சைவம் படத்துக்காக நாசரின் கெட்-அப் இது!

சைவம் படத்துக்காக தன் முடியை மழித்துக் கொண்டு புதிய கெட்டப்புக்கு மாறியுள்ளார் நடிகர் நாசர்.

எந்த வேடமாக இருந்தாலும் அந்த வேடமாகவே மாறிவிடுபவர் நாசர். படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு ஏற்ப தனது உடல் மற்றும் முக மொழிகளை மாற்றி கொண்டு நடிப்பதில் வல்லவர்.

ஏஎல் விஜய்யின் எல்லாப் படங்களிலும் நாசருக்கு தவறாமல் ஒரு பாத்திரம் இருக்கும்.

சைவம் படத்துக்காக நாசரின் கெட்-அப் இது!

இப்போது ஏ எல் விஜய் இயக்கும் சைவம் படத்தில் முதியவர் கதாபத்திரத்திற்கு பாதி வழுக்கை விழுந்தவர் தோற்றத்தில் நடிக்கிறார் நாசர்.

தோற்றம் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது முடியை மழித்துக் கொண்ட நாசர், அசல் வழுக்கை தலையுடைய முதியவர் போன்று காட்சி தருகிறார்.

இந்தப் படத்துக்காக முடியை மழித்துக் கொண்டால்... மற்ற படங்களின் தொடர்ச்சி பாதிக்குமே என்பதால், நாசருக்குப் பொருத்தமான விக் ஒன்றை ஒப்பனை கலைஞர் பட்டணம் ரஷீத் செய்து கொடுத்துள்ளாராம்.

 

தேர்தல் 2014: யாருக்கும் ஆதரவில்லை.. நடுநிலை வகிக்க ரஜினி முடிவு!

சென்னை: இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ வாய்ஸ் தரவோ போவதில்லை. நடுநிலை வகிக்கப் போவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியும், கூட்டங்கள் போட்டு தீர்மானங்கள் நிறைவேற்றியும் இதனை ரஜினிக்கு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த ஆண்டு நடக்கும் பொதுத் தேர்தலில் ரஜினி நிச்சயம் ஒரு அரசியல் முடிவு எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் தரப்பில் சில மாவட்டங்களில் கூட்டங்கள் போட்டு தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள்.

தேர்தல் 2014: யாருக்கும் ஆதரவில்லை.. நடுநிலை வகிக்க ரஜினி முடிவு!

ரசிகர்களின் மனநிலை, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் தொடர்ந்து ரஜினிக்கு அனுப்பி வந்தனர் ரசிகர்கள்.

தமிழக அரசியலில் உள்ள அனைவருமே இப்போது ரஜினியின் நண்பர்களாகிவிட்டார்கள்.

அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதராக ரஜினியை முன்னிறுத்துவன் உள்நோக்கம், ரஜினி அரசியலுக்கு வரவே கூடாது என்பதுதான்.

ஜெயலலிதா, கருணாநிதி, நரேந்திர மோடி, முக ஸ்டாலின், பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி, வைகோ, திருமாவளவன், விஜயகாந்த் என அனைவருடனும் இணக்கமாகவே உள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரஜினி பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லியது நினைவிருக்கலாம்.

எனவே இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு காட்டாமல், நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளார். எனவே தனக்கு கடிதம் அனுப்பிய ரசிகர் மன்ற நிர்வாகிகளை அவரவருக்குப் பிடித்த கட்சியில் பணியாற்றலாம் என்று கூறிவிட்டாராம்.

 

குக்கூ - விமர்சனம்

Rating:
3.5/5
எஸ் ஷங்கர்

கண்களிருக்கும் மனிதர்களின் காதலுக்கு ஆயிரம் தடைகள்.. பிரச்சினைகள். அதை பல படங்களில் பார்த்தும்விட்டோம்.

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் இருவரின் காதலுக்கு வரும் சோதனைகள்... அவற்றிலிருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதை மனம் வலிக்க வலிக்கச் சொல்லியிருக்கிறார் புது இயக்குநர் ராஜூ முருகன்.

