எஸ்.எம்.எஸ் பரிசு: கொள்ளை லாபம் அடிக்கும் டிவி- செல்போன் நிறுவனங்கள்!

Sms Business Indian Reality Tv Show Who Is The Winner

லாட்டரி சீட்டு மோகம் ஒழிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தற்போது புதிதாக எஸ்.எம்.எஸ் அனுப்புங்க, பரிசை வெல்லுங்க என்ற கோஷத்துடன் களம் இறங்கியுள்ளன தொலைக்காட்சி நிறுவனங்கள்.

மக்களின் பணம் சம்பாதிக்கும் பலவீனத்தை மூலதனமாகக் கொண்டு, டி.வி.க்கள் வெவ்வேறு பெயர்களில், லாட்டரிக்கு இணையான கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. எப்படி எல்லாம் நம் பணம் பறிபோகிறது என்பதைப் பற்றி சின்னதாய் ஒரு ரவுண்ட் அப்.

கேம் ஷோவோ, ரியாலிட்டி ஷோ எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் பார்வையாளர்களையும் பங்கேற்கச் செய்கிறோம் என்று கூறிக்கொண்டு அவர்களின் பணத்தை கூட்டுக் கொள்ளை அடிக்கின்றனர் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.

உதாரணமாக கையில் ஒரு கோடி நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு ஒரு கேள்வியை கேட்பார்கள். சரியான விடையை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்ப வேண்டும் என்று கூறுவார்கள். அதை நம்பி உடனே லட்சோப லட்சம் எஸ்.எம்.எஸ்கள் பறக்கும். பரிசு என்னவோ பத்து பேருக்குதான் போகும். ஆனால் இந்த எஸ்.எம்.எஸ் மூலம் தொலைக்காட்சி நிறுவனங்கள், அலைபேசி நிறுவனங்கள், தனியார் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கைகோத்து வெவ்வேறு பெயர்களில் லாட்டரிக்கு இணையான லாபம் அடித்து வருகின்றனர் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.

முன்பெல்லாம் பரிசுக்கு உரிய பதிலை போஸ்ட் கார்டில் எழுத வேண்டும் என்று கூறினார்கள். பின்னர் பரிசுக்குரிய விலை அதிகம் கொண்ட போஸ்ட் கார்டு விற்பனைக்கு வந்தது. அது மத்திய அரசின் தபால் துறையின் வருமானத்தை அதிகரித்தது. ஆனால் இன்றைக்கோ எந்த தொலைக்காட்சி என்றாலும் ஏதாவது ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்து, குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் என்று சொல்வதை நம்பி பல லட்சம் பேர் எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்கள். அதில் கிடைக்கும் வருமானம், நிறுவனம் தரப் போகும் பரிசுத் தொகைக்கான செலவைவிட பல நூறு மடங்கு அதிகமாக உள்ளது என்பது பாமரர்களுக்கு மட்டுமல்ல, படித்தவர்களுக்கும் தெரியவில்லை.

கடந்த சில வாரங்களாக திரையில் ஒரு பாடலில் சில காட்சிகளை ஓடவிட்டு அது தொடர்பான ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு விடை சொல்ல அழைக்கும் நிகழ்ச்சி ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இதில் சரியான விடை எதுவாக இருக்கும் என்பதையும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களே மறைமுகமாகக் கூறிவிடுகின்றனர். எனவே ரூ.5 ஆயிரம் பரிசுப் பணத்தைப் பெற்றுவிடும் ஆசையில் நேயர்கள் தொலைபேசியில் அழைக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகும் போதே, திரையின் கீழ் பாகத்தில் ஒரு தகவல், அடிவரியாக ஓடிக் கொண்டிருக்கிறது. ""உங்களின் தொலைபேசி அழைப்புக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.10 கட்டணம் ஆகும். அதிக நேரம் தொடர்பில் இருக்க விரும்பாதவர்கள், இணைப்பைத் துண்டித்துவிடவும்.''

திரையில் குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு நீங்கள் தொடர்பு கொண்டால், உடனே நீங்கள் பதிலைக் கூறிவிட முடியாது. சில நிமிடங்கள் காத்திருந்த பிறகே, பதிலைக் கூற முடியும். இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், ""அழையுங்கள், உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம், பரிசை வென்றிடுங்கள்'' என்று தொடர்ந்து தூண்டிவிடும் வகையில் பேசுகிறார்கள்.

