இப்படி வெயிட் குறைகிறதே, என்ன செய்வேன்: நொந்து நூடுல்ஸ் ஆன நடிகை

சென்னை: சொக்கும் கண்ணழகி நடிகைக்கு திடீர் என்று உடல் எடை வெகுவாக குறைந்து ஒல்லிக்குச்சியாக உள்ளாராம்.

ஆந்திராவில் இருந்து கோலிவுட் வந்தவர் மாடலான அந்த சொக்கும் கண்ணழகி. தமிழகத்தில் படித்த அவரை பலர் சில்க் நடிகையுடன் ஒப்பிடுகிறார்கள். கண்ணழகியும் சில்க் நடிகையின் வாழ்க்கை வரலாற்று படத்தை தமிழில் ரீமேக் செய்தால் நடிக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டில் பெரிய அளவுக்கு வர முடியாவிட்டாலும் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஹெட் நடிகருடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று அவர் ஒரு பிட்டை போட்டுள்ளார். இந்நிலையில் அந்த நடிகர் தற்போது நடித்து வரும் படத்தில் கண்ணழகி நடிப்பதாக முன்பு பேச்சு அடிபட்டது.

நடிகை ஏற்கனவே ஒல்லியாகத் தான் இருப்பார். இந்நிலையில் தற்போது அவரின் உடல் எடை அதிகமாக குறைந்துள்ளதாம். இதனால் ஒல்லிக்குச்சியாகிவிட்டாராம் நடிகை. மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் எடை மட்டும் கூடவில்லையாம்.

நடிகையை படத்தில் ஒப்பந்தம் செய்ய செல்பவர்கள் அவரின் ஒல்லிக்குச்சி உடம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்து கொஞ்சம் வெயிட் போடுங்கம்மா, நாங்கள் அப்புறம் வருகிறோம் என்று கூறிவிட்டு செல்கிறார்களாம்.

 

டென் எண்டர்டெயின்மென்ட்... இது ஐஸ்வர்யா தனுஷின் புதிய பட நிறுவனம்!

ஐஸ்வர்யா தனுஷ் ஆரம்பித்துள்ள புதிய படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு Aishwarya's production company named as Ten Entertainment

முதல் கட்டமாக குறும்படங்களைத் தயாரித்து வெளியிடத் திட்டமிட்டு, தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதற்கு டென் எண்டர்டெயின்மென்ட் என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த நிறுவனம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் குறும்படங்களைத் தயாரிக்கவிருக்கிறது.

தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்தின் துணை நிறுவனமாக டென் எண்டர்டெயின்மென்ட் செயல்படும்.

Aishwarya's production company named as Ten Entertainment

இதுகுறித்து ஐஸ்வர்யா கூறுகையில், "நான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதற்குக் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. உற்சாகப்படுத்த ஏராளமான திறமையாளர்கள் காத்திருக்கிறார்கள். தென்னிந்திய மொழிகளில் குறும்படங்களை எனது நிறுவனத்தின் யுட்யூப் சேனல் மூலம் வெளியிடுவதில் பெருமை அடைகிறேன்," என்றார்.

 

ஸ்ரீதேவிக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன புலி படக்குழு!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகை ஸ்ரீதேவிக்கு புலி படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப்பின், விஜய்யின் புலி படத்தில் நடித்துள்ள நடிகை ஸ்ரீதேவி தனது 52வது பிறந்தநாளை இன்று சென்னையில் எளிமையாக கொண்டாடினார்.

Puli team wishes Sridevi

அவருக்கு புலி பட நாயகன் விஜய் தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துடன், பூங்கொத்து ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவிக்கு, புலி படத்தின் தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார், ஷிபு தமீம் மற்றும் புலி படத்தின் இயக்குனர் சிம்புதேவன் ஆகியோர் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

 

சர்ச்சையைக் கிளப்பும் பிரகாஷ் ராஜ் விளம்பரம்!

சமீபத்தில் தொலைகாட்சி முதல் ஆன்லைன் வரை நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்த ஒரு விளம்பரம் பெரும் சர்ச்சையை கிளப்பி கொண்டு இருக்கிறது. டீசர் எனப்படும் இத்தகைய விளம்பரம், எந்த பிராண்டுக்காக உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடியவில்லை.

Prakash Raj's new ad stirs controversy

அந்த விளம்பரத்தில் கல்யாண வயதில் உள்ள பெண்களை அப்பெண்ணின் பெற்றோர்கள் டென்ஷன் என குறிப்பிடுவதும் அதற்க்கு பிரகாஷ் ராஜ் 'கல்யாண வயசுல பொண்ணுங்க இருந்தாலே டென்ஷன் தானே' என கூறுவதைப் போல் அமைந்துள்ளது.

