தளபதி ரீமேக்கில் அஜீத், விஜய் நடிச்சா எப்படி இருக்கும்?

சென்னை: ரஜினி, மம்மூட்டி நடித்த தளபதி படத்தை ரீமேக் செய்தால் அதில் எந்த நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா, பானுப்ரியா நடித்த சூப்பர் ஹிட் படம் தளபதி. அதில் ரஜினி, மம்மூட்டி நட்பு பற்றி நாங்கள் கூறி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

தமிழில் ரீமேக் படங்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அதனால் இயக்குனர்களும் ரீமேக் படங்களை இயக்க ஆர்வம் காட்டுகின்றனர். பாலிவுட்டில் கூறவே வேண்டாம் ரீமேக் படங்கள் வசூலில் சாதனை படைத்து வருகின்றன.

தளபதி ரீமேக்கில் அஜீத், விஜய் நடிச்சா எப்படி இருக்கும்?

இந்நிலையில் அண்மையில் வெளியான ரஜினியின் தில்லு முல்லு படத்தின் ரீமேக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே ரஜினியின் மாப்பிள்ளை படத்தை ரீமேக் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதைப் பார்த்தவர்கள் தனுஷை திட்டித்தீர்த்தது வேறு கதை.

இந்நிலையில் தளபதி படத்தை ரீமேக் செய்தால் அதில் ரஜினி, மம்மூட்டி கதாபாத்திரங்களில் அஜீத்-விஜய், விஜய்-சூர்யா, சூர்யா-கார்த்தி, சிம்பு-தனுஷ், அஜீத்-விக்ரம் இவர்களில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இல்லை இவர்கள் இல்லாமல் வேறு ஏதாவது புதுமுகங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

சும்மா சொல்லுங்க. யார் கண்டது இந்த படத்தையும் யாராவது ரீமேக் செய்வார்கள்.

 

சூப்பர் ஜோடி...ரூ 5 கோடி...‘தீயா தமாசு செய்யறேன் குமாரு’: கலாய்க்கும் சூப்பர் காமெடி

சென்னை: இந்த காமெடி சூப்பரின் காமெடிக்காகவே பல படங்கள் வெற்றிக்கரமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கின்றன என்பது ஊரறிந்த விஷயம். சில படங்களில் ஒரு சில சீன்களில் தலை காட்டவே தலைவருக்கு லட்சக் கணக்கில் தயாரிப்பாளர்கள் தந்து வந்தார்கள்.

இதனால், ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்' என யோசித்த காமெடி, தற்போது கோடிக் கணக்கில் சம்பளம் கேட்டு தயாரிப்பை நெருக்குகிறாராம். காமெடி சில சீன்களில் வந்த போதே படம் சக்சஸ் என்பது உறுதியாவதால், காமெடியை அதிக சீன்களில் பயன் படுத்த பிளான் செய்கிறார்களாம் தயாரிப்பு குழுவினர்.

மேலும், காமெடியோ படம் முழுக்க நடிக்க வேண்டும் என்றால் தனக்கு நல்ல அழகான ஜோடி, டூயட் மற்றும் ஹீரோக்கு இணையான ரொமான்ஸ் சீன்கள் வேண்டும் என கடுப்பேத்துகிறாராம்.

வசூலைப் பெருக்க ஹீரோக்களும், காமெடியிடம் வளைந்து போகிறார்களாம்.

 

சுனைனா ப்ரண்ட் மட்டும்தான்... வேற எந்த லிங்க்கும் இல்லை! - டிவி நடிகர்

நடிகர் ஹ்ரித்திக் ரோஷனின் தங்கை சுனைனாவுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.. இருவரும் ரொம்ப நாளா ப்ரண்ட்ஸா இருக்கோம்.. அவ்வளவுதான், என்று டிவி நடிகர் ராஜீவ் பால் விளக்கம் அளித்துள்ளார்.

சுனைனாவும் ராஜீவும் காதலிப்பதாகவும் டேட்டிங் போனதாகவும் கிசுகிசுக்கள் வெளியாகி வருகின்றன. முன்னணி நடிகரின் தங்கை என்பதால் இது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

சுனைனா ப்ரண்ட் மட்டும்தான்... வேற எந்த லிங்க்கும் இல்லை! - டிவி நடிகர்

இந்த நிலையில் தனக்கும் சுனைனாவுக்கும் உள்ள தொடர்பு குறித்து ராஜீவ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "பிக் பாஸ் நிகழ்ச்சியின் போதுதான் எனக்கும் சுனைனாவுக்கும் நட்பு நெருக்கமானது. அதற்கு முன்பும் கூட நாங்கள் நண்பர்கள்தான். நாங்கள் வெளியில் போயிருக்கிறோம். அவர் குடும்பத்தை எனக்கு நன்கு தெரியும்.

