ரூ. 1கோடி நில அபகரிப்பு: நடிகர் மன்சூர் அலி கான் கைது


சென்னை: ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கில் நடிகர் மன்சூர் அலி கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கே.கே. நகரைச் சேர்ந்தவர் துரைவேலன் என்பவர் நடிகர் மன்சூர் அலிகான் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

அந்த மனுவில், அரும்பாக்கம் புலியூர் பகுதியில் எனக்கு சொந்தமான ரூ. 1 கோடி நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து நடிகர் மன்சூர்அலிகான் அபகரித்து விட்டார். எனவே, உரிய நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து துணை கமிஷனர் ராதிகா மேற்பார்வையில் நில மோசடிப் பிரிவு உதவி கமிஷனர் ஜேசுராஜன் மற்றும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள மனசூர் அலி கான் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து கமிஷனர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

அங்கு அவரிடம் நிலமோசடி குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

ஆஷிஷ் வித்யார்த்திக்காக 2 மாதம் காத்திருந்த படக்குழு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

டி.கே.எம் பிலிம்ஸ் சார்பில் எஸ்.ஏ.ஜலாலுதீன், ஷேக் முகமது தயாரிக்கும் படம், 'அமரா'. அமரன், ஸ்ருதி ஜோடி. கஞ்சா கருப்பு, ஆஷிஷ் வித்யார்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கும் ஜீவன், கூறியதாவது: 'மயிலு', 'ஞாபகங்கள்' படங்களுக்குப் பிறகு நான் இயக்கும் படம் இது. ஹீரோயின் தந்தையாக, ஆஷிஷ் வித்யார்த்தி நடிக்கிறார். மற்ற மொழிகளில் அவர் பிஸியாக இருந்ததால், கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்க, அவருக்காக 2 மாதங்கள் காத்திருந்தோம். கடந்த வாரம்தான் அவர் வந்தார். படப்பிடிப்பை முடித்தோம். நண்பர்களை நிர்ணயிக்கலாம். எதிரிகளை நிர்ணயிக்க முடியாது. அவர்கள் தானாகவே உருவாகிறார்கள். இதுதான் ஒன்லைன். இந்தப் படத்தை இயக்கிக்கொண்டே, பிரபு சாலமன் தயாரிக்கும் 'சாட்டை' படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறேன்.

 

ஜேசுதாஸுக்கு ஸ்ரீ நாராயண விருது: நாளை விருது வழங்கும் விழா


திருச்சூர்: 2011ம் ஆண்டுக்கான ஸ்ரீ நாராயண விருதுக்கு பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளில் சினிமா பாடல்கள் பாடியுள்ளார். மயக்கும் குரல் வளம் கொண்ட அவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ஜேசுதாஸின் திறமையை பாராட்டி 2011ம் ஆண்டுக்கான ஸ்ரீ நாராயண விருது அவருக்கு வழங்கப்படவிருக்கிறது. கேரள மாநிலம் திருச்சூரில் நாளை (ஜனவரி 7) நடக்க உள்ள விழாவில் சிவகிரை மடாதிபதி பிரகாசானந்த சுவாமிகள் விருதையும், ரூ.50,000 பரிசுத் தொகையும் ஜேசுதாசுக்கு வழங்குகிறார். விருது வழங்கும் விழாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் எம். ராமச்சந்திரன் துவக்கி வைக்க உள்ளார்.

 

'கரிகாலன்' வழக்கு - நடிகர் விக்ரமுக்கு நோட்டீஸ்


சென்னை: ‘கரிகாலன்’ என்ற தலைப்பில் சினிமா படம் எடுக்கத் தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் விக்ரமுக்கு, சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை 15-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் போரூரை சேர்ந்த ராஜசேகர் தாக்கல் செய்துள்ள மனுவில், “பிரியமுடன் பிரிவோம் என்ற ஆவண படம், டி.வி. தொடர்கள் ஆகியவற்றுக்கு இசையமைத்துள்ளேன். நாட்டிலேயே முதல் அணையை சோழ சக்கரவர்த்தி கரிகாலன் கட்டியுள்ளார். அவரது வரலாற்றை படித்து, அவர் மீது மிகுந்த பற்று கொண்டேன். ஆனால் வரலாற்று புத்தகத்தில் கரிகாலனை பற்றி விரிவான தகவல் இல்லை.

