சூர்யாவுடனான காதல் காட்சிகள் குறைந்ததால் கோபித்துக் கொண்டாராம் நயன்தாரா.
மாஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்தாரா. வருகிற 29-ந் தேதி படம் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், நேற்று நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது மாஸ் படக் குழு. சூர்யா, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் வந்திருந்தனர். ஆனால் நயன்தாரா வரவில்லை.
அப்போது இந்த படத்தில் சூர்யாவை பேயாக காட்டியுள்ளீர்கள். அதுபோல் நயன்தாராவும் இப்படத்தில் பேயாக நடித்திருக்கிறாரா? என்று கேட்டனர்.
உடனே இயக்குனர் வெங்கட் பிரபு, "அப்படியெல்லாம் கிடையாது. சூர்யா இந்த படத்தில் பேயாக நடிக்கவில்லை. அது படத்தை பார்க்கும்போது உங்களுக்கே தெரியும்," என்றார்.
மேடையில் இருந்த ஞானவேல் ராஜாவோ, நயன்தாரா ஏற்கெனவே இந்த படத்தில் சூர்யாவுக்கும் தனக்கும் காதல் காட்சிகள் அதிகமாக வைக்கவில்லை என்ற கோபத்தில் இருக்கிறார். இதில், அவர் பேயா நடிச்சிருக்கிறதா நீங்க சொல்வது காதில் விழுந்தால் இன்னும் கோபமாகிவிடுவார் என்றார்.
ஓ.. அவர் பிரஸ் மீட்டுக்கு வராத ரகசியம் இதானா என கமெண்ட் பறந்தது செய்தியாளர்களிடமிருந்து.