ஐ- க்கு 17000 அல்ல.. 5000-தான்!

ஐ படம் 17000 அரங்குகளில் வெளியாகும் என்று ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் கூறி வந்தது நினைவிருக்கும்.

ஆனால் இப்போது படம் 5000-க்கும் குறைவான அரங்குகளில்தான் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.

விக்ரம், எமிஜாக்சன் ஜோடியாக நடித்த 'ஐ'படம் ரூ 180 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. ஷங்கர் இயக்கியுள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து உள்ளார்.

ஐ- க்கு 17000 அல்ல.. 5000-தான்!

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் பாடல்களை ஹாலிவுட் நடிகர் அர்னால்டை சென்னைக்கு அழைத்து வந்து வெளியிட்டனர். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வருகிறது.

('ஐ' ட்ரைலர்)

இதில் விக்ரம் உடல் எடையை கூட்டியும் குறைத்தும் மிகக் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். உடற்பயிற்சியாளர் கேரக்டரில் அவர் வருகிறார். மனிதனும், மிருகமும் கலந்த இன்னொரு கெட்டப்பிலும் தோன்றுகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் 'டப்பிங்'மற்றும் ரீ ரிக்கார்டிங் பணிகள் துவங்கின. செப்டம்பர் மாதம் இறுதியில் அனைத்து பணிகளும் நிறைவடைந்தது. பொங்கலுக்கு 'ஐ'படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 5000 தியேட்டர்களில் வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே தயாரிப்பாளர்தான் இரு மாதங்களுக்கு முன்பு ஐ படத்தை உலகெங்கும் 17000 அரங்குகளிலும், சீனாவில் மட்டும் 7000 அரங்குகளிலும் வெளியிடப் போவதாகக் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

 

விஜயகாந்த், மகனுக்காக ஊரெல்லாம் தேடிப்பிடித்த நேஹா யார் தெரியுமா?

சென்னை: விஜயகாந்த் ஊர் ஊராகத் தேடி தனது மகனுக்கு ஜோடியாக அழைத்து வந்துள்ள நேஹா ஹிங்கே ஃபெமினா மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் பட்டம் வென்றவர் ஆவார்.

விஜயகாந்த், மகனுக்காக ஊரெல்லாம் தேடிப்பிடித்த நேஹா யார் தெரியுமா?

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் நடித்து வரும் படத்தில் 2 ஹீரோயின்களாம். விஜயகாந்த் தனது மகனுக்கு ஊராக, ஊராக ஹீரோயின் தேடினார். ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை நடிக்க வைக்கப் போவதாக கூட பேச்சு அடிபட்டது. ஸ்ரீதேவி தனது மகளை தற்போதைக்கு நடிக்க வைப்பதாக இல்லை. இந்நிலையில் ஜான்விக்கு ஹீரோயினுக்கான உடல்வாகு இல்லை என்று கூறி அவரை விஜயகாந்த் அன்ட் கோ நிராகரித்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தான் விஜயகாந்த் புனே சென்று மகனுக்கு ஏற்ற ஹீரோயினை பார்த்து அழைத்து வந்துள்ளார். அவர் தான் நேஹா ஹிங்கே. 2010ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் அழகிப்பட்டம் வென்றவர்.

விஜயகாந்த், மகனுக்காக ஊரெல்லாம் தேடிப்பிடித்த நேஹா யார் தெரியுமா?

அடியாத்தி ஷம்முவ பாண்டி ஹீரோயின் முன்னாள் இந்திய அழகியா என்றால் ஆமாம் என்ற பதில் தான் கிடைக்கும். படத்தில் நேஹா தவிர தெலுங்கு நடிகையான ஷுப்ரா ஐயப்பாவும் உள்ளார்.

இங்கிட்டு நேஹா, அங்கிட்டு ஷுப்ரா கலக்குங்க பாண்டி....