வெறும் பொழுதுபோக்கு, குத்துப் பாட்டு, கேவலமான காமெடியெல்லாம் ஏதுமில்லாத அழகான படமாக வந்திருக்கிறது குக்கூ. அன்பின் வலிமை அன்பானவர்களை ஒன்று சேர்க்கும் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்.

குக்கூ - விமர்சனம்

படம் முழுக்க ஒவ்வொரு காட்சியிலும் தமிழுக்கும் கொடிக்கும் ஏதாவது நேர்ந்துவிடுமோ... எங்காவது மோதிக் கொள்வார்களோ.. அந்த வாகனம் இடித்துவிடுமோ என பதறுகிறது மனசு.

பார்வையில்லாதவர்களின் உலகம், அவர்களின் வாழ்க்கை, அவர்களின் எள்ளலை, அவர்களின் சந்தோஷங்களை இத்தனை இயல்பாக, அதே நேரம் பிரச்சார தொனியில்லாமல் யாரும் சொன்னதில்லை.

பார்வையில்லாத ஒரு காதலியும், காதலனும் எந்தத் தொடர்புகளும் இல்லாமல் இருவேறு திக்கில் பிரிந்து போன பிறகு.. மீண்டும் சேர்வதில் உள்ள சிக்கலை யோசித்துப் பார்த்தால்... ஏ யப்பா... எவ்வளவு பெரிய துயர் இது!

குக்கூ - விமர்சனம்

ரயிலில் பொருள்கள் விற்கும், அவ்வப்போது இளையராஜா குரலில் கச்சேரிகளில் பாடும் பார்வையற்ற இளைஞர் தமிழ் (தினேஷ்). ஆசிரியர் பயிற்சிக்குப் படிக்கும் பார்வையற்ற பெண் சுதந்திரக் கொடி (மாளவிகா நாயர்). இருவரின் சந்திப்பும் மோதலில் தொடங்கி, அடுத்தடுத்த சந்திப்புகளில் காதலாகிறது. ஆனால் கொடியின் அண்ணன், தங்கையை வேலையில் சேர்ப்பதற்காக தேவைப்படும் பணத்தை ஏற்பாடு செய்த தன் நண்பனுக்கே அவளை திருமணம் செய்து வைக்க முயல்கிறான்.

கொடி கடுமையாக எதிர்த்துப் போராடுகிறாள். காதல் விஷயம் தெரிந்ததும் தமிழை அடித்துப் போடுகிறான் கொடியின் அண்ணன். வேலைக்காக கடன் வாங்கிய பணத்தைக் கொடுத்துவிட்டு தன்னை அண்ணன் பிடியிலிருந்து அழைத்துப் போகுமாறு தமிழிடம் சொல்கிறாள் கொடி. அங்கே இங்கே என பணத்தைப் புரட்டி கொடியைச் சந்திக்க கிளம்புகிறான் தமிழ். ஆனால் இரவில் ரகசியமாக கொடிக்கு திருமண ஏற்பாடு செய்கிறான் அண்ணன். அவர்களின் பிடியிலிருந்து தப்புகிறாள் கொடி.

பணத்தோடு வந்த தமிழோ போலீசில் சிக்கி, அதிலிருந்து தப்பி விபத்தில் அடிபட்டு பணத்தையும் இழந்து மரணத்தோடு போராடுகிறான். இருவரும் மீண்டும் சந்திக்கிறார்களா.. அந்தக் காதல் கைகூடியதா என்பது மீதிக் கதை.

குக்கூ - விமர்சனம்

படத்தின் இயக்குநர் ராஜூ முருகன்தான் கதையைத் தொடங்குகிறார். தமிழுக்கும், சுதந்திரக் கொடிக்கும் இடையிலான காதல் என்ன ஆனது என்ற அவரது தேடல்தான் படமாக விரிகிறது.

பார்வையற்ற நாயகர்கள் வேடத்தில் இதற்கு முன் நடித்த கமல், விக்ரமையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிறார் தினேஷ். குறிப்பாக அவரது உடல்மொழி. தன் காதலி எதிரில் இருந்து கொண்டே இல்லை என்று பொய் சொல்லும்போது அந்தக் கோபம்.. காதலி சமாதானமானதும் மகிழ்ச்சியைக் காட்டும் விதம்...சினிமா 'கேட்க' தியேட்டருக்குப் போய் பண்ணும் நக்கல்ஸ்... எல்லாவற்றிலும் ஒரு உண்மையான மாற்றுத் திறனாளியை நகலெடுத்திருக்கிறார் தினேஷ். வெல்டன்.