நீங்கள் 2 நிமிடம் இணைப்பில் இருந்தாலும் உங்களுக்கு ரூ.20 போய்விடும். இதில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.14 வரையில் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்துக்குப் போய்விடும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு லட்சம் பேர் தொடர்பு கொள்கிறார்கள் என வைத்துக் கொண்டாலும் மொத்த வருமானம் ரூ.20 லட்சம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு சுமார் ரூ.14 லட்சம் வருமானம். பரிசுத் தொகை உள்ளிட்ட எல்லா செலவும் சேர்த்தாலும் ரூ.2 லட்சம். மீதியெல்லாம் "கொள்ளை லாபம்.'

இதேபோல்தான் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பதிவு செய்ய குறைந்த பட்சம் 2 எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இதற்கு செல்போன் நிறுவனங்களைப் பொருத்து கட்டணம் ரூ.2 முதல் ரூ.6.99 வரை ஆகும். பரிசுப் பணம் ஒரு கோடி ஆயிற்றே. போட்டியும் அதிகமாக இருக்கும்தானே. ஏழு கோடி தமிழரில் 10 லட்சம் பேர் இதற்கு முயற்சி செய்தாலும் தலா 2 எஸ்.எம்.எஸ். அனுப்புவதால் செல்போன் நிறுவனங்களுக்கு சராசரி வருமானம் ரூ.1 கோடி. நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் நிச்சயம். இப்படி ஏழு நாள்களுக்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு நேயர்கள் பதில் அனுப்பி இதில் பங்கு பெறலாம்.

இதுதவிர நிகழ்ச்சியின் இடையே விளம்பரம் செய்வதில் கிடைக்கும் வருமானம், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு விளம்பர நிறுவனங்கள் தரும் செலவு என பார்த்தால் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை கிடைக்கும் என்கிறார்கள்.

இதேபோலத்தான் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் தங்களை தேர்ந்தெடுக்க எஸ்.எம்.எஸ் மூலம் ஓட்டுப் போடுங்க என்று கூறுகின்றனர். இதெல்லாம் நம் பணம் நம்மையறியாமலேயே கையை விட்டுப்போகிறது.

அறிவுத் திறனுக்குப் பரிசு என்றால் டோல் ப்ரி சேவையை அறிமுகம் செய்யலாமே?.

 

கதாநாயகிகளே குத்துப்பாட்டுக்கு ஆடாதீங்க, சொல்கிறார் ஹேமமாலினி

No Need Big Heroines Do Item Number Hema Malini

பெரிய கதாநாயகிகள் குத்துப்பாட்டுக்கு நடனமாடாதீர்கள் என்று முன்னாள் கனவுக்கன்னி ஹேமமாலினி கேட்டுக்கொண்டுள்ளார். மும்பையில் நடைபெற்ற இந்திய சினிமாவின் 100 வது ஆண்டுவிழாவில் பங்கேற்றுப் பேசிய அவர் இதனை தெரிவித்தார். விழாவில் அவர் மேலும் கூறியதாவது,

திரைப்படங்களில் பிரபல ஹீரோயின்கள் குத்தாட்டம் போடுவது எனக்கு பிடிக்காது. ஆனால் ரசிகர்கள் பார்க்கிறார்கள். ஆனால் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். ஏற்கனவே நல்ல பெயரை சம்பாதித்து வைத்துள்ள பிரபல ஹீரோயின்கள் குத்தாட்டம் போடுவதை தவிர்க்க வேண்டும். அதை ஆடுவதற்கு எவ்வளவோ நடிகைகள் இருக்கிறார்கள்.

முன்பெல்லாம் குத்தாட்டத்துக்கு வேறு அர்த்தம் இருந்தது. இப்போது அது முற்றிலும் மாறிவிட்டது. வெவ்வேறு பெயர்களும் வைக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவோ ஹீரோயின்கள் நடனம் ஆடுகிறார்கள். இதில் கைதேர்ந்தவர்கள் மாதுரி தீட்சித், ஸ்ரீதேவி. அவர்களுக்கு பிறகு ஐஸ்வர்யாராய் நன்றாக நடனம் ஆடுகிறார். வித்யாபாலனும் ஓரளவுக்கு பரவாயில்லை. மற்ற எந்த நடிகையையும் இந்த இடத்தில் வைத்துப் பார்க்க முடியவில்லை. இவ்வாறு ஹேமமாலினி கூறினார்.