 

போதையில் கார் ஓட்டி போலீசுக்கு அபராதம் கட்டிய ஜெய்

மது குடித்துவிட்டு போதையில் கார் ஓட்டிய நடிகர் ஜெய்யை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர் அபராதம் செலுத்திவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

சென்னை 28, சுப்ரமணியபுரம், ராஜா ராணி, கோவா, வாமணன், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெய். முன்னணியில் உள்ள இளம் நாயகர்களில் இவரும் ஒருவர்.

போதையில் கார் ஓட்டி போலீசுக்கு அபராதம் கட்டிய ஜெய்

சென்னையில் இரவு நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் ஜெய் நேற்று பங்கேற்றார். பின்னர் ராயப்பேட்டையில் இருந்து அடையாறு நோக்கி டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் காரில் சென்றார்.

காரை அவரே ஓட்டினார். மயிலாப்பூர் திருவள்ளூவர் சிலை அருகில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஜெய் காரையும் நிறுத்தினார்கள். காரில் இருப்பது ஜெய் என்பது தெரியாமல் அவரிடம் போதை ஆசாமிகளை கண்டு பிடிக்கும் நவீன கருவியில் ஊதச் சொன்னார்கள். அக்கருவி ஜெய் குடித்து இருப்பதாக காட்டியது.

இதையடுத்து வாகனத்தை ஓரம் கட்ட வைத்தனர். ஜெய்யை கீழே இறக்கினார்கள். போதையில் கார் ஓட்டியதற்காக அவருக்கு அபராதம் வித்தனர். அப்போது அப்பகுதியில் இருந்தவர்கள் ஜெய்யை அடையாளம் கண்டு கொண்டதும், கூட்டம் கூடியது.

பரபரப்பைத் தவிர்க்க, போலீசாரிடம் அவசர அவசரமாக அபராதம் செலுத்தி ரசீதைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.

 

வெளியான 24 மணி நேரத்திற்குள் 10 லட்சம் முறை பார்க்கப்பட்ட 'ஐ' டிரைலர்!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள ஐ திரைப்படத்தின் டிரைலர் 24 மணி நேரத்திற்குள் பத்து லட்சத்திற்கும் அதிகமுறை பார்க்கப்பட்டுள்ளது.

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் படைப்பான ஐ திரைப்படத்தில் விக்ரம், எமி ஜாக்ஷன் போன்ற முன்னணி கலைஞர்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ள இந்த படம், பொங்கலுக்கு படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியான 24 மணி நேரத்திற்குள் 10 லட்சம் முறை பார்க்கப்பட்ட 'ஐ' டிரைலர்!

இப்படத்தின் டீசர் சில மாதங்கள் முன்பு வெளியாகி சக்கைபோடு போட்ட நிலையில் டிரைலர் நேற்றிரவு வெளியானது. வெளியாகி 24 மணி நேரத்திற்குள்ளாகவே 10 லட்சம் பேர் யூடியூப்பில் அதை கண்டு ரசித்துள்ளனர். இந்த எண்ணிக்கை மளமளவென அதிகரித்தபடி உள்ளது.

காட்சியமைப்பு, பின்னணி இசை போன்றவை மிரட்டும் வகையில் உள்ளதால் ஒருமுறை டிரைலரை பார்த்தவர்களும் மீண்டும் பார்க்க தூண்டும் வகையில் ஐ அமைந்துள்ளது.

 

அது என்ன விஜய் ஆண்டனி படத்தின் பெயர் இந்தியா-பாகிஸ்தான்?

சென்னை: காதலர்களுக்கு இடையேயான ஈகோ போராட்டம் பற்றிய படமாம் இந்தியா பாகிஸ்தான்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நான் படம் மூலம் ஹீரோவானார். அவர் இதுவரை நான், சலீம் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களுக்கும் அவர் தான் இசையமைத்தார்.

அது என்ன விஜய் ஆண்டனி படத்தின் பெயர் இந்தியா-பாகிஸ்தான்?

