ஸ்ரீதேவியின் மும்பை வீட்டில் குடியேறும் பிரபுதேவா

Sridevi Asks Prabhu Deva Move

பிரபுதேவா நடிகை ஸ்ரீதேவியின் மும்பையில் கிரீன் ஏக்கர்ஸ் வீட்டில் விரைவில் குடியேறவிருக்கிறார்.

பிரவுதேவா போக்கிரி படத்தை இந்தியில் சல்மான் கானை வைத்து வாண்டட் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி சல்மானுக்கு புத்துயிர் கொடுத்தது. இதையடுத்து கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரவுடி ரத்தோர் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அட அதுவும் கண்டமேனிக்கு ஓடி கோடிக் கணக்கில் வசூலை அள்ளி புதிய சாதனை படைத்தது.

இதனால் பிரபுதேவாவுக்கு பாலிவுட்டில் பயங்கர கிராக்கியாகிவிட்டது. பிரபுதேவா ரீமேக் செய்தால் அந்த படம் கண்டிப்பா ஹிட்டாகிவிடும் என்று பாலிவுட்டில் உள்ளவர்கள் நம்பும் அளவுக்கு ஆகிவிட்டது. இதையடுத்து நமக்கு தான் இங்கு இவ்வளவு கிராக்கி உள்ளதே நாம் ஏன் மும்பையில் தங்கிவிடக் கூடாது என்று நினைத்து பிரபுதேவா மும்பையில் வீடு தேடி அலைந்தார்.

இந்த செய்தி காத்துவாக்கில ஸ்ரீதேவியின் காதில் விழுந்தது. உடனே அவரும், அவருடைய கணவர் போனி கபூரும் பிரபுதேவாவை தொடர்பு கொண்டு வீடு தேடுகிறீர்களாமே, வேண்டும் என்றால் எங்க கிரீன் ஏக்கர்ஸ் வீட்டில் வந்து தங்கிக்கலாமே என்று தெரிவித்துள்ளனர். ரொம்ப நல்லதாப் போச்சுன்னு நினைத்த பிரபுதேவாவும் விரைவில் ஸ்ரீதேவியி்ன் வீட்டில் குடியேறுகிறார்.

 

முடிவுக்கு வந்து ஹீரோயின் பஞ்சாயத்து... மதகஜராஜாவில் விஷால் ஜோடி அஞ்சலி- வரலட்சுமி!

Anjali Varalakshmi Madha Gaja Raja    | விஷால்   | வரலட்சுமி  

ஹன்ஸிகா நடிக்கிறார்... கார்த்திகா நடிக்கிறார்... என்றெல்லாம் பேசப்பட்டு கடைசியில் யார் ஹீரோயின் என்றே தெரியாமலிருந்த விஷாலின் மதகஜராஜா படத்தில், இப்போது நாயகிகளாக நடிக்கின்றனர் அஞ்சலியும் வரலட்சுமியும்!

இதுகுறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் தயாரிப்பாளர்கள் தரப்பில்.

விஷால் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடிதான் அஞ்சலியும் வரலட்சுமியும்.

ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், சந்தானம், நிதின் சத்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

காமெடி, ஆக்ஷன் என சுந்தர் சியின் வழக்கமான முத்திரையுடன் வரும் அதிரடிப் படம் இது.

இந்தப் படத்துக்காக பெரும் செலவில் செட் போடப்பட்டு பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.

இந்தப் பாடல் காட்சியில் விஷாலுடன் குத்தாட்டம் போட்டவர் சதா!

 

அந்த செல்போனை மட்டும் கொடுத்துடுங்க - கெஞ்சும் நடிகை.. மிரட்டும் இளைஞர்!

இன்றைய தேதிக்கு தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அவர். பூர்வீகம் கேரளா. இப்போதும் அங்கிருந்து வந்துதான் நடித்துவிட்டுப் போகிறார்.

பெயர்... இப்ப வேணாம்... கடைசில நீங்களே தெரிஞ்சிப்பீங்க.

நடிகையின் படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடித்தாலும், தனிப்பட்ட முறையில் அம்மணி ஏக சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வாடிக்கை.

ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும், அம்மணிக்கு மார்க்கெட் செம ஸ்ட்ராங்.. அதைவிட ஹீரோக்களிடம் மவுசு அதைவிட ஸ்ட்ராங் என்பதால்... வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன. சம்பளமும் கோடியைத் தொடுகிறது.

சமீபத்தில் கேரளாவுக்குப் போயிருந்த நடிகை, அங்கு புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ஹூக்கா ஸ்பெஷல் ஹோட்டலுக்கு விசிட் அடித்துள்ளார் (ஹூக்கான்னா என்னன்னு கேட்டுடாதீங்க... அதைச் சொல்ல தனி கட்டுரை அடிக்கச் சொல்வார் எடிட்டரு!)

ஹூக்கா மப்பு ஏற ஏற... அம்மணி சகலத்தையும் மறந்து எப்படி வீடு வந்து சேர்ந்தோம் என்பதே தெரியாமல் வந்து சேர்ந்திருக்கிறார். காலையில் எல்லாம் தெளிந்த பிறகு பார்த்தால்... துடிதுடித்துவிட்டாராம்.

என்ன ஆச்சு...?

இன்றைய நிலையில் ஒரு நடிகைக்கு உயிர்த்துடிப்பே செல்போன்தான். நடிகையின் சகல தொடர்புகள் மற்றும் ரகசியங்கள் அடங்கிய செல்போன் காணவில்லையாம்.

மப்பு ஜப்பென்று இறங்கிவிட, திருடனுக்கு தேள்கொட்டிய மாதிரி வெளியில் சொல்லவும் முடியாமல், எப்படி தேடுவதென்றும் தெரியாமல் விழித்திருக்கிறார் நடிகை.

அடுத்த நாள் நடிகையின் வேறொரு நம்பருக்கு ஒரு கால் வந்திருக்கிறது. பேசியவர் ஒரு இளைஞர்.

எடுத்த எடுப்பில் நடிகையை கன்னா பின்னாவென்று திட்டியிருக்கிறார். "ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, இப்படியெல்லாமா ஆபாசமாக நடந்து கொள்வாய். உன் செல்போனில் உள்ள சென்சார் செய்யப்படாத வீடியோக்கள், ஆபாச பேச்சுக்களை அம்பலத்துக்கு விட்டால்...," என்று கேட்டு மிரட்டிவிட்டு போனை வைத்துவிட்டாராம்.

நடிகை சப்தநாடியும் ஒடுங்கி, கதிகலங்கி நின்றாராம். எப்படி இந்த சிக்கலிலிருந்து வெளிவருவது... அந்த முக்கிய செல்போனை மீட்பது என்று தெரியாமல் விழிக்கிறாராம்.

முழுக்கதையையும் கேட்ட அந்தரங்கமான சில தோழிகள், 'என்னடி இது... இப்படி சொதப்பிட்டியே' என்று தலையிலடித்துக் கொண்டார்களாம்!

எப்படியோ.. விரைவிலேயே இணையதளங்களை கதிகலங்க வைக்கும் வீடியோக்கள் வருவது மட்டும் உறுதி என்று கண் சிமிட்டுகிறார்கள் கோலிவுட்காரர்கள்!!

தமிழ் சினிமா கிசுகிசு செய்திகள்

 

இந்திய பாக்ஸ் ஆபீஸில் 'ரெக்கார்ட் பிரேக்' செய்த அமேசிங் ஸ்பைடர் மேன்!

Amazing Spider Man Beats Avatar At

இந்திய பாக்ஸ் ஆபிஸில் அவதாரின் வசூல் சாதனையை அமேசிங் ஸ்பைடர் மேன் படம் முறியடித்துள்ளது.

