12/27/2010 11:44:34 AM
தமிழில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாதது வருத்தமாக இருக்கிறது என்றார் மீரா நந்தன். இதுகுறித்து அவர் கூறியதாவது: சினிமாவுக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. மலையாளத்தில் 9 படங்கள் நடித்து விட்டேன். தமிழில் 4 படங்கள். 'சூரிய நகரம்', 'காதலுக்கு மரணமில்லை' வெளிவர இருக்கிறது. தெலுங்கில் இதுவரை நடிக்காமல் இருந்தேன். காரணம், அங்கு கிளாமராக நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். என் உடல்வாகு கிளாமருக்கு சரியாக இருக்காது என்பது எனது கணிப்பு. தற்போது 'ஜெய்போலோ தெலுங்கானா' என்ற படத்தின் வாய்ப்பு வந்தது. ஒப்புக் கொண்டேன். கிளாமரும் இல்லை. இனி தொடர்ந்து தெலுங்கில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். தமிழில் நல்ல கதையம்சமுள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இருந்தாலும் எதிர்பார்த்த வரவேற்பு அமையாதது வருத்தம்தான்.