இந்நிலையில் அவர் தற்போது ஆனந்த் இயக்கத்தில் நடித்து வரும் படம் இந்தியா பாகிஸ்தான். அது என்ன தலைப்பு இந்தியா பாகிஸ்தான் என்று நினைக்கிறீர்களா?. காரணத்தோடு தான் அப்படி பெயர் வைத்துள்ளார்கள்.

படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக தெலுங்கு, கன்னட படங்களில் நடிக்கும் சுஷ்மா நடித்து வருகிறார். காதலர்களான விஜய்க்கும், சுஷ்மாவுக்கும் இடையேயான ஈகோ பிரச்சனை மற்றும் அதன் தீர்வு தான் கதையாம். ஹீரோவும், ஹீரோயினும் எப்பொழுது பார்த்தாலும் மோதிக் கொள்வதாலேயே படத்திற்கு இந்தியா பாகிஸ்தான் என்று பெயர் வைத்துள்ளனர்.

விஜய் ஆண்டனியின் மனைவி தயாரிக்கும் இந்த படத்திற்கு தீனா தேவராஜன் இசையமைக்கிறார்.

 

இட்லி, தோசை, வடை, பொங்கலை கொண்டாங்கப்பா: டயட்டை மறந்த சமந்தா

சென்னை: நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்னை வந்த சமந்தா டயட்டை மறந்து சாப்பிடத் துவங்கிவிட்டார்.

தெலுங்கு திரை உலகின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான சமந்தா கத்தி படம் மூலம் முதன்முதலாக தமிழில் வெற்றி கண்டுள்ளார். தற்போது அவர் விக்ரம் நடிக்கும் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார். மேலும் இன்னும் பெயர் வைக்காத தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இட்லி, தோசை, வடையை கொண்டாங்கய்யா: டயட்டை மறந்த சமந்தா

இந்நிலையில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வியாழக்கிழமை மாலை ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். தான் வளர்ந்த ஊருக்கு வந்ததும் அவர் உணவு கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இட்லி, தோசை, வடையை கொண்டாங்கய்யா: டயட்டை மறந்த சமந்தா

கடுமையான உணவுக் கட்டுப்பாடு ஆகிவிட்டது. சென்னை என்றால் கட்டுப்பாடு இல்லை. தோசை, இட்லி, வடை, பொங்கலை கொண்டு வாங்க. முடியும் வரை சாப்பிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

கலாசாரத்தை பிரதிபலிக்கும் படங்கள் உருவாக வேண்டும்- இயக்குநர் மகேந்திரன்

சென்னை: நம் மண்ணின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் படங்கள் இந்திய சினிமாக்களில் உருவாக வேண்டும் என திரைப்பட இயக்குநர் மகேந்திரன் வலியுறுத்தினார்.

12-ஆவது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த திரைப்பட விழா வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கலாசாரத்தை பிரதிபலிக்கும் படங்கள் உருவாக வேண்டும்- இயக்குநர் மகேந்திரன்

தொடக்க நிகழ்ச்சியில், தமிழக செய்தித் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, இயக்குநர் மகேந்திரன், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விழாவில் இயக்குநர் மகேந்திரன் பேசியதாவது:

உலக சினிமாக்கள் வேறு, இந்திய சினிமா உலகம் வேறு. உலக சினிமாக்கள் தெரிந்த அளவுக்கு இந்திய சினிமா உலகம் பற்றி எனக்குத் தெரியாது. ஒட்டுமொத்த இந்திய சினிமா இப்படித்தான் இருக்குமா என்று சொல்ல முடியாத அளவுக்கு சில பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.

