டாக்டர்களிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்: அமீர்கான்!

Amir Says He Won T Apologise The Doctors
டாக்டர்கள் பற்றி டிவி நிகழ்ச்சியில் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.

‘சத்யமேவ ஜெயதே' என்ற டிவி நிகழ்ச்சியில் டாக்டர்களைப் பற்றி கூறிய அமீர்கான், சில டாக்டர்கள் நோயாளிகளை ஏமாற்றுகின்றனர். நோயாளிகளை அச்சுறுத்தி அவர்களிடம் பணத்தை கறக்கின்றனர் என்று குற்றம் சாட்டியிருந்தார். அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் பேசினார்கள்.

அமீர்கானின் இந்த கருத்துக்கு இந்தியா முழுவதும் உள்ள டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அமீர்கான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால் டாக்டர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று அமீர்கான் தெரிவித்துள்ளார். மருத்துவத்துறையில் நடப்பதைத்தான் தான் நிகழ்ச்சியில் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த பிரச்சினை எப்போ முடியுமோ தெரியலையே?

 

சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கி்ல் இருந்து விலகிய விக்ரம் பிரபு

Vikram Prabhu Walks Of Sattam Oru
விக்ரம் பிரபு சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் இருந்து விலகிவிட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் பேரனுமான விக்ரம் பிரபு கும்கி படத்தின் மூலம் நடிகராகிவிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இன்னும் கும்கி படம் முடியாத நிலையில் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் எடுத்து ஹிட்டான சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விக்ரம் பிரவு ஒப்பந்தம் ஆனார்.

படத்தின் ஷூட்டிங் துவங்கி பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மகனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வருவதைப் பார்த்து பிரபுவும் சந்தோஷப்பட்டார். இந்நிலையில் விக்ரம் பிரபு சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் இருந்து வெளியேறிவிட்டார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. முக்கிய கதாபாத்திரமான அவர் விலகியதால் பட வேலைகள் நின்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

முதல் படத்தை முதலில் முடிப்போம் என்று அவர் கும்கி படப்பிடிப்புக்கு சென்றுவிட்டாராம். அவர் தற்போது கும்கி ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜிந்தா தா பாடலுக்கு ரூ. 50 லட்சம் செட்டில் செய்த சஞ்சய் லீலா பன்சாலி

Bhansali Pays Heavy Price Rowdy   
ரவுடி ரத்தோர் படத்தில் அனுமதி பெறாமல் ஜிந்தா தா பாடலை பயன்படுத்தியதற்காக ஹைதராபாத் இசை நிறுவனத்திற்கு 50 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி.

பிரபுதேவா இயக்கத்தில் அக்சய் குமார் நடித்து வெளியாகியுள்ள இந்தி படம் ரவுடி ரத்தோர். பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்துள்ள இந்த படம் ராஜமௌலி தெலுங்கில் எடுத்த விக்ரமார்க்குடு படத்தின் ‌ரிமேக் ஆகும். தமிழில் இது சிறுத்தை என வெளிவந்தது.

இந்த படத்தினை பிரபல தயாரிப்பாளர் சன்சய் லீலா பன்சாலி தயாரித்துள்ளார். போட்ட பணத்திற்கு மேல் வசூலை குவித்து வரும் இந்த படத்திற்கு பாடல் ரூபத்தில் வந்தது சிக்கல். இந்த படத்தில் வரும் 'ஜிந்தா தா ஜி்ந்தா ஜிந்தா' பாடல் தெலுங்கு உரிமையை அனுமதி பெறாமல் இந்தி படத்தில் பயன்படுத்தியதற்கு ஐதாராபாத் ஆதித்யா இசை நிறுவனம் பிரச்சினையை கிளப்பியது.

தங்களுடைய பாடலை பயன்படுத்தியதற்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனையடுத்து நீதிமன்றத்திற்கு வெளியே சுமூகமாக பேசி முடித்த சஞ்சய் லீலா பஞ்சாலி 50 லட்சம் ரூபாய் கொடுத்து செட்டில் செய்தனர்.

 

சூர்யாவிட்டுட்டு கார்த்திட்ட போனதேன்? சொல்கிறார் வெங்கட் பிரபு

Why Does Venkat Prabhu Work With Karthi Before Suriya
சூர்யாவை விட்டுவிட்டு கார்த்தி படத்தை துவங்குது பற்றி இயக்குனர் வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு மஙகாத்தாவை முடித்த பிறகு சூர்யாவுடன் ஒரு 3டி படத்தில் பணிபுரிவதாக இருந்தது. ஆனால் திடீர் என்று அவர் அண்ணனை விட்டுவிட்டு தம்பி கார்த்தியை வைத்து பிரியாணி படத்தை எடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. கார்த்திக்கு ஜோடியாக சமந்தா தேர்வாகியுள்ளார்.

இப்படி திடீர் என்று கார்த்தியை வைத்து படம் எடுப்பதேன் என்று கேட்டதற்கு அவர் கூறுகையில்,

சூர்யா தற்போது படுபிசியாக உள்ளார். அதனால் தான் கார்த்தியை வைத்து புதுப்படத்தை துவங்குகிறேன். சூர்யா மாற்றான், சிங்கம் 2 ஆகிய படங்களை முடித்த பிறகு அவரை வைத்து புது படம் எடுப்பேன்.

பிரியாணி ஆக்ஷன், காமெடி, காதல் கலந்து சுவையாக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் சுவையான பிரியாணியாக இருக்கும் என்றார்.

அவர் செய்யும் பிரியாணி சுவையாக வர வாழ்த்துக்கள்.

 

புஸ்ஸாகிப் போன லக்ஷ்மி ராயின் டோலிவுட் கனவு

Lakshmi Rai S T Wood Dream Bombs   
தனது டோலிவுட் கனவு இப்படி புஸ்ஸாகிப் போகும் என்று லக்ஷ்மி ராய் எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்.

நடிகை லக்ஷ்மிராய் கடந்த 2005ம் ஆண்டு நடிக்க வந்த புதிதில் தெலுங்கில் காஞ்சனமாலா கேபிள் டிவி என்ற படத்திலும், தொடர்ந்து 2006ம் ஆண்டில் நீக்கு நாக்கு என்ற படத்திலும் நடித்தார்.

அதன் பிறகு தெலுங்கு பக்கம் போகாமல் தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வந்தார். தற்போது கன்னடத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே ரொம்ப வருஷமா டோலிவுட் பக்கமே போகலையே அங்கேயும் ஒரு படத்தை நடிப்போம் என்று சென்றார்.

மூத்த ஹீரோ பாலகிருஷ்ணாவுடன் அதிநாயகடு என்ற படத்தில் நடித்தார். பெரிய ஹீரோ, பெரிய படம் நிச்சயம் ஹிட்டாகும், நமக்கும் ஒரு பெயர் கிடைக்கும் என்று அவர் நம்யிருந்தார். ஆனால் அவர் நம்பிக்கை பொய்த்துவிட்டது. டோலிவுட் கனவும் புஸ்ஸாகிவிட்டது. அதிநாயகடு எதிர்பார்த்த அளவு போகவில்லை. மேலும் படத்தில் லக்ஷ்மி ராயின் நடிப்பை விட அவர் குறைச்சலான ஆடையில் வருவதைத் தான் ரசிகர்கள் கண்டுகொண்டுள்ளனர்.

படம் ரிலீஸாகும் முன்பு அவர் கூறுகையில், இது பெரிய படம், எனது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நான் மேலும் பல தெலுங்கு படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்றார்.

படம் முழுக்க 3 ரோலில் நடித்துள்ள பாலகிருஷ்ணா தான் இருக்கிறார். எனவே வேறு ஏதாவது நல்ல படம் கிடைக்குதா என்று தான் லக்ஷ்மி ராய் பார்க்க வேண்டும்.

 

சிமா சிறந்த நடிகர் விருது அஜீத்துக்கா, தனுஷுக்கா?

Siima Best Actor Ajith Or Dhanush
துபாயில் நடக்கவிருக்கும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழாவில் சிறந்த நடிகர் விருதைப் பெறப்போவது அஜீத் குமாரா, தனுஷா என்று தெரியவில்லை.

தென்னிந்திய படங்களின் பெருமையை உலகிற்கு பரைசாற்றும் வகையில் இந்த ஆண்டு முதல் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் துபாயில் நடக்கிறது. நிகழ்ச்சியை நடிகர் மாதவன், நடிகை லக்ஷ்மி மஞ்சு தொகுத்து வழங்குகிறார்கள். இதில் சிறந்த தமிழ் படத்திற்கான விருதுக்கு தனுஷின் மயக்கம் என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மயக்கம் என்ன படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதுக்கும், ரிச்சா சிறந்த நடிகைக்கான விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தனுஷுக்கு போட்டியாக யார் உள்ளார் என்று தெரியுமா? வேறு யார் அஜீத் குமார் தான். மங்காத்தா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த வில்லன் ஆகிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் 'தல'.

ஆக இறுதிப் போட்டியில் அஜீத்தும், தனுஷும் உள்ளனர்.

 

ரமணா இந்தி ரீமேக்கில் ஷாருக்கான்: ஜோடி ஐஸ்வர்யா ராய்?

Shah Rukh Khan Act Ramanaa Remake
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான ரமணாவை இந்தியில் ரீமேக் செய்கின்றனர். அங்கு விஜயகாந்த் ரோலில் ஷாருக்கான் நடிக்கிறார்.

