100 சதவீத வரி உயர்வு... பெரும் நெருக்கடியில் தமிழ் சினிமா!


சென்னை: தமிழக அரசு கேளிக்கை வரியை 100 சதவீதம் உயர்த்திவிட்டதால் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது தமிழ் திரையுலகம்.

இதற்கு முன் 100 சதவீத வரி விலக்கை அனுபவித்து வந்தது தமிழ் சினிமா. அதிமுக அரசு வந்த பிறகு கேளிக்கை வரி 15 சதவீதம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ 100 டிக்கெட் என்றால் அதில் 15 சதவீதம் அரசுக்கு வரியாக செலுத்தப்படும் நிலை உருவானது.

இப்போது இந்த 15 சதவீத வரி, 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இது 120 சதவீத உயர்வாகும். இதன் மூலம் திரையரங்குகள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று பாக்ஸ் ஆபீஸில் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

சென்னை உள்ளிட்ட 10 மாநகராட்சிகள், 22 நகராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் இனி 30 சதவீதம் வரி வசூலிக்கப்படும். பஞ்சாயத்துகளில் உள்ள திரையரங்குகளில் இது 20 சதவீதமாக இருக்கும்.

அதேநேரம், இந்த கேளிக்கை வரி உயர்வைக் காரணம் காட்டி, டிக்கெட் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என்ற எச்சரிக்கையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் இந்த அதிரடியைத் தொடர்ந்து, முதல்வரைச் சந்தித்து முறையிட தமிழ் திரையுலகினர் தயாராகிவருகின்றனர்.

ஏற்கெனவே தொழிலாளர் பிரச்சினை, தயாரிப்பாளர்களுக்குள் மோதல் என பல்வேறு சிக்கல்களில் உள்ள சினிமா உலகம், இந்த கேளிக்கை வரி உயர்வால் அதிர்ந்து போயுள்ளது என்றால் மிகையல்ல!
 

பாண்டிராஜின் மெரினா... ஓவியா ஹீரோயின்!


பசங்க, வம்சம் படங்களுக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் புதிதாக இயக்கும் படம் 'மெரினா'.

மெரினா கடற்கரையை மட்டும் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் விளிம்பு நிலை சிறுவர்களை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுக்கிறாராம் பாண்டிராஜ்.

சிவ கார்த்திகேயன் என்பவர் ஹீரோவாக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். களவாணி படத்தின் மூலம் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக ஜொலித்து, கமலின் 'மன்மத அம்பால்' படுகாயமடைந்து காணாமல் போன ஓவியாவை இந்தப் படத்தின் நாயகியாக்கியுள்ளார் பாண்டிராஜ்.

பாண்டிராஜின் ராசியான நடிகர்கள் எனப்படும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் இதிலும் உண்டு.

பசங்க, வம்சம் படங்களின் ஸ்டில் கேமராமேனாகப் பணியாற்றிய விஜய், இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். இசையமைப்பாளராக கிருஷை அறிமுகப்படுத்துகிறார் பாண்டிராஜ்.

விரைவில் மெரினா படப்பிடிப்பு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொஞ்ச நாளாக மெரினாவில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி தரப்படுவதில்லை. இந்தப் படத்துக்கு அனுமதி கிடைக்குமா என்பதுதான் இப்போதைய கேள்வி!
 

நிகிதாவிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய கன்னட தயாரிப்பாளர் சங்கம்!


ஆதாரமில்லாத ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் நிகிதாவுக்கு 3 ஆண்டுகள் தடை விதித்தது தவறான முடிவு. மிக அவசரப்பட்டு நாங்கள் அறிவித்த இந்த முடிவுக்காக நிகிதாவிடம் பகிரங்க மன்னிப்பு கோருகிறோம். இதற்கான மன்னிப்புக் கடிதத்தை நிகிதாவுக்கு அனுப்பியுள்ளோம், என்று கன்னட திரைப்பட சங்கத் தலைவர் முனி ரத்னா அறிவித்தார்.

இன்று பெங்களூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், "நிகிதா இனி எந்த கன்னடப் படத்திலும் நடிக்கலாம். தடை ஏதுமில்லை.

அவர் மீது நாங்கள் அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்துவிட்டோம். ஆதாரமில்லாத ஒரு குற்றச்சாட்டில் எடுக்கப்பட்ட தவறான முடிவுதான் அது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

இதற்காக நடிகை நிகிதாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எங்களது மன்னிப்பை எழுத்துப்பூர்வமாக நிகிதாவுக்கு தெரிவித்துள்ளோம்.

அதேநேரம், இப்போது சிறையில் இருக்கும் தர்ஷனுக்கு தடை விதிக்கும் திட்டம் ஏதுமில்லை," என்றார்.

அனைவருக்கும் நன்றி - நிகிதா

தயாரிப்பாளர் சங்கத்தின் தடை நீக்க உத்தரவு வெளியானதும் அதுகுறித்த மகிழ்ச்சியைத் தெரிவித்த நிகிதா, தனக்காக இந்த விஷயத்தில் தலையிட்டு நீதி பெற்றுத் தந்த பர்வதம்மா ராஜ்குமாருக்கு நன்றி தெரிவித்தார்.

