என்னது.. த்ரிஷாவும் நயன்தாராவும் வரலியா?- ஏமாந்து திரும்பிய மக்கள்

போரூருக்கு அருகில் உள்ளது கெருகம்பாக்கம் கிராமம். இப்போது கிராமம் என்று சொல்ல முடியாது (காரணம் நிலத்தின் விலை அங்கு கோடிகளில்). இங்குதான் ஜிவி பிரகாஷ் நடிக்கும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.

படத்தின் தலைப்பைக் கேள்விப்பட்டதுமே, எங்கே த்ரிஷா, எங்கே நயன்தாரா.. ஒருவாட்டியாவது அவங்களைக் கண்ணுல காட்டுங்க என்ற கோரிக்கையோடு பெருசு சிறுசு என்ற பேதமில்லாமல் வந்துவிட்டார்களாம் அந்தப் பகுதி மக்கள்.

என்னது.. த்ரிஷாவும் நயன்தாராவும் வரலியா?- ஏமாந்து திரும்பிய மக்கள்

இது ச்சும்மா தலைப்புங்க.. அவங்க யாரும் இதுல நடிக்கல.. இந்தப் பொண்ணுதான் ஹீரோயின் என்று நடிகை ஆனந்தியைக் காட்டியிருக்கிறார்கள். அட நம்ம பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி இருக்கே என்று முணுமுணுத்தபடி கலைந்திருக்கிறார்கள் த்ரிஷ்- நயன் ரசிகர்கள்!

சிஜே ஜெயகுமார் தயாரிக்கும் இந்தப் படத்தில் அப்பாவி இளைஞனாக வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார். அவருக்கு ஜோடி ஆனந்தி. ஆதிக் இயக்கும் இந்தப் படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

 

தமிழ், தெலுங்கில் பதினைந்தே நாட்களில் படமான மான் வேட்டை!

ஒரு கோடி ரூபாய் செலவில், பதினைந்தே நாட்களில், தமிழ் தெலுங்கில் ஒரு படம் உருவாகியுள்ளது.

படத்தின் பெயர் மான் வேட்டை. இயக்கியிருப்பவர் தீ நகர், அகம் புறம் படங்களைத் தந்த திருமலை.

ஷரண் நாயகனாகவும், சுனிமா நாயகியாகவும் நடித்துள்ள இந்தப் படத்தில் தேஜஸ், பிரியா, பிரதீப், மாயா, சுமன் ஷெட்டி, வனிதா ஆகியவர்களும் நாயக - நயகியராக நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கில் பதினைந்தே நாட்களில் படமான மான் வேட்டை!

இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். விஜய் வல்சன், ரதீஷ் கண்ணா ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். கிருஷ்ண குமார், கமலக்கண்ணன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தை திகில் நிறைந்த திரில்லர் படமாக இயக்கியிருக்கிறார் திருமலை.

த்ரில்லர்...

இப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில், "நான்கு ஜோடிகள் வார விடுமுறையை கொண்டாட ஒரு மலைக்குச் செல்கிறார்கள். அங்கு ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் இறக்கிறார்கள். இதில் கடைசியாக ஒருவர் மட்டும் மிஞ்சுகிறார். அந்த மலையில் என்ன நடக்கிறது? இவர்கள் எப்படி இறந்தார்கள்? என்பதை சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறேன்.

ஒரு கோடிக்கும் குறைவுதான்...

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் 15 நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறேன். ஒரு கோடிக்கும் குறைவான செலவில் இப்படத்தை எடுத்திருக்கிறேன்.

மலைகளில்

மலை சம்மந்தப்பட்ட படம் என்பதால் கொடைக்கானல், கோனே நீர்வீழ்ச்சி, தலக்கோணம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளேன்.

மார்ச்சில்...

படத்தின் கதை 2 இரவுகளில் நடக்கும் வகையில் அமைத்திருக்கிறேன். படத்தின் முதல் காப்பி ரெடியாகிவிட்டது. மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

 

சினிமாக்காரன் சாலை-2 : 'படம் ஹிட்டு ஹிட்டு ஹிட்டு... ஆனாலும் போச்சி துட்டு!'

