போராடிக்கும் தொடர்களுக்கு வருது ஆப்பு! சன் டிவி சீரியல் நேரம் மாறுது!!

Sun Tv Decides Change Serial Timings

சன் தொலைக்காட்சியில் இரவு நேரங்களில் ஒளிபரப்பாகி வரும் போரடிக்கும் தொடர்களை மதியநேரத்திற்கு மாற்ற நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்குப் பதிலாக மதியநேரத்தில் இல்லத்தரசிகளிடம் வரவேற்பை பெற்றுள்ள தொடர்களை இரவு பிரைம் டைமில் மாற்ற முடிவு செய்துள்ளனராம். சன் டிவி நிர்வாகம் விரைவில் இதற்கான அறிவிப்புகளை வெளியிட உள்ளதாம்.

நிறுவனத்தின் நிர்வாக மேலாளார்கள் பலரும் மாறிவிட்டதாலே இந்த மாற்றம் என்கிறது சின்னத்திரை வட்டாரம். இதனால் ப்ரைம் டைமில் சீரியலுக்கு ஸ்லாட் பெற்றுள்ள தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

எந்த நேரத்தில் என்ன அறிவிப்பு வருமோ அதற்கு முன்னதாக டிஆர்பிஐ கூட்ட ஏதாவது வழி இருக்கிறதா என்று ஆலோசனை செய்து வருகின்றனராம்.

 

5,000 மரக்கன்றுகள் நடுதல் துவக்க விழா: நடிகர் 'கஞ்சா கருப்பு' பங்கேற்பு

Actor Ganja Karuppu Attended 5 000

திருவள்ளூர்: முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல் துவக்க விழா கடந்த 29ம் தேதி நடைபெற்றது. இதில் நகைசுவை நடிகர் கஞ்சா கருப்பு கலந்து கொண்டார்.

முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல் துவக்க விழா கடந்த 29ம் தேதி இரவு 9.30 மணிக்கு நடைபெற்றது. முத்துப்பேட்டை ராமஜெயம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில், முத்துப்பேட்டை ரோட்டரி சங்க தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் ராஜ் மோகன், பொருளாளர் சிதம்பர சபாபதி, மெட்ரோ மாலிக், துணை ஆளுனர் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் விழாவில் திரைப்பட நகைச்சுவை நடிகர் 'கஞ்சா' கருப்பு, நடிகர் சண்முக ராஜன், சரித்திரம், ராமேஸ்வரம் போன்ற படங்களின் தயாரிப்பாளர் நிஜாம் ராஜா மற்றும் சிங்கப்பூர் தொழிலதிபர் 'டத்தோ' ராம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரவு நேரம் கடந்துவிட்டதால், விழாவில் சிறப்பு விருந்தினர்கள் சில நிமிடங்கள் மட்டுமே பேசினர்.

நடிகர் சண்முக ராஜன், தற்போது மதுரையில் நாடகக்கலை குழுவை நடத்தி வருகிறார். அவருடைய நாடகக்கலை குழு மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பல நாடகங்களை அரங்கேற்றி வருகிறது.

முத்துப்பேட்டையில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் இடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நாடகம் ஒன்றை விரைவில் அரங்கேற்ற முடிவு செய்துள்ளதாக சண்முகராஜன் தெரிவித்தார். அந்த விழிப்புணர்வு நாடகத்திற்கான செலவுகளை விழாவில் கலந்து கொண்ட தொழிலதிபர் ராம் ஏற்று கொள்வதாக தெரிவித்தார்.

 

மீடியாவில் ஆயிரம் பேசிக்குவாங்க.. அதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா?

Trisha Speaks On Her Affair With Raana   

சமீபத்தில் ஒரு பத்திரிகையின் விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. விழாவில் அனைவரின் கண்களையும் பிடித்திழுத்தது, த்ரிஷாவும் அவருடன் கம்போட்டு ஒட்டிய மாதிரியே வந்த தெலுங்கு நடிகர் ராணாவும்!

கைகோர்த்தபடி ஜோடியாக வந்த இருவரும் முன் வரிசையில் அமர, போட்டோகிராபர்கள் ப்ளாஷ் மழை பொழிந்தனர்.

நிகழ்ச்சி முடியும் வரை ஒன்றாக இருந்தவர்கள், முடிந்த பிறகு தனித்தனியாகப் புறப்பட்டார்கள்.

இருவரையும் அனுப்பிவிட்டு தனியாகக் கிளம்பினார் த்ரிஷா அம்மா உமா.

த்ரிஷா - ராணா திருமணம் விரைவில் நடக்கவிருப்பதாக செய்திகள் வருவதும், அவற்றுக்கு த்ரிஷா மறுப்பு தெரிவிப்பதுமாக உள்ள சூழலில், இருவரும் ஜோடியாக வந்து திருமணச் செய்தியை உறுதிப்படுத்தினர்.

திருமணம், ராணாவுடனான உறவு குறித்து த்ரிஷாவிடம் கேட்டபோது, "நாங்கள் இருவரும் நல்ல புரிந்து கொள்ளலுடன் இருக்கிறோம். மீடியாவில் ஆயிரம் விஷயங்கள் பேசுவார்கள். அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது", என்றார்.