முன்னாள் கனவுக்கன்னி சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

 

ஹோமோசெக்ஸுக்கு ஆதரவாக வீணா மாலிக் போஸ்!

Veena Does Photoshoot Homosexual Ri   

ஹோமோசெக்ஸுக்கு ஆதரவாக சமீபத்தில் குரல் கொடுத்த வீணா மாலிக் தற்போது அதை வலியுறுத்தி போட்டோ ஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார்.

ஓரினச் சேர்க்கைக்கு உலகம் முழுவதும் இப்போது ஆதரவு பெருகி வருகிறது. இருப்பினும் இந்தியா போன்ற நாடுகளில் இன்றும் கூட அது சற்றே விலக்கி வைக்கப்பட்டிருக்கிற விஷயமாகவே இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஹோமோசெக்ஸுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக். தற்போது அதற்காக ஒரு போட்டோ ஷூட்டை நடத்தி கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஹோமோசெக்ஸ் என்பது இந்தியா போன்ற நாடுகளில் வெளிப்படையாக பேச முடியாத விஷயமாகவே இருக்கிறது. இருப்பினும் இதை பாசிட்டிவாக பார்ப்பதில் தவறில்லை.

ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கையை வாழ உரிமை உள்ளது. தாங்கள் நினைத்தபடி வாழ்வதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அதை யாரும் தடுக்க முடியாது. இது ஒரு உரிமையாகு்ம் என்றார்.

ஹோமோசெக்ஸுக்கு தான் ஆதரவு தெரிவித்துள்ளதை நிலை நாட்டுவதற்காக இந்த போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார் வீணா. இதன் மூலம் ஹோமோசெக்ஸ் குறித்த விழிப்புணர்வு சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் பரவும் என்பது அவரது நம்பிக்கை.

 

'இங்கி பிங்கி பாங்கி' போட்டு ஷங்கர் படத்தை தேர்வு செய்த சமந்தா!!

Why Samantha Chooses Shankar Film   

ஒரே நேரத்தில் ஷங்கர், மணிரத்னம் என இரு பெரிய இயக்குநர்களிடமிருந்து வாய்ப்பு. இரண்டிலுமே நடிக்க ஆசை இருந்ததால் ஒப்புக் கொண்ட சமந்தாவுக்கு, இருவருமே தன் மொத்த கால்ஷீட்டையும் வருடக் கணக்கில் குத்தகைக்கு கேட்க, திகைத்துப் போனார்.

சரி, இருவரில் யார் படம் பெஸ்ட்...? என்ற கேள்வி எழ, வீட்டில் உட்கார்ந்து இங்கி பிங்கி பாங்கி... போட்டுப் பார்க்க, அதில் ஷங்கர் படம் ஓகே என்று வர, முதலில் நடிக்க ஒப்புக் கொண்டு சில தினங்கள் நடித்த பிறகு, என்னால் டேட்ஸ் தர முடியல சார் என மணிரத்னத்திடம் சொல்லிக் கொண்டு வந்துவிட்டாராம்.

மணிரத்னம் படத்தை விட, ஷங்கர் படத்தில் நடிப்பதுதான் தன் கேரியரை உச்சத்தில் நிறுத்தும் என்பது சமந்தாவுக்கு நன்கு புரிந்துவிட்டதும் இந்த முடிவுக்கு ஒரு முக்கிய காரணமாம். தனது மொத்த கால்ஷீட்டையும் இப்போது ஷங்கர் படத்துக்கே கொடுத்துவிட்டாராம்.

ஆனால், மணிரத்னம் தரப்போ, ஹீரோவை விட சமந்தா முதிர்ச்சியடைந்த தோற்றத்தில் இருந்ததால் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக செய்தி பரப்ப கடுப்பிலிருக்கிறார் அம்மணி.

