இயக்குனர் பாலா கழுத்தில் கிடக்கும் 108 பேரின் முதுகெலும்பால் செய்த மாலை

சென்னை: இயக்குனர் பாலா கழுத்தில் கிடக்கும் மாலை 108 பேரின் முதுகெலும்பில் செய்ததாம்.

இயக்குனர் பாலா நடிகை சங்கீதா நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த மாலையை பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.

இயக்குனர் பாலா கழுத்தில் கிடக்கும் 108 பேரின் முதுகெலும்பால் செய்த மாலை

அதற்கு அவர் கூறுகையில்,

வாரனாசியில் உள்ள சாமியார்கள் இதை எனக்கு பரிசாக அளித்தனர். இந்த மாலை இறந்துபோன 108 பேரின் முதுகு எலும்பில் செய்யப்பட்டது என்றார்.

அந்த நிகழ்ச்சியில் அஜீத் குறித்த பேச்சு வந்தது. அஜீத்தை அடிக்க தான் ஆள் அனுப்பியதாகவும், அவரை தான் திட்டியதாகவும் வந்த செய்திகளில் உண்மை இல்லை என்றார் பாலா. மேலும் மிஸ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை அவர் பாராட்டினார்.

 

தமிழில் மீண்டும் பிஸியான தமன்னா... ஆர்யா, சிவகார்த்திகேயன் படங்களிலும் நாயகி!

சரியாக இரண்டு ஆண்டுகள் இடைவெளிவிட்டு தமிழில் மீண்டும் பிஸியாகிவிட்டார் தமன்னா.

2010, 2011 ஆண்டுகளில் அடுத்தடுத்து தமன்னா நடித்த படங்கள்தான் வெளியாகின. ஆனால் சுறா மற்றும் சிறுத்தை படங்களுக்குப் பிறகு காணாமல் போனார் தமன்னா. இத்தனைக்கும் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவற்றையெல்லாம் மறுத்துவிட்டார்.

தமிழில் மீண்டும் பிஸியான தமன்னா... ஆர்யா, சிவகார்த்திகேயன் படங்களிலும் நாயகி!

இளம் நடிகர் ஒருவருடனான காதல்தான் இதற்கெல்லாம் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது.

அதே நேரம் தெலுங்கு மற்றும் இந்தியில் பரபரப்பாக வலம் வந்தார். கவர்ச்சியிலும் மிச்சம் வைக்காமல் பந்தி வைத்தார்.

தமிழில் ஒரு இடைவெளிக்குப் பிறகு அவர் ஒப்புக் கொண்ட படம் அஜீத்தின் வீரம். சிறுத்தை படத்தை இயக்கிய சிவா கேட்டுக் கொண்டதால் நடிக்க ஒப்புக் கொண்டார் தமன்னா.

தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலரும் தங்கள் படங்களில் நாயகி வாய்ப்பு தருவதாக அவரை அணுகி வந்தனர். இதற்கெல்லாம் ஒப்புதல் தராமல் இருந்த தமன்னா, இப்போது இரு படங்களுக்கு ஓகே சொல்லியிருக்கிறார்.

ஒன்று இயக்குநர் எம் ராஜேஷ் அடுத்து ஆர்யா - சந்தானத்தை வைத்து இயக்கும் புதிய படம். அடுத்து சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்தும் புதிய படம்!

 

கமலுடன் கைகோர்க்கும் காமெடி ஸ்பெஷலிஸ்ட் ராஜேஷ்!

கமலின் அடுத்த படமான உத்தம வில்லனுக்கு வசனம் எழுதப் போகிறவர் யார் தெரியுமா... இயக்குநர் எம் ராஜேஷ்.

பொதுவாக கமலின் காமெடி படங்களுக்கு கிரேசி மோகன்தான் ஆஸ்தான வசனகர்த்தாவாக இருந்தார்.

விஸ்வரூபம்-2' படத்திற்கு பிறகு கமல்ஹாசன், நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தம வில்லன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முதல்முறையாக இப்படத்தில் கமலுடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க காமெடிதான். கமலுக்கு காமெடி வில்லன் பாத்திரம்.