ஆமா... இல்லைன்னு ஒரு வார்த்தையில பதில் சொல்லப் பழகுங்க தாயி!

 

சுவிட்சர்லாந்தில் கைப்பை திருட்டு- கண்கலங்கி அழுத ஹன்சிகா!

Hansika Losts Her Bag At Switzerland   

நடிகை ஹன்சிகாவின் கைப்பையை சுவிட்சர்லாந்தில் ஒருவர் அபேஸ் செய்துவிட்டார். இதனால் கண்கலங்கி அழுதார் ஹன்சிகா.

எங்கேயும் காதல் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி, இப்போது சின்ன குஷ்பு என்ற பட்டப் பெயருடன் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார் ஹன்சிகா.

இப்போது தமிழில் முக்கிய படங்களில் இவர்தான் ஹீரோயின். சேட்டை படத்துக்காக ஆர்யாவுடன் டூயட் பாட சமீபத்தில் சுவிட்சர்லாந்து சென்றிருந்தார் ஹன்சிகா.

இதில் நடித்துக்கொண்டிருந்த போது ஹன்சிகாவின் கைப்பை திருட்டு போனது. யாரோ ஒரு மர்ம நபர் அந்த பையை பறித்துக்கொண்டு ஓடிவிட்டான். பைக்குள் விலை உயர்ந்த ஐ-போன், ஐ-பாட், உயர் ரக மேக்கப் பொருட்கள் சுவிட்சர்லாந்து நாட்டு பிராங்க் (பணம்), அமெரிக்க டாலர் போன்றவற்றை வைத்திருந்தாராம் ஹன்சிகா.

இதனால் ஹன்சிகா அதிர்ச்சியாகி கண்கலங்கினார். இந்த திருட்டு குறித்து அங்குள்ள போலீசில் புகார் செய்தார்.

"திருட்டுப் போன பைக்குள் எனது தனிப்பட்ட படங்கள், சினிமா தொடர்பான ஸ்கிரிப்ட் போன்றவை இருந்தன. அவை தொலைந்தது பெரும் அதிர்ச்சியாக உள்ளது," என்றார் ஹன்சிகா.

 

வேக வேகமா ரெடியாகுது பாரதிராஜாவின் அன்னக் கொடியும் கொடிவீரனும்!

அட்டகாசமாக ஆரம்பித்து, நடுவில் ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்து நின்று, இப்போது மீண்டும் வேகமாக வளர்கிறது பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடி வீரனும்.




ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிக்கவிருந்தவர் பார்த்திபன். ஆனால் அவர் திடீரென நீக்கப்பட்டு அமீர் வந்தார்.
அமீர் - இனியா மற்றும் புதுமுகம் லட்சுமணன் - கார்த்திகா நடிக்க இந்தப் படம், தேனி அல்லி நகரத்தில் பூஜையுடன் அமர்க்களமாகத் தொடங்கியது.

அமீரும் இல்லே.. மனோஜ்தான்

ஆனால் பெப்சி - தயாரிப்பாளர் பிரச்சினை வெடித்தபோது, அமீரின் பெப்சி ஆதரவு நிலைப்பாடு மற்றும் பல பிரச்சினைகளால் அவரை தூக்கிவிட்டார் பாரதிராஜா. அவருக்கு ஜோடியாக நடித்த இனியாவும் தூக்கப்பட்டார். பின்னர் அமீர் பாத்திரத்தில் பாரதிராஜா மகன் மனோஜ் நடிப்பதாகக் கூறப்பட்டது.

பொங்கலுக்கா... தமிழ் புத்தாண்டுக்கா?

ஆனால் கடந்த சில மாதங்களாக இந்தப் படம் குறித்து எந்த செய்தியும் வரவில்லை. படமும் இழுத்துக் கொண்டே போனது.

இப்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது அன்னக் கொடியும் கொடிவீரனும் படப்பிடிப்பு. படத்தின் புதிய டிசைன்கள் மற்றும் போஸ்டர்களை வெளியிட்டுள்ளார் பாரதிராஜா.

பொங்கல் அல்லது புத்தாண்டுக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
 

எம் டிவியில் ஏ.ஆர். ரஹ்மான்!

A R Rahman On Mtv Program

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் எம் டிவியின் நிகழ்ச்சியில் பங்கேற்று பாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்.டிவி பிரபலங்களை வைத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. எம்.டிவியின் இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது ஆகும். ஏற்கனவே சீஸன் 1 இசை நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியது. அது பெருமளவில் வெற்றிபெற்றது.

தற்போது இசை நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனை தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசை, நாட்டியம் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை வைத்து சிறப்பு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகிறது எம்.டிவி. சீசன் 2ல் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்று இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார். இது விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

 

மீண்டும் அரிதாரம் பூசிய வைஜெயந்திமாலா!

Vaijayanthimala Is Acting Hindi Movie

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் கலக்கியவர் வைஜெயந்திமாலா.

பின்னர் சினிமாவிலிருந்து ஒதுங்கியவர், அரசியலில் குதித்தார். 1984-ல் எம்பியானார். யாருக்கும் பிரயோசனம் இல்லாத அளவுக்கு பதவி வகித்து ரிட்டயரானார்.