'எது எனக்கு நல்லது என்று பட்டதோ அந்த முடிவை எடுத்தேன். அதற்காக என் வயது, தோற்றம் குறித்தெல்லாம் பேசி டேமேஜ் பண்ணுவது டூ மச்,' என பொங்குகிறார் சமந்தா.

 

'செல்லம்மா' ஜெயித்த 6 லட்சம் ரூபாய் !

Kaiyil Oru Kodi Are You Ready

கையில் ஒரு கோடி நிகழ்ச்சியில் ஜெயித்த 6 லட்சம் ரூபாயை திரைப்படத்துறை, சின்னத்திரை நடிகர்களின் நலநிதிக்காக கொடுத்தார் செல்லம்மா ராதிகா.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி' நிகழ்ச்சியில் கடந்த வாரம் செல்லமே சீரியலில் நடிக்கும் நடிகைகள் பங்கேற்றனர்.செல்லம்மா - முத்தழகி பங்கேற்க அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கலைவாணியும், சிவரஞ்சனியும் பங்கேற்றனர். நடனம், பாடல் என உற்சாகமாக களை கட்டிய இந்த நிகழ்ச்சியின் முடிவில் செல்லம்மாவும், முத்தழகியும் 6 லட்சம் ரூபாயை வென்றனர்.

பரிசாக பெற்ற ரூபாயை வீடற்ற நலிந்த கலைஞர்களுக்கு வழங்குவோம் என்று முதலியே நடிகை ராதிகா தெரிவித்தார். அதன்படி தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கத்தலைவர் நடிகர் சரத்குமாரிடம் 3 லட்சம் ரூபாயை அவர் வழங்கினார்.

மீதமுள்ள 3 லட்சம் ரூபாயை சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தலைவர் என்ற வகையில் சின்னத்திரை கலைஞர்களின் நலனுக்காக செலவிடப்போவதாக அவர் கூறினார்.

கையில் ஒரு கோடி நிகழ்ச்சியில் இந்த வாரமும் சின்னத்திரை குடும்பத்தினரே பங்கேற்க உள்ளனர். திருமதி செல்வம் தொடரில் நடிக்கும் செல்வம் - அர்ச்சனா ஜோடி போட்டியில் பங்கேற்க அவரது சகோதரியும், தோழியும் அவர்களை உற்சாகப்படுத்த வருகின்றனர். அதற்கான முன்னோட்டமே கலகலப்பாக உள்ளதால் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.

 

காதல் உண்மைதான்... திருமணத்துக்கு நாளாகும் - திவ்யா

Divya Speaks On Her Marriage

தமிழ், கன்னடத்தில் பிரபல நடிகையாகத் திகழும் குத்து ரம்யா என்கிற திவ்யா தன் காதல் மற்றும் காதலன் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.

போர்ச்சுக்கல் தொழில் அதிபர் ரபேலை அவர் காதலிக்கிறாராம். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேல் இந்தக் காதல் ஓடிக்கொண்டிருக்கிறதாம்.

இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் திருமண தேதியை ஓரிரு தினங்களில் அறிவிக்க உள்ளதாகவும் கன்னட திரையுலகில் செய்தி பரவியது.

இதுகுறித்து திவ்யா கூறுகையில், "நானும் ரபேலும் நல்ல புரிதலுடன் உறவைத் தொடர்கிறோம். திருமணத்துக்கு அவசரப்படவில்லை. திருமண தேதியை முடிவு செய்து விட்டதாக வெளியான செய்தி வதந்திதான். நான் சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்துகிறேன். ரபேலுக்கும் தொழில் சம்பந்தமான பணிகள் நிறைய இருக்கின்றன. இருவரும் பேசி நிச்சயம் திருமண தேதியை வெளியிடுவோம்," என்றார்.

 

மீண்டும் பெண் குழந்தை - சந்தோஷத்தில் வெங்கட் பிரபு

Venkat Prabhu Blessed With Female Child

தனக்கு இரண்டாவது மகள் பிறந்துள்ள சந்தோஷத்தை அனைவருடனும் சந்தோஷமாகப் பகிர்ந்து வருகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

வெங்கட் பிரபு - ராஜலட்சுமி (நடன ஆசிரியை கேஜே சரசா மகள்) தம்பதிக்கு ஏற்கெனவே ஷிவானி என்ற பெண் குழந்தை உள்ளது.