கலாசாரத்தை பிரதிபலிக்கும் படங்கள் உருவாக வேண்டும்- இயக்குநர் மகேந்திரன்

இயக்குநர் சத்யஜித்ரே படங்களைப் பின்பற்றி படங்களை எடுக்க பலர் முன்வந்தாலும் கூட பரிபூரணமாக இந்திய சினிமா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கான அடையாளம் இல்லை. இன்றைக்கு வரைக்கும் நாம் டூயட்தான் பாடிக்கொண்டு இருக்கிறோம். இதை யார் கேட்பது? சினிமா என்றால் டூயட் இருக்க வேண்டுமா என்ன?

அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி நம்மிடையே அபார திறமைமிக்க இயக்குநர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை திரும்பத் திரும்ப டூயட்டுகளுக்கும் குழு நடனங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால் என்ன லாபம் அடைந்து விட்டோம் என்ற சந்தேகத்துக்கு நான் வருவது உண்டு.

இன்றைக்கு வரைக்கும் உலக சினிமாக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். சமீபத்தில் கூட துருக்கி நாட்டில் உருவான "டவர் வாட்ச்' என்ற படம் என்னை பிரமிக்க வைத்தது. நம்முடைய சினிமா சிந்தனையை, ஞானத்தை அதன் மேன்மையை பிரதிபலிக்க உலக நாடுகள் தயாரிக்கும் பல படங்களைப் பார்க்க வேண்டியது அவசியம்.

கலாசாரத்தை பிரதிபலிக்கும் படங்கள் உருவாக வேண்டும்- இயக்குநர் மகேந்திரன்

அதற்கு முன்பாக நாம் நமது சமூகத்தை ஆழமாகப் பார்க்க வேண்டும். நம்மைச் சுற்றிப் பார்க்க வேண்டும். உலக சினிமாக்கள் எல்லாம் அந்தந்த மண்ணின் கலாசார மகத்துவத்தை எடுத்துரைக்கின்றன. அதேபோல, நம் நாட்டின் கலாசாரத்தையும், அதன் மேன்மையையும் எடுத்துக்காட்டும் விதத்தில் இந்திய சினிமாக்கள் உருவாக வேண்டும். அது நம்மால் முடியும். ஆனால் அதைச் செய்ய மறுக்கிறோம்.

இந்த சர்வதேசத் திரைப்பட விழா பல சிரமங்களைக் கடந்து நடந்து கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி. இதை முன்னெடுத்துச் செல்லும் அனைவருக்கும் நன்றி. சினிமா உலகம் பற்றி தெரிந்து கொள்ளாதது எனது பலம்; அதுவே எனது பலவீனமும்கூட. சர்வதேச திரைப்பட விழாக்கள் சென்னையில் மட்டுமே நடைபெறுகின்றன. சென்னை ரசிகர்களின் சினிமா தாகத்தை மட்டுமே தீர்த்து வைக்கின்றன. இது போன்ற விழாக்கள் தமிழகத்தின் பிற மாவட்டங்களையும் சென்று சேர வேண்டும். அங்குள்ள ரசிகர்களுக்கும் பயனளிக்க வேண்டும்," என்றார் இயக்குநர் மகேந்திரன்.

தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் மானியம்:

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், "இந்தோ சினி அப்ரிசியேஷசன்' அமைப்பு தமிழக அரசுடன் இணைந்து சென்னை சர்வதேச திரைப்பட விழாக்களை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதற்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெற உள்ள 12-ஆவது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் மானியம் வழங்கப்படவுள்ளது," என்றார்.

இந்த விழாவில் 50 நாடுகளைச் சேர்ந்த 170-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படவுள்ளன.

 

சென்னையில் 12வது சர்வதேச திரைப்பட விழா- கேன்ஸ், வெனிஸை மிஞ்சும் என்று அமைச்சர் புகழாரம்

சென்னை: சென்னை உட்லண்ட் ஹோட்டலில் 12 ஆவது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.

இவ்விழாவினை துவங்கி வைத்த செய்தி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியபோது, ‘'பொழுது போக்குகளின் ராணியாகவும், புதுமைப்படைப்புகளின் திலகமாகவும், புரட்சிகளுக்கு வித்திடும் களமாகவும், விளங்குவது திரைப்படம்.

