12/30/2010 3:07:11 PM
16லிருந்து 25 வயது வரையிலான காதல்
12/30/2010 3:07:11 PM
2011ல் பில்லா 2
12/30/2010 3:03:08 PM
இசைக்கு யுவன், கேமராவுக்கு நீரவ்ஷா. முந்தைய பாகத்தைப் போலவே இதற்கும் காஸ்ட்யூமுக்கு கணிசமான தொகை செலவு செய்ய முடிவெடுத்துள்ளார்கள்.
சம்பளத்தில் பல லட்சங்கள் உயர்த்திய ஓவியா
12/30/2010 3:15:34 PM
தமிழில் தன்னுடைய முதல் படமான களவாணி பெற்றதால் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியிருக்கிறார் ஓவியா. அத்துடன் கன்னடத்தில் தயாராகும் களவாணி ரீமேக்கிலும் இவரே நாயகி. இதனால் தனது சம்பளத்தில் பல லட்சங்கள் உயர்த்திருக்கிறார். ஓவியா தமிழில் இரு படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். துணிக்கடை விளம்பரங்களில் நடிப்பதற்கும் அதிக சம்பளம் கேட்டதால் ஒரு விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பே ஓவியாவுக்கு மறுக்கப்பட்டதுதான் ஹைலைட்.
செல்வராகவனின் இரண்டாம் உலகம்
12/30/2010 3:09:58 PM
ஆயிரத்திரல் ஒருவன் படத்துக்குப் பிறகு விக்ரம், ஸ்வாதி நடிப்பில் க்ரைம் த்ரில்லர் படமொன்றை செல்வராகவன் தொடங்கினார். லடாக்கில் படத்தின் முதல் ஷெட்யூல் படமானது. ரமேஷ்பாபு தயாரித்த இந்தப் படம் பைனான்ஸ் உள்ளிட்ட சில காரணங்களால் தடைபட, தமிழ், தெலுங்கில் புதிய புராஜெக்ட் ஒன்றை செல்வராகவன் தொடங்கினார். இந்த இரு மொழி படத்தில் ராணா நடிப்பதாக இருந்தது.
சரித்திரப் பின்னணியில் உருவாக இருந்த இந்தப் படம் திடீரென கைவிடப்பட்டது. காரணம் தயாரிப்பாளர். இப்படி அனைத்து வாசல்களும் அடைபட, சற்றும் மனம் தளராத செல்வராகவன் ஏற்கனவே தொடங்கி பாதியில் கைவிட்ட இது மாலை நேரத்து மயக்கம் படத்தை தூசு தட்டியிருக்கிறார். இது மாலை நேரத்து மயக்கம் படப்பிடிப்பை தொடங்கி சில நாட்களிலேயே பேக்கப் சொன்னார் செல்வராகவன். கதையில் பல திருத்தங்கள். இப்போது இரண்டாம் உலகம் என்ற பெயரில் அதே கதை பல மாற்றங்களுடன் உருவாக உள்ளது.
தனுஷ், ஆண்ட்ரியா நடிக்கும் இந்தப் படத்துக்கு முதலில் இசையமைப்பதாக இருந்தது ஜி.வி.பிரகாஷ்குமார். ஆனால் தற்போது அவரது இடத்தை நிரப்பப் போகிறவர் யுவன் ஷங்கர் ராஜா.
செல்வராகவன், யுவன் இருவரும் கருத்து வேறுபாட்டால் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இணைந்து பணியாற்றவில்லை. இது இந்தக் கூட்டணியின் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. இந்தப் பிரிவுக்குப் பிறகு நா.முத்துக்குமாரை தவிர்த்த செல்வராகவன் வைரமுத்துக்கு வாய்ப்பளித்தார்.
யுவன், செல்வா இணைந்ததால் இந்தக் கூட்டணியில் மீண்டும் நா.முத்துக்குமார் இணைய வாய்ப்புள்ளது.
தெலுங்கிலும் டப் ஆகிறது நடுநிசி நாய்கள்
12/30/2010 10:59:38 AM
பொதுவாக கௌதம் மேனன், ஷங்கர், செல்வராகவன் படங்களுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஷங்கரின் அந்நியன், செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், கௌதம் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற படங்கள் தெலுங்கில் நல்ல வசூலை தந்தது. தற்போது கௌதம் மேனன் இயக்கி முடித்துள்ள ‘நடுநிசி நாய்கள்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. க்ரைம் ஸ்டோரியான இக்கதைக்கு பின்னணி இசை ஏதும் இல்லை. இதனையடுத்து தெலுங்கில் தன்னுடைய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால் சமீரா ரெட்டி நடித்துள்ள Ôநடுநிசி நாய்கள்Õ படத்தை தெலுங்கிலும் டப் செய்கிறார் கௌதம் மேனன்.