'வாம்மா வா... வந்து ஜோதில ஐக்கியமாகு!'- ஹன்சிகாவை வம்பிழுக்கும் பாண்டிராஜ்

நடக்கவே நடக்காதுன்னு எல்லாரும் நெனச்ச நயன்தாரா - சிம்பு கூட்டணியை வெற்றிகரமா போட்டாச்சு. அடுத்து இந்த கூட்டணியில ஹன்சிகாவை சேர்த்தா.. ? பரபரப்பு பிச்சுக்கும்ல? இப்படி கணக்குப் போட்டது பக்கா கமர்ஷியல் ஆகிவிட்ட இயக்குநர் பாண்டிராஜ் மனசு...

அடுத்து...

'வாம்மா ஹன்சி வா... நீயும் வந்து ஜோதில ஐக்கியமாகு கூட்டணி கொடி கட்டிப் பறக்கும்' என அழைப்பு அனுப்பியுள்ளார், இது நம்ம ஆளு படத்துக்காக.

சிம்புவும் ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக பகிரங்கமாக அறிவித்ததும், அதைத் தொடர்ந்து இருவரும் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்ததும் நினைவிருக்கலாம்.

'வாம்மா வா... வந்து ஜோதில ஐக்கியமாகு!'- ஹன்சிகாவை வம்பிழுக்கும் பாண்டிராஜ்

அடுத்த ஒரு வாரத்திலேயே இருவரும் பிணங்கிக் கொண்டார்கள்... பாண்டிராஜ் படத்தில் சிம்புவுடன் நயன்தாரா ஜோடி சேர்வது உறுதியானதும்.

இந்த நிலையில்தான், ஏற்கெனவே தன் படத்துக்கு கிடைத்துள்ள பப்ளிசிட்டியை டபுளாக்கும் யோசனையில் சிம்பு - நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்க ஹன்சிகாவுக்கு பாண்டிராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

படத்தின் கதைப்படி சிம்பு ஒரு பெண்ணை காதலிப்பார். அது தோல்வியில் முடியும், அதன் பிறகு நயன்தாராவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். திருமணத்துக்கு ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்குள் எப்படி காதல் மலர்கிறது என்பதுதான் கதை.

இதில் சிம்புவின் காதலி கேரக்டரில் நடிக்க தான் ஹன்சிகாவை, அழைத்துள்ளதாக பாண்டிராஜே தெரிவித்துள்ளார்.

'இதெல்லாம் நல்லதுக்கில்ல.. பயலுங்க நசுங்கின சொம்பாக்கிடுவாங்க... பாத்து நடந்துக்கோ' என மகளை எச்சரித்துள்ளாராம், சிம்புவின் நிஜ வில்லியான மோனா மோத்வானி... அதாவது ஹன்சிகாவின் அம்மா!

 

மக்களுக்காகப் படமெடுத்தால் மானநஷ்ட வழக்கு போடுகிறார்கள்! - புது இயக்குநர் குமுறல்

'மக்களுக்காகப் படமெடுத்தால் மானநஷ்ட வழக்கு போடுகிறார்கள்' என்று படவிழாவில் புலம்பினார் புதிய இயக்குநர் மனுக் கண்ணன்.

மனுஸ்ரீபிலிம் இண்டர் நேஷனல் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மனுக் கண்ணன் இயக்கியுள்ள படம் 'அங்குசம்'.

தகவல் உரிமைச் சட்டம் பற்றிய பின்னணியில் உருவாகியுள்ள கதை இது.

மக்களுக்காகப் படமெடுத்தால் மானநஷ்ட வழக்கு போடுகிறார்கள்!  - புது இயக்குநர் குமுறல்

இப்படத்தின் பத்திரிகை, ஊடகங்களின் சந்திப்பு ஆர்கேவி ஸ்டுடியோவில் பேசிய மனுக்கண்ணன் கூறுகையில், "இன்று இந்த நிகழ்ச்சிக்கு நான் தாமதமாக வந்ததற்குக் காரணம் இந்தப்படம் தொடர்பான வழக்கிற்காக நீதிமன்றம் சென்று வந்ததே.

இந்தப்படம் RTI எனப்படும் தகவல் உரிமைச்சட்டம்( RIGHT TO INFORMATION ) பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் சரியான படம். இதற்காக பல தடைகளை எதிர் கொண்டு வருகிறேன்.

