ரம்யா கிருஷ்ணனுக்கு சீக்கிரம் யாராவது தாலி கட்டுங்கப்பா…

சன் டிவியின் வம்சம் தொடரில் கடந்த 10 எபிசோடுகளாகவே கதாநாயகி ரம்யாகிருஷ்ணனின் திருமணம் பற்றிய கதைதான். அதுவும் மூன்று நாட்களாக மணமேடையில் உட்கார்ந்திருக்கும் காட்சிதான் ஒளிபரப்பாகிவருகிறது.

கதையை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் இயக்குநரும், கிரியேட்டிவ் ஹெட்டும் குழம்பி சீரியலை பார்ப்பவர்களையும் வெறுப்பேற்றி வருகின்றனர்.

ரம்யா கிருஷ்ணனுக்கு சீக்கிரம் யாராவது தாலி கட்டுங்கப்பா…

குடும்பத்தை சேர்க்க வந்த சக்தி

சென்னையில் வசித்த சக்தி தன்னுடைய தாய்மாமன் குடும்பத்தை தன் தாயுடன் சேர்த்து வைக்க வேலைக்காரியாக திருநெல்வேலிக்கு வருவதில் தொடங்கிய கதை இப்போது திருமணத்தில் வந்து நிற்கிறது.

விஜயகுமார் - வடிவுக்கரசி

சீரியல் தொடக்கத்தில் என்னவோ நன்றாகத்தான் போனது. போலீஸ் கமிஷனர் வெற்றிவேல் அண்ணாச்சியாக விஜயகுமாரும், வில்லி நாகவல்லியாக வடிவுக்கரசியும் நடித்தனர்.

குடும்பத்தை கெடுப்பதுதான்

அண்ணாச்சி குடும்பத்தை எப்படியாவது கெடுக்கணும் என்று கூறி வில்லத்தனம் செய்த வடிவுக்கரசி ஜெயிலுக்குப் போய்விட்டார்.

விரட்டப்பட்ட கதாபாத்திரங்கள்

கதாநாயகியின் பெற்றோர்களை விபத்தில் சாகடித்துவிட்டனர். அண்ணாச்சி குடும்பத்தில் அத்தை தங்கம்மாவைத்தவிர இப்போது யாரையும் காணோம். அதேபோல நாகவல்லி குடும்பத்தில் ரமாமணி மட்டுமே சக்தியுடன் இருந்து வில்லத்தனம் செய்கிறாள்.

எத்தனை மாப்பிள்ளைகள்

சீரியலின் ஆரம்பத்தில் ஒரு மாப்பிள்ளை, அத்தைப் பையனின் காதல், முறைப்பையன் பொன்னுரங்கம், டாக்டர் மதன் என நான்கு மாப்பிள்ளைகள் வரிசையாக சக்திக்கு வந்தாலும் தாலி கட்டுவது யார் என்பதில்தான் குழப்பமே.

புதிதாக வந்த பொன்னுரங்கம்

தொடரில் இருந்து இயக்குநரை மாற்றியதால் புதிதாக ஒரு கிளைக்கதை சொருகி பெரிய அத்தை மகனாக பொன்னுரங்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். அவரும் ரமாமணி புண்ணியத்தில் காதலிக்க சக்திதான் தனது மனைவி என்று நினைத்து காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்.

டாக்டர் மாப்பிள்ளை

சக்திக்கு தான் மாப்பிள்ளை இல்லை டாக்டர்தான் மாப்பிள்ளை என்று தெரியவரவே அரைமனதோடு விட்டுக்கொடுக்கிறார். ஆனால் பார்ப்பவர்கள் எல்லாம் சக்திதான் உன் மனைவி என்று கூறி பொன்னுரங்கத்தை ஆறுதல்படுத்துகின்றனர்.

மணமேடையில் எத்தனைநாள்

இதோ அதோ என்று இழுத்து இப்போது மணமேடை வந்துவிட்டது சக்தியின் திருமணம். இடையில் டாக்டர் மாப்பிள்ளை மதன் திருமணம் செய்த மலைதேசத்துப் பெண் பூமிகாவைப் பற்றிய கிளைக்கதை வேறு ஓடுகிறது.

நிற்குமா? நடக்குமா?