தற்போது பாலிவுட்டில் தமிழ் படங்களின் ரீமேக்குகள் தான் சக்கைப் போடு போடுகிறது. கஜினி, போக்கிரி ரீமேக் வாண்டட், பந்தா பரமசிவம் ரீமேக் ஹவுஸ்புல் 2, சிங்கம், சிறுத்தை ரீமேக் ரவுடி ரத்தோர் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. இதனால் தென்னிந்திய படங்கள் குறிப்பாக தமிழ் படங்களை இந்தியில் ரீமேக் செய்ய நடிகர்களும், தயாரிப்பாளர்களும் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் இதுவரை தென்னிந்திய படங்களின் ரீமேக்கில் நடித்திராத பாலிவுட் பாதுஷா ஷாருக்கான் முதன்முதலாக ரமணா ரீமேக்கில் நடிக்கிறார். இந்தியிலும் ஏ.ஆர். முருகதாஸ் தான் இந்த படத்தை இயக்குகிறாரா என்று தெரியவில்லை. ரவுடி ரத்தோரை தயாரித்த சஞ்சய் லீலா பன்சாலி தான் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தில் சிம்ரன் ரோலில் ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என்று கூறப்படுகிறது. பிரசவத்திற்கு பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கியிருக்கும் ஐஸ் இந்த படத்தின் மூலம் தனது அடுத்த எபிசோடை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

தனுஷை நோக்கி மீண்டும் 'வாலை' நீட்டும் சிம்பு!

Vaalu May Irritate Dhanush
வாலு படத்தில் ஹன்சிகா பேசும் ஒரு வசனத்தால் சிம்பு, தனுஷ் இடையே உள்ள மோதல் மேலும் வலுக்கும் சூழல் உருவாகியுள்ளது.

சிம்பவுக்கும், தனுஷுக்கும் ஏழாம் பொருத்தமாகத் தான் உள்ளது. தனுஷுடன் சுள்ளானில் நடித்த சிந்து துலானியை சிம்பு தனது மன்மதன் படத்தில் விலைமாதாக்கினார். சிம்புவுடனான காதல் முறிந்த பிறகு நயன்தாராவுடன் தனுஷ் யாரடி நீ மோகினியில் நடித்தார். தனுஷ் ஒய் திஸ் கொலவெறிடி பாட சிம்பு பதிலுக்கு ஒரு பாட்டை பாடி யூடியூப்பில் விட்டார். பாட்டு பஞ்சராகிப் போனது.

இவர்கள் ராசியாகவே மாட்டார்களா என்று கேட்டால் அது இப்போதைக்கு நடக்கிற மாதிரி தெரியவில்லை. இந்நிலையில் சிம்பு நடிக்கும் வாலு படத்தில் அவரைப் பார்த்து ஹன்சிகா ஒரு சில பசங்கள பாக்க பாக்கத் தான் பிடிக்கும். ஆனா உன்ன மாதிரி பசங்கள பாத்த உடனே பிடிச்சிடும் என்று டயலாக் விடுகிறாராம்.

படிக்காதவன் படத்தில் தனுஷ் தன்னைப் பார்த்தாலே முகம் சுளிக்கும் தமன்னாவைப் பார்த்து என்ன மாதிரி பசங்கள பார்த்த உடனே பிடிக்காது. பாக்கப் பாக்கத் தான் பிடிக்கும் என்று சொன்னார் என்பது நினைவிருக்கலாம்.

தனுஷ், சிம்பு ரசிகர்கள் வார்த்தை போர் நடத்த இந்நேரம் வரிந்து கட்டி தயாராகியிருப்பார்கள். இந்த இருவர் பிரச்சனையை தீர்த்து வைக்க ஆளே இல்லையா?

அள்ளி முடியக் கொண்டையி்ல்லையாம், ஆனா பேச்சுக்கு குறைச்சல் இல்லையாம்.. அந்தக் கதையாவுல்ல இருக்கு...!

 

பில்லா 2, துப்பாக்கி, வாலு: என்ன சம்பந்தம்?

Thuppakki Vaalu Billa 2 2
பில்லா 2 படம் ரிலீஸாகும் தேதியில் தான் துப்பாக்கி மற்றும் வாலு ஆகிய படங்களின் டீசர்களும் வெளியாகின்றன.

சக்ரி டோலாட்டி இயக்கத்தில் அஜீத் குமார், பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா நடித்துள்ள பில்லா 2 படம் வரும் 22ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வரும் 22ம் தேதி நடிகர் விஜய் தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் நடித்துள்ள துப்பாக்கி மற்றும் சிம்புவின் வாலு ஆகிய படங்களின் டீசர்களையும் பில்லா 2 படம் ரிலீஸாகும் அதே தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனராம். துப்பாக்கி பட வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் வாலு படம் அண்மையில் தான் துவங்கப்பட்டது.

அஜீத் ரசிகர்களுக்கு சர்பிரைஸாக வாலு பட டீசரை பில்லா 2 இடைவேளையில் விட சிம்பு திட்டமிட்டுள்ளார் என்று நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த ஆண்டில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் பில்லா 2 என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் பிறந்தநாள் அன்று ரிலீஸாவதால் பில்லா 2 அவரின் பிறந்தநாள் பரிசு என்று கூட சொல்லலாம்.

 

பிகினியில் வர நான் ரெடி: அமலா பால்

Amala Paul Ready Do Bikini   
பிகினியில் நடிக்க தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.

நடிகை அமலா பால் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு பக்கம் போனார். அவருக்காக அவரது தோழி அனுஷ்கா தெலுங்கு இயக்குனர்களிடம் சிபாரிசும் செய்தார். ஆனால் அவர் நாக சைதன்யாவுடன் சேர்ந்து நடித்த படமும் சரியாகப் போகவில்லை. இதனால் அங்கும் வாய்ப்புகள் வரவில்லை. சரி நம்ம ஊர் பக்கமே போகலாம் என்று தற்போது மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தான் அவர் பிகினியில் நடிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

கிளாமராக நடிப்பது அவசியமானதாகிவிட்டது. அதனால் பிகினியில் நடிக்க எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை. நான் மட்டுமல்ல பல வளர்ந்து வரும் நடிகைகளும் பிகினியில் நடிக்க ரெடியாகத் தான் உள்ளனர் என்றார்.

ஒரு காலத்தில் பிகினி காட்சியெல்லாம் ஹாலிவுட் படத்தில் தான் வரும். அதன் பிறகு பாலிவுட் படங்களில் வந்தது. தற்போது கோலிவுட்டுக்கும் வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜெயா டிவியில் மனதோடு மனோ!

Manathodu Mano
தொலைக்காட்சிகளில் இசை நிகழ்ச்சிகள் எல்லாமே ரசிகர்களின் வரவேற்பை பெற்று விடுகின்றன. இதற்கு காரணம் இசை மீது இருக்கும் மாறாத காதல்தான். ஜெயா டிவியில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் இசைப்பிரியர்களுக்கான நிகழ்ச்சி, `மனதோடு மனோ. பாடகர் மனோ, இதனை தொகுத்து வழங்குகிறார்.

ஒவ்வொரு வாரமும் ஒரு பிரபலங்களை சந்தித்து அவர்களின் இசை மீதான ஆர்வம், சாதனை போன்றவைகளை பகிர்ந்து கொள்கிறார். அதோடு மனோவும் தனது இசைப் பயணத்தில், தான் சந்தித்த நபர்கள், வெற்றிகள், ஆச்சரியங்கள் என தனது மனதில் பொக்கிஷமாய் வைத்திருக்கும் ரகசியங்களை, இந்த நிகழ்ச்சியில் நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

பல பிரபலங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், பாடகிகள் ஜென்சி, எஸ்.பி.சைலஜா, பாடகர்கள் பிரசன்னா, முகேஷ், இசையமைப்பாளரும், நகைச்சுவை நடிகருமான மதன்பாப், இசைக்கலைஞர் தபேலா பிரசாத், இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் கலந்து கொண்டு தங்களின் இசைப் பயண அனுபவங்களை இசையாய், பாடலாய், பேச்சாய் மனம் விட்டு பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

கடந்த வாரங்களில் பாப் இசைப்பாடகி மால்குடி சுபா தனது வசீகர குரலால் பாடிய பாடல்களை பாடியதோடு மட்டுமல்லாது அந்த பாடலை பாடும் போது நேர்ந்த அனுபவங்களையும் நேயர்களுடன் பகிர்ந்து கொண்டார். சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை தவறாமல் பாருங்கள்.

 

அக்டோபர் 16ல் சைப், கரீனா திருமணம்!

Saifeena Wedding Date Is Set October
பாலிவுட் நடிகர் சைப் அலி கான், நடிகை கரீனா கபூரின் திருமணம் வரும் அக்டோபர் மாதம் 16ம் தேதி பட்டோடியில் உள்ள பாரம்பரிய அரண்மனையில் நடக்கிறது.

பாலிவுட் நடிகர் சைப் அலி கானும், கரீனா கபூரும் நெடுங்காலமாக காதலர்களாகவே வலம் வந்துள்ளனர். அவர்கள் என்னவோ திருமணத்தை பற்றி கண்டு கொள்ளாவிட்டாலும் ஊடகங்களும், பாலிவுட்டும் அவர்கள் எப்பத்தான் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.

முதலில் கடந்த பிப்ரவரியில் திருமணம் என்றார்கள், அடுத்து ஏப்ரலில் என்றார்கள், பிறகு மெதுவாக பார்க்கலாம் என்றார்கள். தற்போது ஒரு வழியாக அக்டோபர் 16ம் தேதி பட்டோடியில் திருமணம் நடக்கிறது என்று சைபின் தங்கை சோஹா அலி கான் டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார்.

இம்முறை நிச்சயம் திருமணம் நடக்கும் என்று நம்புவோமாக. சைப் அலி கான் 1991ம் ஆண்டில் அம்ரிதா சிங்கை மணந்தார். அவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். அவர்கள் கடந்த 2004ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

கரீனா கபூர் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரை 3 ஆண்டுகளாக காதலித்தார். அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வித்யா அளவுக்கு வீணாவிடம் ஈர்ப்பு இல்லையே...!

First Look Veena Malik S The Dirty Picture    | டர்ட்டி பிக்சர்ஸ்  
தி டர்ட்டி பிக்சர்ஸ்-சில்க் சக்கத் ஹாட் மகா என்ற கனனடப் படத்தில் சி்ல்க் ஸ்மிதா வேடத்தில் நடித்து வரும் வீணா மாலிக்கின் கவர்ச்சி ஸ்டில்கள் உலா வர ஆரம்பித்துள்ளன. ஆனால் வித்யா பாலன் அளவுக்கு வீணாவிடம் ஈர்ப்பில்லையே என்ற உச்சுக் கொட்டும் குரல்களும் கூடவே கிளம்பியுள்ளன.

வித்யா பாலன் நடிப்பில் இந்தியில் வெளியாகி பெரும் வெற்றியையும், வித்யாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்த படமான டர்ட்டி பிக்சர்ஸ் தற்போது பல மொழிகளிலும் ரீமேக் ஆகிறது.

கன்னடத்தில் திரிஷூல் இயக்கத்தில் இப்படம் ரீமேக் செய்யப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த வீணா மாலிக் இதில் நாயகியாக நடிக்கிறார். அவர இடம் பெற்றுள்ள பட ஸ்டில்கள் ரவுண்டு அடிக்க ஆரம்பித்துள்ளன.

வித்யா பாலனின் டர்ட்டி பிக்சர் படங்கள் வெளியானபோது அது காட்டுத் தீ போல படு வேகமாக பரவியது. மேலும் வித்யாவின் கவர்ச்சி அழகுணர்வுடன் ரசிக்கப்பட்டது. இருப்பினும் வீணாவின் படங்களுக்கு அந்த அளவுக்கு கெளரவம் கிடைக்கவி்ல்லை என்ற பேச்சு எழுந்துள்ளது.

படத்தைப் பார்த்துட்டு உங்க கமெண்ட்டைச் சொல்லுங்க...

 

பாலியல் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் ‘டாக்டர் எக்ஸ்’

Sun News Doctor X Program
செக்ஸ் பற்றிய சர்வே வெளியிடும் புத்தகங்கள், நாளிதழ்களின் சர்க்குலேசன் எகிறுவதைப் போல தொலைக்காட்சிகளில் செக்ஸ் பிரச்சினைக்கு தீர்வு கூறும் நிகழ்ச்சி என்றால் கூடுதல் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.

சன் நியூஸ் தொலைக்காட்சியில் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் டாக்டர் எக்ஸ் நிகழ்ச்சி தொலைபேசி வாயிலாக நேயர்களின் பாலியல் கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர். பிரபலமான செக்ஸாலிஸ்ட்டுகள், மனநல மருத்துவர்களுடன் நேயர்கள் தொலைபேசி வாயிலாக தங்களில் பாலியல் குறித்த சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.

கடந்த சனிக்கிழமை மனநல மருத்துவர் டாக்டர் அசோகன் பாலியல் மற்றம் மனநலம் தொடர்பான நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பாலுணர்வு என்பது முதலில் மனதோடு தொடர்புடையது. நமக்கு இது பிடித்திருக்கிறது என்று மனம் (மூளை ) உணர்ந்து அதன் பின்தான் அவை ஹார்மோன்களை தூண்டுகின்றன. பின்னர் பாலுறுப்புகளுக்கு உணர்வுகளை தருகிறது என்றார்.

அதேபோல் எத்தனை வயது வரை செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் என்ற நேயர்களின் கேள்விக்கு பதிலளித்த மருத்துவர், உறவு கொள்வதற்கு வயது ஒரு தடையில்லை என்றார். ஆரோக்கியமான உடல்நிலையும், மனதும் இருந்தால் அறுபது வயதிலும் கூட தாம்பத்ய உறவு கொள்ளலாம் என்று நேயர்களுக்கு அவர் பதிலளித்தார்.

பாலியல் தொடர்பான கேள்விகளை கேட்பவர்களுக்கு மட்டுமல்லாது நிகழ்ச்சியைப் பார்க்கும் நேயர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கிறது என்பதால் இதற்கு வரவேற்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

 

'தவளை வாயால்' கெட்ட ஹன்சிகா!

Hansika Scratches Head With It Dept   
நான் விலை உயர்ந்த பிஎம்டபுள்யூ கார் வாங்கியிருக்கேனே என்று பெருமையாகச் சொன்ன ஹன்சிகாவின் பெயர் தற்போது வருமான வரித்துறையினர் பட்டியலில் சேர்ந்துள்ளதாம்.

நடிகை ஹன்சிகா ரூ.60 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபுள்யூ கார் வாங்கியுள்ளார். அம்மமணி அதில் தான் ஷூட்டிங்கிற்கும் வந்து செல்கிறார். நான் புது கார் வாங்கியிருக்கேனே என்று போற இடங்களிலெல்லாம் பெருமையாக பீத்தியபடி இருந்திருக்கிறார்.

இந்த செய்தி அப்படியே காத்துவாக்கில் வருமான வரித்துறை அலுவலக்த்திற்கு சென்றுள்ளது. அவர் எப்படி இவ்வளவு காஸ்ட்லி கார் வாங்கினார் என்று அவர்கள் யோசிக்கிறார்களாம். மேலும் இனி ஹன்சிகா மீது ஒரு கண் வைக்கவும் தீர்மானித்துள்ளனராம்.

கார் வாங்கினோமா, ஜாலியா ஓட்டுனோமான்னு இல்லாம அதன் விலை முதல் கொண்டு தம்பட்டம் அடிச்சா இப்படி தான் நடக்கும். நடிகை அனுஷ்கா மெர்சிடீஸிலும், பூமிகா ஆடியிலும் ஷூட்டிங் வந்தனர். விளைவு அவர்கள் இரண்டு பேர் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

வருமானத்திற்கும், செலவுக்கும் சரியான கணக்கு வைத்திருந்தால் பிரச்சனையில்லை. இல்லை என்றால் சிக்கல் தான். இதெல்லாம் புரியாத சின்னப் புள்ளையாவே இருக்கிறாரே ஹன்சிகா...

ஹன்சிகாவின் புதிய பிஎம்டபிள்யூ கார்

 

பெங்களூரில் செட்டிலாகவில்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கன்னடத்தில் நடித்து வரும் மலையாள நடிகை பாமா, கூறியதாவது: கன்னடத்தில் 'மைனா' ரீமேக்கில் நடித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து நிறைய கன்னட படங்கள் ஒப்பந்தமானது. அதேவேளையில், மலையாளத்திலும் நடித்து வருகிறேன். கேரளாவில் அடுத்தடுத்து என் படங்கள் ரிலீசாக உள்ளன. தமிழில் 'சேவற்கொடி' எனக்கு திருப்புமுனையாக அமையும் என்று நம்பினேன். அந்த ஆசை நிறைவேறவில்லை. இப்போது மலையாளம், கன்னடத்தில் மட்டுமே நடிக்கிறேன். தமிழில் சிறப்பான வேடம் கிடைக்கும் என்று காத்திருக்கிறேன். கன்னடப் படங்களில் நடிப்பதால் பெங்களூரில் செட்டிலாகிவிட்டதாக சொல்வது தவறு. கேரளாவில்தான் இருக்கிறேன்.


 

சிசுக்கொலைக்கு எதிரான படம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஷில்பா மோஷன் ஒர்க்ஸ், வேர்ல்ட் லைப் ப்ளிக் நிறுவனங்கள் சார்பில் விவேக் தீக்ஷித், சுசாந்த் கர்டு தயாரிக்கும் படம், 'மடிசார் மாமி மதன மாமா'. மிதுன், ரிஷி பூட்டானி, மான்சி, காயத்ரி, புனீத் எஸ்ஸர் உட்பட பலர் நடிக்கின்றனர். கதையின் நாயகியாக 3 வயது அஞ்சலி நடிக்கிறாள். ஒளிப்பதிவு, கபில் கே.கவுதம். இசை, எல்.வி.கணேசன். பாடல்கள்: யுகபாரதி, பழனிபாரதி, முத்து விஜயன். கதை, ரவி பிரகாஷ். வசனம்: சுதேசிகன், ரவி பிரகாஷ். திரைக்கதை எழுதி, எடிட்டிங் செய்து, படத்தை இயக்கும் ரஞ்சித் போஸ், நிருபர்களிடம் கூறியதாவது:

முழுநீள காமெடிப் படம் இது. ஆபாச காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ படத்தில் இருக்காது. தியேட்டருக்கு குழந்தைகளுடன் வந்து பெற்றோர்கள் பார்க்க வேண்டிய முக்கியமான படம். பெண் சிசுக் கொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் கதை. பெண் குழந்தைகளை வெறுக்கும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வுப் படமாகவும் அமையும். 2 ஆயிரம் வருடங்கள் பழமையான கோயிலில் முக்கிய காட்சிகள் படமாகியுள்ளன. ரிஷி பூட்டானி, காயத்ரி இருவரும் படத்தில் காதலர்களாக நடித்தனர். இறுதியில், நிஜ காதலர்களாகி விட்டனர்.

