சேனல் யு.எஃப்.எக்ஸ் : திக்கு தெரியாத பயணம் (அன்-ரிசர்வ்டு)

சேனல் யு.எஃப்.எக்ஸ் தொலைக்காட்சி வழங்கும் சாகசப்பயணம் சார்ந்த ஒர் அற்புதமான நிகழ்ச்சி ‘திக்கு தெரியாத பயணம்' (‘அன்-ரிசர்வ்டு').அன் ரிசர்வ்டு - ஆஃப் ரோடு என்பது முன்னதாக நிச்சயிக்கப்படாத இலக்கை நோக்கி பயணிக்கும் வகையிலான ஒரு சிறப்புக் காட்சி ஆகும்.

சேனல் யு.எஃப்.எக்ஸ் : திக்கு தெரியாத பயணம் (அன்-ரிசர்வ்டு)

இந்த எபிசோடில் நிகழ்ச்சி தொகுப்பாளர் படப்பிடிப்பு குழுவுடன் கேரளாவில் உள்ள நெல்லியாம்பதி மலைப்பகுதிக்கு சாகசப்பயணம் செல்கிறார். நெல்லியாம்பதி செல்லும் பாதையில் திக்கு தெரியாத பயணம் (அன் ரிசர்வ்டு) குழுவினர் கேரளாவில் உள்ள அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதி வழியாக சென்று அப்பகுதியின் இயற்கை அழகையும் சிறப்பையும் பார்வாயாளர்களுக்கு வழங்குகின்றனர்.

இந்நிகழ்ச்சியானது சனிக்கிழமை மாலை 9 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாகிறது இதன் மறு ஒளிபரப்பை செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணி முதல் 4.30 மணி வரை பார்க்கலாம்.

 

பொறுமை... கண்ணியம்... அமைதி - ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

பொறுமை... கண்ணியம்... அமைதி - ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்!
சென்னை: தலைவா திரைப்படம் விரைவில் வெளியாகும்.. அதுவரை விரும்பத்தகாத காரியங்களில் ஈடுபடாமல் பொறுமையோடும் கண்ணியத்துடனும் இருக்க வேண்டும் என்று ரசிகர்களை நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் நடித்த தலைவா திரைப்படம் இந்த வாரம் 9.8.2013 அன்று திரைக்கு வருவதற்காக திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்த தேதியில் படம் வெளியாகவில்லை.

பொறுமை... கண்ணியம்... அமைதி - ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

என் மீது பாசமும் அன்பும் கொண்ட ரசிகர்கள், ரசிகைகள், தாய்மார்கள் உங்களையெல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொள்வது என்னவென்றால், ஏமாற்றினால் சில ரசிகர்கள் விரும்பத்தகாத சில காரியங்களில் ஈடுபடுவதாக நான் அறிகிறேன். இது நமக்கு நல்லதல்ல. மிக விரைவில் தலைவா திரைப்படம் வெளியாகும்.

அதுவரை பொறுமையோடும் கண்ணியத்தோடும் அமைதியாக இருக்க வேண்டுமென்று என் நெஞ்சில் குடியிருக்கும் அத்தனை பேரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

அது என்ன மாயமோ தெரியல.. இளையராஜா இசைன்னாலே காயம் கூட ஆறிடும்! - கமல்

சென்னை: விஸ்வரூபம் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பின் போது தாடையில் அடிபட்டுள்ளது. ஆனால் அந்த காயத்தோடு அவர் இளையராஜாவின் லண்டன் இசை நிகழ்ச்சி குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அதில் "அது என்ன மாயமோ தெரியல.. இளையராஜா இசைன்னாலே காயம் கூட ஆறிடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இசைஞானி இளையராஜா முதல் முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதில் எஸ்பி பாலசுப்ரமணியம், ஜெயச்சந்திரன், சாதனா சர்க்கம் உள்பட முன்னணி இசைக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

அது என்ன மாயமோ தெரியல.. இளையராஜா இசைன்னாலே காயம் கூட ஆறிடும்! - கமல்

இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவின் தீவிர ரசிகரான கமல்ஹாஸனும் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் தான் பங்கேற்பது குறித்து விஸ்வரூபம் 2 படப்பிடிப்பிலிருந்த கமல் அளித்துள்ள வீடியோ பேட்டியில், "விஸ்வரூபம்-2 கிட்டத்தட்ட 90% முடிந்துவிட்டது. இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கின்றன. இருந்தாலும் இந்தப் பேட்டியைக் கொடுக்கிறேன். தாடையில் இருக்கும் இந்தக் காயம் கூட விஸ்வரூபத்தில் பட்டுக்கொண்டதுதான்.