இந்த கிசுகிசுக்களைப் படித்துவிட்ட சங்கடப்பட்டோம். பின்னர் வாய்விட்டு சிரித்தோம். அவரும் நானும் நெருக்கமான நண்பர்களாக இருப்பதால், காதலிப்பதாக அர்த்தமில்லை," என்றார்.

ராஜீவ் ஏற்கெனவே நடிகை டெல்நாஸ் இரானியைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரும் முன்னாள் மனைவி இரானியும் ஒரே வீட்டில் தங்கியது குறிப்பிடத்தக்கது.

 

முற்றிலும் குணமடைந்துவிட்டேன் - ஹ்ரித்திக் ரோஷன்

மும்பை: மூளையில் செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சை நல்லபடியாக முடிந்து, முழுவதுமாக குணமடைந்துவிட்டேன், என ஹ்ரித்திக் ரோஷன் கூறினார்.

இந்தி படத்தில் சண்டைக் காட்சி யொன்றில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்தபோது தவறி விழுந்தார். தலையில் அடிபட்டு மூளையில் ரத்தம் உறைந்தது.

முற்றிலும் குணமடைந்துவிட்டேன் - ஹ்ரித்திக் ரோஷன்

மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹ்ரித்திக் ரோஷன் அனுமதிக்கப்பட்டு மூளையில் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. சில நாட்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

முற்றிலும் குணமடைந்துவிட்டேன் - ஹ்ரித்திக் ரோஷன்

மருத்துவமனையிலிருந்து தனது தந்தையுடன் நேற்று வெளியில் வந்த ஹ்ரித்திக், வெளியில் கூடி இருந்த ரசிகர்களை பார்த்து மகிழ்ச்சியோடு இரு கைகளையும் உயர்த்தினார். நடனமும் ஆடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, "நான் பூரணமாக குண மடைந்து விட்டேன்'' என்றார்.

விரைவில் நடிக்க ஆரம்பித்துவிடுவேன் என்றும், இனி எச்சரிக்கையுடன் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

 

விஸ்வரூபம் 2 படத்தில் தண்ணீருக்கு அடியில் சண்டைக்காட்சி - கமல் தகவல்

விஸ்வரூபம் 2 படத்தில் தண்ணீருக்கு அடியில் சண்டைக்காட்சி - கமல் தகவல்

விஸ்வரூபம் 2 திரைப்படத்தில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தண்ணீருக்கடியில் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியுள்ளதாக கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

கமலின் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிடும் வேலைகளில் மும்முரமாகிவிட்டார் கமல்ஹாஸன்.

இதன் முதல் பகுதி கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு வெளியிட்டனர்.

‘விஸ்வரூபம் 2' படத்தில் கமலுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல்போஸ், சேகர் கபூர், நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கமல் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

படத்தை கமல்ஹாஸனின் ராஜ்கமல் நிறுவனத்துடன், ஆஸ்கர் ரவிச்சந்திரன் இணைந்து தயாரிக்கிறார்.

தாய்லாந்து, பாங்காக்கில் இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் ‘விஸ்வரூபம் 2' படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்களை கமல் வெளியிட்டார். இந்த டிரைலருக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. விஸ்வரூபம் படத்தின் டிரைலரும் இந்த விழாவில் தான் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், படத்தின் சிறப்பம்சம் குறித்து சமீபத்தில் கமல் கூறுகையில், "விஸ்வரூபம் படத்தை உருவாகும் போதே, இரண்டாம் பாகம் பற்றி சிந்தித்தேன். விஸ்வரூபம் 2 படத்திற்கான 90 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இருக்கிறோம். தண்ணீருக்கு அடியில் வைத்து எடுக்கப்பட்ட சண்டைகாட்சிகள் நிச்சயம் பெரிதாகப் பேசப்படும். மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்கிறேன்," என்றார்.

 

ஆகஸ்ட் 9ல் தலைவா ரிலீஸ்…

விஜய் நடித்த தலைவா படம் ஆகஸ்ட் 9ல் ரிலீஸ் ஆகும் என்று ஐங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது.

துப்பாக்கி படத்திற்குப் பின்னர் நடிகர் விஜய் நடிக்கும் படம் தலைவா. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் முதல் முறையாக விஜய்யுடன் அமலாபால் ஜோடி சேர்ந்துள்ளார்.

