த்ரிஷா..எக்ஸ்டிரா காசு-செக்ஸி பிகினி!

Tags:



ரூ. 25 லட்சம் எக்ஸ்டிராவாக வாங்கிக் கொண்டு செக்ஸியான பிகினி அணிந்து நடித்துள்ளாராம் திரிஷா -தெலுங்குப் படத்திற்காக.

மலையாளத்தில் பாடிகார்ட் என்ற பெயரில் உருவாகி, பின்னர் தமிழில் காவலன் என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் தற்போது தெலுங்கில் பாடிகார்ட் என்ற பெயரிலேயே தயாராகிறது.

பாடிகார்ட் படத்தில் செக்ஸியான காட்சிகள் எதுவும் கிடையாது. இயல்பான கதையோட்டத்தைக் கொண்ட அப்படத்தை பெரிய அளவில் கொம்பாக்காமல் தமிழிலும் சற்று இயல்பாக எடுத்ததால் அப்படம் பெரிய ஹிட் ஆனது.

இந்த நிலையில், தெலுங்கு பாடிகார்டில் பெரிய அளவில் மசாலாவை சேர்த்து இணைக்கவுள்ளனர். இப்படத்தில் நாயகியாக நடிப்பவர் திரிஷா. படத்தில் ஒரு காட்சியில் பிகினி உடையில் அவரை உலவ விட்டுள்ளனர்.

இந்தக் காட்சியில் நடிக்க முதலில் தயங்கியுள்ளார் திரிஷா. எக்ஸ்டிராவாக தருவதாக தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் தெரிவிக்கவே சம்மதித்துள்ளாராம் திரிஷா. இந்தக் காட்சியில் நடிப்பதற்காக எக்ஸ்டிராவாக ரூ. 25 லட்சத்தை வாங்கியுள்ளாராம் திரிஷா.

தெலுங்கில் தற்போது நாயகிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. போட்டியை சமாளிக்க கவர்ச்சிக் களத்தில் குதித்து ரசிகர்களை இழுப்பதில் நாயகிகளிடையே பெரும் அடிதடியே காணப்படுகிறது. இந்த நிலையில்தான் போட்டிக் களத்தில் திரிஷாவும் இப்படிக் குதித்துள்ளாராம்.

அதை விட முக்கியம் இது தெலுங்குப் படமாச்சே, கவர்ச்சி மசாலா இல்லையென்றால் எப்படி…?

 

என்னை நிலைநிறுத்த இயக்குனர் ஆனேன்

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

என்னை நிலைநிறுத்த இயக்குனர் ஆனேன்

6/4/2011 1:10:12 PM

ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படம், 'ஆயுதப் போராட்டம்'. ஹீரோவாக நடிக்கும் ஜெய் ஆகாஷ், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ப்ரீத்தி மினாள், அனிதா ரெட்டி ஹீரோயின்கள். சாய் சதீஷ், ஒளிப்பதிவு. நந்தன் ராஜ், இசை. ஆண்டாள் பிரியதர்ஷினி, செந்தமிழ்தாசன், தமிழமுதன் பாடல்கள். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வெளியிட, இயக்குனர் பிரபு சாலமன் பெற்றார். விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், பி.எல்.தேனப்பன், ஜெய் ஆகாஷ், அனிதா ரெட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். பிறகு நிருபர்களிடம் ஜெய் ஆகாஷ் கூறுகையில், 'இந்திய தமிழனுக்கும், இலங்கை தமிழனுக்கும் இடையே நடக்கும் உணர்வுப் போராட்டம் இப்படத்தின் கரு. தாய்லாந்து, சீனா, ஹாங்காங், லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளில் பாடல்கள் மற்றும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள நான், திரையுலகில் மீண்டும் என்னை நிலைநிறுத்திக் கொள்ள இதை இயக்குகிறேன்' என்றார்.