ரஜினி, விஜயகாந்திடம்…

இதையடுத்து கரிகாலன் வரலாற்றின் சாராம்சத்தை வைத்து கதை ஒன்றை எழுதினேன். இந்த கதைக்கு கரிகாலன் என்ற தலைப்பை வைத்துள்ளேன். அதை சினிமாவாக தயாரிக்க நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோரின் உதவியாளர் உட்பட பலரை அணுகினேன். பலரிடம் கரிகாலன் கதை சொன்னேன்.

‘கரிகாலன்’ என்ற கதையின் தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் 1996-ம் ஆண்டு பதிவு செய்தேன். அந்த பெயர் பதிவை புதுப்பிக்க பல முயற்சிகள் எடுத்தும் முடியவில்லை. இந்த நிலையில் கரிகாலன் என்ற பெயரில் நடிகர் விக்ரம் நடிக்கும் படத்தை சில்வர் லைன் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. கண்ணன் என்பவர் இயக்குகிறார்.

கரிகாலன் என்ற பெயரில் இவர்கள் படம் தயாரித்து வெளியிட்டால், எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும். எதிர் திரையுலக வாழ்வும் பாதிக்கும். எனவே கரிகாலன் என்ற பெயரில் படத்தை தயாரிக்க தடை விதிக்க வேண்டும்,” என்று கோரியுள்ளார்.

நீதிபதி விஜயகாந்த்…

இந்த மனுவை நீதிபதி விஜயகாந்த் விசாரித்தார். இந்த மனுவுக்கான பதில்மனுவை ஜனவரி 12-ந் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி நடிகர் விக்ரம், இயக்குனர் கண்ணன், சில்வர் லைன் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

 

இசைப்பள்ளி திறந்தார் ஜேம்ஸ் வசந்தன்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், 'அகடமி ஆல்ப் மியூசிக் ஸ்கூல்' என்ற இசைப் பள்ளியை தொடங்கியுள்ளார். பாலமுரளிகிருஷ்ணா, இதை திறந்து வைத்தார். பிறகு நிருபர்களிடம் ஜேம்ஸ் வசந்தன் கூறியதாவது: முறைப்படி சங்கீதம் கற்றவர்கள்தான் பாட முடியும் என்ற நிலை இருந்தது. என்றாலும், இசையார்வம் உள்ள யாரும் சங்கீதம் கற்கலாம், பாடலாம். நம்மால் சினிமாவில் பாட முடியுமா என்று நினைப்பவர்கள், குறைந்தபட்ச இசை அறிவையாவது வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு வழிகாட்டும் விதமாக இந்தப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு சினிமாவில் பாடுவதற்கு மட்டுமின்றி, அனைத்துவிதமான சங்கீதமும் கற்றுத்தர, தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இருக்கிறார்கள். நான் இசையமைக்கும் படங்களில் புதிய பாடகர்களை அறிமுகப்படுத்துவேன்.

 

இசைப்புயலுக்கு இன்று பிறந்த நாள்... ரஜினி மற்றும் திரையுலகினர் வாழ்த்து!


இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி உள்பட தமிழ் திரையுலகினர் இன்று வாழ்த்து தெரிவித்தனர்.

ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ ஆர் ரஹ்மான். அதன் பிறகு ஜென்டில்மேன், பம்பாய் என அடுத்தடுத்த ஹிட் கொடுக்க, ரஹ்மானின் கேரியர் கிராப் எங்கேயோ போய்விட்டது. தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக உயர்ந்த அவர், பின்னர் இந்திக்கும் போனார்.

இந்தியில் மிகவும் வெற்றிகரமான இசையமைப்பாளர் என்ற புகழ் பெற்றார். அவர் இசையமைத்த இந்திப் படங்களின் பாடல்களை வெளியிடுவதில் இசை வெளியீட்டு நிறுவனங்கள் மத்தியில் ஏக போட்டி.

பின்னர் ஹாலிவுட்டிலும் கால்பதித்தார். ஸ்டீபன் ஸ்பீல்பர்க் படத்துக்கே இசையமைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார் ரஹ்மான்.

நான்கு முறை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை வென்றுள்ள ஏ ஆர் ரஹ்மான், ஸ்லம்டாக் மில்லியனேர் என்ற ஆங்கிலப் படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ என்ற பாடலுக்காக ஆஸ்கர் விருதினை வென்றார். அதே படத்தின் இன்னொரு பாடலுக்கு பாடலாசிரியர் குல்சாருடன் இணைந்து மேலும் ஒரு ஆஸ்கர் விருதினைப் பெற்றார் ரஹ்மான்.