இது ஒரு நியாயமானபடம். இந்த தகவல் உரிமைச்சட்டம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் தேவையான சட்டம். ஆனால் மக்கள் அதுபற்றிய விழிப்பில்லாமல் இருக்கின்றனர்.

மக்களுக்காகப் படமெடுத்தால் மான நஷ்ட வழக்கு போடுகிறார்கள். முதல்வர் பெயருக்கு களங்கம் செய்ததாகஎன் மீது போடப்பட்டுள்ள வழக்கு போலியானது. அது தவறான வழக்குப் பதிவாகும்.. ஒன்று மட்டும் புரிகிறது அரசு வழக்கறிஞருக்குத் தமிழ் தெரியவில்லை.

நான் முதல்வர் பற்றி படத்தில் உயர்வாகத்தான் காட்டியுள்ளேன். தவறாக எதையும் சொல்ல வில்லை. இதை 20 முறை படம் பார்த்த பலரும் தமிழக அரசின் படங்களுக்கான தேர்வுக்குழுவிலுள்ள சங்கர் கணேஷ் உள்பட அனைவரும் ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள்.

என் மனைவி நான் சினிமா டைரக்டர் ஆனதற்குத் திட்டுகிறார். 'இன்ஜினியராக இருந்தீர்கள் பெருமையாக இருந்தது. மேனேஜராக இருந்தீர்கள் பெருமையாக இருந்தது. டைரக்டர் என்பது கேவலமாக இருக்கிறது.'என்று திட்டுகிறார்.
.
இந்தப் படம் வெற்றியோ தோல்வியோ, நான் கவலைப்பட மாட்டேன். மீண்டும் வெளிநாடு செல்வேன். சம்பாதித்து மறுபடியும் வந்து மக்கள் படம் எடுப்பேன்," என்றார்.

 

சம்பளமே வாங்காமல் தனுசுடன் நடனமாடிய சிவகார்த்திக்கேயன்

சென்னை: தனுஷ் நடிக்கும் படத்தில் சம்பளமே வாங்காமல் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளாராம் சிவகார்த்திக்கேயன்.

சிவகார்த்திகேயன் நடித்து சூப்பர் ஹிட்டான படம் எதிர் நீச்சல் இந்த படத்தை தனுஷ் தயாரித்தார். எதிர்நீச்சல் படத்தில் தனுஷ் மற்றும் நயன்தாரா ஒரு பாடலில் குத்தாட்டம் போட்டு கலக்கியிருப்பார்கள்.

சம்பளமே வாங்காமல் தனுசுடன் நடனமாடிய சிவகார்த்திக்கேயன்

தற்போது அதற்கு நன்றிக்கடனாக தனுஷ் நடிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறாராம். தனுஷ், அமலாபால் நடிக்கும் இந்த படத்தை தனுஷ் தயாரிக்கின்றார்.

இந்த படத்தில் அனிருத் இசையமைத்த ஒரு பாடலுக்கு சிவகார்த்திகேயன் நடனம் ஆடியுள்ளாராம். இந்த பாடலுக்கு தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ஆகிய மூவருமே நடனம் ஆடி கலக்கியுள்ளனராம். இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு பத்து நாட்கள் நடைபெற்றது.

இந்த பாடலுக்கு நடனம் ஆட அனிருத், சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் சம்பளமே பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடனம் ஆடியுள்ளதால் இந்த பாடல் சிறப்பாக வந்துள்ளதாக நடன இயக்குனர் கூறியுள்ளார். இந்த படத்தின் பாடல்கள் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகிறது.

 

நல்ல கதை இருந்தா போதுங்க.. நான் சும்மாவே பாட்டெழுத ரெடி! - சினேகன்

சென்னை: நல்ல கதையோடு வருபவர்களுக்கு நான் இலவசமாகக் கூட பாட்டெழுத தயார் என்று இயக்குநர் சினேகன் கூறினார்.

முக்தா என்டர்டெயின்ட் பிரைவேட் லிட் நிறுவனம் சார்பாக முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ஆர்.கோவிந்த், புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி. பிலிம்ஸ் பிரைவேட் லிட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘சிவப்பு'.

இப்படத்தை சத்ய சிவா இயக்குகிறார். இதற்கு முன் அவர் கழுகு படத்தை இயக்கினார். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார்.