ஆனால் அது அங்கே வரும்போது ஆறிடும். அது என்னவோ தெரியல.. என்ன மாயமோ தெரியல.. என்ன மேஜிக்கோ தெரியல... இளையராஜா இசைன்னாலே காயம் கூட தன்னால ஆறிடும் (குணா பாடல் பாணியில் பேசிக் காட்டினார்!).

ஆகஸ்ட் 24.. ஓ2 லண்டன்... உங்களுடன் நானும்.. இளையராஜாவின் ரசிகனாக.. அங்கே அமர்ந்திருப்பேன். வணக்கம்", என்றார்.

 

'பாக் நடிகை படத்தை திரையிடுவதா?' - கடும் எதிர்ப்பால் வீணா மாலிக் நடித்த சில்க் படத்துக்கு தடை!!

பெங்களூரு: பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் நடித்த சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படத்துக்கு கர்நாடக நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்தி, மலையாளம், தமிழில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைக் கதை படமாக வெளி வந்துவிட்டது.

அடுத்து கன்னடத்தில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை 'சில்க் சக்கத் ஹாட்' என்ற பெயரில் படமாக்கியுள்ளனர். இதில் சில்க்ஸ்மிதா வேடத்தில் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் படு கவர்ச்சியாக நடித்துள்ளார்.

'பாக் நடிகை படத்தை திரையிடுவதா?' - கடும் எதிர்ப்பால் வீணா மாலிக் நடித்த சில்க் படத்துக்கு தடை!!

கடந்த வாரம் இப்படம் கர்நாடகா முழுவதும் ரிலீசானது. இதற்கு ஸ்ரீராம சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிரி நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த வீணா மாலிக் நடித்துள்ளதால் இப்படத்தை திரையிடக் கூடாது என போராட்டங்கள் நடத்தினர். மங்களூர், மைசூர், பெல்காம் பகுதிகளில் தியேட்டர்களில் புகுந்தும் ரகளையில் ஈடுபட்டனர். தியேட்டர் அதிபர்களும் மிரட்டப்பட்டார்கள்.

படத்தில் ஏராளமான ஆபாச காட்சிகள் இருப்பதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சில்க் சக்கத் ஹாட் படத்துக்கு செப்டம்பர் 10-ந்தேதி வரை தடை விதித்து தீர்ப்பு கூறினார்.

'பாக் நடிகை படத்தை திரையிடுவதா?' - கடும் எதிர்ப்பால் வீணா மாலிக் நடித்த சில்க் படத்துக்கு தடை!!

இந்தத் தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த படத்தின் இயக்குநர் திரிசூல், "பாகிஸ்தான் நடிகை நடித்தார் என்பதற்காக எனது படத்தை எதிர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை," என்றார்.

 

பிரபுதேவாவின் படத்தில் நடிக்கிறார் நடிகை ஸ்ரீதேவி?

பிரபுதேவாவின் படத்தில் நடிக்கிறார் நடிகை ஸ்ரீதேவி?

மும்பை: நடிகர் பிரபுதேவாவின் இயக்கத்திலான படத்தில் நடிக்க சீனியர் நடிகை ஸ்ரீதேவி ஒப்பந்தமாகி இருப்பதாக மும்பை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழில் கொடி கட்டிப் பறந்துவிட்டு அப்படியே பாலிவுட்டில் செட்டில் ஆன ஸ்ரீதேவி 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில் நடித்தார். தற்போது பிரபுதேவாவின் படத்திலும் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.

இது பற்றி ஸ்ரீதேவியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நிறைய கதைகளைக் கேட்டு வருகிறேன். பிரபுதேவா எனக்குப் பிடித்தமான நடனக் கலைஞர், நடிகர், இயக்குநர். அப்படி ஒரு வாய்ப்பு அமையுமானால் நிச்சயம் நான் அவருடன் இணைந்து பணியாற்றுவேன். விரைவில் என்னுடைய அடுத்த படம் பற்றி தெரிந்து கொள்வீர்கள் என்றார்.

 

ராஜா ராணி... இயக்குனர் அட்லீயை பாராட்டிய முருகதாஸ்!

ராஜா ராணி படம் சிறப்பாக வந்திருப்பதாகக் கூறி, படத்தின் இயக்குநர் அட்லீயைப் பாராட்டியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான இயக்குநர் ஏஆர் முருகதாஸ்.