பர்வதம்மாவுக்கு மிக நெருக்கமானவர் தர்ஷன் மனைவி விஜயலட்சுமி. இருந்தும், 'இந்த விவகாரத்தில் நிகிதா மீது எந்தத் தவறும் இல்லை. தர்ஷன் - விஜயலட்சுமி விவகாரத்தில் நிகிதாவை இழுத்தது அநாகரீகம்' என பர்வதம்மா கூறியிருந்தார்.

இதுகுறித்து நிகிதா கூறுகையில், "பர்வதம்மாவுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. நியாயம் என்ன என்பதை நன்கு உணர்ந்தவர் அவர். அதனால்தான் என்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றியுள்ளார்.

இந்த நெருக்கடியை காட்டி அனுதாபம் மூலம் பப்ளிசிட்டி தேட நான் விரும்பவில்லை. நான் ஏற்கெனவே தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் துன்பத்தை அனுபவித்துவிட்டேன்.

எனவே இப்போதைக்கு எதைப் பற்றியும் பேச விரும்பவில்லை. எனக்காக ஆதரவுக் குரல் கொடுத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் நன்றி," என்றார்.
 

ஏழாம் அறிவில் சூர்யாவின் இன்னொரு ஜோடி அபிநயா!


நாடோடிகள், ஈசன் படங்களில் நடிப்பில் கவர்ந்த அபிநயா, சூர்யாவின் ஜோடியாகியுள்ளார் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் ஏழாம் அறிவு படத்தில்.

முதலில் இந்த விஷயத்தையே வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டும். படம் வெளியானதும் ஒரு சர்ப்ரைசாக இருக்கட்டுமே என்று முருகதாஸ் கூறியிருந்தாராம். ஆனால் இப்போது விஷயம் வெளியாகிவிட்டது.

ஏழாம் அறிவில் சூர்யாவுக்கு மெயின் ஜோடி ஸ்ருதிதான் என்றாலும், ப்ளாஷ் பேக்கில் சரித்திரப் பின்னணியில் வரும் சூர்யாவுக்கு அபிநயாதான் ஜோடியாம்.

படத்தில் மிக முக்கிய அம்சமே இந்த ப்ளாஷ்பேக் சூர்யாதான் என்பதால், அபிநயா கேரக்டருக்கு முக்கியத்துவம் அதிகம் என்கிறார்கள்.
 

கேரளாவில் எந்திரனுக்குப் பின் மங்காத்தா சாதனை!


கேரளாவில் ரஜினியின் எந்திரன் செய்த வசூல் சாதனையை இதுவரை ஒரு ஒரிஜினல் மலையாளப்படம் கூட செய்ததில்லை.

நேரடி தமிழ்ப் படமாக கேரளத்தில் வெளியான எந்திரன் 9 வாரங்களில் 9 கோடியை குவித்தது. மாநிலத்தின் பல இடங்களில் நூறாவது நாளைக் கொண்டாடிய எந்திரன், மொத்தமாக ரூ 14 கோடி வரை வசூலித்தது. இந்தப் படத்தை செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார் (குசேலன் தயாரிப்பாளர்) வெளியிட்டு அசாதாரண லாபம் கண்டார்.

அதன் பிறகு வேறு எந்தத் தமிழ்ப் படமும் எந்திரனில் 10 சதவீதத்தைக் கூட கேரளாவில் எட்டிப்பிடிக்கவில்லை, வெற்றிப்படம் என அறிவிக்கப்பட்ட கோ உள்பட!

ஆனால் கேரளாவில் பெரிதாக ரசிகர்கள் இல்லாதவர் எனப்பட்ட அஜீத்தின் மங்காத்தா வசூலில் கலக்க ஆரம்பித்துள்ளது.

கேரளாவில் திரையிட்ட முதல் ஒரு வாரத்தில் இந்தப் படம் 1 கோடி வசூலைத் தொட்டுவிட்டதாக கேரள விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.

எந்திரனுக்குப் பிறகு, கேரளத்தில் ஒரு படத்தின் வசூல் கோடியைத் தொட்டிருப்பது இதுவே முதல்முறையாம்.

ஆந்திராவிலும் மங்காத்தா நல்ல வசூலைக்குவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாக்ஸ் ஆபிஸில் இந்தப் படம் முதலிடம் பிடித்துள்ளது. எந்திரனுக்குப் பிறகு தமிழ்ப் படம் ஒன்று வெளிமாநிலங்களில் இந்த அளவு ஓடுகிறதென்றால் அது மங்காத்தாதான் என்கிறார்கள்.
 

ரஜினியின் இரண்டாவது நாயகியாக இலியானா!


ராணா படத்தில் ரஜினியின் இரண்டாவது நாயகி இலியானாதான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் ராணா படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். வில்லனாக சோனு சூட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதைத் தவிர வேறு நடிகர்கள் பற்றி எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆனால் ரஜினியுடன் 6 நாயகிகள் இந்தப் படத்தில் உண்டு என்று முன்பு கேஎஸ் ரவிக்குமார் சொல்லியிருந்தார்.

