எந்த நிர்பந்தத்துக்கும் அடிபணியாத போராளி ராமச்சந்திர ஆதித்தனார்!- பாரதிராஜா

சென்னை: தமிழின உணர்வில் எந்த நிர்பந்தங்களுக்கும் அடிபணியாத ஒரு போராளியாய் நின்றவர் பா ராமச்சந்திர ஆதித்தன் என்று இயக்குநர் பாரதிராஜா கூறினார்.

மாலை முரசு' நிர்வாக ஆசிரியரும் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகனுமான பா.இராமச்சந்திர ஆதித்தன் நேற்று காலை காலமானார்.

எந்த நிர்பந்தத்துக்கும் அடிபணியாத போராளி ராமச்சந்திர ஆதித்தனார்!- பாரதிராஜா

அவருடைய மறைவுக்கு திரைப்பட இயக்குனர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடையே இன்றவும் தமிழ் மொழி பேச்சாகவும், எழுத்தாகவும், செம்மொழியாகவும் உயர்ந்து, தமிழ் நெஞ்சங்களில் எல்லாம் உயர்த்தெழுவதற்கு முக்கிய பங்காக ‘தினத்தந்தி' குழுமத்தைக் கூறலாம்.

தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டுக்கு மேலாக ‘தினத்தந்தி', ‘மாலை முரசு' செய்தித்தாள்கள் வாயிலாக தமிழ் மொழியை பட்டிதொட்டி எங்கும் பாமரனும் எளிதாக புரிந்து கொண்டு வாசித்து, எழுதி, நேசித்து தமிழன் என்ற அடையாளத்தோடு நிமிர்ந்து நிற்க இன்றளவும் தமிழனின் பின்புலமாக நின்று போராடிக் கொண்டிருக்கிறது.

தமிழர்களுக்கு நேரிடையாகவும், ‘மாலை முரசு' செய்தித்தாள் வழியாகவும் ஒரு தமிழனாய் நின்று ஈழத் தமிழர் பிரச்சினையில், எந்த அரசுக்கும் அடி பணியாமல் நிர்பந்தங்களுக்கு உட்படாமல், இன்றுவரை போராடிய ஒரு போராளி, இராமச்சந்திரன் ஆதித்தனார் இன்று நம்மிடையே இல்லை என்று அறியும்போது என் நெஞ்சம் கணக்கிறது, கண்கள் பனிக்கின்றன.

என் ஆத்மார்த்த நண்பராகவும், தமிழன் என்ற ஒரு இன பற்றுதலில் என்னை தன் நெஞ்சில் வைத்து எந்த சூழ்நிலையிலும் என்னை உயர்த்தியே மதிப்பிட்டு என்னை ஊடகத்தின் வாயிலாக ஊனப்படுத்தாமல், உயர்வாகவே சித்தரித்த என் மரியாதைக்குரிய இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் மறைவு அவரது குடும்பத்துக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல!

அனைத்துலக தமிழர்களும் அந்த தென்பாண்டித் தமிழனை, அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம். அவருடைய குடும்பத்தாருக்கு ஏற்பட்ட இழப்பில் பங்கேற்று, உலகத் தமிழர்கள் அனைவரும் நம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வோம்," என்று கூறியுள்ளார்.

 

நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் இயக்கும் படம் - சங்கர் கணேஷ் இசையமைக்கிறார்!

நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் இயக்கும் படம் - சங்கர் கணேஷ் இசையமைக்கிறார்!
நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் இயக்குனராக அறிமுகமாகிறார். தனது முதல் படத்துக்கு இயக்குநர் என்றே பெயர் சூட்டியுள்ளார்.

இந்தப் படத்தை ஜெயலட்சுமி கோல்டன் ஜூப்ளி பிலிம்ஸ் சார்பில் ரங்காரெட்டி தயாரிக்கிறார். முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். மணிகண்டன் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

கிங்காங், போண்டாமணி, ஜாஸ்பர், மனோபாலா, பாலு ஆனந்த், குண்டு கல்யாணம், பாண்டு, அல்வா வாசு, குள்ளமணி, பாவா லட்சுமணன், தேவதர்ஷினி, ஜெய்கணேஷ், ஜெயமணி என தமிழ் சினிமாவில் உள்ள நகைச்சுவை பட்டாளத்தையே இந்தப் படத்தில் நடிக்க வைக்கிறார் சுருளி.

இவர்களுடன் சுருளி மனோகர் ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்கவும் செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் பூஜையுடன் தொடங்கியது.

கிராமத்தில் இருந்து திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவில் சென்னைக்கு வரும் இளைஞர் ஒருவர், தான் ஒரு படம் இயக்க வேண்டும் என்றும், அப்படி இயக்கிய அப்படத்தின் 100வது நாள் விழாவில் தான் தனது திருமணம் நடைபெற வேண்டும் என்றும் நினைக்கிறார். அப்படி அவர் நினைத்தது போல நடந்ததா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.