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

'மேனேஜர் சார். பணத்தைப்பத்தி கவலைப்படாதீங்க. ரியல் எஸ்டேட் பிசினஸ்ல நமக்கு துட்டு அருவியா கொட்டுது. ஆனா ஊருக்குள்ள நடந்து போனா நாலுபயலுக நமக்கு வணக்கம் வைக்கிற ‘கெத்து' இன்னும் கிடைக்கல. அதை சம்பாதிக்கதான் படம் எடுக்க வந்துருக்கேன். நம்ம படம் ஸ்டார்ட்டிங்ல இருந்து ஃபினிஷிங் வரைக்கும் எனக்கு பக்கா பிளான் வேணும். வர்ற ஒண்ணாம் தேதி பூஜை போட்டுரலாம். மீதி ப்ளானைச் சொல்லுங்க?'

‘பூஜைன்னக்கே சாங் ரெகார்டிங் ஆரம்பிச்சிட்டு, பிப்ரவரி பத்தாம் தேதி ஷூட்டிங் சார். ஒரே ஷெட்யூல் 50 நாள். வந்து எடிட்டிங், டப்பிங், ரீரெகார்டிங் மிக்ஸிங்ன்னு,தியேட்டர் ஃபிக்ஸிங்ன்னு ஒரு மாசம். மே1ம் தேதி ரிலீஸ் பண்றோம். மே 2-ம் தேதி சக்சஸ் மீட் வைக்கிறோம்'.

‘அதென்னய்யா இன்னும் படத்தையே ஆரம்பிக்கலை. டைரக்டர் புதுசு. அவரு முழி ஞானமுழியா திருட்டுமுழியான்னு தெரியலை. படம் பத்துநாள் ஓடனும். அசலாவது தேறனும். அதுக்குள்ள, அதுவும் படம் ரிலீஸான மறுநாளே சக்சஸ் மீட்டுக்கெல்லாம் ஐடியா சொல்ற?.

‘இப்ப நம்ம ஃபீல்டுல லேட்டஸ்ட் ட்ரெண்ட் இதுதான் சார். ‘வலிக்காத மாதிரியே நடிக்கிறதும்பாங்களே அது மாதிரி. படம் பரிதாபமா புட்டுக்கிட்டாலும் ‘உள்ள அழுகுறேன். வெளிய சிரிக்கிறேன்' பாடிக்கிட்டே சக்சஸ் மீட் வச்சிருவாங்க. நீங்க மறுநாள் வைக்கிறதுக்கு யோசிக்கிறீங்க. எவ்வளவு பேர் ரிலீஸன்னைக்கே வச்சிருக்காய்ங்கன்னு லிஸ்ட் தரட்டுமா? கூச்சப்பட்டா குழந்தை பொறக்குமா? வெக்கப்பட்டா வெளம்பரம் கிடைக்குமா?'

தயாரிப்பாளர் தஞ்சை தர்ம ராஜாவுக்கும், புரடக்‌ஷன் மேனேஜர் 'உள்குத்து' பொன்னுச்சாமிக்கும் இடையே நடந்த மேற்படி உரையாடலை, தமிழ்சினிமாவின் தற்போதைய போக்கை கூர்ந்து கவனிப்பவர்கள், கற்பனை என்று சொல்ல மாட்டார்கள். கோடம்பாக்கத்தில் இப்போதெல்லாம் படம் துவங்கும் சமயத்திலேயே நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாக ‘சக்சஸ் மீட்டும்' சர்வசாதாரணமாக இடம்பெற்று விடுகிறது. படம் வரும் பின்னே சக்சஸ் மீட் வரும் முன்னே!

சினிமாக்காரன் சாலை-2 : 'படம் ஹிட்டு ஹிட்டு ஹிட்டு... ஆனாலும் போச்சி துட்டு!'

இன்னும் சொல்லப் போனால் சமீப தினங்களில் பூஜைகள் கூட குறைந்துவிட்டன. யாருக்கும் சொல்லாமல் செய்யாமல் படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டு, ஆடியோ ரிலீஸை ஒட்டித்தான் ‘ஆஜர் ஐயா' என்கிறார்கள். ஆனால் முக்கால்வாசிப்பேர் சக்சஸ் மீட் வைக்கத் தவறுவதில்லை.

ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் நடிகர் நடிகைகள், பத்திரிகையாளர்கள், படத்தில் பணியாற்றியவர்கள், மற்றும் சில நண்பர்கள் என்று பல லட்சங்கள் செலவாகும் இந்த ‘ச்ச்சக்சஸ்ஸு மீட்டுக்கு. சிலசமயங்களில் இவை குடிவெறி பார்ட்டிகளாகவும் நிகழ்வதுண்டு.

'கரகாட்டக்காரன்' படத்தில் தன்னை ‘தில்லானா மோகனாம்பாள்' சிவாஜி மாதிரியும் கோவை சரளாவை பத்மினி மாதிரியும் இருப்பதாக சொல்லச்சொல்லி ஆள் செட்டப் பண்ணி, கடைசியில் கவுண்டரிடம் மாட்டி ‘ அண்ணே ஒரு வெளம்பரம்' என்று சொல்லி செந்தில் தலையைச் சொறிவாரே அந்தக்காட்சிதான் எனக்கு ஞாபகம் வரும் இந்த சக்சஸ் மீட்டுகளைப் பார்க்கும்போது.

‘மன்னார்குடியில ஹவுஸ்ஃபுல்னு சொன்னாக.... மதுரையில மாட்னி ஷோவை மூணு ஷோவா மாத்தியிருக்காக...கோயமுத்தூர்ல கூட்டம் குவியுதுன்னாக...' என்று அந்த சக்சஸ் மீட்டில் விடப்படும் ‘ஹிட்டு...ஹிட்டு...ஹிட்டு...' டயலாக்குகளெல்லாம் மேற்படி கோவை சரளா தனக்கு எத்தனை ஊரில் மாப்பிள்ளைகள் கியூவில் நிற்கிறார்கள் என்று ரீல் விட்டாரோ 'தட் ஷேம் ஸ்டோரி'தான்.

சினிமாக்காரன் சாலை-2 : 'படம் ஹிட்டு ஹிட்டு ஹிட்டு... ஆனாலும் போச்சி துட்டு!'

‘யோவ் படம் எடுக்க வர்றதே சொந்த ஊர்ல பெருமை பீத்திக்கத்தான். என் காசுல சக்சஸ் மீட் வைக்கிறேன்... இல்ல ஃப்ளாப் மீட் கூட வச்சிக்கிறேன். வந்துட்டாரு கருத்துச் சொல்ல? என்று தோன்றினால்... நீங்கள் சொல்வதும் சரிதான் என்று பாதம் பணிந்து ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் குட்டியாய் ஒரே ஒரு யோசனை மட்டும் சொல்கிறேன். விளம்பரத்துக்காக மேலும் மேலும் செலவழிப்பது உங்கள் உரிமைதான்.

ஒரு தட்டு உணவு ஆயிரத்துச் சொச்ச ரூபாய் என்று செலவாகும் ஸ்டார் ஹோட்டல்களைத் தவிர்த்துவிட்டு, அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து இதே சக்சஸ் மீட்டுகளை கொண்டாடுங்களேன். படம் தோற்றிருந்தாலும் இந்த ஒரு செயலுக்காகவே மனதில் மாபெரும் வெற்றிக் கொந்தளிப்பு ஏற்படும்!

(தொடர்வேன்...)

 

கமல் ஹாசன் மகள் அக்ஷரா ரத்தத்திலேயே நடிப்பு ஊறியுள்ளது- சொல்வது சூப்பர் ஸ்டார் மருமகன்

சென்னை: அக்ஷரா ஹாசன் ரத்தத்திலேயே நடிப்பு ஊறியுள்ளதாக புகழாரம் சூட்டினார் நடிகர் தனுஷ்.

ஆர்.பாலகிருஷ்ணன் என்ற பால்கி இயக்கத்தில் பிப்ரவரி 6ம்தேதி வெளியாக உள்ளது ஷமிதாப் என்ற ஹிந்தி திரைப்படம். இதில் அமிதாப்பச்சன், தனுஷ், கமல்ஹாசன் மகள் அக்ஷரா ஹாசன் போன்றோர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் பல்வேறு நகரங்களில் நடந்துவருகின்றன.