ராஜா ராணி... இயக்குனர் அட்லீயை பாராட்டிய முருகதாஸ்!

பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இயக்குனர் முருகதாஸ் இணைந்து தயாரிக்கும் 'ராஜா ராணி ' திரைப்படத்தின் ட்ரைலரை சமீபத்தில் பார்த்தார் இயக்குநர் முருகதாஸ்.

'நான் படத்தின் வெள்ளோட்டம் வெளியிடப்படும் நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். நான் பல முறைப் பார்த்து விட்டாலும் ரசிகர்களின் அபிப்ராயத்தை அறிந்துக் கொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். சொன்ன கதையை அப்படியே படமாக்குவதும், அதை முறையாக ரசிகர்களைக் குழப்பாமல் ட்ரைலர் உருவாக்குவதும் ஒரு நல்ல இயக்குனரின் அடையாளம்.

ராஜா ராணி... இயக்குனர் அட்லீயை பாராட்டிய முருகதாஸ்!

அந்த முறையில் அட்லீயின் திறமை தெளிவாக தெரிகிறது. இவரை அறிமுகபடுதுவதிலும் இந்த படத்தை தயாரிப்பதிலும் எனக்கு ரொம்ப பெருமை," என்றார் முருகதாஸ்.

ராஜா ராணி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா வருகிற 18ஆம் தேதி நடக்கிறது. செப்டம்பர் இறுதியில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

 

இசைக் கல்லூரியை துவக்கினார் ஏ.ஆர். ரஹ்மான்! முகேஷ் அம்பானி திறந்து வைப்பு!!

சென்னை: திரைப்பட இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசைக் கல்லூரியை தொடங்கியுள்ளார். இதை தொழிலதிபர் முகேஷ் அம்பானி நேற்று திறந்து வைத்தார்.

இசைக் கல்லூரியை துவக்கினார் ஏ.ஆர். ரஹ்மான்!  முகேஷ் அம்பானி திறந்து வைப்பு!!

சென்னை அரும்பாக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம். இசை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை ரிலையன்ஸ் நிறுவன பொது மேலாளர் முகேஷ் அம்பானி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இசைக் கல்லூரியை துவக்கினார் ஏ.ஆர். ரஹ்மான்!  முகேஷ் அம்பானி திறந்து வைப்பு!!

இந்நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானியும் பங்கேற்றார். இசையில் டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புகளை வழங்க உள்ளது இக் கல்லூரி என்றார் ஏ.ஆர். ரஹ்மான்.

 

இளம் படைப்பாளிகளுக்கு விசிட்டிங் கார்டு தரும் தந்தி டிவி

இளம் படைப்பாளிகள் சினிமாவில் நுழைவதற்கான ஒரு பாதையை அமைத்து தருகிறது தந்தி டி.வி. ‘24 பிரேம்ஸ்' என்கிற பெயரில் புதிய நிகழ்ச்சி ஒன்றை அறிமுகப் படுத்தி இருக்கிறது.

சினிமாவுக்குள் நுழையத் துடிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு விசிட்டிங் கார்டு போன்று இருப்பது குறும் படங்களே. எடுத்து வைத்த குறும்படங்களை வைத்துக்கொண்டு யாரைப் பார்ப்பது என்று வழி தெரியாமல் தடுமாறி நிற்கின்றனர்.

இளம் படைப்பாளிகளுக்கு விசிட்டிங் கார்டு தரும் தந்தி டிவி

அப்படி இருக்கும் படைப்பாளிகளை தயாரிப்பாளர்களோடு இணைக்கும் முயற்சியை இந்த ‘24 பிரேம்ஸ்' நிகழ்ச்சி மூலம் ஆரம்பித்து வைக்க இருக்கிறது, உங்கள் தந்தி டிவி.இந்த நிகழ்ச்சியில் வாரம் 3 குறும் படங்கள் திரையிடப்படும். அதில் சிறந்த ஒரு படத்தை நிகழ்ச்சியில் நடுவர்களாய் இருக்கும் தயாரிப்பாளர்களும் பார்க்கும் மக்களும் இணைந்து தேர்ந்து எடுக்க இருக்கிறார்கள்.

இளம் படைப்பாளிகளுக்கு விசிட்டிங் கார்டு தரும் தந்தி டிவி

10-வது வாரத்தின் இறுதியில் வெற்றி பெறும் ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்றும் காத்துக் கொண்டிருக்கிறது என்பது இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.

