குடிக்கிற படத்துக்கு வரிவிலக்கா? ‘மான் கராத்தே’ விற்கு எதிராக வழக்கு

குடிக்கிற படத்துக்கு வரிவிலக்கா? ‘மான் கராத்தே’ விற்கு எதிராக வழக்கு  

அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

‘தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்குத் தமிழக அரசு கேளிக்கை வரிச் சலுகையை அளித்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் வெளியான ‘மான் கராத்தே' என்ற திரைப்படத்துக்கும் தமிழக அரசு கேளிக்கை வரிச் சலுகை அளித்துள்ளது.

‘மான் கராத்தே' என்ற பெயர் தமிழ் பெயர் அல்ல. மேலும் அந்தப் படத்தில் ஆங்கில பாடலும் மதுபானம் உட்கொள்வதை ஊக்குவிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஆகவே இப்படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை அளிக்கப்பட்டது விதிமுறைகளுக்கு மாறானதாகும்.

எனவே ‘மான் கராத்தே' படத்துக்கு அளிக்கப்பட்ட கேளிக்கை வரிச் சலுகையை ரத்து செய்யும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே. அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ‘மான் கராத்தே' படத்துக்கான கேளிக்கை வரிச் சலுகையை ரத்து செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி. பெருமாள் வாதிட்டார். இதனையடுத்து இந்த மனுதொடர்பாக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை இம்மாதம் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

கத்தி சர்ச்சை: அம்மாடி நான் தப்பிச்சேன்- சூர்யா நிம்மதி

சென்னை: கத்தி பட சர்ச்சையில் இளைய தளபதி விஜய் சிக்கியுள்ளார். அதே நேரம் சூர்யா நல்ல வேளை நாம் தப்பித்தோம் என்று நிம்மதி அடைந்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தை லைகா மொபைல் நிறுவனம், ஐங்கரன் இன்டர்நேஷனலுடன் சேர்ந்து தயாரிக்கிறது. இந்நிலையில் லைகா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மிகவும் நெருக்கமானவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

கத்தி சர்ச்சை: அம்மாடி நான் தப்பிச்சேன்- சூர்யா நிம்மதி

இதனால் கத்தி படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த லைகா மொபைல் நிறுவனம் முதலில் சூர்யாவை தான் அணுகியதாம். நீங்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிக சம்பளம் தருகிறோம் எங்களுக்கு ஒரு படம் நடித்துக் கொடுங்கள் என்று கேட்டதாம். சூர்யா அந்நிறுவனம் பற்றி விசாரித்து அது ராஜபக்சேவுக்கு நெருக்கமானவருடையது என்று தெரிந்தவுடன் நைசாக நழுவிவிட்டாராம்.

சூர்யா நடிக்க முடியாது என்று கூறியதால் அந்நிறுவனம் விஜய்யை அணுகியுள்ளது. பாவம் அவர் கால்ஷீட் கொடுத்துவிட்டு தற்போது தவித்துக் கொண்டிருக்கிறார்.

 

ரஜினி படத்தின் அடுத்த இசையமைப்பாளர் அனிருத்?

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் புதிய படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்தை நோக்கித் திரும்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக சமீப கால ரஜினி படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு ஏ ஆர் ரஹ்மானுக்குதான் வழங்கப்பட்டு வந்தது.

ரஜினி படத்தின் அடுத்த இசையமைப்பாளர் அனிருத்?

ஆனால் அவர் இப்போது இந்தி மற்றும் ஹாலிவுட்டில் பிஸியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

'கோச்சடையான்' படத்திற்குப் பிறகு ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினி. இதில் அவருக்கு அனுஷ்கா - சோனாக்ஷி சின்ஹா என இரு ஹீரோயின்கள்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளராக முதலில் ஏ ஆர் ரஹ்மான் என்று கூறப்பட்டது. இப்போது அனிருத்துக்கு அந்த வாய்ப்பைத் தர முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

அனிருத் வேறு யாருமல்ல, ரஜினியின் மைத்துனர் ரவி ராகவேந்தரின் மகன். நேரடி ரத்த உறவு. ஏற்கெனவே அனிருத் படங்களில் நடிக்க முடிவெடுத்த போது அவரை அழைத்துக் கண்டித்த ரஜினி, பேசாமல் இசையமைப்புப் பணியை பார்... நாளை என் படத்துக்கே கூட இசையமைக்கும் வாய்ப்பு வரும் என்று அட்வைஸ் பண்ணியிருந்தாராம்.

