என் மனதிலும், எனது குடும்பத்தினர் மனதிலும் எப்போதும் இருக்கிறார் தேவ் ஆனந்த்-ரஜினிகாந்த்


என் மனதிலும் சரி, எனது குடும்பத்தினர் மனதிலும் சரி எப்போதும் தேவ் ஆனந்த் நிரந்தரமாக இருக்கிறார் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தேவ் ஆனந்த் மரணம் குறித்து ரஜினி இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,

நடிகர் தேவ்ஆனந்த் மிகவும் சுறுசுறுப்பானவர். திறமையான நடிகர். அவரை 2 வருடத்துக்கு முன்பு சந்தித்தேன். அப்போது கட்டிப் பிடித்தது, நலம் விசாரித்ததெல்லாம் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. அந்த நிமிடங்களை மறக்க முடியாது.

தேவ்ஆனந்த் எப்போதும் என் மனதிலும் என் குடும்பத்தினர் மனதிலும் இருக்கிறார் என்று ரஜினி கூறியுள்ளார்.
 

ஆர்ப்பாட்டமே இல்லாமல் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர் தேவ் ஆனந்த்- கமல் புகழாரம்


மற்றவர்களைப் போல இல்லாமல், ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல், அமைதியாக அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்த ஒரே நடிகர் தேவ் ஆனந்த் மட்டுமே என்று நடிகர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

தேவ் ஆனந்த் மறைவு குறித்து கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இறுதி வரை துடிப்புடன் நடித்து வந்தவர் தேவ் ஆனந்த். எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக மிக அமைதியாக அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்த ஒரே நடிகர் இவர் மட்டும்தான்.

திரையுலகில் அமைதியாக பெரும் சாதனைகள் பலவற்றைப் படைத்தவர் தேவ் ஆனந்த்தான். அவருடைய கைட் படமாகட்டும், பிற படங்களாகட்டும், அத்தனையுமே சூப்பர் ஹிட் படங்கள்தான்.

மிகப் பெரிய கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தேவ் ஆனந்த். அந்தக் குடும்பத்தை நல்வழிப்படுத்தி வழி நடத்திச் சென்றவர். அவர் நடித்த முதல் படத்திலும் சரி, கடைசிப் படத்திலும் சரி ஒரே மாதிரியாகத் தோன்றியவர். அந்தஅளவுக்கு ஹேர் ஸ்டைலிலும் உடைகளிலும் மிகுந்த கவனம் செலுத்தியவர்.

எனது மகாநதி படத்தைப் பார்த்து விட்டு கண்கலங்கிப் போனார் தேவ் ஆனந்த். இதை இந்தியில் எடுக்கலாமா என்று அவரிடம் நான் கேட்டபோது, இந்த அளவுக்கு இந்தியில் எடுக்க முடியுமா என்பது சந்தேகம் என்றார். அவரது மரணம் இந்தித் திரையுலகுக்கு மட்டுமல்ல, இந்தியத் திரையுலகுக்கே பெரிய இழப்புதான்.

கடைசி வரை சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த நல்ல ஒரு நடிகர், நல்லதொரு தயாரிப்பாளர் தேவ் ஆனந்த். இன்னும் ஒரு வருடம் இருந்திருந்தால் இன்னும் ஒரு படத்தை கண்டிப்பாக எடுத்து விட்டுத்தான் போயிருப்பார். எனவே, மனிதனுக்கு ரிடையர்மென்ட் என்பது மரணம்தான் என்பதை தேவ் ஆனந்த் நிரூபித்திருக்கிறார் என்றார் கமல்ஹாசன்.
 

நான் மல்லிகாவை விட 'ஹாட்'-ஷ்ரத்தா சர்மா!


பிக் பாஸ் 5 வீட்டிலிருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட ஷ்ரத்தா சர்மா, தான் மல்லிகா ஷெராவத்தை விட கவர்ச்சிகரமானவள் என்று பெருமை பொங்கக் கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்த கவர்ச்சிக் கன்னி ஷ்ரத்தா சர்மா. சமீபத்தில்அவர் வெளியேற்றப்பட்டார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, இந்த முறை ரசிகர்களுக்கு நிறைய சாய்ஸ் இல்லை. எனவே என்னை தேர்வு செய்து வெளியேற்றி விட்டனர் என்றார் புன்னகையுடன்.