ரஹ்மானின் மனைவி பெயர் சாய்ரா. கதீஜா, ரஹ்மா என இரு மகள்களும், அமீன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். மகள் கதீஜா ஏற்கெனவே எந்திரன் படத்தில் புதிய மனிதா… பாடலை எஸ்பிபியுடன் பாடியுள்ளார். சிறுவன் அமீனும் பாடகராக அடியெடுத்து வைத்துள்ளான்.

பொதுவாக எந்த சர்ச்சையிலும் சிக்கிக்கொள்ளாதவர் ரஹ்மான். முதல் முறையாக முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தன்னையும் அறியாமல் சர்ச்சைக்கு உள்ளானார். முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று கூறும் டேம் 999 படத்தின் இசைக்கு ஆஸ்கர் கிடைக்க பிரார்த்திப்பதாக அவர் கூறியதால் தமிழுணர்வாளர்கள் ரஹ்மானுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால், இது பற்றி எதுவும் தெரியாத நிலையில் தாம் அப்படி பேட்டியளித்ததாகக் கூறி, வருத்தம் தெரிவித்தார் ரஹ்மான்.

இப்போது அவர் ரஜினியின் கோச்சடையான், ராணா, மணிரத்னத்தின் பூக்கடை ஆகிய படங்களுக்கு மட்டும் இசையமைத்து வருகிறார். இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

பிறந்த நாள் காணும் அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காலையிலேயே போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். திரையுலகின் முன்னணி கலைஞர்கள் இயக்குநர்கள் ஷங்கர், மணிரத்னம், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் அனைவரும் அவரை வாழ்த்தினர்.

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இசைப்புயலுக்கு நமது வாழ்த்தையும் பதிவு செய்வோம்!

 

'மார்க்கெட் போய்டுச்சா... சேச்சே..!' - ஸ்ரேயா


தமிழில் தனக்கு மார்க்கெட் போய்விட்டதாக வரும் செய்திகளில் உண்மையில்லை என்கிறார் நடிகை ஸ்ரேயா.

ராசியில்லாத நடிகை என்ற லிஸ்டிலிருந்த ஸ்ரேயா, சிவாஜியில் ரஜினி ஜோடியாக நடித்ததன் மூலம் இந்தியாவின் பிரபல நடிகையாக மாறினார்.

தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என டாப் கியரில் போய்க் கொண்டிருந்தவர், இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தில் வடிவேலுவுடன் டூயட் பாடியதிலிருந்து சரிவுக்குள்ளானார்.

சமீப காலமாக அவர் நடித்த படங்கள் பெரிதாகப் போகவில்லை. இப்போது அவருக்கு படங்களும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கடைசியாக ரௌத்திரம் படத்தில் நடித்தார். ஸ்ரேயா மார்க்கெட் சரிந்து விட்டதாகவும் புதுப் படங்களுக்கு தயாரிப்பாளர்கள் அவரை ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுபற்றி ஸ்ரேயாவிடம் கேட்ட போது, “நான் பன்னிரெண்டு வருடமாக சினிமாவில் இருக்கிறேன். என்ன கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன் என்ற பெயரைப் பெற்றுள்ளேன்.

நல்ல நடிகைகளுக்கு மார்க்கெட் என்ற வரையறையே கிடையாது. எனக்கு மார்க்கெட் போய் விட்டது என்றும் படவாய்ப்புகள் இல்லை என்றும் சொல்லப்படுவதில் உண்மை இல்லை.

சினிமாவுக்கு வந்த புதிதிலும் எல்லா படங்களையும் ஒப்புக் கொண்டேன். சில படங்களில் தயாரிப்பாளர், இயக்குனர் வேண்டப்பட்டவராக இருந்ததால் நடித்தேன். இப்போது அப்படியெல்லாம் நடிக்க வேண்டிய அவசியமில்லையே. பணக்கஷ்டம் இல்லை. எனவே தேர்ந்தெடுத்து நடிக்கப் போகிறேன்.

நல்ல கதைகளாக இருந்தால் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். இதை வைத்து எனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று வதந்தி பரப்புகிறார்கள். எனக்கு நிற்க நேரமில்லாத அளவுக்கு வேலை. ஒரு பாட்டுக்கு ஆடுவது, விளம்பரங்கள், நிகழ்ச்சிகள், சேவை அமைப்புகள் என நான் ரொம்ப பிஸி,” என்றார்.