கிளைமாக்சில் வரும் பிரிவின் வலியைச் சொல்லும் 'பால்வாசம்' என்ற பாடல், கல்மனதையும் கரைய வைக்கும். நேரடி இசைக்கருவிகளை வைத்து இசையமைத்த எல்.வி.கணேசன், ஒரு பாடலுக்கு 80 வயலின்களைப் பயன்படுத்தி இருக்கிறார். காதல் பாடலைப் படமாக்க, மகாராஷ்டிராவில் உள்ள ஒரு தீவில், 4 மணி நேரம் தண்ணீரில் நடந்து சென்று வந்தது மறக்க முடியாத அனுபவம். படம் முடிந்துவிட்டது. ஜூலையில் ரிலீஸ் ஆகிறது.


 

கிசு கிசு - நடிகையை தடுக்கும் கணவர்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

ஒரு படம் இயக்கறப்பவே மூணு ஸ்கிரிப்ட்டுக்கான கதைகள இயக்கங்க கைவசம் வச்சிருக்காங்களாம்... வச்சிருக்காங்களாம்... ஆனா லவ் இயக்கம் ஒரு படம் இயக்கி முடிச்சப்பறமும் அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட ரெடி பண்றதுக்கு வருஷ கணக்குல நாளை கழிக்கிறாராம். இதாலேய அவரை வெச்சி படம் இயக்க தயாரிப்புங்க தயங்குறாங்களாம்... தயங்குறாங்களாம்... வெற்றி படம் கொடுக்குறது முக்கியம்தான். அதோட அதிர்ஷ்ட காத்து வீசறப்பவே புது படங்களயும் கமிட் பண்ணாதான் இப்போவுள்ள போட்டில நிக்க முடியும். இல்லேன்னா சுத்தமா ஒதுக்கிடுவாங்கன்னு நட்பு இயக்கங்க அவருக்கு அட்வைஸ் கொடுக்கிறாங்களாம்... கொடுக்கிறாங¢களாம்...

தான் இயக்குற படத்தையே மாத்து மொழில பிரிய இயக்கம் ரீமேக் பண்றது வழக்கமாம்... வழக்கமாம்... என் படத்தை நானே ரீமேக் பண்றது த்ரில்லா இருக்கும்னு அடிக்கடி சொல்லிட்டிருந்தாராம். ஆனா அந்த படங்கள் சமீபகாலமா கைகொடுக்கலையாம். அதனால இனி மத்தவங்க படத்தை மட்டும் ரீமேக் பண்றதுன்னு முடிவோடு இருக்காராம். கூடிய சீக்கிரமே கோலிவுட்ல உருவான நாடோடியான படத்த பாலிவுட் மொழில ரீமேக் பண்ணப்போறாராம். பெரிய தயாரிப்புங்க ஜகா வாங்கினதால, கம்மி பட்ஜெட்ல இந்த படத¢தை எடுத்து, புதுமுகங்களை நடிக்க வைக்குறாராம்...
வைக்குறாராம்...

மம்த ஹீரோயினை பின்னணி பாடச் சொல்லி நெறைய பேர் கேக்குறாங்களாம்... கேக்குறாங்களாம்... ஆனா, நடிப்புல மட்டுமே கவனம் செலுத்துப்போறேன்னு நடிகை எஸ் ஆகுறாராம்... ஆகுறாராம்... நடிகை பாடாம இருக்கிறதுக்கு பின்னாடி காரணம் இருக¢காம். பின்னணி பாடும்போது, தேவியான இசையோடு இணைத்து கிசு கிசு கிளம்பிச்சி. அதனால நடிகை பாட்டு பாடுறதை அவரோட கணவர்குலம்
தடுக்கிறாராம்... தடுக்கிறாராம்...


 

டுவிட்டரில் காதலன் படம் மல்லிகாவுக்கு தலைவலி

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் சமீபத்தில் கேன்ஸ் பட விழாவுக்கு பின்னழகும், முன்னழகும் பளிச்சிடும் வகையில் படுகவர்ச்சியாக உடை அணிந்து சென்றார். பட விழாவில் பங்கேற்றது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டார். அதில் வெளிநாட்டு தொழில் அதிபர் டோமினிக் டெஸிக்வுடன் ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இது மல்லிகாவுக்கு தலைவலி ஏற்படுத்தி உள்ளது. மல்லிகா ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போதும் அதற்கான செலவை டோமினிக்தான் ஏற்கிறார். இதையடுத்து இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது என்று பேச்சு எழுந்துள்ளது. இதுபற்றி கேள்விப்பட்ட மல்லிகாவுக்கு விர்ரென கோபம் தலைக்கேறியது. அவர்கூறும்போது, 'இது சரியான கேலிகூத்து. என்னை ஸ்பான்ஸர் செய்வதற்கு இன்னொரு ஆள் தேவை இல்லை. டோமினிக்கின் சொந்த விமானத்தில் நானும் எனது சகோதரரும் வெளிநாடு சென்றதை விமர்சிப்பதும் எனக்கு எதிரானவர்கள் செய்யும் வேலைதான். அவரை இந்தியாவுக்கு வரும்படி அழைத்திருக்கிறேன்ÕÕ என்றார்.


 

மீண்டும் நடிக்கிறார் பூர்ணிமா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நல்லு ஸ்டூடியோஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் படம், 'ஆதலால் காதல் செய்வீர்'. சுசீந்திரன் எழுதி இயக்குகிறார். போக்கிரி ரமேஷ் பாபு மகன் சந்தோஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மனிஷா யாதவ் ஹீரோயின். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சூர்யா ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் வாலி, யுகபாரதி. இதில் 28 வருடங்களுக்குப் பிறகு பூர்ணிமா பாக்யராஜ் நடிக்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது: தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 70 படங்களுக்கு மேல் நடித்தேன். ரஜினியுடன் நடித்த 'தங்க மகன்' மற்றும் 'விதி', 'டார்லிங் டார்லிங்' உட்பட பல படங்கள் என்னை அடையாளம் காட்டின. 84- ல் பிரபுவுடன் நடித்த 'உங்க வீட்டு பிள்ளை' என் கடைசி படம். பிறகு பாக்யராஜை திருமணம் செய்துகொண்டு, நடிப்புக்கு முழுக்கு போட்டேன். இப்போது சுசீந்திரன் ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்கும்படி கேட்டார். பாக்யராஜும், சாந்தனுவும் மீண்டும் என்னை நடிக்கச் சொல்லிக்கொண்டிருந்தனர். ஒப்புக்கொண்டேன். இவ்வாறு பூர்ணிமா கூறினார்.


 

ஸ்டன்ட் மாஸ்டருடன் மிஷ்கின் தகராறு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட மோதலால் மிஷ்கின் இயக்கும் படத்தை விட்டு வெளியேறினார் ஸ்டன்ட் மாஸ்டர். 'சித்திரம் பேசுதடிÕ, 'அஞ்சாதேÕ, 'யுத்தம் செய்Õ, 'நந்தலாலாÕ படங்களை இயக்கியவர் மிஷ்கின். அடுத்து 'ஸ்பைடர்மேன்Õ பாணியில் 'முகமூடிÕ என்ற சூப்பர் மேன் கதையை படமாக்கி வருகிறார். ஜீவா, பூஜா ஹெக்டே நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்துக்காக சண்டை காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தார். ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் காட்சிகளை அமைத்தார். குறிப்பிட்ட ஒரு காட்சியில் திலீப் குழுவிலிருந்த ஒரு ஸ்டன்ட் நடிகர், மிஷ்கினின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடிக்காததால் அவரை பட குழுவினர் எதிரில் மிஷ்கின் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் திலீப் கோபம் அடைந்தார். இதுபற்றி இயக்குனரிடம் வாக்குவாதம் செய்தார். இருவரும் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இப்பிரச்னையையடுத்து படத்திலிருந்து விலகுவதாக திலீப் கூறினார். மிஷ்கினும் அவருக்கு பதிலாக ஆக்ஷன் பிரகாஷ் என்ற ஸ்டன்ட் இயக்குனரை ஒப்பந்தம் செய்துவிட்டார்.

இதுபற்றி திலீப்பிடம் கேட்டபோது, 'Ôஎனக்கு கைநிறைய படங்கள் இருக்கிறது. மலையாளத்தில் மட்டுமே 6 படங்களில் பணியாற்றுகிறேன். இதுதவிர தமிழில் அரை டஜன் படங்களில் பணியாற்றுகிறேன். ÔமுகமூடிÕ ஷூட்டிங்க¤ல் சில விஷயங்கள் ஒத்துப்போகவில்லை. குறிப்பாக இயக்குனர் கேட்கும் தேதிகளை வேறு படங்களுக்கு கொடுத்திருப்பதால் அதை அட்ஜெஸ்ட் செய்ய முடியவில்லை. எனவே படத்திலிருந்து வெளியேற முடிவு செய்தேன். இதுபற்றி ஸ்டன்ட் யூனியனிலும் கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறேன். மிஷ்கினுடன் எனக்கு எந்த பிரச்னையும் கிடையாதுÕÕ என்றார். 'Ôதிலீப்புடன் எந்த பிரச்னையும் இல்லைÕÕ என்றார் மிஷ்கின். பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் என கூறி, இருவரையும் அமைதியாக பிரிய தயாரிப்பு தரப்பு சொன்னதாம். இதனால் இவர்கள் புகார் ஏதும் கூறவில்லை என தெரிகிறது.