கமலுடன் கைகோர்க்கும் காமெடி ஸ்பெஷலிஸ்ட் ராஜேஷ்!

இப்படத்தில் கிரேசி மோகனுக்கு பதிலாக, காமெடி பட ஸ்பெஷலிஸ்டான இயக்குனர் எம்.ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

ராஜேஷ்-சந்தானம் கூட்டணியில் அமைந்த வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம் என்பதால், கமலுடன் சந்தானம் இணையும் இப்படத்துக்கு ராஜேஷையே வசனம் எழுத அழைத்துள்ளனர்.

கமல் நடிப்பில் காமெடி படமாக வெளிவந்து வசூலிலும் ரசிகர் மனதிலும் பெரிய இடத்தை பிடித்த ‘பம்மல் கே.சம்பந்தம்' , ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' ஆகிய படங்களைப்போல் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறும் என நம்புகிறார்கள்.

 

செல்போன் பேசினால் ரூ.150 அபராதம் போடும் குஷ்பு

நடிகை குஷ்பு டிவி சீரியல் தயாரித்து நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் செல்போனில் பேசினால் உடனடியாக 150 ரூபாய் அபராதம் விதிக்கிறாராம்.

சின்னதிரை படப்பிடிப்புத் தளங்களில் சில நடிக, நடிகைகள் செல்போனில் பேசிக்கொண்டிருப்பதால், படப்பிடிப்பு பாதிக்கப்படுகிறது. இதனால் செட்டுகளில் இயக்குநர்கள் டென்ஷனில் கொதிப்பார்கள்.

செல்போன் பேசினால் ரூ.150 அபராதம் போடும் குஷ்பு

இதை எப்படி சரி செய்வது என்று நினைத்த நிலையில் பூனைக்கு முதலில் மணி கட்டிய பெருமைக்குரியவர் நடிகை குஷ்புதானாம்.

தான் தயாரித்து நடிக்கும் தொடர்களில் யாராவது படப்பிடிப்பு நேரத்தில் செல்லில் பேசினால் உடனடியாக 150 ரூபாய் அங்கேயே வசூலிக்கப்படும் என்று அறிவித்தாராம் குஷ்பு. இதைக் கடந்த கடந்த நான்கு ஆண்டுகளாக, இன்றளவும் பின்பற்றி வருகின்றார் குஷ்பு. இதனால் குஷ்புவின் செட்டில் செல்போன் சத்தத்தையே கேட்கமுடியாத நிலை ஏற்பட்டது என்கின்றனர்.

 

காதல் செய்திகளை, கிசுகிசுக்களை ரசித்துப் படிக்கும் நடிகை

சென்னை: தன்னை பற்றி வரும் காதல் செய்திகளை டோலிவுட் நாயகர்களின் ராசியான நடிகை ரசித்து படிக்கிறாராம்.

பாய்ஸ் நடிகருக்கும் தெலுங்கின் முன்னணி நாயகிக்கும் காதல் என்று ஊரே பேசிக் கொண்டிருக்கிறது. ஏன் அவர்களுக்கு ரகசியமாக திருமணம் கூட நடந்துவிட்டது என்று செய்திகள் வந்தன. இத்தனை களேபரம் நடந்தும் அவர்கள் இருவரும் காதல் குறித்து வாய் திறக்கவில்லை.

இந்நிலையில் நடிகை படப்பிடிப்பில் ஓய்வாக இருக்கையில் தன்னை பற்றி வரும் காதல் செய்திகளை ரசித்து ரசித்து படிக்கிறாராம். அத்தகைய செய்திகளை படிக்கையில் அவர் முகத்தில் புதுப்பொலிவு ஏற்படுகிறதாம்.