மீண்டும் கர்ப்பமான ராஜலட்சுமிக்கு நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையி்ல் பிரசவம் நடந்தது. அவருக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது.

இதுகுறித்து ட்விட்டரில் தகவல் வெளியிட்ட வெங்கட் பிரபு, "மீண்டும் எனக்கு மகள் பிறந்துள்ளாள். அம்மாவும் குழந்தையும் நலமாக உள்ளனர். உங்கள் வாழ்த்துகள் - பிரார்த்தனைகளுக்கு நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு இப்போது பிரியாணி என்ற படத்தை இயக்குகிறார். இதில் கார்த்தி - பிரேம்ஜி ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

 

விவாகரத்து வழக்கு - முன்னாள் கணவரிடம் மகளை ஒப்படைத்தார் ஊர்வசி!

Oorvasi Hands Over Her Daughter Man

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தனது இளைய மகளை முன்னாள் கணவர் மனோஜ் கே ஜெயனிடம் ஒப்படைத்தார் நடிகை ஊர்வசி.

தமிழ் திரை உலகில் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஊர்வசி. கன்னடம், மலையாளம் உள்பட ஏராளமான படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயனை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் பிறந்தனர்.

ஆனால் ஊர்வசி - மனோஜ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விவாகரத்து கோரி எர்ணாகுளம் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பரஸ்பர விவாகரத்து பெற்றனர்.

ஆனால் அவர்களில் 2 மகள்களும் ஊர்வசி பாதுகாப்பில் இருந்தனர். எனவே இரு மகள்களையும் தன்னிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தர விட வேண்டும் என்று மனோஜ் கே.ஜெயன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இரண்டாவது மகள் குஞ்சாச்சாவை மட்டும் மனோஜ் கே.ஜெயனிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர்.

இதை தொடர்ந்து ஊர்வசி தன் இளைய மகளை அவரிடம் ஒப்படைத்தார். எர்ணாகுளம் நீதிமன்றத்துக்கு மகளை அழைத்துப் போனார் மனோஜ் கே ஜெயன்.

 

மன அமைதிக்காக கோவையில் குடியேறுகிறார் ரஜினி?

Rajini Shifting His Residence Coimbatore

விரைவில் கோவையில் குடியேறப் போகிறார் ரஜினி என்ற செய்தி, கோவை ரசிகர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி சமீபத்தில் அவரது குடும்ப நிகழ்வுகள் காரணமாக அமைதியின்றி தவிப்பதாகவும், இமய மலைக்கு ஓய்வெடுக்கச் செல்வதாகவும் பல்வேறு செய்திகள் வந்த வண்ணமிருந்தன.

இதற்கிடையே, அவர் கோவையில் குடியேறப் போவதாக குமுதம் வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மகள்கள் பிரச்சினையால் மன நிம்மதி இழந்த ரஜினி, கோவை ஆனைகட்டியில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமம் அருகே, அமைதியான சூழலில் ஒரு இடம் பார்த்து தேர்வு செய்த ரஜினி, அங்கே ஒரு சிறிய அழகான பங்களாவை உருவாக்க உத்தரவிட்டுள்ளார்.
Rajini shifting his residence to Coimbatore?
அதன்பேரில் கடந்த ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த பங்களா, கிடுகிடுவென கட்டி முடிக்கப்பட்டு, இப்போது முடியும் தறுவாயில் உள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஜினி சில காலம் அமைதியாக இங்கே தங்கியிருக்க விரும்புவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வீடு குறித்து எந்த தகவலையும் வெளிப்படுத்தாவிட்டாலும், அந்தப் பகுதி மக்கள் இதை ரஜினி வீடு என்றே அழைக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த செய்தி வெளியானதிலிருந்து கோவை ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துவிட்டதோடு, தலைவர் வீட்டைப் பார்த்துவிட்டு வர ஆனைகட்டிக்கு போக ஆரம்பித்துவிட்டார்களாம்.

படம்: குமுதம்

 

குத்துச்சண்டை வீராங்கனையாக மாறிய த்ரிஷா!