ஆன்ட்ரூ கார்பீல்ட்-எம்மா ஸ்டோன், பாலிவுட் நடிகர் இர்பான் கான் உள்ளிட்டோர் நடித்த அமேசிங் ஸ்பைடர் மேன் ஹாலிவுட் படம் இந்தியாவில் கடந்த 29ம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டு 3டி, 2டியில் 1,236 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ரிலீஸான அன்று ரூ.8.50 கோடியும், மறுநாள் அதாவது சனிக்கிழமை ரூ.9.60 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ.11 கோடியும் வசூலாகியுள்ளது.

ஆக படம் ரிலீஸான 3 நாட்களில் மட்டும் ரூ. 29.10 கோடி வசூலாகியுள்ளது. இந்த வருவாய் இந்தியாவில் கிடைத்தது மட்டுமே. இதுவரை இந்தியாவில் ரிலீஸான ஹாலிவுட் படங்களில் அவதார் படத்திற்கு தான் வார இறுதி நாட்களில் அதிகபட்சமாக ரூ.16 கோடி வசூலானது. தற்போது அவதாரின் சாதனையை அமேசிங் ஸ்பைடர் மேன் முறியடித்துள்ளது.

இந்த படத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் இர்பான் கான் ஸ்பைடர் மேனின் அடுத்த பாகத்திலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது. மிஷன் இம்பாசிபில் 4 படத்தில் பாலிவுட் நடிகர் அனில் கபூர் காமெடி பீசாக வந்ததுபோன்று இல்லாமல் இர்பான் தனது கதாபாத்திரத்தை அருமையாக செய்துள்ளார் என்று திரை ரசிகர் வருண் வர்மா தெரிவித்துள்ளார்.

 

பாரதிராஜா படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன்: சுதா சந்திரன்

Sudha Chandran As Buvana Thendral S

சினிமாவில் சாதனை படைத்த மயூரி சுதா சந்திரன் இப்போது சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரத்தில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். "கலச'த்தில் சந்​தி​ர​வாக கலக்கி,​ "அரசி'யில் வக்கீலாக வந்து தற்​போது தென்றலில் புவனாவாக வில்லத்தனம் செய்யும் மயூரி சுதா சந்​தி​ரன், தற்போது சென்னைக்கும் மும்பைக்கும் பறந்து கொண்டிருக்கிறார். தனது நீண்டகால மீடியா வாழ்க்கைப் பயணம் பற்றி அவரே கூறுகிறார் படியுங்களேன்.

​பனி​ரெண்டு வரு​டத்​திற்​குப் பிறகு தமிழ்ல நடிக்க வந்​தது ரொம்ப சந்​தோசமா இருக்கு. அப்போ நான் நடிக்​கும் போது எனக்கு சரி​யான பாத்திரங்கள் அமை​யல. படங்​கள் சரியா ஓடல. அதுல கொஞ்​சம் ஏமாற்​றமா இருந்​தது. இந்த சம​யத்​துல இந்​தி​யில வாய்ப்​பு​கள் நிறைய வந்​தது. அத​னால மும்​பை​யில போய் செட்​டில் ஆகிட்​டேன். அங்கே போய் டி.வி. சீரி​யல்,​ இந்தி படங்​கள் நிறைய நடிச்​சேன். அதன் பிறகு அங்கே பாலாஜி டெலி பிலிம்ஸ்ல ரொம்ப பிஸி​யாக இருந்​தேன்.

பாலாஜி டெலி பிலிம்ஸ்ல நடிச்​சதை பார்​துட்டு குட்டி பத்​மினி மேடம் போன் பண்ணி கல​சத்​துல நடிக்க கூப்​பிட்​டாங்க. அதே போல பிர​பு​நே​பால் சாரும் ஜெயா டிவி​யில ஒரு தொடர்ல நடிக்​கக் கூப்​பிட்​டார். அவுங்க இரண்டு பேரும்​தான் தமிழ் இண்​டஸ்ட்​ரிக்கு மறு​படி வர கார​ணம். "கல​சம்', "அரசி' இரண்​டும் நெகட்​டீவ் ரோல். ரொம்​பவே மேக்​கப் போட்டுக்​கிட்டு நடிச்​சேன். ராதிகா ​ மேட​மோட நடிச்​சது ரொம்ப நல்ல அனு​ப​வம். எனக்கு பார​தி​ராஜா சார் ​ படத்​துல நடிக்​க​னும் ரொம்ப நாளா ஆசை​யி​ருந்​தது. அப்போ அந்த வாய்ப்பு கிடைக்​கல. ஆனா அவ​ரோட உத​வி​யா​ளரின் தாயம் தொடரில் அந்த ஆசை நிறை​வே​றின திருப்தி. இப்போ தென்றல்ல நல்ல வேடமா கிடைச்சிருக்கு.

ரொம்ப நாள் கழிச்சு இங்க வந்​த​து​னால தமிழ் அவ்​வ​ளவா என்​னால பேச​மு​டி​யல. இப்போ லாங்​வேஜ் நல்லா செட் ஆகி​டுச்சு. நல்லா சர​ளமா தமிழ் பேசு​றேன். அது​மட்​டு​மல்ல மும்​பை​யில் இந்தி தொடர்​க​ளில் நிறைய நடித்​தில் நல்ல எக்ஸ்​பி​ரி​யன்ஸ் கிடைச்​ச​ருக்கு. ​ எனக்கு நிறைய நம்பிக்கை வந்திருக்கு. அங்​கே​யும் சரி,​ இங்​கே​யும் சரி டைரக்​டர்​கள் நல்ல சப்​போர்ட் பண்​ணாங்க. ​ எல்​லா​ரும் நல்ல எக்ஸ்​பி​ரி​யன்ஸ் டைரக்​டர்​கள் அது​னால நிறைய அனு​ப​வம் கிடைச்​சது. ​மும்​பை​யில் உள்ள ஆடி​யன்ஸ்க்​கும்,​ தமிழ் ஆடி​யன்ஸ்க்​கும் ரொம்ப வித்​தி​யா​சம் இருக்கு. அங்கே பார்த்​தீங்​கன்னா கொஞ்​சம் அதி​க​மாக மேக்​கப் போட்டு நடிக்​க​னும். ஆனால் மலை​யா​ளம்,​ தமிழ்ல எல்​லாம் ஓவர் மேக்​கப் எல்​லாம் தமிழ் கதை​கள் எல்​லாம் ஒவ்​வொரு குடும்​பத்​து​லை​யும் நடக்​கிற உண்​மை​யான கதை போல இருக்​கும். ரொம்ப ஏதார்த்​தமா இருக்​கும். இந்​தி​யில அப்​படி கிடை​யாது. இப்​போ​தான் ​ இந்தி டெலி​வி​ஷன் மாறிக்​கிட்டு வருது. ​ மெட்​ரோ​வை​விட்டு ​ நகர்ந்து கிரா​மங்​க​ளுக்​குப் போக ஆரம்​பி​தி​ருக்​கி​றார்​கள். இருந்​தா​லும் இந்​தி​யில் ஜூ​வல்​லரி,​ ஆடம்​பர சாரின்னு
எல்லாமே கொஞ்​சம் அதி​கமா இருக்​கும். ஆனால் தமி​ழில் அப்​ப​டி​யில்லை. தமிழ் ஆடி​யன்ஸை சீட் பண்ண முடி​யாது.

​நான் நடிச்சதிலையே ​ "மயூரி' படம்​தான் என் வாழ்க்​கை​யில் மறக்​கவே முடி​யாது. அந்த மாதிரி படம் யாரும் நடிக்க மாட்​டாங்க. அப்​ப​டியே பண்​ணாக்​கூட கதை யாரைப் ​ பற்​றியோ அவுங்​களே அதில் நடிக்​கி​றது ரொம்ப கஷ்​டம். அந்த மாதிரி அமை​யாது. நான் ரொம்ப லக்கி என்​னோட வாழ்க்​கையே பட​மாக்கி அதுல நானே நடிச்​சி​ருக்​கேன். அதுக்​காக எனக்கு 1985ல தேசிய விருது கிடைச்​சது. இதை​விட பெருமை வேற எது​வுமே இல்ல என் வாழ்க்​கைல.