அவர் சொன்னது போலவே அனிருத்துக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது.

கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு ஏன் அலையணும் என்ற எண்ணத்தில், இந்த வாய்ப்பை நேரடியாகவே அனிருத்துக்குக் கொடுத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது!

 

சிவகார்த்திகேயன் படத்துக்கு நாகி ரெட்டி விருது!

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை சிறந்த பொழுதுபோக்குப் பட விருதுக்குத் தேர்வு செய்துள்ளது நாகிரெட்டி நினைவு அறக்கட்டளை.

கடந்த ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சூரி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இமான் இசையமைக்க பொன்ராம் இயக்கியிருந்தார்.

சிவகார்த்திகேயன் படத்துக்கு நாகி ரெட்டி விருது!

இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றது. சிவகார்த்திகேயன் மார்க்கெட்டையும் ஒரேயடியாகத் தூக்கிவிட்டது.

இப்போது முதல் முறையாக விருதுகளைப் பெறவும் ஆரம்பித்துள்ளது.

மறைந்த திரையுலக ஜாம்பவான் நாகிரெட்டியாரின் நினைவாக ஒரு அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டு, ஆண்டு தோறும் சிறந்த படங்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதில் 2013-ம் ஆண்டுக்கான சிறந்த பொழுதுபோக்குப் படம் என்ற பிரிவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நாகிரெட்டி அறக்கட்டளை அறிவித்துள்ளது.

 

தயாரிப்பாளர் முக்தா ஆர் கோவிந்த் மரணம்

சென்னை: பிரபல தயாரிப்பளர் முக்தா ஆர் கோவிந்த் இன்று சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 53.

ரஜினி நடித்த பொல்லாதவன், சிவப்பு சூரியன், சிவாஜி நடித்த அந்தமான் காதலி, கமல் நடித்த நாயகன், ஜெயலலிதா நடித்த சூரியகாந்தி உட்பட ஏராளமான படங்களை தயாரித்தவர்கள் முக்தா.வி.சீனிவாசன், முக்தா.வி.ராமசாமி.

முக்தா.வி,ராமசாமியின் மகனும் தற்போது நவீன் சந்திரா, ரூபாமஞ்சரி நடிக்க சத்யசிவா இயக்கத்தில் உருவான சிவப்பு திரைப்படத்தின் தயாரிப்பாளருமான முக்தா ஆர் கோவிந்த் வயது 53 அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார் சிகிச்சை பலன் இன்றி இன்று மாலை மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு பிரியதர்ஷினி கோவிந்த் என்ற மனைவி உள்ளார். இவர் பிரபல கலாசேத்ரா நடன கல்லூரியின் முதல்வர். அவர் இத்தாலியில் இருப்பதால் அவர் வந்த பிறகு வெள்ளிக்கிழமை (11.04.2014) அன்று காலை ராயப்பேட்டை மயானத்தில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.

முக்தா.ஆர்.கோவிந்த் அவரது உடல் அஞ்சலிக்காக எண் 1, ஜெகதாம்பாள் தெரு, ராயப்பேட்டை, சென்னை என்ற விலாசத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

 

ராஜபக்சே தொடர்பு: முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விஜய் படத் தயாரிப்பாளர்கள்!

சென்னை: விஜய் படத்தைத் தயாரிக்கும் லைக்காமொபைல் நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஒரு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் புதிய படமான கத்தி, படப்பிடிப்பிலிருக்கும் போதே சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களாக ஐங்கரன் நிறுவனத்தின் கருணாமூர்த்தியும், லைக்காமொபைல் நிறுவனத்தின் சார்பில் சுபாஷ் கரண் அல்லிராஜாவும் தயாரிக்கின்றனர்.