இந்த நிலையில் ரஜினியின் இன்னொரு ஜோடி யார் என்பது கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தெலுங்கின் டாப் ஹீரோயின் இலியானாதான் அந்த இன்னொரு ஜோடி என்கிறார்கள். இப்போது நண்பன் படப்பிடிப்பில் உள்ள இலியான அந்தப் படம் முடிந்ததும், மொத்தமாக ராணாவுக்கு கால்ஷீட் தந்திருப்பதாக சொல்கிறார்கள்.

ஏற்கெனவே ரஜினியின் சுல்தானில் ரஜினிக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி, பின் சில காரணங்களால் விலகியவர்தான் இலியானா என்பது நினைவிருக்கலாம்.
 

கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு நடிகர்கள் கால்ஷீட் தர வேண்டாம்! - கேயார்


சென்னை: பெரிய நடிகர் நடிகைகள் கார்ப்பொரேச் நிறுவனங்களுக்கு உடனே கால்ஷீட் தந்துவிடுவதைப் பார்க்க முடிகிறது. தயவு செய்து இனி யாரும் இந்த நிறுவனங்களுக்கு கால்ஷீட் தர வேண்டாம். அப்படி தருபவர்கள் நன்றி கெட்டவர்கள், என்றார் தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார்.

இதுகுறித்து சமீபத்தில் அவர் கூறியதாவது:

இன்றைக்கு பல தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். வெகு சிலர்தான் பல ஆண்டுகள் இந்தத் தொழிலில் நிலைத்திருக்கிறார்கள். எங்களைப் போன்றவர்களுக்கு சினிமாதான் எல்லாமே. வேறு தொழில் தெரியாது.

ஆனால் இன்றைக்கு பல்வேறு துறைகளில் உள்ள கார்ப்பொரேட் நிறுவனங்கள் சினிமா பிரிவைத் தொடங்கி படமெடுக்க வருகிறார்கள். இவர்களுக்கு சினிமா பற்றியோ, கலை பற்றிய ஒன்றும் தெரியாது, அதுகுறித்த அக்கறையும் அவர்களுக்கில்லை.

இவர்களால்தான் சினிமா இன்று பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இப்போது ஏற்பட்டுள்ள தொழிலாளர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு இவர்களும் காரணம்.

கார்ப்பொரேட் நிறுவனங்கள் சினிமாவை விநியோகம் செய்யட்டும். அத்தோடு அவர்கள் வேலையை நிறுத்திக் கொள்ளட்டும். தனி நபர்கள் சினிமா தயாரிக்கட்டும். அதுதான் ஆரோக்கியமாக இருக்கும்.

தயவு செய்து கார்ப்பொரேட் நிறுவனங்கள் கேட்டதும் கால்ஷீட்டை தாராளமாகத் தரும் போக்கை நடிகர் நடிகைகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இனி யாரும் இந்த நிறுவனங்களுக்கு கால்ஷீட் தராதீர்கள். அப்படி மீறித் தந்தால், அதை விட நன்றிகெட்டதனம் எதுவும் இல்லை," என்றார் கேயார்.
 

தீவிர எதிர்ப்பு... அம்பரீஷ் தலையீடு... நிகிதாவுக்கு தடை விலகுகிறது!


பெங்களூர்: கன்னடப் படங்களில் நடிக்க நிகிதாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 3 ஆண்டு தடையை இன்று விலக்குவதாக அறிவித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

ராஜ்குமார் மனைவி பர்வதம்மா தலையிட்டு அறிவுறுத்தியதால் இந்தத் தடையை விலக்கிக் கொள்வதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முனிரத்னா இன்று அறிவித்தார்.

கன்னட நடிகர் தர்ஷன் அவரது மனைவி விஜயலட்சுமியை கொல்ல முயன்றதாக சமீபத்தில் போலீசில் புகார் செய்யப்பட்டார். இதில் அவரை போலீஸ் கைது செய்ததது. தனக்கும் தன் கணவனுக்கும் இந்த அளவு தகராறு ஏற்பட நடிகை நிகிதாதான் காரணம் என்று விஜயலட்சுமி கூறியதால், நிகிதா மீது நடவடிக்கை எடுத்தது கன்னட தயாரிப்பாளர் சங்கம்.

நிகிதா 3 ஆண்டுகள் கன்னடப் படங்களில் நடிக்கக் கூடாது என தடை விதித்தது.

இந்தத் தடை உத்தரவை நிகிதா கடுமையாக எதிர்த்தார். நிரபராதியான தன் மீது வீண் புகார் சுமத்தி, தடை விதித்துவிட்டதாகவும், இதனால் தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முறையிட்டார் நிகிதா.

அவருக்கு தென்னிந்திய திரையுலகினர் பெரும் ஆதரவளித்தனர். கன்னட இயக்குநர்கள், நடிகர்கள், தெலுங்கு தயாரிப்பாளர்கள் - இயக்குநர்கள் தடை உத்தரவை எதிர்த்தனர். இந்தத் தடையை மீறி அவரை வைத்து படங்கள் எடுப்போம் என்றும் கூறினர்.