 

ஆடை அணியாமல் நடித்தாரா ஷம்மு

Tags:
http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-2975.jpg
‘பாலை’ படத்தில் நடிக்கும் ஷம்மு, ஒரு காட்சியில் ஆடை அணியாமல், இலை, தழைகளை மட்டுமே உடம்பில் சுற்றிக்கொண்டு நடித்ததாக தகவல். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘இது சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த கதையாக ருவாகிறது. அப்போது துணி தைக்கும் இயந்திரம் கிடையாது. எனவே, பெண்கள் ஆடைகளை உடலில் போர்த்திக்கொண்டு வருவார்கள். அதேபோல நடித்தேன். இலை, தழைகளை மட்டும் சுற்றிக்கொண்டு நடித்ததாகச் சொல்வது வதந்தி’ என்றார்.
 

தனது வாழ்க்கையை படமாக்குகிறார் சோனா

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தனது வாழ்க்கையை படமாக்குகிறார் சோனா

6/4/2011 12:58:40 PM

யுனிக் புரொடக்ஷன்ஸ் சார்பில், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் படத்தை சோனா தயாரிக்கிறார். இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழில் ஒரே மாதிரி கேரக்டர் வந்ததால், நடிக்கவில்லை. மலையாளத்தில் 'மிலி' என்ற படத்தில் நடிக்கிறேன். 'மங்காத்தா' ரிலீசுக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படத்தை தயாரிக்கிறேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. ஹீரோ தேர்வு நடக்கிறது. பிரேம்ஜி நடிக்கும், 'பாக்யராஜ் 2010' படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. என் வாழ்க்கையில் நடந்த கசப்பான, வேதனையான, சந்தோஷமான பல சம்பவங்களை மையமாக வைத்து படம் தயாரிக்கிறேன். குழந்தை பருவம், டீன்ஏஜ் பருவம், இப்போதுள்ள கெட்டப் என, மூன்று ஹீரோயின்கள் உண்டு. இப்போதுள்ள தோற்றத்தில் நான் நடிக்கிறேன். என் வாழ்க்கையை படமாக உருவாக்க அப்படி என்ன அவசியம் என்று கேட்கலாம். அதற்கு அவசியம் இருக்கிறது. என் முதுகில் குத்தியவர்களை, எனக்கு துரோகம் செய்தவர்களை அடையாளம் காட்ட வேண்டும். அவர்கள், இப்படத்தின் கேரக்டர்களாக உலா வருவார்கள். யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவோ, தாக்கவோ மாட்டேன்.




 

மற்றவர்கள் பற்றி கவலையில்லை

Tags: nbsp

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மற்றவர்கள் பற்றி கவலையில்லை

6/4/2011 1:08:16 PM

என்னை பற்றி, மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து கவலையில்லை என்றார் ரீமா சென். இதுபற்றி அவர் கூறியதாவது: ஷிவ் கபூருடனான எனது திருமணம் பற்றி பல்வேறு வதந்திகள் வருகிறது. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை. எனக்கு திருமணம் நடந்தால் அதை மறைக்க வேண்டிய  அவசியம் என்ன இருக்கிறது. எப்போது திருமணம் நடந்தாலும் கண்டிப்பாகத் தெரியபடுத்திவிட்டே செய்வேன். தற்போது இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன். தமிழில் நல்ல கேரக்டருக்கு காத்திருக்கிறேன். நான் இந்தியில் நடித்த 'ஆக்ரோஷ்', தமிழில் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படங்கள் சீரியசான கதைகளை கொண்டது. அதிலிருந்து விடுபடும் விதமாக தெலுங்கில் வி.என்.ஆதித்யா இயக்கும் காமெடி படத்தில் நடிக்கிறேன். இவ்வாறு ரீமா சென் கூறினார்.




 

தெலுங்கில் மட்டும் கிளாமரா?

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தெலுங்கில் மட்டும் கிளாமரா?