பின்னர் மகனை ஹீரோவாக்க முயன்று தோற்றார். இப்போது மீண்டும் தானே களத்தில் இறங்கியுள்ளார்.

இந்தியில் தயாராகும் படத்தில் வைஜெயந்திமாலா மீண்டும் நடிக்கிறார்.

இந்த செய்தியை தானே அறிவித்த வைஜெயந்தி மாலா, "சமூக விழிப்புணர்வுப் படம் என்பதால் இந்தப் படத்தில் நடிக்கிறேன். செயற்கை சுவாசம் பொருத்திக் கொள்ளும் நோயாளிகளுக்கு இந்தப் படம் உதவும். இப்படத்தை சந்தீப் மாலினி இயக்குகிறார்," என்றார்.

வைஜெயந்திமாலா சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டனவாம்.

 

மாற்றான் காப்பியல்ல.. ஒரிஜினல்! - நடிகர் சூர்யா

Mattrraan Is Original Not Copy Surya   

சென்னை: மாற்றான் திரைப்படம் எந்த ஆங்கிலப் படத்தின் தழுவலும் அல்ல… ஒரிஜினல் கதை… சமூக நலன் சார்ந்தது, என்று நடிகர் சூர்யா கூறினார்.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக, இரு வேடங்களில் சூர்யா நடித்திருக்கும் படம், `மாற்றான்.’ காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கிறார். கேவி ஆனந்த் இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அப்போது படத்தின் ஹீரோ சூர்யா பேசுகையில், “இது எனக்கு முக்கியமான காலகட்டம். நான் எடுக்கிற ஒவ்வொரு முடிவையும் மிகக் கவனமாக எடுக்க வேண்டிய கட்டம் இது. அப்படி மிக கவனமாக எடுத்த முடிவுதான், `மாற்றான்.’

இந்த படத்துக்காக, ஒன்றரை வருடம் உழைத்து இருக்கிறேன். ஒன்றரை வருடமும் `மாற்றான்’ படத்துக்காக என்னை நான் அர்ப்பணித்துக்கொண்டேன்.

இது, ஒட்டிப்பிறந்த சகோதரர்களை பற்றிய கதை மட்டுமல்ல. அப்பா-மகன் பாசம் இருக்கிறது. சமூக நலன் சார்ந்த கரு இருக்கிறது. ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடிய படமாக இருக்காது. ஆங்கில படமோ அல்லது வேறு எந்த படத்தின் தழுவலோ அல்ல. 4 வருடங்களாக உட்கார்ந்து எழுதப்பட்ட கதை,” என்றார்.

அவரிடம், ‘படத்தில் இரட்டையர்களாக நடித்ததால், இரண்டு சம்பளம் வாங்கினீர்களா?’ என்று கேட்டனர் நிருபர்கள்.

அதற்கு சூர்யா, ‘ஒரே சம்பளம்தான் வாங்கினேன்,’ என்றார் சிரித்தபடி.

இயக்குநர் கே.வி.ஆனந்த், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் சவுந்தர், ஆர்ட் டைரக்டர் ராஜீவன், எழுத்தாளர்கள் சுபா, பாடல் ஆசிரியர்கள் நா.முத்துக்குமார், விவேகா, தாமரை, ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ரங்கராஜன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

கா‌மெ‌டி‌ நடி‌கர்‌களுக்‌கு ஜோ‌டி‌யா‌ நடி‌க்‌க ஹீரோயின்கள் ஒத்‌துக்‌கிறதில்ல - விவேக்

Heroines Not Ready Share Screen With

சென்னை: காமெடி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க பொதுவாக ஹீரோயின்கள் ஒப்புக் கொள்வதில்லை என்றார் நடிகர் விவேக்.

ஏபி‌.சி‌. ட்‌ரீ‌ம்‌ஸ்‌ எண்‌டர்‌டெ‌ய்‌னர்‌ஸ்‌ நி‌றுவனம் சா‌ர்‌பி‌ல்‌ பஷீ‌ர்‌ குருவண்‌ணா‌‌ தயா‌ரி‌க்‌கும்‌ படம்‌ ‘பா‌லக்‌கா‌ட்‌டு மா‌தவன்’‌..

இந்தப் படத்தில் ஹீரோவா நடிக்கிறார் விவேக். சந்‌தி‌மோ‌ஹன்‌ கதை‌ எழுதி‌ இயக்‌குகி‌றா‌ர்‌. சோ‌னி‌யா‌ அகர்‌வா‌ல்‌, ‘செ‌ம்‌மீ‌ன்’‌ ஷீ‌லா‌, எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌ உட்‌பட பலர்‌ நடி‌க்‌கும்‌ இந்‌தப்‌ படத்‌தி‌ற்‌கு அஜ்‌மல்‌ அஜி‌ஸ்‌ இசை‌யமை‌க்‌கி‌றா‌ர்‌..

பாலக்காட்டு மாதவன் என்ற பாத்திரத்தை உருவாக்கிய இயக்குநர் கே பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ அறி‌முக வி‌ழா‌ நே‌ற்‌று செ‌ன்‌னை‌யி‌ல்‌ உள்‌ள பி‌ரசா‌த்‌ தி‌ரை‌யரங்‌கி‌ல்‌ நடை‌பெ‌ற்‌றது.