தமிழில் குஷ்பு உள்ளிட்ட நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் நிகிதாவுக்கு ஆதரவு அளித்தனர்.

கன்னட நடிகர் சங்கம் நடிகை நிகிதாவை முழுமையாக ஆதரிப்பதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து வேறு வழியின்றி இந்த தடை உத்தரவை தற்காலிகமாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளது கன்னட தயாரிப்பாளர் சங்கம்.

ஆனால் அதைச் செய்யும் முன் தான் நிரபராதி, தன் மேல் எந்தக் குற்றமும் இல்லை என நிகிதா ஒரு கடிதம் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. ஆனால் அப்படி எதுவும் கொடுக்கக் கூடாது என நடிகர் சங்கம் கூறிவிட்டது. இதைத் தொடர்ந்து நடிகர் அம்பரீஷ் இந்த விவகாரத்தில் தலையிட்டார்.

பர்வதம்மா கண்டனம்

இந்த நிலையில் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவியும் கன்னட சினிமாவில் மிகுந்த சக்தி மிக்கவராகக் கருதப்படுபவருமான பர்வதம்மா இந்த விவகாரத்தில் தலையிட்டு தடையை விலக்குமாறு அறிவுறுத்தினார்.

நிகிதா மீது தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் காட்டிய அவசரத்தைக் கண்டித்த பர்வதம்மா, தன் தரப்பு நியாயத்தை சொல்ல நிகிதாவுக்கு விளக்கம் அளிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

"யாரோ இரண்டு மூன்று பேர் சங்கத்தில் உட்கார்ந்து கொண்டு சினிமா உலகை தீர்மானித்து விட முடியாது. இவர்களால் கன்னட திரையுலகுக்கே அவமானம்," என்றும் பர்வதம்மா எச்சரித்தார்.

இதைத் தொடர்ந்து இன்று பெங்களூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தடை ரத்து முடிவை அறிவித்தார் சங்கத் தலைவர் முனிரத்னா.
 

இனி செல்போனில் பாடல்களை திருட்டுத் தனமாக பதிவு பண்ண முடியாது!


திரைப்பட இசைக் கலைஞர்கள் கஷ்டப்பட்டு பெரும் செலவில் உருவாக்கும் பாடல்களை யார் யாரோ இலவசமாக செல்போனில் பதிவு செய்து கொள்கிற அவலத்தை தடுக்கும் வகையில் புதிய சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

சவுத் இண்டியா டிஜிட்டல் மியூசிக் மேனேஜ்மென்ட் பி.லிட் நிறுவனம், சவுத் இண்டியா மியூசிக் கம்பெனி அசோசியேஷனுடன் இணைந்து இந்த இசைத் திருட்டுக்கு முடிவு கட்டும் வேலைகளில் இறங்கியிருக்கிறது.

இந்த நிறுவனம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்பட பாடல்கள், பக்தி பாடல்கள், கிராமிய பாடல்கள், கர்நாடக இசைப் பாடல்களை 50 முதல் 60 சதவீதம் வரை தயாரித்து வழங்கக்கூடியவர்களால் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டது. 30 வருடங்களுக்கு மேலான சூப்பர் ஹிட் பாடல்களின் உரிமம் பெற்றுள்ள இந்நிறுவனம், 1957 இந்திய காப்புரிமை சட்டப்படி பாடல் இசையை பதிவு செய்ய உரிமம் பெறுவது அவசியம் என வலியுறுத்தியுள்ளது.

இதற்காக செல் மியூசிக் (CELL MUZIK) என்னும் நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இதன் தொடக்க மற்றும் அறிமுக விழா சென்னையில் நடந்தது. தொடக்க விழாவில் இசையமைப்பாளர் தினா, பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன், பத்மஸ்ரீ சுதா ரகுநாதன், பாடலாசிரியர் விவேகா, முன்னாள் காவல் துறை அதிகாரி மாதவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுபோல திருட்டுத்தனமாக பாடல்களை பதிவு செய்து விற்கும் செல்போன் கடைகள் இனி மாதந்தோறும் 1250 செலுத்தி சந்தாதாரராக பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படி பதிவு செய்யாமல் திருட்டுத்தனமாக விற்றால் 1957 இந்திய காப்புரிமை சட்டப்படி குற்றம்.

உரிமம் பெறாமல் பாடல்களை மொபைல் சிப்பில் பதிவு செய்பவர்களை கண்காணித்து தண்டிக்க முன்னாள் காவல் துறை அதிகாரி தலைமையில் ஒரு குழுவையும் நியமித்திருக்கிறது இந்த அமைப்பு.
 

சில்க் ஸ்மிதா பற்றிய படத்தில் ரஜினிக்கு அவமதிப்பா? - கொதிப்பில் ரசிகர்கள்


சில்க் ஸ்மிதாவின் உண்மைக் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்திப் படமான தி டர்ட்டி பிக்சரில், சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி காட்சிகள் உள்ளதாகவும், அவை ரஜினியை அவமதிக்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியதையடுத்து ரசிகர்கள் கொதிப்பில் உள்ளனர்.