6/4/2011 1:03:41 PM

தெலுங்கு படங்களில் மட்டும் கிளாமராக நடிக்கிறேன் என்று சொல்வது தவறானது என்றார் தமன்னா. இதுபற்றி அவர் கூறியதாவது: தெலுங்கில் நாக சைதன்யாவுடன் நடித்த '100% லவ் ஸ்டோரி' ஹிட்டாகியுள்ளது. அடுத்து அல்லு அர்ஜுனுடன் நடித்துள்ள 'பத்ரிநாத்' வர இருக்கிறது. தமிழில் தனுஷுடன் நடித்துள்ள 'வேங்கை' படம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. இதில் கல்லூரி செல்லும் பெண்ணாக நடித்துள்ளேன். இயக்குனர் ஹரி, என் கேரக்டரை சிறப்பாக செதுக்கியிருக்கிறார். இதைத்தவிர தமிழில் வேறு படங்கள் இல்லை. தெலுங்கில் மூன்று படங்களில் நடிக்கிறேன். தெலுங்கு படங்களில் மட்டும் கிளாமராக நடிக்கிறேன் என்பதில் உண்மையில்லை. தெலுங்கில் பாடல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் கிளாமர் எதிர்பார்க்கிறார்கள். மற்ற காட்சிகளில் நான் அப்படி நடிப்பதில்லை. தமிழில் எனக்கு கிடைத்த கேரக்டர்களில் கிளாமராக நடிக்க வாய்ப்பு வரவில்லை. வந்தால் நடிப்பீர்களா என்கிறார்கள். கதைக்கு தேவை என்றால் அப்படி நடிக்கலாம்.




 

சந்தியாவின் திகில் அனுபவம்!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சந்தியாவின் திகில் அனுபவம்!

6/4/2011 12:54:59 PM

மலையாள படத்துக்காக நடுகாட்டில் இரண்டு வாரம் நடித்தது திகில் அனுபவமாக இருந்தது என்றார் சந்தியா. இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: மலையாளத்தில் வி.கே.பிரகாஷ் இயக்கத்தில் 'த்ரீ கிங்ஸ்' படத்தில் நடித்து வருகிறேன். இந்திரஜித் ஜோடி. அடர்ந்த காடு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் ஷூட்டிங் நடந்தது. கேரளாவில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே நடுகாட்டில் இரண்டு வாரங்கள் நடித்தது திகில் அனுபவம். காலையில் சீக்கிரம் சென்றுவிட்டு மாலையில் 4 மணிக்கு திரும்பி விட வேண்டும். இல்லை என்றால், காட்டு மிருகங்களிடம் சிக்க நேரிடும். யூனிட் ஆட்கள் இருந்தார்கள் என்றாலும் பயத்துடனேயே நடிக்க வேண்டியிருந்தது. இதில் நடித்தது எனக்கு திகில் அனுபவம். தமிழில் ஏன் நடிக்கவில்லை என்று கேட்கிறார்கள். எந்த கேரக்டரும் சவாலாக இல்லை. சுவாரஸ்யமான கதையும், கேரக்டரும் அமைந்தால் நடிப்பேன்.

 

கிருஷ்ணவேணி பஞ்சாலை 80களில் நடக்கும் கதை!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கிருஷ்ணவேணி பஞ்சாலை 80களில் நடக்கும் கதை!

6/4/2011 12:53:25 PM

மின்வெளி மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம், 'கிருஷ்ணவேணி பஞ்சாலை'. ஹேமச்சந்திரன், நந்தனா, சண்முகராஜன், அஜயன்பாலா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தை தனபால் பத்மநாபன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: இது 1950களில் தொடங்கி 1980ன் இறுதியில் முடியும் கதை. பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்க்கையை ஒரு மெல்லிய காதலோடு சொல்லியிருக்கிறேன். தொழிலாளர்கள் பற்றிய கதை என்றால், சம்பள உயர்வு, போனஸ் பிரச்னை, போராட்டம் என்றுதான் இதுவரை வெளியான படங்களில் காட்டியிருக்கிறார்கள். இது அதிலிருந்து வேறுபட்ட கதையாக இருக்கும். வழக்கமாக வில்லனாக நடிக்கும் சண்முகராஜன், இதில் காமெடி கலந்த கேரக்டரில் நடித்துள்ளார். அவரது கேரக்டர் வித்தியாசமானதாக இருக்கும். அந்த கால கட்டத்தை திரைக்குள் கொண்டுவர அதிக உழைப்பை செலவழித்திருக்கிறோம். இந்தப் படம் வெளியானால் ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டன. இந்த மாத இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு தனபால் பத்மநாபன் கூறினார்.