நல்ல கதை இருந்தா போதுங்க.. நான் சும்மாவே பாட்டெழுத ரெடி! - சினேகன்

இப்படத்தில், நவீன்சந்திரா கதாநாயகனாகவும், ரூபா மஞ்சரி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரண், தம்பி ராமையா, சோனா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் முக்தா சீனிவாசன், கேயார், சிவா, நடிகர்கள் சிவகுமார், சரத்குமார், ராஜ்கிரண் இயக்குனர்கள் சமுத்திரக்கனி, ஜீவா சங்கர், ஜே.எஸ்.நந்தினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் பேசிய சரத்குமார், "இயக்குனரை கண்டிப்பாக பாராட்டியே தீரவேண்டும். மிகவும் துணிச்சலோடு இப்படத்தை இயக்கியிருக்கிறார்," என்று நம்புகிறேன். டிரைலரில் ராஜ்கிரண் பேசும் வசனமான 'இலங்கை தமிழர்களுக்கு எல்லோரும் இணைந்து ஆதரவு கொடுப்போம், இல்லையென்றால், விட்டுவிடுவோம். அதை விடுத்து அவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்,' வசனம் உண்மையிலேயே சிந்திக்க வேண்டியது. இன்றைய காலக்கட்டத்தில் நடக்கக்கூடியது இதுதான். இந்த படம் ஒரு சிறந்த படமாக இருக்கும் என்பதற்கு இதுவே சான்று," என்றார்.

பாடல் எழுதிய சினேகன் பேசுகையில், நல்ல கதைக்களம் கொண்ட இந்த படத்திற்கு பாடல் எழுத வைத்ததற்கு தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப் படத்தின் பாடல்கள் எதார்த்தனமான காட்சிகளை வைத்து படமாக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் சொல்லக்கூடிய படமாகவும் இப்படம் அமைந்துள்ளது. இம்மாதிரியான படங்களை இயக்குனர்கள் எங்களிடம் கொண்டு வந்தால் இலவசமாகக் கூட பாடல்கள் எழுத தயாராக இருக்கிறோம்," என்றார்.

 

ஏப்ரல் 11-ம் தேதி கோச்சடையான் வெளியீடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஏப்ரல் 11-ம் தேதி கோச்சடையான் வெளியீடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு  

உலக அளவில் அவதார், டின்டின் படங்களுக்குப் பிறகு போட்டோரியலிஸ்டிக் பர்பார்மென்ஸ் கேப்சர் டெக்னாலஜி முறையில் தயாராகும் மூன்றாவது படம் கோச்சடையான். இந்தியாவில் இந்த தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் படம் இதுவே.

நன்மைக்கும் தீமைக்கும் இடையில் நடக்கும் பிரமாண்ட யுத்தமான கோச்சடையானில் இந்தியாவின் மெகா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தீபிகா படுகோன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சரத்குமார், ஆதி, நாசர், ஷோபனா, ருக்மிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆஸ்கர், கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகள் வென்ற ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தை வெளியிடுவது குறித்து ஈராஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் சுனில் லுல்லா கூறுகையில், "சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையானை வெளியிடுவதில் ஈராஸ் பெருமை கொள்கிறது. இந்தப் படம் உலக சினிமாவில் புதிய சாதனை படைக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழ், இந்தி, தெலுங்கு, போஜ்புரி, மராத்தி உள்பட 10 மொழிகளில் கோச்சடையான்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தமிழ், இந்தி, தெலுங்கு, போஜ்புரி, மராத்தி உள்பட 10 மொழிகளில் கோச்சடையான்!  

ரஜினி இரு வேடங்களில் அவர் மகள் சௌந்தர்யா இயக்கியுள்ள கோச்சடையான் படம் எப்போது வரும் என ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருந்தனர். ரஜினி ரசிகர்கள் என்றில்லாமல், பொதுவாக சினிமா ரசிகர்களே ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம் என்றால் அது கோச்சடையான்தான்.

இன்று படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி ஏப்ரல் 11, 2014 என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, போஜ்புரி, மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, ஜப்பானிய மற்றும் ப்ரெஞ்சு மொழிகளில் வெளியாகிறது. ஆங்கிலத்தில் நேரடியாக இந்தப் படம் வெளியாகிறது. தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் ரஜினியே டப்பிங் பேசியுள்ளார். ஜப்பானிய மொழியில் அவர் முதலில் டப் செய்வதாக இருந்து, பின்னர் வேறு நபர் மூலம் டப் செய்யப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் சர்வதேச அளவில் தனியாக வெளியிடவும் ஈராஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

 

இந்திய சினிமா 100 கொண்டாட்டத்தின் அடுத்த கட்டம் கோச்சடையான் - சௌந்தர்யா

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையானை இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெளியிடுகிறோம் என இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கோச்சடையான் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சௌந்தர்யா கூறியுள்ளதாவது:

இந்திய சினிமா 100 கொண்டாட்டத்தின் அடுத்த கட்டம் கோச்சடையான் - சௌந்தர்யா

கடந்த ஆண்டு இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடங்கின.