சென்னையில் 12வது சர்வதேச திரைப்பட விழா- கேன்ஸ், வெனிஸை மிஞ்சும் என்று அமைச்சர் புகழாரம்

புகழின் உச்சிக்கு சிலரைக் கொண்டு செல்லும் ஏணியாகவும், அதேநேரம் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை வாழவைக்கும் வாழ்வாதாரமாகி, அவர்களின் வாழ்க்கைக கடலை கடக்க உதவும் தோணியாகவும், திகழ்வது திரைப்படத் துறை.

தமிழ்த் திரைப்பட படைப்பாளிகளும், வல்லுநர்களும், திரைத்துறையின் பல பிரிவுகளிலும், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களும், தலைசிறந்த உலகத் திரைப்படங்களை இங்கிருந்தே கண்டு, அதன் சிறப்புகளை உள்வாங்கி, தமிழ்த் திரையுலகை மேம்படுத்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில்தான், ஆண்டுதோறும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்திட அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்.

மேலும், சர்வதேச திரைப்பட விழா நடத்த, 2011ஆம் ஆண்டில் 25 லட்சம் ரூபாயும், 2012ஆம் ஆண்டில் 50 லட்சம் ரூபாயும், 2013ஆம் ஆண்டில் 50 லட்சம் ரூபாயும், அன்றையதினம் முதல்வராக இருந்த ஜெயலலிதா மானியமாக வழங்கினார்.

அதேபோல் இந்த ஆண்டும், அதாவது 2014ஆம் ஆண்டு டிசம்பர் 18 முதல் 25 வரை சர்வதேச திரைப்பட விழா நடத்த அரசு ரூபாய் 50 லட்சம் மானியமாக வழங்கியுள்ளது.

இவ்வாண்டு நடைபெறும், சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பிரான்ஸ், பல்கேரியா, உறங்கேரி, ஜெர்மனி, ஈரான்,ஆஸ்திரேலியா, பிரேசில், போலந்து முதலான 45 நாடுகளை சேர்ந்த 171 படங்கள் திரையிடப்பட உள்ளன.

இதில், கேன்ஸ், வெனிஸ், பெர்லின் திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுபெற்ற படங்களும் அடங்கும். மேலும் 17 தமிழ்த் திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன.

இந்த 12 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் பயின்று வரும் மாணவர்களால் எடுக்கப்பட்ட ஐந்து படங்கள் திரையிடப்பட உள்ளன. அதில் முதலாவதாக தேர்வு செய்யப்படும் படத்திற்கு "அம்மா விருது" வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.

உலக திரைப்பட வல்லுநர்களால் "கேன்ஸ் திரைப்பட விழா" என்றும் "வெனிஸ் திரைப்பட விழா" என்றும், "டொரண்டோ திரைப்பட விழா" என்றும் எவ்வாறு பேசப்படுகிறதோ, அதேபோல, சென்னை சர்வதேச திரைப்பட விழாவும் உலக அளவில் புகழ்ந்து பேசப்படும் என்பதை இங்கே உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

சமைக்கின்ற உணவின் சுவை எதில் இருக்கிறது என்றால், அதை சாப்பிடுவதில்தான் இருக்கிறது. அதேபோல, தயாரிக்கப்படும் திரைப்படத்தின் சிறப்பு எதில் இருக்கிறது என்றால் அந்தப் படத்தை மக்கள் பார்ப்பதிலே இருக்கின்றது.

ஆகவே, மக்கள் பார்க்கின்ற படங்களை எடுக்க வேண்டும் பார்க்கக்கூடிய படங்களை எடுக்க வேண்டும். மக்களுக்கு பயன் அளிக்கும் படங்களை எடுக்க வேண்டும். இன்று தொடங்கி 25 ஆம் தேதி வரை நடக்கும் 12 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா மிகவும்வெற்றிகரமாக நடந்திட என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்''என்று தெரிவித்தார்.