காதலியாக வரும் மாளவிகாவும் பிரமிக்க வைக்கிறார். இவரா புதுமுகம் என கேட்க வைக்கிறது அவர் நடிப்பு... அத்தனை கச்சிதம். அதுவும் அவர் சர்ச்சிலிருந்து தப்பித்து, தட்டுத் தடுமாறி நெடுஞ்சாலைக்கு அருகில் வந்தபிறகு பேய்த்தனமாக கடந்துபோகும் வாகனங்களின் வேகத்தை உணர்ந்து அலறிப் பின் வாங்கி நின்று தடுமாறும் போது மனம் படும் வேதனை கொஞ்சமல்ல.

குக்கூ - விமர்சனம்  

அந்த நாடகக் கோஷ்டியில் வரும் எம்ஜிஆர், சந்திரபாபு எல்லாருமே சுவாரஸ்யமான பாத்திரப் படைப்பு. முக்கியமாக எம்ஜிஆராக வருபவர் குணத்திலும் அவரது கொடையுள்ளத்தை வெளிப்படுத்தும் காட்சி!

ஆடுகளம் முருகதாஸ், தினேஷின் பார்வையற்ற நண்பனாக வருபவர், கொடியின் அண்ணன், அந்த புரோக்கர், எமோசனல் ஆகிடுவேன் என்ற வசனத்தை குபீர் சிரிப்பாக மாற்றும் ஜிலாக்கி.. என நடித்த அனைவருமே இயல் மீறாமல் நடித்துள்ளனர்.

படத்தில் குறைகள் என்று சொல்ல கொஞ்சமல்ல.. நிறையவே இருக்கிறது.

பிறவிப் பார்வையற்ற நாயகி தனக்கு பிங்க் நிறம் பிடிக்கும் என்பது எப்படி எனப் புரியவில்லை.

குக்கூ - விமர்சனம்

மூன்று லட்ச ரூபாய் என்பது நாயகனின் நிலைமைக்கு மிகப் பெரிய பணம். பெரும்பாடுபட்டு அந்தப் பணத்தைப் புரட்டும் அவன், அத்தனை நண்பர்கள் துணையிருந்தும் பிரச்சினையுள்ள ஒரு இடத்துக்குத் தனியாகப் போவது ஏன்? வந்து பிக்கப் செய்து கொள்வதாகச் சொல்லும் பார்வையுள்ள நண்பன் எங்கே போனான்?

நாயகனும் நாயகியும் பரஸ்பரம் தங்கள் வாசனையை உணர்ந்தவர்கள். பத்தடி தூரத்திலிருக்கும்போதே தன் காதலன் வாசம் புரிந்து கொள்பவள் நாயகி. ஒரு வேனில் தனக்கு மிக அருகில் அடிபட்டு படுத்துக் கிடக்கும் காதலனை நாயகி உணர்ந்து கொள்ளாமல் போவது எப்படி?

குக்கூ - விமர்சனம்

அந்த புனே ரயில் நிலையக் காட்சி. பார்ப்பவர் மனதில் பெரும் பாரத்தைச் சுமக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்ட மாதிரி தெரிகிறது. ஆனாலும், ராஜூ முருகன் எதிர்ப்பார்ப்பு நிறைவேறியிருக்கிறது என்றே சொல்லலாம்!

படத்துக்கு இசை இளையராஜா என்று போட்டிருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு நம்பலாம். அப்படி ஒரு பாதிப்பு. நாயகன் இளையராஜா குரலில் பாடுபவன் என்பதால், ராஜாவின் பாடல்கள் பின்னணி இசையாக ஒலிப்பதைக் கேட்கவே அத்தனை சுகமாக உள்ளது. மனசில சூறைக்காத்தே... மனசில் நிற்கிறது. சந்தோஷ இசை தந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்!

