால் அத்தனை பேரும் குஷியாக உள்ளனர்.

இந்த நிலையில், இரண்டு நாட்கள் கழித்து சந்தோஷ் நாராயணன் தனது பிறந்த நாள் பார்ட்டியை வைத்தார். பர்த்டே பார்ட்டிக்கு வந்த நடிகர் சூர்யா, மனைவி ஜோதிகாவையும் அழைத்து வந்திருந்தார். நீண்ட வருடங்கள் கழித்து ஜோதிகா கலந்து கொண்டதால் பலரும் ஆனந்த அதிர்ச்சி அடைந்து அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

Santhosh Narayanan's bday party!Follow us on twitter @DDSuryaJo @Suriyasfc

Posted by Jyothika Surya on Monday, May 18, 2015

மீண்டும் ஜோதிகா நடிக்க ஆரம்பித்து இருப்பதால் இனிமேல் விழாக்களில் அவரைக் காண முடியும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

பார்ட்டியில் எடுத்த போட்டோக்களை தனது பேஸ்புக் பக்கத்திலும் போஸ்ட் செய்து மகிழ்ச்சியை கொண்டாடி இருக்கிறார் ஜோதிகா.

 

ஜாக்சன் துரை... இது சரித்திர பேய்ப் படம்!

இந்தியாவின் முதல் சரித்திரப் பேய்ப் படம் என்ற அறிவிப்போடு வருகிறது ஜாக்சன் துரை.

ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் சார்ல் எம்எஸ் சரவணன் பிரமாண்டமாய் தயாரிக்கும் இந்தப் படம் இன்று படப்பிடிப்புடன் தொடங்கியது.

சிபிராஜ், பிந்துமாதவி, சத்யராஜ், கருணாகரன், ‘நான் கடவுள்' ராஜேந்திரன், இவர்களுடன் முக்கிய வேடத்தில் தமிழில் முதன் முறையாக ஹாலிவுட் நடிகர் ஜாக்கெரி அறிமுகமாகிறார்.

Jackson Durai, a horror film with the back drop of British India

ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கஞ்ஜூரிங் படத்தின் ஒப்பனை தொழில் நுட்பம் இப்படத்தில் பயன்படுத்தப்படுகிறது.

தரணிதரன் இத்திரைப்படத்தின் கதை, திரைகதை, வசனம், எழுதி இயக்குகிறார்.

ஒளிப்பதிவு யுவராஜ், இசை சித்தார்த் விபின், படத்தொகுப்பை இந்த ஆண்டின் தேசிய விருது பெற்ற விவேக் ஹர்ஷன் கவனித்துக்கொள்கிறார். முன்னணி தொழில் நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றும் இப்படத்தின் கதை, திரைக்கதை 1940 - ல் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளதால் மிகுந்த பொருள் செலவில் மிக பிரமாண்டமாக அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெறுகிறது.

Jackson Durai, a horror film with the back drop of British India

ஜாக்சன் துரை திகிலும், நகைசுவையும் கலந்த பிரம்மாண்ட படமாக உருவாகிறது என்கிறார் இயக்குநர் தரணிதரன்.

 

"டண்டணக்கா"வை விடுங்க... "பவர் ஸ்டாரின்" இந்த "டப்ஸ்மாஷை'ப் பார்த்தீங்களா....!?!

சென்னை: டப்ஸ்மாஷ் வேகமாக வந்தது.. சற்று அடங்கியிருந்தது. தற்போது மீண்டும் ஆங்காங்கே கலகலக்க வைத்து வருகிறது.

நமக்குள் இருக்கும் நடிகனை நமக்கு நாமே படம் பிடித்து வெளிக் கொணர உதவுவது இந்த டப்ஸ்மாஷின் வேலையாகும். நாம் நமது குரலில் பேச வேண்டிய அவசியமே இல்லை. பிரபலமான வசனங்களைப் பயன்படுத்தி நாம் முக பாவனை செய்தால் போதுமானது.