இவ்விழாவில், திரைப்பட இயக்குநர் மகேந்திரன், திரைப்பட நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார், திரைப்படத் தயாரிப்பாளர்கள் ராஜ்குமார், வாசுதேவன், பிரசாத், சென்னை சர்வதேச திரைப்பட விழாக்குழுவின் தலைவர் கண்ணா, சென்னை மாக்ஸ்முல்லர் பவன் இயக்குநர் ஷிப்பர்ட் மற்றும் திரை உலக பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

 

ஆந்திரா, தெலுங்கானா... வருகிறது ஆமீர்கானின் பிகே- தாக்கு பிடிக்குமா லிங்கா!

ஹைதராபாத்: எதிர்மறை விமர்சனங்களுக்கு நடுவிலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரோபோ (எந்திரன்) படத்தின் முதல் வார வசூல் சாதனையை முறியடித்தது ரஜினிகாந்தின் லிங்கா.

முதல் வாரத்தில் மொத்தம் ரூ 20.50 கோடியைக் குவித்துள்ளது லிங்கா. 2010-ல் வெளியான எந்திரன் 15 கோடியை ஈட்டியிருந்தது.

ஆந்திரா, தெலுங்கானா... வருகிறது ஆமீர்கானின் பிகே- தாக்கு பிடிக்குமா லிங்கா!

இதுவரை ஆந்திராவில் வெளியான எந்த டப்பிங் படமும் இந்த அளவு வசூலைக் குவித்ததில்லை.

டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்த நாளில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 1000-க்கும் அதிகமான அரங்குகளில் லிங்கா தெலுங்கு பதிப்பு வெளியானது. ஒரு நேரடி தெலுங்குப் படத்துக்குரிய பிரமாண்டத்துடன் வெளியான இந்தப் படத்துக்கு முதல் மூன்று நாட்களும் ஆந்திராவில் நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்தன.

இந்த மூன்று நாட்களில் மட்டும் ரூ 14.01 கோடியை லிங்கா வசூலித்து புதிய சாதனைப் படைத்தது.

அடுத்து வந்த வார நாட்களில் படத்துக்கு எதிராக வந்த விமர்சனங்கள் மற்றும் வாய் வழி பிரச்சாரம் காரணமாக ஓரளவு கூட்டம் குறைந்தது. ஆனாலும் சராசரியாக 50 சதவீத கூட்டத்துடன் பெருமளவு திரையரங்குகளில் இந்தப் படம் ஓடியது. வார நாட்களில் மட்டும் லிங்கா ரூ 6.50 கோடியை ஈட்டியுள்ளது.

முதல் மூன்று நாள் வசூல் மற்றும் அடுத்து வந்த நான்கு நாட்கள் வசூல் இரண்டும் சேர்த்து ரூ 20.50 கோடியை லிங்கா குவித்துள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் முன்பு வெளியான ரஜினியின் எந்திரன் வசூல்தான் முதலிடத்தில் இருந்தது. இப்போது அதனை லிங்கா முறியடித்துள்ளது.

அதே நேரம், ரோபோ மொத்தம் ரூ 45 கோடியைக் குவித்தது. அந்தத் தொகையை லிங்கா எட்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் இந்த வாரம் ஆமீர்கானின் பிகே அதிக அரங்குகளில் வெளியாகிறது.

 

ஐ படத்துக்கு யுஏ... ரிவைசிங் கமிட்டிக்குப் போகிறது!

ஐ படத்துக்கு யுஏ... ரிவைசிங் கமிட்டிக்குப் போகிறது!