சமீபத்திலதான் சென்​னை​யில் வீடு வாங்​கி​னேன். இப்போ சூட்​டிங்​கிற்​காக மாதத்​தில் பதி​னைந்து,​ இரு​பது நாள் இங்​கே​தான் இருக்​கி​றேன். மும்​பை​யில டான்ஸ் ஸ்கூல் வெச்​சி​ருக்​கேன். டான்ஸ் ஸ்கூல்ல போய் உட்​கார்ந்​துட்டா மன​சுக்கு ரொம்ப நிம்​மதி கிடைக்​கும்.ரொம்ப நல்லா போய்​கிட்டு இருக்கு. ​முன்பு மும்​பை​யில் இருந்து சென்​னைக்கு வந்து கொண்​டி​ருந்​தேன். இப்போ சென்​னை​யில் இருந்து மும்​பைக்​குப் போய் வரு​கி​றேன். எனக்​குக் குழந்​தை​கள் இல்லை. என் கண​வர் ரவி​யும் நானும் தான். அவர் ​​ ​ சினிமா இன்​டஸ்ட்​ரி​யில் டைரக்​ஷன் பீல்​டு​ல​தான் இருந்​தாரு. அதுக்​குப் பிறகு கனடா போய் சில வரும் ஓர்க் பண்​ணி​கிட்டு இருந்​தாரு. இப்​போது எங்​கள் நாட்​டி​யப்​பள்​ளியை அவர்​தான் பார்​த்து ​கிட்டு இருக்​கி​றார். ப்ளைட்டுக்கு நேரமாச்சு என்று கூறிவிட்டு கிளம்பினார் சுதா சந்திரன்.

 

டர்ட்டி பிக்சர்ஸ் ஸூட்டிங்... வீணா மாலிக்கை மொக்கியெடுத்த பெங்களூர் ரசிகர்கள்!

Veena Malik Mobbed Bangalore    | வீணா மாலிக்  

கன்னட டர்ட்டி பிக்சர்ஸ் படப்பிடிப்புக்காக பெங்களூர் வந்திருந்த பாகிஸ்தான் கவர்ச்சி நடிகை வீணா மாலிக்கை ரசிகர்கள் மொய்த்துக் கொண்டதால் பரபரப்பானது. படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.

கன்னடத்தில் தயாராகி வரும் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் முக்கிய சாலைப் பகுதியில் படமாக்கப்பட்டது. அப்போது அங்கு ரசிகர்கள் படையெடுத்து வந்தனர். கவர்ச்சிகரமான வீணா மாலிக் தங்களது கைக்கு எட்டும் தூரத்தில் இருந்ததைப் பார்த்த அவர்களுக்கு உற்சாகம் தாங்கவில்லை. பாதுகாப்பு அரணையும் தாண்டி வீணாவை நோக்கி பாய்ந்தனர்.

அவர்களை அடக்க படப்பிடிப்புக் குழுவினரால் முடியவில்லை. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். அதற்குள் வீணாவை சுற்றிச் சூழ்ந்து விட்டனர் ரசிகர்கள். அவர்களில் சிலருக்கு வீணா மாலிக் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். ஆனால் அவராலும் முடியவில்லை, அத்தனைக் கூட்டம்.

இதையடுத்து படப்பிடிப்பை நிறுத்தி விட்டு படப்பிடிப்புக் குழுவினர் படு பத்திரமாக வீணாவை அங்கிருந்து அழைத்துச் சென்று விட்டனர்.

ஏற்கனவே இப்படித்தான் ஆஸ்திரேலியாவின் பிஜி கடற்கரையிலும் வீணாவை ரசிகர்கள் மொய்த்தனர். இப்போது பெங்களூரிலும் மொய்த்துள்ளனர்.

 

காணாமல் போன பாலிவுட் நடிகை லைலா கான் சுட்டு கொலை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மும்பை: காணாமல் போனதாக கடந்த பல மாதங்களாக தேடப்பட்டு வரும் இந்தி நடிகை லைலா கான் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாக லஷ்கர் தீவிரவாதி, காஷ்மீர் போலீசில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2008&ம் ஆண்டு வெளியான 'வபா' இந்தி படத்தில் பழம்பெரும் நடிகர் ராஜேஷ் கன்னாவுடன் நடித்தவர் லைலா கான். இவரது நிஜ பெயர் ரேஷ்மா படேல். மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இகத்புரி என்ற இடத்தில் பண்ணை வீடு கட்டி வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் இவர் மர்மமான முறையில் காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து அவரது தந்தை நதிர் படேல் போலீசில் புகார் செய்தார்.

லைலா கானுக்கு வங்கதேச தீவிரவாதி முனிர் கான் மூலமாக லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி பர்வேஸ் இக்பால் தக் என்பவர் அறிமுகமானார். லைலா குடும்பத்தினருடன் பர்வேஸ் நெருங்கி பழகினார்.

இதற்கிடையில், டெல்லி ஐகோர்ட்டில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் லைலாவுக்கு பங்கு இருப்பதாக போலீசார் கருதினர். அவர்கள் நடத்திய விசாரணையில் லைலா கானுக்கும் தீவிரவாதிகள் சிலருக்கும் தொடர்பு இருக்கும் தகவல் அம்பலமானது. பின்னர் இந்த வழக்கை தீவிரவாத தடுப்பு குழுவினர் விசாரிக்க தொடங்கினர். இதற்கிடையில் லைலா துபாய் சென்று விட்டதாக சிலர் கூறினர். இதை அவரது தந்தை மறுத்து வந்தார். ஆனாலும், லைலா என்ன ஆனார் என்பது மர்மமாகவே இருந்தது. கடைசியாக நாசிக் மாவட்டத்தில் அவர் செல்போனில் பேசியது தெரிய வந்தது.

இந்நிலையில், ஒரு வழக்கு தொடர்பாக லஷ்கர் தீவிரவாதி பர்வேஸ் இக்பால் தக், காஷ்மீர் போலீசில் பிடிபட்டார். அவரிடம் காஷ்மீர் டிஐஜி கரீப் தாஸ் தீவிர விசாரணை நடத்தினார். லைலா கான் மாயமானது தொடர்பாகவும் விசாரித்தனர். அப்போது, 'லைலா கான், அவரது அம்மா மற்றும் நண்பர் ஆகியோர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்' என்ற திடுக்கிடும் தகவலை தக் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி டிஐஜி தாஸ் கூறும்போது, 'லைலா கான் உள்ளிட்டவர்கள் கொல்லப்பட்டதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் 3 பேரின் உடல்களும் இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்த பிறகுதான் எந்த முடிவுக்கும் வரமுடியும். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்' என்றார்.


 

கோலிவுட்டில் சூட்டைக் கிளப்பும் ஆந்திரத்து 'அல்வாக்கள்'!

Andhra Beauties Put Kollywood On Heat

முன்பெல்லாம் ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா என்று ஒரு திரை வரிசை கோலிவுட்டைக் கலக்கியது. அத்தனை பேரும் ஆந்திரத்து ரசகுல்லாக்கள். இன்றும் அதே போல ஆந்திரத்து அல்வாக்கள் குரூப் ஒன்று கோலிவுட்டை சூடாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த அழகிகள் அத்தனை பேருமே குத்துப்பாட்டுக்கு பெயர் போனவர்கள். ஓங்குதாங்காக இருக்கும் இவர்கள் இல்லாமல் ஒரு படமும் கிடையாது என்றாகி விட்டது இன்றைய தமிழ் சினிமாவின் நிலை.