 

ரசிகனின் கைத்தட்டல் கலைஞர்களுக்கு டானிக்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கவியரசு கண்ணதாசனின் பேரன் ஆதவ் ஹீரோவாக அறிமுகமாகும் படம், 'பொன்மாலைப் பொழுது'. ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். ஏ.ஜி.கிரியேஷன் சார்பில் கே.அமிர்தகவுரி தயாரிக்கிறார். ஏ.சி.துரை இயக்குகிறார். சி.சத்யா இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கமல்ஹாசன் பாடல்களை வெளியிட்டுப் பேசியதாவது: கண்ணதாசனின் பேரனை ஆதரித்துப் போற்ற வேண்டியது என் போன்றவர்களின் கடன், கடமை. எனக்கு இலவசமாக தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களில் ஒருவர் கண்ணதாசன். அவரையெல்லாம் தொட்டுப்பார்த்து பூரிப்படைந்த காலங்கள் உண்டு. அவருடைய பேரன் சினிமாவுக்கு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்கள் அவரை கைதட்டி வரவேற்பார்கள். ரசிகர்களுடைய கைதட்டலின் சக்தி அவர்களுக்கு தெரிவதில்லை. ஆனால், அதுதான் கலைஞனுக்கு டானிக். 'விஸ்வரூபம்' வெளிவரும் வரை எந்த விழாவிலும் கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்திருந்தேன். அதற்காக, இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்க்க முடியாது. ஹீரோவின் தந்தை மறைந்த கலைவாணன் கண்ணதாசன் என் நண்பர். அவர் சார்பில் நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். விழாவில் வைரமுத்து, இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், பாண்டிராஜ், ஜி.என்.ஆர்.குமரவேலன், தயாரிப்பாளர் டி.சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இணை தயாரிப்பாளர் சத்ய லட்சுமி வரவேற்றார். முடிவில் இயக்குனர் ஏ.சி.துரை நன்றி கூறினார்.


 

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா, துபாயில் நடைபெற இருக்கிறது. சர்வதேச அளவில் இந்திப் படங்களுக்கு மட்டுமே விருது விழா நடைபெற்று வருகிறது. தென்னிந்திய படங்களுக்கு நடத்தப்படவில்லை. அதை மாற்றும் விதமாகவும் தென்னிந்திய படங்களை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்லும் விதமாகவும், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா (சிமா) துபாயில் நடத்தப்படுகிறது. வரும் 21 மற்றும் 22-ம் தேதிகளில் நடக்கும் இவ்விழாவுக்கு தினகரன் நாளிதழ் பிரின்ட் மீடியா பார்ட்னராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்பட உலகினர் கலந்துகொள்கின்றனர். நான்கு மொழிகளிலும் 2011-ல் வெளியான படங்களிலிருந்து சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர், பாடகி உட்பட 19 பிரிவுகளில் விருது வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதை இணையதளம் மூலம் ரசிகர்கள் தேர்வு செய்வார்கள். அதிலிருந்து சிறப்பு ஜூரிகள் இறுதியாக முடிவு செய்வார்கள். மேலும் பிரபல நடிகர், நடிகைகள் பங்குபெறும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட இருக்கிறது. விழாவின் முதல் நாளன்று நான்கு மொழிகளிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படங்களின் பிரிமியர் நிகழ்ச்சி நடைபெறும். அந்தந்த படங்களின் நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்படுகிறது. விழா நிகழ்ச்சிகளை நடிகர் மாத வன், நடிகைகள் லட்சுமி மஞ்சு, பார்வதி ஓமனக்குட்டன் ஆகியோர் தொகுத்து வழங்குவார்கள்.


 

தமிழ் சினிமாவில் தொடரும் டைட்டில் குழப்பம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ் சினிமாவில் படங்களுக்கு தலைப்பு வைப்பதில் முறையான வழிமுறைகள் இல்லாததால் தொடர்ந்து குழப்பங்கள் உருவாகி வருகிறது. தமிழ் சினிமாவுக்கான தலைப்பை பிலிம் சேம்பர், தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர் கில்டு ஆகிய மூன்று இடங்களில் பதிவு செய்யலாம். புதியவர்கள் படம் எடுக்க வரும்போது முதலில் தங்கள் கம்பெனியை பதிவு செய்து மேற்கண்ட ஏதாவது ஒன்றில் உறுப்பினராக வேண்டும். இதில் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக, ஒரு லட்சம் ரூபாய் கட்டணம், சேம்பர், கில்டில் உறுப்பினராக சில ஆயிரங்கள்தான். மூன்று இடங்களிலுமே படத்தின் பெயரை பதிவு செய்ய 500 ரூபாய் மட்டும்தான் கட்டணம்.

மூன்று அமைப்புகளும் மாதம் ஒருமுறை தங்கள் அமைப்புக்கு வரும் தலைப்புகளை பரிமாறிக் கொள்ளும். இதனால் ஒரே தலைப்பு இருவருக்கு செல்லாமல் தவிர்க்கப்படும். ஆனால் இதையும் மீறி சில தவறுகள் நடந்து விடுகிறது. அதாவது ஒருவர் பதிவு செய்துள்ள தலைப்பு இன்னொருவருக்கு தேவைப்பட்டால் அதற்கு முன்னால் ஒரு சிறிய வார்த்தையை சேர்த்து புதிய தலைப்பாக பதிவு செய்வார்கள். 'கடல்' என்பது ஒருவர் பதிவு செய்த தலைப்பு என்றால் அதற்கு முன் 'நீல' என்ற வார்த்தையை சேர்த்து 'நீல கடல்' என்று பதிவு செய்வார். படத்தின் விளம்பரத்திலும், டைட்டில் கார்டிலும் 'நீல' என்பதை சிறிய எழுத்தில் போட்டு கடல் என்பதையே பெரிதாகப் பயன்படுத்துவார்கள்.

இன்னொரு தவறு, இதையே வியாபாரமாக நடத்துபவர்களால் ஏற்படுகிறது. கில்டு, மற்றும் சேம்பரில் உறுப்பினர் கட்டணம் குறைவு என்பதால் ஏதாவது ஒரு பெயரில் கம்பெனியை பதிவு செய்து நல்ல தலைப்புகளை கண்டுபிடித்து பதிவு செய்து வைத்து விடுவார்கள். ஆனால் அந்த தலைப்பில் படம் எடுக்க மாட்டார்கள். ஆண்டுதோறும் தலைப்பை புதுப்பித்து வருவார்கள். ஏதாவது பெரிய நிறுவனம் அந்த தலைப்பை கேட்கும்போது அவர்களிடம் பல லட்சம் வரை பணத்தை பெற்றுக் கொண்டு தலைப்பை விட்டுத் தருவார்கள். இப்படிப்பட்ட குழப்பங்களால் தலைப்பு பிரச்னைகள் உருவாகிறது.
சமீபத்திய படங்களில் இந்த பிரச்னையை சில படங்கள் சந்தித்தன. விஷால் நடிக்கும் 'சமரன்' படத் தலைப்பை ஏற்கெனவே சீமான் பதிவு செய்து வைத்துள்ளார். அதனால் 'சமரன்' இப்போது 'சமர்' ஆகியுள்ளது. 'தாண்டவக்கோனே' என்ற பெயரில் படம் தயாராகி இருக்கிறது. இப்போது விக்ரம், 'தாண்டவம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

'தாண்டவம்' என்ற பெயரில் ஏற்கனவே ஒரு படம் தயாராகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 'மதராசபட்டினம்' விஜய் இயக்க விஜய் நடிக்கும் படத்துக்கு 'தலைவன்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதே தலைப்பை இன்னொருவர் பதிவு செய்து வைத்திருக்கிறார். இதற்கிடையே 'வருவான் தலைவன்' என்ற பெயரில் ஒரு படம் உருவாகிறது. கமல்ஹாசன் 'தலைவன் இருக்கின்றான்' என்ற தலைப்பை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 'கள்ளத்துப்பாக்கி' என்ற பெயரில் ஒரு படம் தயாராகி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்துக்கு 'துப்பாக்கி' என்று பெயர். இருவரில் யார் பெயரை மாற்றுவது என்ற சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'சேட்டை' ஆகியிருக்கிறது. 'மைக்செட் பாண்டி', 'பாண்டி ஒலிபெருக்கி நிலையம்' என மாறியிருக்கிறது. 'இவனும் பணக்காரன்' என்ற படத்தின் தலைப்பு 'இவனும் பாசக்காரன்' என்று மாற்றப்பட்டுள்ளது. இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இதைத் தவிர பழைய பட தலைப்புகளை மீண்டும் பயன்படுத்த சட்டப்படியான தடை எதுவும் இல்லையென்றாலும் பழைய படத்தின் தயாரிப்பாளரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் விதிமுறை வகுத்துள்ளது. இதையும் மீறி பழைய படத்தின் தலைப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை நிறைய படங்கள் வந்திருந்தாலும் 'எதிர்நீச்சல்', 'பில்லா ரங்கா', 'நீயா', 'மூன்று தெய்வங்கள்', 'கவுரவம்' இப்படி பழைய தலைப்புகள் மறு அவதாரம் எடுக்கத் தயாராக உள்ளன. "தலைப்புகள் அனைத்தும் ஒரே இடத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். அவை உடனுக்குடன் இணைய தளத்தில் வெளியிடப்பட வேண்டும். எந்த தலைப்புக்கும் ஒரு ஆண்டுக்குமேல் நீட்டிப்பு தரக்கூடாது என்பது போன்ற கடுமையான நடைமுறைகளை கொண்டுவந்தால்தான் தலைப்பு குழப்பம் தீரும். செம்மொழியான தமிழ்மொழியில் தலைப்புக்கு பஞ்சமும், குழப்பமும் நீடிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது'' என்கிறார் பிரபல தயாரிப்பாளர் ஒருவர்.