 

ரசிகர்களை 'சேது'வாக்க வரும் தீக்ஷா சேத்!

Tags:



ராஜபாட்டை. இது சீயான் விக்ரம் அடுத்து நடிக்கப் போகும் புதிய படம். சுசீந்திரன் இயக்குகிறார். படத்தில் அவருக்கு ஜோடி போடுவது தெலுங்குத் திரையுலகின் குளுகுளு கவர்ச்சி நாயகி தீக்ஷா சேத்.

வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என மூன்று படங்களைக் கொடுத்துள்ள சுசீந்திரன் அடுத்து இயக்கப் போகும் படம்தான் ராஜபாட்டை.

விக்ரமை நாயகனாக வைத்து இதை உருவாக்குகிறார் சுசீந்திரன். தம்பி ராமையை முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். காதல், கலகலப்பு, அடிதடி என அனைத்தும் கலந்த மிக்ஸராக படத்தைக் கொடுக்கவிருக்கிறார் சுசீந்திரன்.

படத்தின் நாயகி தீக்ஷா சேத். தெலுங்கில் கலக்கி வரும் இவர் கவர்ச்சிக்குப் பெயர் போனவர். கவர்ச்சி காட்ட தயங்காதவர், கட்டழகான உடல் வாகு கொண்டவர்.

இப்படத்தில் ஜிம் வைத்து நடத்துபவராக வருகிறராம் விக்ரம். எனவேதான் அவருக்குத் தோதான ஜோடியாக இந்த கட்டழகியைப் பிடித்துப் போட்டுள்ளனர் போலும்.

படப்பிடிப்பை வருகிற 7ம்தேதி பூஜை போட்டுத் தொடங்கி சென்னையைச் சுற்றி எடுத்து முடிக்கத் திட்டமிட்டுள்ளனராம்.

 

சீரஞ்சீவியைக் காணவில்லை என்று போலீஸில் மாணவர்கள் நூதனப் புகார்

Tags:



திருப்பதி: தொகுதி எம்எல்ஏ சிரஞ்சீவியை கடந்த 3 மாதங்களாகக் காணவில்லை. அவரைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கோரி மாணவர்கள் திருப்பதி காவல் நிலையத்தில் நூதன புகார் கொடுத்துள்ளனர்.

பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை நடத்தி வந்தவர் சிரஞ்சீவி. ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸில் இணைப்பதாக அறிவித்தார். அதன் பின்னர் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட திருப்பதி தொகுதிப் பக்கமே வராமல் இருக்கிறார்.

இதனால் திருப்பதியில் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் திருப்பதி காவல் நிலையத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சார்பில் நூதன மனு ஒன்று தரப்பட்டுள்ளது.

அதில், எங்களது எம்எல்ஏ சிரஞ்சீவியை கடந்த 3 மாதங்களாகக் காணவில்லை. அவரை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கூறியிருந்தனர். இதைப் பார்த்த போலீஸார், உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி மாணவர்களை அனுப்பி வைத்தனர்.

அத்தோடு நிற்காத மாணவர்கள், சிரஞ்சீவியைக் கண்டுபிடித்துக் கொடுப்போருக்கு உரிய வெகுமதி வழங்கப்படும் என்றும் போஸ்டர் அடித்து திருப்பதியையே அலற வைத்து வருகின்றனர்.

 

பி.ஏ. வீடு வாங்க பணம் கொடுத்த உதவிய ஆசின்

Tags:



ஆசின் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கினாலும் கூட சில நல்ல விஷயங்களையும் செய்து அதை மேனேஜ் செய்து விடுகிறார்.சமீபத்தில் தன்னிடம் நீண்ட காலமாக உதவியாளராக இருப்பவருக்கு, அவர் வீடு வாங்குவதற்காக ஆசின் ரூ. 4 லட்சம் பணம் கொடுத்து உதவினாராம்.