இவ்‌வி‌ழா‌வி‌ல்‌ கலந்‌துகொ‌ண்‌டு நடி‌கர்‌ வி‌வே‌க்‌ பே‌சி‌யதா‌வது:

“பொ‌துவா‌ என்‌ன மா‌தி‌ரி‌ நகை‌ச்‌சுவை‌ நடி‌கர்‌ என்‌றா‌லே‌ தே‌னி‌ குஞ்‌சாரம்‌மா‌, பறவை‌ முனி‌யம்‌மா‌, இல்‌லன்‌னா‌ பல்‌லு போ‌ன பா‌ட்‌டி‌கள்‌ போ‌ன்‌றவர்‌கள்‌தா‌ன்‌ ஜோ‌டி‌யா‌க நடி‌ப்‌பா‌ங்‌க. ஆனா‌ல்‌ ‘பா‌லக்‌கா‌ட்‌டு மா‌தவன்’‌ படத்‌தி‌ல்‌ முதலி‌ல்‌ செ‌ம்‌மீ‌ன்‌ ஷீ‌லா‌ நடி‌ப்‌பதா‌க சொ‌ன்‌னா‌ங்‌க. இவு‌ங்‌கதா‌ன்‌ நம்‌ம ஜோ‌டி‌ன்‌னு நி‌னை‌ச்‌சே‌ன்.

பி‌றகு சோனி‌யா‌ அகர்‌வா‌ல்‌ நடி‌க்‌கி‌றா‌ங்‌கன்‌னு சொ‌ன்‌னா‌ங்‌க. அவு‌ங்‌க ஏதோ‌ முக்‌கி‌யமா‌ன வே‌டத்‌துல நடி‌க்‌கி‌றா‌ங்‌கன்‌னு நி‌னை‌ச்‌சே‌ன்‌.. பி‌றகு அவு‌ங்‌கதா‌ன்‌ ஜோ‌டி‌ன்‌னு சொ‌ன்‌னா‌ங்‌க. எனக்‌கு பெ‌ரி‌ய இன்‌ப அதி‌ர்‌ச்‌சி‌யா‌ இருந்‌தது. அவு‌ங்‌க எனக்‌கு ஜோ‌டி‌யா‌ நடி‌க்க ஒத்‌துக்‌கி‌ட்‌டா‌ங்‌கடன்‌னா‌ அதுக்‌கு என்‌ன கா‌ரணம்‌னு யோ‌சி‌ச்‌சே‌ன்‌.. அது இந்‌தப்‌ படத்‌தோ‌ட கதை‌. அப்‌புறம்‌ படத்‌தோ‌ட கி‌ளை‌மா‌க்‌ஸ்.

பொ‌துவா‌ கா‌மெ‌டி‌ நடி‌கர்‌களுக்‌கு ஜோ‌டி‌யா‌ நடி‌க்‌க எல்‌லா‌ கதா‌நா‌யகி‌களும்‌ ஒத்‌துக்‌க மா‌ட்‌டா‌ங்‌க. இது சி‌னி‌மா‌ உலகி‌ல்‌ தவி‌ர்‌க்‌க முடி‌யா‌த வி‌ஷயம். இதை‌ தப்‌பு‌ன்‌னு சொ‌ல்‌ல முடி‌யா‌து. சி‌னி‌மா‌ உலகி‌ன்‌ டி‌ரண்‌ட் அப்‌படி‌.. இது சகஜம்‌தா‌ன்‌. இதை‌யு‌ம்‌ தா‌ண்‌டி‌ அவு‌ங்‌க நடி‌க்‌க ஒத்‌துக்‌கி‌ட்‌டா‌ங்‌கன்‌னா‌ கதை‌தா‌ன்‌ படத்‌தோ‌ட ஹீ‌ரோ.

‘செ‌ம்‌மீ‌ன்’‌ ஷீ‌லா‌ பே‌சும்‌ போ‌து குறி‌ப்‌பி‌ட்‌டா‌ங்‌க. இந்‌தப்‌ படத்‌துல என்‌ கூட நடி‌ப்‌பது பெ‌ருமை‌யா‌ இருக்‌குன்‌னு. ஆனா‌ அவு‌ங்‌க கூட நடி‌ப்‌பதுல எனக்‌குத்‌தா‌ன்‌ பெ‌ருமை. தெ‌ன்‌னி‌ந்‌தி‌ய மொ‌ழி‌களி‌ல்‌ 400 படத்‌துக்‌கு மே‌ல நடி‌ச்‌சு நடி‌ப்‌பு‌ல சா‌தனை‌ பண்‌ணவங்‌க.