 

சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு ஓட்டலில் தங்கி நடிக்கிறார் இலியானா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பாலிவுட்டில் கிசுகிசுக்களால் விரக்தி அடைந்த இலியானா, சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு ஓட்டலில் தங்கி நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இலியானா. தமிழில் 'நண்பன்Õ படத்தில் நடித்தார். இப்படத்தையடுத்து இந்தியிலும் கால்பதிக்க முடிவு செய்தார். 'பர்பிÕ என்ற படத்தில் பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து நடித்து வருகிறார். தென்னிந்திய நடிகைகளை குறிவைத்து தாக்கும் பாலிவுட் மீடியா, இலியானாவையும் விட்டு வைக்கவில்லை. பிரியங்கா சோப்ராவுடன் மோதல், தயாரிப்பாளருடன் மோதல், ரன்பீருடன் நெருக்கம் என்று அவரை பற்றி தினம் தினம் ஒரு கிசுகிசு கிளப்பிவிடுகிறார்கள். இதனால் விரக்தி அடைந்துள்ள அவர் பாலிவுட்டுக்கு முழுக்குபோட்டுவிட்டு மீண்டும் தென்னிந்திய படங்களிலேயே கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. பெற்றோருடன் கோவாவில் தங்கி இருக்கும் இலியானாவுக்கு மும்பை பாந்த்ராவில் சொந்த வீடு உள்ளது. பாலிவுட்டில் கால் பதிக்க நினைக்கும் தனக்கு எதிராக சிலர் அடிக்கடி பிரச்னைகளை கிளப்பி விடுவதில் மனம் நொந்தார். இதனாலேயே சொந்த வீடு இருந்தும் அதில் தங்காமல், நட்சத்திர ஓட்டலில் தங்கி Ôபர்பிÕ படத்தில் நடிக்கிறார். அந்த வீட்டை அவர் வாடகைக்கு விட்டுள்ளார். சீக்கிரமே அதை விற்கவும் யோசித்திருக்கிறாராம்.


 

பச்சைப் புரட்சி... புதிய அமைப்பு தொடங்கினார் நடிகர் விக்ரம்!!

23 Vikram Announces New Green Revolution Aid0136   | மேலும் படங்கள்  
சென்னை: பச்சைப் புரட்சி எனும் புதிய அமைப்பைத் தொடங்கினார் நடிகர் விக்ரம். இந்த அமைப்பு மூலம் தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 1 லட்சம் மரங்களை நட அவர் திட்டமிட்டுள்ளார்.

தமிழ்ப் பட உலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விக்ரம் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் 'ஹபிடேட்' என்ற அமைப்பின் இளைஞர் பிரிவு தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் 23-வது நிர்வாகக் குழு கூட்டம் கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில் நடந்தது.

அதில் கலந்து கொண்ட விக்ரம், நேற்று சென்னை திரும்பினார். மாலையில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது பச்சைப் புரட்சி, கற்க கசடற எனும் இரு புதிய திட்டங்களை அறிவித்தார்.

மேலும் அவர் கூறியது:

ஐக்கிய நாடுகள் சபையின் 'ஹபிடேட்' தூதராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன்.

இந்த சமுதாயம் எனக்கு நிறைய தந்திருக்கிறது. எனக்கு ஒரு பொறுப்பு வந்திருக்கிறது. அதற்காக சமுதாயத்திற்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும்.

'பச்சைப்புரட்சி'

இதற்காக 'பச்சைப் புரட்சி' என்ற அமைப்பை நான் தொடங்கி இருக்கிறேன். இந்த அமைப்பின் மூலம் என் ரசிகர்களைப் பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் மரங்களை நடுவதற்கு திட்டமிட்டிருக்கிறேன்.

இந்த வேலைகளை இன்றே தொடங்கிவிட்டேன். சென்னை நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல் கட்டமாக 100 செடிகள் நடப்பட்டுள்ளன.

இதற்காக ஒரு கமிட்டியை உருவாக்கியிருக்கிறோம். அதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும், நண்பர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.

கற்க கசடற...

இதையடுத்து 'கற்க கசடற' என்ற அமைப்பையும் தொடங்க திட்டமிட்டுள்ளேன். இதன் மூலம் குடிசைப் பகுதி குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கல்வி அறிவை வளர்க்க விரும்புகிறேன்.

நான் படங்களில் மொட்டை போட்டால் என் ரசிகர்களும் அதே போல் மொட்டை அடித்துக் கொள்கிறார்கள். நான் 'பிரெஞ்ச்' தாடி வைத்தால் அவர்களும் 'பிரெஞ்ச்' தாடி வைத்துக் கொள்கிறார்கள். காசி படத்தில் நான் கண் பார்வையற்றவனாக நடித்த போது கண் தானம் செய்வதாக அறிவித்தேன். என்னுடன் ஆயிரம் ரசிகர்களும் கண் தானம் செய்தார்கள். அந்த நிகழ்ச்சி என்னை பிரமிக்க வைத்தது.

இப்போது நாடு செழிக்க, சுற்றுச் சூழல் நன்றாக இருக்க நான் மரம் நடப் போகிறேன். ஒன்றிரண்டல்ல... லட்சக்கணக்கில். எனவே என் ரசிகர்களும் மரம் நடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவற்றை வெறும் கணக்குக்காக நடாமல், அவற்றை முறையாகப் பராமரிக்கவும் எங்கள் கமிட்டி திட்டமிட்டுள்ளது.

எனவே 'பச்சைப் புரட்சி' இயக்கத்தில் என் ரசிகர்களை முழுமையாக ஈடுபடுத்த விரும்புகிறேன். தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளாவிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்திருக்கிறேன்," என்றார்.

ஏற்கெனவே விக்ரம் பவுண்டேஷன் எனும் தனது அமைப்பின் மூலம் ஏராளமான நற்பணிகளை விக்ரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பேட்டியின் போது நடிகர் விக்ரம் ரசிகர் மன்ற தலைவர் சூரியநாராயணன், விக்ரமின் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

பழைய சென்னையின் அடையாளம் நடராஜுக்கு மூடுவிழா!!

Chennai Old Theater Closed Its Screen Aid0136
எத்தனையோ விஷயங்களில் கசப்பான நினைவுகள் இருந்தாலும், மனம் எப்போது நினைத்தாலும் இனிமையாகவே உணரும் ஒரு விஷயம் திரையரங்குகள்.

அதுவும் பள்ளி / கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்ட அல்லது வீட்டுக்குத் தெரியாமல் இரண்டாவது ஷோ பார்த்த திரையரங்குகளின் நினைவுகள், மனதுக்குப் பிடித்தவளின் முகத்தைக் கூட பின்னுக்குத் தள்ளி விடும். காரணம், கூத்து, நாடகம், சினிமா என பொழுதுபோக்குகளால் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள் தமிழர்கள்!

இத்தகைய சினிமா அரங்குகள் ஒவ்வொன்றும் மூடுவிழா காணும்போதும், மனம் சற்று கனத்துப் போவது உண்மை.

சென்னையில் ரஹேஜா டவராக மாறிவிட்ட எல்பின்ஸ்டோன், பின்னாளில் அலங்காராக அறியப்பட்டு இப்போது கமர்ஷியல் வளாகமாகிவிட்ட குளோப், பிளாஸா, பாரகன், கெயிட்டி, சன், சித்ரா, சயானி, கிரவுன், மினர்வா, முருகன், மேகலா, ஆனந்த், மினி ஆனந்த், சபையர், எமரால்ட், ப்ளூ டடமன்ட் காமதேனு, உமா, ராம், புவனேஸ்வரி, வசந்தி, ராக்ஸி, சரஸ்வதி, பத்மநாபா... இப்படி மூடு விழா கண்ட அரங்குகள் ஏராளம்.

பழைய சென்னைவாசிகளை அல்லது எழுபது எண்பதுகளில் இங்கே 55 காசுக்கும் 1 ரூபாய்க்கும் படம் பார்த்தவர்களைக் கேட்டால் கண்கள் மலர, அந்தக் கால இனிமை பேசுவார்கள்.

மூடுவிழா காணும் திரையரங்குகளில் வரிசையில் இப்போது புதிதாய் இடம்பிடித்துள்ளது நடராஜ். சென்னையின் மிகப் பழமையான தியேட்டர்களில் இதுவும் ஒன்று. சூளையில் திறக்கப்பட்ட முதல் தியேட்டர். 1964-ல் திறக்கப்பட்ட இந்த தியேட்டரில் திரையிடப்பட்ட முதல் படம் ஜெமினியின் வாழ்க்கைப் படகு.

பின்னர் அமரர் எம்ஜிஆரின் தாழம்பூ, நடிகர் திலகத்தின் அஞ்சல் பெட்டி 520 போன்ற படங்கள் வெளியாகின.

ஆனால் இந்திய சினிமாவின் மெகா ஹிட் படமான ஷோலே இங்கு திரையிடப்பட்டு வசூலை வாரிக் குவித்தது. தொடர்ந்து யாதோங்கி பாரத், ஹம்கிஸிஸே கம்நஹி கம்நஹி போன்ற சூப்பர் ஹிட் படங்கள் இங்கு வெளியாகி நல்ல வசூலைப் பெற்றன. இந்தப் பகுதியைச் சுற்றி வசிக்கும் வட மாநில மக்களின் விருப்பமான திரையரங்கமாக இருந்தது நடராஜ்.

கால மாற்றம், வசதிக் குறைவு, ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புக்கேற்ப நவீன வசதிகள் இல்லாமை போன்றவற்றால் நடராஜ் தள்ளாட ஆரம்பித்தது. இருந்தாலும் அவ்வப்போது எம்ஜிஆரின் பழைய படங்களை புத்தம் புதிய பிரிண்டாக்கி, ரசிகர்கள் ஆதரவோடு திரையிட்டு வந்தது நடராஜ்.