கடந்த ஐந்து வருடங்களாக அந்த உதவியாளர் ஆசினிடம் பணியாற்றி வருகிறார். சொந்தமாக ஒரு வீடு வாங்க முடிவு செய்த அவர், ஆசினிடம் தேவைப்பட்டால் உதவி கேட்கிறேன் என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட ஆசின், நிச்சயம் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஒரு வீட்டைப் பார்த்து முடித்த ஆசினின் உதவியாளர், அதை ஆசினிடம் சொல்லி உதவி கேட்டுள்ளார். இதையடுத்து உடனடியாக ரூ. 4 லட்சம் பணத்தை எடுத்துக் கொடுத்து அவருக்கு உதவினாராம் ஆசின்.

இதுகுறித்து ஆசின் கூறுகையில், இதை நான் விளம்பரப்படுத்த விரும்பவில்லை. ஏழைகளுக்கு என்னால் ஆன உதவிகளை நான் எப்போதும் செய்யத் தயங்கியது கிடையாது என்றார்.

ஆசினுக்கு நல்ல மனசுதான்!

 

'சீமான்': போன், எஸ்எம்எஸ் ஆதாரங்களைக் கொடுத்த விஜயலட்சுமி!

Tags:



சீமான் மீதான புகாருக்கு தொலைபேசி, எஸ்எம்எஸ் ஆதாரங்களை போலீஸில் கொடுத்தார் விஜயலட்சுமி

நாம் தமிழர் அமைப்பின் தலைவரான இயக்குநர் சீமான் மீதான புகார்களுக்கு ஆதாரமாக தொலைபேசி பேச்சு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை போலீஸில் கொடுத்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.

சீமான் என்னைக் காதலித்தார். 3 ஆண்டுகளாகப் பழகி விட்டு இப்போது என்னைத் திருமணம் செய்ய மறுக்கிறார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுத்தார் விஜயலட்சுமி.

இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் தற்போது வளசரவாக்கம் போலீஸார் சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜயலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் 2 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின்போது தனக்கும், சீமானுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விஜயலட்சுமி கூறியதாக தெரிகிறது.

மேலும் சீமான் மீதான தனது புகார்களுக்கு ஆதாரமாக தொலைபேசிப் பேச்சுக்கள், எஸ்எம்.எஸ். செய்திகள் உள்ளிட்டவற்றை போலீஸாரிடம் கொடுத்துள்ளார் விஜயலட்சுமி.

இதையடுத்து இதன் அடிப்படையில் சீமானிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. மேலும் விஜயலட்சுமி குறிப்பிட்டுள்ள சில இடங்களுக்கு நேரில் போய் விசாரணை நடத்தவும் போலீஸார் தீர்மானித்துள்ளனர்.

விரைவில் விசாரணைக்கு வருமாறு கூறி சீமானுக்கு போலீஸ் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப்படும் என்று தெரிகிறது.

தற்போது விசாரணைதான் நடந்து வருவதாகவும், விஜயலட்சுமி சொல்வது உணமையாக இருக்கும்பட்சத்தில் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவசரப்பட்டு எதையும் செய்ய மாட்டோம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

 

சீமான் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமியின் மறுபக்கம்

Tags:



மதுரை: நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமானின் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமி பற்றி பல அதிர்ச்சி தகவல்கள் சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இது குறித்து சின்னத்திரை வட்டாரங்களில் கூறப்படுவதாவது:

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த பின்னர் டிவி பக்கம் வந்தார் விஜயலட்சுமி. நடிகை ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரித்த கேம் ஷோவான தங்கவேட்டை நிகழ்ச்சியை தொகுத்து அளித்தார். அப்போது, ஏன் லேட்டா வர்றீங்க..? என்று கேட்டால்கூட, ராடன் ஆபீஸுக்கு புகாரை அனுப்பி வைப்பார்.

இந்தத் தொல்லை தாங்காமலேயே அவரிடம் நேராகப் பேசாமல் இடைத்தரகராக இணை இயக்குநர் ஒருவரை வைத்துக் கொண்டுதான் அவரைப் பலரும் சமாளித்து வந்தனர்.