திரைக்கதை மன்னன் பாக்யராஜ்

இந்‌தி‌ய தி‌ரை‌யு‌லகி‌ல்‌ தி‌ரை‌க்‌கதை மன்‌னன்‌னா‌, அதுல முதலி‌ல்‌ இருப்‌பவர்‌ இயக்‌குநர்‌ கே‌.பா‌க்‌யரா‌ஜ்‌. அவர்‌ நடி‌த்‌த ‘அந்‌த ஏழு நா‌ட்‌கள்‌’ படத்‌தி‌ல்‌ அவர்‌ ஏற்‌று நடி‌த்‌த கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ன்‌ பெ‌யர்‌தா‌ன்‌ ‘பா‌லக்‌கா‌ட்‌டு மா‌தவன்’. அந்‌தப்‌ பெ‌யரி‌‌ல், அவர்‌ ஏற்‌று நடி‌த்‌த பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ நடி‌க்‌கி‌றது எனக்‌கு பெ‌ருமை‌யா‌ இருக்‌கு. அவரும்‌ இந்‌தப்‌ படத்‌துல நடி‌க்‌க ஒத்‌துக்‌கி‌ட்‌டு இருப்‌பது மகி‌ழ்‌ச்‌சி‌யா‌ இருக்‌குது. அவர்‌ தி‌ரை‌க்‌கதை‌யை‌ மெ‌ருகே‌த்‌தும்‌ பணி‌யி‌ல்‌ ஈடுபடுவா‌ர்‌ என நம்‌பு‌கி‌றே‌ன்.”

இவ்‌வா‌று நடி‌கர்‌ வி‌வே‌க்‌ பே‌சி‌னா‌ர்.

நடி‌கர்‌ எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌, நடி‌கை‌ சோ‌னி‌யா‌ அகர்‌வா‌ல்‌, ஷீ‌லா‌ போ‌ன்‌றவர்‌களும்‌ பே‌சி‌னா‌ர்‌கள். முன்‌னதா‌க தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ பஷீ‌ர்‌ குருவண்‌ணா‌ வரவே‌ற்‌றா‌ர். இயக்‌குநர்‌ சந்‌தி‌ரமோ‌ஹன்‌ நன்‌றி‌ கூறி‌னா‌ர். வி‌ழா‌ நி‌கழ்‌ச்‌சி‌களை‌ இயக்‌குநனர்‌ பா‌லு மலர்‌வண்‌ணன்‌ தொ‌குத்‌து வழங்‌கி‌னா‌ர்.

 

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டால் போராட்டம் - சொல்கிறார் நடிகர் 'வேலூர்' ரவிச்சந்திரன்!

Kannada Actor Ravichadiran Against Releasing Water

மைசூர்: பிழைப்புக்காக திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் எப்படியெல்லாம் வேஷம் போட வேண்டியிருக்கிறது நடிகர்களுக்கு… தன் சொந்த அடையாளம், பிறந்த ஊர் என எல்லாவற்றையுமே மறைக்க என்னவெல்லாம் குட்டிக்கரணம் அடிக்கிறார்கள்…!

இதோ அதற்கு நல்ல உதாரணம் கன்னட நடிகர் ரவிச்சந்திரன் (இன்னொருவரும் உண்டு… அவர் ‘தஞ்சை’ ரமேஷ் அரவிந்த்!).

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டால் கன்னட திரையுலகம் போராட்டத்தில் குதிக்கும் என்று அவர் ‘சவுண்ட்’ விட்டுள்ளார்.

மைசூரில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், “கர்நாடகாவில் மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் பல பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. இதன் விளைவாக இங்குள்ள மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் ஏரி, குளங்கள், அணைகள் நீர் இல்லாமல் வறண்டு வருகிறது. தற்போது கர்நாடக அணைகளில் இருப்பு உள்ள நீர் குடிப்பதற்கே போதுமானதாக இல்லை (!?).

இந்த நிலையில், தமிழகத்தில் காவிரியிலிருந்து தண்ணீர் கேட்பது சரியல்ல. ஒரு வேளை கர்நாடக அரசின் விளக்கத்தை ஏற்காமல் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால், கன்னட திரையுலகம் திரண்டு வந்து போராட்டத்தில் குதிக்கும். கர்நாடக அரசும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது.

வருகிற நாட்களில் கர்நாடகாவில் மழை பெய்து, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பினால் மட்டுமே உபரி நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவோம். அதுவரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது,” என்றார்.

ரவிச்சந்திரன் பிறப்பால் ஒரு தமிழர். அவரது அப்பா பெயர் வீராசாமி. சொந்த ஊர் வேலூர்!!

 

மகிழ்ச்சியின் எல்லை எது?: நீயா– நானாவில் சுவையான விவாதம்!

Neeya Naana Vijay Tv Talk Show

எனக்கு மூன்று வேளை உணவு கிடைத்தால் நான் சந்தோசப்படுவேன். ஏனெனில் இளவயதில் பசியோடு படுத்த நாட்கள் அதிகம் என்று கூறி மகிழ்ச்சி என்றால் என்ன என்பதை விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் பதிவு செய்தார் இளைஞர் ஒருவர்.

வீடு கட்டினால் சந்தோசம், கார் வாங்குவது, நகை போட்டுக்கொள்வது, பட்டதாரி ஆவது, பக்கத்து வீட்டுக்காரரை விட அதிகமாக பணம் வைத்திருப்பது என சந்தேசம் பற்றி பல வரையரைகளை கூறினார்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். ஆனால் பசியற்று இருப்பதுதான் என்னுடைய மகிழ்ச்சி என்றார் இளைஞர் ஒருவர். பசியின் கொடுமையை பல நூறு ஆண்டுகளுக்கு கொடிது கொடிது வறுமை கொடிது என்று பாடியுள்ளார் ஔவையார்.