நல்ல கதை இல்லாததால படங்களில் நடிக்கவில்லை என்கிறீர்கள்…. ஒத்தப் பாட்டு, குத்துப் பாட்டெல்லாம் எதில் சேர்த்தி?!

 

பட வாய்ப்பு தருவதாகக் கூறி இளம்பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய சினிமா தயாரிப்பாளர்!!


சென்னை: சினிமா பட வாய்ப்பு தருவதாகக் கூறி இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சினிமா தயாரிப்பாளர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க போலீசார் சமீபத்தில் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக கிடைத்த தகவலை வைத்து, அத்தகைய புரோக்கர்கள் சிலரிடம் வாடிக்கையர் போல பேசி, பெண்களைக் கேட்டனர்.

மறுமுனையில் பேசிய நபர் தன்னிடம் துணை நடிகைகள் இருப்பதாகவும் குறிப்பிட்ட இடத்திற்கு ரூ. 10 ஆயிரத்துடன் வந்தால் அழைத்து செல்வதாக கூறினார். இதையடுத்து வாடிக்கையாளர் போல் சென்ற பாலியல் தடுப்பு பிரிவு போலீசாரை தி.நகரில் தேவ் ஆனந்த் பிலிம்ஸ் என்ற அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்.

அவர்களை பின் தொடர்ந்து சென்ற ஆய்வாளர் அந்த நிறுவனத்தில் விபச்சாரம் நடப்பதை உறுதி செய்த பிறகு அதிரடியாக புகுந்து அங்கு பாலியல் தொழில் நடத்தி வந்த செல்வநாயகன் (54) மற்றும் அவரின் உதவியாளர் ஞானபிரகாசம் (64) ஆகியோரை கைது செய்தனர்.

அங்கிருந்த 2 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில் செல்வ நாயகன் தேவ் ஆனந்த் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சினிமா தயாரிப்பதாகவும், சில படங்களுக்கு துணை இயக்குனராக இருந்ததாகவும் தெரிவித்தார்.

தற்போது ‘பேசாதே’ என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்குவதாகவும் கூறினார். இதே போல் சினிமாவில் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக சென்னை ஆழ்வார்திருநகரில் ஒரு அபார்ட்மெண்டில் 3 இளம்பெண்களை தங்க வைத்து பாலியல் தொழில் செய்து வந்த நாகேந்திரன் (50) மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சினிமா மேக்கப்மேன் கண்ணதாசன் (30) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சென்னையைச் சேர்ந்த 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சைதாப் பேட்டை 4-வது பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

டெல்லியில் தாண்டவம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம், 'தாண்டவம்'. விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் டெல்லியில் உள்ள ஜம்மா மஸ்ஜித் பகுதியில் தொடங்கியது. பழங்கால மசூதியான இது, படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு விக்ரம், ஜெகபதி பாபு பங்குபெறும் சண்டைக்காட்சி படமாக்கப்படுகிறது. தொடர்ந்து 20 நாட்கள் டெல்லியில் படப்பிடிப்பு நடைபெறும். இதையடுத்து படக்குழு அமெரிக்கா செல்ல இருப்பதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பஞ்சாலையில் வேலைபார்த்த நடிகை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மின்வெளி மீடியா ஒர்க்ஸ் சார்பில் தனபால் பத்மநாபன் இயக்கி, தயாரித்துள்ள படம், 'கிருஷ்ணவேணி பஞ்சாலை'. இதில் ஹேமச்சந்திரன், நந்தனா ஜோடி. என்.ஆர்.ரகுநந்தன் இணீசை. வைரமுத்து, தாமரை பாடல்கள். இதன் பாடல்களை இயக்குனர் மகேந்திரன் வெளியிட, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெற்றார். படம் பற்றி தனபால் பத்மநாபன் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் 1970 மற்றும் 80-களில் நடந்த பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றிய கதை. இதனால் இதில் நடிக்க புதுமுக நடிகை நந்தனாவுக்கு ஒரு மாதம் வரை படத்தின் காஸ்ட்டிங் டைரக்டர் சண்முகராஜன் பயிற்சி அளித்தார். இதன் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள மில் ஒன்றில் நந்தனா, அங்குள்ள பெண்களோடு பஞ்சாலையில் வேலை பார்த்தார். அங்கு பணியாற்றும் பெண்களின் உடல்மொழி, பேச்சு வழக்கு வரவேண்டும் என்பதற்காக வேலை செய்ய வைத்தோம். அவரும் செய்தார். உடன் பணியாற்றிய பெரும்பாலான பெண்களுக்கு அவர் நடிகை என்பது தெரியாது. பயிற்சி முடிந்து அதே மில்லில் ஷூட்டிங் நடந்தபோதுதான் அவர்களுக்கு விவரம் தெரிந்தது. ஷூட்டிங் முடிந்துவிட்டது. பின்னணி இசை சேர்ப்பு பணி நடந்து வருகிறது.