அவரைத் தவிர்த்துவிட்டு சீரியலை தொடர முடியாத சூழல் வந்தபோது தான், வேறு வழியில்லாமல் அனைத்து விவகாரங்களும் ராதிகா முன்பு வைக்கப்பட்டு பஞ்சாயத்து நடத்தப்பட்டதாகக் கூற சொல்லப்படுகிறது.

தங்கவேட்டை நிகழ்ச்சி இயக்குநர் ரமேஷ் தன்னை காதலித்து ஏமாற்றியதாக விஜயலட்சுமி போலீஸில் புகார் கொடுத்தார். அதனால் தான் அவரை அந்த இரண்டு தொடர்களிலிருந்தும் தூக்கினார்கள். பாவம் அந்த இயக்குநர் சில நாட்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். பெரும்பாடுபட்டு அந்த வழக்கை வாபஸ் பெற வைத்தார்கள்.

கன்னட நடிகருடன் காதல் வாழ்க்கை:

கடந்த 2008ம் ஆண்டு கன்னட நடிகர் லோகேஷின் மகன் ஸ்ரூஜன் லோகேஷுடன் விஜயலட்சுமி காதல் கொண்டு நிச்சயத்தார்த்தம் நடந்தது. பின்பு இந்தக் காதலும் 6 மாதத்தில் முறிந்து போய்விட்டது. ஸ்ரூஜன் வேறொரு சின்னத்திரை நடிகையை திருமணம் செய்து கொண்டு போய்விட்டார்.

இதனையடுத்து தான் விஜயலட்சுமி பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் தமிழில் ரீ எண்ட்ரீயானார்.

இப்போது திடீரென சீமான் மீது புகார் கூறியுள்ளார். இந்த விவகாரத்திற்கு பின்னனியில் திரைப்பட நாடக நடிகரும், காமெடி நடிருமான ‘சே’ என்பவர் பின்னணியில் உள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Tags:



கருப்பு எம்.ஜி.ஆர், புரட்சிக் கலைஞர், கேப்டன் என்று தனது ரசிகர்களாலும், தேமுதிக தொண்டர்களாலும் செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியன் சினிமாவில் நடிக்க வருகிறார். ஹீரோவாக அவர் அவதாரம் எடுக்கிறார்.

விஜயகாந்த், பிரேமலதா தம்பதிக்கு 2 மகன்கள். மூத்தவர் பிரபாகரன், இளையர் சண்முகப் பாண்டியன். இதில் மூத்த மகன் எஸ்ஆர்எம் கல்லூரியில், பிஇ படித்து வருகிறார். இளைய மகன் சண்முகப் பாண்டியன், பிளஸ்டூ முடித்துள்ளார். அடுத்து பிஎஸ்சி விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கப் போகிறார்.

இந்த நிலையில் தந்தை வழியில் தானும் நடிகராக வேண்டும் என்றஆசையை பெற்றோரிடம் கூறினாராம் சண்முகப் பாண்டியன். இதை விஜயகாந்த்தும், பிரேமலதாவும் வரவேற்று, ஆதரித்துள்ளனர்.

இதையடுத்து மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர் விஜயகாந்த்தும், பிரேமலதாவும். மகனை சிறப்பாக அறிமுகப்படுத்தும் வகையிலான கதையைத் தேர்வு செய்யும் வேலையில் பிரேமலதா மும்முரமாக இறங்கியுள்ளாராம். அக்காவுக்கு உதவியாக தம்பி சுதீஷும் கதை கேட்கும் படலத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஹீரோவாவதற்கு முன்பு அடிப்படைத் தேவைகளான டான்ஸ், பைட் ஆகியவற்றையும் சண்முகப் பாண்டியன் கற்க ஆரம்பித்திருக்கிறாராம்.

விரைவில் சண்முகப் பாண்டியன் ஹீரோ அவதாரம் எடுப்பார் என்று விஜயகாந்த் வட்டாரம் தெரிவிக்கிறது.