Trisha Becomes Boxer   

பூலோகம் படத்தில் த்ரிஷாவின் நடிப்பை பார்த்து வியந்து போன இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் ‘லேடி பாக்ஸர்' என்று த்ரிஷாவிற்கு பெயர் சூட்டியுள்ளாராம். இதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் த்ரிஷாவே கூறியுள்ளார்.

உனக்கும் எனக்கும் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி, த்ரிஷா இணையும் படம் பூலோகம். இதில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். கதாநாயகி த்ரிசாவிற்கு வலுவான பாத்திரமாம். இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் த்ரிஷா கூறியுள்ளதாவது,

பூலோகத்தில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். படத்தில் என்னுடைய ரோல் ரொம்ப வெயிட்டானது. ஜெயம் ரவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் பெண்ணாக இப்படத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் ஜெயம் ரவியின் கேரக்டருக்கு பலமே நான் தான். படத்தில் என்னுடைய கேரக்டரை பார்த்து டைரக்டர் என்னை குத்துச்சண்டை வீராங்கனை என்று தான் அழைக்கிறார் என்று கூறியுள்ளார்.

ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. பூலோகம் படத்தை நவம்பர் 15ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

 

சமுத்திரக் கனி - ஜெயம் ரவி படத்துக்குப் பெயர் 'நிமிர்ந்து நில்'!

Samuthira Kani Jayam Ravi Project

சமுத்திரக் கனி - ஜெயம் ரவி இணையும் புதிய படத்துக்கு வெவ்வேறு பெயர்களை மீடியா சூட்டிவந்தது. ஆனால் அவையெல்லாம் இல்லை என்று நிரூபணமாகிவிட்டது.

இந்தப் படத்துக்கு நிமிர்ந்து நில் என்று பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமலா பால் ஜோடி

இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலா பால் ஒப்பந்தம் ஆகியுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்டில் தொடங்குகிறது. இப்போது நடித்துக் கொண்டிருக்கும் பூலோகம் படத்தை முடித்த கையோடு, நிமிர்ந்து நில் படத்துக்கு வருகிறார் ரவி. அதே போல புனித் ராஜ்குமாரை வைத்து கன்னடத்தில் தனது போராளியை இயக்கிக் கொண்டிருக்கும் சமுத்திரக் கனி, விரைவில் அந்தப் படத்தை முடித்துவிட்டு நிமிர்ந்து நில்லை ஆரம்பிக்கிறார்.

ஆக்ஷன் படங்களில் இது ஒரு புதிய முயற்சி என்கிறார் சமுத்திரக் கனி.

 

மோகன்லால் வீட்டில் யானை தந்தம் - போலீஸ் விசாரணை!

Recovery Tusks House Mohan Lal Trouble

மலையாள பட உலகின் முன்னணி நடிகர் மோகன் லால் வீட்டு பூஜை அறையில் யானை தந்தங்கள் இருந்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் வீட்டில் கடந்த வருடம் இறுதியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

கேரளா மட்டுமின்றி சென்னையில் உள்ள இருவரின் வீடுகளிலும் தொடர் சோதனை நடத்தப்பட்டது. இதில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கு உரிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

திருவனந்தபுரம், கொச்சி ஆகிய இடங்களில் உள்ள மோகன்லாலின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையிலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொச்சி தேவரையில் உள்ள மோகன்லால் வீட்டின் பூஜை அறையில் யானை தந்தங்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கேரள போலீஸ் டி.ஜி.பி. ஜேக்கப் புன்னூசிடம் விசாரணை நடத்துமாறு வருமானவரித் துறையினர் மனு கொடுத்தனர்.

இதையடுத்து நடிகர் மோகன்லாலிடம் போலீஸ் விசாரணை நடத்துவதற்கு கொச்சி போலீஸ் கமிஷனர் பிஜூ அலெக்சாண்டர் தலைமையில் தனி கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டி மோகன்லாலிடம் விசாரணை நடத்த தற்போது முடிவு செய்துள்ளது. இதன்படி மோகன்லால் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட யானை தந்தம் அலங்காரத்துக்கு வைக்கப்படும் வர்ணம் பூசிய பிளாஸ்டிக் வகையை சேர்ந்ததா? அல்லது உண்மையான யானை தந்தமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

மேலும் இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் பிஜூ அலெக்சாண்டர் கூறுகையில் நடிகர் மோகன்லால் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட யானை தந்தம் உண்மையானதாக இருந்தால் அதை அவர் யாரிடம் இருந்து வாங்கினார்? அதற்குரிய உரிமம் அவரிடம் உள்ளதா? அல்லது கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்படும். அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்படும்," என்றார்.