அந்த கொண்டாட்டங்களின் அடுத்த கட்டமாக கோச்சடையான் படம் வெளியாகிறது.

இந்திய சினிமாவில் முதல் முறையாக பர்பார்மன்ஸ் கேப்சரிங் தொழில்நுட்ப முறையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. நடிகர்கள் லைவாக நடிக்கும் படங்கள் அதிகம் வெளியாகும் இந்த நாட்டில், ஒரு மாற்று முயற்சியாக கோச்சடையான் திகழும் என நம்புகிறேன்," என்று கூறியுள்ளார்.

 

1 மில்லியன் கோச்சடையான் செல்போன்கள்! - கார்பன் வெளியிடுகிறது

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் வெளியாவதையொட்டி 1 மில்லியன் செல்போன்களை வடிவமைத்துள்ளது கார்பன் மொபைல் தயாரிப்பு நிறுவனம்.

இந்த செல்போன்களை அடுத்த வாரம் நடைபெறவுள்ள கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு விற்பனை செய்யவிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

1 மில்லியன் கோச்சடையான் செல்போன்கள்! - கார்பன் வெளியிடுகிறது

கோச்சடையான் தயாரிப்பிலிருக்கும்போதே, மீடியா ஒன், ஈராஸ் மற்றும் கார்பன் மொபைல் நிறுவனங்கள் இதுகுறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அறிவிப்பு வெளியிட்டன.

அதன்படி 10 லட்சம் கார்பன் - கோச்சடையான் எக்ஸ்க்ளூசிவ் மொபைல்கள், படத்தின் ஸ்க்ரீன் சேவர்கள், சிறப்பு ரிங்டோன்கள் மற்றும் ட்ரைலர்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டன.

இவற்றை பிப்ரவரி மத்தியில் நடக்கவிருக்கும் கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் அறிமுகம் செய்யவிருக்கின்றனர். ஆடியோ சிடிக்களுடன் இந்த மொபைல்கள் கிடைக்கும் வகையிலும் ஏற்பாடுகள் நடப்பதாக ஈராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

வாவ்.. 6000 அரங்குகளில் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான்!

சென்னை: உலக அளவில் எந்த நடிகரின் படமும் வெளியாகாத அளவுக்கு 6000 திரையரங்குகளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் வெளியாகிறது!

இந்திய நடிகர்கள் என்றில்லை.. சர்வதே அளவில் வைத்துப் பார்த்தாலும் எவருடைய படமும் இத்தனை அரங்குகளில் வெளியானதில்லை!

வாவ்.. 6000 அரங்குகளில் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான்!   

சர்வதேச அளவில் வசூலைக் குவித்து முதலிடத்தில் இருக்கும் அவதார் படம் கூட 3800 அரங்குகளில் மட்டும்தான் வெளியானது. அதன் பிறகு வந்த படங்களில் அவெஞ்சர்ஸ் மட்டுமே 4600 அரங்குகளில் வெளியானது.

ரஜினியின் எந்திரன் 3300 அரங்குகளில் வெளியானதாக அறிவிக்கப்பட்டது. அதற்குப் பின் வந்த சில பாலிவுட் படங்கள் - க்ரிஷ் 3, தூம் 3- கிட்டத்தட்ட 4000 அரங்குகளில் வெளியானதாக அறிவிக்கப்பட்டது.

இப்போது அத்தனை படங்களின் சாதனைகளையும் ஒன்றுமில்லாமல் செய்யும் விதத்தில் ரஜினியின் கோச்சடையான் 6000 ப்ளஸ் திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாக ஈராஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தப் படத்தின் ஆங்கில மொழியாக்கம் வெளியாகவிருக்கிறது. மற்ற மொழிகளில் தயாராகியிருக்கும் கோச்சடையானும் வெளியாகிறது.