 

71 புதுமுகங்களின் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சிட்டி லைட்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படம், 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி'. சேரன் உதவியாளர் சண்முகராஜ் இயக்குகிறார். வெங்கடேஷ், அக்ஷரா ஜோடியுடன் 71 புதுமுகங்கள்  நடித்துள்ளனர். தாஜ்நூர் இசை. ஜோஷி, சரவணன் ஒளிப்பதிவு. படம் பற்றி இயக்குனர் சண்முகராஜ் கூறியதாவது: இதுவரை சினிமாவில் சொல்லப்படாத காதல் கதை என்று தைரியமாகச் சொல்லும் படம் இது. ஒரு பையன் அல்லது பெண் எப்போது, யாரை காதலிப்பார்கள், எப்போது சண்டையிடுவார்கள். எப்போது திருமணம் செய்வார்கள் என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இதைப் பார்த்தால் கண்டிப்பாக காதலில் யாரும் தோற்கமாட்டார்கள். எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள் என்று கேட்டால், அதுதான் படம். இந்தப் படத்தில் நடித்த அனைவருக்கும் நடிப்பு பயிற்சி அளித்து முழுப்படத்தையும் ஹேண்டிகேமில் படமாக்கி, டிரையல் பார்த்தோம். அதில் திருப்தி ஏற்பட்டபின் மீண்டும் படத்தை ஷூட் பண்ணினோம். இப்படி இதுவரை யாரும் படமாக்கியதில்லை. ஒவ்வொரு சீனும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும். காமத்துப்பாலில் உள்ள 16 குறள்களுடன் யுகபாரதி வித்தியாசமான பாடலை எழுதியுள்ளார். இது பேசப்படும் விதமாக இருக்கும். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் பாடல் வெளியீடு இருக்கும். இவ்வாறு சண்முகராஜ் கூறினார்.

 

கேரளாவில் ரிலீஸ் பண்ண முடியலேன்னா பரவால்ல... நான் நஷ்ட ஈடு தர்றேன்! - ஆர்யா


தான் நடித்து பொங்கலுக்கு வெளியாக உள்ள வேட்டை படத்தை கேரளாவில் ரிலீஸ் பண்ண முடியாவிட்டால் பரவாயில்லை. அதற்கான நஷ்ட ஈட்டை என் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்ளுங்கள், என நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.

வேட்டை படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதில் ஆர்யா – அமலா பால் ஜோடியாக நடித்துள்ளனர். மற்றொரு ஜோடியாக மாதவன் – சமீரா நடித்துள்ளனர்.

ஆர்யா, மாதவன் இருவருமே கேரள தொடர்பு உடையவர்கள்தான்.

இப்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை காரணமாக இவர்களது வேட்டை படம் அங்கே ரிலீசாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரும் இயக்கநருமான லிங்குசாமி பெரும் குழப்பத்தில் இருந்ததால், நடிகர் ஆர்யா அவருக்கு ஒரு யோசனை கூறியுள்ளார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுமூக நிலை ஏற்பட்டு, படத்தை வெளியிட முடிந்தால் கேரளாவில் வெளியிடலாம். இல்லாவிட்டால் வெளியிட வேண்டாம். கேரளாவில் ரிலீசாகாததால் ஏற்படும் நஷ்டத்தை சரிகட்ட எனது சம்பளத்திலிருந்து ஒரு தொகையை பிடித்துக் கொள்ளுங்கள்,” என்றாராம்.

 

ஆண் பாம்பும் பெண் தவளையும்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

யுரேகா சினிமா ஸ்கூல் நிறுவனம் தயாரிக்கும் படம், 'ஆண் பாம்பும் பெண் தவளையும்'. ஹீரோ இல்லை. ஹீரோயினாக, '6' படத்தில் அறிமுகமாகும் சான்ட்ரா நடிக்கிறார். ஒளிப்பதிவு, மகேஷ்வரன். இசை, சிவ சரவணன். இணை தயாரிப்பு, டி.எஸ்.ரிஷ்வந்த் தெய்வா. எழுதி இயக்கும் யுரேகா கூறும்போது, '''மதுரை சம்பவம்' ரிலீசுக்குப் பிறகு நான் இயக்கும் படம். பாலியல் வன்முறை மற்றும் கல்வி குறித்துச் சொல்லும் கதை என்பதால், திரைக்கதை புதுமையாக இருக்கும். ஒவ்வொரு காட்சியையும் வித்தியாசமான கோணத்தில் படமாக்குகிறோம். நானும் ஒரு கேரக்டரில் நடிக்கிறேன்' என்றார்.