அதேபோல் நடுத்தர வயதைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் வலியற்ற ஆரோக்கியமான வாழ்க்கைதான் எனக்கு மகிழ்ச்சி என்றார். இன்றைக்கு பெரும்பாலான மனிதர்கள் ஏதாவது ஒரு நோயுடனோ, அந்த நோய் ஏற்படுத்தும் வலியுடனோ வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதனால்தான் வலியற்ற வாழ்க்கை தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் அந்த பெண்மணி.

நிகழ்ச்சியில் எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன், சிந்தனையாளர் டாக்டர் மோகன், எழுத்தாளர், சமூக பார்வையாளர் பாதர் ஜெகத் கஸ்பார் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

இன்றைய கால கட்டத்தில் எதையாவது ஒன்றை அடைவதுதான் சந்தோசம் என்கின்றனர். அதற்காக அவர்கள் இழப்பதை மறந்து விடுகின்றனர். ஆனால் நான் நம்பும் விசயத்தை மட்டும் செய்கிறேன் அதுதான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் மனுஷ்ய புத்ரன்.

இன்றைக்கு மகிழ்ச்சி என்பது வெளியே இருந்து திணிக்கப்படுகிறது என்றார் மனுஷ்ய புத்ரன். நாம் வெளிப்படையாக இருந்தால் மகிழ்ச்சியை நேருக்கு நேராக சந்திக்கலாம் என்றார். நாம் அடைபட்டுப் போயிருப்பதால்தான் சந்தோசம் நமக்கு கிடைப்பதில்லை என்றும் கூறினார்.

மகிழ்ச்சி என்றால் என்ன என்று பேசிய ஜெகத் கஸ்பார், நம்முடைய மகிழ்ச்சியை நாம்தான் தீர்மானிக்கவேண்டும் என்றார். புற பொருட்களின் வன்முறையில் இருந்து கிடைக்கும் விடுதலை கூட சிலருக்கு மகிழ்ச்சியைத் தரும் என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய மற்றொரு சிறப்பு அழைப்பாளர் டாக்டர் மோகன், மகிழ்ச்சி என்பது பகிர்ந்து கொள்வது என்றார். இந்தியாவைப் பொருத்தவரை அமெரிக்காவைப் போல, ஜப்பானைப் போல வல்லரசாகவேண்டும் என்பார்கள். ஆனால் உலக அளவில் அதிகம் தற்கொலைகள் நிகழ்வது ஜப்பானில்தான் என்றார். காரணம் அவர்கள் மகிழ்ச்சியுடன் இல்லை. பணமும், பொருளாதார வல்லமை மட்டும் மகிழ்ச்சியல்ல உலகில் உள்ள மிகச்சிறிய நாடான அதுவும் இந்தியாவிற்கு அருகில் உள்ள பூடான் நாட்டு மக்கள்தான் உலக அளவில் மகிழ்ச்சிகரமாக இருக்கின்றனர் என்று டாக்டர் மோகன் கூறினார். ஆனால் அதை யாரும் ஒத்துக்கொள்வதில்லை. மகிழ்ச்சி என்பது வேறு எங்கும் இல்லை. அது நமக்குள்தான் இருக்கிறது. பகிர்ந்து கொள்வதை கற்றுக்கொடுத்தால் அதுதான் உண்மையான மகிழ்ச்சி என்றார்.

ஆயிரம் ஆசைகள் இருக்கலாம் பசியோடு இருப்பவனுக்கு உணவு கிடைப்பதுதான் மகிழ்ச்சி. வலியற்ற ஆரோக்கியமான வாழ்க்கை அதுதான் மகிழ்ச்சி. எனவே சந்தோசத்தை வெளியே தேடாதீர்கள் அது உள்ளே இருக்கிறது. அதை பகிர்ந்து கொடுங்கள்

உணர்வுகளை, வருத்தங்களை, இருப்பதை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கூறி முடித்தார் கோபிநாத்

 

புதிய பாதை, கேளடி கண்மணி பட தயாரிப்பாளர் விவேக் சித்ரா சுந்தரம் மரணம்!

Vivek Chitra Sundaram Passes Away

சென்னை: பிரபல சினிமா தயாரிப்பாளர் விவேக் சித்ரா ஏ சுந்தரம் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 78.

பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை, பொண்டாட்டி தேவை, வசந்த் இயக்கிய கேளடி கண்மணி உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் சுந்தம்.

சோ இயக்கிய மிஸ்டர் சம்பத் படம்தான் இவரது முதல் தயாரிப்பு. மீண்டும் சோவை இயக்குநராக வைத்து ‘யாருக்கும் வெட்கமில்லை’ என்ற படத்தைத் தயாரித்தார்.

‘புதிய பாதை’ படத்தின் மூலம் பார்த்திபனை நடிகர்-இயக்குநராக அறிமுகம் செய்தவர் சுந்தரம்தான். மீண்டும் அதே பார்த்திபனை இயக்குந் மற்றும் ஹீரோவாகப் போட்டு `பொண்டாட்டி தேவை’ படத்தைத் தயாரித்தார்.