தென்கிழக்காசிய நாடுகளான ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், சீனா, கொரியாவில் அதிக அரங்குகளில் கோச்சடையான் வெளியாகவிருக்கிறது.

அமெரிக்கா, ஐரோப்பாவில் இதுவரை எந்த இந்தியப் படமும் வெளியாகாத அளவுக்கு 1000க்கும் அதிகமான திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதில் மும்முரம் காட்டுகிறது ஈராஸ் நிறுவனத்தின் அய்ங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம்.

இன்று ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள கோச்சடையான் தியேட்டர்கள் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால்... ஏப்ரல் 11 கோச்சடையான் தினமாக உலகெங்கும் பரபரக்கும் என்பதில் சந்தேகமில்லை!

 

நரம்புத் தளர்ச்சி: சிகிச்சைக்காக கேரளா செல்லும் நடிகை

சென்னை: விரல் வித்தை நடிகரின் காதலிக்கு நரம்புத் தளர்ச்சி பிரச்சனை உள்ளதாம். இதற்காக அவர் கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்ளப் போகிறாராம்.

விரல் வித்தை நடிகரின் காதலியான புஸு புஸு நடிகை நரம்பு தளர்ச்சியால் அவதிப்படுகிறாராம். இதற்காக அவர் எடுத்துக் கொண்ட சிகிச்சை பலன் அளிக்கவில்லையாம். இந்நிலையில் அவரை கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு நண்பர்கள் சிலர் அறிவுறுத்தினார்களாம்.

இதையடுத்து நடிகை இந்த மாதத்திற்குள் கேரளா சென்று சிகிச்சை பெறவிருக்கிறார். தான் கேரளாவில் தங்கி இருக்கும்போது மலையாள படங்களில் நடிக்க கதை கேட்கிறாராம். அவரை மலையாள படத்தில் நடிக்க வைக்க சில தயாரிப்பாளர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளார்களாம்.

அதனால் நடிகை நிச்சயம் இம்முறை மலையாள படத்தில் நடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகர் பிணமாகக் கண்டெடுப்பு

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகர் பிணமாகக் கண்டெடுப்பு

நியூயார்க்: ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் பிலிப் செமோர் ஹாப்மேன் (46), நியூயார்க் நகர் வீட்டில் நேற்று பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

அவர் எப்படி மரணமடைந்தார் என்பது மர்மமாகவே உள்ளது. அளவுக்கதிகமான போதை மருந்து உட்கொண்டதால் அவர் மரணமடைந்திருக்கக் கூடும் என கூறப்படுகிறது.

ஹாலிவுட்டில் குறிப்பிடத்தக்க நடிகர் - இயக்குநராகத் திகழ்ந்தவர் பிலிப் செமோர் ஹாப்மேன். 1991-ம் ஆண்டு லா அண்ட் ஆர்டர் படத்தில் அறிமுகமானார். அடுத்தடுத்து துணை வேடங்களில் நடித்தாலும், கவனிக்கப்படும் நடிகராகத் திகழ்ந்தார்.

சென்ட் ஆப் வுமன், ட்விஸ்டர், பூகி நைட்ஸ். மக்னோலியா, ரெட் ட்ராகன், கோல்ட் மவுன்டெய்ன் என அவர் நடித்த படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன. அவருக்கும் பெயர் கிடைத்தது.

2005-ல் கோபோடே என்ற படத்தில் நாயகனாக நடித்த அவருக்கு ஆஸ்கர் உள்பட உலகின் சிறந்த விருதுகள் பல கிடைத்தன.

மிஷன் இம்பாஸிபிள் -3 -ல் முக்கிய வேடத்தில் நடித்தார். தி சாவேஜ் படத்துக்காக பல விருதுகள் வென்றார் ஹாப்மேன்.

சார்லி வில்சன்ஸ் வார், டவுட் போன்ற படங்களில் மிகச் சிறப்பாக நடித்து விருதுகளைப் பெற்றார்.

தி மாஸ்டர் படத்துக்காக 30 சர்வதேச விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அவற்றில் 20 விருதுகளை வென்றவர் பிலிப் செமோர் ஹாப்மேன். தி ஹங்கர்கேம்ஸ் - கேட்சிங் பையர் படமும் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தின் அடுத்த இரு பாகங்களிலும் ஹாப்மேன் நடித்துவந்தார். அவற்றில் ஒரு பாகம் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. மற்றொன்றின் படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்த நிலையில்தான், நியூயார்க்கில் உள்ள அவரது வீட்டில் பிணமாகக் கிடந்தார் ஹாப்மேன். அவரது நண்பர்தான் இதனை நேற்று பிற்பகல் போலீசாருக்குத் தெரிவித்தார்.