இந்த விளம்பரம் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ஏனைய மக்களால் விமர்சிக்கபட்ட வண்ணம் உள்ளது. 'கல்யாண வயசுல பெண்கள் இருந்தால் உண்மையில் பெற்றோர்களுக்கு டென்ஷன் தானே' என்பதை ஆதரிப்பது போல் ஒரு சாராரும், பெண்களை டென்ஷன் என எப்படிக் குறிப்பிட முடியும் என ஒரு சாராரரும் காரசார விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 15 அன்று இந்த விளம்பரம் முழுமையாக வருகிறது. அன்று தெரியும் யார் சொல்வது சரி என்று!

 

மலேசிய மண்ணில் வெளியாகின்றதா? இஞ்சி இடுப்பழகியின் இசை

சென்னை: ஆர்யா அனுஷ்கா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் ஒரே நேரத்தில் இஞ்சி இடுப்பழகி திரைப்படம் உருவாகி வருகின்றது. 2 மொழிகளிலும் உருவாகி வரும் இஞ்சி இடுப்பழகி திரைப்படம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்நிலையில் இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை மலேசியாவில் வெளியிட படக்குழுவினர் தீர்மானித்து இருக்கின்றனர், என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Inji Iduppazhagi Audio Launch

தமிழில் இஞ்சி இடுப்பழகி என்றும் தெலுங்கில் சைஸ் ஜீரோ என்றும் பெயர் வைத்திருக்கின்றனர், அடுத்த மாதம்(செப்டம்பர் ) 7ம் தேதி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் படத்தின் இசையை இஞ்சி இடுப்பழகி குழுவினர் வெளியிட இருப்பதாக கூறுகிறார்கள்.

இயக்குநர் கே.எஸ்.பிரகாஷ் இயக்கி வரும் இந்தப் படத்திற்கு பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் மரகதமணி இசையமைத்து வருகிறார், பிவிபி நிறுவனம் தயாரித்து வரும் இஞ்சி இடுப்பழகிக்கு பிரபல ஒளிப்பதிவாளார் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படத்தின் கதைப்படி குண்டுப் பெண்ணாக விளங்கும் அனுஷ்காவின் எடையைக் குறைக்கும் உடற்பயிற்சியாளராக ஆர்யா நடித்திருக்கிறார், அக்டோபர் 2 ம் தேதி இஞ்சி இடுப்பழகி திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

 

'எதுக்கு இந்த வீரப்பன் மீசை?' பதிலே சொல்லாமல் மழுப்பிய விக்ரம்!

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை அந்நியன், கந்தசாமி, ஐ என ஏதாவதொரு வனவாசத்தில் சிக்கிக் கொள்வது விக்ரம் வழக்கம்.

இனியும் அப்படி சிக்கிக் கொள்ளமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே கிடைக்கிற கேப்பில் குறுகிய காலத்தில் படங்களை நடித்துக் கொடுக்கும் முடிவில் இருக்கிறார்.

Vikram's new getup with big mustache

அப்படி குறுகிய காலத்துக்குள் அவர் நடித்துக் கொடுத்ததுதான் பத்து எண்றதுக்குள்ள.

இந்தப் படத்தில் விக்ரம் டாக்சி டிரைவராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். ‘கோலி சோடா' படத்தை இயக்கிய விஜய் மில்டன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Vikram's new getup with big mustache

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இதில் விக்ரம், சமந்தா, இயக்குனர் விஜய் மில்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவுக்கு விக்ரம், வீரப்பன் மீசையுடன் வந்திருந்தார்.

இந்த மீசை எந்தப் படத்துக்கான கெட்டப் என்று கேட்டதற்கு மர்மமாக சிரித்து வைத்தார் விக்ரம். நிச்சயம் இது பத்து எண்றதுக்குள்ள படத்துக்கான கெட்டப் இல்லை.

Vikram's new getup with big mustache

அடுத்து அரிமா நம்பி இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் அவர் நடிக்கிறார். அந்தப் படத்துக்காகத்தான் இந்த கெட்டப் என்கிறார்கள். ஒரு சின்ன கிக் வேண்டும் என்பதற்காக அதைச் சொல்லாமல் ரகசியம் காக்கிறாராம்!

 

ஆகஸ்ட் 15-ம் தேதி லண்டனில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி!