டாக்டரைத் தேடி வந்த பூமிகா உண்மையை சொல்லுவாளா? போலீஸ் உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி திருமணத்தை நிறுத்துவாரா?. காணாமல் போன பொன்னுரங்கம் வந்துவிடுவாரா? இல்லையென்றால் ஆசைப்பட்டது போல டாக்டரே ரம்யா கிருஷ்ணன் கழுத்தில் தாலி கட்டிவிடுவாரா?

போரடிக்குதுப்பா

யாரா இருந்தாலும் கொஞ்சம் சீக்கிரம் தாலி கட்டுங்கப்பா போரடிக்குதுல்ல... கல்யாண சீனையே 15 நாள் காட்டுனா யாரு பார்ப்பாங்க என்பது தொலைக்காட்சி சீரியல் ரசிகர்களின் கருத்தாகும்.

பாதியில் நிறுத்திய ரம்யா

ரம்யா கிருஷ்ணன் தனது முந்தைய சீரியலான ராஜகுமாரியை எப்படி நகர்துவது என்று தெரியாமல் பாதியில் நிறுத்தினார். அதே கதி இந்த தொடருக்கு வரும்முன் கதையை வேறு களத்திற்கு மாற்றுவதே நல்லது என்கின்றனர் சீரியல் ரசிகர்கள்.

 

'தல' கையால் பிரியாணி சாப்பிட்ட கௌதம் மேனன் படக்குழு

சென்னை: அஜீத் குமார் தல 55 படக்குழுவினருக்கு தனது கையால் பிரியாணி சமைத்து கொடுத்துள்ளார்.

அஜீத் குமார் சூப்பராக பிரியாணி சமைப்பார் என்பது கோலிவுட்காரர்களுக்கு தெரியும். அவர் தான் நடிக்கும் படக்குழுவினருக்கு தனது கையாலேயே பிரியாணி சமைத்து பரிமாறுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

'தல' கையால் பிரியாணி சாப்பிட்ட கௌதம் மேனன் படக்குழு

அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். அஜீத் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக தல 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அஜீத் படப்பிடிப்பு தளத்தில் பிரியாணி சமைத்து படக்குழுவினருக்கு அளித்துள்ளார்.

100க்கும் மேற்பட்டவர்களுக்கு அவர் பிரியாணி சமைத்து கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜீத் 20 வயது வாலிபராக வருகிறாராம். அதற்காக தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார் தல.

கோடம்பாக்கத்தில் தல பிரியாணி நாளுக்கு நாள் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு எல்லாம் பிரியாணி இல்லையா தல?

 

சிவகுமார் பேரை சூர்யாவே கெடுத்திடுவார் போலிருக்கே! - பார்த்திபனின் திடுக் கமெண்ட்

சில பத்திரிகைகள்ல, செய்தியின் தலைப்புக்கும் உள்ளே இருக்கிற சமாச்சாரத்துக்கும் சம்பந்தமே இருக்காது. ச்சும்மா வாசகர்களைப் பிடித்து உள்ளே இழுக்கும் உத்தியாக தலைப்பை வைத்திருப்பார்கள். நாலு முறை படித்தும் புரியாமல் மண்டை காய்ந்து வெளியேறுவார்கள் வாசகர்கள்.

இயக்குநர், நடிகர், அவ்வப்போது 'கிறுக்கர்' என அவதாரமெடுக்கும் பார்த்திபனும் இந்த உத்தியை அவ்வப்போது பயன்படுத்துவார்.

சிவகுமார் பேரை சூர்யாவே கெடுத்திடுவார் போலிருக்கே! - பார்த்திபனின் திடுக் கமெண்ட்

அப்படித்தான் இன்று அஞ்சான் இசை வெளியீட்டு விழா மேடையில் அவர் உச்சரித்த ஒரு வாக்கியம், வந்திருந்த சூர்யா ரசிகர்களை துணுக்குற வைத்தது.

அவர் சொன்னது இதுதான்:

'போற போக்கைப் பார்த்தா சிவகுமார் சாரோட பேரை சூர்யா கெடுத்துடுவார் போலிருக்கு' என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

அடுத்து அவர் பேசியதற்கும் இந்த கமெண்டுக்கும் சம்பந்தமே இல்லை.