ஹாப்மேனின் மரணம் ஹாலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "ஹாப்மேன் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, அதை வெளிப்படையாக அறிவித்தவர். அந்தப் பழக்கத்திலிருந்து விடுதலையாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைப் பெற்றார். ஆனால் அதிலிருந்து விடுபட்ட மாதிரி வெளியில் காட்டிக் கொண்டார்.

உண்மையில் இன்னும் அதிகமாக போதைக்கு அடிமையாகிவிட்டார்," என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.

 

விஜய் டிவி சூப்பர் சிங்கர் பட்டம் வென்றார் திவாகர்! இமான் இசையில் பாடுகிறார்

விஜய் டிவியில் கடந்த ஓர் ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் சீசன் 4 போட்டியில் இறுதிச்சுற்றில் அசத்தலாக பாடி 60 லட்சம் மதிப்புள்ள வீட்டினை பரிசாக வென்றார் திவாகர்.

இறுதிச்சுற்றில் திவாகர் சரத் சந்தோஷ் சயீத் சுபகான், சரத் சந்தோஷ், பார்வதி மற்றும் சோனியா ஆகியோர் போட்டியிட்டனர்.

கடந்த சனிக்கிழமையன்று இரவு மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்ற இறுதிச்சுற்றில், ஒவ்வொரு போட்டியாளரும் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக பாடினர்.

விஜய் டிவி சூப்பர் சிங்கர் பட்டம் வென்றார் திவாகர்! இமான் இசையில் பாடுகிறார்

திவாகர்

சென்னையை சேர்ந்த திவாகர், அந்த அரபிக் கடலோரம் பாடலையும், இரண்டாவது சுற்றில் மாமா, மாப்ளே என்ற பலே பாண்டியா படத்தில் வரும் பாடலையும் பாடினார்.

பாராட்டிய ஜானகி

இந்த பாடல் பார்வையாளர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக வந்திருந்த பின்னணிப் பாடகி ஜானகி, மேடைக்கு எழுந்து போய் பாராட்டினார். 1000 ரூபாய் பரிசு கொடுத்தார். அப்போதே நீதான் வெற்றி பெற்றுள்ளாய் என்று அறிவித்தார்.

லட்சம் ஓட்டுக்கள்

நடுவர்களின் தீர்ப்புடன் எஸ்.எம்.எஸ் வாக்குகளும் திவாகருக்கே கிடைத்தது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று திவாகர் சூப்பர் சிங்கர் 4 பட்டத்தை வென்றார்.

ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு

பட்டம் வென்ற திவாகருக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஃப்ளாட் பரிசாக வழங்கப்பட்டது.

சயீத் சுபஹான்

2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார் சயீத் சுபஹான். அவருக்கு 1 கிலோ தங்கம் பரிசளிக்கப்பட்டது.

சரத் சந்தோஷ்

மூன்றாவது இடம் பெற்ற சரத் சந்தோஷ் இரண்டாவது சுற்றில் பாடியே ஓம் சிவோகம் பாடல் ரசிகர்களின் பாராட்டினைப் பெற்றது. அவருக்கு ரூ.10 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது.

பார்வதி - சோனியா

இந்த போட்டியில் பட்டம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சோனியா, 4 வது இடத்தைத்தான் பெற்றார். அவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது. அதேபோல் பார்வதியும் 4வதாக இடம் பெற்று 5 லட்சம் ரூபாய் பரிசு வென்றார்.

ஆன்டிரியாவும் அழகேசனும்

சூப்பர் சிங்கர் 4 வது சீசனில் வயதான போட்டியாளர் ஒருவர் பங்கேற்றார். அவர் பெயர் அழகேசன். வைல்கார்டு ரவுண்ட் வரை வந்து வெளியேறினார். இறுதிச்சுற்றுப் போட்டியில் ஆன்ரியாவுடன் மேடையில் பாட அழகேசனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அன்று வந்ததும் அதே நிலா என்று பாடி அசத்தினார் அந்த தாத்தா.

இமான் இசையில் திவாகர்

சூப்பர் சிங்கர் பட்டம் வென்ற திவாகருக்கு இசையமைப்பாளர் இமான் பின்னணி பாட வாய்ப்பு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.