மேலும் அவர் கூறுகையில், நான் யாருடனும் சண்டை போடவில்லை. எனக்கு மக்களின் அன்பு எப்போதும் உண்டு என்றார்.

ஆனால் பிக் பாஸில் வீட்டில் குடியிருக்கும் பூஜா பேடி, மஹக் செஹல், ஜூஹி பார்மர் ஆகியோர் ஷ்ரத்தாவுக்கு எதிராக கச்சைக் கட்டிக் கொண்டு நின்றனராம். இதுகுறித்து ஷ்ரத்தா கூறுகையில், எனக்கு சக்தி கபூருடன் தொடர்பு இருப்பதாக நினைத்துக் கொண்டு இவர்கள் அணிசேர்ந்து என்னுடன் மோதினர். இது என்னை எரிச்சல்படுத்தியது. இதனால் பதிலுக்கு நானும் அவர்களுடன் மோதினேன். என்னை வெளியேற்றியதில் இவர்களுக்கு மகிழ்ச்சிதான் என்றார்.

சரி உங்களைக் கவர்ச்சிப் பாவையாகவே பார்க்கிறார்களே என்ற கேள்விக்கு அதில் என்ன தப்பு உள்ளது. உண்மையில் நான் மல்லிகா ஷெராவத்தை விட ஹாட்டான பெண். மல்லிகாவுக்கு நல்ல ஸ்டிரக்ச்சர் உண்டு. நல்ல கவர்ச்சிகரமான பெண்ணும் கூட. அவருக்கு நிகரான பிகர் என்னிடமும் உண்டு. எனது முகமும், வசீகரிக்கும் புன்னகையுமே எனக்குப் பெரிய பலம் என்றார் ஷ்ரத்தா.

மல்லிகாவுக்குப் போட்டி வந்தாச்சு...
 

தனுஷின் கொலவெறிப் பாடல் மாணவர்களைக் கெடுத்து விடும்-கவலையில் ஆசிரியர்கள், பள்ளிகள்!


தனுஷ் எழுதி, அவரே பாடி உலகம் முழுவதும் ஹிட் ஆகியுள்ள கொலவெறிப் பாடலுக்கு தற்போது பல்வேறு ரூபங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்தப் பாடல் குறித்து பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இந்தப் பாடலால், மாணவர்களின் மன நிலையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பாடல் ஹிட் ஆகி விட்டால் அதை உடனே கப்பென்று பிடித்துக் கொண்டு பாட ஆரம்பித்து விடுகிறார்கள். பாடியவர்களுக்குக் கூட அந்தப் பாடல் மறந்து போயிருக்கும். ஆனால் அதை ஒரு தரம் மட்டுமே கேட்டு மனதில் ஏற்றி விடும் கில்லாடிகள் இந்தக் காலத்துக் குழந்தைகள்.

இதுதான் தற்போது கொலவெறிப் பாடல் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவலைப்படக் காரணம்.

கொலவெறிப் பாடலில் உள்ள பல வரிகள் குழந்தைகளின் மனதைக் கெடுக்கும் வகையில் இருப்பதாக பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, தொடக்க, மெட்ரிகுலேஷன் மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் சங்க செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறுகையில், இந்தப் பாடல் மாணவர்களை கடுமையாக பாதிக்கும். பாடலின் முதல்வரியான கொலவெறி என்ற வார்த்தையே மிகவும் மோசமானது. இது மாணவர்கள், குழந்தைகளிடையே தவறான கருத்தை பரப்பும் வகையில் உள்ளது என்றார்.

மயிலாப்பூர் சர் சிவசாமி கலாலயா துணை முதல்வர் அருணா கண்ணன் இதுகுறித்துக் கூறுகையில், வகுப்பில் ஆசிரியர்கள் இல்லாதபோது மாணவர்கள் இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருக்கின்றனர். இது அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால் மற்ற வகுப்புகளில் பாடம் கெடுகிறது என்றார்.

இந்தப் பாடல் குறித்து பெற்றோர்கள் சிலர் கூறுகையில், இந்தப் பாடலால் பெரும் பாதிப்பு வராவிட்டாலும் கூட அதில் உள்ள கொச்சைத் தமிழ் மற்றும் கொச்சை ஆங்கில வார்த்தைகள், கடுமையான வார்த்தைகள், இளம் குழந்தைகள் மனதைக் கெடுக்கக் கூடியதாக உள்ளது. மேலும் மாணவிகளைப் பார்த்து மாணவர்கள் கிண்டலடித்துப் பாடும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன என்றனர்.
 

பைனான்சியரிடம் காரை வாங்கிக் கண்டு அவரைத் தாக்கவில்லை- புவனேஸ்வரி


பைனான்சியரிடம் காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதை அவர் கேட்டபோது ஆள் வைத்துத் தான் தாக்கியதாக கூறப்படும் புகாரை நடிகை புவனேஸ்வரி மறுத்துள்ளார்.

சென்னை தியாகராய நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் (40). பைனாசியர். இவருக்கு சொந்தமான ரூ. 9 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை மாதம் ரூ. 40 ஆயிரம் வாடகைக்கு எடுத்துள்ளார் புவனேஸ்வரி. முதல் மாதம் மட்டும் வாடகை கொடுத்து விட்டு அதன் பிறகு 10 மாதங்களாக வாடகை பணம் தராமல் காரை திருப்பி ஒப்படைக்காமல் ஏமாற்றி வருவதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்துள்ளார் அசோக்குமார்.

காரை திருப்பி தருமாறு கேட்டதற்கு அடியாட்களை அனுப்பி மிரட்டுவதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார். இந்த புகார் மனு தியாகராய நகர் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அசோக்குமார் புவனேஸ்வரி மீது புதிய புகாரை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

நேற்று இரவு வீட்டு முன்பு நான் நின்று கொண்டிருந்த போது சிலர் கும்பலாக வந்து என்னை தாக்கினர். புவனேஸ்வரி மீது கமிஷனர் அலுவலகத்தில் நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்திருந்தேன். அதன் பிறகு எனக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தது.

புவனேஸ்வரி அனுப்பிய ஆட்கள்தான் என்னை தாக்கியிருக்கலாம் என்று நினைக்கிறேன். இதுபற்றி இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரனிடம் போனில் தெரிவித்தேன். உடனடியாக போலீசார் வந்து விசாரித்தனர். என்னை தாக்கியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தன் மீதான புகாரை புவனேஸ்வரி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அந்தத் தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பில்லை. அதில் எனக்கு துளியும் சம்பந்தமில்லை.என் மீதான புகார் பொய்யானது என்று கூறியுள்ளார்.
 

சர்ச்சையைக் கிளப்பிய வீணா மாலிக்கின் ஐஎஸ்ஐ- நிர்வாண போஸ்!


பாகிஸ்தானின் சர்ச்சை நடிகை வீணா மாலிக் புதிதாக ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். எப்எச்எம் என்ற இதழுக்காக அவர் முழு நீள நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் தனது இடது தோள்பட்டையில் ஐஎஸ்ஐ என்று பாகி்ஸ்தான் உளவு அமைப்பின் பெயரை முத்திரை குத்தியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

எப்எச்எம் இந்தியா இதழுக்காக அவர் கொடுத்துள்ள இந்த நிர்வாண போஸும், அவரது தோள்பட்டையில் பொறித்துள்ள ஐஎஸ்ஐ முத்திரையும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

இந்தியாவில் கலர்ஸ் டிவி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு கலந்து கொண்டு அதன் மூலம் பெரும் பிரபலமானவர் வீணா மாலிக். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல ஆண் போட்டியாளர்களுடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்தி சலசலப்பையும் ஏற்படுத்தியவர் வீணா மாலிக்.

மேலும் தனது கவர்ச்சி போஸ்கள் மூலமும் அவர் சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இதனால் இவருக்கு முஸ்லீம் மத குருக்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் முழு நீள நிர்வாண போஸ் கொடுத்து அவர் முஸ்லீம் மத குருக்களின் கடும் கோபத்திற்குள்ளாகியுள்ளார்.

அவரது செயலுக்கு பாகிஸ்தான் முஸ்லீம் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், இந்தியாவில் சுதந்திரமாக புழங்கிச் சென்ற வீணா மாலிக் தனது தோள்பட்டையில், பாகி்ஸ்தான் உளவு அமைப்பின் பெயரை பொறித்திருப்பது இந்தியாவிலும் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

ஆனால் தான் இதுபோல நிர்வாண போஸ் கொடுக்கவில்லை என்று வீணா மறுத்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஆடையுடன்தான் போஸ் கொடுத்தேன். ஆனால் அதை நிர்வாணம் போல மார்பிங் செய்து விட்டனர். மேலும் எனது தோள்பட்டையில் ஒரு வேடிக்கைகாகத்தான் ஐஎஸ்ஐ பெயரை பச்சை குத்தியிருந்தேன்.மற்றபடி அதில் வேறு எந்த நோக்கமும் இல்லை என்று கூறியுள்ளார் வீணா.