இன்றைய தேதியில் நாகு என்ற நாகமல்லேஸ்வரி, சுஜாதா மற்றும் கல்யாணி ஆகியோர்தான் சூப்பர் ஹீட் ஆட்டக்காரிகளாக உள்ளனர். அதிலும் ராஜமுந்திரியிலிருந்து ரகளையாக வந்திருக்கும் நாகுவுக்குத்தான் செம கிராக்கியாம். முன்பு சில்க் வேண்டு்ம் என்று வேண்டி விரும்பி கேட்டதைப் போல இப்போது நாகு டான்ஸ் போடுங்கோ என்று விரும்பி வாங்கி வெளுத்துக் கட்டுகிறார்கள் கோலிவுட்காரர்கள்.

இந்த மூன்று பேரிலும் சீனியர் சுஜாதாதான். ரொம்ப காலமாக டான்ஸ் ஆடி வருகிறார். தளபதி படத்தில் ராக்கம்மா கையைத் தட்டு பாடலுக்கும், காட்டுக் குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கும் ரஜினியுடன் சேர்ந்து ஆட்டம் போட்டவராம் இந்த சுஜாதா. அதேபோல அக்னிநட்சத்திரம் படத்திலும் பிரபுதேவாவுடன் கூட கரம் கோர்ட்டு கலக்கல் செய்துள்ளார். இவரும், பிரபுதேவாவின் முதல் மனைவியான ரமலத்தும் நெருங்கிய தோழிகளாம். சேர்ந்து பல படங்களில் டான்ஸ் போட்டுள்ளனர்.

பிறகு பைட் மாஸ்டர் விக்ரம் தர்மாவின் தம்பி பாபுவை கல்யாணம் செய்து கொண்டார். அதன் பிறகு பாபுவும், சுஜாதாவும் சேர்ந்து டான்ஸ் மாஸ்டர்களாக பல படங்களில் பணியாற்றியுள்ளனர்.

பிறகு இருவருமே சினிமாவிலிருந்து ஒதுங்கி விட்டனர். குடும்பம், குழந்தை என்று அக்கடா என இருந்தவரை தினேஷ் மாஸ்டர்தான் ஈசன் படத்துக்காக ஒரு பாட்டுக்கு கூட்டி வந்து ஆட வைத்தார். அந்தப் பாட்டு செம ஹிட் ஆனது. இதையடுத்து அதே மாதிரி எங்களுக்கும் ஆடுங்க என்று பலரும் அன்புக் கோரிக்கை வைக்கின்றனராம். ஆனால் தோளுக்கு மேல்வளர்ந்த பிள்ளைகள் இருக்கும்போது இப்படியெல்லாம் ஆடுவது சரியாக இருக்காது என்று கூறி நாசூக்காக மறுத்து வருகிறாராம் சுஜாதா.

நாகுவைப் பற்றி தனி ஸ்டோரியே போடலாம். அந்த அளவுக்கு பாப்புலரான பிகர் இப்போதைக்கு இவர்தான். இவரது ஆட்டம் பற்றிச் சொல்ல வேண்டுமானால், நாடோடிகள் படத்திற்கு போக வேண்டும். அதில்இடம் பெற்ற யக்கா யக்கா பாடல்தான் நாகுவுக்கு ஐடி கார்டு. அந்தப் பாட்டில் அவர் போட்ட சதிராட்டம் அத்தனை பேரின் தூக்கத்தையும் தூக்கிக் கொண்டு போனது. பிறகு மைனாவில் வந்த ஜிங்கு சிக்கா பாட்டு பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கே இந்தப் பொண்ணு என்று அத்தனை பேரையும் ஜொள்ளு விட வைத்தது.

இன்றைய தேதியில் ரசிகர்களின் மனம் கொத்திப் பறவையாக மாறி, தனது கவர்ச்சி பிளஸ் அட்டகாச ஆட்டத்தால் வியாபித்து நிற்கிறார் நாகு. ஆள்தான் ஆஜானுபாகுவாக, அலேக்காக இருக்கிறார். ஆனால் இன்னும் ஒரு வாட்டி கூட கல்யாணம் ஆகவில்லையாம். ஸ்டைலாக சிரித்தபடி சொல்கிறார் இந்த ராஜமுந்திரி ரகளை அழகி.

சின்ன வயசுலேயே ஆட வந்து விட்டதால், எப்படிப்பட்ட ஆட்டமாக இருந்தாலும் பின்னிப் பெடலெடுத்து விடுகிறாராம். என்ன படம், யார் டைரக்டர், நடிகர் யார் என்றெல்லாம் இவர் பார்ப்பதே இல்லையாம். ஆட வர்ரீங்களான்னு கூப்பிட்டாப் போதுமாம், சம்பளத்தை மட்டும் பேசி விட்டு ஆடி விட்டு போய் விடுவாராம்.

லேட்டஸ்டாக இவர் செய்த செல்லச் சில்மிஷம் மனம் கொத்திப் பறவைகள் படத்துக்காக.

இதேபோல இன்னொரு மூர்க்கமான அழகு அழகி கல்யாணி. தடையறத்தாக்க படத்தில் இடம் பெற்ற பூந்தமல்லிதான், புஷ்பவள்ளிதான் பாடலுக்கு டான்ஸ் போட்ட கவர்ச்சி பூகம்பம்தான் கல்யாணி.

இரவு பகல் பாராமல் குத்தாட்டம் போட்டு வருகிறாராம் கல்யாணி. ஒவ்வொரு நாளும் ஒரு ஸ்டேட் என்று ரவுண்டு கட்டி ஆடிவரும் இவர் தொழில் என்று வந்து விட்டால் வேறு எதையும் பார்க்க மாட்டாராம். ஒருமுறை பலமாக ஆடும்போது சறுக்கி விழுந்து எலும்பு மூட்டில் ஜவ்வு கிழிந்து போய் விட்டதாம். இருந்தாலும் விடாமல் சிகிச்சை பெற்று விட்டு மறுபடியும் ஆடிக் கொடுத்து விட்டுத்தான் ஓய்ந்தாராம்.

என்ன செய்வது சார், குடும்பத்தை காப்பாத்தியாகனுமே என்று சிரிக்கிறார் கேட்டால்.

ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ஒவ்வொரு பீலிங்ஸ்...!

 

பாடகர் மனோவின் இன்னிசை மழையில் நனைந்த துபாய் மக்கள்

Dubai Tamils Drenched Mano S Kodaiyil Innisai Mazhai   

துபாய்: துபாயில் முத்தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்நாடு இன்ஜினியர்ஸ் வீட்டுவசதி நல அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய மனோவின் கோடையில் இன்னிசை மழை நிகழ்ச்சி 29.06.2012 அன்று மாலை துபாய் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

விழாவிற்கு இந்திய சமூக நல மைய கன்வீனர் கே.குமார் தலைமை வகித்தார். முத்தமிழ்ச் சங்க தலைவர் மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக நடிகர் நிழல்கள் ரவி பங்கேற்று சிறப்புறை நிகழ்த்தினார்.

தமிழ்நாடு இன்ஜினியர்ஸ் வீட்டுவசதி நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அமரஜீவா, பாடகர் மனோ உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். முத்தமிழ்ச் சங்கத்தின் இணையதளம் துவக்கி வைக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் பொன்னாடை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாடகர் மனோவின் தலைமையில் நிழல்கள் ரவி, மாலதி, பூஜா, சுசித்ரா, சப்னம், சந்தோஷ், மனோவின் மகன் சாகிர் ஆகியோர் பாடல்கள் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். மனோவின் மகன் சாகிர் வெளிநாடுகளிலேயே துபாயில் தான் முதன் முதலாக ரசிகர்களுக்கு மத்தியில் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோபோ சங்கர் மற்றும் அர்விந்த் ஜோடி அரங்கம் அதிரும் வண்ணம் நகைச்சுவை நிகழ்ச்சிகளை வழங்கியது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முத்தமிழ்ச் சங்க தலைவர் மோகன் தலைமையில் பாரதி மோகன், ஷா, புகாரி, ரவி, சாதிக் பாட்சா, சையத் சர்தார் மற்றும் கண்ணன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

லட்சுமி பிரியா மற்றும் அனு அசோக் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

 

வில்லத்தனம் செய்ய எனக்குப் பிடிக்கும்: நீலிமாராணி

I Like Negative Charecters Neelama Rani

தொலைக்காட்சித் தொடர்களில் அழகாய், வில்லத்தனமாய், அமைதியாய் நடித்து வருபவர் நீலிமாராணி. சினிமாவிலும் நடித்து பெயரெடுத்திருக்கிறார். அன்பாய் நடிப்பதை விட வில்லியாய் நடிப்பதே பிடித்திருக்கிறது என்று கூறுகிறார் நீலிமா.