கமல் ஹாசன் மகள் அக்ஷரா ரத்தத்திலேயே நடிப்பு ஊறியுள்ளது- சொல்வது சூப்பர் ஸ்டார் மருமகன்

படம் குறித்து தனுஷ் கூறியதாவது: ஷமிதாப் திரைப்படத்தில் மிகவும் சவாலான வேடம், அக்ஷராவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முதல் படம் என்ற போதிலும், அக்ஷரா தனது கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார். ஏனெனில் நடிப்பு அக்ஷராவின் ரத்தத்திலேயே கலந்துள்ளது. எந்த ஒரு காட்சியிலும் அக்ஷரா நடிக்க சிரமப்பட்டதை நான் பார்க்கவேயில்லை.

அமிதாப்பச்சன் போன்ற ஜாம்பவானுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நான் என்றுமே நினைத்ததில்லை. அவருடன் நடிப்பதே, சிறப்பான அனுபவம். இவ்வாறு தனுஷ் தெரிவித்தார்.

 

திரிஷா இல்லன்னா நயன்தாரா... அதுவும் இல்லன்னா கயல் ஆனந்தி!

சென்னை: திரிஷா இல்லன்னா நயன்தாரா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த இடத்தில் குவிந்த மக்கள், திரிஷாவும், நயன்தாராவும் எங்கே என்று படப்பிடிப்பு குழுவிடம் கேட்டு அடம் பிடித்த சம்பவம் சென்னை அருகே நடந்துள்ளது.

இசையமைப்பாளரும் டார்லிங் பட ஹீரோவுமான ஜி.வி.பிரகாஷ், கயல் பட நாயகி ஆனந்தி நடித்துவரும் திரைப்படம் 'திரிஷா இல்லன்னா நயன்தாரா'. ஆதிக் ரவிசந்திரன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.தலைநகரம் திரைப்படத்தில் வடிவேல் பேசிய வசனத்தை அடிப்படையாக வைத்து இந்த தலைப்பை இயக்குநர் சூட்டியிருந்தார்.

திரிஷா இல்லன்னா நயன்தாரா... அதுவும் இல்லன்னா கயல் ஆனந்தி!

இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் நேற்று நடந்து கொண்டிருந்தபோது, அப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் சூட்டிங் ஸ்பாட்டில் குவிந்துள்ளனர். எல்லோர் முகத்திலும், அதிலும் குறிப்பாக ஆண்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. என்ன எதிர்பார்ப்பு என்கிறீர்களா...? திரிஷா இல்லன்னா நயன்தாரா சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருப்பார்கள், அவர்களை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்புதான் அது.

ஆனால் பார்த்து... பார்த்து.. கண்கள் பூத்தும், நயனையும் காணோம், திரிஷாவும் மிஸ்சிங். விரக்தியடைந்த ரசிகசிகாமணிகள், எங்கப்பா... எங்க ஆளுங்கள கண்ணுலயே காட்ட மாட்டேங்கிறீங்களே.. அப்படீன்னு, படக்குழுவிடம் முறுக்கிக் கொண்டனராம். நமட்டுச் சிரிப்பு சிரித்த படக்குழுவினர், திரிஷாவும், இல்லை நயன்தாராவும் கிடையாது. எங்கள் படத்தின் தலைப்பில் மட்டும்தான் அவர்கள் இருப்பார்கள் என்றார்களாம்.

ரசிகர்கள் முகத்தில் ஈயாடவில்லையாம். சரி வந்ததுதான் வந்தீங்க, அங்க பாருங்க எங்க படத்தோட ஹீரோயின் என்று ஆனந்தியை காண்பித்துள்ளனர். கயல் விழியழகி ஆனந்தியை பார்த்த மகிழ்ச்சியில், திரிஷா இல்லன்னா நயன்தாரா என்று நினைத்தோம்.. நயன்தாரா இல்லன்னா ஆனந்தி என்று கூறிக்கொண்டு சென்றனராம்.

 

ஷமிதாப்... அனேகன்... அடுத்தடுத்து இரண்டு தனுஷ் படங்கள்!

தனுஷுக்கு இந்த ஆண்டு தொடக்கமே அமோகமாக அமைந்துவிட்டது. கடந்த ஆண்டு வேலையில்லா பட்டதாரி என்ற பிரமாண்ட ஹிட் கொடுத்தவருக்கு, இந்த ஆண்டு அடுத்தடுத்து இரு பெரிய படங்கள் வெளியாக உள்ளன. அதுவும் ஒரு வார இடைவெளியில்.