 

அப்புக்குட்டியும் அழகு நாயகிகளும்....

Appukutti Pairing With Cute Heroine

அழகர்சாமியின் குதிரை படத்திற்காக தேசிய விருது வாங்கிய அப்புக்குட்டியின் அடுத்த படத்தில் ஜோடியாக சேர்ந்திருப்பவர் ராட்டினம் பட நாயகியாம். இது கோலிவுட்டில் சக நடிகர்களிடையே பொறாமையை ஏற்படுத்தியுள்ளது.

அழகர்சாமியின் குதிரை படத்தில் அழகு சரண்யா மோகன்தான் இவருக்கு ஜோடி. அந்த எரிச்சலே அகலாமல் இன்னும் பர்னாலை தேய்த்துக் கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு அடுத்த எரிச்சலை கொடுத்திருக்கிறார் அப்புக்குட்டி. இவர் புதிதாக நடித்துக் கொண்டிருக்கும் மன்னாரு படத்தில் இவருக்கு ஜோடியாக சமீபத்தில் வந்த ராட்டினம் பட நாயகி ஸ்வாதி நடிக்கிறார். மற்ற நடிகர்களுக்கு பொறாமை ஏற்பட இது ஒன்று போதாதா?

கன்னங்கரேல் எண்ணை சட்டியில்தான் வெள்ளை வெளேர் ஆப்பத்தையும் ஊத்துறாங்க. யதார்த்தம் இதுதான்னாலும் அந்த சட்டிக்கு கிடைச்ச யோகம் கூட நமக்கு கிடைக்கலையே என்று சக நடிகர்களை புலம்ப வைத்திருக்கிறார் அப்புக்குட்டி.

அழகர்சாமியின் குதிரை படத்தில் சரண்யா மோகனை போட்டத்திற்கோ ரசிகர்களிடையே வரவேற்பு இல்லை. மன்னாரு படத்தில் அப்புக்குட்டி - ஸ்வாதி ஜோடியை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

 

சிம்புவுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்யப் போறோம்-டி.ராஜேந்தர்

Simbu Will Tie The Knot Soon Says

எனது மகள் இலக்கியாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். அது முடிந்ததும் சிம்புவுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று இயக்குநர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

விஜய டி.ராஜேந்தர்-உஷா தம்பதிக்கு சிலம்பரசன், குறளரசன் மற்றும் இலக்கியா என மூன்று பிள்ளைகள். இதில் மூத்தவரான சிமபு நடிகராகி விட்டார். குறளரசனும் விரைவில் நடிகராகப் போகிறார். மகள் இலக்கியா சினிமா பக்கமே திரும்பிப் பார்க்காமல் வளர்ந்தவர்.

இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாம். இலக்கியா திருமணத்திற்குப் பின்னர் சிம்புவுக்குத் திருமணம் நடைபெறுமாம்.

ஆந்திர மாநிலம் காளஹஸ்திக்கு நேற்று தனது மனைவி, மகளுடன் வந்த ராஜேந்தர் அங்கு சாமி கும்பிட்டார். பின்னர் செய்தியாளர்கள் அவர்களை சுற்றிசத் சூழ்ந்தனர். அப்போது சிம்பு திருமணம் குறித்து கேட்டபோது, முதலில் இலக்கியா திருமணம் நடைபெறும்.அதன் பின்னர் சிம்பு திருமணம்தான்.சீக்கிரமே சிம்பு திருமணம் நடைபெறும் என்றார் ராஜேந்தர்.

உங்களது அடுத்த படம் என்ன என்ற கேள்விக்கு ஒரு தலை காதல் என்ற படத்தை இயக்கப் போகிறேன் என்றார்.

குறளரசன் எப்போது ஹீரோ ஆவார் என்ற கேள்விக்கு, இந்த ஆண்டு இறுதியில் குறளரசன் அறிமுகமாகும் படத்தை அறிவி்ப்போம் என்றார்.