கோலங்கள் தொடரில் ஆரம்பித்த வில்லத்தனம் தென்றலில் தொடர்ந்தது. ஆனால் அழுகை அமுதாவாக செல்லமே தொடரில் நடிப்பதும் வித்தியாசமான அனுபவம்தான் என்கிறார் நீலிமாராணி.

ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்ட கதைகள்தான்; பார்த்த முகங்கள்தான் என்றாலும் சீரியல்களில் ஏதோ ஒரு விஷயம் நாளுக்கு நாள் புதுமையை ஏற்றிக் கொண்டிருக்கிறது. படித்தவர்களும் தொழில் நுட்பம் தெரிந்தவர்களும் சீரியலுக்கு வந்ததுதான் அதற்கு காரணம்.

இப்போ நிறைய பேர் சீரியல்களை பார்க்க ஆரம்பித்து விட்டனர். காரணம், காமெடி சேனல் என்ற பெயரில் விவேக்கையும் வடிவேலையும் மாற்றி மாற்றி காட்டுகிறார்கள். அது பலருக்கு பிடிக்கவில்லை. அதிலிருந்து நேயர்களை விடுவித்து ரிலாக்ஸ் கொடுப்பது சீரியல்கள்தான்.

சீரியல்களில் பெண்களையே முன்னிலைப்படுத்த காரணம் சீரியலுக்கு பெண்கள் ரசிகைகளாக இருப்பதுதான். பெண்களுக்கு பெண்கள்தான் வில்லியாக இருக்க முடியும். அதனால்தான் சீரியல்களில் வில்லி கேரக்டர்கள் பெண்களால் ரசிக்கப்படுகின்றன. பாசமுள்ள அம்மா, அன்பான மனைவி, அருமையான காதலி போன்ற கேரக்டர்கள் கொடுக்காத அதிர்வுகளை வில்லி கதாபாத்திரம் மட்டுமே கொடுக்கிறது. அதனால் சீரியல்களில் என் சாய்ஸ் வில்லிதான்'' என்றார் நீலிமா ராணி.

சினிமாவில் திமிரு, "நியூட்டனின் 3-ம் விதி', "ராஜாதிராஜா' படங்களும் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்திருக்கின்றன. மேலும் "ஜக்குபாய்', "புகைப்படம்', "ரசிக்கும் சீமானே' ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். 'விதை' என்ற ஈழம் தொடர்பான படத்தில் நடித்திருக்கிறேன்.

ஏற்கனவே ஆணிவேர் படத்துல நடிச்சேன். இதில் என் நடிப்பைப் பார்த்துட்டு லண்டனில் வசிக்கும் ஒரு ஈழத் தமிழர் குடும்பம் நேர்ல சந்திச்சாங்க. உடைஞ்ச குரல்ல என்னை அவங்க மகளா நினைச்சுப் பேசினது ரொம்பவே பாதிச்சது. அந்த அன்புதான் இப்ப மறுபடியும் ஈழம் தொடர்பான படத்துல நடிக்க தூண்டுதல். எத்தனையோ சினிமாவில் நடித்தாலும் சீரியலில் நடிப்பதுதான் எனக்கு திருப்தியாக இருக்கிறது என்று கூறி விடைபெற்றார் நீலிமாராணி.

 

உலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர் டாம் க்ரூஸ் - ஆண்டுக்கு ரூ 412 கோடி!

Tom Cruise Tops Forbes List Highest Earning Actors

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமை ஹாலிவுட்டின் டாம் க்ரூஸுக்கு கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் அவர் ரூ 412 கோடி சம்பாதித்துள்ளார். இந்த ஆண்டில் அவர் ஒரு படம் மட்டுமே நடித்தார்.

இதுகுறித்து போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், "கடந்த 2011 -2012 மே வரை ஒரு வருட காலத்தில் அவருடைய வருமானம் ரூபாய் 75 மில்லியன் டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது நம் நாட்டு மதிப்பின் படி அவருடைய சம்பளம் ரூபாய் 412 கோடிக்கு மேல்," என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை டாம் குரூஸின் 50வது பிறந்த நாளான ஜூலை 3-ம் தேதி வெளியிட்டது போர்ப்ஸ்.

மிசன் இம்பாசிபிள் என்ற படத்திற்கு பிறகு உலகில் பேசப்படும் நடிகராக வலம் வந்தவர் டாம் க்ரூஸ். சமீபத்தில் வெளிவந்த க்ஹோஸ்ட் ப்ரொடோகால் என்ற அவர் நடித்த திரைப்படம் 700 மில்லியன் டாலர் வசூலில் சாதனை செய்தது.

கடந்த வருடம் அதிகபட்ச சம்பளம் வாங்கிய லியனர்ட்டோ டி காப்ரியோவும் நகைச்சுவை நடிகர் ஆடம் சான்ட்லேரும் தலா 37 மில்லியன் டாலர் சம்பாதித்து இரண்டாவது மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளனர்.

போர்ப்ஸ் பட்டியல்

1. டாம் க்ரூஸ் - 75 மில்லியன் டாலர்
2.டி காப்ரியோ - 37 மில்லியன் டாலர்
3.ஆடம் சான்ட்லர் - 37 மில்லியன்
4.டாய்ன் ஜான்ஸன் - 36 மில்லியன்
5.பென் ஸ்டில்லர் - 33 மில்லியன்
6.ஜானி டெப் - 30 மில்லியன்
7.சச்சா பரோன் கோஹென் - 30 மில்லியன்
8.வில் ஸ்மித் - 30 மில்லியன்
9. மார்க் வால்பெர்க் -27 மில்லியன்
10.டெய்லர் லான்டர் - 26.5 மில்லியன்

 

தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பாலிவுட் நடிகை லைலான் கான் குடும்பத்துடன் சுட்டுக் கொலை

Missing Bollywood Actor Laila Khan Shot Dead

மும்பை: மர்மமான முறையில் காணாமல் போன பாலிவுட் நடிகை லைலா கான் அவரது குடும்பத்தினருடன் மும்பையைச் சேர்ந்த கும்பலால் கடந்த ஆண்டே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஜம்மு போலீசார் தெரிவித்துள்ளனர்.

2011-ம் ஆண்டு மும்பையிலிருந்து காஷ்மீருக்கு குடும்பத்துடன் சென்ற லைலாகான் மர்மமான முறையில் மாயமானார். அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஜம்முவில் பர்வேஷ் டாக் என்பவரை இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

லைலா கானின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்காக கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி மும்பையைச் சேர்ந்த கும்பல் ஒன்று லைலாகானையும் அவரது குடும்பத்தினரையும் சுட்டுக் கொலை செய்துவிட்டதாக பர்வேஷ் டாக் கூறியுள்ளதாக ஜம்மு போலீசார் தெரிவித்துள்ளார்.

Read: In English
 

படுக்கையறை வேண்டாம்... உதட்டோடு உதடு முத்தம் ஓகே! - அஞ்சலி

Anjali Chose Liplock Instead Bedroom Scene

சேட்டை படத்தில் இரண்டு நாயகிகள். ஒருவர் அஞ்சலி. இன்னொருவர் ஹன்ஸிகா.