நாடே பெரிதும் எதிர்ப்பார்த்திருக்கும் ஷமிதாப் படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி பெரிய அளவில் வெளியாகிறது. பால்கி இயக்கம், இளையராஜா இசை, அமிதாப் நடிப்பு என ஜாம்பவான்கள் இணைந்துள்ள படம்.

ஷமிதாப்... அனேகன்... அடுத்தடுத்து இரண்டு தனுஷ் படங்கள்!

இந்தப் படம் வெளியான ஒரு வாரம் கழித்து கே வி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அனேகன் வெளியாகிறது. இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கெனவே பெரிய ஹிட். எனவே இந்தப் படத்துக்கும் நல்ல எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இந்தியில் ஒரு பெரிய படம், தமிழில் அதற்கு நிகரான படம் என ஒரே வாரத்தில் இரண்டு படங்கள் வெளியாவது தனுஷின் கேரியரில் முக்கிய நிகழ்வுகளாகப் பார்க்கப்படுகிறது.

 

300-க்கும் அதிகமான அரங்குகளில் இசை... ஜனவரி 30-ம் தேதி வெளியாகிறது!

அஜீத், விஜய் இருவருக்குமே புதிய திருப்பத்தைத் தந்தவர் எஸ் ஜே சூர்யா. ஒரு கட்டத்தில் தானே இயக்கி ஹீரோவாக நடிக்கத் தொடங்கி, அதில் வெற்றியும் ருசித்துவிட்டார்.

ஆனால் அவர் படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இத்தனை காலமாக அவர் இயக்கி நடித்து வந்த படம் இசை. இந்தப் படம் ஒரு வழியாக வரும் ஜனவரி 30ம் தேதி வெளியாகிறது.

300-க்கும் அதிகமான அரங்குகளில் இசை... ஜனவரி 30-ம் தேதி வெளியாகிறது!

இந்தப் படத்துக்கு உலகெங்கும் 300க்கும் அதிகமான அரங்குகள் கிடைத்துள்ளன.

இரு இசை அமைப்பாளர்களுக்கு இடையிலான மோதல்தான் கதை என்கிறார்கள். இதனை படத்தின் ட்ரைலரும் உறுதிப்படுத்துகிறது.

படத்துக்கு இசை எஸ் ஜே சூர்யாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எஸ் ஏ சந்திரசேகரன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் அனிமேஷன் ட்ரைலர்


இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்கும் படம் டூரிங் டாக்கீஸ். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்த மாதம் 30-ம் தேதி படம் திரைக்கு வரும் இந்தப் படத்தின் அனிமேஷன் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

எஸ் ஏ சந்திரசேகரன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் அனிமேஷன் ட்ரைலர்

அபிசரவணன், அஷ்வின், கல்கத்தா நடிகை பாப்ரி கோஷ், மனோபாலா, இயக்குனர் ஏ.வெங்கடேஷ், ரோபோ சங்கர், சாய் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தில் '75 வயது வாலிபனாக' முதன் முறையாக ஹீரோ பாத்திரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளார்.

அதில் சிம்லாவை சேர்ந்த ஹேமமாலினி என்ற அழகி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். அருண்பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் அனிமேஷன் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதில் எஸ் ஏ சந்திரசேகரன், ஒரு அழகிய பெண்ணுக்கு பூக்களை நீட்டி காதலைத் தெரிவிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் திரைப்படம் தன் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக இருக்குமென்கிறார் எஸ் ஏ சந்திரசேகரன்.

ஜனவரி 30-ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

 

கத்தி கதை திருட்டு விவகாரம்: முருகதாஸ், விஜய்க்கு மீண்டும் சம்மன்

‘கத்தி' படத்தின் கதை திருடப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உள்பட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்ப தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘கத்தி' படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் கதை, தான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதை என்றும், தன்னுடைய கதையை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டதாகவும், அதற்கு நஷ்டஈடு கோரியும், வேறு எந்த மொழியிலும் கத்தி திரைப்படத்தை மொழியாக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் தஞ்சையை அடுத்த இளங்காடு கிராமத்தை சேர்ந்த அன்பு. ராஜசேகர் என்பவர் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கத்தி கதை திருட்டு விவகாரம்: முருகதாஸ், விஜய்க்கு மீண்டும் சம்மன்

இந்த வழக்கில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆகிய 5 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி முகமதுஅலி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் உள்பட 5 பேரும் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார்.