உடனடியாக அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏக்தா கபூர் தயாரிப்பில், வித்யா பாலன் - நஸ்ருதீன் ஷா நடிக்கும் படம் தி டர்ட்டி பிக்சர். இந்தப் படம் மறைந்த தமிழ் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.

இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்து பல்வேறு சர்ச்சைகளுக்குக் காரணமாகியுள்ளது. இப்போது எழுந்துள்ள சர்ச்சை, படத்தில் ரஜினியை அவமானப்படுத்தியுள்ளனர் என்பது.

இந்தப் படத்தில் வயதான முன்னணி நடிகராக தோன்றுகிறார் நஸ்ருதீன் ஷா. அவரும் சில்க்கும் இணைந்து வருகிற காட்சிகளும் வசனங்களும் ரஜினியை அவமானப்படுத்துவது போல உள்ளனவாம்.

எனவே இந்தக் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரஜினியின் பெரும்பாலான படங்களில் சில்க் ஸ்மிதா முக்கிய இடம்பெற்றிருப்பார் என்பது நினைவிருக்கலாம்.

ஆனால் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் விளக்கம் வேறு மாதிரி உள்ளது. அவர் கூறுகையில், "தி டர்ட்டி பிக்சரில் நஸ்ருதீன் ஷா சீனியர் நடிகராக வருவார். ஆனால் சில்க் ஸ்மிதா காலத்தில் ரஜினி இளமையான சூப்பர் ஸ்டார். இந்த வித்தியாசத்தை ரசிகர்கள் புரிந்து கொண்டால் கோபப்பட மாட்டார்கள். ரஜினியை நாங்கள் அவமானப்படுத்தவில்லை. அவர் மட்டுமல்ல, யாரையுமே இந்தப் படத்தில் தவறாக சித்தரிக்கவில்லை," என்றார்.

ரசிகர்கள் புரிந்து கொள்வார்களா?
 

படப்பிடிப்பில் விபத்து: நடிகர் அபிஷேக்பச்சனுக்கு 6 தையல்!


ஜெய்ப்பூர்: இந்திப் படப்பிடிப்பில் பிரபல நடிகர் அபிஷேக் பச்சன் காயமடைந்தார். கண்ணுக்கு அருகே காயம் ஏற்பட்டதால், அங்கு 6 தையல் போடப்பட்டது.

நடிகர் அமிதாப்பச்சனின் மகனும், பாலிவுட்டின் முன்னணி நடிகருமான அபிஷேக்பச்சன் நடித்து வரும் 'போல் பச்சன்' இந்திப் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூர் அரண்மனை வளாகத்தில் நடந்தது.

அப்போது, ஒரு காட்சியில் சைக்கிள் ரிக்ஷாவில் இருந்து அபிஷேக்பச்சன் இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.

இதில், அவருக்கு கை மற்றும் கால்பகுதிகளில் காயம் ஏற்பட்டது. கண்ணுக்கு அருகிலும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்காக மும்பை அழைத்து செல்லப்பட்டார். அங்கு 6 தையல் போடப்பட்டதாக அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

இதனால், அந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
 

கிசு கிசு - பேஷன் ஷோக்களில் நடிகைகளுக்கு டிமாண்ட்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
பேஷன் ஷோக்களில் நடிகைகளுக்கு டிமாண்ட்

9/14/2011 3:45:28 PM

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

பேஷன் மேடையில ஒய்யார நடை நடக்க ஹீரோயின்களை கூப்பிடுறாங்களாம்... கூப்பிடுறாங்களாம்... அதுக்கு தனி பேமென்ட் வேணும்னு ஹீரோயின்கள் எக்கச்சக்கமா டிமாண்ட் பண்றாங்களாம்... பண்றாங்களாம்... அதுக்கு சம்பந்தப்பட்ட கம்பெனிகாரங்களும் ஓகே சொல்றாங்களாம். பாலிவுட்ல இருக்கிற இந்த பழக¢கம், கோலிவுட் லயும் பரவியிருக்கு. இதனால நம்ம நடிகைங்க குஷியா இருக்காங்க... இருக்காங்க...

பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்னையில சிறு பட்ஜெட் படங்கள் பாதிக்கப்பட்டிருக்காம்... பாதிக்கப்பட்டிருக்காம்... சம்பளம் உயர்த்துற விஷயத்துல தயாரிப்புங்க பிடிவாதமா இருக்கிறதால அந்த படங்களோட ஷூட்டிங் அடிக்கடி தடைபடுதாம்... தடைபடுதாம்... யூனியன்ல சொல்லியும் பிரயோஜனம் இல்லைன்னு அந்த பட இயக்குனருங்க கவலையோடு சொல்றாங்க... சொல்றாங்க...

கோலிவுட்ல ஜொலிக்க என்ன வழின்னு பூனமான நடிகை, சமீபத்துல நடிகரு ஒருத்தரு சொன்ன ஜோசியரை சந்திச்சு கேட்டாராம்... கேட்டாராம்... பெயரை மாத்துங்க, வீட்டை மாத்துங்கன்னு ஜோசியரு சொன்னாராம்... சொன்னாராம்... இந்த மாற்றங்களை செய்யலாமான்னு நடிகை தீவிரமா யோசிக்கிறாராம்... யோசிக்கிறாராம்...