இந்த ‘24 பிரேம்ஸ்' நிகழ்ச்சி தந்தி டி.வி.யில் ஞாயிறு முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

 

வன்முறை, பிறமொழிக் கலப்பு... தலைவா படத்துக்கு வரிவிலக்கு இல்லை - அரசு அறிவிப்பு

சென்னை: வன்முறை, பிறமொழிக் கலப்பு, பெண்கள் குழந்தைகளை பாதிக்கும் காட்சிகள்- வசனங்கள் அதிகம் உள்ளதால் தலைவா படம் வரி விலக்குப் பெறும் தகுதியை இழந்துவிட்டது. எனவே இந்தப் படத்துக்கு வரிவிலக்கு தர முடியாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

விஜய், அமலாபால் நடித்துள்ள ‘தலைவா' திரைப்படம் தமிழகத்தில் மட்டும் வெளிவரவில்லை. எப்போது வெளியாகும் என்று சொல்ல முடியாத நிலை.

வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் படம் வெளியாகி, ரிசல்டும் தெரிந்துவிட்டது.

வன்முறை, பிறமொழிக் கலப்பு... தலைவா படத்துக்கு வரிவிலக்கு இல்லை - அரசு அறிவிப்பு

இதற்கிடையே, ‘தலைவா' படத்துக்கு தணிக்கை குழு ‘யு' சான்றிதழ் அளித்ததையடுத்து, கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக வரிவிலக்கு குழுவினருக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டது.

கேளிக்கை வரிச்சலுகை பெற வேண்டுமானால் தமிழில் பெயர் வைத்திருக்க வேண்டும். இதுதவிர வேறுசில கூடுதல் தகுதி வரையறைகளும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், ‘தலைவா' திரைப்படத்தை பார்வையிட்ட தேர்வுக்குழு உறுப்பினர்கள், இத்திரைப்படம் வரிவிலக்கு அளிப்பதற்கு தகுதியானது அல்ல என்று பரிந்துரைத்துள்ளனர்.

படத்தைப் பார்த்த குழு உறுப்பினர்கள் படத்தில் உள்ள சில காட்சிகளுக்கும், விஜய் பேசும் சில வசனங்களுக்கும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

படத்தை வரி விலக்குக் குழுவில் உள்ள 7 பேர் பார்த்துள்ளனர். அவர்கள், வணிக வரி இணை ஆணையர் தேவேந்திர பூபதி, தமிழ் மொழி வளர்ச்சி (மொழி பெயர்ப்பு) இயக்குநர் ந பூபதி, தமிழ் மொழி வளர்ச்சி இயக்குநர் காமு சேகர், ஒளிப்பதிவாளர் கேவி அனந்த கிருஷ்ணன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், பாடகி எல் ஆர் ஈஸ்வரி, பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீ ஆகியோர்.

வன்முறை, பிறமொழிக் கலப்பு... தலைவா படத்துக்கு வரிவிலக்கு இல்லை - அரசு அறிவிப்பு

யு சான்றிதழ் பெற்றிருந்தாலும், திரைப்படத்தில் ஆங்கில மொழி கலப்பு அதிக அளவில் உள்ளதாலும், பெண்கள், குழந்தைகள் மனதைப் பாதிக்கும் வண்ணம் படத்தில் வன்முறை அதிகம் உள்ளதாலும் வரிவிலக்கு பெறுவதற்கு தகுதியற்றது என்று உறுப்பினர்கள் அனைவருமே பரிந்துரை செய்துள்ளனர்.

இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்த அரசு, தமிழ்நாடு கேளிக்கை வரிச்சட்டத்தின்படி ‘தலைவா' திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க இயலாது என ஆணையிட்டுள்ளது.

 

தலைவா... இரவெல்லாம் நீடித்த இழுபறி... படத்தைக் கைவிட்ட திரையரங்கு உரிமையாளர்கள்!

சென்னை: விஜய்யின் தலைவா படத்தை வெளியிடுவது குறித்து நேற்று இரவெல்லாம் விவாதம் நடத்திய விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் கடைசியில் படத்தைத் திரையிடும் முடிவைக் கைவிட்டனர்.

விஜய்யின் ‘தலைவா' படம் ரிலீசாவதில் சிக்கல் தொடர்கிறது. நேற்று தமிழகம் முழுவதும் இப்படம் வெளியாக இருந்தது. தியேட்டர்களுக்கு வெடி குண்டு மிரட்டல்கள் வந்ததால் படத்தை நிறுத்தினர். விஜய் ரசிகர்களில் சிலர் இதனால் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

தலைவா... இரவெல்லாம் நீடித்த இழுபறி... படத்தைக் கைவிட்ட திரையரங்கு உரிமையாளர்கள்!