விக்ரம் - எமி ஜாக்சன் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஐ படம் வரும் ஜனவரி 9-ம் தேதியன்று வெளியாகிறது. படத்தின் ட்ரைலர் நேற்று இரவு வெளியிடப்பட்டது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் படத்தை நேற்று சென்னை மண்டல தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். படத்தைப் பார்த்த குழுவினர் படத்துக்கு யு ஏ சான்று அளித்துள்ளனர். படத்தில் வன்முறை மற்றும் கோரமான காட்சிகள் உள்ளதால் இப்படி சான்றளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐ படத்துக்கு யுஏ... ரிவைசிங் கமிட்டிக்குப் போகிறது!

தமிழக அரசு விதிப்படி யுஏ சான்று பெற்ற படங்களுக்கு வரி விலக்கு தரப்பட மாட்டாது. எனவே, படத்தை ரிவைசிங் கமிட்டிக்குக் கொண்டு போய், யு சான்று பெற தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.

 

சூர்யாவின் மாஸ் மார்ச் 27ல் ரிலீஸ்?

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் மாஸ் படம் மார்ச் மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மங்காத்தா' படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரியாணி என்ற தோல்வியை கொடுத்த வெங்கட் பிரபு இயக்கிவரும் படம் ‘மாஸ்'. அஞ்சான் படத்தில் தோல்வியாலும் கடுமையான விமர்சனங்களினாலும் சரிந்துள்ள தனது இமேஜை தூக்கி நிறுத்த மாஸ் படத்தில் மாஸ் ஆக நடித்துள்ளாராம் சூர்யா.

சூர்யாவின் மாஸ் மார்ச் 27ல் ரிலீஸ்?

வெங்கட்பிரபுவுக்கும், சூர்யாவிற்கும் இது முக்கியமான படம் என்பதால் இருவரின் உழைப்புமே இதில் அதிகமாக உள்ளதால்

இதில் சூர்யா நாயகனாக நடிக்க, நயன்தாரா, பிரனீதா ஆகியோர் நாயகியாக நடித்துள்ளனர்.

சூர்யாவின் மாஸ் மார்ச் 27ல் ரிலீஸ்?

இவர்களுடன் கருணாஸ், ஸ்ரீமன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்து வருகிறார். தற்போது இவர்கள் கூட்டணியில் ரியாஸ்கானும் இணைந்துள்ளார்.

மாஸ் படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்

மாஸ் படம் ஆவிகள் கதையம்சம் கொண்டது என அனைவரும் கூறி வருகின்றனர். படத்தின் சில காட்சிகள் பல்கேரியாவில் படமாக்கப்பட்டுள்ளன.

மாஸ்படம் வரும் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல்-14 தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மார்ச் 27ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாஸ் படத்திற்குப் பின்னர் சூர்யா. விக்ரம் குமார் இயக்கத்தில் '24′ என்ற படத்தில் நடிக்க உள்ளார். 24 படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.

 

தேவ்ஷியின் பிகினி சும்மா சூட்ட கிளப்புதாமே?

இணையதளங்களில் செய்திகள் அமைதியாக இருந்தால் சிலர் அதை சும்மா விடுவதில்லை. எதையாவது பரபரப்பாக சொல்லி பட்டையை கிளப்புவார்கள்.

வெள்ளிகிழமையும் அதுவுமா எதையுமே காணோமே என்று நினைத்தால் வைரலாக பரவுகிறது கவர்ச்சி தந்தூரி தேவ்ஷியின் தேவ்ஷியின் பிகினி சும்மா சூட்ட கிளப்புதாமே?  

சினிமாவில் நடிக்காவிட்டாலும் எதையாவது ஏடாகூடமாக எடுத்து அதை இணையப்பக்கத்தில் போட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார்கள் பூனம்பாண்டே மாதிரியான ஆட்கள்.

இந்த வரிசையில் இப்போது இணைந்துள்ளார் நடிகை தேவ்ஷி. சும்மாவே இவரை ஜீனத் அமன் ரேஞ்சுக்கு எழுதி வருகின்றனர். இப்போது ஒரு படத்திற்கு பிகினியில் படமெடுத்து அதை உலாவ விட்டுள்ளார். அதுதான் இப்போது வைரலாக பரவி வருகிறதாம்.

