46 வயதாகும் மோனிகா பெலுச்சி, கவர்ச்சி மற்றும் செக்ஸியான வேடங்களில் அசத்தியவர். சமீபத்தில்தான் இவருக்கு குழந்தை பிறந்தது.
இப்போது தனது 5 மாதக் குழந்தையுடன் நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். இந்தப் படங்கள் இத்தாலியின் பிரபல பத்திரிகையான வானிட்டி ஃபேரில் வெளியாகியுள்ளன.
இந்த இதழில் மோனிகாவின் பேட்டியும் வெளியாகியுள்ளது. அதில், “நான் நல்லவளா, கெட்டவளா என்று எனக்குள்ளேயே தேடிக் கொண்டிருக்கிறேன். இந்தப் புகைப்படங்களுக்கு நிர்வாண போஸ் கொடுப்பதும்கூட என்னைத் தேடும் ஒரு முயற்சிதான்” என்று கூறியுள்ளார்.
இப்போது விளம்பரப் படங்களில் பிஸியாக இருக்கும் மோனிகா, இரண்டு ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார். அவற்றில் ஒன்றில் ராபர்ட் டி நீரோவுடன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.