ஆனால் கேரளா, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் மும்பையில் ‘தலைவா' படம் திட்டமிட்டபடி நேற்று ரிலீசானது. வெளிநாடுகளிலும் வெளியாகி விமர்சனங்கள் வந்துவிட்டன.

இதற்கிடையில் போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் தலைவா படம் வெளியாவதை தள்ளி வைக்குமாறு தமிழக காவல் துறை கோரவோ அல்லது ஆலோசனை கூறவோ இல்லை என்று அறிக்கை வெளியிட்டார்.

எனவே ‘தலைவா' படம் இன்று வெளியாகும் என எதிர்பார்த்தனர். டி.ஜி.பி. அறிக்கையை தொடர்ந்து தியேட்டர் அதிபர்களும், விநியோகஸ்தர்களும் அவசர கூட்டம் நடத்தினார்கள். நள்ளிரவு வரை விவாதித்தார்கள்.

படத்தை க்யூபில் வெளியிடுவதற்கான கீ கூட கொடுக்கப்பட்டுவிட்டது. சில திரையரங்குகளில் விடியும் வரை கூட காத்திருக்காமல் படத்தை திரையிட்டும் விட்டனர்.

இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் - தியேட்டர் உரிமையாளர்களிடைடே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

தலைவா வெளியாகாது என்பது தெரிந்துவிட்டதால், பல தியேட்டர்களை ஐந்து ஐந்து ஐந்து படத்துக்கும், பெரும்பான்மையான அரங்குகள் சென்னை எக்ஸ்பிரசுக்கும் ஒதுக்கப்பட்டது ‘தலைவா'வுக்கு மேலும் சிக்கலை உண்டாக்கிவிட்டது.

மேலும் ‘தலைவா' படத்துக்கு வரி விலக்கு கிடைக்காதது பற்றியும் தியேட்டர் அதிபர்கள் சுட்டி காட்டினர். தணிக்கை குழு தலைவா படத்துக்கு ‘யு' சான்றிதழ் அளித்துள்ளது. வரி விலக்கு குழுவினர் படத்தை பார்த்து அதிகமான ஆங்கில வார்த்தைகள், வன்முறைகி காட்சிகளைக் காரணம் காட்டி வரி விலக்கு அளிக்க மறுத்துவிட்டது அரசு.

இதையெல்லாம் விட முக்கியம் அரசுக்கு எதிரான படம் என்ற முத்திரை இன்னும் இந்தப் படத்தின் மீதிருந்து விலக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டிய திரையரங்க உரிமையாளர்கள் தலைவாவை இப்போதைக்கு வெளியிட முடியாது என கைவிரித்துவிட்டனர்.

 

ஆக 12-ம் தேதிக்குப் பிறகு விஜய் & கோவுக்கு முதல்வர் அப்பாயின்ட்மென்ட்..15ல் ரிலீஸ்?

சென்னை: வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குப் பிறகு முதல்வரைச் சந்திக்க விஜய்க்கு நேரம் ஒதுக்குவார் முதல்வர் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு சுதந்திர தினத்தில் தலைவா படம் வெளியாகக் கூடும் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று வெளியாக இருந்த தலைவா ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே டிக்கெட் புக் செய்தவர்களுக்கான கட்டணங்கள் திரும்பக் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆக 12-ம் தேதிக்குப் பிறகு விஜய் & கோவுக்கு முதல்வர் அப்பாயின்ட்மென்ட்..15ல் ரிலீஸ்?

தலைவா இன்று தமிழ்நாட்டில் வெளியாகாத நிலையில், விஜய்யின் தீவிர ரசிகர்களோ கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்குச் சென்று படம் பார்க்கின்றனர்.

'தலைவா' படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்திருந்ததால் வரிவிலக்கு குழுவினருக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தினைப் பார்த்த அதிகாரிகள் வரிவிலக்கு அளித்தாலும், விஜய் பேசும் சில வசனங்களுக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று காலையும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆனால், கொடநாட்டில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா திரும்பும்வரை 'தலைவா' வெளியாக வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 12-ம் தேதி அன்று கொடநாட்டில் இருந்து சென்னை திரும்பும் ஜெயலலிதாவைச் சந்திக்க, 'தலைவா' படக் குழுவினர் அனுமதி கேட்டுள்ளனர். அந்த சந்திப்பு நடந்த பிறகுதான் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

அநேகமாக ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக இப்படத்தை வெளியிடுவார்கள் என பெரும்பாலான தியேட்டர் உரிமையாளர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.