 

நயன்தாராவை கவர்ந்த அமலா பால்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நயன்தாராவை கவர்ந்த அமலா பால்

9/14/2011 3:44:00 PM

அமலா பால் விதவிதமாக போஸ் கொடுத்த போட்டோ ஆல்பத்தை இதழ் ஒன்றில் பார்த்த நயன்தாரா, உடனடியாக அமலாவுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினார். அதில், 'உங்களுடைய போட்டோவை பார்த்தேன். கொள்ளை அழகு. குறிப்பாக ஒரு படம் என்னை மிகவும் கவர்ந்தது. பாலிவுட் ஹீரோயின் பிரியங்கா சோப்ரா போல் இருந்தீர்கள்’ என்று புகழ்ந்து தள்ளி இருந்தார். உடனடியாக நன்றி மெசேஜ் அனுப்பிய அமலா, 'உங்கள் பாராட்டு மெசேஜ் கிடைத்தது. மகிழ்ச்சியில் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. இனிப்பான, பரிவான உங்கள் வாழ்த்து என்னை நெகிழ வைத்துவிட்டது. உங்கள் நிலையில் இருக்கும் வேறு எந்த ஹீரோயினும் இதுபோல் பாராட்ட மாட்டார்கள். உங்களை ரோல் மாடலாக வைத்து நானும் சினிமாவில் சாதிப்பேன்’ என கூறியுள்ளார்.

 

இனி ஒரிஜினல் கெட்அப் அஜீத் அதிரடி முடிவு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இனி ஒரிஜினல் கெட்அப் அஜீத் அதிரடி முடிவு!

9/14/2011 3:40:34 PM

அஜீத் கூறியது: மங்காத்தா படத்தின் பெரிய வெற்றி மகிழ்ச்சியை தந்துள்ளது. அர்ஜுன் இதில் நடித்தது பற்றி கேட்கிறார்கள். 'இப்படியொரு வேடம் இருக்கிறது நீங்கள் நடிக்க வேண்டும்' என்று நானே அவரிடம் கேட்டேன். ஒப்புக்கொண்டார். எந்தவொரு இடத்திலும் அவரது கேரக்டர் பாதிக்கக்கூடாது என்பதில் நானும் வெங்கட்டும் கவனமாக இருந்தோம்.

வெள்ளை நிற தலைமுடியுடன் நடித்தது பற்றி கேட்கிறார்கள். அதுதானே எனது நிஜ தோற்றம். 'பில்லா 2' படத்துக்கு பிறகு 'மங்காத்தா' வில் தோன்றிய அதே தோற்றத்தில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். இதற்கு தகுந்த ஸ்கிரிப்டை மட்டுமே ஒப்புக்கொள்வேன். விஷ்ணுவர்தன், வெங்கட்பிரபு போன்ற இயக்குனர்களின் படங்களில் மீண்டும் நடிக்கும் ஆசை உள்ளது. 'பில்லா 2' முடிந்தபிறகு யாருடைய இயக்கத்தில் நடிப்பது என்பது பற்றி முடிவு செய்வேன்.




 

நடிகைன்னா காதலிக்கணுமா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகைன்னா காதலிக்கணுமா?

9/14/2011 3:15:58 PM

நடிகை என்றால் காதலிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்றார் உதயதாரா. அவர் மேலும் கூறியதாவது: 'என்ன படங்களில் நடிக்கிறீர்கள், என்ன கேரக்டர் என்று எல்லாம் கேட்டுவிட்டு, கடைசியாக, எப்போது திருமணம்?' எனக் கேட்பதை எல்லோரும் சடங்காகவே வைத்திருக்கிறார்கள். அதற்கு பதில் சொல்லியே அலுத்துவிட்டது. இப்போதைக்கு திருமணம் பற்றிய எண்ணமில்லை. இதுவரை காதல் வலையிலும் விழவில்லை. நடிகை என்றால், கண்டிப்பாக காதலித்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நான் யாரையும் காதலிக்க மாட்டேன். தமிழில், 'சிவா பூஜையில் கரடி', 'பிரம்மபுத்ரா' படங்களில் நடித்து வருகிறேன். கன்னடத்தில் 4 படங்களில் நடித்தேன். அந்த மொழி எனக்கு தெரியாது என்றாலும் இப்போது ஓரளவு பேசுகிறேன்.