ஆக்ஷ்ன் மற்றும் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வந்தன. ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளின் போது தலைவா படத்தின் ஆடியோவும், டிரைலரும் வெளியிடப்பட்டது. பாட்டும் சரி, டிரைலரும் சரி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

ஆகஸ்ட் 9ல் தலைவா ரிலீஸ்…

தலைவா படத்தில் விஜய் உடன் இந்தி நடிகை ராகிணியும் இணைந்துள்ளார். இவர்களுடன் சந்தானம், ராஜிவ் பிள்ளை, அபிமன்யூ சிங், சுரேஷ், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

ஆகஸ்ட் 9ல் ரிலீஸ்

இந்நிலையில் தலைவா படம் வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று ஐயங்கரன் இண்டர்‌நேஷனல் பிலிம் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்ரீ மிஸ்ரி புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ள தலைவா படத்தினை தமிழகத்தில் வேந்தர் மூவிஸ் வெளியிடுகிறது. தமிழகம் தவிர்த்து வெளிநாடுகளில் ஐயங்கரன் நிறுவனம் வெளியிடுகிறது.

 

ஜீ டிவியில் ஜோதா அக்பர்...!!

ஜீ டிவியில் ஜோதா அக்பர்...!!

ஹிருத்திக் ரோஷன் - ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றி படமான ஜோதா அக்பர் இப்போது ஜீ டிவியில் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது.

திப்பு சுல்தான், ஜான்சிராணி, போன்ற வரலாற்று கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல்கள் மக்களை கவர்ந்துள்ளன, வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் இப்போது புதிய சீரியலான ஜோதா அக்பரும் இடம் பெற வாய்ப்புள்ளது.

அக்பரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான் ஜோதா அக்பர். இப்போது அதே ஜோதா அக்பர் என்ற பெயரில் மெகா சீரியல் ஒன்றும் உருவாகியுள்ளது.

பிரபல இந்தி தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தான் இந்த தொடரை தயாரிக்கிறார். சினிமாவை காட்டிலும், டி.வி. சீரியல் இன்னும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளதாம்.

தற்போது இந்தியில், ஜீ டி.வி.யில் ஒளிப்பரப்பாகி வரும் இத்தொடரை விரைவில் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப்பிங் செய்து ஒளிப்பரப்ப இருக்கிறார்கள்.

 

இலக்கணங்களை மீறிய ஹீரோ விக்ரம் - பிசி ஸ்ரீராம்

இலக்கணங்களை மீறிய ஹீரோ விக்ரம் -  பிசி ஸ்ரீராம்

இலக்கணங்களை மீறிய ஹீரோ விக்ரம் என்று பாராட்டியுள்ளார் முன்னணி ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பிசி ஸ்ரீராம்.

விக்ரமின் ஆரம்ப நாட்களில் அவரை வைத்து மீரா என்ற படத்தை இயக்கியவர் பிசி ஸ்ரீராம். பாடல்கள், ஒளிப்பதிவுக்காக பெரிய அளவில் பேசப்பட்ட படம்.

இப்போது விக்ரம் நடிக்கும் ஐ படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார் பிசி ஸ்ரீராம்.

விக்ரம் பற்றி பிசி ஸ்ரீராம் கூறுகையில், "நடிகனாக மட்டுமல்ல...மனிதனாகவும் விக்ரம் ரொம்ப ஜென்டில்மேன். ஆச்சர்யப்படக்கூடிய ஒரு உழைப்பாளி. ஒரு ஹீரோவுக்கு நீங்க என்னலாம் சினிமா இலக்கணம் வெச்சிருந்தாலும் அது இல்லாத ஹீரோ அவர். தன்னை நடிகனாக மட்டுமே முன்நிறுத்திக்கொள்கிற ஒருத்தர்.

'நமக்கு இவ்வளவுதான் வரும்'னு பெரும்பாலும் பயப்படுவாங்க. ஆனா, விக்ரம் 'தனக்கு இதெல்லாம் வருமா'னு சோதனை பன்றதையே வேலையா செய்றவர்.

மீரா படத்தில் ஹீரோவாக நடிச்ச விக்ரம் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் 'குருதிப் புனல்' படத்துல டப்பிங்லாம் பேசினார். என்ன செஞ்சுட்டு இருந்தாலும், அதை சினிமால செய்யணும்கிறதுதான் அவரோட ஐடியா. என்னைப் பொருத்தவரை திறைமையோடு கூடிய முயற்சிங்கிற விஞ்ஞானம் தப்பே பண்ணாது. அதுக்கு சரியான உதாரணம் விக்ரம்தான்," என்றார்.