ராணி முகர்ஜி- ஆதித்ய சோப்ரா திருமணம்: பிப்ரவரி 10-ம் தேதி ஜோத்பூரில் நடக்கிறது!

மும்பை: பாலிவுட்டின் பிரபல நாயகி ராணி முகர்ஜியும் தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ராவும் வரும் பிப்ரவரி 10-ம் தேதி திருமணம் செய்து கொள்கின்றனர்.

ஜோத்பூரில் உள்ள பிரமாண்ட உமைத் பவன் மாளிகையில் இந்த திருமணம் நடக்கிறது.

ராணி முகர்ஜி- ஆதித்ய சோப்ரா திருமணம்: பிப்ரவரி 10-ம் தேதி ஜோத்பூரில் நடக்கிறது!

(ராணி முகர்ஜி படங்கள்)

இந்தி நடிகை ராணி முகர்ஜியும், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணமாகாமலேயே சேர்ந்து வாழ்வதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்பட்டது. தற்போது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் 10-ந் தேதி திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். முகூர்த்தம் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் மாளிகையில் நடக்கிறது. இரண்டு வாரங்கள் திருமண சடங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த திருமணத்துக்கு உறவினர்கள் மற்றும் குறிப்பிட்ட சில நடிகர் - நடிகைகளை மட்டுமே அழைக்கப் போகிறார்களாம்.

 

புறம்போக்கு படத்தில் ஆர்யா - விஜய் சேதுபதியுடன் ஷாம்!

எஸ்.பி.ஜனநாதன், யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, இயக்கும் ‘புறம்போக்கு' படத்தில் மூன்றாவது ஹீரோவாக ஷாமும் இணைந்துள்ளார்.

புறம்போக்கு படத்தில் ஆர்யாவும், விஜய் சேதுபதியும் இணை நாயகர்களாக நடிக்கின்றனர்.

புறம்போக்கு படத்தில் ஆர்யா - விஜய் சேதுபதியுடன் ஷாம்!

ஆனால் இப்போது புதிதாக அந்த படத்தில், ஆர்யா-விஜய் சேதுபதியுடன் ஷாம் இணைகிறார். அதுவும் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறாராம். ஏற்கெனவே எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ‘இயற்கை' படத்திலும் நடித்தவர் ஷாம்.

படத்தில் மூன்று பேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தாலும் நாயகியாக நடிப்பது என்னவோ கார்த்திகா மட்டும்தான்.

புறம்போக்கு படத்தில் ஆர்யா - விஜய் சேதுபதியுடன் ஷாம்!

படப்பிடிப்பு ஜனவரி 14ம் தேதி பொங்கல் அன்று குல்லு மனாலியில் தொடங்குகிறது.

தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், பிகானீர், பொக்ரான், ஜெய்சல்மீர் ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது.

 

மலையாளத்தில் அறிமுகமாகும் சந்தானம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சந்தானம் மலையாளப் படத்தில் அறிமுகமாகிறார்.

நகைச்சுவையில் இணையற்றவரான கவுண்டமணி பாணியைப் பின்பற்றி தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னுக்கு வந்தவர் சந்தானம்.

மலையாளத்தில் அறிமுகமாகும் சந்தானம்!

தனது ஒன்லைனர்கள் மற்றும் நக்கல் வசனங்களால் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார்.

தமிழ் சினிமாவில் நடிக்கவே நேரம் போதாமல் திணறும் சந்தானத்துக்கு, மலையாளப் படவுலகிலிருந்தும் வாய்ப்புகள் வந்துள்ளன.

'சலாலா மொபைல்ஸ்' என்ற படத்தின் மூலம் மலையாள திரைப்பட உலகிலும் அறிமுகமாக உள்ளார். மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பராக அழகர்சாமி என்ற தமிழராகவே இந்தப் படத்தில் அறிமுகமாகும் இவர், கதையின் முக்கிய திருப்புமுனையாக வருகிறாராம்.

ஒரு மொபைல் கடையில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் மம்முட்டி மகன் துல்கர் சல்மானும், நஸ்ரியா நசீமும் முதல் நிலை கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

இந்தப் படத்தில் மர்மமான குணாதிசயம் கொண்ட அழகர்சாமி என்ற தமிழ் இளைஞனாக நடிகர் சந்தானம் தோன்றுகின்றார். இந்தப்படத்தின் திரைக்கதையை உருவாக்கும்போதே நடிகர் சந்தானம்தான் இந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவராக இருப்பார் என்று எனக்குள் தோன்றி இப்படத்தின் இயக்குநர் சரத் ஏ ஹரிதாசன் தெரிவித்துள்ளார்.

சந்தானத்துக்காக பல நாட்கள் காத்திருந்து, அவரது காட்சிகளைப் படமாக்கியுள்ளனர். தனது கேரக்டருக்கு தானே டப் செய்துள்ளாராம் சந்தானம்.

 

விஜய்யின் பொங்கல் ஸ்பெஷல் ஜில்லா படத்துக்கு யு சான்றிதழ்!

விஜய்யின் பொங்கல் ஸ்பெஷல் படமான ஜில்லாவுக்கு தணிக்கைக் குழு யு சான்று அளித்துள்ளது. இதன் மூலம் வரி விலக்கு, சேனல் ஒளிபரப்பு போன்றவற்றை எந்த சிக்கலும் இல்லாமல் இந்தப் படம் கடந்துவிடும் எனத் தெரிகிறது.

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி வழங்க விஜய் - மோகன்லால், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ள படம் ஜில்லா.

விஜய்யின் பொங்கல் ஸ்பெஷல் ஜில்லா படத்துக்கு யு சான்றிதழ்!

ஆர்.டி. நேசன் இயக்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. ரிலீசுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரைலரும் வெளியாகிவிட்டது.

இந்த நிலையில் படத்தை பக்காவாக முடித்துவிட்டு, தணிக்கைக் குழுவினருக்கு போட்டுக் காட்டினர்.

படத்தைப் பார்த்த அதிகாரிகள், அனைவரு பார்க்கத் தகுந்ததாக உள்ளதாகக் கூறி, ஜில்லாவுக்கு யு சான்று வழங்கினர்.

விஜய்யின் பொங்கல் ஸ்பெஷல் ஜில்லா படத்துக்கு யு சான்றிதழ்!

இது விஜய்க்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இப்போதெல்லாம் யு சான்று இல்லாவிட்டால் வரி விலக்கு கிடைக்காது, டிவியில் ஒளிபரப்பவும் முடியாது என்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.

ஜில்லாவை பெரும் விலைக்கு வாங்கியுள்ளது சன் டிவி என்பது குறிப்பிடத்தக்கது.