இந்தக் கதை எத்தனைப் பேருக்குப் பிடிக்கும்... என்பதையெல்லாம் யோசிக்காமல், எந்த மனிதருக்கும் காதல் வரும்.. அதில் சோதனைகள் வரும். அதைச் சொல்லும் விதத்தில் சொன்னால் மனசில் பதியும் என்ற அழுத்தமான நம்பிக்கையுடன் தன் முதல் படத்தைத் தந்திருக்கும் ராஜூ முருகனை வாழ்த்தி வரவேற்போம்!

 

பாரதிராஜா ஜோடியாகிறார் மயிலு ஸ்ரீதேவி!

ஜீவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படத்தில் பாரதிராஜாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரீதேவி.

பதினாறு வயதினிலே படத்தில் பாரதிராஜாவால் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஸ்ரீதேவி. அந்தப் படத்தில் மயிலுவாக வந்து மக்கள் மனங்களில் அமர்ந்தார். அதன் பிறகு இந்தியத் திரையுலகில் இணையற்ற நட்சத்திரமாக வலம் வந்தார்.

பாரதிராஜா ஜோடியாகிறார் மயிலு ஸ்ரீதேவி!

திருமணம் முடிந்து இப்போது அவரது இரு மகள்களும் நடிப்பு மாடலிங் என்று களமிறங்கியுள்ள நிலையில், மீண்டும் முழுவீச்சில் நடிக்கக் கிளம்பிவிட்டார் ஸ்ரீதேவி.

அவரது மறுபிரவேசப் படமான இங்கிலீஷ் விங்கிலீஷ் நல்ல வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து நல்ல வாய்ப்புகளை மட்டும் ஏற்றுக் கொள்கிறார் ஸ்ரீதேவி.

தமிழில் ஜீவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் இயக்குநர் பாரதிராஜா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை ஏற்கெனவே தெரிவித்திருந்தோம். இப்படத்தில் பாரதிராஜாவுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறவர் மயிலு ஸ்ரீதேவிதான்.

இயக்குநர் பாரதிராஜா ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும், சமீபத்தில் வெளியான பாண்டிய நாடு மூலம் மிகச் சிறந்த நடிகர் என்ற பாராட்டைப் பெற்றுள்ளார். இப்போது பல இயக்குநர்களும் பாரதிராஜாவை தங்கள் படங்கள் முக்கிய வேடமேற்கக் கேட்டு வருகின்றனர்.

 

மோகன் பாபு பிறந்த நாள் விழாவில் சூர்யாவின் சர்ப்ரைஸ் விசிட்!

ஹைதராபாத்: தெலுங்கு நடிகரும் முன்னாள் எம்பியுமான மோகன் பாபு பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் திடீரென கலந்து கொண்டு, மோகன் பாபுவை வாழ்த்தினார் நடிகர் சூர்யா.

சூர்யா தற்போது அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். லிங்குசாமி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடக்கிறது.

மோகன் பாபு பிறந்த நாள் விழாவில் சூர்யாவின் சர்ப்ரைஸ் விசிட்!

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு வருகிற 2-ந்தேதி முடியும் என்றும் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், படப்பிடிப்பில் கிடைத்த இடைவெளியில் ஹைதராபாத்தில் உள்ள நடிகர் மோகன்பாபு வீட்டுக்கு திடீரென்று சென்றார் சூர்யா.

அப்போது மோகன்பாபு தனது 62-வது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டு இருந்தார். அவருக்கு சூர்யா பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார்.

சூர்யாவின் இந்த திடீர் வருகை அங்கு இருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது.

சூர்யாவை மோகன்பாபு கட்டிப்பிடித்து வரவேற்றார். மோகன்பாபுவின் மகனும் நடிகருமான மனோஜ் மஞ்சு, மகளும் நடிகையுமான லட்சுமிமஞ்சு மற்றும் குடும்பத்தினர் சூர்யாவை வரவேற்று தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

ஒரு சிறந்த மனிதருக்கு வாழ்த்துச் சொல்ல வந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாக சூர்யா தெரிவித்தார்.

 

'தன் சொகுசு பங்களா திட்டத்துக்காக குடியிருக்கும் மக்களை வெளியேற்றினார்!'- ஆமீர்கான் மீது புகார்

மும்பை: சொகுசு பங்களா கட்ட ஏழைகளின் நிலத்தை ஆக்கிரமித்தார் என நடிகர் ஆமீர்கான் மீது புகார் எழுந்துள்ளது.