 

தங்க மீன்கள் படத்தில் பத்மப்பிரியா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'கற்றது தமிழ்' ராம் இயக்கி நடிக்கும், 'தங்க மீன்கள்' படத்தில் பத்மப்பிரியா நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இயக்குனர் ராம் எனது நண்பர். 'தங்க மீன்கள்' படத்தில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் படம் துவங்கும்போது, கால்ஷீட் இல்லாததால் நடிக்க முடியவில்லை. இப்போது அவர் கேட்டுக் கொண்டதால் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். படத்தின் ஹீரோயின் என்று இன்னொருவர் இருந்தாலும் அதே அளவு முக்கியத்துவம் என் கேரக்டருக்கும் இருக்கும். இப்போதைக்கு கேரக்டர் பற்றி எதுவும் கூற இயலாது. அதை இயக்குனர்தான் சொல்ல வேண்டும். நான் நடித்த பெங்காலி படம் 20-ம் தேதி வெளிவருகிறது. இந்த ஆண்டு நான் நடித்த இரண்டு மலையாள படங்கள் வெளிவருகிறது. மேலும் இரண்டு படங்களில் நடிக்கிறேன். தமிழிலும் நடிக்கிறேன். அது பற்றிய முறையான அறிவிப்பு வரும்.

 

தரமான படங்களுக்கு வரிவிலக்கு: ஜெயலலிதாவுக்கு அபிராமி ராமநாதன் பாராட்டு


சென்னை: தரமான தமிழ்ப் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்க, 22 பேர் கொண்ட கமிட்டியை நியமித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அபிராமி ராமநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், “உலக அளவில் தமிழ் திரைப்படங்கள் மிகவும் உயர்ந்திருக்க வேண்டும் என்று மிக உயர்ந்த நோக்கத்துடன், தரமான தமிழ் படங்களை ஊக்குவிப்பதற்காக, ‘யு’ சான்றிதழ் பெற்ற தரமான தமிழ் படங்களுக்கு முழு கேளிக்கை வரி விலக்கு தமிழக அரசு அளித்திருக்கிறது.

இந்த படங்களை பார்வையிட்டு கேளிக்கை வரி விலக்கு அளிப்பதற்கு அலுவல் சார்ந்த மற்றும் அலுவல் சாராத 22 நபர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட குழு ஒன்று நியமித்ததற்காக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி,” என்று கூறியுள்ளார்.

 

'ராணாவுடன் காதலில்லை; ஆனால் அதிகாலை 3 மணிவரை..!!' - த்ரிஷா


தெலுங்கு நடிகர் ராணாவுடன் எனக்கு காதல் என்று வந்த செய்திகளில் உண்மையில்லை. அவரும் நானும் நல்ல நண்பர்கள். தினமும் அதிகாலை மூன்று மணிக்கு நாங்கள் பேசிக் கொள்வோம், என்று கூறியுள்ளார் நடிகை த்ரிஷா.

தெலுங்கில் லீடர் படம் மூலமாக நாயகனாக அறிமுகமானவர் டக்குபதி ராணா. இந்திப் படங்களிலும் நடிக்கிறார். தமிழில் ‘வடசென்னை’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்கிறார்.

இவர் பிரபல தயாரிப்பாளர் டி.ராமாநாயுடுவின் பேரன். நடிகர் நாகார்ஜுனாவின் மருமகன். பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் நிறைய நடிகைகள் இவருக்கு காதல் வலை வீசினர். இப்போதும் யாராவது ஒருவருடன் இவரை இணைத்து கிசுகிசுக்கள் வருவது சகஜமாகிவிட்டது. பிபாஷா பாசு, ஸ்ரேயா, தமன்னா என நிறைய பேருடன் கிகிசுக்கப்பட்டுவிட்டார்.

