கமலிடம் 10 நிமிடம் தனியாக பேசிய நயனதாரா

ஏ.ஆர். முருகதாஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் பூஜைக்கு வந்த கமல்ஹாசனுடன் தனியாக 10 நிமிடம் பேசினார் நடிகை நயனதாரா. கமல்ஹாசனின் அடுத்த படத்தில் நடிக்க அப்போது அவர் வாய்ப்பு கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

nayanthara meets kamalhassan
Close
 

விஜய்யின் துப்பாக்கியை முடித்து கீழே வைத்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து à®'ரு படம் தயாரிக்கப் போகிறார். படத்தின் பெயர் ராஜா ராணி. அட்லி இயக்குகிறார். இதில் ஆர்யா, ஜெய் இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக நயனதாரா நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் பூஜை கமல்ஹாசனின் வீட்டில் வைத்து நடந்தது. அப்போது பூஜை முடிந்த பின்னர் கமல்ஹாசனுடன் பேச விரும்புவதாக நயனதாரா கூறவே, கமல்ஹாசனும் தனியாக கூட்டிச் சென்று 10 நிமிடம் பேசினார். அப்போது கமல்ஹாசனுடன் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு கமல் என்ன பதில் சொன்னார் என்பது தெரியவில்லை.

இருப்பினும் கமல்ஹாசனின் அடுத்த தமிழ்ப் படத்தில் நயனதாராவுக்கு சின்னதாகவோ அல்லது பெரியதாகவோ à®'ரு வாய்ப்பு நிச்சயம் உண்டு என்று அடித்துக் கூறுகிறார்கள் பூஜைக்கு வந்தவர்கள்.

 

பாகன் பட இயக்குநரின் அடுத்த படம் 'முஸ்தபா'...!

After Paagan Director Aslam Direct Mustafa

ஸ்ரீகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பாகன் பட இயக்குநர் அஸ்லமுக்கு, அடுத்து பெரிய பட வாய்ப்பு வந்துள்ளது.

இந்த முறை தமிழின் முதல்நிலை நடிகர்களுள் à®'ருவரை ஹீரோவாக வைத்து படத்தை இயக்குகிறார் அஸ்லம். இந்தப் படத்துக்கு முஸ்தபா என்று தலைப்பு வைத்துள்ளார்.

முஸ்தபா படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து உருவாக்கப்படுகிறது.

முதல் காட்சியிலிருந்து க்ளைமாக்ஸ் வரை 'சிரிப்பு சிரிப்பு சிரிப்பைத் தவிர வேறில்லை' என்று சொல்லும் வகையில் வயிற்றைப் பதம்பார்க்கும் காமெடியாக முஸ்தபா திரைக்கதையை உருவாக்கியுள்ளாராம் அஸ்லம்.

சுந்தர் சிக்கு எப்படி உள்ளத்தை அள்ளித்தா படம் அமைந்ததோ, அதற்கு நிகராக இந்த முஸ்தபா இருக்கும் என்கிறார் இயக்குநர் அஸ்லம், மிகுந்த நம்பிக்கையுடன்!

 

விஜி வில்லியாயிட்டாங்க, பார்த்து நடந்துக்குங்க..!.

Vijayalakshmi S New Avatar As Vill

சென்னை: நாயகியாக, காதலியாக, தங்கையாகப் பார்த்துப் பழக்கப்பட்ட விஜயலட்சுமி அடுத்து வில்லியாக புது அவதாரம் எடுக்கிறார்.

இயக்குநர் அகத்தியனின் 2வது மகள்தான் விஜயலட்சுமி. சென்னை 600028 படத்தின் மூலம் நடிக்க வந்த இவர் முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்தார். தொடர்ந்து அஞ்சாதே படத்தில் நல்ல ரோல் கிடைத்தது. அடுத்து ஜெய்யுடன் ஜோடியாக தனி நாயகியாக நடித்தார்.

இப்போது சுத்தமாக படம் இல்லாத நிலை. இந்தநிலையில்தான் அவர் வில்லியாக நடிக்கப் போகும் செய்தி வந்து சேர்ந்துள்ளது. இயக்குநர் அமுதனின் இரண்டாவது படம் என்ற படத்தில் வில்லியாக நடிக்கிறாராம்.

ஏன் விஜி இப்படி திடீர்னு வில்லியானீங்க என்று கேட்டால் தனக்கே உரிய அழகுச் சிரிப்போடு, என்ன செய்வது, நானே கூட இதை எதிர்பார்க்கவில்லை. இந்தப் படத்தில் இரண்டு முக்கியமான பெண் கேரக்டர் வருகிறது. அதில் ஆதிரவாக வரும் பாத்திரத்தில் நான் நடிக்கிறேன். இது வில்லத்தனம் கொண்டது. இது எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும் என்று இயக்குநர் உறுதியாக கூறியதால் ஏற்றுக் கொண்டேன் என்றார்.

அத்தோடு நில்லாமல் அந்த கேரக்டரைக் கலக்கலாக செய்வதற்காக நிறைய ஹோம் à®'ர்க்கும் செய்து வைத்துள்ளாராம்.