சென்னை: காமெடி நடிகர் கொடுக்காபுளி செல்வராஜ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 56.
மரணம் அடைந்த கொடுக்காபுளி செல்வராஜின் சொந்த ஊர் உடன்குடி. இவர் ‘அண்ணா நகர் முதல் தெரு', ‘பாட்டி சொல்லை தட்டாதே', ‘நானே ராஜா நானே மந்திரி', ‘அரண்மனைக்கிளி', ‘உதயகீதம்', ‘என்னைப்பார் யோகம் வரும்' உள்பட 300 படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.
கொடுக்காபுளி செல்வராஜுக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை 2 மணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார்.
கொடுக்காபுளி செல்வராஜின் உடல் மாங்காட்டில் உள்ள பரணிபுத்தூர் வெங்கடேஷ்வரா நகரில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். நாளை காலை இறுதி சடங்கு நடக்கிறது.