எனக்குத் தெரிஞ்சி, சினிமாவுல ரொம்ப அடக்கமானவர், பண்பானவர், அமைதியானவர்னா அது சிவகுமார் சார்தான். போற போக்கைப் பார்த்தா சிவகுமார் சாரோட பேரை சூர்யா கெடுத்துடுவார் போலிருக்கு.

ஆனா வரவர அவரை ஓவர்டேக் பண்றதே சூர்யாவோட வேலையா போச்சி.

எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் நான் ஓரமா போய் உட்காந்திடுவேன். யார்கிட்டேயும் போய் கைகுடுக்க தயக்கமா இருக்கும்.

ஆனா ரெண்டு மூணு நிகழ்ச்சியில பார்க்கிறேன். நான் எங்கேயாவது உட்கார்ந்திருப்பேன். சூர்யா நான் இருக்கும் இடம் தேடி வருவார். சார் எப்படி இருக்கீங்கன்னு விசாரிச்சி கை கொடுப்பார். இது சூர்யாதானான்னு ஆச்சர்யமா இருக்கும். அவர் இருக்கும் உயரத்துக்கு ஏற்ற உயர்ந்த பண்பு இது. அவர் மேலும் மேலும் உயர்வார்," என்றார்.

 

சிம்புவின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைத்த அஜீத்

சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தில் அவருடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறாராம் சிம்பு.

சிம்பு தான் அஜீத்தின் தீவிர ரசிகன் என்று கூறி வருகிறார். அவருக்கு அஜீத்துடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இந்நிலையில் அவர் கௌதம் மேனனை அணுகி அஜீத் படத்தில் தனக்கு நடிக்க ஒரு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுள்ளார்.

சிம்புவின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைத்த அஜீத்

இது அஜீத்துக்கு தெரியவர அவர் கௌதமிடம் சிம்பு என்னுடன் நடிக்க நீண்ட காலமாக ஆசைப்படுகிறார் இந்த படத்தில் நடிக்க வைக்கலாமே என்று தெரிவித்தாராம். அதற்கு கௌதமும் சரி என்று கூறியிருக்கிறார்.

படத்தில் சிம்புவுக்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லையாம். அதனால் ஒரு பாடலில் அஜீத்துடன் சேர்ந்து ஆட வைக்கப் போகிறார்களாம். இதன் மூலம் சிம்புவின் நீண்ட கால ஆசை நிறைவேறியுள்ளது.

அண்மை காலமாக சிம்பு விஜய்யுடனும் நெருக்கம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்போ தெரியுதா சமந்தாவுக்கு எந்த தோல் வியாதியும் இல்லையென்று!! - கேயார் கமெண்ட்

சமந்தாவுக்கு எந்த தோல் வியாதியும் இல்லை என்பதை, அவரை முக்கால் நிர்வாணமாகக் காட்டியதன் மூலம் நிரூபித்திருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி என்றார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார்.

சூர்யா நடித்த அஞ்சான் படத்தின் இசை வெளியீடு ஆர்ப்பாட்டமின்றி, அமைதியாக இன்று அரங்கேறியது சத்யம் திரையரங்கில்.

இப்போ தெரியுதா சமந்தாவுக்கு எந்த தோல் வியாதியும் இல்லையென்று!! - கேயார் கமெண்ட்

இந்த விழாவில் படத்தின் பாடல்கள் திரையிட்டுக் காட்டப்பட்டன. பத்திரிகையாளர்களும், தேர்ந்தெடுத்த ரசிகர்கள் சிலரும் மட்டும் அரங்கில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மேடையில் என்ன சொன்னாலும், ஓ என்று கத்தியும், கூடவே கமெண்ட் அடித்தும் கடுப்பேற்றினர் அந்த தேர்ந்தெடுத்த ரசிகர்கள் (ஒருவேளை அதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்களோ!!).

போகட்டும்... விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார், படத்தின் ஹீரோயின் சமந்தா பற்றி அடித்த கமெண்ட்தான் விழாவின் ஹைலைட் எனலாம்.

அப்படி என்னதான் சொன்னார்?

லிங்குசாமி எந்தளவுக்கு புத்திசாலியானவர்ங்கறதுக்கு ஒரு உதாரணம் பாருங்க... இந்தப் படத்தின் நாயகி சமந்தாவுக்கு ஸ்கின் ப்ராப்ளம். அதுனால நிறைய படங்கள்ல அவங்க நடிக்காம போயிட்டாங்கன்னு செய்தி வந்தது நினைவிருக்கலாம்.