இப்போது இந்த லிஸ்டில் வந்திருப்பவர் த்ரிஷா. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாகவெல்லாம் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் புத்தாண்டை கோவாவில் கொண்டாடி விட்டு திரும்பியுள்ளனர். ராணாவை காதலிக்கிறீர்களா? என்று திரிஷாவிடம் கேட்டதற்கு, அவர் பதில் கூறுகையில், “சினிமாவில் அறிமுகமானதிலிருந்து என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வந்துவிட்டன.

முதலில் எனக்கு அது கஷ்டமாக இருந்தாலும் பிறகு ஈஸியாக எடுத்துக் கொண்டேன். முன்பெல்லாம் அந்த நடிகருடன் சுற்றுகிறேன். இந்த நடிகருடன் சுற்றுகிறேன் என்றுதான் செய்திகள் வந்தன. இப்போது காதல், திருமணம் என்று வருகிறது.

ராணாவுடன் காதலா?

தெலுங்கு நடிகர் ராணாவை எனக்கு பத்து வருடமாக தெரியும். எனக்கு அவர் முக்கியமான நண்பர். அதனால் அவருடன் சேர்ந்து வெளியே போகிறேன். எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் நிறைய பேர் உள்ளனர். எனக்கும் ராணாவுக்கும் காதல் என்று வதந்திகள் பரவியிருப்பது அடிப்படை இல்லாதது.

ராணா இனிமையானவர். விருந்துகளில் அதிகாலை மூன்று மணிவரை என்னுடன் இருக்கும் நண்பர் அவர். அவருடன் இருப்பது இனிமையாக இருக்கும். 10 வருஷமாக நாங்கள் பழகுகிறோம். இந்த மாதிரி எத்தனை நண்பர்களை பார்க்க முடியும்? ஒரு நண்பராக அவரை நான் ‘லவ்’ பண்றேன்!

சினிமாவில் சாதிக்க நிறைய இருக்கிறது. இப்போது திருமணம் எனக்கு முக்கியம் அல்ல. திருமணம் முடிவானதும் அதை பத்திரிகையாளர்களுக்கு உடனடியாக தெரிவிப்பேன். ரகசிய திருமணம் செய்து கொள்ளமாட்டேன்,” என்றார்.

 

மன்னார்குடி நீதிமன்றத்தில் புவனேஸ்வரி... மேலும் ஒரு தயாரிப்பாளர் மோசடி புகார்!


சென்னை: கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி மீது மேலும் ஒரு சினிமா தயாரிப்பாளர் மோசடி புகார் கொடுத்துள்ளார்.

வடபழனி ஆற்காடு ரோட்டைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் குமார் போலீஸ் கமிஷனரிடம் இன்று அளித்த புகார் மனுவில், “நான் ‘திருமங்கலம் பேருந்து நிலையம்’ என்ற படத்தை தயாரித்துள்ளேன்.

கடந்த மே மாதம் நடிகை புவனேஸ்வரி என்னை நேரில் சந்தித்து டெலிவிஷன் தொடர் தயாரிப்பதாகவும் அதை முடிக்க ரூ. 10 லட்சம் தேவை என்றும் கூறினார்.

தான் எடுத்ததாக டி.வி. தொடர் காட்சிகள் சிலவற்றையும் எனக்கு போட்டு காட்டினார். ரூ. 10 லட்சம் கொடுத்தால் இரண்டு மாதத்தில் மேலும் ரூ. 40 ஆயிரம் சேர்த்து பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறினார்.

நான் பணம் கொடுத்தேன். அதற்கு பதில் காசோலைகள் தந்தார். அவற்றை வங்கியில் செலுத்தியபோது பணமின்றி திரும்பி வந்தது. பிறகு பல தடவை பணம் கேட்டு புவனேஸ்வரியை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. அதன் பிறகு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கும் பதில் இல்லை.

மிரட்டல்

இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். நீதிமன்றம் புவனேஸ்வரிக்கு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் நான் சிங்கப்பூர் சென்று விட்டேன். அப்போது வக்கீல்கள் என்ற பெயரில் 4 பேர் எனது அலுவலகத்துக்கு வந்து புவனேஸ்வரிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டியுள்ளனர்.

புவனேஸ்வரி மீதும் மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜரான புவனேஸ்வரி

இதற்கிடையே ரூ 10 லட்சம் செக் மோசடி தொடர்பான மற்றொரு வழக்கில் மன்னார்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார் புவனேஸ்வரி.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகிலுள்ள கோட்டூரைச் சேர்ந்த செல்வக்குமார் மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், புவனேஸ்வரி தனக்குக் கொடுக்க வேண்டிய, ரூ 10 லட்சத்துக்காக அவர் தந்த காசோலை பணமின்றி திரும்பி வந்துவிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் நேற்று காலை 10 மணியளவில் மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் புவனேஸ்வரி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஐயப்பன் பிள்ளை, பிப்ரவரி 2ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்படுவதாக உத்தரவிட்டார்.