இந்தப் படம் இந்தியில் வெளியான டெல்லி பெல்லியின் ரீமேக் என்பது தெரிந்திருக்கும். ஒரிஜினல் கதைப்படி, ஹீரோ ஹீரோயினுக்கு ஒரு நெருக்கமான படுக்கையறைக் காட்சி உண்டு.

அந்தக் காட்சியை அப்படியே எடுப்பதா... அல்லது கொஞ்சம் மாற்றுவதா என்று யோசித்த இயக்குநர், கதாநாயகி அஞ்சலியிடம், படுக்கையறைக் காட்சியில் நடிக்கிறீர்களா.. அல்லது உதட்டோடு உதடு முத்தம் தரும் காட்சியாக அதை மாற்றிவிடலாமா என்று சாய்ஸ் வைத்திருக்கிறார்.

அஞ்சலி சற்றும் தயங்காமல், எனக்கு லிப் டு லிப் சீன் ஓகே என்றாராம்.

ஆர்யாவுடன் படு ரொமான்டிக்காக அந்த முத்தக் காட்சியில் நடித்தும் கொடுத்தாராம்.

இதுகுறித்து பின்னர் அவர் அளித்த விளக்கம்:

படுக்கயறைக் காட்சியில் நடித்தால் பெயர் கெட்டுப் போகும். அதான் முத்தக்காட்சி பரவால்லேன்னு ஒத்துக்கிட்டேன் என்றாராம்.

அப்போ மங்காத்தாவில் படுக்கையறைக் காட்சியில் வந்தது அஞ்சலியின் டூப்போ!

 

எம்ஜிஆர் எழுதிய சுய சரிதை ஜானகியின் மகனுக்கு சொந்தம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : Ôநான் ஏன் பிறந்தேன் என்ற எம்.ஜி.ஆரின் சுயசரிதை புத்தகம் ஜானகியின் மகனுக்குத்தான் சொந்தம்Õ என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

வி.என்.ஜானகி- கணபதி பட் தம்பதியின் மகன் சுரேந்திரன். கணபதி பட்டிடம் இருந்து விவாகரத்து பெற்று எம்.ஜி.ஆரை 2-வதாக ஜானகி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், Ôநான் ஏன் பிறந்தேன்Õ என்ற சுயசரிதையை எம்.ஜி.ஆர். வெளியிட்டார். இதை அச்சடித்து விற்கும் உரிமையை சுரேந்திரன் பெற்றிருந்தார்.
எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி மறைவுக்கு பின்னர் கடந்த 2003-ம் ஆண்டு எம்ஜிஆரின் சுயசரிதையை சுதா விஜயகுமார் என்பவர் வெளியிட நடவடிக்கை எடுத்தார். அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தானே உண்மையான வாரிசு என்றும் ஜானகியின் மகன் சுரேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சுதா விஜயகுமார் தாக்கல் செய்த பதில் மனுவில், Ôநான்தான் உண்மையான எம்.ஜி.ஆர் வாரிசு' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவகுமார் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
சுதா விஜயகுமார், தான் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் என்பதற்கு போதிய ஆதாரங்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே எம்.ஜி.ஆரின் 'நான் ஏன் பிறந்தேன்' என்ற புத்தகத்தை சுதா உரிமை கோர முடியாது.

கணபதி பட்டிடம் இருந்து வி.என்.ஜானகி விவாகரத்து பெற்றதும் கணவன், மனைவி உறவு சட்டப்படி அறுந்துவிட்டாலும் அம்மா-மகன் உறவு தொடர்ந்துள்ளது. தற்போதும் அது தொடர்கிறது.
அதன்படி பார்த்தால் எம்ஜிஆரின் வாரிசு அவரது மறைவுக்கு பிறகு அவர் மனைவி ஜானகிதான். ஜானகியின் வாரிசு, அவரது மகன் சுரேந்திரன். எனவே எம்ஜிஆரின் 'நான் ஏன் பிறந்தேன்' என்ற புத்தகம் சுரேந்திரனுக்கு சொந்தம். அதை அவர் வெளியிட உரிமை உள்ளது. இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.


 

அடுத்த வருடம் இந்திக்கு போகிறார் ஜீவா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : அடுத்த வருடம் இந்தி சினிமா துறையில் கால் பதிப்பேன் என்று ஜீவா கூறினார். 'முகமூடி' படத்தில் சூப்பர் மேனாக நடிக்கும் ஜீவா, நிருபர்களிடம் கூறியதாவது:
'முகமூடி'யில் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன். இயக்குனர் மிஷ்கின் உற்சாகமூட்டியதன் காரணமாக, பல்வேறு சிரமங்களை தாங்கிக்கொண்டு நடிக்க முடிந்தது. 11 கிலோ எடை கொண்ட சூப்பர் மேன் உடை அணிந்து 20 நாட்களுக்கு மேல் நடித்தேன். உடம்பு முழுவதும் எரியும். எல்லா பாகங்களிலும் சின்னச்சின்ன கட்டிகள் தோன்றும். மேக்கப் கலைத்ததும் உடல் சிவப்பு நிறமாக மாறும். அவ்வளவு வெப்பம். இந்த வேடத்தில் கஷ்டப்பட்டு நடித்தாலும், ரிலீசான பிறகு கிடைக்கும் பாராட்டுகளை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.
ரிலீசுக்குப் பிறகு குறிப்பாக குழந்தைகள் என்னை 'சூப்பர் மேன் அங்கிள்' என்றுதான் கூப்பிடுவார்கள். அடுத்து 'நீதானே என் பொன்வசந்தம்', 'என்றென்றும் புன்னகை', விக்ரமுடன் இணைந்து 'டேவிட்', ரவி கே.சந்திரன் இயக்கும் படம் என பிசியாக இருக்கிறேன். 23 படங்களை நெருங்கி விட்டேன். 25 படத்தை 3டியில் குழந்தைகளைக் கவரும் படமாக உருவாக்க ஆசை. அதற்கான கதையை தேடி வருகிறேன்.
மேலும், 'முகமூடி' படத்தின் 2ம் பாகம், 3ம் பாகம் உருவாகிறது. அவற்றிலும் நானே சூப்பர் மேன் வேடத்தில் நடிக்க ஆசை. அடுத்த ஆண்டு பாலிவுட்டில் கால் பதிப்பேன். ரவி கே.சந்திரன் இயக்கும் படம் தமிழ், இந்தி, தெலுங்கில் உருவாகிறது.


 

மனதில் ஒரு மாற்றம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : கோட்ராக் பிலிம்ஸ் சார்பில் கே.பொட்டல் முத்து வழங்கும் படம், 'மனதில் ஒரு மாற்றம்'. பி.கோமதி, பி.ராஜலட்சுமி, பி.துர்கா லட்சுமி, வி.பர்வத லட்சுமி தயாரிக்கின்றனர். மதன் மோகன், ஸ்பூர்த்திகா, விச்சு, உமா மகேஸ்வரி, ஆதவன், ஜானி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பி.சாய்நந்தா. இசை, ஸ்ரீசாஸ்தா. ஜனா வெங்கட் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, 'டீன்ஏஜ் வயதில் ஏற்படும் கோபதாபங்கள், அவசர முடிவுகளால் ஏற்படும் சிக்கல்கள் என, இளைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது' என்றார்.


