நாளை கோவையில் 'கத்தி' வெற்றிக் கொண்டாட்டம்: விஜய், முருகதாஸ் பங்கேற்பு

சென்னை: கத்தி படத்தின் வெற்றிவிழா நாளை கோவையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெறுகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த படம் கத்தி. பல பிரச்சனைகளுக்கு பிறகு படம் தீபாவளி பண்டிகை அன்று ரிலீஸானது. படம் தமிழகம் தவிர கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது. இது தவிர விஜய் ரசிகர்கள் அதிகம் உள்ள இங்கிலாந்தில் 70 தியேட்டர்களில் கத்தி படம் ரிலீஸானது.

நாளை கோவையில் 'கத்தி' வெற்றிக் கொண்டாட்டம்: விஜய் பங்கேற்பு

படம் ரிலீஸான முதல்நாளே ரூ.23.8 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது என முருகதாஸ் ட்விட்டரில் தெரிவித்தார். இந்நிலையில் கத்தி படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் கோவையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நாளை நடைபெறுகிறது.

வெற்றிக் கொண்டாட்டத்தில் விஜய் மற்றும் முருகதாஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். கத்தி படத்தை அடுத்து சோனாக்ஷி சின்ஹாவை வைத்து இந்தி படம் ஒன்றை எடுக்கிறார் முருகதாஸ். விஜய் சிம்புதேவன் படத்தில் நடிக்கிறார்.

கத்தி படம் ஆஸ்திரேலியா, மலேசியாவிலும் நல்ல வசூல் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

'சின்ன கேப்டன்' சண்முக பாண்டியனுக்காக 'வாய்ஸ்' கொடுத்த சிம்பு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளையமகன் நடிக்கும் சகாப்தம் படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளையமகன் சண்முக பாண்டியன் சகாப்தம் என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்றபோது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

'சின்ன கேப்டன்' சண்முக பாண்டியனுக்காக 'வாய்ஸ்' கொடுத்த சிம்பு

விஜயகாந்த் இந்த படத்திற்கு லொகேஷன் பார்க்க வெளிநாடுக்கு சென்று வந்தார். இந்நிலையில் சகாப்தம் படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளாராம். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அந்த பாடலை பாடிக் கொடுத்தாராம்.

சிம்பு நடிப்பது தவிர்த்து பாடவும் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் இணையதளத்தில் முத்த வீடியோ ஒன்று வெளியானது. அது சிமா விருது விழாவுக்கு சென்ற இடத்தில் சிம்புவும், கன்னட நடிகையும் முத்தம் கொடுத்தபோது எடுத்தது என்று கூறப்பட்டது.

ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் அதை மறுத்தனர். யாரோ வேலையில்லாதவர்கள் செய்த காரியம் என்றார் நடிகை.

 

குரோம்பேட்டையில் இன்று 'விஜய்' சிலை திறப்பு விழா: ரசிகர்கள் குதூகலம்

சென்னை: விஜய் ரசிகர்கள் அவருக்கு சிலை செய்துள்ளனர். அந்த சிலை இன்று குரோம்பேட்டையில் திறந்து வைக்கப்படுகிறது.

இளையதளபதி விஜய்க்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. கத்தி படம் நல்ல வசூல் செய்து வரும் மகிழ்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் தங்கள் தளபதியை சிலையாக வடித்துள்ளனர்.

குரோம்பேட்டையில் இன்று 'விஜய்' சிலை திறப்பு விழா: ரசிகர்கள் குதூகலம்

ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை சட்டை, கண்ணாடி அணிந்தபடி இருக்கிறது விஜய்யின் சிலை. இந்த சிலை திறப்பு விழா இன்று சென்னை, குரோம்பேட்டையில் நடக்க உள்ளது. மக்கள் பார்க்கும் வகையில் குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டர் வளாகத்தில் சிலையை நிறுவ ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த சிலை திறப்பு விழா பற்றி தான் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமையாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

 

நடிகை அமலா பால் கர்ப்பம்?

சென்னை: நடிகை அமலா பால் ட்விட்டரில் தெரிவித்திருக்கும் செய்தியை பார்த்தால் அவர் கர்ப்பமாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

நடிகை அமலா பால் தனது காதலரான இயக்குனர் ஏ.எல். விஜய்யை இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் இந்து முறைப்படி சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று அமலா தனது 22வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகை அமலா பால் கர்ப்பம்?

பிறந்தநாளையொட்டி விஜய் அமலாவை மகாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இது குறித்து அமலா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நேரம் ஓடுகிறது ஆண்டுதோறும் நம் வயது அதிகரிக்கிறது. எனக்கும் தான் இன்று. ஒரு பெண் விரும்புவதை என் விஜய் எனக்கு பரிசாக அளித்துள்ளார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை ஆனால் ஒரு விஷயம் நான் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை. நன்றி கடவுளே... என்று தெரிவித்துள்ளார்.

அவர் போட்டிருக்கும் ட்வீட்டை பார்த்தால் அவர் கர்ப்பமாக இருக்கக்கூடும் என்று நினைத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமலா...