குடிபோதையில் 'பப்'பில் மல்லுக்கட்டிய நடிகை

ஹைதராபாத்: சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஹைதராபாத்தில் செட்டிலான நடிகை குடிபோதையில் பப்பில் ஒருவருடன் சண்டை போட்டுள்ளார்.

மப்பில் 'பப்'பில் மல்லுக்கட்டிய நடிகை

ஆந்திராவில் இருந்து வந்து கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வந்தவர் அந்த நான்கு எழுத்து நடிகை. அவருக்கும் இசை குடும்பத்து வாரிசுக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் தான் நடிகைக்கும், அவரின் சித்திக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு தலைமறைவானார்.

இந்த சம்பவத்தை அடுத்து நடிகை ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் அவர் தனது தோழிகளுடன் ஹைதராபாத்தில் உள்ள பப் ஒன்றுக்கு சென்றுள்ளார். பப்பில் மூக்கு முட்ட மதுபானங்கள் அருந்தியுள்ளார்.

அப்போது அவரை யாரோ தெரியாமல் மோத நடிகை கடுப்பாகிவிட்டார். இதையடுத்து நடிகை குடிபோதையில் அந்த நபருடன் சண்டை போட்டுள்ளார். போலீசார் வந்து விலக்கிவிடும் அளவுக்கு சண்டை பெரிதாகியுள்ளது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தார்களா என்ற விவரம் தெரியவில்லை.

 

இயக்குநர் தங்கர் பச்சான் தாயார் மரணம்

பிரபல இயக்குனர் தங்கர்பச்சானின் தாயார் லஷ்மியம்மாள் நேற்று மாலை (24 ஜனவரி) 7மணியளவில் காலமானார். அவருக்கு வயது 91.

கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கபட்டிருந்தவர், நேற்று இயற்கை ஏய்தினார்.

இயக்குநர் தங்கர் பச்சான் தாயார் மரணம்

லஷ்மியம்மாள் அவர்களுக்கு செல்வராசு, கோவிந்தராசு, தேவராசு, தங்கர்பச்சான், வரதராசு என 5 மகன்களும் சாய வர்ணம், மனோரஞ்சிதம் என இரு மகள்களும் உள்ளனர்.

அம்மையாரின் இறுதி சடங்கு பண்ருட்டியில் அருகிலுள்ள பத்திரகோட்டை கிராமத்தில் இன்று (25 ஜனவரி) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.