 

தமிழ் சினிமாவில் படைப்பாளிகளுக்கு மரியாதை இல்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : தமிழ் சினிமாவில் படைப்பாளிகளுக்கு மரியாதை இல்லை என்று இயக்குனர் பன்னீர் செல்வம் கூறினார்.
'ரேனிகுன்டா' படத்தை அடுத்து பன்னீர் செல்வம் இயக்கியுள்ள படம், '18 வயசு'. ஜானி, காயத்ரி, சத்தியேந்திரன், ரோகிணி, ஜேஎஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்துள்ள இந்தப் படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது.
படம் பற்றி பன்னீர்செல்வம் கூறியதாவது:
இந்தப் படம் காதல் கதைதான் என்றாலும் புது கான்செப்டாக இருக்கும். நேர்மையான படமாகவும் இருக்கும். பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. இப்போது, உலகத் திரைப்படங்கள் இருபது முப்பது ரூபாய்க்கு சாலைகளில் டிவிடிகளாக கிடைக்கிறது. அதை அப்படியே படமாக்கும் சூழல் தமிழ் சினிமாவில் காணப்படுகிறது. இப்படி காப்பி அடித்து படமெடுப்பவர்களுக்கான மரியாதையும் பாராட்டும் சுயமாக சிந்தித்து படமெடுக்கும் படைப்பாளிகளுக்கு கிடைப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும். காப்பி அடித்து படமெடுப்பவர்களை யாரும் கண்டிக்காவிட்டால், விமர்சிக்காவிட்டால் பாலா, சேரன், லிங்குசாமி போன்ற மண்ணின் கதைகளை கொண்டு வருகின்ற இயக்குனர்கள் இனி வராமல் போகும் சூழல் உருவாகிவிடும். அடுத்த தலைமுறை இயக்குனர்களும் காப்பி அடிக்கத் தொடங்கினால் சுய சிந்தனை இல்லாமல் நமது மண்ணின் கதைகள் காணாமல் போகும் அபாயம் இருக்கிறது.
இவ்வாறு பன்னீர் செல்வம் கூறினார்.


 

மீன்கொத்தி என்ன கதை?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : ஸ்ரீ நாச்சியாரம்மன் பிலிம்ஸ் சார்பில் அழகன் தமிழ்மணி, போரூர் கே.எம்.கண்ணன், டி.தமிழ்நம்பி தயாரிக்கும் படம், 'மீன்கொத்தி'. அஜெய் கிருஷ்ணா, ஷோபனா நாயுடு, காதல் சுகுமார், பிறைசூடன், ரமேஷ்கண்ணா உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, லியோ.டி. இசை, தினா. பாடல்கள்: கங்கை அமரன், பிறைசூடன், இளையகம்பன். சஞ்சய்ராம் இயக்குகிறார். இதன் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அழகன் தமிழ்மணி வரவேற்றார். ரவி கொட்டாரக்கரா, சிவசக்தி பாண்டியன், யார் கண்ணன், கே.எஸ்.சீனிவாசன், காட்ரகட்ட பிரசாத் உட்பட பலர் கலந்துகொண்டனர். ''பாசத்துடன் வளர்ந்த உடன்பிறப்புகள், பணத்துக்காக பகையாளி ஆகிறார்கள். வீடு ரெண்டுபட்டால், கூலிப்படைக்கு கொண்டாட்டம்.  கூலிப்படை ஆள் இப்பிரச்னையில் தலையிடுகிறான். அதன் முடிவு என்ன என்பது கதை'' என்றார் சஞ்சய் ராம்.


 

டோக்கியோவில் கோச்சடையான் பாடல் வெளியீடு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : ரஜினிகாந்த் நடித்துள்ள 'கோச்சடையான்' படத்தின் பாடல்களை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஈராஸ் இன்டர்நேஷனல் மற்றும் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம், 'கோச்சடையான்'. ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார், நாசர் உட்பட பலர் நடிக்கின்றனர். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்குகிறார். பெர்பாமன்ஸ் கேப்சரிங் என்ற தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள இதன் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துவருகின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலத்தில் வெளியாகும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் சிறப்புக் காட்சிகளை லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன், இந்தியாவில் நடத்த உள்ளனர்.
இதற்கிடையில் படத்துக்காக 5 லட்சம் கோச்சடையான் மொபைல் போன்களை வினியோகிக்க உள்ளனர். இந்த போனில், படத்தின் மேக்கிங், டிரைலர், பாடல்கள், பஞ்ச் டயலாக்குகள், போஸ்டர்கள் மற்றும் ரஜினியின் டிஜிட்டல் கையெழுத்து ஆகியவை இருக்கும். இதற்காக செல்போன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.


 

சினிமா தொழில் நசிவுக்கு யார் காரணம்? பாடல் வெளியீட்டில் பரபரப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : டி.கே.எம்.பிலிம்ஸ் சார்பில் எஸ்.ஏ.ஜமாலுதீன் தயாரிக்கும் படம் 'அமரா'. அமரன், ஸ்ருதி என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். இமான் இசை. எம்.ஜீவன் இயக்கி உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
விழாவில், இயக்குனர் ராசு மதுரவன் பேசும்போது, "சினிமாவில் இப்போது எந்த பிரச்னையையும் பேச ஆளில்லை. தயாரிப்பாளர் சங்கம் அனாதையாக இருக்கிறது. சிறிய படங்கள் வெளிவரமுடியாமல் தவிக்கிறது. வாங்கிய கடனுக்கு வட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். பத்து வருஷத்துக்கு முன்பு படம் எடுத்தவர்கள், தயாரிப்பாளர் சங்க பொறுப்பில் இருக்கிறார்கள். இப்போது படம் எடுப்பவர்கள் இருந்தால் எங்கள் வலி தெரியும்'' என்றார்.
இதற்கு பதிலளித்த பிரபு சாலமன், "சினிமாவை சின்னப் படம், பெரிய படம் என்று பிரிக்காதீர்கள். கதை நன்றாக இருந்து மக்கள் விரும்பி பார்த்தால் அது பெரிய படம். அதற்கு உதாரணம் 'மைனா'. அது தீபாவளியன்றுதான் வெளிவந்தது'' என்றார்.
வினியோகஸ்தர்கள் சங்கச் செயலாளர் கலைப்புலி சேகரன் பேசும்போது, "மைனாவை வெளியிட பெரிய தயாரிப்பாளர் ஒருவர் கிடைத்தார். எல்லோருக்கும் அப்படி கிடைப்பார்களா? சமீபத்தில், ஒரு பெரிய படத்தை சென்னை, செங்கற்பட்டு ஏரியாவில் அத்தனை தியேட்டரிலும் வெளியிட்டார்கள். பிறகு சின்ன படங்களை எங்கு திரையிட முடியும்? இதற்கு தீர்வு காண போராட்ட குணம் கொண்ட நிர்வாகிகள் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேவை'' என்றார்.
விழாவில் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், வெற்றிமாறன், கரு.பழனியப்பன், தியேட்டர் அதிபர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இணை தயாரிப்பாளர் எஸ்.ஷேக் முகம்மது வரவேற்றார். முடிவில், எம்.ஜீவன் நன்றி கூறினார்.


 

இயக்குனர் ஆனார் பாபு ஆண்டனி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : 'பூவிழி வாசலிலே', 'சூரியன்', 'விண்ணைத்தாண்டி வருவாயா' உட்பட பல  படங்களில் நடித்தவர் பாபு ஆண்டனி. தற்போது அமீர் இயக்கும் 'ஆதிபகவன்' படத்தில் நடித்து வருகிறார். அவர், மலையாளத்தில் 'பியானோ' என்ற படத்தை இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:
காதலுக்கும், இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாகிறது. இந்தியாவில் குடியேறிய பிரிட்டீஷ் குடும்பம், சுதந்திரத்துக்குப் பிறகும் அவர்கள் நாட்டுக்கு செல்ல மறுக்கின்றனர். அது ஏன் என்பது கதை. 2 ஆங்கிலப் பாடல்களை, என் மனைவி யுவகேனியா பாடியுள்ளார். பியானோ வாசிப்பதில் வல்லவரான அவர், இப்படத்தின் இசையமைப்பிலும் பங்கேற்கிறார். டென்னிஸ் ஜோசப் ஸ்கிரிப்ட் எழுதுகிறார். 2 ஹீரோயின்கள். ஒருவர் பிரிட்டீஷ்காரர். மற்றொருவர் இந்தியப் பெண்.