இந்த நிலையில் இத்திரையரங்கு திடீரென மூடப்பட்டு உள்ளது. தியேட்டரை இடித்து விட்டு வணிக வளாகம் கட்ட நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சூளை பகுதியில் இருந்த பிரபலமான திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், நடராஜும் இப்போது தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது, அந்தப் பகுதியில் வசிக்கும் பழைய காலத்து ரசிகர்களை சோகத்துக்குள்ளாக்கிவிட்டது.

ஆனால், மீண்டும் இங்கு வணிக வளாகம் எழும்பும்போது, மல்டிப்ளெக்ஸ் திரையரங்கம் இரண்டு திறக்கப்படும் என பங்குதாரர்களில் ஒரு தரப்பினர் கூறியுள்ளனர். சூளை ரசிகர்களுக்கு இது ஒரு ஆறுதல்!
 

'நீங்களும் ஹீரோதான்'... ட்ரை பண்ணுங்க!

Director Needs New Faces Period Film Aid0136
பாலாவின் ஐந்து படங்களில் உதவி இயக்குநராக இருந்தவர் ரவி. ஆச்சார்யா என்ற ஒரு படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு தன் பெயரையே 'ஆச்சார்யா ரவி' என மாற்றிக் கொண்ட அவர், இப்போது ஒரு புதிய படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தின் கதை நிகழும் காலம் 1978-ம் ஆண்டு. அன்றைக்கு பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி என்பது 11-ம் வகுப்பு. ப்ளஸ்டூ கிடையாது. பியூசிதான்!

இந்த பியூசி காலகட்டத்தில் படித்த மாணவர்களின் கதையைத்தான் இப்போது படமாக்கப்போகிறார். மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி போன்ற ஊர்களைச் சேர்ந்த மாணவர்கள், உறவினர்களைச் சுற்றிச் சுழலும் கதை இது.

கதை ரெடி... வசனம் ரெடி... தயாரிப்பாளர் கூட ரெடிதான்.. சரி ஷூட்டிங் கிளம்பலாம் என்றால், இன்னும் இரு ஹீரோக்கள் செட் ஆகவில்லையாம்.

ஏன்?

"அந்தக் காலத்தில் பார்த்த மாதிரி முகம், முடியமைப்பு கொண்ட இளைஞர்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். நிறையப் பேரப் பாத்துட்டேன். ஆனா யாரும் சரியா வரல... உங்கள்ல யாராவது இருந்தாலும் சொல்லுங்க. விவரங்களை போட்டோவோட aacharya.ravi@yahoo.com ஒரு மெயில் தட்டிவிடுங்க..." என்றார் ரவி.

இஷ்டம்னா... ஒரு மெயில் தட்ட கஷ்டமா என்ன!
 

ஒப்பற்ற மகான் சாய்பாபா மீண்டும் அவதரிப்பார்! - சிரஞ்சீவி

Chiranjeevi Pays Rich Tribute Sai Baba Aid0136  
புட்டபர்த்தி: பாபா ஒரு மகான். ஒப்பற்ற சமூக சேவகர், அவர் மீண்டும் அவதரிப்பார், என்றார் நடிகரும் காங்கிரஸ் பிரமுகருமான சிரஞ்சீவி.

புட்டபர்த்தி ஆசிரமத்தில் சாய்பாபா உடலுக்கு நடிகர் சிரஞ்சீவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், "பாபா இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

சாய்பாபா ஆன்மீக பணிகளில் மட்டுமின்றி சமூக சேவைகளிலும் சிறந்து விளங்கினார். நான் சில ஆண்டுகளுக்கு முன்புதான் அவரை சந்தித்தேன். அவர் என்னிடம், எப்படி இருக்கிறாய் பங்காரு (தங்கம்)? என்று விசாரித்தார். அப்போது நான் சினிமாவில் எனக்கு ஏற்பட்ட சில பிரச்சினைகள் பற்றி கூறினேன்.

அதற்கு அவர், இந்த பிரச்சினை உடனே தீர்ந்து விடும். நிம்மதியுடன் செல் என்றார். அவர் சொன்னபடியே எனது பிரச்சினை உடனடியாகத் தீர்ந்தது. சாய்பாபா போன்ற மிகச் சிறந்த மனிதநேயம் கொண்டவர்களால்தான் இந்தியா வளர்ச்சி பெற்று திகழ்கிறது. அவர் மீண்டும் இந்த உலகில் தோன்றி மக்களை காப்பார்," என்றார்.

பாபாராம் தேவ்: யோகா குரு பாபாராம் தேவ் கூறுகையில், "சாய் பாபாவின் மரணம் உடலுக்கு மட்டும்தான் அவரது ஆன்மாவுக்கு அல்ல. அவரது ஆன்மா என்றும் நம்முடன்தான் இருக்கும். சாய்பாபா ஆன்மீக உலகத்தின் சிறந்த குரு. மனிதனுக்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவைக்கு நிகரானது என்பதில் மிக உறுதியாக இருந்தவர்.

குடிநீர், மருத்துவம், கல்வி போன்றவற்றுக்கு சாய்பாபா முக்கியத்துவம் கொடுத்தார். அரசு செய்யாத பணிகளை கூட திறம்பட செய்து பொதுமக்களின் இதயத்தில் இடம் பெற்றார். அவர் விட்டுச் சென்ற பணிகளை தொய்வின்றி தொடர்வதுதான் நாம் அவரது ஆத்மாவுக்கு செலுத்தும் அஞ்சலி.

அன்பை மனிதர்களிடம் போதித்து அதன்படி தானும் நடந்து நல்ல வழிகாட்டியாக விளங்கினார் பாபா. அவரது போதனைகள் படி நடந்து நாட்டின் வளர்ச்சிக்காக நாம் பாடுபட வேண்டும்," என்றார்.
 

கோப்பையை இந்தியா வென்றால் நிர்வாண கோலத்தில் தரிசனம்-பூனம் பாண்டே

3 Days Go Poonam Pandey Strip Aid0091   | மேலும் படங்கள்  
மும்பை: இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாண கோலம் பூணுவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் மாடல் அழகி பூனம் பாண்டே.

இந்தியாவும், இலங்கையும் 2வது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முயற்சியில் நாளை இறங்கவுள்ளன. இந்த நிலையில் பூனம் பாண்டே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வளரும் நடிகையான இவர் இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டியின் முடிவுக்குப் பின்னர் தனது பிளாக்கில் எழுதுகையில், இந்தியா உலகக் கோப்பையை வென்றால், நான் நி்ர்வாண கோலம் பூணுவேன். அதை நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். நான் நிர்வாண கோலம் புகும் நாள் நெருங்கி விட்டது. எல்லோரும் காத்திருங்கள் என்று கூறியுள்ளார் பூனம்.

இந்தியா உலகக் கோப்பையை வெல்வதை விட இப்போது பூனத்தின் ஸ்டேட்மென்ட்தான் பரபரப்பாகியுள்ளது.

ஏற்கனவே தங்களது நாடுகள் உலகக் கோப்பைக் கால்பந்து பட்டத்தை வென்றால் நிர்வாண தரிசனம் தருவோம் என்று பராகுவே மாடல் லாரிசா ரிகுல்மே மற்றும் அர்ஜென்டினா மாடல் அழகி லூசியானா சலசார் ஆகியோர் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இந்த இரண்டு நாடுகளுமே பட்டத்தை வெல்லவில்லை, அந்த அழகிகளுக்கும் வேலை இல்லாமல் போய் விட்டது.

பூனம் பாண்டேவை இந்திய அணியினர் காப்பாற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

மக்கள் டிவியின் மனதைத் தொடும் 10 நிமிட கதைகள்!

Makkal Tv Short Film Competition 10 Nimida Kathaigal
இரண்டரை மணிநேரம் ஒரு திரைப்படத்தில் சொல்ல மெனக்கெடுவதை 10 நிமிட குறும்படத்தில் நச்சென்று சொல்லி புரிய வைப்பதற்கு தனி திறமை வேண்டும். அதுபோன்ற திறமைசாலிகளை கண்டறிந்து அவர்களை உலகறியச்செய்யும் வேலைகளை செய்து வருகிறது மக்கள் டிவி. 10 நிமிடக் கதைகள் என்னும் குறும்படப்போட்டியை நடத்தி வருகிறது.

கடந்த 2009-10 ஆண்டில் நடத்தப்பட்ட 10 நிமிட கதைகள் என்ற குறும்பட போட்டி நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் 10 நிமிட கதைகள் குறும்பட போட்டி மக்கள் டிவியில் துவங்கியுள்ளது.

இந்த முறையும் இந்நிகழ்ச்சிக்காக ஏராளமான இளம்படைப்பாளிகளிடமிருந்து குறும்படங்கள் வந்து குவிந்துள்ளதாம். மீனவர் பிரச்சினை, நிலத்தடிநீர் பாதிப்பு, குழந்தை தொழிலாளர்கள், பெண் வன்கொடுமைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளை குறும் படமாக உருவாக்கி, போட்டியில் இளம் படைப்பாளிகள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ‘பேப்பர்' குறும்படம் சட்டென ஒரு கருத்தை உணரவைத்தது. பேப்பர் பொறுக்கும் பெண், அலுவலக பணியாளர்கள் என அவர்களை சுற்றிய கதைக்களம். எளிமையான திரைக்கதையில் சொல்லவேண்டியதை தெளிவாக உணர்த்தியிருந்தார் இயக்குநர்.