 

சூர்யா படத்துக்கு உலகிலேயே முதல் முறையாக ரெட் ட்ராகன் கேமிரா!

சென்னை: லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்துக்கு உலகிலேயே முதன் முறையாக ‘ரெட் டிராகன்' என்னும் கேமிராவை பயன்படுத்துகிறார்களாம்.

சிங்கம் 2 வெற்றிக்குப் பிறகு, சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை லிங்குசாமி இயக்குகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சூர்யா படத்துக்கு உலகிலேயே முதல் முறையாக ரெட் ட்ராகன் கேமிரா!

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் உலகிலேயே முதன் முறையாக ‘ரெட் டிராகன்' என்னும் கேமிராவை பயன்படுத்தி படமாக்குகிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

தமிழில் ரெட் ஒன் வகை கேமிராக்கள் சில ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது நவீன தொழில்நுட்பத்தோடு வெளிவந்துள்ள இந்த ரெட்-டிராகன் டிஜிட்டல் கேமிராவை இப்படத்தில் பயன்படுத்தவுள்ளார் சந்தோஷ் சிவன். ஏற்கெனவே இவர், துப்பாக்கி படத்திற்காக ஆரி அலெக்சா எனும் கேமராவை இந்திய சினிமாவில் முதன் முறையாக பயன்படுத்தினார்.

சூர்யா படத்துக்கு உலகிலேயே முதல் முறையாக ரெட் ட்ராகன் கேமிரா!

சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் ‘ரெட் டிராகன்' கேமிராவை வைத்து சோதனை முறையில் சில காட்சிகளைப் படமாக்கிப் பார்த்து, அது சிறப்பாக வந்ததில் ஏக மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு. நவம்பர் 15 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. மே, 2014ல் கோடை ஸ்பெஷலாக இப்படம் வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்தை லிங்குசாமி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா மூலம் தயாரிக்கிறார்.

 

சசிகுமாரின் உதவியாளர் இயக்கும் போர் செய்யப் பழகு!

சசிகுமாரின் உதவியாளர் இயக்கும் போர் செய்யப் பழகு!

இயக்குநரும் தயாரிப்பாளருமான சசிகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய எஸ்பி நரசிம்மன் புதிய படம் இயக்குகிறார்.

இந்தப் படத்துக்கு போர் செய்யப் பழகு எனத் தலைப்பிட்டுள்ளார்கள்.

மாஸ்டர் மூவி மேக்கஸ்' என்ற புதிய பட நிறுவனம் சார்பில் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது.

போர் செய்யப் பழகு படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். கே இசை அமைக்கிறார். இவர், யுத்தம் செய், ஆரோகணம், முகமூடி போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்திற்கான நடிகர் - நடிகைகள் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. விரைவில் படத்தின் மற்ற விவரங்கள் குறித்து அறிவிப்பேன் என இயக்குநர் எஸ்பி நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

சசிகுமாரின் உதவியாளர்களில் தனியாகப் படம் இயக்கும் இரண்டாவது நபர் நரசிம்மன். முதலில் தனியாகப் படம் செய்தவர் எஸ் ஆர் பிரபாகரன். அந்தப் படம்தான் சுந்தரபாண்டியன்.

 

பல்கேரியாவுக்கு பதில் ஐப்பானில் காஜலுடன் விஜய் டூயட்

பல்கேரியாவுக்கு பதில் ஜப்பானில் காஜலுடன் விஜய் டூயட்  

சென்னை: ஜில்லா படக்குழுவினர் பாடல் காட்சியை படமாக்க பல்கேரியா செல்வதாக இருந்தது.

விஜய், காஜல் அகர்வால் நடித்து வரும் ஜில்லா படத்தின் படப்பிடிப்பு ஜரூராக நடந்து வருகிறது. படத்தின் டூயட் பாடல் காட்சியை படமாக்க படக்குழுவினர் அடுத்த மாதம் பல்கேரியா செல்கின்றனர் என்று கூறப்பட்டது.

ஆனால் படக்குழுவினர் பல்கேரியாவுக்கு பதில் ஜப்பான் செல்கிறார்களாம்.

இது குறித்து இயக்குனர் நேசன் கூறுகையில்,

நாங்கள் பல்கேரியா செல்ல திட்டமிட்டிருந்தோம். ஆனால் அங்குள்ள கிளைமேட் படப்பிடிப்புக்கு ஏற்றவாறு இல்லை. அதனால் நாங்கள் ஜப்பான் செல்கிறோம். அங்கு ஒசாகா மற்றும் சில இடங்களில் டூயட் பாடலை படமாக்குகிறோம். இந்த மாத இறுதியில் ஜப்பானில் படப்பிடிப்பு துவங்கும் என்றார்.