இதே பிரச்சினைக்காக இந்த ‘அஞ்சான்' படத்துலருந்தும் அவரை தூக்கப் போறார் லிங்குசாமின்னு கூட செய்தி வந்திச்சு. ஆனா அப்படி எதுவும் நடக்கல... அவர் நடிக்க ஆரம்பிச்சிட்டார்.

அதுக்காக லிங்குசாமியே இந்தப் படத்துல ஒரு வேலை செஞ்சிருக்கார். சமந்தா எப்பவும் படங்கள்ல தன்னோட உடம்பை ரொம்ப காட்ட மாட்டாங்க. ஆனா இந்தப் படத்துல அவங்க டான்ஸ் ஆடுன ஒரு பாடலைப் பாத்திருப்பீங்க.

அதுல ஒவ்வொரு சீன்லேயும் சமந்தாவோட உடம்பை முழுக்கக் காட்டியதன் மூலம், சமந்தாவுக்கு தோல் வியாதியே இல்லைங்கிறதை நிரூபிச்சிருக்கார் லிங்குசாமி...," என்றார்.

கேயாரின் கமெண்ட் இப்படியென்றால், படத்தின் ஹீரோ சூர்யா, சமந்தா பற்றி அடித்த கமெண்டுகள் இன்னும் பலே ரகம்... அதை இன்னொரு கட்டுரையில சொல்கிறேன்!

 

ஜிகிர்தண்டா... சுள்ளான்களின் சண்டை!

ஜிகிர்தண்டா படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போனது ஒரு சாதாரண சினிமா வர்த்தக நிகழ்வு என்று யாரும் எண்ணிவிடக் கூடாது என்பதில் படத்தின் ஹீரோ சித்தார்த் குறியாக இருக்கிறார்.

இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போனதால் தன் சினிமா வாழ்க்கையே அஸ்தமித்துப் போன லெவலுக்கு அவர் பொங்கித் தீர்த்திருக்கிறார்.

இன்னொரு பக்கம், நீண்ட வருடங்களுக்குப் பிறகு, சற்று பரவாயில்லை என்ற ரேஞ்சுக்கு வந்துள்ள தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்துக்கு மறைமுகமாக ப்ளாக்பஸ்டர் அந்தஸ்து தருவதில் ஜிகிர்தண்டா தயாரிப்பாளரும் தனுஷின் அடுத்த படத் தயாரிப்பாளருமான கதிரேசன் குறியாக உள்ளார்.

ஜிகிர்தண்டா... சுள்ளான்களின் சண்டை!

இதுகுறித்த தனது அறிக்கையில், "வேலையில்லா பட்டதாரி படம் பெரும் வெற்றிப் பெற்றுள்ளதால், அந்தப் படம் கூடுதலாக ஒரு வாரம் போட்டியில்லாமல் ஓடி கோடிகளை அள்ள வசதியாக ஜிகிர்தண்டாவை தள்ளி வெளியிடுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இது ஜிகிர்தண்டா பட நாயகன் சித்தார்த்துக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. அதெப்படி தன்னைக் கேட்காமல் படத்தை தள்ளி வைக்கலாம் என சமூக வலைத் தளங்கள் மற்றும் நண்பர்களிடம் பொங்கி வருகிறார்.

நான்கு தொடர் தோல்விப் படங்களில் நடித்து வெறுத்துப் போயிருந்த தனுஷ், கிடைத்திருக்கும் ஒரு சுமார் வெற்றியை கண்ணீர் பொங்க கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு சர்ச்சை கிளம்பியிருப்பதும் நல்லதுதான் என்கிறாராம். படத்துக்கு கூடுதல் பப்ளிசிட்டி கிடைக்குமே என்பதுதான் அவர் சந்தோஷத்துக்கு காரணம்!

 

ஏண்டா கை கால் ஆடுது... மடத்தனமா பேசற?- ஒருதலைக் காதலனை உரிமையுடன் திட்டிய நடிகை!

சினிமாக்காரர்களின் மேடைப் பேச்சையும் நடத்தையையும் பார்த்தால், பல நேரங்களில் இது செட்டப்போ என்றுதான் தோன்றும். சினிமாவில் கூட பார்க்க முடியாத அத்தனை உலக மகா நடிப்பை மேடைகளில் பார்க்கலாம்.