இந்த போட்டியில் முதல் கட்டத்துக்கு தேர்வானவர்கள், நடுவர்கள் தரும் புதிய தலைப்பின் அடிப்படையில் இன்னொரு குறும்படத்தை போட்டிக்காக உருவாக்க வேண்டும். இந்த புதிய குறும் படத்தகுதி அடிப்படையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது. நிகழ்ச்சியை சித்ரா தொகுத்து வழங்குகிறார்.

நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் குறும்படம் பற்றி தங்களின் கருத்துக்களை நேயர்களுடன் பிரபல இயக்குநர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.

ஏற்கனவே 2009-2010-ம் ஆண்டு நடத்திய குறும்பட போட்டியில் வென்றவர்களுக்கு இயக்குனர் பாலுமகேந்திரா பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

 

விஜய் படத்தின் பெயர் தலைவன் இல்லையாம்!

Vijay Is No Longer Thalaivan   
இயக்குனர் ஏ.எல். விஜய் நடிகர் விஜயை வைத்து எடுக்கவிருக்கும் படத்தின் பெயர் தலைவன் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் பெயருக்கும் கதைக்கும் தொடர்பில்லை என்று உணர்ந்த இயக்குனர் தலைப்பை மாற்ற முடிவு செய்துள்ளாராம். தற்போது புதிய தலைப்பை தேடும் வேலையில் ஈடுபட்டுள்ளாராம்.

விஜய் விக்ரமை வைத்து எடுத்த தெய்வத்திருமகள் படத்தின் தலைப்பை மூன்று முறை மாற்றினார் என்பது நினைவிருக்கலாம். முதலில் தெய்திருமகனாக இருந்த தலைப்பு தெய்வமகனாக மாறி இறுதியாக தெய்வத்திருமகள் ஆனது. தற்போது தலைவன் என்னவாகப் போகிறது என்று தெரியவில்லை.

இப்படி படத்தின் தலைப்பை மாற்றுவது விஜயக்கு சென்டிமெண்டாகிவிட்டதால் தான் தலைவன் தலைப்பையும் மாற்றுகிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் புதிய தலைப்பை விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

 

கன்னடத்திற்குப் போகிறார் ரம்யா நம்பீசன்!

Ramya Nambeesan Debut Kannada With Ajay Next Aid0091  
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து அங்கு பெரிய அளவில் பிரேக் கிடைக்காமல் திண்டாடி வரும் ரம்யா நம்பீசன் தற்போது கன்னடத்தில் தலை காட்டவுள்ளார்.

மலையாள நடிகைகள் பலரும் மலையாளத்தை விட பிற மொழிகளில் குறிப்பாக தமிழில் நடிக்கத்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். டப்பு ஜாஸ்தி என்பதுதான் இதற்கு ஒரே காரணம்.

தமிழைப் போலவே அவர்கள் ஆர்வம் காட்டும் இன்னொரு மொழி தெலுங்கு. சிலர் கன்னடத்திற்கும் போவதுண்டு.

அந்த வகையில், பாவனா, பிரியாமணி, மம்தா மோகன்தாஸ், நவ்யா நாயர், பார்வதி மேனன் என பலரும் மலையாளத்திலிருந்து தமிழ் வழியாக கன்னடத்திற்குப் போயுள்ளனர். அந்த வரிசையில் தற்போது இணைகிறார் ரம்யா நம்பீசன்.

தமிழில் ராமன் தேடிய சீதை மூலம் அறிமுகமானவர் ரம்யா. ஆனால் அவருக்கு இதுவரை தமிழில் பிரேக் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் வேறு வாய்ப்புகளைத் தேடிய அவருக்கு கன்னட வாய்ப்பு வந்துள்ளது.

அஜய் ராவ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடி போடப் போகிறாராம் ரம்யா. இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லையாம்.

கன்னடத்தில் நடித்தாலும் கூட தமிழிலும், தெலுங்கிலும் நல்ல வாய்ப்புகள் வரும்போது நிச்சயம் அவற்றையும் பிடித்துக் கொண்டு நடிப்பாராம் ரம்யா.

'கலைச்சேவை'தானே, எங்கிருந்து செய்தால் என்ன...!
 

நடிகை சாராவுடன் சுற்றும் விராத் கோஹ்லி

Virat Kohli Roams With Actress Sara Jane Aid0128  
கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியும், தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்த இந்தி நடிகை சாரா ஜேனும் சமீப காலமாக மிக நெருக்கமாகக் காணப்படுகின்றனராம்.

ஒரு கிரிக்கெட் வீரர் பிரபலமடைந்துவிட்டால் உடனே அவருடன் இணைத்து பல நடிகைகளின் பெயர்கள் வரும். இந்த பட்டியலில் லேட்டஸ்ட் என்ட்ரி விராத் கோஹ்லி, சாரா ஜேன்.

கடந்த மாதம் பெங்களூரில் நடந்த பார்ட்டி ஒன்றில் தான் கோஹ்லியும், தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் நாயகி சாராவும் சந்தித்தனர். அன்று முதலே இருவரும் நெருங்கிப் பழகவும், எங்கு சென்றாலும் ஜோடியாக செல்வதுமாக உள்ளனர்.

டுவென்டி20ல் கோஹ்லி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் சார்பில் விளையாடுகிறார். தான் ஆடும் ஆட்டத்தை வந்து பார்க்க சாராவுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து தந்து வருகிறாராம் விராட்.
 

அதிமுகவுக்கு ஆதரவாக விவேக்கை இழுக்க தீவிரம்!

Actor Vivek Campaign Admk Aid0128
சென்னை: ஆளுக்கொரு காமெடியனைப் பிடித்துவிட்டார்கள் போலிருக்கிறது திமுக - அதிமுக கூட்டணிகள்.

திமுகவுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரசாரம் செய்யவிருப்பதையடுத்து அதிமுகவுக்கு ஆதரவாக நடிகர் விவேக்கை பிரசாரத்தில் ஈடுபடுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன.

வைகைப் 'புயல்' தற்போது திமுகவுக்கு ஆதரவாக வீசத் துவங்கியுள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலுவைத்தான் வைகைப் புயல் என்பார்கள் ரசிகர்கள். அவர் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக வாக்குறுதி அளித்தார்.

இதுவரை அரசியல் பக்கம் வராத வடிவேலு தற்போது திமுகவை ஆதரித்து வரும் 23ம் தேதி முதல் பிரசாரம் செய்யவிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் இன்னொரு முக்கிய காமெடி நடிகரான விவேக்கை அதிமுவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன.

இதற்கு விவேக் சம்மதித்தால் தேர்தல் களத்தில் ஒரே துறை மற்றும் ஒரே ஊரைச் சேர்ந்த இரண்டு நடிகர்களும் எதிர் எதிர் அணியில் நின்று பிரசாரம் செய்வார்கள்.
 

சினிமாவில் நடிக்க தில் இருக்கா?

Actors Hunt New Movie Karma Aid0136
"சினிமாவில் நடிக்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா... உடனே வாங்க.. வாய்ப்பு தருகிறோம்... சம்பளமும் தருகிறோம்", என்று அழைப்பு விடுத்துள்ளது புதிய பட நிறுவனம் ஒன்று. பெயரைக் கேட்டால் கொஞ்சம் மிரட்சியாகத்தான் இருக்கிறது.. 'கிரியேட்டிவ் கிரிமினல்ஸ்' என்று பெயர் சூட்டியுள்ளனர் இந்த நிறுவனத்துக்கு!

இந்த நிறுவனம் 'கர்மா' என்ற படத்தை தயாரிக்கிறது. விளம்பர பட இயக்குனரான அர்விந்த் ராமலிங்கம் இப்படத்தினை எழுதி இயக்குகிறார்.

இப்படக்குழுவினர் இன்று சென்னை எம்எம் தியேட்டரில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இப்படத்தின் இயக்குனர் அர்விந்த் ராமலிங்கம் கூறுகையில், "இப்படத்தின் கதையை தற்போதுள்ள பிரபல நடிகர்களிடம் சொல்லி நடிக்க கேட்டேன். அவர்கள் யாருமே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. கதை பிடித்திருந்தாலும், அந்தப் பாத்திரத்தின் எதிர்மறை தன்மையைப் பார்த்து தயங்குகிறார்கள். அதனால்தான் இப்படத்தில் நடிப்பதற்கு தைரியமான புதுமுகங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்.

இப்படம் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். நடிகர்கள் மட்டுமல்ல, இப்படத்தில் கேமராமேன், இசையமைப்பாளர் உள்பட அனைத்து டெக்னீஷியன்களும் புதிய முகங்களாக இருந்தாலும் அனைவரும் திறமைசாலிகள்.

புதுமுக நடிகர் தேர்வை வித்தியாசமாக செய்ய இருக்கிறோம். இப்படத்தில் நடிக்க விருப்பமுள்ள நடிகர், நடிகைகள் தங்களின் 3 விதமான போட்டோக்களையும், வீடியோ சாம்பிள்களையும் karmamoviecasting@gmail.com என்ற முகவரிக்கு வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதிலிருந்து தேர்வு செய்யப்படுபவர்கள் எங்களது பேஸ்புக் தளத்தில் இடம்பெறுவார்கள். அவர்களில் யார் ரசிகர்களிடம் அதிக வாக்குகள் (likes and comments) பெறுகிறாரோ அதனடிப்படையில் இப்படத்தின் கதாநாயகன், கதாநாயகியை தேர்வு செய்ய உள்ளோம்.

இது குறித்த முழு விபரங்களை www.karma-movie.com என்ற வலைப்பக்க முகவரியில் கொடுத்திருக்கிறோம். 'தில்' இருக்கிறவங்க நடிக்க விண்ணப்பிக்கலாம்," என்றார்.

தில் இருக்கிறவங்க சோதனைக்கு தயாராகலாம்!