வசந்த் இயக்கிய ‘கேளடி கண்மணி’ இவரது தயாரிப்பில் வந்த மிக முக்கியமான படம்.

கடந்த ஒரு வருடமாக விவேக் சித்ரா சுந்தரம் நுரையீரல் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் மரணமடைந்தார்.

அவருடைய உடலுக்கு கே.பாலசந்தர், பார்த்திபன், வசந்த், சோ மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

நேற்று பகல் 1 மணிக்கு பெசன்ட் நகரில் உள்ள சுடுகாட்டில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.

மரணம் அடைந்த விவேக் சித்ரா சுந்தரத்துக்கு பானுமதி என்ற மனைவியும், பாலாஜி என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர்.

 

நடிகர் ராதாரவிக்கு 'டத்தோ ' விருது: மலேசியாவில் வழங்கப்படுகிறது

Datho Award Radha Ravi

சென்னை : நடிகர் ராதாரவியின் சமூக சேவையை பாராட்டியும் 38 ஆண்டுகால திரை உலக வாழ்க்கையை பாராட்டும் வகையிலும் மலேசியா நாட்டில் அவருக்கு டத்தோ பட்டம் வழக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகவேள் எம்.ஆர். ராதாவின் மகனான நடிகர் ராதாரவி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக உள்ளார். இவருடைய கலைச்சேவையை பாராட்டி, மலேசியாவில் உள்ள மலாகா நகரில் நவம்பர் 12-ந் தேதி, `டத்தோ’ பட்டம் வழங்கப்படுகிறது.

சமூக சேவைக்காக பட்டம்

ராதாரவி தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்கள் சங்கங்களில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவதை பாராட்டியும், அவருடைய 38 ஆண்டு கால கலைத்துறை சேவையை பாராட்டியும், அனாதை பிணங்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்வது போன்ற சமூக சேவையை பாராட்டியும் `டத்தோ’ பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பட்டத்தை பெறும் முதல் தென்னிந்திய நடிகர், ராதாரவி என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இந்தி நடிகர் சாருக்கானுக்கு, இதற்கு முன்பு `டத்தோ’ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

 

ஹீரோக்கள் தலையில் தட்ட வேண்டும் - கேவி ஆனந்த் திடீர் ஆவேசம்

Heroes Only Not Reason The Success Of A Movie

ஒரு படத்தின் வெற்றிக்கு நான்தான் காரணம் என்று எந்த ஹீரோவாவது சொன்னால் தலையில் தட்ட வேண்டும், என்றார் இயக்குநர் கேவி ஆனந்த்.

சூர்யாவை வைத்து மாற்றான் என்ற படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கேவி ஆனந்த்.

படத்தின் அறிமுக பிரஸ் மீட் நேற்று நடந்தது. கேவி ஆனந்த் பேசும்போது, “ஒரு படம் சிறப்பாக வர நடிகர் நடிகைகளைத் தாண்டி ஏராளமான தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு உள்ளது. ஆனால் படம் ஜெயித்ததும் அதற்கு நான்தான் காரணம் என்று எந்த நடிகராவது சொன்னால் அவர்களின் தலையில் தட்ட வேண்டும். இந்த தொழில்நுட்பக் கலைஞர்கள்தான் படத்தின் வெற்றிக்கு உண்மையான காரணம். மாற்றான் படத்தில் பலரது உழைப்பு உள்ளது. பல ஆராய்ச்சிகள் செய்து விஷயங்களைச் சேர்த்திருக்கிறோம்.

சென்னையில் மருத்துவ நிபுணர்கள் உதவியுடன் இரண்டு சூர்யாக்களும் ஒட்டியிருப்பது போல காட்டியிருக்கிறோம்,” என்றார்.

கேவி ஆனந்த் பேச்சை எந்த ரியாக்ஷனும் இல்லாமல் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் சூர்யா.

இந்தப் படத்தில் மெசேஜ் சொல்லியிருப்பதாக கதாசிரியர்கள் இருவரும் சொன்னார்களே, என்ன மெஸேஜ் அது? என்று கேட்டபோது, “மெஸேஜ் சொல்லும் அளவுக்கு எனக்கு தகுதி வந்துவிட்டதாக நினைக்கவில்லை. ஆனால் சமூகத்துக்கு தேவையான சில விஷயங்களை மேலோட்டமாக சொல்லியிருக்கிறேன்,” என்றார்.

 

பின்னாடி கிழிந்த டிரஸ்ஸுடன் வந்த டிவி நடிகை!

Sofia Vergara Embarrassed Over Dress Split At Emmys

நியூயார்க்: பிரபல டிவி நடிகை சோபியா வெர்கரா எம்மி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ரெட் கார்ப்பெட்டில் நடந்து வந்தபோது அவரது உடை பின்னாடி கிழிந்து போய் விட்டது.ஆனால் டிரஸ் கிழிந்தது கூடத் தெரியாமல் அவர் போட்டுக்கு நிகழ்ச்சி முழுவதும் வளைய வந்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு முதலில் இதுகுறித்துத் தெரியவில்லை. எனது காதலர் நிக் லோபய்பான் முதலில் இதைப் பார்த்தார். பின்னர் என்னிடம் வந்து இப்படித்தான் டிரஸ் போடுவதா என்று கூறி கிழிசலை சுட்டிக் காட்டினார். எனக்கு அப்படியே நெஞ்சே அடைத்தது போலாகி விட்டது என்றார்.