அதனால் குஷியாக உள்ளாராம் தேவ்ஷி கந்தூரி.

தாஜ், சார்ஜ் ஷீட் படங்களில் கவர்ச்சி கொடியை பறக்கவிட்ட இந்த கந்தூரி அடுத்த வரும் படங்களிலும் கன்னா பின்னாவென்று கவர்ச்சி காட்டுவேன் என்று இந்த படங்கள் மூலம் சொல்லாமல் சொல்கிறார்.


 

அஜீத்தின் என்னை அறிந்தால் படக் கதை என்னுடையது.. கிளம்பியது அடுத்த கூட்டம்!

எந்தப் பெரிய படமாக இருந்தாலும் பரவாயில்லை. கதை என்னுடையது என்று ஒரு கல்லை விட்டெறியலாம்... வந்தவரை லாபம்.. போனா கல்லுமட்டும்தானே என நினைப்புடன் சில சுமார் மூஞ்சி குமார்கள் தீயா வேலை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இவர்களில் உண்மையாகவே கதையைப் பறிகொடுத்த ஒன்றிரண்டு பேருக்கு இது பொருந்தாது. ஆனால் மற்றவர்கள் பக்கா ப்ளாக்மெயிலர்கள். இவர்களின் ஒரே நோக்கம் பணம் பறிப்பது மட்டும்தான்.

அஜீத்தின் என்னை அறிந்தால் படக் கதை என்னுடையது.. கிளம்பியது அடுத்த கூட்டம்!

முன்பெல்லாம் எப்போதோ ஒன்றிரண்டு குரல்கள்தான் இப்படி கேட்டு வந்தன. இப்போதோ, எந்தப் படம் வந்தாலும் கதைத் திருட்டு பஞ்சாயத்தைக் கூட்டிவிடுகிறார்கள்.

கமல், விக்ரம், விஜய், ஷங்கர் என டாப் கலைஞர்களின் படங்களைக் குறிவைத்து இந்த கதை திருட்டு புகார்களைக் கூறி வந்தவர்கள், இந்த முறை ரஜினி படத்தையும் விட்டு வைக்கவில்லை. லிங்கா மீது இரு வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. ரூ 5 கோடிக்கு உறுதி கொடுத்த பிறகுதான் படத்தையே ரிலீஸ் செய்தார்கள். இத்தனைக்கும் வழக்குப் போட்டவர் சொன்ன கதைக்கும் லிங்கா கதைக்கும் இம்மி கூட தொடர்பில்லை என்று தெரிந்துவிட்டது.

இப்போது அடுத்த கதைத் திருட்டுப் புகாருக்கு காலைப் பிறாண்ட ஆரம்பித்துள்ளார் ஒரு உதவி இயக்குநர். கவுதம் மேனனின் உதவியாளரிடம் தான் சொன்ன கதையைத்தான் அஜீத்தை வைத்து என்னை அறிந்தால் என எடுத்துள்ளதாகக் கேள்விப்படுவதாகவும், இது தொடர்பாக வழக்கு தொடரப் போவதாகவும் அவர் துள்ள ஆரம்பித்துள்ளார் (ஒரே ஹாலிவுட் பட டிவிடியை நிறைய பேர் பார்த்துவிடுவதால் வரும் கோளாறாக இருக்குமோ!).

இவரை நீதிமன்றம் வரை ஆட விடுவார்களா.. கோடம்பாக்கத்துக்குள்ளேயே அடக்கி வைக்கப் போகிறார்களா என்பது, சமீபத்தில் இந்த மாதிரி வழக்குகளுக்கு எதிராக முழங்கிய நடிகர் சங்க தலைகள் சரத்குமார், ராதாரவிக்கே வெளிச்சம்!