 

85 வயது முதியவராக தம்பி ராமையா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : நடிகர் தம்பி ராமையா கூறியதாவது:
படம் இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன். இப்போது நடிப்பில் கவனம் செலுத்துகிறேன். 'சாட்டை' படத்தின் பிரத்யேக காட்சியைப் பார்த்த இயக்குனர்கள், எனது நடிப்பை பாராட்டியுள்ளனர். அடுத்து 'பேச்சியக்கா மருமகன்', 'கும்கி', 'வானவராயன் வல்லவராயன்', 'நெடுஞ்சாலை', 'தாண்டவம்' உட்பட பல படங்களில் நடிக்கிறேன். 'நீர்ப்பறவை' படத்தில் 85 வயது முதியவராக நடிக்கிறேன். எனக்கு மேக்கப் போடுவதற்காக மும்பையிலிருந்து மேக்கப் மேன்கள் வந்துள்ளனர். இந்த வேடம் பேசப்படும் விதமாக இருக்கும்.


 

துள்ளி விளையாடுக்காக ஒட்டக சேஸிங் காட்சி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : ஆர்.பி ஸ்டூடியோஸ் சார்பில் கோவிந்தராஜ் தயாரிக்கும் படம், 'துள்ளி விளையாடு'. யுவராஜ், தீப்தி, பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்கள். வின்சென்ட் செல்வா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
குருட்டு அதிர்ஷ்டத்தால் ஹீரோ உட்பட 3 பேர் தங்களுக்கு தொடர்பே இல்லாத துறையில் பெரிய இடத்துக்கு வந்துவிடுகிறார்கள். அதை தக்கவைக்க அவர்கள் எப்படி போராடுகிறார்கள் என்பதை காமெடியாக சொல்லும் படம். பாடல்கள், சண்டை, குத்துப்பாட்டு என்று கமர்சியலாக கதை சொல்கிறோம். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் பாடல் காட்சி எடுக்கச் சென்றபோது அங்கு நடந்த ஒட்டக பந்தயத்தை பாடல் காட்சியின் பின்னணியாக படமாக்கி வந்தோம்.
அதைப்பார்த்த எடிட்டர் இதே ஒட்டக பந்தயத்தை ஆக்ஷன் காட்சியில் பயன்படுத்தினால் புதுமையாக இருக்கும் என்றார். உடனே நாங்கள் மீண்டும் அதே பகுதிக்கு சென்று வில்லன்கள் ஹீரோ¬வுயும் அவரது நண்பர்களையும் துரத்துவது போன்ற காட்சியை படமாக்கினோம். பத்து நாட்கள் அங்கேயே தங்கியிருந்து படமாக்கித் திரும்பினோம். அங்கீதா என்ற பெங்களூர் மாடல் குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்கிறார். இவை இரண்டும் படத்தில் பேசப்படுவதாக இருக்கும்.


 

கதக் டான்சராக நீது சந்திரா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : இந்தி படம் ஒன்றில் கதக் டான்சராக நீது சந்திரா நடிக்கிறார். இதுபற்றி நீது சந்திரா கூறியதாவது: தமிழில் அமீர் இயக்கும் 'ஆதிபகவன்' படத்தில் நடித்துவருகிறேன். தென்னிந்திய படங்களுக்குத்தான் முக்கியத்துவமா? என்று இந்தி மீடியாவில் கேட்கிறார்கள். அப்படியில்லை. இன்றைக்கு தமிழ் சினிமாத் துறை முக்கியமானதாக இருக்கிறது. பல தமிழ்ப் படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்படுகின்றன. அதனால் தமிழில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கிரேக்க மற்றும் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட 'ஹோம் ஸ்வீட் ஹோம்' படத்தில் நடித்து முடித்துவிட்டேன். இதன் ஷூட்டிங் சைப்ரசில் நடந்தது. அடுத்து கதக் டான்சராக நடிக்கிறேன். 1930-ம் வருடம் பிரிட்டீஷ் இந்தியாவில் நடந்த கதையாக இந்த படம் உருவாகிறது.

படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. பள்ளி பருவத்தில் இருந்தே நடனமும் தற்காப்பு கலையும் கற்றிருப்பதால் கதக் டான்ஸ் எனக்கு கஷ்டமாகத் தெரியவில்லை.


 

கொழும்பு இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் - பாடகர் ஹரிஹரனுக்கு 'மே 17' கோரிக்கை!

சென்னை: இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற 7-ந்தேதி நடக்கும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என பிரபல பாடகர் ஹரிஹரனுக்கு மே 17 இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மே பதினேழு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை இனவெறி அரசு 2009-ல் கொத்துக் குண்டுகளையும், வேதி குண்டுகளையும் போட்டு ஒன்றரை லட்சம் தமிழ் மக்களைக் கொன்றது. இதை மறைக்க இலங்கை அரசு இசை மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இந்திய கலைஞர்களை அழைத்து நடத்த எண்ணுகிறது.

tamil activists request singer hariharan
Close
 

அதன் சதியை புரிந்துகொண்டு திரையுலகினரும், இசையுலகினரும் விழாவை புறக்கணித்து வருகின்றனர். 2010-ல் கொழும்பில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவை தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கைகளை ஏற்று அமிதாப்பச்சன், ஷாருக்கான் போன்றோர் புறக்கணித்தனர்.

கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாடகர் மனோ உள்ளிட்டோர், எதிர்ப்பினால் கலந்து கொள்ளாமல் விமான நிலையத்திலிருந்து திரும்பிச் சென்றனர். தமிழ் நெஞ்சங்களுக்கு சிறு கஷ்டம் வந்தாலும், அத்தகைய செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று மனோ அப்போது பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் அமெரிக்காவை சேர்ந்த 'பிக்மவுண்டெய்ன்' இசைக்குழுவும் தனது நிகழ்ச்சியை ரத்து செய்தது. தமிழா தமிழா நாளை நம்நாளே என்று நம்பிக்கையூட்டும் ஹரிஹரன் குரலையே உலகம் கேட்க விரும்புகிறது. எனவே தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து இசை நிகழ்ச்சியை ஹரிஹரன் ரத்து செய்யவேண்டும்."

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Posted by: Shankar
 

ஜெயம் ரவி - அமலா பால் - மேக்னா ராஜ் நடிக்கும் நிமிர்ந்து நில் - இன்று ஆரம்பம்!

Jayam Ravi S Nimirnthu Nill Launches Today

போராளி படத்துக்குப் பிறகு சமுத்திரக் கனி இயக்கும் புதிய படம் நிமிர்ந்து நில். ஜெயம் ரவி - அமலா பால்- மேக்னா ராஜ் நடிக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா இன்று ஏவிஎம்மில் நடந்தது.

நான் கடவுள், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த வாசன் விஷுவல்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

"ஒழுக்கம்தான் தனக்கு கற்பு மாதிரி என்று சொல்லி தலை நிமிர்ந்து வாழும் (ஹை தலைப்பு வந்துருச்சி...!) ஒரு சாதாரண குடும்பத்து இளைஞனின் கதை இது. தினமும் வீட்டை விட்டு கிளம்பும்போது, எதிர் கொள்ளும் பிரச்சினைகள்தான் இந்தப் படம். உன்னை நீ சரி செய்து கொள்... உலகம் தானாக சரியாகிவிடும் என்பது ஒன்லைன்," என்கிறார் இயக்குநர் சமுத்திரக் கனி.

ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இந்தப் படம் ஒரேநேரத்தில் தெலுங்கிலும் தயாராகிறது. தெலுங்கில் ஹீரோ நானி. ஹீரோயின்கள் மாற்றமில்லை!