நேற்று கூட அப்படி ஒரு 'சீன்' சத்யம் திரையரங்கில் அரங்கேறியது, ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது.

படத்துக்குப் பெயர் கடவுள் பாதி மிருகம் பாதி. பெங்களூரில் போரடித்தால் அவ்வப்போது கோடம்பாக்கம் பக்கம் வந்து 'நானும் இருக்கிறேன்' என அட்டென்டன்ஸ் போடும் பூஜா கவுரவ வேடத்தில் நடித்த படம் இது (என்னமோ இவர்தான் படத்தின் வெற்றியையே தீர்மானிப்பவர் மாதிரி பில்டப் வேறு!).

ஏண்டா கை கால் ஆடுது... மடத்தனமா பேசற?- ஒருதலைக் காதலனை உரிமையுடன் திட்டிய நடிகை!

இந்தப் படத்தை இயக்கி, நடித்திருக்கும் பெங்களூர்க்காரரான ராஜ்தான் படத்தின் தயாரிப்பாளரும்.

இந்த ராஜ் வேறு யாருமில்லை.. பூஜாவின் முன்னாள் ஒருதலைக் காதலராம். அவரது காதலை மறுத்துவிட்ட பூஜா, நட்பை மட்டும் தொடர்கிறாராம். இதனை விழா மேடையிலும் சொன்ன பூஜா, அந்த நட்புக்காகவே இந்தப் படத்தில் நடித்துள்ளதாகக் கூறினார்.

"இந்த ராஜ் தங்கமான மனசுக்காரன். இவனது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்," என்ற பூஜா, ' ராஜ், நமக்குள் ஒன்றும் இல்லைதானே?' என்ற கேட்டபோது, "இப்போதும் நான் உனக்காகக் காத்திருக்கிறேன்,"என்றார் ராஜ் (அடங்கெப்பா.. இந்த நடிப்பையெல்லாம் சினிமாவில் காட்டுங்கப்பா.. சகிச்சிக்கிட்டு பார்க்கவாவது முடியும்!).

ஏண்டா கை கால் ஆடுது... மடத்தனமா பேசற?- ஒருதலைக் காதலனை உரிமையுடன் திட்டிய நடிகை!

அடுத்து ராஜ் பேச வந்த ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். உடனே குறுக்கே வந்த பூஜா, "ஏன்டா.. இப்படி கை கால் எல்லாம் ஆடுது. மடத்தனமா பேசுறே... டான்ஸ் ஆடாதே. நேரா நின்னு பேசுடா.. ஒழுங்காக முதலில் வந்தவர்களை வரவேற்று விட்டுப் பேசு..அதுவும் தமிழில் பேசு..." என்று ஏகப்பட்ட அடாபுடாக்களை அள்ளி வீசி விழாவுக்கு வந்தவர்களை நெளிய வைத்தார்.

 

வேலையில்லா பட்டதாரியில் நண்பருக்கு வில்லன் 'வேலை' வாங்கிக் கொடுத்த அனிருத்!

வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றியை நாயகன் தனுஷை விட, வில்லன் அமிதேஷ்தான் சந்தோஷமாகக் கொண்டாடி வருகிறார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் மும்பையில் நடிப்புப் பயிற்சி பெற்றவர்.
இப்போது சென்னையில் வசித்து வருகிறார். இசையமைப்பாளர் அனிருத்தின் நெருங்கிய நண்பர் இவர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, வழக்கம்போல, ஒரு சரக்குப் பார்ட்டியில் வைத்து அமிதேஷை தனுஷுக்கு அறிமுகம் செய்து வைத்தாராம் தனுஷ்.

வேலையில்லா பட்டதாரியில் நண்பருக்கு வில்லன் 'வேலை' வாங்கிக் கொடுத்த அனிருத்!

உடனே, ‘வேலையில்லா பட்டதாரி' படத்தில் வில்லன் வேடத்தில் அமிதேஷை ஒப்பந்தம் செய்தார் தனுஷ் (படத்துக்கு கிட்டத்தட்ட 'கோஸ்ட் டைரக்டர்' என்பதால் தனுஷ் என்ன சொன்னாலும் மறுப்பில்லை!)