இந்த இரண்டு பேரும் காதலித்துக் கொண்டு அதை எத்தனை நாட்களுக்கு மறைப்பார்கள் என்று பார்ப்போம். என்றைக்காவது அறிவிக்கத் தானே வேண்டும் என்று கோடம்பாக்கத்தில் அடிபடும் பேச்சு நடிகையின் காதுகளுக்கு சென்றுள்ளது. அதை கேட்டும் அவர் சந்தோஷம் அடைந்துள்ளாராம்.

 

300 திரையரங்குகளில் வெளியாகிறது இரண்டாம் உலகம்!

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா - அனுஷ்கா நடித்துள்ள இரண்டாம் உலகம் திரைப்படம் 300க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது.

மிகப் பெரிய பட்ஜெட்டில், ஒரு கற்பனை உலகத்தில், ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உருவாக்கப்பட்ட படம் ‘இரண்டாம் உலகம்'.

தீபாவளிக்கே வர வேண்டிய படம். தியேட்டர்கள் சரிவர கிடைக்காததால் இந்தப் படத்தை இரண்டு வாரங்கள் தள்ளி வைத்தார்கள். இப்போது திரையரங்குகளை புக் செய்யும் பணியில் பிவிபி நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

300 திரையரங்குகளில் வெளியாகிறது இரண்டாம் உலகம்!

இப்போதைக்கு தீபாவளி படங்கள் அனைத்து திரையரங்குகளிலும் ஓடிக் கொண்டிருக்கின்றன. எப்படியும் 22ம் தேதிக்கு முன்பாக 'ஆரம்பம்', 'பாண்டிய நாடு' படங்களை அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்த்துவிடுவார்கள் என்பதால் 'இரண்டாம் உலகம்' படத்துக்கு முக்கியமான திரையரங்குகள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்படாது. மேலும் நல்ல அரங்குகளில் வெளியானால்தான் இந்தப் படத்தை ரசிக்க முடியும்.

300 திரையரங்குகளில் வெளியாகிறது இரண்டாம் உலகம்!

இரண்டாம் உலகம் திரைப்படம் தமிழகத்தில் வெளியாகும் அதேநாளில்தான் ஆந்திராவிலும் ரிலீஸாகிறது. தெலுங்கில் இப்படம் 'வர்ணா' என்ற பெயரில் வெளியாகிறது.

ரசிகர்களுக்கு வித்தியாசமான படம் பார்த்த அனுபவத்தைத் தர வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தை உருவாக்கியதன் நோக்கம் என்று இயக்குநர் செல்வராகவன் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

 

என் வாழ்க்கை சர்ச்சையானது: கமல்

சென்னை: தனது முன்னாள் மனைவி சரிகா தன்னை பற்றி புத்தகம் வெளியிடுவதை கமல் ஹாஸன் தடுத்துள்ளார். தன்னுடைய வாழ்க்கை சர்ச்சைகள் நிறைந்தது என்று கமல் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாஸன் கடந்த 7ம் தேதி தனது 59வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் தனது வாழ்க்கை குறித்து புத்தகம் எழுதும் உரிமையை இரண்டு எழுத்தாளர்களுக்கு அவர் அளித்துள்ளார். ஆனால் அதே சமயம் தனக்கு நெருக்கமாக இருந்த ஒருவரை தன் வாழ்க்கை வரலாறு குறித்து புத்தகம் வெளியிட அவர் அனுமதிக்கவில்லை.

என் வாழ்க்கை சர்ச்சையானது: கமல்

கமல் ஹாஸனின் முன்னாள் மனைவி சரிகா உலக நாயகன் குறித்து புத்தகம் வெளியிட முயன்றார். ஆனால் அதை கமல் அனுமதிக்கவில்லை.

இது குறித்து கமல் தன் நெருங்கிய நண்பரிடம் பின் வருமாறு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது,

என் வாழ்க்கை சர்ச்சைகள் நிறைந்தது. அதனால் என் அனுமதி இல்லாமல் எழுதப்படுவதால் எனது மகள்கள் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

 

பத்ம விருதுகளுக்கு குடும்பத்தினர் பெயரை பரிந்துரைத்தாரா லதா மங்கேஷ்கர்?