டிரஸ் கிழிந்ததை சொன்னதோடு நில்லாமல் அதைப் புகைப்படமும் எடுத்துக் கொண்டாராம் நிக். தனிமையில் அதை சோபியாவிடம் காட்டி அவருடன் சேர்ந்து ரசிக்க இப்படிச் செய்தாராம்.

என்ன காமெடி என்றால், இந்த கிழிந்த உடையுடன்தான் சோபியா நிகழ்ச்சி முழுக்க வலம் வந்துள்ளார். கிழிந்த மேட்டர் தெரிய வந்தவுடன் விழா மேடைக்கு பின்பக்கமாகப் போன சோபியாவுக்கு இரண்டு பெண்கள் வந்து டிரஸ்ஸை சரி செய்ய உதவினராம்.

 

லிட்டில் மாஸ்டர்ஸ் சத்யபிரமாணம்

Little Masters Season 4

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் லிட்டில் மாஸ்டர்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடும் குழந்தைகள் ஒவ்வொருவரையும் நம்பர் 1 ஆக்குவதற்கு பாடுபடுவேன் என்று அவர்களின் நடன ஆசிரியர்களிடம் சத்திய பிரமாணம் வாங்கினார் நடன இயக்குநர் ரகுராம்.

தென்னிந்தியாவின் மாபெரும் நடன நிகழ்ச்சி ஜெயா டிவியின் லிட்டில் மாஸ்டர்ஸ். மூன்று ஆண்டுகளில் மூன்று வெற்றிகரமான சீசன்களை கடந்து, 2012ல் மிகவும் பிரம்மாண்டமான முறையில் சீசன் நான்கை எட்டி, விறுவிறுப்பாக செல்கிறது.

தமிழகத்தின் மூன்று முக்கிய நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘டாப் 20 குட்டி நடனப் புயல்கள்" அவர்களின் நடன ஆசிரியருடன், நடன பள்ளி நண்பர்களுடன் பங்கேற்று நடனமாடுகின்றனர். நிகழ்ச்சியில் நடனமாடும் குழந்தைகளையும், ஆசிரியர்களையும் கூண்டில் ஏற்றிய ரகுராம் மாஸ்டர், நீதிபதியாக மாறி அவர்களிடம் சத்தியப்பிரமாணம் வாங்கிக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களான நடிகர்கள் பிரிதிவ்ராஜ், ராகவ் இவர்களோடு பிரபர நடன இயக்குனர் ரகுராம் மற்றும் திரைப்பட நடிகை மும்தாஜ் நடுவர்களாக இணைந்துள்ளனர். இதில் ஆச்சரியப்படுத்தக்க விசயம் என்னவெனில் நடிகை மும்தாஜ் அழகாக தமிழில் பேசுவதுதான். இந்த வெற்றி கொண்டாட்டத்தில் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கலந்துகொண்டு சிறப்பித்தார். கையில் பாகன் படத்தின் சக்ஸஸ் பதாகையை ஏந்தி நிகழ்ச்சியின் வெற்றிக்காக வாழ்த்தினார்.

லிட்டில் மாஸ்டர்ஸ் சீசன் 4 ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 

காந்தி ஜெயந்திக்கு ஒஸ்தி, ஹே ராம், அவன் – இவன்!

Hey Ram Osthi Avan Ivan Gandhi Jayanthi Spl   

மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாளை ஒட்டி சன் டிவியில் ஒஸ்தி, கலைஞர் டிவியில் ஹே ராம், விஜய் டிவியில் அவன் - இவன் உள்ளிட்ட சிறப்புத் திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன.

அக்டோபர் 2 ம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை என்பதால் வீட்டில் இருக்கும் ரசிகர்களுக்காக தொலைக்காட்சிகளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

சன் தொடங்கி ஜெயா, கலைஞர், விஜய் என சொல்லி வைத்தது போல பெரும்பாலான சேனல்களில் ‘தாண்டவம்' குழுவினரின் பேட்டி இடம்பெறுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமாவிற்கு வந்துள்ள ஸ்ரீதேவியின் பேட்டி கலைஞர் டிவியிலும், ஜெயா டிவியிலும் இடம் பெறுகிறது.

சிறப்புத் திரைப்படங்களாக சன் டிவியில் காலையில் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா, மதியம் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் ஒளிபரப்பாகிறது. இந்தியத் தொலைக்காட்சியில் முதல்முறையாக மாலை 6 மணிக்கு சிம்பு நடித்த ஒஸ்தி ஒளிபரப்பாகிறது. கலைஞர் தொலைக்காட்சியில் காலையில் காந்தி திரைப்படமும், மாலையில் கமல் நடித்த ஹே ராம் திரைப்படமும் ஒளிபரப்பாகிறது. விஜய் டிவியில் காலை 11 மணிக்கு விஷால், ஆர்யா நடித்த அவன் - இவன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.