கவிஞர் வைரமுத்துவின் தந்தை காலமானார்: வடுகபட்டியில் இன்று இறுதிச் சடங்கு

Lyricist Vairamuthu S Father Is No More

சென்னை: கவிஞர் வைரமுத்துவின் தந்தை ராமசாமித்தேவர் நேற்று காலமானார். வைரமுத்துவின் சொந்த ஊரான வடுகபட்டியில் இன்று பிற்பகல் 1 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

கவிஞர் வைரமுத்துவின் தந்தை ராமசாமித்தேவர்(82). உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிறுநீரக பிரச்சனைக்கான சிகிச்சை பெற மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனிக்காமல் போனது. இதையடுத்து சொந்த ஊரான வடுகபட்டிக்கு நேற்று அவர் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குள் நுழைந்த சில நிமிடங்களில் பகல் 12.30 மணிக்கு காலமானார்.

இது குறித்து தகவல் அறிந்த வைரமுத்து தனது குடும்பத்தாருடன் வடுகபட்டி கிளம்பினார். ராமசாமித் தேவருக்கு வைரமுத்து, பாண்டியன் (காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்) என்ற 2 மகன்களும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். ராமசாமித் தேவரின் இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் 1 மணிக்கு வடுகபட்டியில் நடைபெறுகிறது.

 

எனக்கு ரொமான்ஸ் பிடிக்கும்தான், ஆனா இப்ப ஆள் தேவையில்லை- செலீனா

I Am Not Looking A Boyfriend Selena

லண்டன்: பாடகியும், நடிகையுமான செலீனா கோமஸ், தான் புதிய பாய் பிரண்ட் யாரையும் இப்போதைக்குப் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

ஜஸ்டின் பீபரிடமிருந்து சமீபத்தில்தான் பிரிந்தார் செலீனா. இதைத்தொடர்ந்து அவர் புதிய ஆணைத் தேட ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை மறுத்துள்ளார் செலீனா.

கடந்த ஜனவரி மாதம்தான் செலீனாவும், பீபரும் பிரிந்தனர். தற்போது தனிமையாகாத்தான் இருக்கிறாராம் செலீனா. ஆனாலும் தான் புதிய ஆளைத் தேடவில்லை என்று கூறியுள்ளார் அவர்.

20 வயதேயாகும் செலீனா இதுகுறித்துக் கூறுகையில், நான் பெரிய ரொமான்ஸ்காரிதான். இல்லை என்று சொல்லவில்லை. திறந்த மனதுடன்தான் இருக்கிறேன். அதையும் மறுக்கவில்லை. ஆனால், நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியதையும் மறந்து விடக் கூடாதில்லையா... எனவே நான் அவசரப்படவில்லை. புதிய பாய் பிரண்ட் யாரையும் பார்க்கவில்லை என்றார் செலீனா.

 

கூல்டிரிங்கில் மயக்க மருந்து கொடுத்து கார் டிரைவர் என் மகளை கடத்திவிட்டான்: நடிகை கவிதா

Car Driver Kidnaps My Daughter Actress Kavitha

ஹைதராபாத்: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கார் டிரைவர் ராஜ்குமார் தனது மகள் மாதுரியை கடத்திவிட்டதாக நடிகை கவிதா தெரிவித்துள்ளார்.

பிஸ்தா, அவள் வருவாளா, சுயம்வரம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளவர் கவிதா. அவர் ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். அவருக்கு 2 மகள்கள். அதில் மூத்த மகள் மாதுரி(21) எம்.பி.ஏ. படித்து வருகிறார். அவர் ஆந்திர மாநிலம் கரீம் நகர் மாவட்டம் சங்கரப்பட்டணத்தை சேர்ந்த கார் டிரைவர் ராஜ்குமார் என்பவரை ஹைதராபாத்தில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த திருமணம் குறித்து கவிதா கூறுகையில்,

என் மகளுக்கும், கார் டிரைவர் ராஜ்குமாருக்கும் திருமணம் நடந்துவிட்டதாக வந்த தகவல் உண்மையில்லை. கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்டது. ராஜ்குமார் என்னுடைய கார் டிரைவர் கிடையாது. நாங்கல் செகந்திராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியருப்பு ஒன்றில் 3வது மாடியில் வசித்து வருகிறோம். எங்கள் குடியிருப்பின் முதல் மாடியில் உள்ள அலுவலகம் ஒன்றில் ராஜ்குமார் கார் டிரைவராக இருந்தான். அப்படி தான் எங்களுக்கு அறிமுகம் ஆனான். கார் பார்க்கிங்கில் ஒரு ஹலோ சொல்வதோடு சரி. அவனுக்கும் எங்களுக்கும் வேறு எந்த தொடர்பும் கிடையாது. அவனை என் மகள் காதலிக்கவும் இல்லை.