Powerstar dubsmash :) :)sirichae sethutuaendont miss the final touch :Phttps://www.facebook.com/pages/Nicecutevideos/1579570062298943

Posted by Nicecutevideos on Tuesday, May 19, 2015

இந்த டப்ஸ்மாஷை பலரும் காமெடியாக பயன்படுத்தி கலகலக்க வைத்து வருகின்றனர் பேஸ்புக்கில், டிவிட்டரில்.

இந்த ஜாலி விளையாட்டை பிரபலங்களும் விளையாடத் தவறவில்லை. விஷால் பேசி அசத்தினார், ராதிகா பேசிக் கலக்கினார். சூரி பேசினார். இப்போது பவர் ஸ்டாரும் தனது பவரைக் காட்டியுள்ளார் டப்ஸ்மாஷில் தனது ஸ்டைலில்.

அவர் பேசி வெளியிட்டுள்ள ஒரு டப்ஸ்மாஷ் வீடியோவில், இந்த அழகு முகத்தை அடிக்கடி பார்க்கனும் போல இருந்தது.. வந்துட்டேன் என்று சரோஜா தேவி குரல் ஒலிக்கிறது.. அந்தக் குரலை விட வந்துட்டேன் என்ற வரிக்கு பவர் கொடுத்துள்ள முக பாவனைக்குத்தான் கோடி ரூபாய் கொடுக்கனும்.. என்ன ஒரு அபிநயம்....!

 

ஐஸ்வர்யாவின் அசத்தும் "ஜஸ்பா"!

மும்பை: சுமார் 5 வருடங்கள் கழித்து நடிகை ஐஸ்வர்யாராய் நடித்து வெளிவர உள்ள ஜஸ்பா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. சிட்டிஸ்கேப் பின்னணியில் நடிகை ஐஸ்வர்யா உள்ளது போல இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் உள்ளது.

முன்னாள் உலக அழகியும் நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவியுமான நடிகை ஐஸ்வர்யா ராய் இயக்குனர் சஞ்சய் குப்தாவின் இயக்கத்தில் ஜஸ்பா என்னும் படத்தில் நடித்து வந்தார்.

'Jazbaa' First-Look Revealed: Aishwarya Rai Bachchan Thrills Fans in an Intense Avatar

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குனர் இது பெண்ணை மையப்படுத்திய படம் என்று சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார்.

படத்தில் ஐஸ்வர்யா வக்கீலாக வருகிறார், சஸ்பென்ட் ஆன போலீஸ்காரராக நடிகர் இர்பான் கான் நடித்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப் பட விழாவில் திரையிடப்பட்டது.

அக்டோபர் மாதம் 9 ம் தேதி படம் வெளியாகவுள்ளது.

 

வில்லனாக மாறிய விக்ராந்த்

சென்னை: கற்க கசடற படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் ஹீரோவாக அறிமுகமான விக்ராந்த்,தொடர்ந்து கைவசம் படங்கள் இல்லாததால் தற்போது வில்லனாக நடிக்க இருக்கிறார்.

பிரபல நடிகர் விஜயின் தம்பி (சித்தி பையன்)விக்ராந்த்.கிட்டத்தட்ட விஜய் சாயலிலேயே இருந்த விக்ராந்துக்கு விஜய் அளவுக்கு ராசி இல்லை.இவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் ஓடாத நிலையில் நடிகர் விஷால் தனது பாண்டிய நாடு திரைப்படத்தில் நல்ல ஒரு வாய்ப்பு தந்தார்.

Vikranth  Turn  Us Villain  Again

பாண்டிய நாடு படத்தில் விக்ராந்தின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் அவரை ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாரிப் பதாக விஷால் கூறி இருந்தார். அதைப் பற்றிய புதிய தகவல் எதுவும் இல்லாததால் தற்போது வில்லனாக களம் இறங்கத் தொடங்கி இருக்கிறார் விக்ராந்த்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் கெத்து படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் விக்ராந்த்.