சினிமாக்களில் நகருக்கு மத்தியில் ஏழைகள் குடியிருப்பார்கள். ஒரு பணக்காரர் அந்த இடத்தை வளைக்க விரும்புவார். உடனே அடியாட்கள் வந்து புல்டோசர் விட்டு இடிப்பார்கள். மக்கள் ஹீரோவிடம் முறையிடுவார்கள்.

'தன் சொகுசு பங்களா திட்டத்துக்காக குடியிருக்கும் மக்களை வெளியேற்றினார்!'- ஆமீர்கான் மீது புகார்

கிட்டத்தட்ட இப்படியொரு சமாச்சாரம்தான் இப்போது மும்பையில் நடந்திருக்கிறது. என்ன இங்கு ஹீரோவாக நடித்தவர் நிஜத்தில் மக்களுக்கு வில்லனாகிவிட்டார்.

மும்பை பாந்த்ரா பகுதியில் ஒரு சொகுசு பங்களா கட்ட ஆமீர்கான் திட்டமிட்டுள்ளார். 20 ஆயிரம் சதுர அடியில் இந்த பங்களா உருவாகிறது.

இதற்காக அங்குள்ள ஹவுசிங் சொசைட்டியிடம் ஒப்பந்தம் போட்டு அப்பகுதியில் குடியிருப்பவர்களை காலி செய்ய வைக்கும்படி வற்புறுத்தினாராம் ஆமீர்கான். ஆனால் பவேலா என்ற 87 வயது மூதாட்டி உள்ளிட்ட 5 பேர் மட்டும் வீட்டை காலி செய்ய மறுத்து விட்டனராம்.

மேலும் ஆமீருக்காக மக்களை அப்பகுதியை விட்டு வெளியேற்றும் ஹவுசிங் சொசைட்டியின் நடவடிக்கையை எதிர்த்து மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஆமீரின் இந்த செயலை எந்த 'சத்யமேவ ஜெயதே'-வில் விவாதிப்பது? என்ற விமர்சனமும் கிளம்பியுள்ளது (மக்கள் பிரச்சினைகளை அலச ஆமீர்கான் நடத்தும் டிவி நிகழ்ச்சி சத்யமேவ ஜெயதே).

ஆமீர்கான் மறுப்பு

இந்த நிலையில், தன் மீதான நில அபகரிப்பு குற்றச்சாட்டை ஆமீர்கான் மறுத்துள்ளார்.

 

பாஸ் என்கிற பாஸ்கரன் 2-ம் பாகத்துக்கு தயாராகும் ஆர்யா - நயன் - சந்தானம்!

பெரும் வெற்றி பெற்ற பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள்.

இந்தப் படத்திலும் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிக்கிறார்கள். கூடுதலாக தமன்னா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ராஜேஷ்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார்.

பாஸ் என்கிற பாஸ்கரன் 2-ம் பாகத்துக்கு தயாராகும் ஆர்யா - நயன் - சந்தானம்!

பாஸ் என்கிற பாஸ்கரன் 2010-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டார்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பது குறித்து ஏற்கெனவே இயக்குநர் ராஜேஷ் பேசியிருந்தார்.

படம் குறித்து ராஜேஷ் கூறுகையில், "இரண்டாம் பாக ஐடியாவைச் சொன்னதுமே ஆர்யா, நயன்தாரா ஒப்புக் கொண்டனர். தமன்னாவும் இப்போது இணைந்துள்ளார். வழக்கம்போல சந்தானமும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், என்றார்.

 

'13' அதிர்ஷ்டமில்லாத நம்பரா... இதோ, அதை விளக்க வருகிறது ஒரு படம்!

இயக்குநர் பாலாஜி சக்திவேலின் உதவியாளர் டி சுரேஷ் இயக்கும் புதிய படத்துக்கு 13 என்று தலைப்பிட்டுள்ளனர்.

இந்தப் படத்தை அண்ணாமலையார் ஸ்டுடியோஸ் சார்பில் டி செந்தில், ஆகே எண்டர்டெயினர்ஸ் சார்பில் ஆர் கே யோகேஷ் தயாரிக்கிறார்கள்.

பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர் டி சுரேஷ்.

'13' அதிர்ஷ்டமில்லாத நம்பரா... இதோ, அதை விளக்க வருகிறது ஒரு படம்!

மனோஜ் நாயகனாகவும் ஷீரா என்ற புதுமுகம் நாயகியாகவும் நடிக்கின்றனர்.

வெளிநாடுகளிலும் சரி, இந்தியாவிலும் சரி 13 என்பது அதிர்ஷ்டமில்லாத எண் என்ற ஒரு நினைப்பு பரவலாக உள்ளது. ஆனால் இந்தக் கதையில் 13-ம் தேதியன்று நடக்கும் ஒரு திருப்பம் பெரிய மகிழ்ச்சிக்கு காரணமாக அமைகிறது.

'13' அதிர்ஷ்டமில்லாத நம்பரா... இதோ, அதை விளக்க வருகிறது ஒரு படம்!

அது என்பதை விறுவிறுப்பாகச் சொல்லும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளாராம் இயக்குநர் சுரேஷ். பாலாஜி சக்திவேலிடமிருந்து வெளிவரும் முதல் மாணவர் இவர்தான்.

 

நிஜ வாழ்க்கையில் நான் குடிச்சதே இல்லீங்க! - சிவகார்த்திகேயன்

சென்னை: நிஜ வாழ்க்கையில் நான் குடிச்சதோ புகை பிடிச்சதோ இல்லை என்று சத்தியம் செய்கிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் அறிமுகமானதிலிருந்து அவரது பெரும்பாலான படங்களில் நடிக்கும் காட்சிகளைவிட சரக்கடிக்கும் காட்சிகளில்தான் அதிகம் தோன்றியிருப்பார்.

அவரது சமீபத்திய ஹிட்டான வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் டாஸ்மாக் பாரில் பாடல் காட்சி இடம்பெற்றது. பீரை அவர் காதல் தோல்வி மருந்து என்று சொல்லித்தான் கடையில் கேட்பார்.

நிஜ வாழ்க்கையில் நான் குடிச்சதே இல்லீங்க! - சிவகார்த்திகேயன்

இது சரியா... புகைக்கும் குடிக்கும் காட்சிகளில் நடிக்கலாமா? என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர்.

அதற்கு அவர், "நான் சத்தியமா நிஜத்தில் குடிச்சதே இல்லை. புகைப் பிடிச்சதும் இல்லை. ஆனா படத்தின் காட்சிக்குத் தேவை எனும்போது அதற்கு மறுப்பு சொல்லும் அளவுக்கு நான் பெரிய நடிகன் கிடையாது. எனது அடுத்த படமான டாணாவில் மது, புகை காட்சிகளே இருக்காது.

இனி வரும் படங்களில் புகைக்கிற, மது குடிக்கிற காட்சிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள முயற்சிக்கிறேன்," என்றார்.

 

டாப் நடிகைகளை புலம்ப வைத்த மகா நடிகர்!

உலக நடிகருக்கு முன்பு காதல் இளவரசன் என்ற பட்டம் இருந்தது. அந்தப் பட்டத்தை அவரே முன்வந்து வேறு நடிகருக்குக் கொடுத்துவிட்டார். பல நாயகிகளுக்கு இவர் படத்தில் நடிப்பதில் மிகப் பெரிய போட்டியே நடக்கிறது.

இவர் படத்தில் நடிக்க நாயகி தேடுவது மிகப் பெரிய சவால். ஆனால் முதல் முறையாக அந்த அமெரிக்க தமிழ் நடிகைக்கும் இங்குள்ள பாட்டுப் பாடும் நடிகைக்கும் மட்டும் தொடர்ந்து மூன்று படங்களுக்கு நாயகியாகும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

'நம்மால் இன்னும் ஒரு படம் கூட அவருடன் நடிக்கவில்லை.. ஆனால் இவர்களோ தொடர்ந்து மூன்று வாய்ப்பைப் பெற்றுவிட்டார்களே...' என பொறாமையாகப் பார்க்கிறார்களாம் முன்னணி நடிகைகள். குறிப்பாக இன்று டாப் நடிகையாக இருக்கும் இருவர்.