2/10/2011 12:51:29 PM
பாலா இயக்கத்தில் ‘அவன் இவன்’ படத்தில் ஆர்யா, விஷால் நடித்துள்ளனர். படம் பற்றி விஷால் கூறியது: இந்த படத்துக்காக பாலா என்னை தேர்வு செய்ததும் சந்தோஷப்பட்டேன். படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கியது. முதல் ஷெட்யூலில் நான் நடித்த காட்சிகளும் படமானது. அந்த காட்சிகள் முடிந்து, அடுத்த காட்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தோம். பாலா மட்டும் டென்ஷனாக காணப்பட்டார். அங்கும் இங்குமாக நடந்தபடி இருந்தார். ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டேன். திடீரென என்னை அழைத்தவர், Ôஇன்னும் நீ சென்னை காலேஜ் பையனாவே இருக்கிறே. அதிலிருந்து வெளியே வரணும்Õ என்றார். அதன் பின் அவர் சொன்ன ஐடியாதான், ஓரக்கண் பார்வை கேரக்டர். படம் முழுக்க ஓரக்கண் பார்வையுடையவனாக நடித்திருக்கிறேன். இதற்காக கஷ்டப்பட்டேன். சில காட்ச¤களில் தாங்க முடியாத கண் வலி ஏற்படும். இந்த கேரக்டர் மூலம் எனது பாடிலாங்வேஜையும் மாற்றி அமைத்திருக்கிறார் பாலா. அடுத்து சமீரா ரெட்டியுடன் ஆக்ஷன் கலந்த படத்தில் நடிக்கிறேன். பிரபுதேவா இயக்குகிறார். விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளது. இவ்வாறு விஷால் கூறினார்.