ராஜபக்சே தொடர்பு: முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விஜய் படத் தயாரிப்பாளர்கள்!

ஐங்கரன் கருணா ஏற்கெனவே விஜய்யை வைத்து வில்லு படம் எடுத்து தோற்றவர். இவருடன் இணைந்து இப்போது விஜய் படத்தைத் தயாரிக்கும் சுபாஷ்கரண் அல்லிராஜா, ராஜபக்சேவுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். ஈழத் தமிழர்கள் அத்தனைப் பேரும் அறிந்த உண்மை இது. குறிப்பாக லண்டன், நார்வே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு லைக்காமொபைல் நிறுவனத்துக்கும் இலங்கை அரசுக்கும் உள்ள தொடர்புகள் நன்கு தெரியும்.

(ராஜபக்சே தொடர்பு: முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விஜய் படத் தயாரிப்பாளர்கள்!  

இதற்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பதிலளித்த பிரதமர் டேவிட் கேமரூன், இந்த நன்கொடையை திருப்பித் தரப் போவதாக அறிவித்ததோடு, லைக்காமொபைலுக்கும் ராஜபக்சேவுக்குமான தொடர்புகளை விசாரிக்க குழு அமைக்கவும் உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.

அதுமட்டுமல்ல, இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் மாநாட்டுக்கு முதன்மை ஸ்பான்சராக இருந்தது இந்த லைக்காமொபைல் நிறுவனம்தான். இந்த நிறுவனத்துக்கு 'கோல்ட் ஸ்பான்சர்' எனும் பெரிய அந்தஸ்தை இலங்கை அரசு கொடுத்திருந்தது.

ராஜபக்சேவின் சர்வாதிகாரம் கொடிகட்டிப் பறக்கும் இலங்கையில், அவரது அனுசரணை இல்லாமல் ஒரு தமிழரால் இத்தனை செல்வாக்குடன் இயங்க முடியுமா?

சர்வதேச அளவில் மிக சக்தி வாய்ந்த ஒரு நாட்டின் பிரதமரே லைக்காமொபைல் - ராஜபக்சே நிதித் தொடர்புகள் என்ன? என்ற கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பிய பிறகும், ராஜபக்சேவுக்கும் லைக்காவுக்கும் சம்பந்தமே இல்லை என சென்னையில் ஒருவர் பிரஸ் மீட் வைத்து சொல்கிறார்.

அப்படியென்றால் தமிழ்ப் பத்திரிகைகள் அந்த அளவு விவரம் தெரியாதவர்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது எப்படி என்பதற்கு நேற்று ஒரு லைவ் டெமோ காட்டியிருக்கிறார்கள் விஜய் படத் தயாரிப்பாளர்கள்!!

 

நடிகை மகளின் காதல் முறிவை ஸ்டார் ஹோட்டலில் விருந்து வைத்து கொண்டாடிய அம்மா

சென்னை: விரல் நடிகரை தனது மகள் பிரிந்த மகிழ்ச்சியை நடிகையின் அம்மா ஸ்டார் ஹோட்டலில் பத்திரிக்கையாளர்களுக்கு விருந்து வைத்து கொண்டாடியுள்ளார்.

புஸு புஸு நடிகை, விரல் நடிகருக்கு இடையேயான காதல் முறிந்துவிட்டது. தான் நடிகரை பிரிந்துவிட்டதாக நடிகை அண்மையில் உறுதிபடுத்தினார்.

இந்நிலையில் துவக்கத்தில் இருந்தே இந்த காதல் விவகாரம் பிடிக்காமல் இருந்த நடிகையின் அம்மாவுக்கு தனது மகளின் காதல் முறிந்ததில் ஏக சந்தோஷமாம். தனது மகிழ்ச்சியை அவர் ஹைதராபாத்தில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் பத்திரிக்கையாளர்களுக்கு விருந்து வைத்து கொண்டாடியுள்ளார்.

என் மகள் தற்போது ஃப்ரீ நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பேட்டி காணலாம் என்று சில முக்கிய பத்திரிக்கையாளர்களிடம் கூறி அவர்களின் போன் நம்பரை வாங்கிக் கொண்டு தன்னுடைய செல்போன் நம்பரையும் அளித்துள்ளாராம்.