 

"மயக்கம் என்ன" அடுத்த தலைமுறை கதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

‘மயக்கம் என்ன’ அடுத்த தலைமுறை கதை

9/14/2011 3:13:58 PM

'மயக்கம் என்ன' படம் அடுத்த தலைமுறையினரின் பிரச்னைகளை பேசுகிற படம் என்று இயக்குனர் செல்வராகவன் கூறினார். ஏயூஎம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம், 'மயக்கம் என்ன'. தனுஷ், ரிச்சா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு ராம்ஜி. இசை ஜி.வி.பிரகாஷ்குமார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள செல்வராகவன் படம் பற்றி கூறியதாவது: இது அடுத்த தலைமுறை கதை. அவர்களின் பிரச்னைகளை பேசும் படம். இந்தப் படத்துக்கு 'இரண்டாம் உலகம்' என்று பெயர் வைத்திருந்ததாகக் கேட்கிறார்கள். அது வேறு படம். ஆர்யா, அனுஷ்கா நடிக்கிறார்கள். டிசம்பரில் ஷூட்டிங். 'மயக்கம் என்ன' படம் ஒவ்வொரு வீட்டிலும் பார்க்கும் நம் வீட்டு கதை என்று சொல்லலாம். தனுஷ், ரிச்சா இருவரையும் சுற்றிதான் கதை நகர்கிறது. ஆனால், இது காதல் கதை இல்லை. காதலும் உள்ள கதை. பெரும்பகுதி படம் முடிவடைந்துவிட்டது. இதில் நானும் தனுஷும் பாடல்கள் எழுதியுள்ளோம். அவை சிறப்பாக வந்துள்ளன. விரைவில் பாடல் வெளியீடு நடக்க இருக்கிறது.

 

வேலாயுதம் படத்தில் காமெடி ஹன்சிகா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வேலாயுதம் படத்தில் காமெடி ஹன்சிகா

9/14/2011 3:12:24 PM

'வேலாயுதம்' படத்தில் ஹன்சிகாவின் காமெடி ரசிக்கும்படியாக இருக்கும் என்று டைரக்டர் ராஜா கூறினார். ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் ஏராளமான பொருட்செலவில் தயாரித்துள்ள படம், 'வேலாயுதம்'. விஜய், ஜெனிலியா, ஹன்சிகா, சரண்யா மோகன், சந்தானம் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தை இயக்கும் ராஜா கூறியதாவது: சாதாரண கிராமத்து இளைஞன், பெரிய தலைவன் ஆகும் அளவுக்கு எப்படி உயர்கிறான் என்பது கதை. விஜய் இதுவரை நடித்த படங்களில் இருந்து இது வேறுவிதமாக இருக்கும். காமெடி, ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மெசேஜும் உண்டு. ஹன்சிகா, ஜெனிலியா இருவரது கேரக்டருமே பேசப்படும் விதமாக இருக்கும். இதுவரை அப்பாவி பெண்ணாக நடித்து வந்த ஜெனிலியா, இதில் சீரியஸ் கேரக்டரில் நடித்துள்ளார். ஹன்சிகாவின் காமெடி, ரசிக்கும்படியாக இருக்கும். விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எல்லோரும் கொண்டாடும் விதமான படம் இது. ஆக்ஷன் காட்சிகளில் விஜய் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. பிரியனின் கேமராவும் படத்துக்கு பக்கபலமாகியிருக்கிறது. பட வேலைகள் முடிந்துவிட்டன. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இவ்வாறு ராஜா கூறினார்.

 

50 லட்சம் செலவில் முகமூடிக்கு ஸ்பெஷல் டிரெஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

50 லட்சம் செலவில் முகமூடிக்கு ஸ்பெஷல் டிரெஸ்

9/14/2011 3:08:46 PM

'முகமூடி' படத்துக்காக, ரூ.50 லட்சம் செலவில் சிறப்பு உடை தயாரிக்க இருப்பதாக ஜீவா கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது: நான் நடித்துள்ள 'வந்தான் வென்றான்' வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. கண்ணன் இயக்கியுள்ளார். இது காதல், ஆக்ஷன் கொண்ட, ஜனரஞ்சகமான படம். ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள, 'நண்பன்' பட ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதில் விஜய், ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோருடன் நடித்தது பிரமிப்பான அனுபவமாக இருந்தது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும், 'நீதானே என் பொன்வசந்தம்' ரொமான்டிக் காதல் கதை. இதில் சமந்தாவுடன் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கு, இந்தியில் இந்த படம் தயாராகிறது. மற்ற மொழிகளில் வேறு நடிகர்கள் நடிக்கிறார்கள். நவம்பர் மாதம் மிஷ்கின் இயக்கும் 'முகமூடி' தொடங்குகிறது. இந்த படத்தில் எனது கனவு கேரக்டர் கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம். இந்த கேரக்டருக்காக, ரூ.50 லட்சம் செலவில் சிறப்பு உடை தயார் செய்கிறார்கள். இதற்காக ஹாங்காங் செல்ல இருக்கிறேன். இதையடுத்து ஜனநாதன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். இவ்வாறு ஜீவா கூறினார்.

