சென்னை: ஸ்வீடன் நாட்டில் வாடேர்ன் ருண்டேர்ன் ரேஸ் என்ற பெயரில் நடந்த சைக்கிள் ஓட்டும் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் ஆர்யா அதில் பதக்கம் வென்று பரிசைத் தட்டிச் சென்றுள்ளார்.
அண்மையில் ஸ்வீடன் நாட்டில் 300 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சைக்கிள் ஓட்டும் போட்டி ஒன்று நடைபெற்றது.
இதில் இந்தியாவின் சார்பாக நடிகர் ஆர்யாவும் கலந்து கொண்டார், சீரற்ற வளைவுகள், மலைகள்,அபாயகரமான பாதைகள், எதிர்க்காற்று போன்றவற்றைத் தாண்டி 15 மணி நேரத்திற்குள் 300 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வேண்டும் என்பது தான் போட்டியின் விதி.
குறிப்பிட்ட 15 மணி நேரத்திற்குள் 300 கிலோ மீட்டர் தூரத்தையும் கடந்த ஆர்யா போட்டியில் வெற்றி பெற்று பரிசாக பதக்கம் ஒன்றைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
போட்டியில் வென்ற பின் எனக்காக வேண்டிக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி என்று மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் ஆர்யா.
பரவாயில்லை, அஜீத் பைக் ஓட்டுகிறார்.. ஆர்யா சைக்கிள் ஓட்டுகிறார்.. !