காதல் முறிவுக்கு பிறகு மகளுக்கு மளமளவென பட வாய்ப்புகள் வருவதில் அம்மா குஷியில் உள்ளாராம்.

 

ஜெயா டிவி அழைப்பு... பரவசத்தில் வடிவேலு!

சொல்லாம வந்துடுச்சே பொல்லாத நேரம் என்று புலம்பிக் கொண்டிருந்த நடிகர் வடிவேலுவுக்கு, கடும் கோடையில் பன்னீர் குளியல் போட்ட சந்தோஷத்தில் திளைக்கிறார்.

மூன்றாண்டு வனவாசத்துக்குப் பிறகு அவர் ஹீரோவாக நடித்து வெளியாகும் படம் தெனாலிராமன். வரும் ஏப்ரல் 18-ம் படம் வெளிவரவுள்ள நிலையில் அந்தப் படத்துக்கு எதிராக சிலர் கோஷம் போட ஆரம்பித்து, வடிவேலுவுக்கு டென்ஷன் தந்தனர்.

ஜெயா டிவி அழைப்பு... பரவசத்தில் வடிவேலு!

நாம் தமிழர் சீமான்தான் இந்த இக்கட்டில் வடிவேலுவுக்கு உதவிக்கரம் நீட்டினார்.

இந்த நிலையில்தான் வடிவேலுவே எதிர்ப்பார்க்காத ஒரு இடத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அது ஆளும்கட்சியின் சேனலான ஜெயா டிவியிலிருந்து.

ஆஹா.. வந்துடுச்சிய்யா விடிவு காலம் என குதூகலித்தவர், சேனல் குறிப்பிட்ட நேரத்தில் அவர்களின் ஸ்டுடியோவில் போய் நின்றுவிட்டார்.

வருகிறது தமிழ்ப் புத்தாண்டுக்காக ஜெயா டிவிக்கு சிறப்புப் பேட்டி வேண்டும் என்றதும், சந்தோஷமாக மனம் விட்டுப் பேசியிருக்கிறாராம்.

பேட்டியில் தாராளமாக அம்மாவின் புகழையும் பாடியுள்ளாராம். அம்மாவுக்கு என் நடிப்பு பிடிக்கும். திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் என் காமெடியைப் பார்த்து கைதட்டிச் சிரிச்சவுகளாச்சே அந்த மவராசி என புகழ்ந்து தள்ளியிருக்கிறாராம்.

ஹலோ.. யாரது வடிவேலு படத்துக்கு எதிரா கொடி பிடிக்கிறது!!

 

மகனுக்கு ஹீரோ வாய்ப்பு தேடும் தங்கம்: ஓட்டம் பிடிக்கும் இயக்குனர்கள்

சென்னை: பெயரில் தங்கத்தை வைத்திருக்கும் இயக்குனர் தனது மகனை ஹீரோவாக்குமாறு பிற இயக்குனர்களிடம் கேட்கிறாராம்.

பெயரில் தங்கத்தை வைத்திருக்கும் இயக்குனர் தனது மகனை ஹீரோவாக்கி பார்க்க ஆசைப்படுகிறார். அதற்காக அவர் மகனை பல போஸ்கள் கொடுக்கச் சொல்லி புகைப்படம் எடுத்து அதை தனக்கு தெரிந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் காட்டி என் மகனை ஹீரோவாக வைத்து படம் எடுங்களேன் என்கிறாராம்.

ஏன் உங்களிடம் தான் பணம் கொட்டிக் கிடக்கிறது, சொந்த ஊரில் தோட்டம் தொறவுன்னு சொத்து இருக்கே நீங்களே உங்கள் மகனை ஹீரோவாக வைத்து படம் எடுக்க வேண்டியது தானே என்று தயாரிப்பாளர்கள் கேட்கிறாராம்.

இவர் மகனை நாம ஹீரோவாக்கனுமாமே என்று இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஆளுக்கொரு பக்கம் ஓடுகிறார்களாம்.