சென்னை: கோவைப்பழ கண்கள் கொண்ட ஹீரோ நடித்த 3 எழுத்து படம் இந்தியில் ரீமேக்காகிறது. இதில் நடிக்க வந்த வாய்ப்பை மில்க் நடிகை மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் வேறு விதமாக அல்லவா பேச்சு அடிபடுகிறது.
கோவைப்பழ கண்கள் கொண்ட அந்த ஹீரோ, இடுப்பழகி நடிகை நடித்த 3 எழுத்து படம் சூப்பர் ஹிட்டானது. அந்த ஹீரோ தற்போது அரசியலில் இருக்கிறார். இந்நிலையில் அந்த படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். இந்தியில் நடிக்க மில்க் நடிகையை அழைத்ததாகவும் அவர் ரொம்ப பிசியாக இருப்பதால் நடிக்க மறுத்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது வேறு விதமாகக் கூறப்படுகிறது. போட்டோ செஷனில் கலந்து கொண்ட மில்க் தன்னை அழைப்பார்கள் என்று காத்திருந்தாராம். மில்க்கை இந்தியில் நடிக்க வைத்தால் அங்குள்ள ரசிகர்களிடம் படத்தை ஓட வைக்க முடியாது என்று நினைத்தார்களாம். அதனால் மில்க்கை விட்டுவிட்டு புயலின் பெயரை கொண்டுள்ள 4 எழுத்து இந்தி நடிகையை புக் செய்துவிட்டார்களாம்.
நம்மை நிச்சயம் அழைப்பார்கள் என்று காத்திருந்த மில்கிற்கு இது பெரும் அதிர்ச்சி அளித்ததாம். இந்த வாய்ப்பு கிடைக்காததால் இனி இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் நடிக்கப் போவதில்லை என்று கூறி வருகிறாராம் மில்க்.