சென்னை: நமீதா இப்போது முன்பை விட ஸ்லிம்மாகிவிட்டார். கடுமையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு (அப்படித்தான் சொல்கிறார்!) என தொடர்ந்து தீயா வேலை செய்து உடம்பை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டாராம்.
அதே நேரம் படங்களில் நடிக்க பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சொந்தப் படம் தயாரிக்கும் ஐடியா இருக்கிறதாம்.
இதெல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும் என்று ஓரமாக வைத்துவிட்டு, வேறொரு முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் நமீதா. அது அரசியல்.
சமீபத்தில் இரு பெரிய தேசிய கட்சிகள் அவரிடம் இதுகுறித்து பேச்சு நடத்தியதாகத் தெரிகிறது.
அவற்றில் காவிக் கட்சிதான் நமீதாவை அள்ளிக் கொண்டு போவதில் அதிக ஆர்வம் காட்டுகிறதாம். தமிழக பாஜகவை வலுப்படுத்தப் போவதாக சொல்லிக் கொண்டிருக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஐடியா இது என்கிறார்கள். குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட நமீதாவும், சீக்கிரமே தமிழக மேடைகளில் தோன்றி மச்சான்ஸ் ஆதரவை பாஜகவுக்குக் கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!