அன்றைய தினம் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் விஜய் உள்பட 5 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

 

என்னை அறிந்தால் படத்துக்கு யு ஏ... ரிவைசிங் கமிட்டிக்குப் போகிறது!

சென்னை: என்னை அறிந்தால் படத்துக்கு யு ஏ... ரிவைசிங் கமிட்டிக்குப் போகிறது!

இந்த நிலையில் படத்தை சென்சாருக்கு நேற்று அனுப்பி வைத்தனர். படம் பார்த்த குழுவினர் யு ஏ சான்றுதான் அளித்தனர். க்ளைமாக்ஸ் மற்றும் சில காட்சிகளில் உள்ள வன்முறை காட்சிகள்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

எனவே படத்துக்கு யு சான்று பெற மறு தணிக்கைக் குழுவுக்கு படத்தை அனுப்ப முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் கவுதம் மேனன்.

சமீபத்தில் வெளியான ஷங்கரின் ஐ படம் யுஏ சான்று பெற்றது. இதை எதிர்த்து ரிவைசிங் கமிட்டிக் போனார் தயாரிப்பாளர். ஆனால் அங்கும் யு சான்று கிடைக்காததால் யுஏ சான்றுடன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

 

அஜீத்தின் என்னை அறிந்தால் வெளியீடு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அஜீத்தின் அஜீத்தின் என்னை அறிந்தால் வெளியீடு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்த நிலையில் படத்தின் வெளியீட்டுத் தேதி மற்றும் வெளியாகும் திரையரங்குகள் விவரங்களுடன் இன்று விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இவற்றில் படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 5 என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அஜீத் ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

 

'ரேப்தான் இந்தியாவின் நேஷனல் கேம் ஆயிருச்சிடா..'.- இது வெட்டப்பட்ட தனுஷ் பட வசனம்

தனுஷ் நடித்த அனேகன் படம் சென்சாரில் ஏகத்துக்கும் வெட்டுப்பட்டிருக்கிறது. காரணம் படத்தில் காட்சிகளும் வசனங்களும் அந்த அளவு ஆட்சேபணைக்குரியதாக இருந்ததாம்.

அவற்றில் ஒன்றுதான் தலைப்பில் நீங்கள் படித்தது.

'ரேப்தான் இந்தியாவின் நேஷனல் கேம் ஆயிருச்சிடா..'.- இது வெட்டப்பட்ட தனுஷ் பட வசனம்

கேவி ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படம், அனைத்துப் பணிகளும் முடிந்து ரிலீசுக்குத் தயாராக உள்ளது. சமீபத்தில் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர்.

படம் பார்த்த தணிக்கை குழுவினர் நிறைய காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். ‘யு' சான்று தர முடியாது எனவும் மறுத்துவிட்டனர்.

‘யு' சான்றிதழ் கிடைக்காவிட்டால் வரி விலக்கு பெற முடியாது என்பதற்காக சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதற்கு படக்குழுவினர் ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து 23 இடங்களில் காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு வெட்டு விழுந்தது. ஒரு பாடல் காட்சியில் இடம் பெற்ற சிகரெட் பிடிக்கும் காட்சிகள் முற்றிலும் நீக்கப்பட்டன.

ஒரு பாடலில் இடம் பெற்ற கவர்ச்சி காட்சிகள் முற்றிலும் நீக்கப்பட்டன. மேலும் சில பாடல்களில் இடம் பெற்ற ஆபாச காட்சிகளும் நீக்கப்பட்டது. முத்த காட்சியொன்றையும் நீக்கியுள்ளனர்.

'ரேப்தான் இந்தியாவோட நேஷனல் கேம் ஆயிடுச்சுடா' என்ற வசனமும் நீக்கப்பட்டது. தொடு வானம் என்ற பாடலில் இடம் பெற்ற முத்த காட்சி நீக்கப்பட்டது.

இத்தனை வெட்டுகளுக்குப் பிறகுதான் படத்துக்கு யு சான்று அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அதிக வெட்டுப்பட்ட படம் அனேகனாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.