 

25 கிலோ எடை குறைகிறார் ஷாம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
25 கிலோ எடை குறைகிறார் ஷாம்

9/14/2011 3:05:39 PM

வி.இசட்.துரை இயக்கும், '6' படத்துக்காக, 25 கிலோ உடை எடை குறைய உள்ளதாக ஷாம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தமிழில் எனக்கு திருப்புமுனை தரும் படத்துக்காக காத்திருந்தபோது, துரை சொன்ன கதை  பிடித்திருந்தது.ஒப்புக்கொண்டேன். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையில் படமானது. மற்ற காட்சிகள் பல்வேறு மாநிலங்களில் படமாக உள்ளன. முதல்முறையாக 6 கெட்டப்புகளில் நடிக்கிறேன். ஹீரோயின் பூனம் கவுர். ஒவ்வொரு கெட்டப்பிலும் நடிக்கும்போது, வித்தியாசமான அனுபவம் ஏற்படுகிறது. கண்டிப்பாக இப்படம் மைல் கல்லாக அமையும். ஒரு கெட்டப்புக்காக 88 கிலோவரை எடை கூடினேன்.இனி நடிக்க உள்ள கெட்டப்புக்காக, 25 கிலோ எடை குறைக்க, டைரக்டர் சொல்லியிருக்கிறார். இப்போது 8 கிலோ குறைத்துள்ளேன். தெலுங்கில், 'கிக் ஷாம்' என்ற பெயரில் நடித்து வருகிறேன். இப்போது நடிக்கும் 'ஷேத்ரம்' படத்தில், என்னுடன் ஜெகபதி பாபு, பிரியாமணி நடிக்கின்றனர். தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், மேலும் சில படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறேன்.




 

கிளாமராக நடிக்க விருப்பம் இல்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கிளாமராக நடிக்க விருப்பம் இல்லை

9/14/2011 3:01:59 PM

'புலிவேஷம்' படத்தில் நடித்தவர் திவ்யா பத்மினி. அவர் கூறியதாவது: தமிழில் நான் நடித்த 'அய்யன்', 'புலி வேஷம்', 'காசேதான் கடவுளடா' படங்கள் ரிலீசாகியுள்ளன. இதில், 'புலி வேஷம்' படத்தில் இடம்பெற்ற 'வாரேன் வாரேன்' பாடல் காட்சி மூலம் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 'அய்யன்' படத்தில் துணிச்சலான பெண்ணாக நடித்தேன். என் தோற்றத்துக்கு குடும்பப்பாங்கான வேடத்தில் நடிப்பது பொருத்தமாக இருக்கும். இதுபோன்ற கேரக்டரில்தான் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த முடியும். கிளாமராக நடிக்க விருப்பம் இல்லை. தமிழில் மேலும் சில படங்களில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறது.

 

பொண்ணு கிடைச்சா கல்யாணம்தான்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பொண்ணு கிடைச்சா கல்யாணம்தான்

9/14/2011 2:59:42 PM

கும்பகோணத்தில் நடைபெறும் 'வேட்டை' படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறார், ஆர்யா. தனக்கு பெண் பார்த்து விட்டதாக வந்த தகவல் குறித்து அவர் கூறியதாவது:
 எனக்கு பெண் பார்த்து விட்டதாக நிறைய தகவல்கள் வருகிறது. சில நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கள் வந்தது. இப்போது அது ஓய்ந்துவிட்டது. திருமணம் பற்றிய எண்ணம் இல்லை. அப்படி இருந்தால், வீட்டில் பெண் பார்க்கச் சொல்வேன். எனக்கு பொருத்தமான பெண் கிடைத்தால், உடனே கல்யாணம்தான். இப்போது 'வேட்டை'யில் நடிக்கிறேன். டிசம்பரில் படம் ரிலீசாகிறது. இதையடுத்து, செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறேன். நான் தயாரித்த 'படித்துறை' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணி நடந்து வருகிறது. தீபாவளிக்குப் பிறகு ரிலீசாகும்.

 

விக்ரம்விஜய் மீண்டும் இணைகிறார்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விக்ரம்விஜய் மீண்டும் இணைகிறார்கள்

9/14/2011 2:58:18 PM

விக்ரம் நடிக்கும் படத்தை மீண்டும் இயக்குகிறார் விஜய். விக்ரம், அனுஷ்கா, சாரா, சந்தானம் நடித்த படம், 'தெய்வத்திருமகள்'. யுடிவி விநியோகித்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை மீண்டும் இயக்குகிறார் விஜய். முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடக்கும் இந்தப் படத்தை யுடிவி தயாரிக்கிறது. இதில் விக்ரம் ஜோடியாக அனுஷ்கா, 'மதராசப்பட்டனம்' எமி ஜாக்ஷன் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். 'ஸ்டைலான ஆக்ஷன் படம் இது. இதுவரை தமிழில் டெக்னிக்கலாகவும் ஸ்டைலாகவும் இப்படியொரு படம் வந்ததில்லை என்பதுபோல் இருக்கும். போலீஸ் கதைதான் என்றாலும் இதுவரை பார்த்திராத காட்சி அமைப்புகள் புதுமையாக இருக்கும். ஆக்ஷன் காட்சிகளில் வெளிநாட்டு ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். முழுப்படமும் அமெரிக்காவின் கலிபோர்னியா, சான் பிரான்ஸிஸ்கோ பகுதிகளில் நடக்கிறது. டிசம்பரில் தொடங்கி மார்ச் அல்லது ஏப்ரலில் படம் முடியும். அடுத்த மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இயக்குனர் விஜய், லொகேஷன் பார்ப்பதற்காக, நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்' என பட வட்டாரங்கள் தெரிவித்தன.