ஏற்கெனவே ரூ 1.5 கோடி மோசடி வழக்கில் புவனேஸ்வரி மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அறிமுகத்தில் தமிழுக்கு முதலிடம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தனிஷா இன்டர்நேஷனல் சார்பில் எஸ்.முத்து தயாரிக்கும் படம், 'பாரி'. ராகுல், பீனா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ரஜினி இயக்குகிறார். அருள்தேவ் இசை. இதன் பாடல்களை வெளியிட்டு கே.பாக்யராஜ் பேசியதாவது: தொழில்நுட்ப வளர்ச்சி சினிமாவை எளிமையாக்கி உள்ளது. அதனால் நிறைய புதுமுக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வருகிறார்கள். தமிழ் சினிமாவில்தான் அதிகமான புதுமுகங்கள் வருகிறார்கள். என்றாலும் புதுமுகங்களின் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதிலும், அதை விளம்பரப்படுத்துவதிலும், மக்களை வரவைப்பதிலும் சிக்கல் இருக்கிறது. அதை தயாரிப்பாளர் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் இணைந்து தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், தயாரிப்பாளர் சங்க செயலாளர் தேனப்பன், கலைப்புலி சேகரன், மனோஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

திரைப்பட வினியோகஸ்தர்களிடம் சேவை வரி வசூலிக்க இடைக்கால தடை!


சென்னை: திரைப்பட விநியோகஸ்தர்களிடம் சேவை வரி வசூலிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சினிமா வினியோகஸ்தர்களுக்கு சேவை வரி விதித்து மத்திய கலால்வரித்துறை சுற்றறிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து மீடியாஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சூர்யா ராஜகுமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

அதில், அனைத்து வினியோகஸ்தர்களின் வருமான பங்குத் தொகையில் இருந்து சேவை வரியைப் பிடித்துக் கொள்வதற்கு, தமிழ்நாடு சினிமா தியேட்டர் உரிமையாளர்கள், தமிழ்நாடு சினிமா வெளியீட்டாளர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், வினியோகஸ்தர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் அந்தத் தொகையை, தனியாக வங்கிக் கணக்கு ஒன்றைத் தொடங்கி, அதில் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது.

சினிமா தயாரிப்பாளர், வினியோகஸ்தர், வெளியீட்டாளர், தியேட்டர் உரிமையாளர் ஆகியோருக்கு இடையே உள்ள வர்த்தக ஏற்பாட்டுக்கு இந்த சுற்றறிக்கை எதிராக உள்ளது. இதனால் எங்களின் தொழில் பாதிக்கப்படுகிறது. எனவே அந்த சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் 2 வாரத்தில் பதில்மனு தாக்கல் செய்வதற்கு மத்திய கலால் மற்றும் சுங்கவரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

 

பொங்கல் ரிலீஸ் ரேஸில் சேர்ந்த 'கொள்ளைக்காரன்!'


இந்த பொங்கலுக்கு இரண்டு படங்கள்தான் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அந்த ரேஸில் புதிதாக சேர்ந்துள்ளது விதார்த் நடித்துள்ள ‘கொள்ளைக்காரன்’ படம்.

இந்தப் பொங்கலுக்கு விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த நண்பன், ஆர்யா – மாதவன் நடித்த வேட்டை ஆகிய படங்கள் மட்டும் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தியேட்டர்களும் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது புதிதாக இணைந்துள்ளது கொள்ளைக்காரன் படம்.

இந்தப் படத்தில் விதார்த் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். முவுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில், கலகலப்பாக எடுக்கப்பட்டுள்ள படம் இது என்பதால், பொங்கல் ரிலீஸில் இந்தப் படத்துக்கு உரிய கவுரவம் கிடைக்கும் என நம்புகிறார் இயக்குநர் தமிழ்ச் செல்வன்.

வைரமுத்து பாடல்களை எழுத, ஷோகன் என்பவர் இசையமைத்துள்ளார்.

பொங்கலுக்கு ஒரு நாள் முன்பு 250 திரையரங்குகளில் தமிழகமெங்கும் வெளியாகிறது கொள்ளைக்காரன்.