சென்னை: இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "லண்டனில் உள்ள ரசிகர்கள், நண்பர்களே, உங்களை ஆகஸ்ட் 15 அன்று லண்டன் ஓ2 அரங்கில் சந்திக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

AR Rahman concert at London on Aug 15

இந்த இசை நிகழ்ச்சியில் நீத்தி மோகன், ஜாவத் அலி, கார்த்திக், ஹரிசரண், ஜொனிதா காந்தி, கட்டானி ஆகியோரும் பங்கேற்கிறார்கள். லண்டனில் புகழ்பெற்ற அரங்கம் இந்த ஓ2.

இந்த நிகழ்ச்சியில் தமிழ், இந்தி திரைப்படப் பாடல்கள் மற்றும் தனது புகழ்பெற்ற வந்தே மாதரம் ஆல்பம் போன்றவற்றை இசைக்கவிருக்கிறார் ஏஆர் ரஹ்மான்.

 

ஓடாத "லோக்கல்".. தொங்கிப் போன மார்க்கெட்.. காத்திருக்கும் "ஸ்வீட்" ஸ்டார்

சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபலமான அந்த இனிப்பு நடிகையின் கைகளில் தற்போது புதிய படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லையாம். சமீபத்தில் ஒல்லி நடிகருடன் சேர்ந்து நடித்த லோக்கல் படம் தனது மார்க்கெட்டை உயர்த்தும் என்ற நம்பிக்கையில் இருந்தார் நடிகை.

லோக்கல் படம் ஓடாததால் ஏற்கனவே சரிந்திருந்த மார்க்கெட் இன்னும் நன்றாக கீழே இறங்கி விட்டது, ஒரு பக்கம் உலக நாயகனின் வாரிசு தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி ஹிந்தி மொழி வரைக்கும் காலூன்றி விட்டார்.

Sweet Stall Actress Waiting For The Image Actor Movie

மில்க் பியூட்டி நடிகையைப் பற்றி சொல்லவே தேவையில்லை அவரின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அரச திரைப்படம் நன்றாக ஓடியதில் அடுத்தடுத்து படங்கள் குவிகின்றன, இதனால் மேலும் எரிச்சல் அடைந்து இருக்கிறார் இனிப்பு நடிகை.

தற்போது தோரணை நடிகருடன் நடித்து வெளிவர இருக்கும் புலியான திரைப்படமாவது தனது மார்க்கெட்டை தக்க வைக்க உதவுமா? என்று கவலையுடன் காத்திருக்கிறாராம் இனிப்பு நடிகை.

 

'ரஜினியின் ஜானி படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இருக்கிறேன்'- நடிகர் ஜீவன்

ரஜினியின் வெற்றிப் படங்களுள் ஒன்றான ஜானி படத்தை ரீமேக் செய்து நடிக்கும் முயற்சியில் இருப்பதாக நடிகர் ஜீவன் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து 1980-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம், ‘ஜானி'. ஸ்ரீதேவி நாயகியாக நடிக்க மகேந்திரன் இயக்கிய படம்.

Jeevan to remake Rajini's Johnny

இளையராஜாவின் இசையில் அத்தனை பாடல்களும் அமுதமாய் இனித்தன.

இந்தப் படத்தை ரீமேக் செய்ய பலரும் முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் தானும் அப்படி ஒரு முயற்சியில் இறங்கியுள்ளதாக நடிகர் ஜீவன் தெரிவித்துள்ளார்.

நான்கைந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அதிபர் என்ற படத்தில் நடித்து வரும் அவர், ஜானி பட ரீமேக் பற்றிக் கூறுகையில், "நான் ஏற்கனவே ஜெமினிகணேசனின் ‘நான் அவனில்லை' படத்தை மீண்டும் தயாரித்தபோது அதில் நடித்தேன். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது.

அடுத்து ரஜினிகாந்தின் ‘ஜானி' படத்தை மீண்டும் தயாரித்தால் அதில் நடிக்க விரும்புகிறேன். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறேன். தற்போது ‘அதிபர்' என்ற படத்தில் நடித்து இருக்கிறேன்.

இனி எந்தப் படத்திலும் வில்லனாக நடிக்க மாட்டேன்," என்றார்.

 

தென் இந்தியாவின் சிக்ஸ் பேக்ஸ் ஸ்டார் யாரு தெரியுமா?

இந்திய நடிகர்கள் பலரும் சிக்ஸ் பேக்ஸ் வைத்து நடிக்கின்றனர். ஆனால் தென் இந்தியாவின் சிக்ஸ் பேக்ஸ் ஸ்டார் என்ற பட்டத்தை அனிருத்துக்கு வழங்கியுள்ளார் நடிகை டாப்ஸி.