 

சினிமாவா? ஐயோ வேண்டாம் ஆளை விடுங்க!

சினிமாவில் நடிப்பதற்காக சின்னத்திரையில் நுழைபவர்கள் மத்தியில் சினிமா வாய்ப்பு வந்தும் மறுத்து வருகிறார் அந்த தொகுப்பாளினி. புதுமையான தொலைக்காட்சியில் நட்சத்திர சந்திப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அந்த தொகுப்பாளினியை சந்தித்து விட்டு திரும்பும் நாயகர்களிடம் இருந்து வந்த அழைப்பை தவிர்த்து விட்டாராம்.

Gossips from Small screen

காரணம், நடனத்திலும் மருத்துவத்திலும் சாதிக்கவேண்டும் என்ற ஆசைதானாம். ஏனெனில் அந்த தொகுப்பாளினி ஒரு பிரபல பல் மருத்துவராக இருப்பதோடு நடனத்திலும் தேர்ச்சி பெற்றவராம்.

அதனால்தான் உலகநாயகன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை கூட மறுத்துவிட்டாராம் அந்த தொகுப்பாளினி. நடனத்தோடு இணைந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதாக உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளார் தொகுப்பாளினி.

 

நள்ளிரவில் வெளியான கமலின் காரிருளே... பாடல்!

அவம் படத்துக்காக கமல் ஹாஸன் பாடிய பாடல் ஒன்றை நேற்று நள்ளிரவில் வெளியிட்டனர்.

கௌரவ், கார்த்தி, வில்வா கிரிஷ், காவ்யா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் ‘அவம்'. இப்படத்தை விஜய் வில்வா கிரிஷ் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Kaarirule.. song in Kamal's special voice

இப்படத்திற்காக கமல் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

‘காரிருளே' எனத் தொடங்கும் அந்த பாடலை கார்க்கி எழுதியுள்ளார். இப்பாடல் பதிவு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி இந்த பாடலுக்கு அமைத்த மெட்டை வெகு அற்புதமாகப் பாடியுள்ளாராம் கமல்.

இந்த பாடல் இன்றைய காலகட்டத்தின் காதல் இழப்பையும், அதனால் ஏற்படும் வலியையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இதுவரையில் கேட்டிராத அளவுக்கு புதுமையாக கமலின் குரல் இந்தப் பாடலில் அமந்துள்ளதாம். இப்பாடலை நேற்று நள்ளிரவு 12 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டனர்.

 

ஜித்தன் ரமேஷ் படத்தில் நடிக்கிறேனா... இல்லவே இல்லை! - விஷால் மறுப்பு

ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ஜித்தன் படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் நடிப்பதாக வந்துள்ள செய்திகளில் உண்மையில்லை என்று நடிகர் விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷாஸ் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் பாயும் புலி படத்தில் நடித்து வருகிறார்.

ஜித்தன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் ரமேஷ்.

Actor Vishal denies rumours on his cameo in Jithan Ramesh's film

மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட அமானுஷ்ய கதையை அடிப்படையாகக்கொண்டு உருவாகும் இப்படத்தை மேலாண்மை கல்வியில் தங்கப்பதக்கம் வென்ற ராகுல் பரமஹம்சா என்பவர் இயக்கி வருகிறார். முதல்பாகத்தில் இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தில் விஷால் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. முந்தைய பாகத்தில் சரத்குமார் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். அதுபோல் இப்படத்தில் விஷால் போலீஸ் வேடத்தில் நடிப்பார் என்று கூறிவந்தனர்.

ஆனால் இவை தவறான செய்திகள் என விஷாலே இன்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஜித்தன் 2-ம் பாகத்தில் நான் நடிப்பதாக சிலர் செய்தி வெளியிட்டுள்ளனர். இவை அனைத்தும் அடிப்படையில்லாத பொய்கள். இதை அனைவரும் தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.