மும்பை: மத்திய அரசு வழங்கும் பத்ம விருதுகளுக்கு தனது குடும்பத்தினர், நண்பர்கள் பெயரை பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் பரிந்துரை செய்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

ஆனால் இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் லதா. சமீப காலத்தில் லதா சர்ச்சையில் சிக்குவது இது 2வது முறையாகும்.

சில வாரங்களுக்கு முன்பு புனேவில் நடந்த நிகழ்ச்சியொன்றில், நரேந்திர மோடியை பிரதமர் இருக்கையில் அமர வைத்துப் பார்க்க விரும்புவதாக கூறியிருந்தார் லதா. இது சலசலப்பைக் கிளப்பியது.

பத்ம விருதுகளுக்கு குடும்பத்தினர் பெயரை பரிந்துரைத்தாரா லதா மங்கேஷ்கர்?

இந்த நிலையில் தற்போது இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் லதா. அதாவது பத்ம விருதுகளுக்குத் தனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் பெயரை லதா பரிந்துரைத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இதை உடனடியாக மறுத்துள்ளார் லதா. இதுகுறித்து அவர் விளக்கம் தருகையில், நான் யாரையும் பரிந்துரைக்கவில்லை. குறிப்பாக எனது குடும்பத்தினர், நண்பர்கள் யாரையும் நானாக பரிந்துரைக்கவில்லை.

சம்பந்தப்பட்ட விருது கமிட்டிதான் விருதுகளுக்குரியவர்களைப் பரிந்துரைத்து தெரிவிக்குமாறு கோரியிருந்தது. அதன்படி சில பெயர்களை நான் தெரிவித்தேன். மற்றபடி நானாக, என் சார்பில் யாரையும் பரிந்துரைக்கவில்லை என்று கூறியுள்ளார் லதா.

 

இந்திய சர்வதேச பட விழாவில் வெளியானது கமலின் விஸ்வரூபம் 2 ட்ரைலர்!

சென்னை: கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2 பட ட்ரைலர் இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஃபா)வில் வெளியானது.

கமல் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் விஸ்வரூபம் 2. சர்வதேச தீவிரவாதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் இது.

இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சர்வதேச பட விழாவில் வெளியானது கமலின் விஸ்வரூபம் 2 ட்ரைலர்!

படத்தின் அசத்தலான ட்ரைலர், கமலின் பிறந்த நாளான நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், அன்று வெளியாகவில்லை. மாறாக இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ரா அதிகாரியாக கமல் இந்தப் படத்தில் நடித்துள்ளார். அவருடன் பூஜா குமார், ஆன்ட்ரியா, சேகர் குப்தா, ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழில் கமலுடன் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தியில் ஏக்தா கபூரும், ஷோபா கபூரும் தயாரித்துள்ளனர். எம் கிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை விரைவில் வெளியாகவிருக்கிறது.

 

ஜில்லாவுக்காக மல்லுக்கு நிற்கும் விஜய்

சென்னை: ஜில்லா படத்திற்காக விஜய் சண்டை காட்சியில் நடித்து வருகிறார்.

ஜில்லா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் அறிமுக சண்டை காட்சியை படமாக்கி வருகிறார்கள். தற்போது ஜில்லா குழு செங்கல்பட்டில் பிசியாக உள்ளது.

ஜில்லாவுக்காக மல்லுக்கு நிற்கும் விஜய்

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் மேற்பார்வையில் விஜய் நடிக்கும் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த காட்சி அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்குள் படமாக்கப்பட்டு விடுமாம். சென்னையில் பாடல் காட்சி ஒன்றையும் படமாக்குகிறார்கள்.

முன்னதாக விஜய், காஜல் அகர்வால் நடித்த பாடல் காட்சி ஜப்பானில் படமாக்கப்பட்டுள்ளது. விஜய் அடுத்ததாக மதுரைக்கு சென்று அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். மதுரையில் ஜில்லா படத்திற்காக பிரமாண்ட செட் போட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.