சம்பவம் நடந்த அன்று என் மகள் அருகில் உள்ள கடைக்கு சென்றாள். அப்போது ராஜ்குமார் குளிர்பானம் வாங்கி அதில் மயக்க மருந்து கலந்து என் மகளுக்கு கொடுத்துள்ளான். அதை குடித்த என் மகள் மயங்கிவிடவே அவளை ராஜ்குமார் ஆட்டோவில் கடத்திவிட்டான். கோவிலில் வைத்து அவன் என் மகள் கழுத்தில் மாலை போட்டபோது போலீசார் அவனைப் பிடித்துவிட்டனர். கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்டது.

இது குறித்து என் கணவர் தசரதராஜ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் ராஜ்குமாரை கைது செய்து காவலில் வைத்துள்ளனர். போலீசார் அவனிடம் இருந்து எங்கள் மகளை மீட்டு எங்ளிடம் ஒப்படைத்துவிட்டனர்.

ராஜ்குமார் ஏற்கனவே 3 முறை திருமணம் செய்தவன் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவன் பெண்களை கடத்தி விற்பவன் என்பதும் தெரிய வந்துள்ளது. அவனிடம் குஜராத் செல்லும் ரயில் டிக்கெட்டுகள் இருந்துள்ளன என்றார்.

 

ரியல் எஸ்டேட்டில் குதித்த ரஜினி ரசிகர் - கண்ணீர் விட்டு அழுகை.. ஆறுதல் தந்த மோனிகா!

Rajini Fan Starts Real Estate Business In Ramnad

சென்னை: தயாரிப்பாளர் ஆர்.பி. பாலநமச்சிவாயனின் ரியல் எஸ்டேட் தொழிலை நடிகை மோனிகா துவங்கி வைத்தார்.

பயபுள்ள படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. பாலநமச்சிவாயன். ராமநாதபுரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவராகவும் உள்ளார். அவர் ராமநாதபுர மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழிலை துவங்கியுள்ளார். துவக்க விழாவுக்கு நடிகை மோனிகா வந்திருந்தார். அவர் ரியல் எஸ்டேட் தொழிலை துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய பாலநமச்சிவாயன் கூறுகையில்,

நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன். ரஜினிக்கு எப்பொழுதும் விசுவாசமாக இருப்பேன். நான் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவன். என் முன்னேற்றத்திற்கு எனது நண்பர்கள் தான் காரணம் என்று கூறி கண்ணீர் விட்டார்.

இதையடுத்து பேசிய மோனிகா, கவலைப் படாதீர்கள், நீங்கள் இன்னும் நன்றாக வருவீர்கள். நானும் ரஜினிகாந்த் ரசிகை தான். உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். முதல் ஆளாக நான் 5 மனை வாங்குகிறேன் என்றார்.

பரவாயில்லையே, ஆறுதல் தந்ததோடு நிற்காமல் அஞ்சு மனையையும் வாங்கிப் போட்டாரே.. இவர்தான் உண்மையான விசுவாசி!

 

எல்ரெட் குமாரிடமிருந்து என்னைக் காப்பாத்துங்க! - கவுதம் மேனன்

Gautham Menon Alleges Harassment Elred Kumar

சென்னை: எல்ரெட் குமாரிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் கவுதம் மேனன்.

தயாரிப்பாளர் எல்ரெட் குமார் - கவுதம் மேனன் இடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. கவுதம் மேனன் ரூ 20 கோடி வரை தனக்கு தர வேண்டும் என்று கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் எல்ரெட் குமார்.

இதற்கு முதல் முறையாக பதிலளித்துள்ளார் கவுதம் மேனன்.

எனது திறமை, நோக்கம் எல்லாம் முடக்கப்பட்டிருக்கிறது. படம் செய்வதாக நான் அளித்த உறுதியை மீறவில்லை.

சொல்லப்போனால் எல்ரெட் நிறுவனத்துக்கு 4 படங்கள் இயக்கி தந்திருக்கிறேன். ஒரு சந்தர்ப்பத்தில் சிம்புவை வைத்து படம் இயக்கி தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டோம். ஆனால் சிம்பு நடிக்கவில்லை. இதையடுத்து ஜீவாவை வைத்து படம் உருவாக்குவது என்று இருவரும் புரிதல் ஒப்பந்தம் செய்துகொண்டோம்.

இப்படத்திற்கு பணியாற்றிய மூத்த கலைஞர் ஒருவர் மீதும் அந்நிறுவனத்துக்கு அதிருப்தி இருந்தது. ஆனால் அந்த கலைஞரால்தான் படத்துக்கு கூடுதல் விற்பனை மதிப்பு கிடைத்தது. அதையும் மேடையிலும் பட நிறுவன அதிபர் தெரிவித்தார். பின்னர் சிலரிடம் அதுபற்றி மாற்று கருத்து கூறி இருக்கிறார். தற்போது நான் தொல்லையில் சிக்கி இருக்கிறேன். அதிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்," என்று, குறிப்பிட்டிருக்கிறார்.