துபாயில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில் அனிருத்துக்கு கத்தி படத்திற்கான சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்தது.

South India's six-pack star Anirudh

விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் சிவா, இவரு உடம்புக்கும் வாய்ஸ்க்கும் சம்பந்தம் இருக்காது என்று கூற, நடிகை டாப்ஸியோ, சிறந்த இசையமைப்பாளர் விருது தென் இந்தியாவின் சிக்ஸ் பேக்ஸ் நடிகர் அனிருத்துக்கு வழங்கப்படுகிறது என்றார்.

South India's six-pack star Anirudh

அனிருத்தின் சிலிம்மான உடலைப்பற்றித்தான் விழாவில் பேசினார்கள். ஆனால் இது கடவுள் கொடுத்த கிப்ட் என்று கூறியதோடு அனைத்தையும் ஸ்போர்டிவ்வாக எடுத்துக்கொண்டார் அனிருத்.

 

"மணி" மாதிரி படம் எடுக்காதீங்க.. கார்த்திக் சுப்புராஜுக்கு சுஹாசினி அட்வைஸ்

சென்னை: மணிரத்னம் மாதிரி படம் இயக்க வேண்டும் என ஆசைப் படாதீர்கள், உங்கள் ஸ்டைலிலேயே படம் எடுங்கள் என நடிகையும், இயக்குநருமான சுஹாசினி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு அறிவுரைக் கூறியுள்ளார்.

கொல்லப்புடி சீனிவாஸ் அறக்கட்டளையின் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகை சுஹாசினி, நடிகர் சித்தார்த், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இந்தி இயக்குநர் பாரா கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Don't try Maniratnam style: Suhasini advices Karthik Subburaj

இந்த விழாவில் க்யூ பட இயக்குநர் சஞ்சீவ் குப்தாவுக்கு சிறந்த புதுமுக இயக்குநர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை சிரஞ்சீவி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து விழாவில் சுஹாசினி பேசியதாவது:-

Don't try Maniratnam style: Suhasini advices Karthik Subburaj

கார்த்திக் சுப்புராஜீன் விசிறி நான். முதல் படத்திலேயே அவர் என்னைக் கவர்ந்து விட்டார்.

நீங்கள் உங்கள் ஸ்டைலிலேயே படம் பண்ணுங்கள். மணிரத்னம் மாதிரி யெல்லாம் செய்யணும்னு நினைக்காதீங்க. உங்களுக்குனு உள்ள ஸ்டைலிலேயே செய்யுங்க போதும்' எனத் தெரிவித்தார்.

சுஹாசினியின் அறிவுரையை கார்த்திக் சுப்புராஜூம் சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொண்டார்.

 

Exclusive: ரஜினியின் புதுப் படத் தலைப்பு 'கண்ணபிரான்'?

சென்னை: ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு கண்ணபிரான் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லிங்கா படத்துக்குப் பிறகு கலைப்புலி தாணு தயாரிப்பில், ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

Rajini's new movie title 'Kannabiran'?

இதன் படப்பிடிப்பு மலேசியாவில் வரும் செப்டம்பர் 18-ம் தேதி தொடங்குகிறது. படப்பிடிப்பு நடக்கும் இடங்களை இயக்குநர் ரஞ்சித் நேரில் பார்வையிட்டு முடிவு செய்துள்ளார்.

இந்தப் படத்துக்கு என்ன தலைப்பு என்று ரசிகர்களும் மீடியாவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். தினசரி இதுதான் ரஜினி படத் தலைப்பு என்று கூறி வந்தனர். இந்தப் படத்தில் ரஜினியின் வேடம் முள்ளும் மலரும் காளி போல இருக்கும் என்று ரஞ்சித் சொன்னதை வைத்து, படத்துக்குப் பெயர் காளி என்றே எழுதிவிட்டனர்.

இந்த நிலையில் இப்போது படத்தின் தலைப்பு 'கண்ணபிரான்' என்று சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கண்ணபிரான் என்பது ஏற்கெனவே இயக்குநர் அமீர் பதிவு செய்து வைத்திருக்கும் தலைப்பு. பருத்தி வீரனுக்குப் பிறகு அவர் இயக்கவிருந்த படத்துக்கு இந்தத் தலைப்பைப் பதிவு செய்து வைத்தார். ஆனால் அந்தப் படம் தொடங்கப்படவே இல்லை. லிங்கா தலைப்பும் அமீர் பதிவு செய்து வைத்திருந்ததுதான் என்பது குறிப்பிடத்தக்கது.