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமிதேஷ், படத்தின் வெற்றி குறித்த தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "அறிமுகமானது வில்லன் வேடத்தில் என்றாலும், எந்த மாதிரி வேடத்திலும் நடிக்க தயாராக உள்ளேன். குறிப்பாக ஹீரோவாக நடிக்க வேண்டும் என்றுதான் ஆசை. அதற்கு முதல்படியாகத்தான் வில்லன் வேடத்தை ஒப்புக் கொண்டேன்," என்றார்.

இவரது வில்லன் நடிப்பை தனுஷ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் வெகுவாகப் பாராட்டினார்களாம்.

 

'பூ' இருந்த கட்சியைக் குறி வைக்கும் 'மச்சான்ஸ்' நடிகை!

சென்னை: பூ உதிர்ந்து வந்த கட்சியில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்க மச்சான்ஸ் நடிகை முயற்சி செய்கிறாராம்.

மச்சான்ஸ் நடிகை அரசியலுக்கு வருவேன் என்று முன்பு கூறியிருந்தார். ஆனால் எந்த கட்சியில் சேர்வது என்பது பற்றி மட்டும் அவர் தெரிவிக்கவில்லை. அவரின் சொந்த மாநிலத்தில் பூ சின்னம் கொண்ட கட்சி ஆட்சி செய்வதால் நடிகை அந்த கட்சியில் சேரலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகை ஒரு பூ நடிகை வெளியே வந்த கட்சியை குறி வைத்துள்ளாராம். மச்சான்ஸ் நடிகை ரியல் எஸ்டேட் தொழில் செய்வது அனைவரும் அறிந்ததே. அந்த தொழில் மூலம் அவருக்கு கட்சிக்காரர்கள் சிலர் பழக்கமாகியுள்ளனர். அவர்கள் மூலம் தான் அந்த கட்சியில் சேர முயற்சிக்கிறாராம் நடிகை.

நடிகை பற்றி சிலர் கட்சியின் தளபதியிடம் கூறியுள்ளனர். அவரோ நம் கட்சியில் நடிகைகள் வேண்டாம். தேர்தல் நேரத்தில் வேண்டும் என்றால் பிரச்சாரத்திற்கு அழைப்போம். அவர் பிரச்சாரம் செய்ய உரிய சம்பளம் அளிப்போம் என்று தெரிவித்துள்ளாராம்.

இருந்தும் மச்சான்ஸ் நடிகை மனம் தளராமல் பூ உதிர்ந்த இடத்தை பிடிப்பதில் குறியாக உள்ளாராம்.

 

படத்தின் பப்ளிசிட்டிக்காக... தாயாரின் பேச்சைக் கேட்காமல் நடிகருடன் நெருக்கம் காட்டும் நடிகை!

கப்பலைச் செலுத்தும் தலைவன் பெயரில் உருவாகும் புதிய படத்தில் பிக்கப் டிராப் நடிகருடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் சின்னப்பூ நடிகை.

மன்மதனின் முன்னாள் காதலியான இந்த நடிகை, தற்போது இப்புதிய படத்தில் உடன் நடிக்கும் பிக்கப் டிராப் நடிகருடன் அதிக நெருக்கம் காட்டுகிறாராம். ஆனால், இதற்கும் நடிகையின் தாயார் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறாராம்.

சமூக சேவைகள் மூலம் மற்ற நடிகைகளிலிருந்து வேறுபட்டவர் என்ற நல்ல பெயரைச் சேர்த்து வைத்திருக்கும் தன் மகள் இது போன்ற நடவடிக்கைகளால் பெயரைக் கெடுத்துக் கொள்வாரோ என அஞ்சுகிறாராம் தாய்க்குலம்.

ஆனால், இது எதையும் கண்டு கொள்ளாத நடிகையோ, ‘சும்மா இதெல்லாம் படத்தின் பப்ளிசிட்டிக்கு' என கூலாகச் சொல்கிறாராம்.

ஏற்கனவே, தொடர்ந்து இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்ததால் தான் காதல், காதல் தோல்வி என அடுத்தடுத்து நாடகம் ஆடினார்கள் என நடிகையும், அவரது காதலரும் குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள். இந்நிலையில் அதே டெக்னிக்கை தனது புதிய படத்திலும் நடிகை பயன் படுத்த நினைப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.