ஆனால் அதை எப்எச்எம் மறுத்துள்ளது. ஒப்பந்தப்படிதான் அவரது நிர்வாணப் படம் வெளியாகியுள்ளது. மேலும், ஐஎஸ்ஐ முத்திரை தெரியாத வகையில்தான் நாங்கள் புகைப்படத்தை உருவாக்கினோம். ஆனால் வீணாதான், நன்கு பெரிதாக தெரியும்படி இருக்கட்டும் என்று கூறினார் என்று கூறியுள்ளது.

உண்மை எதுவோ... ?
 

மக்கள் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் உள்ளது கொலை வெறிப் பாடல்- ஜாவேத் அக்தர்


மும்பை: வைரஸ் போல இணையதளங்கள் மூலம் படு வேகமாக பரவி வரும் தனுஷ் எழுதி, அவரே பாடிய கொலை வெறிப் பாடலுக்கு பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் பாடல் என்று அவர் சாடியுள்ளார்.

ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி ... இந்தப் பாடல்தான் இன்றைய இளைஞர்களின் வாய் முழுக்க நர்த்தனமாடி வரும் பாடல். தமிழையும், ஆங்கிலத்தையும் கலந்து குழைத்து உருவாக்கப்பட்டுள்ள பாடல் பட்டி தொட்டி மற்றும் இன்டர்நெட்டில் பிரபலமாகி விட்டது. ரஜினிக்கும் கூட இந்தப் பாடல் பிடித்துப் போய் பாடலைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாராம்.

ஆனால் இந்தப் பாடலை ஜாவேத் அக்தர் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் தளத்தில் கூறுகையில், இளைஞர்களின் இந்த புதிய தேசிய கீதம் மிகச் சாதாரணமாக உள்ளது, பொருத்தமற்றதாக உள்ளது.

அனைவருமே இந்தப் பாடலை புகழ்கிறார்கள். ஆனால் மன்னர் நிர்வாணமாக நிற்கிறார். மிகச் சாதாரணமான ட்யூன், தரமே இல்லாத பாடல், மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையிலான வார்த்தைகள்.

இந்தப் பாடலின் வெற்றி நான் இதுகாலம் வரை எழுதிய அத்தனை பாடல்களும் குப்பை, உபயோகப்படாதது, உருப்படியில்லாதது என்பது போலாகி விட்டது. இதில் எந்தவிதமான லாஜிக்குமே இல்லை என்று கூறியுள்ளார் அக்தர்.

அக்தரின் இந்த கருத்துக்கு வரவேற்பும், எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து நிறைய பேர் கருத்துக்களை எழுதி வருகின்றனர்.
 

பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் லண்டனில் மரணம்


88 வயதான பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் லண்டனில் மரணமடைந்தார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட்டின் காதல் மன்னன், எவர்கிரீன் ரொமான்டிக் சூப்பர்ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் தேவ் ஆனந்த். சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தேவ் ஆனந்த்தை மருத்துவப் பரிசோதனைக்காக லண்டன் அழைத்து வந்திருந்தனர். அங்கு அவர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் உயிர் பிரிந்தபோது மகன் சுனில் உடன் இருந்தார்.

1946ம் ஆண்டு ஹம் ஏக் ஹெய்ன் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தேவ் ஆனந்த். பின்னர் அதற்கு அடுத்த ஆண்டு வெளியான ஸித்தி படம் அவரை சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது. அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் அத்தனையுமே சூப்பர் ஹிட்டாகின.

பேயிங் கெஸ்ட், பாஸி, ஜூவல் தீப், சிஐடி, ஜானி மேரா நாம், அமீர் காரிப், வாரன்ட், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, தேஸ் பர்தேஸ் ஆகியவை தேவ் ஆனந்த் நடிப்பில் வெளியான சில சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாகும்.

2001ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும், 2002ம் ஆண்டு தாதா சாஹேப் பால்கே விருதும் அளித்துக் கெளரவிக்கப்பட்டார் தேவ் ஆனந்த்.
  Read:  In English