சல்மான் கானும், அசினும் காதலிப்பதாக மும்பை திரையுலகில் தொடர்ந்து வதந்திகள் பரவுகின்றன. இருவரும் தொடர்ந்து இரு படங்களில் ஜோடி சேர்ந்ததால் ஏக வதந்திகள் பரவி வருகின்றன.
இந்த வதந்திகள் பற்றி அசினிடம் கேட்டபோது,"சல்மான் கானுக்கும் எனக்கும் காதல் என்றும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வந்துள்ளன. புதுப்படங்களில் எனக்காக வாய்ப்பு கேட்டு சிபாரிசு செய்கிறார் என்று கூட சொல்கிறார்கள். சல்மான் கான் வயதில் எனக்கு பாதிதான் ஆகிறது. அவரை எப்படி நான் திருமணம் செய்வது. எங்களுக்கு கல்யாணம் என்று வரும் செய்திகளை பார்த்து சிரிப்பதா? அழுவதா? என்று புரியவில்லை.
எனக்கும் குடும்பம் இருக்கிறது. அப்பா அம்மா உள்ளனர். அவர்கள் இது போன்ற செய்திகளை பார்த்து எவ்வளவு வருத்தப்படுவார்கள் என்பதை வதந்திகளை பரப்புவோர் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் தென் இந்தியரைத்தான் திருமணம் செய்வேன். எனது திருமணம் ரகசியமாக நடக்காது. எல்லோருக்கும் சொல்லி விட்டுத்தான் திருமணம் செய்து கொள்வேன். ஏற்கனவே அமீர்கான், சல்மான்கான் போன்றோருடன் நடித்து விட்டேன்.
தற்போது ஷாருக்கான் ஜோடியாக 'உஸ்டேப்ஸ்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். டெல்லியைச் சேர்ந்த நாயகனும் சென்னையைச் சேர்ந்த நாயகியும் ஆமதாபாத்தில் கல்லூரியில் படிக்கின்றனர். அவர்களின் வித்தியாசமான கலாசாரம், காதலை எதிர்க்கும் பெற்றோர்கள் போன்ற கதையம்சத்துடன் இப்படம் உருவாகிறது.
கஜினி மாதிரி பெரிய வெற்றியை இந்தப் படம் பெறும் என நம்புகிறேன். ஷாரூக்குடன் நடிப்பது எனக்கு ரொம்ப பெருமையாக உள்ளது. இதன் மூலம் எனக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்ததாக உணர்கிறேன்," என்றார்.